Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Eengum Geetham...14

  • Thread Author
அத்தியாயம்…14

வேலவ பாண்டியன் வரும் வரை மருது பாண்டியனின் வீட்டவர் வாசலையே தான் பார்த்து கொண்டு இருந்தனர்… பார்த்துக் கொண்டு இருந்தனர் என்றால், செந்தாழியினின் அம்மா அப்பா சித்தப்பா சித்தி இவர்கள் தான்..

செளமியாவும், செண்பகாவும் சமையல் அறையில் இருந்தனர்… சமையல் அறையில் என்றால் சமையல் செய்து கொண்டு இருந்தார்கள் என்று சொல்ல முடியாது..

அவர்களின் பழக்கம்.. இருவரும் பேசுவது என்பது இது போல சமையல் அறையில் ஏதாவது செய்வது போன்ற பாவனையில் தான் கதை அளந்து கொண்டு இருப்பர்..

எப்போதும் செண்பகா தான் என்ன நடந்து விடும் பார்த்து கொள்ளலாம் என்பது போன்று வீராப்பாய் நிற்ப்பாள்.. ஆனால் இன்றோ… கொஞ்சம் முகத்தில் பதட்டத்தை தேக்கி வைத்து கொண்டு தான்..

“ஏன் செந்தாழினி வர மாட்டா என்று சொன்னா..?” என்று கேட்டாள்..

கணவன் மாமனாரை அழைத்து விசயம் சொன்னவன்.. “ நான் என்ன தான் கூப்பிட்டாலுமே வர மாட்டேன்னு சொல்லிட்டாப்பா… “ என்றதற்க்கு மருது பாண்டியனும்..

“சரி வந்துடு..” என்ற பேச்சு கூடத்தில் தான் பேசியது என்பதினால், அங்கு இருந்த அனைவருக்கும் விசயம் இன்னது என்பது தெரிந்து விட்டது.

இதில் மகளுக்காக பதைத்தை கொண்டு அம்மாவும் சித்தியும்.. “ ஏன் வரலையாம்.?” என்று கணவனிடம் வளர் மதி கேட்ட போது..

“எனக்கு மட்டும் என்ன தெரியும்.. ?” உம்ம மகள் எப்போ என்ன செய்யிறா என்று என் கிட்ட சொல்லிட்டு தான் செய்யிறாளா.. என்ன…?”

வேதாந்ததை பற்றி இங்கு வந்தால் கேட்கலாம் என்று நினைத்து கொண்டு இந்த வீட்டு ஆண்கள் செந்தாழினிக்காக காத்து கொண்டு இருக்க. இப்போது வரவே இல்லை என்பதில் கோபம்.. அந்த கோபத்தை எப்போதும் போல மனைவியிடம் காட்டினார் மருது பாண்டியன்..

வளர் மதியும் எப்போதும் போலவே… தன் ஒரவத்தியிடம்.. “ முன் எல்லாம் இவள் மவள் நல்லா படிக்கும் போது பாடும் போதும் ஆடும் போதும்.. என் மவ என் ரத்தம் என்று சொல்லுறது.. இதுவே இப்படி ஏட்டிக்கு போட்டியா ஏதாவது செய்தா அப்போது மட்டும் இவர் மவ என் மவளா ஆயிடுவா…?” என்று கழுத்தை ஒரு திருப்பி திருப்பியவாறு குறைப்பட்டு கொண்டவர்..

எப்போதும் போல கணவன் சொல்லாத விசயத்தை மகனிடம் கேட்டு வாங்கும் பழக்கத்தில் வேலவ பாண்டியனுக்காக வளர்மதியும் மரகதமும் காத்து கொண்டு இருந்தனர்.. பாவம் வீட்டு பெண்களுக்கு இந்த வேதாந்த விசயம் தெரியாததினால், ஆப்கள் அளவுக்கு கூடத்தில் அமர்ந்து இருந்த பெண்களுக்கு இல்லை..

ஆனால் அதை ஈடுக்கட்டும் வகையில் சமையல் அறையில் இருந்த செண்பகம் பதட்டத்தில் தவலையில் இருந்த தண்ணீரை மொண்டு மொண்டு குடிப்பதுமாக இருந்தவள்..

“இப்போ எதுக்கு இவள் வர மாட்டாலாம். இவள் இங்கு இருந்த போதுமே என்னை புலம்பலில் தான் விடுவா.. இப்போ போயிமே புலம்ப வெச்சிட்டா.” என்று உண்மையில் செண்பகாவின் பேச்சு புலம்பலாக தான் இருந்தது..

செளமியா தான். “ விடுக்கா. வரலேன்னா நமக்கு வேலை மிச்சம் என்று விடுறதை விட்டுட்டு… எதுக்கு இப்போ திடிர் என்று நாத்தனார் மீது பாசம் உனக்கு பொங்கிட்டு வருது.” என்று செளமியா கேட்டது தான்.

செளமியா தலை மீதே ஒரு குட்டு வைத்து விட்டு. “என் வயித்து எரிச்சலை கிளப்பாதே சொல்லிப்புட்டேன்… நானே பயந்து போய் இருக்கேன்.. இந்த வீட்டு பெண்கள் என்னை நிம்மதியாவே இருக்க விட மாட்டாங்க போல. அது போன தலை முறை என்றாலும் சரி.. இன்றைய தலை முறை என்றாலும்., ஏன் நாளைய தலை முறை கூட என்னை விட்டு வைக்காது போல.”

“சென்னைக்கு போய் இவங்களை எல்லாம் ஒரு காட்டு காட்டட்டும் என்று வேலை மெனக்கெட்டு சொல்லிட்டு வந்தா.. குடும்பமே எனக்கு ஒரு கட்டம் கட்ட என்னை போட்டு கொடுத்துட்டு போயிடுச்சிங்க.” என்று செண்பகம் பாதி ஆதங்கத்திலும் பதி பயத்திலும் புலம்பிக் கொண்டு இருந்தாள்..

செளமியா தான்.. “ அது தான் பெரிய மாமா. கல்யாணம் முடிந்து பார்த்துக்கலாம் என்று சொல்லிட்டாருலே க்கா.” என்று சொன்னதற்க்கு தான் செண்பகம்.

“அது தான் கல்யாணம் முடிஞ்சிடுச்சே டி… இந்த பொண்ணு மூன்று நாளோ ஐந்து நாளோ.. இங்கு இருக்கும்.. அதுக்குள்ள என் புருஷனை கொஞ்சம் தாஜா செய்து வைக்கலாம் என்று நான் நினச்சிட்டு இருந்தா நீங்க போடும் வட்டத்திற்க்கு நான் நிக்க மாட்டேன் என்பது போல தானே அந்த அழகு சுந்தரி நடந்துப்பா..” என்று செண்பகத்தின் புலம்பல் நிற்காது போக..

செளமியா தான். “ வித்யா சித்தியும், சங்கரி சித்தியும் வந்து போய் ஒரு வாரம் ஆக போகுது இத்தனை நாளுக்குள்ள மாமாவை தாஜா செய்து இருந்து இருக்கலாமே…” என்று எடுத்து கொடுத்த ஒரபத்தியிடம் செண்பகா..

“எங்கேடி… அந்த மனுஷன் தான் கூடத்திலேயே தன் படுக்கையை போட்டுட்டாரே…” என்று ஒரு விதமாக சொன்னவளின் பேச்சில்..

“யக்காவ்.. அப்போ தாஜான்னா இது தானா.” என்று வாய் மீது கை வைத்து கேட்டவளுக்கு பதில் சொல்லும் முன்.. இருவரின் மாமியாரும் சமையல் அறைக்குள் வந்து விட. பின் எங்கு இருந்து இவர்கள் பேசுவது..

இவர்கள் தலையை பார்த்ததுமே இருவருக்குமே அப்போது தான் அவர்கள் அறையில் தாங்கள் செய்ய வேண்டிய வேலை நியாபகத்தில் வந்து விட சென்று விட்டனர்..

பின் அந்த சமையல் அறையானது.. முன் சந்தியரான வளர்மதி மரகதமும் தங்களின் மனக்குறையை கொட்டும் இடமாகி போய் விட்டது.

செண்பகா பயந்தது போல் தான் வேலவ பாண்டியன் வீடு வந்ததுமே தன் மனைவியை பிடித்து கொண்டு விட்டான்..

“அத்தனை சொல்லி கூட என் அத்தைங்க கிட்ட நீ கலகம் செய்து வந்து இருக்கேன் என்றால். உனக்கு எத்தை ஏத்தம் இருக்கனும்.. ஏன் நான் சொன்னதை செய்ய மாட்டேன்னு நினச்சிட்டியா.?” என்று கத்தியன் கூடத்தில் அமர்ந்திருந்த தன் தந்தையிடம்..

“ப்பா இவளை இவள் அப்பன் வீட்டுக்கு அனுப்பி விட்டுட்டு எனக்கு ஒரு பொண்ணை பாருங்க …” என்று தன் பின் ஒடி வந்த செண்பகாவை காட்டி சொல்ல..

செண்பகமோ.. “ இல்லேங்க எனக்கு உங்க அத்தைங்களுக்கு தெரியும் என்று தான் சொன்னேன்..” என்று அடித்து சாதிக்க.

ஆனால் வளர்மதியோ… “நீ கும்மாலம் போட்டுட்டு பட்டணத்துக்கு போகும் போதே எனக்கு தெரியும்” என்று சாட…

வேலவ பாண்டியன்.. ஒரே பிடியாக செண்பகாவை அம்மா வீட்டிற்க்கு அனுப்பியே தீருவேன் என்று கங்கனம் கட்டி கொண்டி பேசினான்..

மருது பாண்டி தான்… “அம்மா வீட்டிற்க்கு எல்லாம் வேண்டாம்…” என்று மகனிடம் சொன்னவர்..

மருமகளிடம்.. “ இனி என் பெண் விசயத்தில் நீ ஏதாவது செய்யனும் என்று பார்த்தா நான் சும்மா இருக்க மாட்டேன்..” என்று சொல்லி விட்டார்..

அவர் மனது முழுவதுமே வேதாந்த் பற்றிய சிந்தனை தான்.. அன்று என்ன நடந்தது என்று இன்னுமே தீரா விசாரித்து இருக்க வேண்டுமோ.. வேதாந்தை பார்த்ததில் இருந்து மருது பாண்டியனின் இந்த எண்ணம் இன்னுமே தீவிரம் அடைந்தது…

அவருக்கு எப்படியாவது தன் மகள் வாழ்க்கை நன்றாக மாறி விட வேண்டும்.. அதற்க்கு அந்த கலங்கம் அகற்றினால் மட்டுமே தான் சாத்தியம். அன்று தான் அவசரப்பட்டு விட்டோமோ.. அனைத்தையுமே வீட்டில் சொல்பவள்.. இதை பற்றி சொல்லி இருந்து இருக்கலாமோ.. நாம் தனிமையில் கேட்டு இருந்து இருந்தால் சொல்லி இருந்து இருப்பாளோ.. என்று அவர் சிந்தனை முழுவதுமே தன் மகளா இருக்க.. இந்த செண்பகா எல்லாம் அவருக்கு பெரிய விசயமாக அவருக்கு தெரியவில்லை..

செண்பகா எல்லாம் அவரை பொறுத்த வரை ஒரு விசயமே இல்லை.. புல் போல.. தான் அவருக்கு மலையாக நிற்கும் விசயம் அவர் மகள்.. மகள் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும்.. அதற்க்கு என்ன செய்ய வேண்டும்..

இவர் என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கும் வேளயில் அங்கு இவரின் மாப்பிள்ளை மகிபாலன் தன் மனைவியிடம் அதை பற்றி தான் பேசிக் கொண்டு இருந்தான்..

திருமணம் முடிந்து முதல் இரவு அன்று அனைவரோடு கூடத்தில் உறங்கிய ஜோடி இவர்களாக தான் இருந்து இருப்பார்கள்..

சுதா தன் கணவனோடு அந்த வீட்டின் இன்னொரு அறையில் இருந்து வந்தார்கள் என்றால், அந்த வீட்டின் இன்னொரு அறையில் இருந்து மகிளா வந்தாள்..

இங்கு கூடத்தில் எப்போதும் போல விடிந்ததும் தன் மொட்டை மாடிக்கு சென்று விட.. இதோ கையில் காபி கப்பை கையில் எடுத்து கொண்டு தனித்து முதல் முறையாக தன் கணவனை நேர்க் கொண்டு பார்த்து.. எப்போதும் போல அந்த தென்னை ஒலை நிழலில் அமர்ந்து இருந்தவன் அருகில் கொஞ்சம் தள்ளி அமர்ந்து கொண்டவள்..

அவன் கையில் காபி கப்பை கொடுத்தாள்.. சொந்தத்துடன் அவன் கை தொட்டு.. அவனின் முகத்தை அதை விட சொந்தமாக பார்வை பார்த்து கொண்டே தான் காபியை செந்தாழினி கொடுத்தது…

மகிபாலனுக்கு அந்த தென்னை ஓலை நிழலையும் மீறி சூரிய வெளிச்சம் அந்த தென்னை ஒலையின் இடையில் வரும் வெளிச்சம் தன் மனைவியின் முகத்தில் படிந்ததை பார்த்து கொண்டே தான் மனைவி கொடுத்த காபியை வாங்கியது.

வாங்கியவன் குடிக்காது.. “ உனக்கு..” என்று கேட்ட போது.

அவன் கையில் இருந்த காபி கப்பை காட்டி.. “ நீங்க எப்போதும் இது போல பெரிய காபி கோப்பையில் தான் குடிப்பிங்கலா..?” என்று கணவன் கேள்விக்கு பதில் சொல்லாது இவள் ஒரு கேள்வியை கேட்டாள்..

தன் கையில் இருந்த அந்த காபி கப்பை அப்போது தான் கவனித்தான் .. அந்த கஒ என்று சொல்வதை விட கூஜா என்று சொன்னால் சரியாக இருக்கும்.. அந்த அளவுக்கு பெரியதாக இருந்தது அது..

“என்ன இது எனக்கு மட்டும் எடுத்துட்டு வந்தியா இல்லை.. ஊருக்கே எடுத்துட்டு வந்தியா..?” என்று மகிபாலன் சிரித்து கொண்டே கேட்டான்..

கணவனை முறைத்து பார்த்த செந்தாழினி.. “ நான் ஏன் ஊருக்கே எடுத்துட்டு வர போறேன்.. உங்களுக்கும் எனக்கும் மட்டும் தான்..” என்று மட்டும் என்று சொன்னதே மகிபாலனுக்கு அவ்வளவு நெருக்கத்தை கொடுத்தது எனலாம்..

அவன் எதிர் பார்க்கவில்லை.. திருமணம் முடிந்தே மறுநாளே இப்படி செந்தாழினியிடம் தான் பேச கூடும் என்று..

அதுவும் சென்ற வாரம் கூட இதே இடத்தில் இருந்து தான்.. நகைக்கு என்று திருமணம் செய்து கொண்டே பெண்ணிடம் எப்படி நிமிர்ந்து பார்த்து அவளிடம் பேச முடியும்.. அந்த பெண் என்னை பற்றி என்ன என்று நினைத்து கொண்டு இருந்து இருப்பாள்… அதை நினைக்கும் போதே அவனுக்கு ஒரு வித அவமான உணர்வு தான்..

ஆனால் செந்தாழினி தன் பார்வையினாலும், பேச்சினாலும்.. அந்த உணர்வை கணவனிடம் இருந்து தகர்த்து விட்டால் என்று தான் சொல்ல வேண்டும்..

இதோ காபி கோப்பையை கொடுத்து உனக்கும் எனக்குமே என்ற போது.. மகிபாலன்.. “ இன்னொரு கப் எங்கே.” என்று கேட்டு தான் மனைவியின் கையை பார்த்தது.

“புத்து புத்து…” என்று மகிபாலன் நெற்றியில் தட்டியவள்..

“நேத்து நையிட் தான் பால நீங்க குடிச்சிட்டு நான் குடிக்கல. சரி பக்கல்ல அந்த பாலுக்கு பதில் இந்த காபியாவது நீங்க குடிச்சிட்டு நான் குடிக்கலாம் என்று நினச்ச. நீங்க வேலைக்கு ஆக மாட்டிங்க.” என்று சொன்னவள் கணவன் கையில் இருந்த அந்த காபி கப்பை வாங்கியவள்.. தான் குடித்து விட்டு..

“ம் இப்போ குடிங்க…” என்ற மனைவியின் இந்த பேச்சு கணவனுக்கு வெட்கத்தை கொடுத்தது.. அதில் அவனின் மாநிறம் மேனி சிகப்பாக மாறி விட..

அவன் நெற்றியில் விழுந்த முடியை கோதி விட்ட செந்தாழினியின் இந்த செயல் மகிபாலனுக்கு ஒரு நெகிழ்வை கொடுத்தது..

நெகிழ்வு என்றால், உடல் ரீதியான நெகிழ்வு கிடையாது. இது உள்ளம் ரீதியான நெகிழ்வு… அதில் தன்னை மறந்த தன் மனைவியின் பார்த்த பார்வையில் மகிபாலன் கண்ணில் அத்தனை ஒரு உரிமை உணர்வு..

செந்தாழினியுமே.. அந்த பார்வையில் கட்டுண்டவள்..

“என்னம்மா…?” என்று கேட்டவள் கணவனின் தாடையை பற்றிக் கொள்ள… மனைவியின் உள்ளங்கையில் தன் முகத்தை புதைத்து கொண்டவனின் மனம் முழுவதும் ஒரு நிம்மதி பரவியது…


 
Active member
Joined
Jun 23, 2024
Messages
71
வேலவா முதல்ல உன் பொண்டாட்டிய அடிச்சு வெளியே துரத்து 🥶🥶🥶 உனக்கு நாங்கள் நல்ல பொண்ணா பார்க்கிறோம் 🤗 🤗 🤗 🤗

மருது காலம் கடந்து உங்களுக்கு ஞானம் வந்து ஒரு பிரயோஜனம் இல்லை 😡 😡 😡 😡 இனி நீங்கள் கேட்டாலும் அவ பதில் சொல்ல மாட்டா 😣 😣 😣 😣 😣

செந்தாழினி மகிபாலன் காஃபி வித் ரொமான்ஸ் 😍😍😍😍😍😍😍
 
Last edited:
Active member
Joined
Jun 1, 2024
Messages
105
இந்த செண்பகா எஸ்கேப் ஆகிட்டே இருக்கா 😆

மருது இப்போ தான் பொண்ணு தப்பு பண்ணிருக்க மாட்டாளோன்னு நினைப்பே வருது அதுவும் வேதாந்த்தை பார்த்ததால 🥶🥶🥶

செந்தா உரிமையா பழகி மகிக்கு இருந்த தயக்கத்தையும் போக்கிட்டா....😍😍😍
 
Active member
Joined
May 12, 2024
Messages
199
Pawam sentha… Pirantha veettu anniyum sariyilla puguntha veettu anniyum sariyilla
 
Top