Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Eengum Geetham...13

  • Thread Author
அத்தியாயம்…13

தன் மனைவி தன் நண்பனையே அதிசயம் போல பார்த்து கொண்டு இருந்தவனை பார்த்த வேதாந்த் செந்தாழினியின் காதில் ஏதோ ரகசியம் பேச செந்தாழினியோ அவன் கையில் அடித்து..

“ ண்ணா அடி வாங்க போறிங்க.. சும்மா இருங்க…” என்று உரிமையுடன் பேசியவளின் பேச்சையும் நண்பனையுமே மகி பாலன் மாறி மாறி பார்த்துக் கொண்டு இருந்தான்..

அதற்க்குள் வேதாந்தின் பி.ஏ வேதாந்த் அருகில் ஒடி வந்து ஏதோ சொல்ல.. பி.ஏ சொன்னதற்க்கு அனைத்திற்க்கும் தலையாட்டிய வேதாந்த்..

“பின். “ நேரம் ஆகிடுச்சி மகி கிளம்புறேன்..” என்று மகிபாலனிடம் சொன்னவன் பின் செந்தாழினியிடம்..

“என் கண்ணையே உன்னிடம் ஒப்படைக்கிறேன் ம்மா…” என்று நாடகம் வசனம் போல பேச…

அதற்க்கு செந்தாழினி.. “அந்த வெங்காயம் எல்லாம் நான் பார்த்துக்குறேன்.. கல்யாணத்திற்க்கு வந்தா கிப்ட் எல்லாம் வாங்கிட்டு வர பழக்கம் இல்லையா உங்களுக்கு…?” என்ற கேள்விக்கு.

“உன் பக்கத்தில் உட்கார்ந்துட்டு இருக்கான் பாரும்மா என் நண்பன்.. இவன் தான் நான் உனக்கு கொடுத்த கிப்ட்..” என்று சொன்னவன் பின் பி.ஏ மீண்டும் ஏதோ சொல்ல வர.

“அப்போ நான் கிளம்புறேன்.. கூடிய சீக்கிரம் மதுரைக்கே வந்துடுவேன்..” என்று சொல்லி விட்டு சென்றான்.. காஞ்சிபுரம் கலெக்கட்டர் வேதாந்தம்..

மகிபாலன் யோசனையுடன் மனைவியை பார்த்தாலுமே, ஒன்றும் கேட்கவில்லை.. செந்தாழினியும் ஒன்றும் சொல்லவில்லை..

பின் திருமண சடங்குகள் அது பாட்டுக்கு நடந்தாலுமே, செந்தாழினி வீட்டு ஆண்கள் மட்டும் ஒரு வித பதட்டத்துடன் தான் அடுத்து வேலைகளை பார்த்தது.

பெண்கள் அன்று காவல் நிலையத்திற்க்கு வரவில்லை என்பதினால், வந்தவனை தெரியவில்லை.. மருது பாண்டியனுக்கே உன்னித்து பார்த்ததினால் தான் அடையாளம் தெரிந்தது..

அத்தனை மாற்றங்கள் வேதாந்தின் முகத்தில் இருந்து தோற்றம் என்று அனைத்திலுமே, திருமணம் முடிந்து விட முதலில் குல தெய்வம் கோயிலுக்கு சென்று பின் மாப்பிள்ளை வீட்டில் கால் பதித்து மீண்டும் பெண் வீட்டில் அன்றைய சடங்கு நடத்துவர்..

அது தான் அவர்கள் வழக்கமும்.. அதையே செய்ய நினைக்க அதே போல முதலில் மகிபாலனின் குல தெய்வத்தை வணங்கி விட்டு மாப்பிள்ளை வீட்டிற்க்கு வந்து இறங்கினர்..

அந்த சின்ன வீட்டை அத்தனை சொந்தத்துடன் பார்த்திருந்தாள் செந்தாழினி… கெளசல்யா மாப்பிள்ளை வீட்டு சடங்கு செய்வதை அனைத்துமே முறையாக தான் செய்தார்..

தான் கணவனை இழந்தவள் என்பதினால் தன் மூத்த பெண் சுதாவை வைத்து நடத்த. செந்தாழினியோ..

“அத்தை நீங்களே எல்லாம் செய்யுங்களேன்..”

தன் தாய் வீட்டில் இறுக்கிக் கொண்ட தன் வாயை புகுந்த வீட்டில் சொந்தமும் ஊரிமையும் கலந்ததில் இப்படி சொன்னாள்..

கெளசல்யா அதை சாதாரணமாக தான் எடுத்து கொண்டது.. “ இல்லேம்மா சுதாவே செய்யட்டும்..” என்று.

ஆனால் சுதாவுக்கு இது வேறு மாதிரியாக தெரிந்தது.. அதாவது வந்த முதல் நாளே தன்னை இந்த வீட்டில் இருந்து தள்ளி வைக்க நினைக்கிறாள் என்று..

அதை சமையல் அறையில் கேசரி கிளறிக் கொண்டு இருந்த அன்னையின் காதிலும் போட்டு வைத்தாள்..

முன் சாதாரணமாக நினைத்த கெளசல்யா.இப்போது அப்படியும் இருக்குமோ என்று நினைக்க வைத்தது.. மகளா…? மருமகளா..? என்றால் நான் மகள் பக்கத்தில் இருந்து தான் யோசிப்பேன் என்று முதல் நாளே கெளசல்யா யோசிக்க தொடங்கி விட்டாள்..

இங்கு மகிபாலன் வீட்டில் அனைத்து சடங்கும் முடிந்த பின் பெண் வீட்டிற்க்கு அழைத்து செல்ல வேலவ பாண்டியன் தயாராக இவர்கள் அருகில் வந்து நின்றான்…

“அப்போ போகலாமா மாப்பிள்ளை…” என்று மகிபாலனை அழைத்தான்..

மகிபாலனும்.. “ ம்..” என்பது போல எழுந்து கொள்ள பார்த்தவனின் கை மீது செந்தாழினி கை பதித்தாள்.. எழுந்து கொள்ளாதே.. என்பது போல..

மனைவியின் இந்த தொடுகையில் மகிபாலன் என்ன என்பது போல திரும்பி செந்தாழினியை பார்த்தான்..

மனைவியின் இந்த சிறு சிறு தொடுகை இப்போது மட்டும் இல்லை.. நேற்று மேடையில் இருக்கும் சமயமே வேர்த்து கொட்டும் சமயம் தன் கை குட்டை அவனிடம் நீட்டி துடைத்து கொள்ளுங்க என்று சொல்லிக் கொண்டே அவன் கை பிடித்து அவளின் கை குட்டையை கொடுத்தது..

பின் சந்தனம் அதிகம் கன்னத்தில் பதிந்து இருந்ததை அவளே துடைத்து விட்டது.. என்று திருமணம் மண்டபத்தில் மட்டும் அல்லாது இதோ இங்கு பால் பழம் கொடுக்கும் போது கூட தன் கை பிடித்து தான் அனைத்துமே கொடுத்தது..

அதோடு தன் அன்னை கூப்பிடும் போது உரிமையுடன்.. அவள் கணவனின் தோள் தட்டி.. “ அத்தை உங்களை கூப்பிடுறாங்க பாருங்க.” என்று சொல்வது என்று அனைத்து செயல்களிலுமே செந்தாழினியிடன் ஒரு உரிமை காண்பட்டது..

ஆனால் மகிபாலனுக்கு தான் ஒரு வித பயம்.. தன் வீட்டவர்களே ஏதாவது சொல்லி விடுவார்களோ என்று நினைத்து.. அதில் தன் இருக்கையை மனைவியிடம் இருந்து கொஞ்சம் நகர்த்தி கொண்டான்.. சிறிது நேரத்துக்கு எல்லாம் முன் போல பக்கம் பக்கம் தான் இருவரும் அமர்ந்து இருந்தது.. மனைவி எப்போது அவள் இருக்கையை தன் அருகில் நகர்த்தி வந்தாள் என்பது பாவம் அவனுக்கு புரியாது தான் அவளை பார்த்தது..

இப்போதுமே வேலவ பாண்டியன் முன் நிலையில் தன் கை பிடித்தவள்..

“எந்த சடங்கு இருந்தாலுமே இங்கே என் வீட்டிலேயே நடக்கட்டும் ..” என்று பெண்ணவள் தன் அண்ணனிடம் எந்த வித உறவு முறையும் அழைக்காது தான் சொல்ல வேண்டியதை சொன்னாள்..

வேலவ பாண்டியன் அதிர்ந்ததை விட பாவம் மகிபாலன் தான் அதிகம் அதிர்ந்து விட்டான்.. இவர்கள் வீட்டில் என்ன வேலையாட்களா நிறைய பேர் இருக்கிறார்கள்… சொன்ன உடனே உடனுக்குடன் செய்து முடிக்க.

இப்போதே ஆறு மணி ஆக போகிறது.. இப்போ இங்கு சடங்கு என்றால்.

சடங்கு என்றால் என்ன என்று தான் மகிபாலனுக்கு தெரியுமே. அந்த வகையில் திடிர் என்று என்ன செய்வது..

மேடை ஏறும் வரை கூட வீட்டிற்க்கு ஒத்த ஆண்மகனாக மகிபாலன் தான் அனைத்துமே செய்து முடித்து விட்டு மேடையில் ஏறியது.

மேடையிலாவது மாப்பிள்ளையாக கொஞ்ச நேரம் இருக்க விட்டாங்கலா அவன் வீட்டவர்கள்.. எது எந்த இடத்தில் இருக்கு… வாங்கிய பொருள் எந்த மூட்டையில் இருக்கு என்று அனைத்திற்க்குமே இவனிடம் தான் கேட்டு வந்து நின்றது..

இப்போது இங்கு சடங்கு என்றால் இவன் தானே ஓடனும்.. என்று பாவம் போல அண்ணன் தங்கையை மாறி மாறி பார்த்து கொண்டு மகிபாலன் இருக்க..

இவனை விட தர்மசங்கடமான நிலையில் நின்று இருந்தது என்னவோ வேலவ பாண்டியன் தான்..

என்ன இது சம்மந்தி வீட்டில் வைத்து கொண்டு இவள் இப்படி சொல்கிறாள்.. அதோடு அங்கு வீட்டில் அப்பா சித்தப்பா எல்லாம் இவள் கிட்ட பேச காத்துட்டு இருக்காங்க. இவள் என்ன இங்கேயே.. அங்கு அங்கு பெண்கள் மாப்பிள்ளை வீடு வாசல் படி மிதிக்க வந்த அரை மணி நேரத்திற்க்கு எல்லாம் என்னவோ காலம் காலமாக அம்மா வீட்டை விட்டு பிரிந்து வந்து இங்கு இருப்பது போல.

பெண் வீட்டிற்க்கு போகும் போது அப்படி பரபரப்பாங்க. இவள் இப்படி சொன்னால் இங்கு இருப்பவங்க என்ன நினைப்பாங்க என்று பல்லை கடித்தாலுமே கோபத்துடன் அவனால் தங்கையிடம் பேச முடியவில்லை..

அதனால் தன்மையாகவே.. “அது எல்லாம் முறை இல்ல செந்தா.. விளையாடாதே… வா நம்ம வீட்டிற்க்கு போகலாம்..” என்று தங்கையை அழைத்தாள்..

தங்கையோ. “ இது தான் ண்ணா என் வீடு.. என் நல்லது எல்லாமே இங்கு நடக்கட்டுமே…” என்று அமைதியாக எல்லாம் செந்தாழினி இதை வேலவனிடம் சொல்லவில்லை… அதற்க்கு என்று கத்தி சண்டையும் போட வில்லை… தவறு இல்லாத ஒரு விசயத்தை சாதாரணமாக பேசுவோம் இல்லையா.. அது போல தான் செந்தாழினி பேசியது..

அங்கு இருந்தவர்கள் அனைவருமே இவர்கள் பேச்சை கேட்டு கொண்டு தான் இருந்தனர்… வந்த உறவுகளின் சுதா மாமியார் வீடு மட்டும் அல்லாது மகிளாவின் வருங்கால மாமியார் வீடுமே அடக்கம் தான்..

பெண் பெரிய இடத்து பெண்.. அது என்னவோ அதிசயம் போல தான் பார்க்க வந்தனர்.. திருமணம் முதல் கொண்டு அனைத்துமே தங்களை விடவே சுமாராக செய்ததில் கொஞ்சம் அவர்களுக்கு ஏமாற்றம் தான்..

அவர்கள் செய்யவில்லை என்றால், இவர்களுக்கு என்ன ஏமாற்றம் என்று தானே நினைக்கிறிங்க..? செந்தாழ்னி கொண்டு வந்ததை வைத்து இவர்கள் பேரம் பேச நினைத்து இருந்தார்களோ என்னவோ.

கெளசல்யாவுக்கு ஒரு வகையில் செந்தாழினியின் இந்த பேச்சு ஒரு நிம்மதியை தான் கொடுத்தது..

அத்தனை பெரிய வீட்டை விட்டு… இங்கு செய்ய சொன்னதும்.. இது தன் வீடு என்று சொன்னதில்..

ஆனால் ஒரு சில வீட்டில் மாமியார் மருமகள் நல்ல ராசியாகி விட்டால், பெண்ணாக தன் மதிப்பு பிறந்த வீட்டில் குறைந்து விடும் என்று நினைக்கும் அந்த வீட்டின் பெண்கள் தன் அம்மாவை நல்ல விதமாகவே யோசிக்க விடாது குழப்பி விடுவர்.

இப்போது அந்த வேலையை மகிளா பார்த்து கொண்டாள்..

“பார்த்தும்மா இப்போவே இது என் வீடு தான் என்று உரிமையை யார் கொடுக்காம அவளே எடுத்து கொள்கிறாள்.. இது வரை மொட்டை மாடிக்கு அண்ணன் தான் போனான்.. இனி உன்னை அனுப்பி விட போகிறான்.. உன் பிள்ளையின் போக்கும் எனக்கு என்னவோ சரியாக படல.. ஆமாம் சொல்லிட்டேன்.. நான் இன்னும் பத்து நாளில் என் புருஷன் வீட்டிற்க்கு போய் விடுவேன்.., அண்ணன் மொத்தமா அவன் பொண்டாட்டி பக்கம் போயிட்டா எங்களை விட உங்களுக்கு தான் பாதிப்பு அதிகம்.” என்று ஏற்றி விட.

அது நன்றாகவே வேலை செய்தது.. “ அது எப்படி இது அவள் வீடு மட்டும் ஆகும்.. வீடு என் பெயரில் தான் இருக்கு… அதனால இந்த வீட்டில் எனக்கு மட்டும் இல்லடி உங்களுக்குமே உரிமை இருக்கு.. இன்னும் கேட்டாள் அவளை விட அதிகமாவே இருக்கு…” என்று நல்ல விதமாக நினைத்த கெளசல்யா வேறு விதமாக யோசித்தார்..

இங்கு வேலவ பாண்டியன் தங்கையிடம் வா வா என்று அழைத்தவன் தங்களையே ஏதோ நாடகம் போல வேடிக்கை பார்ப்பதை பார்த்தவன் வெளியில் வந்து தன் தந்தையை பேசியில் அழைத்தவன். அனைத்துமே சொல்லி விட்டான்.

மகன் சொன்னதை கேட்ட மருது பாண்டியனுக்கோ.. என்ன இது இங்கு வருவாள் என்ன என்று விசாரிக்கலாம் என்று பார்த்தால், இன்று இங்கு வரவே மாட்டேன் என்பது போல சொல்றாளே. என்று நினைத்தவருக்கு தெரியவில்லை..

இன்று என்ன என்றுமே இனி தன் மகள் தன் வீட்டிற்க்கு வர போராடி தான் அழைத்து வர வேண்டி இருக்கும் என்று.

பின் முடிவாக செந்தாழினி சொன்னது தான் ஜெயித்தது..

அதற்க்குமே சுதா. “ பரவாயில்லை முதல் நாளே. தான் நின்னப்பிடியில் நின்னு காரியத்தை சாதிச்சிட்டா. இப்போ என்ன நான் என் புருஷனை கூட்டிட்டு என் வீட்டிற்க்கு நடையை கட்டட்டுமா…? என்று சுதா சொல்ல.

மகிளாவோ.. “ ஒரு கல்யாணம் ஆகாத பொண்ணு நான் இருக்கேன் இங்கு இந்த சடங்கு வைக்கனுமாம்மா.. அதுவும் செந்தாழினி என்னை விட சின்ன பெண்.” என்று மகிளா தன் அன்னையிடம் சொல்லி கொண்டு இருக்கும் சமயம் தான் செந்தாழினி அங்கு வந்தது..

இந்த பேச்சுக்கள் எல்லாம் சமையல் அறையில் தான் நடந்தது… ஆனால் செந்தாழினி நல்ல நேரமா இல்லை.. பேசியவர்களின் நல்ல நேரமா என்று தெரியவில்லை.. கடைசியாக மகிளா பேச்சு மட்டும் தான் செந்தாழினி கேட்டது..

அது செந்தாழினிக்கு நியாயமாக தான் பட்டது.. அதனால் ..” சாரி அண்ணி… நான் இது எல்லாம் யோசிக்கல சாரி சாரி.” என்று மகிளாவின் கை பிடித்து மன்னிப்பு கேட்டாள் செந்தாழினி..

அதுவும் செந்தாழினியை பார்த்ததுமே அய்யோ என்ன கேட்டாளோ என்று பயந்து மூன்று பெண்மணிகளிடம் செந்தாழினி மன்னிப்பு கேட்க.. அப்போது தான் அவர்களுக்கு ஒரு ஆசுவாசம் வந்தது.. பரவாயில்லை முழுவதும் கேட்கவில்லை என்று நினைத்து.

கெளசல்யா தான்.. “பரவாயில்லை ம்மா.. சின்னதா ஏற்பாடு செய்துடுறேன்…” என்றவரிடம்.

“அங்கு வேண்டாம் என்று தான் சொன்னேன் அத்தை.. அதுக்கு இங்கு செய்யனும் என்றது இல்லை… அவர் தான் எல்லாம் செய்தது என்று எனக்கு தெரியும் அத்தை.. இதுக்குமே அவர் தான் போகனும்.. அவர் ரொம்ப டையாடா தெரியிறார்.. அதனால இன்னைக்கு எதுவும் வேண்டாம்.நாம எல்லோரும் ஹாலிலேயே படுத்துக்கலாம் அத்தை.. அதை சொல்ல தான் வந்தேன்.. “ என்று சொல்லி மீண்டுமே கணவன் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்..

அதற்க்கும் சுதா. “ ம் கைக்காரியா தான் இருக்காம்மா… நம்ம கிட்ட சண்டை போடுறவங்களை கூட நம்பி விடலாம்.. இது போல ஆளுங்களை தான் நம்ப முடியாது… நீங்க இனி தான் ஜாக்கிரதையா இருக்கனும்மா.” என்று ஒவ்வொரு முறையும் கெளசல்யா செந்தாழினியின் பேச்சு நடத்தையை வைத்து பரவாயில்லை என்று நிம்மதி அடைந்த போது எல்லாம் அவர்களின் இரண்டு மகள்களுமே உடனுக்குடன் அதை தகர்த்து எரிந்து கொண்டு இருந்தனர்.

பார்க்கலாம்.. செந்தாழினியின் வயது… அவள் முன் செய்த செயல். அதுவும் இப்போது தங்களிடம் கேட்ட மன்னிப்பு என்று அனைத்தையும் பார்த்து அவளை மிக எளிதாக எடைப்போட்டு விட்டனர் போல.. அதனால் தான் இதோ அவள் சொன்னது போல தான் கூடத்தில் பாய் விரித்து அனைவரோடு தான் செந்தாழினியும் மகிபாலனும் உறங்கியது..

மகிபாலனுக்கு தான் இது ஒரு வித சங்கடத்தை கொடுத்தது.. இன்று முதல் இரவு என்றால், இன்றே அதை கொண்டாட எல்லாம் அவன் நினைக்கவில்லை..

ஆனால் செந்தாழினியிடம் கொஞ்சம் பேச வேண்டும் என்று நினைத்து இருந்தான்.. பேச வேண்டும் என்றது கூட அந்த அவளின் அதை பற்றிய ரகசியம் கிடையாது…

ஆம் அந்த நிகழ்வை அவன் அவள் சொன்னதை போல என்று எல்லாம் நம்பவில்லை.. ஏதோ இருக்கிறது. ஆனால் அது தவறானது கிடையாது என்பதில் அவன் மனது உறுதியாக நம்பியது.

அது என்ன என்று அவன் கேட்க நினைக்கவில்லை.. சொல்ல நினைத்தாள் அவளே தன்னிடம் சொல்லட்டும்.. அவன் கேட்க நினைத்தது வேதாந்தை பற்றியது தான்..

வேதாந்த் அவ்வளவு சீக்கிரம் எல்லாம் எளிதில் ஒருவரிடம். அதுவும் இது போல தோள் தட்டி . அதுவும் ஒரு பெண்ணிடம் பேசி விடமாட்டான்.. இதை வைத்து அவர்களின் நண்பர்கள் வட்டம் கிண்டலே அவனை செய்வார்கள்.. அப்படிப்பட்டவன் எப்படி செந்தாழினியிடம் இப்படி உரிமையுடம் பேசுகிறான் பழகுகிறான்.. அதை கேட்க நினைத்தான்.

அதோடு என்ன தான் இன்றே தன் வாழ்க்கையை ஆரம்பிக்கவில்லை என்றாலுமே இது போல கூடத்தில், செந்தாழினி எல்லாம் சாதாரண நாளிலேயெ இது போல எல்லாம் படுத்து இருந்து இருக்க மாட்டாள்.. இன்றைய நாளில்.. இது செந்தாழினியின் வீட்டிற்க்கு தெரிய வந்தால் என்ன நினைப்பார்கள் என்று அவன் நினைக்க.

இது தான் இனி அடிக்கடி இங்கு நடைப்பெற இருக்கும் என்பது அவனுக்கு தெரியவில்லை. இன்று செந்தாழினியே அனைவரோடு படுக்க ஆசைப்பட்டவள் தங்களுக்கு தனிமை கிடைக்காதா.. என்று ஏங்க போவதும்.. ஒரு நாள் வெளிப்படையாகவே தன் மாமியாரிடம்.

இதை பற்றி பேச போவதுமே தெரியாது அன்றைய இரவு கழிந்து. விடியலும் வந்தது..
 
Active member
Joined
Jun 23, 2024
Messages
71
கௌசல்யா பொண்ணுங்க பேச்சை கேட்டு உருப்படாமல் போக போறீங்க 😨😨😨😨

சுதா , மகிளா ஒரு நாள் அண்ணன் உறவையே இழக்க போறீங்க 🥶🥶🥶🥶

இரண்டு பொண்ணுங்களும் அம்மா வீட்டில் வந்து டேரா போட போறாளுங்களா 😣😣😣😣😣


செந்தா 🥺🥺🥺🥺🥺 பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்று ஒரு நாள் காட்ட போறா 😣 😣 😣 😣
 
Last edited:
Active member
Joined
Jun 1, 2024
Messages
105
கௌசல்யா நல்ல விதமா யோசிச்சா கூட அதை கெடுக்குறதுக்குன்னே ரெண்டு பிசாசுங்க கூட இருக்குங்க 😡

செந்தா பிறந்த வீட்டையே வைராக்கியமா தள்ளி வச்சவ இன்னும் இவங்களை பத்தி தெரியல.... மொத்தமா அண்ணன் உறவை இழக்காம காப்பாத்திக்கோங்க 😒
 
Active member
Joined
May 12, 2024
Messages
198
Aval kondu vandha nagaigalai poda unakku koosala… aanal avanga sandangu nadakkurathu uncomfortable ah irukko???
Intha moonu pisasungalum patta than thirunthunga
 
Top