Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Eengum Geetham...16

  • Thread Author
அத்தியாயம்..16

தன் அண்ணன் தன் கேள்விக்கு பதில் சொல்லாததோடு கோப்பத்துடன் தன் உடையை அடக்கி வைத்து கொண்டு இருப்பவனையே சிறிது நேரம் பார்த்து கொண்டு இருந்த ராகவன்..

என்ன நினைத்தானோ.. தன் கையை பேசியை எடுத்து யாருக்கோ அழைக்க முயற்சி செய்து கொண்டு இருந்தவனின் கையில் இருந்த அந்த பேசியை பரித்து கொண்டவன் வேகமாகவும் அதே சமயம் பேசி உடைய கூடாத வகையில் அங்கு இருந்த ஷோபாவின் மீது தூக்கி வீசி எரிந்தவன்..

“அவளுக்கு உங்களால் வந்த பெயர் போதாதா.. இன்னுமே கல்யாணம் செஞ்சி போன இடத்திலுமே பெயர் வாங்கனுமா…?” என்று கோபமாக கடிந்து கொண்ட தன் அண்ணன் வேதாந்தை வேதனையுடன் பார்த்த ராகவ்…

“ண்ணா என்ன ண்ணா. நம்ம மகி அண்ணா தானேண்ணா.. அவர் தப்பா எல்லாம்..” என்று சொல்லும் போதே இன்னும் தான் கோபம் ஏறியது வேதாந்ததுக்கு…

“ஆமா அப்போ இருந்தே இதே தானே.. மத்தவங்க பக்கம் யோசிக்காது நீயே யோசிச்சி செய்வே.. சரி அப்போ தான் சின்ன பையன்.. இப்போவுமே நீ நாளும் யோசிக்க மாட்டியா ராகவ்… அந்த வீட்டில் மகி மட்டுமே இல்லை.. மகி அம்மா இருக்காங்க..மகி அம்மா இப்போ செந்தாழினியின் மாமியார்… ” என்று கண்டிந்து கொண்டவன்.. மீண்டுமே தன்னை வேதனையுடன் பார்த்து நின்ற தன் தம்பிடையும்

அதே அறையில் புகைப்படமாக மாட்டி இருந்த தன் தாயையுமே பார்த்த வேதாந்த ஒரு பெரும் மூச்சு விட்டவனாக..

ஒரு ஆயாச குரலில்.. “ செய்யிறதுக்கு முன்னே ஒரு முறைக்கு இரண்டு முறை யோசிச்சி செய் ராகவ்.. இது மத்தவங்களுக்காக மட்டும் சொல்லலே.. உனக்காவும் தான் சொல்றேன்.. இது எல்லாம் உனக்கு படிப்பு கத்து கொடுக்காது.. இப்போ நீ போக போற இந்த ட்ரையினிங்க கூட சொல்லி கொடுக்காது… புரியுதா.. அதுவும் நீ ட்ரையினிங்க முடிச்சி ஏற்க காத்து கொண்டு இருக்கும் பதவி. சாமான்யப்பட்டது இல்ல.. ஒரு மாவட்டத்தை கட்டி காக்கும் பொருப்பு உன் கையில் வரும் போது..

மத்தவங்களோட இன்னுமே உனக்கு பொறுமை வேண்டும்.. உன் வேலைக்கும் உண்மையா இருக்கனும்.. அதே போல உனக்கும் உன்னை சார்ந்தவங்களுக்கும் இந்த வித பிரச்சனை வராது பார்த்து கொள்ளனும்.. “ என்ற சொன்ன அண்ணன் பேச்சுக்கு எதிர் பேச்சு பேசாது தலையாட்டும் இந்த ராகவனுமே அண்ணனை பின் பற்றி ப்ரீலிம்ஸ் எழுதி அதில் தேர்ச்சியும் பெற்று.. இதோ ஆட்சியாளர் பதவிக்கு கொடுக்கும் பயிற்சிக்கு நாளை கிளம்ப உள்ள நாளைய கலெக்கட்டர் இன்றைய கலெக்ட்டரான தன் அண்ணனுக்கு தம்பியாக தலையாட்டிக் கொண்டு நின்று இருந்தான்.

பின்னும் வேதாந்த கிளம்பும் சமயம். “ ண்ணா நானுமே உங்க கூட வரட்டுமா…? நாளை தானே நான் கிளம்பனும்..” என்று தயக்கத்துடன் கேட்டு நின்ற ராகவை சந்தேகத்துடன் பார்த்த வேதாந்த்..

“என்ன விசயமா என் கூட வரே என்று சொல்ற. .?” என்று கேட்டவனுக்கே தெரியும்.. எதற்க்கு என்று.

“இல்ல செந்தாவை..” எனும் போதே..

போதும் என்பது போல கை காட்டி தடுத்து நிறுத்தியன்…

ஒரே பேச்சாக.. “ நீ பார்க்க தேவையில்லை.’ என்று கூறியவன் மேலும்…

“அவள் வாழ்க்கையில் நீ குழப்பி வைத்த வரை போதும்.. நானே ஏன் கல்யாணத்துக்கு போனேன் என்று இருக்கேன்..” என்ற இந்த பேச்சுல் ராகவ்.

“ஏன் ஏன்.. ஏன் ண்ணா.? ஏதாவது பிரச்சனை ஆயிடுச்சா…? செந்தாவுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே… ” என்று பதட்டத்துடன் கேட்டவனின் தோளை தட்டி கொடுத்த வேதாந்த்.

“அது எல்லாம் இல்ல… என்னை கல்யாணத்தில் பார்த்த செந்தாழினியின் அப்பாவும் சித்தப்பாவும் அடையாளம் கண்டிக்கிட்டாங்கன்னு தான் எனக்கு தோனுது..” ஒரு பெரும் மூச்சு விட்டு சொன்னவனின் பேச்சில்..

“இனி என்ன ண்ணா.. நீங்க ஒன்னும் முன் போல எல்லாம் பயப்பட தேவையில்லைண்ணா… இப்போ அந்த ஊருக்கே கலெக்கட்டரா போறிங்க… ஏதாவதுண்ணா அந்த மருதுவை உள்ள வெச்சி செய்க ண்ணா…” என்று ஆவேசத்துடன் பேசிய தம்பியை அண்ணன் காரன் ஆயாசத்துடன் பார்த்தான்..

“இப்போ தானேடா சொன்னேன்.. பொறுமையா மத்தவங்க பக்கமும் யோசிக்கனும் என்று… நாளை உனக்கு ஒரு மக இருந்து அந்த மக நான் ஐந்து பேர் கூட இஷ்டப்பட்டு தான் இருந்தேன் என்று சொன்னா.. உனக்கு குளு குளு என்று இருக்குமாடா… செய்தது மொத்தம் நீங்க. இதுல அவரை குத்தல் சொல்லுவீயோ… நீங்க செய்த வரை போதும் இனி எல்லாம் நான் பார்த்துக்குறேன்..” என்று வேதாந்த் சொல்லியும் ராகவ் விடாது..

“ண்ணா மகி ண்ணா கிட்டவாவது சொல்லலாம் தானே ண்ணா…” என்று இறஞ்சும் குரலில் சொல்லியவனின் ஆதங்கம் அவனுக்கு புரிய தான் செய்தது.. இருந்துமே ஒரு பெரும் மூச்சு தான் அவனிடத்தில்..

“எனக்கு மட்டும் அவள் சந்தோஷமா வாழனும் தான் டா ஆசை அடுறேன்.. . ஆனா அவ தான் நீங்க ஒன்னும் அவர் கிட்ட சொல்ல கூடாது.. அப்படி சொன்னா உங்க கிட்ட பேசவே மாட்டேன் என்று சொல்லிட்டாளேடா.. அவள் சொன்னதை செய்துடுவா.. சொந்த அப்பாக்கிட்டேயே ஒரே வீட்டில் இருந்துட்டு மூன்று வருஷம் பேசாம இருந்து இருக்காடா.. அது தான் பயம்.” என்று சொன்னவனின் பேச்சில் உண்மையான பயம் தெரிந்தது.

“நீ இதை எல்லாம் யோசிச்சுட்டு ட்ரையிங்கில் கோட்டையை விட்டுடாதே… அதுக்கும் உன்னை வைத்து செய்வா அவ.. அவள் எங்கு போயிட போறா.. பார்த்துக்கலாம் ..”

இத்தனை நேரம் செந்தாழினிக்காக பேசிய வேதாந்த கடைசியாக தம்பியின் நலனுக்காக பேசி விட்டு சென்னையில் இருந்து தன் சொந்த ஊரான மதுரைக்கு வந்தவன் தன் பதவியான மாவட்ட கலெக்கடராக மறுநாளே தன் பதவியை ஏற்றுக் கொண்டவன்.. தன் பதவிக்கு என்று கொடுத்த அந்த வீட்டிலுமே குடியேறி விட்டான்.. ஆனாலுமே இன்னுமே வேதாந்த் செந்தாழினியையும் மகிபாலனையும் தொடர்பு கொள்ளவில்லை..

ஆனால் டிவியில் இவனின் புகைப்படத்தோடு அவனை பற்றிய செய்தியான..

“இன்று புதியதாக சென்னையில் இருந்து மதுரைக்கு மாவட்ட ஆட்சியர் பதவி ஏற்றார். என்றதோடு வந்த முதல் நாள் அன்றே . ஒவ்வொரு பள்ளியிலும், கல்லூரியிலும் அரசாங்க தேர்வு எழுத விருப்பம் உள்ளவர்களுக்கு அதற்க்கு உண்டான வகுப்பு எடுக்க வேண்டும் “ என்று செய்தி வாசிப்பாளர் கூற.

அந்த செய்தியை முகத்தில் புன்னகை மின்ன மகிபாலன் வீட்டில் செந்தாழினி பார்த்து கொண்டு இருந்த அதே சமயம் செந்தாழியின் தாய் வீட்டில் மருது பாண்டியனும் பார்த்து கொண்டு இருந்தார்.

வேதாந்தை பார்த்ததுமே பக்கத்தில் அமர்ந்து இருந்த சரவண பாண்டியன்..

“ண்ணா இவன்..” என்று ஆரம்பிக்கும் போதே தம்பியை ஒரு கண்டன பார்வை பார்த்த மருது பாண்டியன்..

“இவர் “ என்று திருத்தம் செய்த அண்ணனை அதிசயமாக பார்த்தார் சரவண பாண்டியன்..

பின் இருக்காதா.? அன்று மூன்று வருடம் முன் இதே அண்ணன் தான்.. அவனுங்களை வெட்டாது இருக்க மாட்டேன்… என்று தாம் தூம் என்று குதித்தவர்.

அதிலும் அந்த ஐந்து பேரில் பெரியவனான வேதாந்தை தான் வெட்டி சாய்த்து விடுவேன் என்று ஆத்திரப்பட்டது.

செந்தாழினி . “ அவங்க மீது சட்டம் ரீதியாகவும் எதுவும் செய்ய கூடாது… அதே போல வேறு வகையிலுமே அவங்களை தாக்க கூடாது… அவங்க மீது ஒரு சின்ன கீரல் விழுந்தா கூட பின் என்னை நீங்க பார்க்க முடியாது.” என்று விட.. மருது பாண்டியன் அமைதியாக ஆகும் படி ஆகி விட்டது…

அவர் இன்று இத்தனை மரியாதை என்று சரவண பாண்டியன் பார்த்து நிற்க.. தம்பியின் பார்வையில் ..

“அவர் படித்த படிப்பு எல்லாம் எத்தனை பணம் இருந்தாலுமே படிக்க முடியாது சரவணா.. அவர் பதவிக்கும் நாம மரியாதை கொடுத்து தான் ஆக வேண்டும் சரவணா…” என்று சொன்னவர் கூடவே..

வேதாந்தை பற்றிய தகவலாக. “ விசாரித்த வரை ஐந்து வருஷம் முன் வரை மதுரையில் தான் இருந்து இருக்காங்க.. இந்த தம்பி படிப்பு இங்கு தான் படித்து இருக்கு.

தம்பி படிக்கிற தொட்டு இவர் தம்பி மட்டுமே இங்கு ஆஸ்ட்டலில் விட்டு படிக்க விட்டு இருக்கான்.. .”

“இவர் மட்டுமே படிப்பாளி இல்லை… இவர் தம்பியுமே இதே படிப்பை படிச்சி எழுதி எதோ பயிற்ச்சிக்கு போக போகுது போல… அவருமே கலெக்கட்டரா தான் வருவார்… விசாரித்த வரை பசங்க மட்டும் இல்ல குடும்பமே நல்ல குடும்பம் தான்..”

மருது பாண்டியனின் பேச்சில்.. “ண்ணா…” என்று ஏதோ பேச முயன்ற தம்பியை பேச விடாது.

“இப்போ விசாரிச்ச தகவல மூன்று வருஷம் முன் விசாரிச்சி இருந்தா என் மக என்னை விட்டு தூர விலகி நின்று இருந்து இருக்க மாட்டா. அன்னைக்கு ஏதோ நடந்து இருக்கு.. அது என்ன என்று இன்று வரை கூட எனக்கு சரியா தெரியல. ஆனா தப்பா எதுவும் நடந்து இருக்காது.. அது தெளிவா தெரியுது சரவணா.”

இன்று யோசித்தது… அன்று யோசித்து இருந்து இருந்தால், இன்று அவர் மகள் மனதளவில் செந்தாழினி தந்தையை தூர நிற்க வைத்தது சொல்ல..

மகிபாலன் தன் கை பேசியில் வேதாந்த்தை பற்றிய செய்தியை பார்த்து கொண்டு இருந்த போது தான் பேசியில் வேதாந்த அழைத்தது.. மகி பாலன் அழைப்பை ஏற்றதுமே..

“ என்ன புது மாப்பிள்ளை எப்படி இருக்க…?” என்ற

வேதாந்தின் அந்த விசாரிப்பிலேயே அத்தனை நக்கல்.. மகிபாலனும்.. வேதாந்தை விட நக்கல் தோணியில்..

“ நீ தான் சொல்லனும்…” என்ற நண்பனின் இந்த பேச்சில்..

வேதாந்த் சிறிது ஜர்க் ஆகி விட்டான்… இவன் எதை நீ தான் சொல்ல சொல்கிறான் என்று வேதாந்த் பயந்தே விட்டான்..

பின் என்ன இவனிடம் கொஞ்சம் விசயம் தெரியும் படி என் பேச்சு இருந்தாலுமே, இவன் பொண்டாட்டி என்னை என் பதவியை கூட பாராது நடுரோட்டில் விரட்டி விரட்டி உதைப்பாளே என்று நினைக்கும் போதே..

மகி பாலன் தொடர்ந்து… “ நான் ஒன்னும் அப்படி கஷ்டமானதை எல்லாம் சொல்ல சொல்லலையே வேதாந்த நீ இத்தனை யோசிக்க. “ என்று சொன்னவன்..

“நான் புது மாப்பிள்ளையாகி விட்டேன்.. நீ எப்போ மாப்பிள்ளையாக போற. எனக்கு ரொம்ப ரொம்ப வேண்டப்பட்ட பெண்.. அந்த பெண்ணுக்கு கல்யாணம் ஆகி அந்த பெண் நல்லா வாழுறா என்று எனக்கு உறுதி ஆன பின் தான் நான் என் கல்யாணத்தை பத்தி யோசிப்பேன் என்று சொல்லிட்டு இருந்தியே… என்ன அந்த பெண்ணுக்கு கல்யாணம் ஆகிடுச்சா…?” என்று கேட்டவனின் கேள்வி மீண்டுமே வேதாந்துக்கு குழப்பத்தை தான் கொடுத்தது..

இருந்துமே தன்னை சமாளித்தவனாக. “ ம் மேரஜ் ஆகிடுச்சி..” என்று வேதாந்த பதில் சொல்ல.

அதற்க்கு மகி பாலன்.. “ ஓ..” என்றவன் பின்..

“அந்த பெண் நல்லா வாழுதா..? ஏன்னா உனக்கு நான் பெண் பார்க்கலாம்..” என்று இருக்கேன்..” என்று கேட்டவன் பின் அவனே.

“ஓ அதுக்கு தான் என்னை விசாரிச்சியா….?” என்ற மகி பாலனின் தொடர் இந்த பேச்சில் வேந்தாந்த்..

“நீ மாறவே இல்லை மகி…” என்று வேதாந்த சொல்ல.

ஆனால் மகிபாலனோ.. “நீ மாறிட்ட வேதாந்த்..” என்று சொன்னவன் பின்..

“எனக்கு வேலை இருக்கு,. நான் அப்புறமா உன்னை கூப்பிடுறேன்.. “ என்று சொல்லி விட்டு கை பேசியை வைத்தவன் மகிபாலனுக்கு முன் நடந்த விசயங்களை வைத்து அத்தனை யோசனைகள்…

முத்துக்களை கோர்த்ததில் மாலையாக உருமாறுவது போல ஒரு சில விசயங்களை முன்னும் பின்னும் வைத்து பார்த்த மகிபாலனுக்கு.. ஏதோ ஒரு விசயங்கள் அணிவகுத்து நின்றதில் இதுவா இருக்குமா..? அதுவா இருக்குமா..? என்று நினைத்த மகிபாலனின் இதுவா அதுவா என்றதில் எந்த ஒரு தவறான விசயம் மட்டும் இல்லாது நல்லதாகவே தான் அவன் மனது நினைத்தது.

இங்கு வேதாந்துக்கோ… அப்படி இருந்தது… சின்ன வயது முதலே தோழர்கள் இருவருமே.. மகிபாலனின் இரண்டு தெரு தள்ளி தான் வேதாந்த் வீடு..

சிறு வயது முதலே ஒரே தெருவில் விளையாடிய இவர்களின் இந்த நட்பு பள்ளி கல்லூரி என்று இருபது வருடத்திற்க்கு மேலாக இறுகிய நட்பில் விரிசல் விடுவது போல வேதாந்த் தந்தை விபத்தில் இறந்து விட.

தந்தையின் இறப்பில் கூட பெரியதாக பாதிக்கப்படாத வேதாந்த்… அவர் இறந்து இருபதாம் நாளில் கடங்க்காரன்கள் வீட்டின் முன் கடை கட்டிக் கொண்டு நின்றதில் இவன் மட்டும் அல்லாது குடும்பமே பாதிக்கப்பட்டது..

அதில் வீட்டை விற்று படித்து கொண்டு இருந்த தம்பியை அவனுடன் படிக்கும் ஒருவன் கூட தங்கை வைத்து இவன் வேலை சென்னையில் கிடைக்க. பிழைப்பை தேடியும், தன் கனவை தேடியும் தன் அன்னையோடு சென்னைக்கு சென்றவர்களின் தொடர்பு அப்போதும் தொடர்ந்தது தான்..

ஆனால் மூன்றை ஆண்டுகளுக்கு முன் நடந்த அந்த நிகழ்வில், வேதாந்தினால் மகிபாலனை பார்க்கும் தகுதியை கூட தான் இழந்து விட்டதாக அவன் கருதினான்..

என்ன என்று பேசுவான்.. பேச ஆரம்பித்தாள் அனைத்துமே சொல்லும் படியாக ஆகி விடுமே… செந்தாழினி அத்தனை தீர்த்து சொல்லி விட்டாள்..

“நீங்க மட்டும் வாய் திறந்தா அவ்வளவு தான்… நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது ண்ணா…”” என்று சொல்லிய பின் மகிபாலனை தொடர்பு கொள்ள கூட வேதாந்துக்கு பயமாக ஆகி விட்டது…

அதோடு மகிபாலனுக்கு இங்கு நடந்த விசயங்களை தன்னுள்ளே மூழ்கி போனவனுக்கு வேதாந்த் எல்லாம் அவன் நினைவில் கூட இல்லை என்று சொல்லலாம்..

ஒரு சில முறை பேசியில் மட்டுமே அழைத்து பேசிக் கொண்டனர்…

காற்றோட்ட செய்தியாக வேதாந்த் அன்னை இறந்த விசயம் தெரிந்து.. பேசியை அழைத்து துக்கம் விசாரித்தான் தான்..

பதிலுக்கு வேதாந்தும்.. “ அப்பா பத்தி நானுமே கேள்வி பட்டேன் மச்சான்..” என்று விசாரிக்க… அந்த விசாரிப்போடு சரி.. பின் வேதாந்த் தன் கனவை நோக்கி இன்று ராகவ் சென்றது போல அன்று வேதாந்த் பயிற்ச்சிக்கு சென்று விட்டான்..

பேச நினைத்து இருந்தால் வேதாந்த் பேசி இருந்து இருக்கலாம் தான்.. ஆனால் ஏதோ ஒரு வித தயக்கம்.. இப்போதுமே அந்த தயக்கம் தொடர.. மகி பாலன் மட்டுமே இவனை அழைத்து பேசுவது…

ஒரு முறை தன் திருமணம் விசயமாக கூட பேசினான்.. அப்போது வேதாந்த்.. “ உனக்குமே என் வயது தானே… நீ எப்போ செய்துக்க போறேடா.” என்று வேதாந்த கேட்ட போது..

மகிபாலன்.. “ நான் இருக்கும் நிலையில் எனக்கு அது தான் குறை…” என்று கூட மகிபாலன் தன்னை மீறி வார்த்தைகள் விட்டு விட.

அதற்க்கு வேதாந்த்… “ ஒரு குறை கூட சொல்ல முடியாது.. உன் மீது உயிரையே வைத்து இருக்கும் ஒரு பெண் உனக்கு கிடைப்பா மகி..” என்று ஆழ்ந்த குரலில் நண்பன் சொன்ன விதத்தில் மகி பாலம் சிரித்து விட்டான்..

சிரித்து கொண்டே “ பயிற்ச்சியில் ஜோதிடம் கூட கத்து தராங்கலா ..” என்று கூட மகி பாலன் நண்பனை கிண்டல் செய்தான்…

பின் இன்னுமே இருவருக்குமே சூழல் கடினமாக பேச்சு குறைந்து விட்டது.. அதோடு வேதாந்துக்கு தயக்கம்.. தன்னையும் மீறி மகியிடம் விசயத்தை சொல்லி விடுவோமோ என்று..

ஆனால் அந்த தயக்கத்தின் ஒரு சிறு துளியாக ஒரு விசயம் வேதாந்த் தன்னையும் மீறி சொல்லி விட்டான்..

அடுத்த நாளே மகிபாலன் தன் மனைவியோடு தன் தங்கை திருமணத்திற்க்கு அழைக்க வேதாந்த் வீட்டிற்க்கு வந்தவனிடம்..

வேதாந்த்… “ அந்த ஐந்து பேரில் நானுமே ஒருவன்..” என்று விட்டான்…


 
Active member
Joined
Jun 23, 2024
Messages
71
அடேய் ராகவா ஏற்கனவே அவ வாழ்க்கையில் நிறைய சிக்கலை உண்டாக்கி வச்சிருக்கீங்க 🤧 😤 😤 😤 இனியாவது கொஞ்சம் அமைதியா இரு 😨 😨 😨 😨 😨

மகி யாரும் சொல்லாமலே ஏதோ யூகிச்சு வச்சிருக்கான் 🥺 🥺 🥺 இப்போ வேதாந்த் மூலம் உண்மை வருமா 🧐 🧐 🤔 இல்லை செந்தா சொல்லும் போது தெரிஞ்சுக்கிறேன் என்று சொல்வானா 🤭🤭

வேதாந்த், ராகவன் எல்லாரும் ஐஏஎஸ் தான் 🙂🙂செந்தாவும் ஐஏஎஸ் ஆகணும் என்று தான் ஆசைபட்டா 🧐🧐அப்போ மத்தவங்களும் ஐஏஎஸ் தானா 🤔 🤔 🤔 🤔 🤔


மருது 🤨🤨🤨 இப்போ விசாரிச்சு என்ன பண்ண போறீங்க 😤😤😤 அதுவும் அவளுக்கு கல்யாணம் செஞ்சு வச்ச பிறகு 😣😣😣 ஒரு வேளை மகி சரியில்லன்னா அவ வாழ்க்கை என்ன ஆகும் 🤧🤧🤧
 
Last edited:
Active member
Joined
Jun 1, 2024
Messages
105
மருது அதுக்குள்ள இவ்வளவு டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணிட்டாரே இதை முன்னாடியே பண்ணியிருந்தா இத்தனை வருஷம் அப்பா பொண்ணு பிரிவு இருந்திருக்காது ......

மகி கூட கெஸ் பண்ணிட்டான் ஆல்ரெடி.... இப்போ வேதாந்த்தே உளறிட்டான்....

ஏன் யாரும் சொல்லக் கூடாதுனு நினைக்கிறா 🤔
 
Active member
Joined
May 12, 2024
Messages
199
Ragavan Vedhanth… innum 3 per yaru??? Avangalai kaapatha than Sentha ava mele pazhi potta nu theriyum… Mahi ya Sentha already love pannala?
 
Top