Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Eengum Geetham...15

  • Thread Author
அத்தியாயம்…15

“செந்தாழினி செந்தாழினி..” என்று மூன்று முறை அவளின் பெயர் காதில் விழுந்துமே, அதை அவள் உணர்ந்தாள் இல்லை…மகிபாலன் தான் சட்டென்று அந்த மோன நிலையில் இருந்து தன்னை விடுவித்து கொண்டவனாக .. மனைவியின் உள்ளங்கையில் பதித்திருந்த தன் முகத்தை எடுத்து கொண்டவனாக..தன் மனைவியாளின் அந்த முகப்பாவனையை கலைக்க பிடிக்கவில்லை என்றாலுமே..

கீழே இருந்து தன் அன்னை இன்னுமே தன் மனைவியை அழைத்து கொண்டு இருந்ததில், அதுவும் இங்கு வந்து இத்தனை நேரம் ஆனதிலும்.. இன்னுமே சுதாவின் மாமியார் வீட்டவர்களான அந்த சம்மதியரும், ஏன் இன்னுமே திருமணம் முடியாத மகிளாவின் வருங்கால மாமியாருமே வீட்டில் இருக்கும் போது இவள் இத்தனை நேரம் இங்கு இருந்தால் என்ன என்று நினைத்து கொள்வார்கள் என்றதில், மனைவியின் அந்த மோன நிலையை கலைத்தான்..

“ஆழி.. ஆழி…” என்று கணவனின் அந்த அழைப்பில் அவள் கனவு உலகத்தில் இருந்து வெளி வந்தாளா..? இல்லை தன் கணவனின் முகத்தின் சூடு தன் உள்ளங்கை உணராது போனதில் வெளி வந்தாளா தெரியவில்லை..

கணவன் இரண்டு முறை அழைப்பில்… “ ம் ..” என்று மட்டும் சொல்லி கொண்டு இருந்த போது தான் மீண்டும் கெளசல்யா.

“செந்தாழினி…” என்று தன்னை அழைத்தது அவள் காதில் விழுந்தது.

அதில்.. “ அத்தை கூப்பிடுறாங்க.. சீக்கிரம் அந்த காஃபியை வாயில் ஊத்திட்டு கொடுங்க…” என்று கணவனிடம் சொன்னவள்..

அத்தை கத்தி அழைத்தது போலவே.. “ தோ வரேன் அத்தை..” என்று கெளசல்யாவுக்கும் பதில் அளித்தவள் மீண்டும் கணவனை பார்த்து “ம் சீக்கிரம்..” என்று சொன்னதில் கொஞ்சம் ஆறி போன காஃபியை குடித்து விட்டு மனைவியின் கையில் அந்த காஃபி கப்பை திணித்தவன்..

“ம் சீக்கிர கீழே போ ஆழி…” என்ற கணவனின் அந்த அழைப்பை அவள் அப்போது தான் உணர்ந்தாள்..

உணர்ந்தவளின் முகத்தில் சட்டென்று ஒரு பரவசம். “ என்ன என்ன என்று கூப்பிட்டிங்க.. ஆழியா.?” கணவனின் அந்த சின்ன அழைப்பு செந்தாழினிக்கு அவ்வளவு சந்தோஷத்தை கொடுத்தது..

ஆனால் மகிபாலனுக்கு ஒரு வித சங்கடத்தை தான் கொடுத்தது.. அம்மா அழைச்சும் போகாது வரேன் என்று சொல்லிட்டு இது என்ன என் கிட்ட கதை அளந்துட்டு இருக்கா…? என்று தான் நினைத்தான்..

முன் இருந்த அந்த மோகம் மன நிலை அவனுக்குள் இல்லை.. வீட்டின் ஒரே ஆண் மகனாக.. அன்னைக்கு மகனாக அம்மா என்ன நினச்சிட்டு இருப்பாங்க என்ற சங்கடத்திலுமே.

“ஆழி கூட உன் பெயரில் தானே இருக்கு.. இதை ஏன் அகழ் ஆராய்ச்சி போல ஆராஞ்சிட்டு இருக்க..” என்று கேட்டவன்..

கூடவே. “ அம்மா கூப்பிடுறாங்க ஆழி.. அவங்க என்ன என்று நினைச்சிப்பாங்க..?” என்று கணவன் அவசரப்படுத்திய பின்னும்.. கேட்ட பின்னும் கூட.

போகாது இன்னுமே சட்டமாக அமர்ந்து கொண்ட செந்தாழினி… “என்ன நினச்சிப்பாங்க.. கல்யாணம் ஆன புதுசு.. அதனால அதனால.” என்று மீதி வார்த்தையை சொல்லாது விட.

இதே வேறு மாதிரியான நிலையில் மகிபாலன் இருந்து இருந்தால், புதிய மனைவியின் இப்படியான பேச்சுக்கள். அவனுக்கு கிளர்ச்சியை ஏற்படுத்தி இருக்க கூடுமோ என்னவோ.. ஆனால் மகிபாலனுக்கு அப்படி எதுவும் ஏற்படவில்லை..

என்ன இவள் இருக்கும் சூழ்நிலையை பத்தி யோசிக்க மாட்டாளா என்று தான் மகிபாலன் செந்தாழினியை பற்றி நினைத்தான்.. அம்மா என்ன நினைச்சிப்பாங்க என்று அவன் நினைத்தது போல தான்..

கீழே நின்று மருமகளை அழைத்துக் கொண்டு இருந்த அம்மாவின் பக்கம் வந்த சுதா..

“என்னம்மா உன் குரலுக்கு ரொம்ப மதிப்பு போல…?” என்று ஒரு மாதிரி கிண்டலாக கேட்டாள்..

ஏற்கனவே கெளசல்யாவுக்கு தான் குரல் கொடுத்தும் கீழே வராதவள்.. இதோ வருகிறேன் என்றும் வரக்காணுமே.. நேத்து தான் கெளசல்யா மருமகளை பற்றி நல்ல மாதிரியாகவே நினைத்தாள்..

வசதியான பெண்.. கீழே அனைவரோடும் படுத்து எழுந்தது.. அதுவும் நேத்து என்ன நாள் அவங்களுக்கு.. பரவாயில்லை சூழ்நிலை தெரிந்து நடந்து கொள்கிறாள் என்று நினைத்த கெளசல்யா..

இன்றும் நல்ல நாளாக இருப்பதால், இன்றே சாந்தி முகூர்த்ததை வைத்து விடலாம்..

அதன் தொட்டு மகிபாலன் அறை அவனுக்கு வேண்டுமே. அதனால் சுதாவிடம்.. “ உன் மாமியார் உன் கணவனை அழைத்து கொண்டு இன்று போ சுதா. அடுத்த வாரம் கடா விருந்து நாம வைக்கும் போது வா.” என்று மகளிடம் காஃபியை கொடுக்கும் போது சொன்னவர்..

செந்தாழினி குளித்து விட்டு தான் மாடிக்கு சென்றாள்.. மகிபாலன் குளித்து விட்டானா என்று தெரியவில்லை.. இல்லை என்றால் குளித்து கோயிலுக்கு போயிட்டு வாங்க. அப்படியே வேறு எங்காவது சினிமா.. அது போல போவது என்றாலும் போயிட்டு வாங்க என்று மகனையும் மருமகளையும் வெளியில் அனுப்ப தான் செந்தாழினியை கெளசல்யா அழைத்தது..

என்ன இது இப்படி கூப்பிட்டும் வராது.. நான் கூப்புட்டது மகனுக்கும் கேட்டு இருக்கும் தானே… அவனுமா..? பெரும் பாலோர் மாமியார் நினைப்பது போல தான் கெளசல்யாவும் நினைத்தது..

அதற்க்கு தூபம் போடுவது போல சுதாவின் பேச்சு அவருக்கு கோபத்தை தான் கூட்டியது..

“நீ வேற டி.. சும்மா நொய் நொய்..” என்று மகன் தான் அழைத்தும் வரவில்லையே… இப்போது கெளசல்யாவுக்கு செந்தாழினியோடு மகனும் தானே இருக்கிறான்.. அவனாவது எட்டி பார்த்தானா.? என்று மாடியை நோக்கி பார்த்த தன் அம்மாவை பார்த்த சுதா.

“ஆமாம்மா ஆமா. நான் நொய் நொய் என்று தான் பேசிட்டு இருக்கேன்.. ஆனா பாருங்க உங்க மகன் ஒன்னுமே பேசல.. அது இப்போ மட்டும் இல்ல. இனி எப்போவுமே இது தான்.” என்று இன்னுமே எரியும் தீயி நெய் ஊத்தி விட்டு தான் அவளின் மாமியார்.

“சுதா.” என்ற ஒத்த அழைப்புக்கு ஒடி போகும் மகளை பார்த்த கெளசல்யாவுக்கு இன்னுமே தான் கோபம் கூடியது.

அதில் வெளியில் செல்ல சொல்லலாம் என்று நினைத்ததை மறந்து மீண்டுமே சமையல் கட்டுக்கு புகுந்து கொண்டார் கெளசல்யா.

இங்கு சுதாவுக்கு என்ன கோபம் என்றால், நேத்து வந்தவளுக்காக என்னை மாமியார் வீட்டிற்க்கு துரத்துவாங்கலா… அதோடு விடிந்ததுமே தன் மாமியார் மட்டும் இல்லான மகிளாவின் வருங்கால மாகியாருமே..

“பெரிய இடத்து திமிரு இல்லாம இருக்கா…” என்று செந்தாழினியை பற்றி சொன்ன அந்த புகழ்ச்சியும் பிடிக்காது அன்னையை ஏத்தி விட்டு தான் சுதா தன் மாமியார் வீட்டிற்க்கு சென்றது.

மகிளாவின் அன்றைய நாள் மற்றவர்களின் குறையையோ நிறையையோ கவனிக்கும் நிலையில் அவள் இல்லை… அடுத்த வாரத்தில் தன் திருமணம்.. தன் கல்யாண கனவில் அவள் மிதந்து கொண்டு இருந்தாள்..

செந்தாழினியை ஒரு வழியாக கீழே அனுப்பி வைத்த மகிபாலன் உடன் செல்லவில்லை.. என்னவோ அம்மாவின் முகத்தை பார்க்க அவனுக்கு ஒரு வித கூச்சமாக இருந்தது.. இன்னும் கேட்டால் கூச்சப்படுவது போல இங்கு ஒன்றுமே நடக்கவில்லை.. நடந்தாலுமே தவறும் கிடையாது.. இருவரும் கணவன் மனைவி தான்.. இருந்தும் ஒரு தயக்கம் மகிபாலனுக்கு.

அதனால் உடனே செல்லாது கொஞ்ச நேரம் கழித்து தான் கீழே சென்றது.. இவன் சென்ற போது பார்த்தது.. மனைவி சின்ன வெங்காயத்தின் தோளை உரித்து கொண்டு இருந்தவளின் அருகில் பூண்டை வைத்த கெளசல்யா..

“இதையுமே உரிச்சி வெச்சிடு.” என்று சொன்னவர் பின் மீண்டுமே சமையல் அறையில் இருந்து கத்திரிக்காய் எடுத்து வந்து வைத்தவர்..

“இது பொரியலுக்கு அரிஞ்சி வெச்சிடு..” என்று வேலைகள் கொடுத்து கொண்டு இருக்க மகிபாலனின் கண்கள் தன்னால் தன் அக்கா தங்கையை தான் தழுவியது.. மகிளா பேசியில் பேசிக் கொண்டு இருக்க.. சுதாவோ கணவனிடம் பேசிக் கொண்டு இருந்தாள்.. மிக அருகில் நின்று கொண்டு நெருக்கமாக தான் கூடம் என்று கூட பாராது பேசியது.

என்ன இது என்பது போல அவர்கள் பக்கம் இருந்து மீண்டும் தலையை திருப்பிய மகிபாலனின் கண்கள் மீண்டுமே மனைவியின் பக்கம் தான் சென்றது..

இவளுக்கு சமைக்க தெரியுமா. இது எல்லாம் அறிய தெரியுமா..? என்பது போல.

கெளசல்யா அப்போது தான் நிமிர்ந்து மகனை பார்த்தார்.. மகனின் பார்வை மனைவியிடம் இருந்ததையும்.. அவன் இன்னுமே குளிக்காது இருப்பதையுமே பார்த்தவர்.

“என்ன மகி இந்த நேரத்திக்கு நீ குளிச்சிட்டு விளக்கு ஏத்திட்டு சாப்பிடவும் வந்து உட்கார்ந்து விடுவே என்ன இது..?” என்று என்றும் இல்லாது மகனை கடிவது போல தான் பேசியது..

இது வரை கெளசல்யா இது போலான த்வானியில் தன் மகனிடம் அவர் பேசியது கிடையாது.. காரணம் கணவன் இறந்து அதுவும் அவர் இறந்த விதத்தில் எங்கு தன் மகன் தன்னை தவறாக நினைத்து விடுவானோ என்ற கவனத்தோடு தான் கெளசல்யா மகனிடம் பேசுவது இன்று என்னவோ தன்னால் இது போல பேச்சு வந்து விட்டது..

அம்மாவின் பேச்சில் மகிபாலனும் ஒரு யோசனையுடன் தான்.. “ ம் குளிக்க போறேன் ம்மா..” என்று விட்டு அந்த வீட்டின் பின் கட்டிலும் ஒரு குளியல் அறை உள்ளது.. அங்கு குளிக்க சென்று விட்டான்..

இந்த இடைப்பட்ட நேரத்தில் செந்தாழினி… கெளசல்யா பொரியலுக்கு அறிந்து வை என்று சொன்ன கத்திரிக்காயை கத்திரிக்கா சாப்ஸ் செய்வது போல அந்த கத்திரிக்காயை நாங்கு பக்கமும் கீரி விட்டு உரித்து வைத்த சின்ன வெங்காயம் பூண்டு.. அதோடு நேற்று திருமணத்திற்க்கு கொடுத்த தேங்காய் எடுத்து பத்தையாக்கி அதில் கொஞ்சம் சோம்பு இஞ்சியையும் சேர்த்து கொண்டு அதை அனைத்துமே மிக்ஸியில் போட்டு அரைக்கவும் ஆரம்பித்து விட்டாள்..

செந்தாழினி மிக்ஸியில் என்ன போட்டு அரைக்கிறாள் என்பது கெளசல்யாவுக்கு தெரியவில்லை.. ஆனால் அவக் அரிந்து வைத்து இருத கத்திரிக்காயை பார்த்தவர்.

“என்ன செந்தாழினி நான் பொரியலுக்கு அரி சொன்னா நீ என்ன மாதிரி அரிந்து வைத்து இருக்க.. பொரியலுக்கு எப்படி என்று தெரியலேன்னா என் கிட்ட கேட்டு இருக்கலாம் லே.” என்று சொன்னவர்.. அறுவா மனையை எடுத்து வந்தவர் அந்த கத்திரிக்காயை பொரியல் பதத்துக்கு அறிய ஒரு கத்திரிக்காயை எடுக்கும் முன் செந்தாழினி அதை தன் பக்கம் நகர்த்தி கொண்டு விட்டாள்..

பின்.. “ எனக்குமே சமையல் தெரியும் அத்த. நான் இது சாப்ஸ் செய்ய தான் அறிந்து வைத்தேன்..” என்று சொன்னவள் கூடுதல் தகவலாக அதுக்கு உண்டான மசாலாவை தான் அரைத்து கொண்டு இருந்தேன் அத்தை என்று சொன்னவள்.. பாதி அரைப்பட்டு இருந்த மசாலாவை மீதம் அரைக்கு செந்தாழினி சென்று விட்டாள்..

சுதாவுக்கு பேச்சு கணவனோடு இருந்தாலுமே, ஒரு கண் இங்கும் வைத்து இருந்ததால், நடந்த விசயங்களை கண்டு கொண்டவள்..

சமையல் அறையில் ஒரு பார்வை பார்த்து விட்டு.. அதிர்ச்சியோடு மிக்ஸியை அரைத்து கொண்டு இருந்த தன் மருமகளை பார்த்து கொண்டு இருந்த கெளசல்யாவின் தோள் மீது கை வைத்தவள்..

“என்னம்மா முதல் நாளே உன்னை சமையல் அறையில் இருந்து வெளியே துரத்தி விட்டா போல…” என்று ஒரு மாதிரியாக கேட்ட மகளையே இப்போது அதே பார்வை பார்த்த கெளசல்யா.

“ஏன்டி கொஞ்ச நேரம் முன் தான்.. உன் மருமகளுக்கு சமைக்க தெரியாது போல.. காலம் முழுவதும் இந்த சமையல் கட்டை பிடிச்சிட்டு அழுகனுமா என்று கேட்டா.. இப்போ என்ன டி இப்படி பேசுற..?” என்று கெளசல்யா மகளை பார்த்து கேட்டார்..

ஆன் உண்மையில் கெளசல்யாவுக்கு குழப்பமாக தான் இருந்தது.. இத்தனை விரைந்து செந்தாழினி மசாலாவை ரெடி செய்ததோடு இதோ அரைத்த அந்த மசாலா விழுதை ஒரு வித லாவகத்தோடு அதில் அடக்கி வைத்து கொண்டு இருப்பவளையே பார்த்த கெளசல்யாவுக்கு புரிந்து விட்டது சமையல் இவளுக்கு புதியது கிடையாது என்று ..

ஆனால் இந்த வீட்டிற்க்கு இவள் புதியவள் தானே… அதுவும் மகனுக்கு பிடித்த உணவை சமைப்பது.. ஏதோ யோசனை அவருக்கு.

“என்னம்மா திகைத்து போய் நின்னுட்ட… என் புருஷனுக்கு கத்திரிக்காய் முறுங்கக்காய் பொரியல் தான் பிடிக்கும்.. வீட்டு மாப்பிள்ளைக்கு தேவையானதை நீ சமைக்க சொன்னா.. அவள் மாப்பிள்ளை தோதா சமைக்கிறா பார்த்தியா..” என்ற மகளின் பேச்சு கெளசல்யா காதில் விழுந்ததா என்று தெரியவில்லை.

ஆனால் மகனுக்கு இந்த சமையல் பிடிக்கும் என்று எப்படி இவளுக்கு தெரியும்.. கல்யாணத்துக்கு முன் தனியா பேசிக்கிட்டது கூட இல்லையே. தான் நினைத்ததை மகளிடம் கேட்க.

“ம் காலையிலேயே மேல போனவ சாமம் முடிஞ்சு தானே கீழே இறங்கி வந்தது… உன் பிள்ளை சொல்லி இருப்பாளா இருக்கும்.. இல்லை கைக்காரி புருஷன் மனசுல இறங்க வயிற்றை நிறைத்தால் போதும் என்று தெரிஞ்சி கேட்டு இருந்து இருப்பா. இது ஒரு விசயமா என்று கேட்டவள் கடைசியாக..

“பார்த்தும்மா.. உன் கை தாழ்ந்தா மொத்தத்துக்கும் நீ மூலையில் உட்கார்ந்துக்க வேண்டியது தான்.. அதுவுமே நீ செய்ததை உன் மருமகள் உன் மவன் கிட்ட அப்போ அப்போ சொன்னா போதும்.. “ என்ற மகளின் பேச்சு கெளசல்யாவுக்கு பயத்தை தான் கொடுத்தது..

சென்னை..

“அண்ணா மகி அண்ணா கிட்ட எல்லாம் சொல்லிட்டியாண்ணா…?” என்று ஒரு வித ஆவலோடு கேட்ட தன் தம்பியை முறைத்து கொண்டே தான் தன் சூட்கேசில் மதுரைக்கு கிளம்ப அனைத்துமே எடுத்து வைத்து கொண்டு இருந்தான் வேதாந்த …




 
Active member
Joined
Jun 23, 2024
Messages
71
அடேய் மகி அவளுக்கு உன் கிட்ட பேச இப்போ தான் டைம் கிடைச்சுது😨😨😨அது உன் வீட்டு பிசாசுங்களுக்கு பொறுக்கல 🥶🥶🥶🥶 நீயும் அவளை தப்பா நினைக்காதே 🤧🤧🤧🤧

சுதா 🥶 🥶 🥶 அவ போட்ட பிச்சையில் தான் உனக்கு வாழ்க்கையே 😣😣😣😣😣

கௌசல்யா வந்த முதல் நாளே சமையல் வேலை சொல்லி உன் கெத்தை காட்டுற 👿👿👿 அந்த சாத்தான் ஓதுறதை கேட்டு செந்தாவ ஒதுக்கினால் நீதான் வருத்தப் படுவ 🤭🤭🤭🤭🤭🤭🤭

அன்னைக்கு அந்த பிரச்சினையில் செந்தா தான் உதவி இருப்பா என்று நினைக்கிறேன் 🧐 🤔 🧐

வேதாந்த்க்கு தான் இவ காதல் விஷயம் எல்லாம் தெரியும் போல 😉 😝 😝 😆


அடேய் மகி அவளை தப்பா நினைச்சதுக்காக சொந்த குடும்பத்தையே ஒதுக்கி வச்சவ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ நீ ஏதாவது சொதப்பி வச்சிடாத 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️
 
Last edited:
New member
Joined
May 11, 2024
Messages
2
விஜி ம்மா நீங்க மகி ஆழிக்கு ரொமான்ஸ் வைக்கலனாலும் பரவாயில்ல கௌசல்யா வுக்கும் மகி சுதா க்கும் பாடம் நடத்தியே ஆகனும் செமத்தியா வலிக்க வலிக்க...
 
Active member
Joined
May 24, 2024
Messages
194
Ada loosu pannada sutha neum un purusan koodav ithathana senjirupa
Atha karri ah nalla kuzhapi vidra intha Amma athuku mela
Orunaal kandipa un magan ketpan sppo thooku potuko

Sutha mahi sentha va lesa nenachiteenha hoom

Mahi nee valaranum
Aazhi ethanai varusam kathal ma
Mahi pathi a-z trium polaye
 
Active member
Joined
Jun 1, 2024
Messages
105
சுதா 😈 அம்மாவை ஏத்தி விடுறதை மட்டும் வேலையா பார்த்துட்டு இருக்கா....😤

கௌசல்யா நல்லா குடுக்குறீங்க பனிஷ்மென்ட்டு 🥶🥶🥶🥶🥶🥶 செந்தா பத்தி தெரியல உங்களுக்கு... 🤫🤫🤫


மகி அவ உன்னை லவ் பண்றதால உரிமை எடுத்துக்குறா அது புரியாம எதையாவது பேசி உனக்கு நீயே ஆப்பு வச்சுக்காத... 🤷‍♀️🤷‍♀️
 
Active member
Joined
May 11, 2024
Messages
123
குத்தம் கண்டுபிடிக்கணும் இருக்குரவங்க எப்படி நடந்துக்கிட்டாலும் அவங்ககிட்ட நல்லபேறு எடுக்க முடியாது சுதா போலஉள்ளவங்க கிட்ட செந்தா என்ன செய்ய போறாளோ 🤔🤔🤔🤔🌺🌺🌺
 
Active member
Joined
Aug 16, 2024
Messages
235
சுதா மாமியார் வீட்டுக்கு போனால் தான் செந்தாழினிக்கு நிம்மதி போல.
 
Active member
Joined
May 12, 2024
Messages
198
Mahi… nee pannurathum sariyilla… konjam suthi muthi paru…
Sudha voda nathanarum ithe pola avanga amma kitta sollanum… pirantha veetukku thurathi vittathu marandhuttu pola ammani ku
 
Top