Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Eengum Geetham...10

  • Thread Author
அத்தியாயம்…10

செந்தாழினி வீட்டில் நடக்கும் பிரச்சனைக்கு காரணம்.. அளவுக்கு அதிகமாக இருக்கும் சொத்து பணம்.. இதனால் பிரச்சனை என்றால்,

மகிபாலன் வீட்டில் அவர்களிடம் இருந்த பணம், நகைகள் பரிபோனதால் வந்த பிரச்சனை நடந்து கொண்டு இருந்தது..

ஆம் பரிபோனதா..? இல்லை பரிகொடுத்து விட்டதா..? ஏதோ ஒன்றை சொல்லலாம்.. ஆனால் பரிபோனது என்பது நிச்சயம்.. பரிகொடுத்ததிற்க்கு காரணம் கெளசல்யா என்பது மட்டும் நிச்சயம்..

ஆம் இவர்களின் இன்றைய நிலைக்கு முழு காரணமும் கெளசல்யா தான்.. அதில் எள்ளவுக்கும் சந்தேகம் கிடையாது..

செந்தாழினி வீட்டினர் போல வசதி வாய்ப்பு அந்த அளவுக்கு இல்லை என்றாலுமே,மத்தியதர்க்கத்திற்க்கும் கொஞ்சம் மேல் நிலையில் தான் மகிபாலனின் குடும்பம் முன் இருந்தது..

மகிபாலனின் தந்தை வீரராகவன் மத்திய அரசில் வேலையில் இருந்தார். உயர் பதவி தான்.. அதனால் கணிசமாக தான் வருமானம் அவருக்கு.. வீடும் சொந்த வீடு.. வாங்கும் சம்பளத்தை அப்படியே மனைவியின் கையில் கொடுத்து விடுவார் வீரராகவன்… அனைத்து பொறுப்பும் கெளல்யா தான் பார்த்து கொண்டது.. அவருக்குமே குடும்பம் நடத்துவதில் பிரச்சனை ஒன்றும் இல்லை..

என்ன ஒன்று மூன்று பிள்ளைகளையும் படிக்க வைப்பதினால், சேமிப்பு என்பது அதிக அளவில் இல்லை.. ஆனால் சேமிப்பு இருந்தது தான்..

அதனால் கெளசல்யா குழந்தைகள் சின்ன வயதாக இருக்கும் போதே. வீட்டில் இருந்தப்படியே அவரால் என்ன செய்ய முடியுமோ.. அதை செய்தார்..

அதாவது சீட்டு பிடித்தார்… ப்ரோக்கர் வேலையும் பார்த்தார்.. அதாவது ப்ரோக்கர் என்றால் நிலம் மட்டும் அல்லாது கல்யாணம் செய்து வைக்கும் ப்ரோக்கராகவும் காலம் போக்கில் மாறி போனார்.

சீட்டு மட்டும் தான் இவரே இது செய்யலாம் என்று செய்தது.. ஆனால் இந்த ப்ரோக்கர் அதாவது நில தரகர் ஆனது… சொந்தத்தில் ஒருவர்..

“பெண்ணுக்கு திருமணம் வைத்து விட்டேன்.. இந்த நிலம் விற்க முடியலே கெளசல்யா என்ன செய்வது என்று தெரியல.. நீ தான் சீட்டு பிடிக்கிறியே… உன் கிட்ட சீட்டு கட்டுறவங்க கிட்ட கேளேன்.. அவன் வாங்கிக்கிறதா இருந்தா வாங்கி கொள்ளட்டும்… நீ சும்மா ஒன்றும் செய்ய தேவையில்லை கமிஷன் கொடுத்து விடுகிறேன்..” என்றதும்.

கெளசல்யாவும்.. “சரி பார்க்கிறேன்.” என்று சொன்னவர்,. தன்னிடம் சீட்டு கட்டுபவர்களிடமும் சொல்ல.

அதில் ஒருவர் உண்மையில் அவர்கள் குடும்பம் சொத்தை விற்று அந்த பணத்தில் வீடு வாங்க வேண்டும்.. அதிலும் இத்தனை மாதத்திற்க்குள் வாங்கி கணவன் பெயரில் பதிவு செய்தால் தான் வருமான வரி கட்ட தேவையில்லை என்று தீவிரமாக தான் இடத்தை பார்த்து கொண்டு இருந்து இருக்கிறார்..

“நானுமே தேடுறேன் தான் அக்கா.. ஆனா வீட்டோட வேண்டுமே.” என்று யோசித்த அந்த பெண்மணியும்.

தன் கணவனிடம் சொல்ல. அவர் ஆடிட்டரிடம் கலந்து ஆலோசித்து ஒரு முடிவாக..

“ரேட் செட் ஆனா… அந்த இடத்தில் ஒரு குடிசை போட்டுட்ட பத்திரத்தில் வீடு என்று எழுதி பதிவு செய்து கொள்ளுங்கள்.” என்று அவர் சொல்ல.

அவர்களுக்கும் நாட்கள் இல்லாத காரணத்தினால், அந்த ஆடிட்டர் சொன்னதையே செய்து முடித்து விட்டனர்…

ஒரு முதலும் இல்லாது முதல் தொகையாக கெளசல்யா ஒரு இருபது வருடத்திற்க்கு முன்பே இதற்க்கு அவர் வாங்கிய தொகை இரு பகமும் இருபது ஆயிரம் இருபது ஆயிரம் என்று நாற்பது ஆயிரத்தை கமிஷன் தொகையாக வாங்கி கொண்டார்.

இருபது வருடங்கள் முன் ஒரு சவரனே… நாங்காயிரம் தான்.. அந்த பணத்தில் மொத்தமா பத்து சவரனின் நகையாக வாங்கி கொண்டு விட்டார்…

அதே போல் தான் தன் இனம் மட்டும் அல்லாது எந்த இனத்தில் பெண் மாப்பிள்ளை கேட்டால். இங்கு அங்கு என்று கை காட்டி விடுவார்… பெண் வீட்டில் எத்தனை சவரன் போடுவார்களோ. அத்தனை ஆயிரம் கெளசல்யாவுக்கு பணமாக கொடுத்து விடுவார்கள்..

கெளல்யாவையும் சும்மா சொல்ல கூடாது.. பணம் வருகிறது என்று எந்த ஆடம்பர செலவையும் செய்யவில்லை..

அனைத்தையுமே பெண் பிள்ளைகள் இருக்கிறதே.. அதுவும் தன் இனத்தில் நிறைய கேட்பார்களே என்று நகையாக தான் வாங்கி வைத்தார்..

இந்த வீட்டையும் சீர் படுத்தினர்.. ஒரு பெரிய தொக வங்கியில் பிக்ஸ்செட் ஆகவும் போட்டு கொண்டு தான் வந்திருந்தார்..

வீர ராகவனும்.. மனைவி செய்கிறாள்.. குடும்பத்திற்க்கு தானே என்று எந்த தடையும் செய்யவில்லை..

மகிபாலன் மட்டும் கல்லூரியின் சேர்ந்த புதியதில் தன் அம்மாவிடம்..

“பார்த்தும்மா. நீங்க செய்யிறது ரொம்ப ரிஸ்க்கான விசயம்.. மாப்பிள்ளையோ பெண்ணோ சரியில்லை என்றால், பிரச்சனை..” என்று சொன்ன போது கூட கெளசல்யா..

“நான் இடத்தை மட்டும் தான் பாலா காட்டுவேன்.. கூடவே மாப்பிள்ளை பத்தி நீங்க தான் தனிப்பட்டு விசாரித்து கொள்ள சொல்லி விடுவேன் பாலா.. நீ கவலை படாதே.. என்று மகனுக்கு தைரியமும் சொல்ல..

மகிபாலனும் அதன் பின் அதை பற்றி தன் அன்னையிடம் ஒன்றும் கேட்டுக் கொள்ளவில்லை..

கெளசல்யாவுமே மூன்று பேரையுமே நல்ல முறையில் தான் படிக்க வைத்தார்… மூத்த பெண் ஒரு டிகிரி மட்டும் படித்து விட்டு போதும் என்றவள் வேலைக்கும் போகவில்லை… வீட்டில் இருந்து கொண்டாள்..

சரி திருமணத்திற்க்கு இடம் பார்க்கலாம் என்று ஆரம்பித்த போது தான் ஜாதகத்தில் தோஷம் என்று இடம் தழையாது போனது.. தழைந்த ஒரு சில இடங்களும்.. ஒன்று இவர்களுக்கு மிக மிக கீழாக இருந்தனர்..

இல்லை.. அதிக வரதட்சணை கேட்டனர்.. அதனால் இருபத்தி ஏழு வயது தொட்ட போதும் சுதாவுக்கு இடம் தழையாது தள்ளி சென்றது..

கெளசல்யா கணவனிடம்.. “ அவங்க கேட்கும் நகையையும் பணத்தையும் கொடுத்து விடலாமே… “ என்று சொன்ன போது.

வீர ராகவனோ… “ நாம பெரியவளுக்கு என்ன போடனுமோ.. சின்னவளுக்கும் அது தான் செய்யனும்.. இரண்டு பேருக்கும் இத்தனை நம்மால் முடியாது கெளசல்யா.” என்ற கணவனின் பேச்சுக்கு கெளசல்யா.

“இப்போ தான் நம்ம பாலாவும் வேலைக்கு போறேன்னா நல்ல சம்பளமும் வாங்குறான்.. அது எல்லாம் சமாளிச்சிடலாமுங்க..” என்று மனைவி சொன்ன போது வீரராகவன் இதற்க்கு மட்டும் மனைவியின் பேச்சை கேட்கவில்லை..

“நம்ம பெண்,, நாம தான் செய்யனும்.. கூட பிறந்தவனா தோள் கொடுக்கலாம் தப்பு இல்ல. ஆனால் அவனின் வருமானத்தை வைத்து நாம கணக்கு போடுறது தப்பு கெளசல்யா. பொறு… நல்ல இடமா அமையும்.” என்ற பேச்சுக்கு தகுந்தது போல் தான் அமைந்தது.

ஆனால் அதற்க்குள் கெளசல்யா ஒரு பெரிய பிரச்சனைக்குள்ளும் மாட்டிக் கொள்ளும் படி ஆகி விட்டது.. அவரின் அதிகப்படியான ஆசை என்று சொல்வதை விட இதற்க்கு பேராசை என்று சொன்னால் சரியாக இருக்கும்…

இவர்கள் தெருவில் குடிவந்தவர் அந்த ஏரியாவில் ஓட்டல் ஒன்று வைத்து இருந்தார்.. அவருக்கு வீட்டோடு ஒரு இடம் வேண்டும் என்று கெளசல்யாவிடம் வந்து நின்றார்..

அவருமே நாங்கு ஐந்து இடத்தை வீட்டோடு காட்டினார். தான் லோன் செல்ல உள்ளதாக அந்த ஒட்டல்காரர் முன்னவே சொல்லி விட்டார்..

கெளசல்யாவுமே… அப்ரூட் வாங்கிய வீட்டை தான் கான்பித்தது.. பின் ஒரு வீடு இல்லை இரண்டு வீடு வாங்க வேண்டும் என்று அந்த ஓட்டல் காரர் கணேசன் சொன்ன போதாவது கெளசல்யா சுதாகரித்தி இருந்து இருக்கலாம்.

கெளசல்யாவுக்கு வருமானம் தானே. பெண்ணுக்கு சேர்த்து வைத்ததை விட அதிகம் நகை போடும் படி இருந்ததால் தேவைப்படும்.. கடைசி நேரத்தில் வைர கம்மல் வேண்டும்.. பூஜை பொருட்கள் அனைத்துமே வெள்ளியில் வேண்டும் என்றதில், கெளசல்யாவுக்குமே பணத்தின் தேவை அதிகமாக இருந்ததினால், சரி என்று பார்க்க ஆரம்பித்தார்.. ஏற்ற இடம் கிடைத்தது.

விலையும் பேசி முடித்து விட்டார்.. வாங்குபவர்.. சொன்ன விலைக்கு குறைத்து கேட்கவில்லை வாங்குபவர்.. அப்போதாவது கெளசல்யா சுதாரித்து இருக்கலாம்..

லீகலா பேப்பர் பார்க்கும் போது தான் இரண்டு விடுமே கட்டடத்திற்க்கு அப்ரூட் வாங்கவில்லை என்று தெரிய.

லோன் எப்படி என்று ஆராய்ந்த போது வங்கியில் லோன் அப்ரூட் செய்பவர் வாங்கும் அந்த ஒட்டலுக்கு தெரிந்தவர் என்பதினால்,

நான் பார்த்து கொள்கிறேன் என்ன ஒன்று அதிகம் செலவு பிடிக்கும் என்று வங்கி அதிகாரி ஒரு கொக்கி போட்டார்..

இதில் வேறு ஒரு பிரச்சனையாக இடம் மதிப்பு ஒரு கோடி.. ஆனால் நான் பத்திரபதிவில் இரண்டு கோடி என்று போட்டு கொள்கிறேன் என்று சொன்னதில் விற்பவ.

“அப்போ எனக்கு டேக்ஸ் அதிகம் ஆகுமே.?” என்று அவர் மறுக்க.

“எவ்வளவு ஆகுமோ… அந்த பணத்தை நான் கொடுத்து விடுகிறேன்..” என்றதும் விற்பவர் ஒரு பேரம் பேசினார்..

அது.. “ அப்போ நான் சொன்ன விலையோட பத்து லட்சம்.. அதிகம் வேண்டும் என்று..” வாங்குபவரும் ஒத்து கொண்டாகி விட்டது.. இரு வீடும் ஒரே போல் தான் பேசி முடிவு செய்தது..

இந்த வங்கி அதிகாரி அதிகம் பணம் ஆகும் என்றதில் பாவம் வாங்குபவர் கெளசல்யாவிடம் தத்ரூபமாக..

“ஐம்பது லட்சம் ஊரில் பங்காளி சொத்து விற்று எனக்கு பணம் வர இருக்கிறது.” என்று சொல்லி ஒரு டாக்குமென்ட் காட்டினார்..

பாவம் கெளசல்யாவுக்கு அதில் இருப்பது ஒன்றும் புரியவில்லை.. பத்திரம் என்ற அளவு மட்டும் தெரிந்தது அவருக்கு.. நான் என்ன செய்யனும் என்று கெளசல்யா கேட்க..

“அந்த பில்டிங் ஆப்ரூட் வாங்கல அதுக்கு நிறைய லட்சம் பணம் செலவு ஆகுமாம்.. நீங்க அந்த பணத்தை கொடுத்தால், சீக்கிரம் லோன் சேங்ஷேன் ஆகிடும்.. நீங்க தான் பார்த்திங்கலே.. அந்த பாங்க அதிகாரி எனக்கு நல்லாவே தெரியும்.. உங்களுக்கு பத்து லட்சம் கொடுத்து விடுகிறேன்..” என்ற கெளசல்யாவிடமும் பேரம் பேச.

காதல் ஆசை மட்டும் இல்லை.. பணத்தின் ஆசையும் யாரை விட்டது…? முப்பது லட்சத்தை தண்ணீராக செலவு செய்தார்… கை இருப்பு நகைகள் அடமானம் வைத்து என்று..

அந்த ஒட்டல்காரன் நகைக்கு வைத்ததிற்க்கு வட்டி கூட நான் தந்து விடுகிறேன் என்று சொன்னதில் கெளசல்யாவுக்கு வட்டி போகுதே என்ற அந்த எண்ணம் கூட இல்லாது பெரிய மகள் சின்ன மகள் தன்னுடையது என்று அனைத்துமே வைத்து பணம் கொடுக்க.

அந்த வங்கி அதிகாரியும் லோன் ஏற்பாடு செய்து கொடுக்க…

வீட்டையும் வாங்கி கொண்டார்.. டாக்குமெண்ட்ஸ் வங்கி கையிலும் சென்று விட்டது..

வீட்டை வாங்கி கொண்டவர் ஒரு மாதம் ஆளை காணவில்லை.. மகளின் திருமணம் வேறு நெருங்குகிறது.

கெளல்யா எங்கு போனார் என்ன ஆச்சு.. என்று முதல் முறையாக அவருக்கு பயம் தட்டியது.. என்னடா இது என்று ஒட்டல் காரர் வாங்கிய வீட்டை சென்று சென்று பார்த்து வந்ததில்.. மூடி இருந்த வீடு ஒரு நாள் திறந்து இருந்தது.

கெளசல்யா முகத்திலோ அத்தனை மகிழ்ச்சி அப்படா என்று வீட்டினுல் சென்றார்.. ஆனால் பாவம் வீட்டிற்க்குள் சென்ற கெளசல்யா பார்த்ததோ இது வரை பார்த்தே இராத புதிய முகங்களை,.

அவர்களுமே கெளசல்யாவை பார்த்து.. “ என்ன இது நேரா வீட்டிற்க்குள் வர்றிங்க.. யார் நீங்க.” என்று திருடனா என்று கெளசல்யானை அவர்கள் சந்தேகம் பார்வை பார்க்க ஆரம்பிக்க..

கெளசல்யாவோ.... “நீங்க யார்.” என்று கேட்க.

“எங்க வீட்டுக்கு வந்துட்டு என்னை யார் என்று கேட்கிறிங்கலா.?” என்றதில் பாவம் அப்போது கூட கெளசல்யா.

“நீங்க கணசேன் அண்ணனுக்கு சொந்தக்காரங்கலா..” என்று தான் கேட்டார்.

அதற்க்கு அவர்கள் சொன்ன பதில்.. “ சொந்தக்காரர் கிடையாது… எங்களுக்கு இந்த வீட்டை விற்றவர்..” என்றதில்..

கெளசல்யாவுக்கு ஒன்றும் புரியவில்லை.. “ என்ன சொல்றிங்க… இந்த வீடு லோன் போட்டு வாங்கியது… பத்திரம் வங்கியில் இருக்கும் போது.. எப்படி நீங்க வாங்க முடியும்..” என்று கேட்ட கெளசல்யாவுக்கு அந்த அதிர்ச்சி தான் முதல் அதிர்ச்சி..

அதன் பின் தொடர்ந்தார் போல அதிர்ச்சிக்கும் மேல அதிர்ச்சியாக தான் அனைத்தும் நடந்தது.

அதாவது வங்கியில் எத்தனை பணம் வாங்க வேண்டுமே வாங்கி கொண்ட கணசேன்.. அந்த வீட்டை பத்திரப்பதிவு செய்யும் போது அதே போல ஒரு பத்திரத்தை டூப்ளீக்கேட்டை ரெடி செய்து கொண்டு விட்டார்.

ஒரே மாதத்தில் அந்த இரண்டு வீட்டை விற்றும்.. அவர் போன இடம் தெரியாது சென்று விட்டார்..

இதில் விற்றவருக்கு வங்கி பணத்தை கொடுத்து விட்டது.. வாங்கியவர் மாயமாய் மறைந்து போக இடையில் இடை தரகரான கெளசல்யா தான் அனைத்திலுமே மாட்டிக் கொண்டு நின்று விட்டாள்..

கெட்டதிலும் ஒரு நல்லதாக வங்கியின் ஜாமில் கைய்யெழுத்து போடவில்லை.. அது வரை அவர் தப்பித்து விட்டார்.

ஆனால் பொருட் விரையத்தோடு அந்த டூப்ளிக்கேட் பத்திரத்தை தயார் செய்ததில் வாங்கியவர்கள்.. கெளசல்யாவிடம் சண்டை நீயும் உடந்தையா என்று..

என்ன செய்ய அவர்களுமே அத்தனை பணத்தை போட்டு வாங்கியதில் ஏமாந்து தான் போயினர்..

கெளசல்யா இதை எல்லாம் வீட்டில் சொல்லாது தான் செய்தது.. அதே போலவே.. ஏமாந்த கதையும் சொல்லாது விற்கும் நகைகளான ஒரு கிராம் இரண்டு கிராம் கலந்த நகைகளை பெண்ணுக்கு போட்டு விட.பாவம் சுதாவுக்குமே தெரியாது..

“என்னம்மா எல்லாம் புதுசா இருக்கு.. என்னை கூட்டிட்டு போய் இருக்கலாம் தானே..” என்று இதனால் வரும் வினை புரியாது அதை அணிந்து கொண்டு திருமணமும் செய்து கொண்டு சென்று விட்டாள்..

கெளசல்யாவுக்கு தான் அடுத்து என்ன செய்வது என்று புரியாது குழம்ப பித்தளை சாயம் வெளுத்து போக சுதா சென்ற வேகத்தோடு மீண்டுமே தாய் வீட்டிற்க்கு வந்து விட்டாள்..

பின் தான் அனைத்து விசயங்களும் தெரிய வந்தது.. இதில் என்ன ஒன்று என்றால் நகை மட்டும் தான் குடும்பத்திடம் சொன்னது..

வீரராகவனுக்கு… மகள் வந்தது உறவில் அத்தனை அசிங்கம் பட்டது.. அதோடு மகளின் வாழ்வு என்று ஏற்கனவே நிலை குலைந்து போய் இருந்தவருக்கு அடுத்த பேருடியாக.

சுதவை முதலில் கணவன் வீட்டிற்க்கு அனுப்பி வைப்பதை பார்க்கலாம்..

“இந்த வீட்டு பத்திரம் கொண்டா.” என்று சொன்ன போது தான்.

அதையும் அவர் அடமானத்தில் வைத்து விட்டதை சொல்ல அன்று மார்பை பிடித்து கொண்டு வீழ்ந்தவர் தான் பின் எழவே இல்லை…


 
Active member
Joined
Jun 23, 2024
Messages
71
பொண்டாட்டி மேல் உள்ள நம்பிக்கையில் தான் அவங்க வேலையில் தலையிடாமல் இருந்தாரு 😣😣😣😣😣😣

இவ்வளவு பெரிய அமௌண்ட் கொடுக்கும் போது புருஷன் கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் பிரச்சினை வந்திருக்காது 🤫 🤫 🤫
 
Last edited:
Active member
Joined
May 11, 2024
Messages
123
கௌசல்யா பேராசை அவர் கணவர் உயிரை பறித்து மகள் வாழ்வு அந்தரத்தில் குடும்பமே நிலைகுழைந்து போனது 🌺🌺🌺🌺
 
Active member
Joined
Jun 1, 2024
Messages
105
கௌசல்யாவோட பேராசை எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்கு... நகையில இருந்து வீட்டு பத்திரம் வரைக்கும் அடமானம் வைக்கும் போது புருஷன்கிட்ட சொல்லணும்ன்னு தோணலையா.... எந்த தைரியத்துல பொண்ணுக்கு கவரிங் நகையை போட்டு கல்யாணம் பண்ணிக் குடுத்தாங்க....
குடும்பத்துக்கு எவ்வளவு அவமானம் உயிர் இழப்பு வேற.... 😡
 
Top