Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Eengum Geetham...11

  • Thread Author
அத்தியாயம்…11

அன்று வீர ராகவன் மார்பை பிடித்து கொண்டு சாய்ந்தவர் தான் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதே அவரின் இறந்த உடலை தான் என்று மருத்துவர் பரிசோதித்து சொல்லி விட… வீட்டு பிள்ளைகளுக்கு அடுத்து தான் அனைத்துமே தெரிய வந்தது… அனைத்துமே என்றால், அனைத்துமே…

தலை மீது கை வைத்து அமர்ந்து விட்டான் மகிபாலன்.. ஒரு அடி என்றால் தாங்கி கொள்வான்.. விழுவது மொத்தமுமே அடி என்றால்,.

அதுவும் இது வரை அவனுமே தான் சம்பாதித்த பணத்தை அன்னையிடம் தந்தையை போல கொடுத்தவன் தான் மகிபாலனுமே..

அதுவும் மகிபாலனின் மேற்படிப்பு டெல்லி சென்று படித்தவன்.. நிறைய பணம் தான் அவனின் தந்தை செலவழித்தது.. அதனாலோ என்னவோ.. அவனின் முதல் மாச சம்பளமே.. என்பது ஆயிரம்.. அவனின் இருபத்தி நான்காம் வயதில் வாங்கியது..

அவனின் தந்தை இறக்கும் போது அவனின் வயது இருபத்தியெழு… வருடம் போக போக அவனின் சம்பளமும் கூடிக் கொண்டு தான் சென்றது…மூன்று ஆண்டுகள் தன் செலவுக்கு வைத்து கொண்டு மொத்தமுமே அன்னையிடம் தான் தந்து விட்டான்.

முதல் மாதம் தன் சம்பளம் பணத்தை தன் அன்னையிடம் கொடுக்கும் போது சொன்னான் தான்..

“ம்மா நானுமே இவ்வளவு சம்பாதிக்கிறேன்.. அப்பாவுக்குமே நல்ல சேலரி தான்.. இனியும்.. நீங்க இந்த வேலைகள் எல்லாம் பார்க்கனுமா.?” என்று கேட்டான் தான்..

ஆனால் அன்று அவன் அன்னை அவனுக்கு தந்த பதில்..

“என்ன மகி முதல் மாசம் சம்பளம் கொடுக்கும் போதே. என்னை கட்டுப்படுத்துற…” என்பது தான்.. அடுத்து அவன் அதை பற்றி பேசவில்லை.

ஆனால் மனதில் இவர்கள் ஏதாவது பிரச்சனையில் மாட்டிக் கொள்ளப்போகிறார்கள் என்று நினைத்தான் தான்.

ஆனால் அது கூட இந்த பெண் மாப்பிள்ளையை பார்த்து முடித்து வைப்பதில் பிரச்சனை ஆகி விட போகிறது என்று தான் நினைத்தானே தவிர. சத்தியமாக இப்படி ஒரு பிரச்சனை வரும் என்று அவன் நினைத்து கூட பார்க்கவில்லை..

அன்னையின் அந்த தவறில் பணம் நகைகளை மட்டுமா இழந்தான்.. அப்பா.. பணத்தை கூட சம்பாதித்து விடலாம்.. அவனின் அன்றைய சம்பளம்.. ஒன்னரை லட்சம்.. ஆனால் அப்பா…

சடலமாக படுக்க வைத்திருந்த தந்தையை அவனால் அன்று பார்க்க முடியவில்லை.. பொதுவாக ஆண்மகனுக்கு அன்னை மீது தான் அதிகமாக பற்று இருக்கும் என்று சொல்வார்கள்..

ஆனால மகிபாலனுக்கு அது என்னவோ அன்னையை விட தந்தையை தான் அவன் நெருக்கமாக உணர்ந்தான்..

இன்று அவனுக்கு அந்த நெருக்கம் இல்லாது தனித்து நின்று விட்டது போல நின்று விட்டான்… மகனின் வருமானம் மகனுக்கு தான் என்று சொன்ன தந்தை இல்லாது… தன்னுடைய அனைத்துமே பொதுவான முடிவாக வைத்தவன் தன் திருமணமும் குடும்பத்திற்க்கு என்று தான் முடிவு எடுக்க வேண்டியதாயிற்று.

அதை ஏற்றும் கொண்டவனின் மனநிலையை ஒரு நிலைக்கு வைக்காது இதோ மகி பாலன் வீடு வந்த போது தான் மகிளா சரியாக தன் அன்னையிடம்.

“நீங்க ஒன்னும் இல்லாது செய்ததுக்கு அண்ணன் முன் தானே நிற்க வேண்டும் .” என்று தங்கையின் பேச்சை கேட்டுக் கொண்டே தான் மகிளா முன் வந்து நின்ற மகி பாலன்..

“நீ என் முன் வந்து நின்னதே இல்லையா..?”

முன் நரேனை தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று சொன்னதை நினைத்து சொன்னவனின் பேச்சை சரியாக மகிளா புரிந்து கொண்டு விட்டாள்..

“ண்ணா அது வந்து ண்ணா… கல்யாண புடவை அம்மா வந்து கம்மி விலையில் தான் எடுத்து கொடுப்பேன்.. சொன்னாங்க அது தான்..” என்று தான் சொல்ல நினைப்பது தயங்கினாலுமே சொல்லி முடித்தவளையே பார்த்தவன்..

பின் சிரித்தவனாக சமையல் அறையின் கதவு ஓரம் நின்று கொண்டு இருந்த கெளசல்யாவிடம்..

“ம்மா அவள் ஏன் கம்மி விலையில் கல்யாண புடவை வாங்கனும்..” என்ற இந்த பேச்சில் மகிளா மகிழ்ந்து தான் போய் விட்டாள்.. ஆனால் கெளசல்யா யோசனையாக மகனை பார்த்து கொண்டு நின்று இருக்க..

மகிபாலனின் அடுத்த பேச்சாக… “ அவள் சம்பாதித்ததே.. அவள் பேங்க் அக்கவுண்டில் இருக்கும் போது அவள் ஏன் கம்மி விலையில் எடுக்க வேண்டும்..” என்று தங்கையின் தோள் தட்டி சொன்னவன்.. அந்த வீட்டில் இருந்த இரண்டு அறையில் ஒரு அறைக்குள் புகுந்து கொண்டான்..

கூடத்திலோ மகிளா திக் பிரம்மை போல நின்று கொண்டு இருக்க.. மகளின் அருகில் வந்த கெளசல்யா. “பார்த்தியா நானுமே அதை மறந்துட்டேன் பாரு…” என்று சொன்னவர்..

கூடவே.. “ என்ன தான் உன் பணமே ஆனாலுமே புடவைக்கு அத்தனை ஆயிரத்தை கொட்டி வாங்குவது எனக்கு பிடிக்கவில்லை..” என்று சொன்ன அன்னையை முறைத்த மகிளா..

“ம்மா என்னம்மா பேசுற… என் பணத்தை எடுத்து என் கல்யாணத்திற்க்கு புடவை வாங்குவதா…? வெளியில் தெரிந்தா சிரிக்க போறாங்கம்மா..” என்று முன் போல சத்தமாக எல்லாம் அன்னையிடம் இதை மகிளா சொல்லவில்லை..

அண்ணனுக்கு கேட்காத படி பல்லை கடித்து கொண்டு கோபமாக இருந்தாலுமே சத்தம் போடாது தான் கூறினாள்..

கெளசல்யாவுமே மகள் பேசும் பாணியாக மெல்லவே.. “இதுல என்ன டி அசிங்கம் இருக்கு.. அதோட உன் சம்பளம் பணத்தில் வாங்குனது என்று யாருக்கு என்ன தெரியப்போகுது..” என்று கேட்டவரிடம்..

“ம்மா என் வயசு ஒன்னும் சின்ன வயசு கிடையாது.. போன வருஷன் வேலையில் ஜாயின் பண்ணிட்டு இந்த வருஷம் கல்யாணம் பண்ணிட்டு போனா.. என் சேவிங்கஸ் பத்தி பெருசா கணக்குல எடுத்துக்க மாட்டாங்க..”

“ஆனா எனக்கு இப்போ இருபத்தியெட்டு வயசு ஆகுது… ஏழு வருஷமா வேலை பார்க்கிறேன்… தோரயமா இத்தனை சம்பளம்.. இத்தனை வருஷத்தில் இத்தனை சேவிங்ஸ் இருக்கும் என்று என் மாமியார் வீட்டிற்க்கு தெரியும் தானே.. அப்பா இறந்ததில் இருந்தே நானுமே தானேம்மா.. அத்தனை பிரச்சனைக்குமே என் சேவிங்கஸ் இருந்து எடுத்து கொடுத்தேன்..”

“இரண்டு வருஷமா தான் அண்ணா.. உன் சம்பளத்தை நீ சேவிங்கஸ் பண்ணு என்று சொன்னது…”

“இப்போ தான் அதுல ஒரு பத்து லட்சம் இருக்கு.. அதையுமே எடுத்துட்டா எப்படிம்மா..?“ என்ற மகளின் கேள்வியில் கெளசல்யா மட்டும் வாய் அடைத்து நிற்கவில்லை.

முகத்தை அலம்பி கொண்டு காபி குடிக்கலாம் என்று முகத்தை டவலால் துடைத்து கொண்டு வந்த மகிபாலனுமே வாய் அடைத்து போய் தான் நின்று விட்டான்..

மகிபாலன் வாய் அடைத்து நின்றது எல்லாம் ஒரு நொடி தான்…

“மகிளா சொல்றது சரி தானேம்மா…?” என்ற மகனின் பேச்சில் மீண்டுமே கெளசல்யா யோசனையாக பார்க்க.

மகிளாவும் இப்போது சுதாகரித்து கொண்டு விட்டாள் போல. அவளுமே இப்போது என்ன சொல்ல போகிறான் என்பது போல் தான் அண்ணனை பார்த்தது.

இருவரின் நினைப்பை மெய்யாக்குவது போல தான் மகிபாலன்… “ அப்போ நாளைக்கு எனக்கு வரப்போற மனைவியுமே… என் எட்டு வருஷத்தில் என் சேவிங்கஸ் எத்தனை இருக்கும் என்று கணக்கு போட்டுட்டு தான் வந்தால்.. நான் என்ன செய்வேன்.. என் கிட்ட இருப்பது சேவிங்கஸ் இல்ல… கடன் தான் அதுவும் இத்தனை லட்சம் என்றால்…” என்று அன்னை தங்கை இருவரையும் பொதுவாக பார்த்து கேட்டவன்..

வீட்டு பெண்களிடம் காபி குடிக்க கேட்க கூட பிடிக்காது.. வெளியில் காபி குடிக்க சென்று விட்டான்..

மகிபாலன் தலை மறைந்ததும்.. “ நீ என்ன டி இப்படி எல்லாம் பேசுற… உன் சம்பளத்தை உன் அண்ணன் சேர்க்க சொன்னதே.. எல்லா பணமும் செலவு ஆகிட்டா.. உன் கல்யாணத்துக்கு என்ன செய்வது நகை வாங்கவாவது உதவுமே என்று நினச்சி தான் டி பாலன் அப்படி சொன்னது.” என்று என்ன இது இவள் இப்போதே இப்படி பேசுகிறாள் என்று நினைத்து கொண்டு தான் கெளசல்யா ஆதங்கமாக மகளிடம் கேட்டது.

அதற்க்கும் மகிளா. “அது தான் நகை எல்லாம் செந்தாழினி வீட்டில் வாங்கிட்டாங்க தானே.. நான் எப்படிம்மா துடச்சிட்டு புருஷன் வீட்டுக்கு போவேன்.” என்று மகளுமே ஆவேசமாக தான் கேள்வி கேட்டது..

“அப்போ உன் அண்ணன் கேட்டான் தானே. அதுக்கு என்ன பதில் சொல்வது..?” என்றதற்க்கும் மகிளாவிடம் பதில் இருந்தது..

“அவன் ஆண் பிள்ளை அவன் தானே செய்து ஆக வேண்டும்.. வரும் பெண் அது எப்படி கேள்வி கேட்பாள் என்று.”

முதல் முறை கெளசல்யா தன் மகனுக்கு அன்னையாக. “ அவனுக்கு கடமையா.? அப்போ இந்த வீட்டை அவனுக்கு மட்டும் கொடுத்து விடவா.?” என்று கேட்டதற்க்கும்..

பெண்களுக்கும் சொத்தில் உரிமை இருக்கிறது என்பது போல சட்டம் பேசினாள் மகிளா.

இது வேலைக்கு ஆகாது என்பது போல. “ உன் கிட்ட என்னாலே பேச முடியாது டி.. உன் அண்ணன் கிட்டயே எது என்றாலும் பேசிக் கொள்.. ஒரு கல்யாணத்திற்க்கு இரண்டு கல்யாணம் இருக்கு.. வேலை அது பாட்டுக்கு அவ்வளவு இருக்கு.” என்று தனக்கு தானே புலம்பி கொண்டு சென்றவளின் முதுகையே முறைத்து பார்த்து கொண்டு இருந்தவள்..

பின் மகிளா நரேனுக்கு அழைத்து… “ கல்யாணத்துக்கு உங்க வீட்டு சார்பா எப்போ புடவை எடுக்க போறிங்க..?” என்ற கேள்விக்கு நரேன்..

“அம்மா இந்த சன்டே… நல்ல நாள் அன்னைக்கு எடுத்துடலாம் என்பது போல தான் வீட்டில் சொல்லிட்டு இருந்தாங்க..” என்ற அவனின் பதிலுக்கு மகிளா அடுத்து..

“எத்தனை ஆயிரத்துக்கு எடுப்பாங்க..?” என்ற இந்த கேள்விக்கு நரேனிடம் இருந்து..

“ அம்மா ஐம்பதாயிரம் தான் சொன்னாங்க.. நான் தான் புடவைக்கு அதிகம் எல்லாம் வேண்டாம் என்று சொன்னேன்..” என்றதுமே மகிளாவின் குரல் உள் சென்று விட்டது.

குரல் கர கரக்க.. “ஏன் நரேன்…?” என்று கேட்டவளிடம்.

“கல்யாணம் செலவு எல்லாம் என்னுடையது தான் மகி… புடவைக்கு இத்தனை செய்தால், இதுல நீ வேறு… கல்யாணம் முடிந்து உன் சேவிங்கஸ் என் சேவிங்கஸ் வைத்து மேல லோன் போட்டு என்று ஒரு இடம் வாங்கி வீடு கட்டனும் என்று சொன்ன.. இதுல அப்பார்ட்மெண்ட் எல்லாம் வேண்டாம்.. அது எல்லாம் எதிர் காலத்தில் வேல்யூ கம்மியா தான் இருக்கு என்று..” சொன்னவனின் பேச்சில்..

“நான் நம்ம கல்யாண செலவை உங்க அம்மா அப்பா பார்த்துப்பாங்க. என்று நினைத்தேன்.. “ இழுப்பது போல பேச்சை நிறுத்த.

“இப்போ உங்க வீட்டில் உன் அண்ணன் கல்யாணம் நடக்குதே… உன் அம்மா தான் செலவு செய்வதா…” என்ற பேச்சில் நரேன் மகிளாவின் வாய் அடைக்க செய்து விட்டான்.

பின் மகிளாவுக்கு பிடித்தம் இல்லை என்றாலுமே மாப்பிள்ளை வீட்டு சார்பாக மூன்று புடவையுமே முப்பது ஆயிரத்தில் நரேன் வீட்டவர் முடித்து கொண்டனர்..

தாய் வீட்டு சார்பாக மகிளா தன் அண்ணனிடம்.. “ உங்க விருப்பபடியே புடவை வாங்கி கொடுங்க ண்ணா..” என்று சொல்ல..

தங்கையை ஒரு பார்வை பார்த்த மகிபாலன்.. அவனுமே இரண்டு பட்டுப்படவை பத்தாயிரம் ஆறாயிரம் என்று இரண்டு வாங்கி கொடுத்து விட்டான்.

மகிளா தனியே கெளசல்யாவிடம்… “ ம்மா அண்ணா எவ்வளவு தான் கடன் வாங்கி இருந்தாலுமே, அவன் மாமனார் ஒரே நிமிஷத்தில் அந்த கடன் மொத்தத்தையும் அடச்சிடுவார். ஆனா நானும் அக்காவுமே அப்படியா.?” என்று சொன்ன மகளை இவள் என்னத்திற்க்கு இதை சொல்கிறாள் என்பது போல கெளசல்யா பார்க்க…

“சொத்துமே இப்போவே அத்தனை எழுதி கொடுக்குறாங்க. பின் இவங்களுக்கு குழந்தை என்று ஆன பின் என்ன எல்லாம் செய்வாங்க. இதை நான் உங்களுக்கு சொல்ல தேவையில்லை..”

“ஆனா நாங்க அப்படியா..? இருக்கிறது ஒரு வீடு.. இதுல மூன்று பங்கா பிரிந்தா என்ன கிடைக்கும்..?” என்ற மகளின் போக்கை கெளசல்யா புரிந்து கொண்டு விட்டார்..

அதாவது தான் அன்று இந்த வீட்டை பற்றி மகிபாலனுக்கு கொடுத்து விடுவீயா என்பதை தெளிவுப்படுத்தி கொள்ள பேசுகிறாள் என்பதை நினைத்தவள் சிரித்து கொண்டவள் பின்..

“நீயும் உன் அக்காவும் போகுற போக்கு எனக்கு சரியா படல. அவ்வளவு தான் சொல்லுவேன்.. பார்த்து நடந்துக்கினிங்கனா.. அம்மா வீட்டு உறவு கடைசி வரைக்கும் இருக்கும்..” என்பதை மட்டும் சொல்லி விட்டார்..

செந்தாழினி வீட்டிலோ… சென்னையில் இருந்து மதுரைக்கு தன் மனைவியுடன் வந்து சேர்ந்த வேலவ பாண்டியன் கூடத்திலேயே அமர்ந்திருந்த தன் தம்பி மனைவியையும் தன் மனைவியையும் ஒரு பார்வை பார்த்தவன்..

தங்கள் அறைக்கு போக பார்த்தவன்.. என்னவோ கேட்க திரும்பினான்.. திரும்பிய கண்ணுக்கு தன் மனைவியிடம் தம்பி மனைவி தம்ஸ் சப் செய்து சமிஞ்சை செய்ய.. அதே சைகையை தன் மனைவி காட்டியதை தான் பார்த்தது.

இருவருமே அது போல செய்தாலுமே, வேலவ பாண்டியன் முறைப்பு என்னவோ தன் மனைவிக்கு தான் கொடுத்தான்.. கூடவே எச்சரிக்கையுமா.

“நான் விளையாட்டுக்கு சொல்றேன்.. என்று நீ நினச்சி ஏதாவது செய்த என்று வெச்சிக்க…. நான் புதுமாப்பிள்ளை நிற்பதை நீ பார்ப்ப.” என்று சொல்லி விட்டு சென்றவனையே செண்பகா ஒரு வித பயத்துடன் தான் பார்த்து நின்று இருந்தாள்.

செளமியாவோ… “என்னக்கா மாமா லூசு போல புது மாப்பிள்ளை என்று என்ன என்னவோ சொல்றாரு…கல்யாணம் முடிந்து பத்து வருஷம் ஆனதை மறந்துட்டாரா என்ன..?” என்று கேட்டவளையே கோபத்துடன் முறைத்த செண்பகம்..

“ஏன்டி உனக்கு என்ன டி அவ்வளவு அவசரம்.. எப்போவுமே உன் ரூமுல விட்டெத்தியா படுத்துட்டு கிடப்பலே அது போல கிடக்க வேண்டியது தானே டி…”

“என்னவோ கட்டின புருஷன் வேலையை விட்டு வர காத்திருப்பது போல தேவுடு காத்துட்டு இருக்க. நீ என் கொழுந்தனாருக்கு கூட இப்படி காத்துட்டு இருந்தது இல்ல… இதுல என் புருஷன் போறதுக்குள்ள தம் சப் வேற..” என்று சொன்னவள் தம் சப் காட்டிய விரலை முறித்தும் விட்டாள்..

“க்கா என் விரல் போச்சுக்கா. போச்சுக்கா…” என்று செளமியா ஒப்பாரி வைக்க.

“எனக்கு வாழ்க்கைய போக பார்க்குதுடி இவளே..” என்று சொன்னதோடு வேலவ பாண்டியன் சொன்னது அனைத்தையும் கூறியவள்..

கடைசியில் நான் இவங்க அத்தை கிட்ட கேட்டுட்டு இருப்பாங்கலோ என்று பயந்துட்டு இருந்தேன் நல்ல வேள கேட்கல. இதுல ஆறுதலா நான் வந்தா… இங்கு நீ என்னை மாட்டி விடுற.. இவளே அவளே..” என்று கண்ட மேனிக்கு பேசி தள்ளி விட்டாள் செண்பகா..

செளமியாவோ..“அது தெரிந்த விசயம் தானேக்கா. தங்கை என்று வந்துட்டா அந்த தெய்வத்தை கூட அவங்க தொங்கச்சிக்கு அடுத்த படியா தானே வைப்பாங்க க்கா.. நீங்க அதை விடுங்க… சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லிட்டியாக்கா…” என்று ஆர்வமுடன் கேட்ட செளமியாவுக்கு..

அதை விட ஆர்வமாக.. “ சொல்லிட்டேன்.. அநேகமா நாளைக்கே இந்த வீட்டு இரண்டு பெண்ணுங்களை நாம எதிர் பார்க்கலாம்.. நமக்கு தான் கேட்க உரிமை இல்ல.. ஆனா செந்தாழினி போல.. அவங்களுமே இந்த வீட்டு பெண்ணுங்க தானே… அது எப்படி எங்களுக்கும் அந்த கடையில் உரிமை இருக்கு என்று நிற்க்கும் போது இந்த வீட்டு ஆம்பிள்ளைங்க என்ன செய்யிறாங்க என்று தான் பார்ப்போம்…” என்று செண்பகா ஒரு வஞ்சத்துடன் பேச..

செளமியாவோ.. “ அந்த செந்தாழினி மேல என்னை விட உனக்கு கோபம் அதிகமா இருக்கே ஏனுக்கா.” என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் கேட்க..

முகத்தை சிடு சிடு என்று வைத்து கொண்டு.. “அதுவா என்ற புருஷரு.. அது தான் உன் மூத்தாரு … கல்யாணம் ஆன புதுசுல.. ஆசையா என் கிட்ட செண்பா உனக்கு ஹனி மூன் எங்கு போக ஆசை என்று கேட்டாரு.. நானுமே ஆசையா அப்போ கோவா படத்தை பார்த்துட்டு என் அப்பாரு கிட்ட. கோவா கூட்டிட்டு போங்க என்றதுக்கு.. நீ கண்ணாலாம் கட்டிட்டு உன் புருஷன் கூட போ இந்த கோவாக்கு எல்லாம் என்று சொன்னதை என் புருஷன் கிட்ட சொன்னேன்.”

“அவருமே அப்படியா.. சரி கோவாக்கே போகலாம் என்று ப்ளைட்ல டிக்கெட் புக் பண்ணிட்டு மறு நாளே வந்துட்டாரு.” என்று செண்பகா சொல்லி கொண்டு இருக்கும் போதே செளமியா..

“பரவாயில்ல க்கா மாமா உங்க விருப்பத்தை கேட்டு ஹனி மூன் எல்லாம் கூட்டிட்டு போய் இருக்காரு.. ஆனா உன் மச்சினரு.. என்னை எங்கே கூட்டிட்டு போனாரு.. இதே வீட்டில் தானே இருந்தேன்..” என்று விட்டால் ஒரு ஒப்பாரி வைத்து இருப்பாள்..

ஆனால் அதற்க்குள் செண்பகா.. “ இரு டி.. குறை பிரசவத்தில் பிறந்தவளே நான் சொல்றதை .. முழுசா கேளு புரவு உன் மாமா புகழை பாடு.” என்றவள்..

“ப்ளைட் டிக்கெட் எடுத்தாரு என்று சொன்னனே. அது எத்தனை பேருக்கு என்ரு சொல்லலே பாரு மூன்று பேருக்கு எடுத்துட்டு வந்தாரு.. அந்த மூன்றாவது யாரு தெரியுமா நம்ம அருமை நாத்தனார் செந்தாழினிக்கு தான்.. அது மூனாவது டிக்கெட்டூடூடூ.” என்று கோபத்துடன் சொல்ல..

செளமியாவோ வாயின் மீது கையை வைத்து கொண்டாள்.

“இதற்க்கே வாயை மூடிக்காத டி… நானுமே என்னங்க சின்ன பெண்.. அவளை போய். என்றதுக்கு என்ற புருஷரூ அது தான் நானுமே சொல்றேன். வீட்டில் சின்ன பெண்ணை விட்டுட்டு நம்ம போறது சரியில்ல என்று என் வாயை அடச்சிட்டாரு..”

“சரி வூட்டுல இத்தனை பெரிய மனுஷங்க இருக்காங்கலே.. இதுக்கு வாயை திறந்து ஏதாவது சொல்லுவாங்க என்று பார்த்தா. அவங்களோ நான் எண் துணி மணியை அடுக்கும் முன்ன செந்தாழினிக்கு புது புது ட்ரஸ் வாங்கி அடுக்கி வைத்து எனக்கு முன்னே ரெடி செய்து இருக்காங்க. என்ன செய்ய ..”

“என் நாத்தனாரு கூட தான் நான் ஹனி மூன் போனேன்.. அங்கே போனா சின்ன பெண் தனி ரூமுல எப்படி தங்க வைக்கிறதுன்னு ஒரே அறை.”

“அதை தான் விடுன்னா அடுத்து அறையில. பெட்டுல நீயும் என் தொங்கச்சியும் படுத்துக்கோங்க என்று என்ர புருஷன் கீழே கட்டையை” சாய்ச்சிட்டாரு.. சரி வந்ததுக்கு ஊரயாவது சுத்தி பார்க்கலாம் என்று பார்த்தா அங்கு அங்கு பீச்சுல அரையும் குரையுமா என்ன என்னவோ எப்படி எப்படியோ இருக்காங்க. சின்ன பெண்ணை வெச்சிட்டு அங்கு எல்லாம் போவதா.. ஒரு பீச்சுக்கு கூட்டிட்டு போய் அங்கு நடப்பதை பார்த்துட்டு திரும்ப அறைக்கே இழுத்துட்டு வந்து தள்ளிட்டாரு…” என்று ஒரவத்தியின் பேச்சில்.

செளமியா. “நீங்க போன லட்சணத்துக்கு என்ன போல இந்த பருத்தி குடவுனிலேயே இருந்து இருக்கலாம் போல…” என்று சொன்னவள்..

பின் “அப்புறம் என்ன்னக்கா ஆச்சி…?” என்று ஆர்வமுடன் கேட்கும் போதே வாசலில் வித்யா குடும்பத்தினரும் சங்கரி குடும்பத்தினரும் வந்து இருந்தனர்….

ஏதோ சத்தம் கேட்டு தன் அறையில் இருந்து வெளியில் வந்த வேலவ பாண்டியனோ… தன் மனைவியை அப்படி ஒரு முறைப்பு முறைத்து கொண்டு தன் இரண்டு அத்தைகளையும். அவர்கள் குடும்பத்தினரையும்.

“வாங்க..” என்று வர வேற்றான்…
 
Active member
Joined
Jun 23, 2024
Messages
71
மகிளா 😡 😡 😡 😡 😡

என்ன இருந்தாலும் ஹனிமூனுக்கு தங்கச்சிய கூட்டிட்டு போனது தப்பு தான் 🥺 🥺 🥺 வீட்டில் உள்ளவங்களும் அனுப்பி வச்சிருக்காங்க 😔 😔 😔 😔

ஏம்மா செண்பகா அப்போ செந்தா சின்ன பொண்ணு விவரம் தெரியாமல் வந்துட்டா அதுக்கு நீ கோவ படுறதா இருந்தாலும் உன் புருஷன் கிட்ட தான் கோவ படணும் 😣😣😣😣😣😣😣😣

செந்தா எத்தனை பேர் வந்தாலும் அசராமல் பதில் கொடுப்பா 😕😕😕😕😕😕
 
Last edited:
Active member
Joined
May 12, 2024
Messages
198
Magila 😕😕😕 suyanalathin motha uruvam… Naren veetuka semaiya vangi katta pora…

Adei Velava Pandiya… seekirame unakku pudhu ponnu pathidalam… ippo intha Sothainga vandhu irukkalungale… enna nadakka pogutho
 
Active member
Joined
May 24, 2024
Messages
194
Nice update
Mahila un puthiki nee nallavan irupa mkum

Honeymoon thankachi kootivanthathu thspputtan
Atuku un purusan kita tan kovapadanum y sentha

Nee adangala Avan puthu mapla ha ha confrm

Athaigalum senthavvachi seiva
 
Active member
Joined
Jun 1, 2024
Messages
105
மகிளா விஷம் விஷம் 😈 எவ்வளவு சுயநலம் 😡
கௌசல்யா உங்க பொண்ணுங்கள பத்தி புரிஞ்சுக்கோங்க மகிக்குன்னு எதையும் விட்டு வைக்காம கொள்ளை அடிச்சுடுவாங்க....

செண்பகம் வந்தது அத்தைங்க இல்லை ஆப்பு பொட்டியைக் கட்ட ரெடியா இரு 🤣🤣🤣
 
Top