Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Eengum Geetham...17

  • Thread Author
அத்தியாயம்…17

வேதாந்த அழைப்பை அணைத்த மகிபாலனுக்கு தன் திருமணத்தில் வேதாந்த் உரிமையுடன் தன் மனைவியிடம் பேசியது தான் அவனின் நியாபகத்திற்க்கு வந்தது… சுதா திருமணத்திற்க்கு கூட அவன் வந்தான் தான்..

அப்போது தான் அவனின் தந்தை இறந்து வேதாந்த் சென்னை சென்ற சமயம் அது.. அவன் தம்பி ராகவ்வை தன் விட்டிலில் இருந்தே காலேஜூக்கு போகட்டும் என்று தான் மகி வேதாந்திடம் சொன்னான்..

ஆனால் அதற்க்கு வேதாந்த்… “ இரண்டு பெண்கள் இருக்கும் வீட்டில் வேண்டாம் மகி…” என்று விட்டான்..

“இல்ல வேதா காலேஜ் ஹாஸ்ட்டல் என்றால் ரொம்ப செலவு பிடிக்கும்..” என்று மகி தன் பேச்சை இழுத்து தான் நிறுத்தியது..

காரணம்.. அவனுமே தன் வீட்டில் இதை பற்றி கேட்காது தான் நண்பனின் தந்தை இறந்து கடன் பிரச்சனையில் வீட்டையே விற்று செல்லும் சமயத்தில் இந்த உதவியாவது தான் செய்யலாம் என்ற எண்ணத்தில் சொன்னது..

அதற்க்கு வேதாந்த் மறுத்ததோடு.. “ அவன் பிரன்ஸ்க்கு நான் படிச்ச புக் எல்லாம் கைட்டன்ஸ்ஸா கொடுத்து இருக்கேன் மகி… அதோட நம்ம போல தான் ராகவுக்கும் ரொம்ப நல்ல பிரன்ஸ். அதனால் பிரச்சனை இல்லை.. நீ இதை பத்தி ஒரி பண்ணிக்காதே..” என்று விட்டான்..

இருந்துமே மகிபாலன்.. ‘ சரி பணம் உதவி செய்யலாம்..”’ என்று நினைத்த மகிபாலன் நினைத்தது போல விடுதிக்கு மகி தான் ராகவ்வுக்கு கொடுத்தது..

ஆனால் ராகவ் படிக்கும் முடியும் வரை கூட அதை கொடுக்க முடியாத அளவுக்கு மகிபாலன் வீட்டில் பிரச்சனை ஆகியதில் ராகவே..

“ண்ணா நான் பார்ட் டைம் வேலை பார்க்கிறேன் ண்ணா.. நீங்க என்னை பத்தி கவலை படாதிங்க ண்ணா.” என்று ராகவ் மகி பாலனிடம் சொன்ன சமயம் அது மகிபாலனின் தந்தை இறந்த சமயம் அது..

அதோடு ஐடியில் லட்சத்தில் சம்பளம் வாங்கி கொண்டு இருந்தவன் பின் ஆயிரத்தில் வாங்க அம்மா செய்த வேலைக்கு வட்டி பின் சுதா வீட்டோடு வந்தது என்ற பிரச்சனையில் மகிபாலன் அனைத்துமே மறந்து தன் குடும்ப பிரச்சனையிலேயெ மூழ்கி விட்டான் என்று தான் சொல்ல வேண்டும்..

இந்த இடைப்பட்ட நாட்களில் தான் செந்தாழினி வேதாந்த் நட்பாகி இருப்பார்கள் என்று நினைத்தான்.. ஆனால் எந்த வழியில்.. என்று யோசித்தவன் பின் ஒரு முடிவு செய்தவனாக மாலையில் வீடு வந்தவன் பார்த்தது…

அவன் அக்கா சுதா டிவி பார்த்து கொண்டு இருப்பதும்.. அம்மா சமையல் கட்டில் ஏதோ செய்து கொண்டு இருப்பதையும் தான்..

ஆழி எங்கு என்று தான் சுதாவிடம் கேட்க நினைத்தான்.. ஆனால் அதற்க்குள் சுதா…

“என்ன மகி கல்யாணம் ஆகிட்டா கூட பிறந்தவங்க கூட கண்ணுக்கு தெரியலையா என்ன…? எப்போ வந்தே என்று கூட விசாரிக்காம சுத்தி முத்தியும் பார்த்துட்டு இருக்க….” என்று கேட்ட சுதாவை மகிபாலன் முறைத்து பார்த்தவன்..

பின்.. “ நேத்து போன இன்னைக்கு வந்து இருக்க. இதுல நான் உன்னை எப்போ வந்தே என்று விசாரிக்கனுமா…? என்று கேட்டு விட்டான்..

அவ்வளவு தான்.. சுதா.. “ம்மா..” என்று ஒரு அழுது ஆர்ப்பாட்டம் செய்து விட்டாள்..

சுதாவின் நாடகத்தை பார்த்து விட்டு விட்டால் போதும் என்று தங்கள் அறைக்கு வந்து விட்டான்..

தங்கள் அறையில் இருப்பாளோ தன் மனைவி என்ற ஒரு ஆர்வமும் மகிபாலனுக்கு… அங்கும் இல்ல்லாது போக. அந்த அறையில் மகிளா அம்மா அறையில் இருப்பளோ…?

திருமணம் முடிந்து மூன்று நாட்கள் தான் ஆகிறது.. இன்னுமே அவனின் தங்கை செந்தாழினியிடம் சரியாக பேசுவது இல்லை.. என்று தெரிந்ததால், கண்டிப்பாக அங்கு இருக்க மாட்டாள் என்ற யோசனையோடு தான் தன் பேன்ட் கழட்டி லூங்கிக்கு மாறியது..

தன் உடையை மாற்றும் போது தான் படுக்கையை பார்த்தான். அந்த படுக்கை துளி கூட கலையாது ஒரு சிறு சுருக்கம் கூட இல்லாது அப்படியே ஐயன் செய்தது போல இருந்தது..

அதை பார்த்தவன் தனக்குள் சிரித்து கொண்டான்… இரவில் கலைந்து பகலில் அதை சரி செய்யவில்லை.. இரவிலுமே கலையாது தான் இருந்தது.. அந்த படுக்கை… அதற்க்கு என்று படுக்கையில் படுக்காது கீழே படுத்தார்கள் என்றும் சொல்ல முடியாது..

முதல் இரவு கூடத்தில் கழித்தாலும், மறு நாள் இரவு அவர்கள் தனித்து இந்த அறையில் தான் தங்கியது… இவனுக்கு தான் ஒரு மாதிரியாக இருந்தது.. மனைவியை எதிர் கொள்ள..

காரணம்.. அடுத்த பத்து நாட்களில் தங்கையின் திருமணம்.. அவன் எண்ணம் முழுவதுமே… எந்த ஒரு குறையும் இல்லாது நல்ல படியாக நடந்து முடிய வேண்டும் .இதுவே தான் இருந்தது. வீட்டின் ஒற்ற ஆண்மகனின் கவலை இது.. அப்பா இல்லாது தனித்து கூட பிறந்தவர்களுக்கு திருமணம் செய்யும் போது இது போன்ற கவலைகள் தன்னால் வந்து ஒட்டிக் கொள்ளும்..

அதோடு கல்யாண செலவுக்கு இன்னுமே ஒரு ஐம்பதாயிரம் இருந்தால் பயம் இல்லாது இருக்கலாம் என்ற எண்ணம் அவனுக்கு.. அனைத்தும் வாங்கி விட்டது தான்..

ஆனால் தங்கை திருமணம் அன்று கொஞ்சம் பணம் இருந்தால், திடிர் என்று ஏதாவது வாங்க வேண்டும் என்றால் , அப்போது முழித்து கொண்டு இருக்க வேண்டாம் என்ற எண்ணம் அவனுக்கு..

அந்த யோசனை.. அதோடு அவன் திருமணத்திற்க்கு என்று முன்பே அதிக விடுமுறையை எடுத்து விட்டான்.காரணம் அவன் திருமண வேலைகளை அவனே தான் பார்க்க வேண்டி இருந்தது..

உறவுக்கு, நட்புக்களுக்கு பத்திரிக்கை வைக்க கூட அம்மாவை இவன் தான் அழைத்து சென்றது.. காரணம் அம்மா தனித்து செல்வது என்றால் ஆட்டோ கார் என்று வைத்து செல்வதில் அது ஒரு தனிப்பட்ட செலவு ஆகி விடும் என்றதால், இவனே தன் இரு சக்கர வாகனத்தை அழைத்து கொண்டு சென்று வந்தான்..

அடுத்த பத்து நாட்களில் தங்கை திருமணம்.. அதற்க்கும் திருமணத்திற்க்கு முன் இரண்டு தினமும்.. முடிந்து இரண்டு தினமும் விடுமுறை எடுக்க வேண்டும்… என்று கெளசல்யா சொன்ன போது..

மகிபாலன்.. தயங்கி தான்.. “ எப்படிம்மா தொடர்ந்து லீவ் எடுக்க முடியும்..?” என்ற போது தான் சுதா..

“உன் கல்யாணம் முடிந்து மூன்று நாள் போதும் மகி… “ என்று சொன்னது..

மகிபாலனும் அக்கா சொன்னதற்க்கு எல்லாம் அப்படி செய்யவில்லை அவனுக்குமே வேறு வழி இல்லாது நாளை திரும்ப ஆபிஸ் போக வேண்டும்.. பின் தங்கை திருமணம் பணப்பிரச்சனை என்று மனது உழண்டு கொண்டு இருக்கும் இந்த சமயத்தில், இது வேண்டாம். என்பது தான் அவன் எண்ணம்..

இது எல்லாம் அவசரக்கெதியில் செய்யும் விசயமும் கிடையாது…

அப்படி இருக்க இதை எப்படி மனைவியிடம் சொல்வது என்று யோசிக்க. பால் சொம்போடு தங்கள் அறைக்கு வந்த செந்தாழினி சிரித்த முகத்தோடு தான் பாலை கொடுத்தது.

பால் அவளிடம் இருந்து வாங்கிய மகிபாலன் தன் மனைவியை ஆராய்ச்சி பார்வை பார்த்து கொண்டே தான் வாங்கியது.

பாலை கணவன் கையில் கொடுத்த செந்தாழினியோ.. என்னவோ காலம் காலமாக இது பழக்கம் என்பது போல ஒரு ஆயாசமாக படுக்கையில் இவன் பக்கத்தில் அமர்ந்தவள்..

தன் முந்தி கொண்டு கழுத்தை துடைத்து கொண்டே சுற்றியும் முற்றியும் பார்த்தவள் வெளி சுவற்றின் பக்கம் இருக்கும் சன்னலை திறக்க சென்றவளை பார்த்தவன்..

“திறக்க போறியா…?” என்று கேட்டவன்.. அவள் பதில் சொல்லும் முன்.. கையில் இருந்த பாலை அன்னாந்து வாயில் ஊற்றும் வேளை..

செந்தாழினியோ… “ உங்களுக்கு இன்றே பஸ்ட் நையிட் கொண்டாடும் எண்ணம் இருக்கா என்ன…?”

சன்னலின் கொக்கி மீது கை வைத்து கொண்டே திரும்பி இவனை பார்த்து கேட்டதில், அன்னாந்து பாலை குடித்து கொண்டு இருந்தவனுக்கு சட்டென்று பொரை ஏறி விட்டது..

அப்படி ஒரு இரும்பல்… செந்தாழினியோ சாவகாசமாக சன்னலை திறந்து விட்டு இவன் அருகில் வந்தவள்… அவன் சட்டையின் மேல் பட்டனில் கை வைத்த போது பதறி போனவனாக இருமிக் கொண்டே மனைவியின் கை மீது கை வைத்த மகிபாலன் அதிர்ச்சியாக மனைவியை பார்த்தான்..

கணவனின் பார்வையில் செந்தாழினி பக் என்று சிரித்து விட்டாள்..

அதே சிரித்த முகத்துடன் தன் கையில் இருந்த அவன் கையை எடுத்து விட்டவளாக சட்டையின் மேல் இரண்டு பட்டனை கழட்டி விட்டவள்..

பின் தன் முந்தி எடுத்தவள் பின் என்ன நினைத்தாளோ.. அங்கு இருந்த டவலை கொண்டு அவன் கழுத்து பகுதியை துடைத்தவாரே,,

“கவலை படாதிங்க.. இப்போதைக்கு நான் உங்களை ஒன்றும் செய்யும் ஐடியா இல்லை…” என்றதில்

மகிபாலன் தெளிந்து விட்டான் என்று தான் சொல்ல வேண்டும்..

அதில்.. “ அடியே.. “ என்று சொன்னவன் பல்லை கடித்து கொண்டு..

“உன்னை உன்னை…” என்று சிரித்தவாறு… அவன் தலையில் செல்லமாக கொட்டியவன்..

“உன் வாயுக்கு வாயுக்கு.. அதுக்கு அதுக்கு ” என்று ஏதோ சொல்ல ஆரம்பித்த மகிபாலன் சொல்லாது விட..

“என்ன என் வாயில் என் வாயில் அதுக்கு என்ன கொடுக்கனும்..” என்றவளின் பேச்சில் மகிபாலன் தான் விக்கித்து போய் விட்டான்..

ஆனால் செந்தாழினி விக்கித்து எல்லாம் போக வில்லை அசராது… “ இப்போ உங்க எண்ணம் எல்லாமே உங்க தங்கை மகிளா கல்யாணம்.. பணம்… இதுல தான் இருக்கும்.. எனக்கு நீங்க என் கிட்ட இருக்கும் போது உங்களின் மொத்த கவனமும் என் கிட்ட. என் கிட்ட மட்டும் தான் இருக்கனும்.. சோ… சோ.. அதனால. இன்னைக்கு சன்னல் என்ன இந்த ரூமின் கதவை கூட திறந்து வைத்தா கூட பிரச்சனை இல்லை… நான் என்ன சொல்லுறது…” என்று சொன்னவள் அவன் கையில் இருந்த பாலை வாங்கி குடித்தவள்..

பின்.. “ நான் பேசி பேசியே டையடா போயிட்டேன் போங்க. இன்னும் கொஞ்சம் பால் இருந்து இருந்தா கூட குடித்து இருப்பேன்…” என்று சொன்னவள்..

விளக்கை அணைத்து விட்டு இரவு விளக்கை எரிய விட்டவள்.. படுக்கையின் சுவரை ஒட்டியது போல படுத்துக் கொண்டவள்..

“நான் சொன்னேன் என்று கதவை திறந்துடாதிங்க.. ஏன்னா நான் எப்படி தூங்கி எழுந்துப்பேன் என்று சொல்ல முடியாது.. ஏன்னா புடவையில் படுத்துக்குறது இது தான் முதல் முறை… எழுந்துக்கும் போது எந்த மாதிரி நிலையில் இருப்பேன் என்று சொல்ல முடியாது..” என்று செந்தாழினி சொன்னதில் மகிபாலன் பதறி தான் போய் விட்டான்..

அதில் பெரிய விளக்கை போட்டவன்.. “ எப்போவும் என்ன ட்ரஸ் போடுவீயோ.. அதுவே போட்டுக்கோ ஆழி…” என்று சொன்னவனின் பேச்சில் அத்தனை பதட்டம்..

பின் இருக்காதா…? மனைவியின் பேச்சே அவனுக்கு ஒரு வித போதையை கொடுத்து கொண்டு இருக்க.. இதில் கண்ணுக்குமே இவள் ஏதாவது காட்டி விட்டால் தன் நிலை அவ்வளவு தான்.. அவன் பயம் அவனுக்கு..

அவனை பற்றி நன்கு தெரிந்த செந்தாழினியோ.. “ கவலை படாதிங்கப்பா… நான் அந்த அளவுக்கு எல்லாம் மோசமா எழுந்துக்க மாட்டேன் .. நீங்க நம்பி என் பக்கத்தில் படுக்கலாம்.. உங்கள் கற்புக்கு நான் உத்திரவாதம்..” என்று வேறு சொல்ல.

முன் இருந்த அவனின் அழுத்தமான மனநிலை.. மனைவியின் இந்த பேச்சில் மறைந்து விட. அவனால் ஒன்றும் சொல்லாது படுக்க ஆயுத்தமானவன் செவியில்..

“ இங்க தங்கையின் கல்யாணம் எல்லாம் நல்லப்படியாவே நடக்கும்ப்பா.. கவலை படாம தூங்குங்க. நாளைக்கு ஆபிஸ் போகனும் லே..” என்று சொன்னவள் இதையுமே சொன்னாள்..

“நாளைக்கு உங்களை ஆபிசில் பார்க்குறவங்க கேலி செய்ய போறாங்க..” என்று…

உண்மையில் தன்னை பார்த்தவர்கள்.. அப்படி ஒரு கிண்டல்.. அதுவும் ஒவ்வொருவர் அவர்கள் திருமணம் ஆன புதியதில் எங்கள் அறையை விட்டு வெளியில் வரவே ஒரு வாரம் ஆகிடுச்சி.. நீ என்னப்பா.. மூனாவது நாளே வந்து நிற்கிற..?” என்று கேட்டவருக்கு வயது ஐம்பதுக்கு மேல.

இப்படியாக இன்று நடந்த விசயங்களை அசைப்போட்டப்படியே மீண்டும் கூடத்திற்க்கு வந்த போது அவன் கையில் காபியும் முந்திரி கேக்கும் கொடுத்த கெளசல்யா..

“நாளைக்கு டாக்டர் கிட்ட போகனும் மகி..” என்று சொன்னவர் கூடவே அவர்கள் இன்று முன் பதிவு செய்து வைத்து இருந்த ஒரு பெண் மருத்துவர் பெயரையும் சொல்ல..

“என்னம்மா ரொம்ப முடியலையா…?”

இப்போது மகிபாலனின் எண்ணம் மனைவி எங்கு இருக்கா..? என்பதில் இல்லை.. அம்மாவுக்கு ஐம்பத்தி ஐந்து வயது ஆகிறது.. இன்னுமே மேனோபாஸ் பிரச்சனை தொடர்வதில் சில சமயம் மிகவும் சோர்ந்து போய் விடுவார்.

பெண் மருத்துவரிடம் செல்ல வேண்டும் என்றதில், திரும்பவும் பிரச்சனையோ.. இதை தான் நினைத்தான்..

ஆனால் கெளசல்யா..” எனக்காக வாங்கல இல்ல மகி… சுதாவுக்கு.. நாள் தள்ளி போய் இருக்கு.. அது தான் மாப்பிள்ளை நீ போன உடனே அவரும் வந்தாரு… சுதாவுக்கு ரொம்ப முடியல இங்கு இருந்தா ரெஸ்ட் எடுப்பா என்று கொண்டாந்து விட்டுட்டு போனார்..” என்று சொன்னதுமே மகிபாலனுக்கு உடனே எல்லாம் மனதில் மகிழ்ச்சி ஏற்படவில்லை…

குழந்தை என்று சொன்னதுமே முதலில் அவன் கண் முன் வந்து நின்றது செலவுகளும்.. அதை எப்படி சமாளிப்பதும் என்பதுமே..

கெளசல்யா சொல்லி விட்டு ஒன்றும் சொல்லாது இருக்கும் மகனிடம்.. “ என்ன மகி ஒன்னும் சொல்லாது இருக்க. நீ இதை கேட்டதும்.. ரொம்ப சந்தோஷப்படுவே என்று நினைத்தேன்.. அதோட வயசு முப்பத்தி இரண்டு முடிஞ்சிடுச்சி.. குழந்தை பிறப்பும் தள்ளி போய் விடுமோ என்று நான் பயந்துட்டு இருந்தேன்.. அது வரை அந்த கடவுள் இதுலையாவது எனக்கு அருள் வைத்தாரே..” என்ற அன்னையின் பேச்சில் மகிபாலன் தன்னையே நொந்து கொண்டவன்..

“இல்லேம்மா சந்தோஷம் தான்..” என்று சொன்னவன் சுதாவையும் வாழ்த்தி விட்டு..

“நீ டாக்டர் பார்த்துட்டியா சுதா…” என்றும் கேட்டான்..

“அதுக்கு தானேடா நாளைக்கு போவது.. அந்த பிரகன்ஸி கிட் வைத்து டெஸ்ட் செய்து பார்த்துட்டேன்…அதுல நான் கற்பம் என்று தான் தெரிஞ்சுது.. உங்க மாமா தான் எப்படி இருந்தாலுமே உன் டெலிவரி அம்மா வீட்டில் தான் பார்க்கனும்..

டாக்டர் வேறு வேறு எல்லாம் மாத்த கூடாது… ஒரே டாக்டரை பார்ப்பது தான் நல்லது என்று சொன்னாரு.. அது தான்..” என்றதுமே..

என்ன இது என்பது போல் தான் மகிபாலனுக்கு அதிர்ந்து போய் சுதாவை பார்த்தவன் மீண்டுமே தன் அன்னையை பார்த்தான்..

பின்.. “ம்மா அந்த ஆஸ்பிட்டலிலேயே டெலிவரி பார்க்க போறோம்.. ம்மா அங்கு நார்மல் டெலிவரிக்கே ஒரு லட்சம் பிடுங்கி விடுவான்.. ம்மா..?” என்று அதிர்ந்து போய் கேட்டவனிடம் கெளசல்யா என்ன சொல்வது என்று புரியாது திரு திரு என்று முழித்து கொண்டு இருந்தவர் பின்..

“இல்ல மகி.. செலவை மாப்பிள்ளை செய்யிறார் என்று சொல்லிட்டார்..” என்று கெளசல்யா சொன்ன போது தான் .செந்தாழினி பின் பக்கம் கட்டில் இருந்து ஒரு கூடை நிறைய துலக்கிய பாத்திரத்தை எடுத்து வந்து சமையல் திட்டில் வைத்தது.. வைத்தவள் முகம் பெரும் யோசனையில்..

கூடத்திற்க்கு போகவில்லை.. சமையல் கட்டிலேயே நின்று கொண்டவள் தண்ணீரை ஒரு சொம்புக்கு இரண்டு சொம்பு குடித்துமே அவளுக்கு தன்னை அடக்கி கொள்ள முடியவில்லை..

இன்று மட்டுமே இதோ இது போல மூன்று கூடை பாத்திரத்தை தேய்த்து வந்து வைத்தாயிற்று… அது கூட அவளுக்கு பிரச்சனை இல்லை..

பிரச்சனை சுதா வந்த போது கூட இல்லை.. பின் மகள் கற்பம் என்றதில் அன்னையாக கெளசல்யா மகிழ்ந்து காலை மதியம் மாலை என்று தட புடலாக விருந்து சமைத்து.. பின் பாத்திரத்தை தன்னை துலக்க சொன்னது.. அது எல்லாம் அவளுக்கு ஒரு பெரிய விசயமே கிடையாது..

அவள் மகிபாலன்.. தான் வாய் திறந்தால், மகிபாலன் தான் வேதனை அடைவான்.. தன் பாலனுக்கு அவள் என்ன என்றாலும் பொறுத்து கொள்வாள் தான்..

ஆனால் இங்கு தன் மகிபாலனை ஏமாற்றுவது போலான செயல்களை பார்த்தவளுக்கு தான் அவளாள் பொருத்து கொள்ள முடியவில்லை..

ஆம் அப்பட்டமாக மகிபாலனை ஏமாற்றுவது தான்.. மதியம் பாத்திரத்தை துலக்கும் உட்காரும் போது.. விம் சோப்போடு லிக்வெட் இருந்தால் நன்றாக இருக்கும்..

இருக்கா என்று கேட்கலாம் என்று நினைத்து தான் பின் பக்கத்தில் இருந்து வீட்டிற்க்குள் வந்தது.. அப்போது தான் தன் கைய் பேசியை சுதாவிடம் காட்டி..

“பரவாயில்லை ஒன்னாம் தெதியே பணம் வந்துடுச்சி.. மருதுண்ணா சும்மாவா சரியா வாடகை கொடுக்குறவனை தான் வைப்பார்..” என்ற கெளசல்யா இந்த பேச்சில் செந்தாழினி புரிந்து கொண்டு விட்டாள்..

அதாவது அந்த அடுக்குமாடி குடியிருப்பின் வாடகையும்.. காம்பளக்ஸ் வாடகையும் தான் என்று.. இது வரை அப்பா வங்கிக்கு வரும்.. இப்போது கெளசல்யா வங்கி கணக்கை கொடுத்து இருக்காங்க போல என்று நினைத்து கொண்டாள்.. இது வரை சரி தான்..

ஆனால் சுதா உடனே.. “ம்மா எனக்கு டெலிவரி இந்த ஆஸ்பிட்டலில் பார்க்கனும்.. என்று ஆடம்பித்த சுதா பின் தொடர் கதையாக குழந்தைக்கு இடுப்பு சங்கிளி கூட தங்கத்தில் வேண்டும் என்று கேட்ட போது.. “ என்னடா என்று தான் யோசித்தாளே தவிர.. அப்போது கூட தவறாக நினைக்கவில்லை..

ஆனால் அதற்க்கு கெளசல்யா சொன்ன… “ நானே உன் அண்ணன் கிட்ட சொல்லாம இந்த சொத்தை வாங்கிட்டோமே என்று பதை பதைச்சிட்டு இருக்கேன்… நீ வேற…”

பாவம் யாருமே பேச்சு மூம்முரத்தில் செந்தாழினி.. வந்ததை கவனிக்கவில்லை..

கெளசல்யா பேச்சுக்கு மகிளா கூலாக.. “ சொல்லாதிங்க…” என்றதோடு..

“ஏன் சொல்லனும்..?” என்று வேறு கேட்டதில் தான் செந்தாழினிக்கு அப்படி ஒரு ஆத்திரம்..

அவள் ஏற்கனவே மகிபாலனுக்கு இதை பற்றியான விசயம் தெரியாது என்று கணித்தாள் தான்.. ஆனால் இவர்களை பற்றி..

அதுவும் நேற்று பாலன் மகிளா கல்யாணத்தில் பணத்தை கொண்டும் கவலைப்பட்டான் தான்.. இப்படி இருக்க இன்று வங்கி கணக்கில் எவ்வளவு வந்து இருக்கும் என்று அவள் சொத்து கணக்கு தெரியாத அளவுக்கு அவள் விவரம் இல்லாதவள் இல்லையே..

இவர்களுக்காக மகிபாலன் தன் கனவான ஐ.ஏ. எஸ் படிப்பை விட்டான்.. ஆம் அவனுக்குமே அந்த படிப்பை பற்றிய கனவை வேந்தாந்தோடு கனவு கண்டான் தான்..

ஆனால் அனைத்து முடிவும் கெளசல்யா எடுக்கும் வீட்டில் மகனின் படிப்பு வேலையின் முடிவுமே. மகிபாலன் சார்பாக அவன் அன்னை தான் எடுத்தது..

பின் ஐடி உத்தியோகம்.. கணவன் இறந்த பின் அதுவுமே விட்டு அப்பாவை வேலையை தொடர்கிறான்.. ஏன் மகிபாலனுக்கு செந்தாழினி மனைவி ஆனது கூட கெளசல்யாவின் முடிவு தானே…

இப்படி வீட்டிற்க்காக அனைத்தையும் விட்டவனுக்கு இவர்கள் உண்மையாக கூட இருக்கவில்லையே… கெளசல்யா எப்படி சொல்லாது விடுவது..

அதோடு .. “ நீ கேட்கும் ஆஸ்பிட்டல்.. நீ கேட்கும் நகைகள் எல்லாத்துக்கும் பணம் எங்கு இருந்து வந்தது என்று கேட்டால், நான் என்ன பதில் சொல்வது..” என்று கேட்டதற்க்கும் இரு மகள்களும் தத்தம் இணை செய்வதாக சொல்லி விடுங்க என்று விட்டனர்..

இதை கேட்ட செந்தாழினி தான் வாயின் மீது கை வைத்து கொள்ளும் படி ஆகி விட்டது..

இப்போது மகள்கள் சொன்னது போலவே கெளசல்யா சொன்னதை கேட்ட வாறே தான் பாத்திரத்தை வைத்தவள்.. தனக்கு உண்டான காபியை எடுத்து கொண்டு கூடத்திற்க்கு வந்தாள்.. வந்தவள் பார்த்தது காபி குடிக்காது டீப்பாவின் மீது இருந்ததை கவனித்த செந்தாழினி..

“முதல்ல காபியை குடிச்சிட்டு அப்புறம் எது என்றாலும் பேசிக் கொள்ளுங்கள்..” என்று சொன்னவள் கணவன் எதிர் இருக்கையில் அமர்ந்து கொண்டு தன் காபியை குடிக்க தொடங்கினாள்..

அதே போல மகிபாலனும் மனைவி சொன்னதுமே தன் காபியை கையில் எடுத்து குடித்து கொண்டே…

“நம்ம முறையை நம்ம தான் செய்யனும் ம்மா..” என்று சொன்னவன்..

பின்.. “ அதே போல நமக்கு என்ன வசதியோ.. அது தான் செய்யனும்..” என்று விட்டான்.. பாவன் அவனுக்கு அம்மாவின் வங்கிக்கு இன்று தான் லட்சத்தில் பணம் வந்தது தெரியாது சொன்னவன்..

பின் செந்தாழினியிடம்… “ கிளம்பு ஆழி.. மகிளா கல்யாணத்திற்க்கு ஒருத்தருக்கு பத்திரிக்கை வெச்சிட்டு வரனும்..” என்றதில் கெளசல்யா மற்றது எல்லாம் மறந்தவளாக..

“எல்லோருக்கும் வெச்சாசே மகி.. இன்னைக்கு யாருக்கு வைக்க போறிங்க.. அதுவும் செந்தாழினியை கூட்டிட்டு…” என்ற அன்னையின் பேச்சுக்கு..

“வேதாந்துக்கும்மா..” என்று அம்மாவிடம் சொன்னவன்.. கிளம்பு நானுமே ட்ரஸ் சேஞ்ச் பண்ணனும்..” என்று இடையில் அவன் ஆழியிடமும் பேசினான்..

இந்த வார்த்தையாடல்கள் எல்லாம் அம்மா பிறந்தவர்களை தவிர்க்க எல்லாம் நினைக்கவில்லை.. தன்னால் பேசினான்..

ஆனால் அது அவர்களுக்கு குற்றமாக தெரிந்தது.. அதுவும் செந்தாழினி கணவன் பேச்சுக்கு தங்கள் அறைக்கு போகும் போது..

“டைம் ஆகுது போகனும் என்றால் சீக்கிரம் போயிட்டு வரனும்.. சீக்கிரமா நீங்களுமே ட்ரஸ் சேஞ்ச் பண்ண வாங்க..” என்று விட்டு சென்றதில் , மற்றவர்களுக்கு அது உதாசீனமாக தெரிந்தது போல.

கெளசல்யா அப்போது கூட விடாது… “ வேந்தாந்த் எனக்கு தான் தெரியும்.. செந்தாழினிக்கு தெரியுமா என்ன.? கொஞ்சம் இரு.. புடவை மாத்திட்டு நானே வரேன்…”

அது என்னவோ கெளசல்யாவுக்கு குடும்ப முடிவுகள் அவர் தான் எடுக்க வேண்டும்.. மற்றவர்கள் எடுத்தால், தன்னை மதிக்கவில்லை என்பது போல தான் உணர்வார்.. சின்ன விசயமான தினமும் சமையல் கூட முடிவாக தான் அவருக்கு இருக்க வேண்டும்..

கெளசல்யா பேசியதை கேட்டு கொண்டே தான் செந்தாழினி தன் புடவையின் மடிப்பை சரி செய்து கொண்டே வெளியில் வந்தது.

வந்தவள்.. “ எனக்கு வேதா ப்ரோவை தெரியும் அத்தை.. “ என்று தன் மாமியாருக்கு பதில் அளித்தவள்..

பின் கணவனை பார்த்து.. “ டைம் ஆகுதுப்பா..” என்று தன் கையில் கட்டி இருந்த கை கடிகாரத்தையும் காண்பிக்க.. மனைவியின் பேச்சை கேட்டவனாக அவனுமே அவர்கள் அறைக்கு செல்ல.. செந்தாழினி பின் பக்கம் தோட்டத்திற்க்கு சென்றவள் அவள் உடுத்தி இருந்த புடவைக்கு ஏற்றதான லைட் ரோஸ் நிறத்து பூவான பெங்களூர் ரோஜாவை எடுத்தவள் அதை சூடியும் கொண்டு மீண்டும் வீட்டினுள் நுழையும் சமயம் மகிபாலனும் தங்கள் அறையில் இருந்து வெளி வர. இருவரும் சொல்லி கொண்டு சென்றவர்களையே பிரம்மை பிடித்தது போல பார்த்து கொண்டு இருந்தனர்.. கெளசல்யாவும் அவரின் இரு மகள்களும்…

கணவனின் இரு சக்கர வாகனத்தில் அவன் தோள் பற்றி செல்லும் அந்த பயணத்தை செந்தாழினி அவ்வளவு ரசித்தாள்..

அந்த அவளின் ரசனையின் விளைவாக அவளின் முகத்தில் ஒரு மலர்ந்த ஒரு புன்னகை.. அவளின் அந்த புன்னகையை மகிபாலன் கண்ணாடி வழியாக ரசித்தான்…

பின் காற்றில் பறக்கும் தன் முடியை காதின் பின் இழுத்து விட்டவளின் முகத்தில் இப்போது சிரிப்பு இன்னும் கூடியது.. மகிபாலனின் ரசனையும் தான்..

அவனுமே சிரித்த முகமாக. “ என்ன ஆழி சிரிக்கிற…?” என்று கேட்டதும் செந்தாழினியின் பார்வை சட்டென்று வண்டியின் கண்ணாடியை தான் பார்த்தது.. அப்போது இருவரின் கண்ணும் சந்தித்துக் கொள்ள.. இருவருக்குமே விளக்க முடியாதது பார்வை மட்டும் இல்லாது இனி அவர்களுக்கு உண்டான உறவும் தான் என்று சொல்லாமல் சொன்னது அந்த பார்வையின் வீரியம்..

பின் ஒரு நிலைக்கு மேல் விளக்கி கொண்டு தானே ஆக வேண்டும்.. அதுவும் வண்டியை செலுத்தி கொண்டு இருக்கும் மகிபாலன்.. விலக்கினாலுமே அவ்வப்போது பார்வை இட்டுக் கொண்டு தான் இருந்தான்..

பெண்ணவள் சிரித்து கொண்டவளின் புன்னகை இன்னுமே விரிந்தது.. அதை தானே முதலில் கேட்டான்.. இப்போது கேள்வியை மாற்றியவனாக.

“சொல்லிட்டு சிரித்தா நானுமே சிரிப்பேன் தானே…” என்றதற்க்கு.. ஒன்னும் இல்ல என்று தலையாட்ட வேதாந்த் தங்கி இருந்த கவர்மெண்ட் இருப்பிடமும் வந்து விட..

பின் தங்களை நோக்கி கை நீட்டி வர வேற்ற வேதாந்தை நோக்கி இவர்கள் சென்றது பின் பேசியது என்று இருந்தார்கள்.. பேசியது என்றால் மகிபாலனோடு செந்தாழினி தான் வேதாந்திடம் அதிகம் பேசியது எனலாம்.. இருவரின் பேச்சையும் ஒரு மென் சிரிப்புடன் கேட்டு கொண்டு இருந்தான் என்பதை விட ரசித்து கொண்டு இருந்தான் சரியாக இருக்கும்..

அப்படியாக இருந்தது இருவரின் பேச்சுக்கள்… இதில் மகிபாலன் தன் மனைவியின் பேச்சை விட தன் நண்பனின் சிரித்த முகம் கலகலப்பா பேச்சுக்கள் அதை தான் அதிகம் ரசித்தான்.. அதிசயத்து அவனை பார்த்து கொண்டு இருந்தான்..

கடைசியாக… விடை பெறும் போது தான் மகிபாலன் மகிளாவின் திருமண பத்திரிக்கையை எடுத்து நண்பனிடம் நீட்டியது..

“ராகவ் ட்ரையினிங்க போய் இருக்கான் என்று தெரியும்.. நீ கண்டிப்பா வந்துடனும்.. என் கல்யாணத்தில் அவசர வேலை என்று சாப்பிடாமல் போனது போல எல்லாம் போக கூடாது.. முன்னே இருந்து நீ தான்டா எல்லா வேலையும் செய்யனும்..” என்று சொல்லி வேதாந்திடம் பத்திரிக்கை கொடுக்க.

இதை கேட்ட செந்தாழினி சத்தமாக சிரித்தாள்.. அவளாள் சிரிப்பை அடக்க முடியவில்லை.. கண்ணீர் நீர் வழியும் அளவுக்கு அவளின் சிரிப்பு இருந்தது.

மகிபாலன் தான் நான் என்ன ஜோக்கா பேசினேன்.. என்று இவள் இந்த அளவுக்கு சிரிக்கிறாள் என்று மனைவியை முறைத்து கொண்டே அங்கு இருந்த தண்ணீரை கொடுத்து..

“குடி..” என்று சொல்ல சிரிப்பு ஊடே தண்ணீரை குடித்து முடித்து விட்டவளிடம்..

“இப்போ எதுக்கு இப்படி சிரிக்கிற..?” என்று கேட்டவனிடம் செந்தாழினி அதே சிரிப்புக்கு இடையில்..

“இல்ல.. நான் உங்க வீட்டு பெண்ணை கல்யாணம் செய்துக்குறேன் மச்சான் என்று சொன்னவன் கைய்யிலேயே பத்திரிக்கை கொடுத்து நீ தான் முன்ன இருந்து இந்த கல்யாண வேலை எல்லாம் செய்யனும் என்று சொல்றிங்க பாரு.. யப்பா. முடியலடா சாமீ…” என்று சொல்லி விட்டு இன்னுமே விழுந்து விழுந்து சிரித்தவளை வேதாந்த் மனம் நிறைவோடு பார்த்து கொண்டு இருக்க..

மகிபாலனோ யோசனையுடன் பார்த்தவன்… “என்னை நீ ரொம்ப நாளாவே லவ் பண்றியா ஆழி…” என்று மனைவியின் பெயரை தன் குரலில் தேக்கி கேட்டவனை சட்டென்று தன் சிரிப்பு விடுத்து பார்க்க..

இப்போது வேதாந்தை.. “ உன் விசயம் என்ன…?” என்று கேட்க..

வேதாந்தோ செந்தாழினியை பார்த்து கொண்டே.. “ அந்த ஐந்து பேரில் நானும் ஒருத்தன்..” என்று சொன்னவனிடம்..

மகிபாலன்.. “ இன்னொருத்தன் உன் தம்பி ராகவா..?” என்று கேட்டான்..













 
Active member
Joined
Jun 23, 2024
Messages
71
கௌசல்யா எவ்வளவு மோசமான ஜென்மம் 😡 😡 😡 இந்த ரெண்டு கேடு கெட்ட பொண்ணுங்க பேச்சை கேட்டு பையனுக்கு துரோகம் பண்றாங்க 😣 😣 😣 😣 😣

ஆழி இதுங்க செய்யுற துரோகத்தை கண்டு பிடிச்சிட்டா 🧐🧐🧐 என்னைக்கு வெடிக்க போறாளோ தெரியல 🤧🤧🤧🤧

ஆழி இவ்வளவு இயல்பா இருந்து அவனுக்கு காட்டி கொடுத்துட்டியே 🤣🤣🤣🤣 உன் காதல் கதையை கண்டு பிடிச்சிடுவான் போல 😉 😉 😉

எல்லாரும் ஐஏஎஸ் கூட்டணி தானா 🤔 🤔 🤔 🤔 🤔
 
Last edited:
Active member
Joined
May 11, 2024
Messages
167
ஆழி அவளை புரிஞ்சிக்கிட்டவங்க மத்தியில் மட்டும் மனசு விட்டு சிரிக்கறா
 
Active member
Joined
Jul 13, 2024
Messages
165
Arumai.
“இல்ல.. நான் உங்க வீட்டு பெண்ணை கல்யாணம் செய்துக்குறேன் மச்சான் என்று சொன்னவன் கைய்யிலேயே பத்திரிக்கை கொடுத்து நீ தான் முன்ன இருந்து இந்த கல்யாண வேலை எல்லாம் செய்யனும் என்று சொல்றிங்க பாரு.. யப்பா. முடியலடா சாமீ…” என்று சொல்லி விட்டு இன்னுமே விழுந்து விழுந்து சிரித்தவளை வேதாந்த் மனம் நிறைவோடு பார்த்து கொண்டு இருக்க..

Intha para puriyalaiyae ma.
 
Last edited:
Active member
Joined
Jun 1, 2024
Messages
105
அம்மாவும் பொண்ணுங்களும் எவ்வளவு பெரிய திருட்டு வேலை பார்க்குதுங்க 😡😡😡😡😡😡

இவ கல்யாணத்துக்கு பணம் இல்லனு அவன் கஷ்டப்படுறான் இதுங்க அவனை வச்சு அவனுக்கு தெரியாம லட்ச லட்சமா பணத்தை ஆட்டைய போடுதுங்க..... 😈

கௌசல்யா 🤬 உங்க மருமகன்க அவ்வளவு பெரிய தாராள மனசுக்காரங்க 😏😏😏 பொண்டாட்டியை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகக் கூட மச்சான் தலையில கட்டிட்டு போறானுங்க 😤😤😤😤

செந்தாவோட அதிரடிக்காக வெயிட்டிங் 🤩
 
Active member
Joined
Aug 16, 2024
Messages
267
எப்போது தான் அந்த சஸ்பென்ஸை உடைக்க போறீங்க.
 
Member
Joined
Jul 23, 2024
Messages
31
கௌசல்யா அவங்க பேச்ச கேட்கல அவங்க அவங்களோட பொண்ணுங்களவிட மோசம் வெற எதோ அவங்க சுமதி கல்யாணத்துக்கு முன்னாடி செய்துஇருகாங்க ஒரு வேளை பணத்தை செலவு பண்ணிடங்களா
 
Active member
Joined
May 12, 2024
Messages
199
Sentha ithai summa vida koodathu…. Pinam thinni kazhuvugal intha moonum… ippave ippdi irukkunga vekkam kettu… konjam panam vandha… ava veetu kaasulaye vazhthuttu avalaiye velaikakari pola treat pannuthunga…
 
Top