Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Eengum Geetham...19

  • Thread Author
அத்தியாயம்…19

கணவனின் கேள்விக்கு ஆம் என்று தலையாட்ட. சட்டென்று படுக்கையில் இருந்து எழுந்து கொண்ட மகிபாலன்.. கழட்டி வைத்திருந்த சட்டையை எடுத்து அதை மாட்ட முயல…

அதை செய்ய விடாது அவனிடம் இருந்து சட்டையை பரித்து கொண்ட மனைவியையும் இப்போது மகிபாலன் முறைத்து பார்த்தவன்..

“நீ கொடு ஆழி.. நீ கொடு.. அவனை என்ன செய்யிறேன் என்று பாரு.. ட்ரையிங்க போனா என்ன கலெக்ட்டர் தான் ஆனா என்ன..? அவனை சட்டையை பிடித்து கேட்காது விட மாட்டேன்.. முதலில் நான் அவனை சும்மா விட மாட்டேன்..” என்று பேசியவனின் குரலில் அத்தனை ஆவேசம்..

“சும்மா இருப்பா சும்மா இருங்க… அவங்க தப்பான எண்ணத்தில் எல்லாம் என்னை கடத்தலப்பா…?” என்றவளை முறைத்து பார்த்தவன்..

“எனக்கு தெரியும்.. ஆனா எந்த காரணமா இருந்தாலுமே இது தப்பு தான்..” என்று கோபமாக சொல்லி கொண்டு வந்த மகிபாலன் ஏதோ ஒரு நினைவு வந்தவனாக..

“அப்போ வேதாந்த்.. வேதாந்துமா..?” என்று நம்ப முடியாது அதிர்ந்து போய் கேட்டவனின் கை பிடித்து இழுத்து மீண்டுமே கட்டிலின் மீது அமர வைத்தவளை முறைத்து பார்த்த கணவனிடம்..

“ப்ளீஸ் அவசரப்படாதிங்க.. இப்படி நீங்க கோபப்பட்டா நான் என்ன என்று சொல்லுவேன்.. நீங்க சொன்னது போல என்ன காரணமா இருந்தாலுமே, ஒரு பெண்ணை கடத்த கூடாது தான்.. வேதாந்த அண்ணாவை பற்றி தெரிந்த உங்களுக்கு அவர் தம்பியான ராகவ் அண்ணாவை பற்றி கூட நல்லா தெரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்..” என்று செந்தாழினி சொல்லும் போதே..

இத்தனை நேரம் கோபமாக என்ன ஏன் தடுக்குற என்பது போல மனைவியை பார்த்து கொண்டு இருந்த மகிபாலன்.. அவளின் இந்த பேச்சில் அமைதியாகி தான் போனான்..

காரணம் வேதாந்த் அன்னையின் தாக்கமே.. அத்தனை மென்மையானவர்கள் அவர்கள்.. காசு பணம்.. இதை எல்லாம் அவர்கள் பெரியதாக பார்த்தது கிடையாது…

குடும்பம் தன் கணவன் தன் பிள்ளைகள்.. இது தான் அவர்களின் உலகமே… நல்லவர்களுக்கு தான் சோதனை கொடுப்பான் என்பது போல் தான் அவர்களுக்கு தொடர் சோதனையாக முதலில் வேதாந்தின் அப்பாவுக்கு கிட்னி பெயிலியர்… வேதாந்த அன்னை தான் வேதாந்த் தந்தைக்கு தன்னுடையதில் ஒன்றை கொடுத்தது… அதே தெருவில் இரண்டு வீடு அவர்களுக்கு இருந்தது… அதில் ஒன்றை விற்று தான் நல்ல மருத்துவம் பார்த்தது கணவனுக்கு..

ஒரளவுக்கு உடல் தேறி வரும் வேளையில் தான் வேதாந்த அப்பா இறந்தது.. பாவம் அதிலேயே வேதாந்தின் அன்னை ஒடிந்து அமர்ந்து விட்டார்..

தொடர் இடியாக இன்னொரு வீட்டின் மீது கடன் ஒன்றுமே புரியவில்லை அந்த பெண்மணிக்கு… என்ன செய்வது என்று தெரியாது அமர்ந்து விட்டார்.

பின் வேதாந்த தான் அந்த வீட்டை விற்று கடனை அடைத்து என்று. பின் இங்கு இருக்க முடியாது சென்னை சென்றது.

சென்னை சென்றுமே அவர்களின் சோதனை காலம் முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்..

அடுத்த சோதனையாக வேதாந்த அன்னைக்கு உடல் நிலையில் சோர்வு.. அப்போது தான் வேதாந்த் ப்ரிலிம்ஸ் தேர்வுக்கு அவன் தன்னை தயார் செய்து கொண்டு இருந்த சமயமும் அது… ராகவ் மதுரையில் படித்து கொண்டு இருக்க..

வேதாந்த் அன்னையோ தன் உடல் நலக்குறைவு பற்றி ஒன்றுமே தன் மகன்களிடம் சொல்லவில்லை.. எங்கு தன்னால் தன் இரண்டு மகன்களின் படிப்பு கெட்டு விடுமோ என்று…

மதுரையில் படித்து கொண்டு இருந்த ராகவுக்கு அவனின் அன்னையின் சோர்வு தெரியவில்லை என்றாலுமே, வேதாந்துக்கு தெரிந்தது தான்..

ஆனால் அதை வேதாந்த் உடல் சோர்வு என்று தெரியாது உள்ளத்து சோர்வு என்று நினைத்து விட்டான்.. என்ன தான் கணவனுக்காக ஒரு வீடு கடனுக்காக ஒரு வீடு என்று விற்று பிள்ளைக்காக சென்னைக்கு வந்தாலுமே, மனது…

அந்த மனது ஒன்றுக்கு இரண்டு வீடு இருந்து அதை விற்று விட்டு இன்று வாடகை வீட்டில் இருக்கும் அந்த நிலை வேதனை அளிக்க தானே செய்யும்.. ஒரு பொருள் தன்னிடம் இல்லை என்று சொல்லும் வார்த்தையை விட.. இருந்தது என்று சொல்லும் வார்த்தைக்கு வலி அதிகமே..

அது என்று புரிந்து கொண்ட வேதாந்த்.. “ம்மா கவலை படாதிங்க. இன்னும் ஒரே வருடம் தான் ம்மா.. நான் கலெக்ட்டர்.. உங்க மகன் கலெக்கட்டர் ம்மா.. அதே போல தான் ராகவும் இன்னும் மூன்று வருஷம் கழித்து கலெக்கட்டரா உங்க முன் வந்து நிற்பான்..

சொந்த வீடு பணம் இருந்தா வாங்கிடலாம் ம்மா ஆனா உங்க இரண்டு மகனுமே கலெக்கட்டர்… ஒரு மாநிலத்தை ஆளப்போறாங்க.. இந்த பெருமை எத்தனை பேருக்கு கிடைக்கும்மா…” என்று வேதாந்த் தன் அன்னையின் கை பிடித்து கொண்டு சொன்ன போது அந்த இடத்தில் மகிபாலனுமே இருந்தான் தான்..

தன்னை ட்ரெயின் ஏற்ற வரும் போது மகிபாலன்.. “அம்மாவுக்கு உடம்பு சரியில்லாது இருக்க போகுது வேதாந்த். அப்பாவுக்கு கிட்னி கொடுத்தது.. ஆறு மாசம் ஒரு முறை செக்கப்புக்கு போயிட்டு வராங்க தானே…” என்று மகிபாலன் அன்றே சந்தேகப்பட்டு கேட்டான் தான்..

சென்னையில் தான் இன்டெர்நேஷனல் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்தது.. அதன் தொட்டு கேட்க..

“ அது எல்லாம் ஒன்னும் இல்லேடா.. லாஸ்ட் வீக் கூட ஓலா புக் பண்ணி கொடுத்தேன் போயிட்டு வந்தாங்க. எல்லாம் நார்மல் தான்..”

அது போலான பரிசோதனையில் அவர்கள் கிட்னி நன்றாக உள்ளதா. அது தெரிய மட்டும் தான் பரிசோதனை செய்வது.. பின் பொதுவாக பி.பி சுகர் என்று இருக்குமே தவிர..

உடலின் மற்ற பாகம் எப்படி உள்ளது என்ற பரிசோதனை எல்லாம் செய்ய மாட்டார்கள்.. ஆனால் ஒன்று தனக்கு இது போல ஒரு சில பிரச்சனை இருக்கிறது என்று மருத்துவரிடம் சொன்னால், அதற்க்கு உண்டான பரிசோதனை எழுதி கொடுப்பார்கள் தான்.

ஆனால் ஏற்கனவே மகன்கள் படிப்பையும் பார்த்து பணத்திற்க்கும் கஷ்டப்படுகிறார்கள். இதில் தான் வேறு ஏதாவது சொல்ல போய் அந்த டெஸ்ட் இந்த டெஸ்ட் என்று எழுதி கொடுத்து பணம் செலவு ஆகப்போகிறது என்று தனக்கு இரண்டு படிக்கட்டு ஏறினாலே மூச்சு வாங்குவதும்..

பின் சாதாரணமாக இருக்கும் போதே அளவிற்க்கு அதிகமாக மூச்சு வாங்குவதை சொல்லாது விடுத்து விட்டார்..

ஏற்கனவே கணவனின் மருத்துவத்திற்க்கு என்று நிறைய செலவு செய்து விட்டோம்.. தனக்கும் செய்தால் மகன்கள் என்ன தான் செய்வார்கள்..

வீடு விற்ற பணத்தில் கடன் போக மீதம் இருக்கிறது.. அது இருக்க தொட்டு தான் மகன்களின் படிப்பு பணம் பிரச்சனை இல்லாது செல்கிறது.. இதில் எனக்கு ஒன்று என்றால் அதை எடுத்து தான் செய்வார்கள்.. பின் அவர்களின் படிப்பு கெட்டு விடும் என்று மறைத்து விட்டார் வேதாந்தின் அன்னை..

பாவம் அது தெரியாது… வேதாந்த் மகிபாலனிடம்… “ அது எல்லாம் பிரச்சனை இல்லை மச்சான்… என்ன தான் இருந்தாலுமே நம்ம நிலையை விட்டு கொஞ்சம் கீழே இறங்கி வருவது கொடுமை தானே மச்சான்..

அதுவும் நாங்களாவது படிப்பு என்று வெளியில் போகிறோம் வருகிறோம்.. எங்க கவனம் மாறுது.. ஆனால் அம்மா. சொந்தம் போன் செய்து துக்கம் விசாரிப்பது போல விசாரிப்பது..

அதோடு இப்போ அக்கம் பக்கம் இருப்பவங்க முன் எங்கு இருந்திங்க என்று நோண்டி கேட்கிறதில் அம்மா கொஞ்சம் அப்போ அப்போ அப்சட்டும் ஆகிடுறாங்க.” என்ற வேதாந்த சொன்னது சரியாக இருக்க.

மகிபாலனும் விட்டு விட்டான்.

அதன் விளைவு தொடர் இருமல் தூக்கம் இன்மை என்று இருக்க வேதாந்த அடம் பிடித்து அம்மாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றான்..

அதுவும் பக்கத்தில் இருக்கும் சின்ன டிஸ்பென்சரி என்றால் தான் வருவேன் என்று அவன் அன்னை சொல்லி விட. சரி என்று அழைத்து சென்றான்..

ஆனால் அங்கு இவர்களுக்கு ஒரு சில டெஸ்ட் எடுத்து வர சொல்ல. அதற்க்கே வேதாந்துன் அன்னை..

“நான் சொல்லலே.. ஆஸ்பிட்டல் வந்தாலே பணத்தை புடுங்கிடுவாங்க..” என்று அங்கலாய்த்து கொண்டு தான் அந்த ரெஸ்ட் எல்லாம் செய்தது.

ஆனால் அது கொடுத்த ரிஸல்ட்… வேந்தாந்த் அன்னை சாந்திக்கு…

லங்கஸ் இருபது சதவீதம் தான் வேலை செய்கிறது.. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் லங்கஸ் மாற்றுஅறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்..

அதோடு அங்கு இருக்கும் ஒரு மருத்துவமனையின் பெயர் சொல்லி.. அங்கு போங்க மற்றது சொல்வாங்க என்றதில் சாந்தி எனக்கு எதுவுமே வேண்டாம் என்று சொல்ல.

வேதாந்த் தான்.. “ நாங்க படிச்சு முடிச்சு எங்க சந்தோஷத்தை கொண்டாட நீங்க எங்க கூட இருக்கனும்மா…” என்று சொன்ன மகனின் கையை பிடித்து கொண்ட அன்னை..

ஒன்றே ஒன்று தான் சொன்னது… “ எந்த காரணம் கொண்டும் உங்க படிப்பையும் உங்க கனவையும் விட்டு விட கூடாது.” என்பது தான்.. அன்னைக்கு சத்தியம் செய்து கொடுத்த பின் தான் வேதாந்த அன்னையை காப்பற்ற அனைத்து ஏற்பாட்டையும் செய்தான்..

இது வரை தான் மதுரையில் இருந்த மகிபாலனுக்கு தெரிந்த விசயம்.. அதன் பின் என்ன என்று யோசிக்கும் அளவுக்கு கூட ஏன் பேசியில் விசாரிக்கும் அளவில் கூட இங்கு இவன் வீட்டின் நிலை சரியில்லாது போயின.. அந்த நிலையில் கூட மகிபாலன் ராகவ் கல்லூரிக்கு சென்று அவனிடம் ஐந்து லட்சத்தை கொடுத்தவன்..

“இன்னைக்கு நையிட் நீ சென்னைக்கு போற தானே.. என் நிலை உனக்கு தெரியும்.. ஆனாலுமே சொல்றேன்.. அங்கு நிலை மீறினா எனக்கு சொல்.. நான் கண்டிப்பா ஏதாவது செய்வேன்..” என்று தான் சொன்னது.

அடுத்து ஒரு வாரம் கழித்து அவன் கேள்விப்பட்ட விசயம்.. சாந்திக்கு லங்க்ஸ் பொருத்தி விட்டது என்ற செய்தியை தான்..”

அதன் பின் அதை பற்றி மகிபாலன் யோசிக்கவில்லை..

ஆனால் மகிபாலன் யோசிக்காத விசயத்தை மகிபாலன் தன் கல்லூரி வளாகத்தில் பார்த்த நொடி ராகவ்வை இன்னுமே கவனிக்க ஆரம்பித்து விட்டாள்..

அதில் தான் செந்தாழினி ராகவிடமும் அவன் நண்பர்களிடமும்.. “ ஏன் ராகவ் அண்ணா ஒரு மாதிரி சோகமா இருக்காங்க..? என்ன விசயம்..?” என்று கேட்டதற்க்கு யாருமே செந்தாழினியிடம் உண்மையை சொல்லவில்லை.

சொல்லி இருந்தால் நொடியில் அவர்கள் விசயத்தை அவள் தீர்த்து வைத்து இருந்து இருப்பாள்..

ஆனால் சொல்லவில்லை.. பணம் இருப்பவர்களுக்கு பணம் இல்லாத பிரச்சனை எங்கு இருந்து தெரிய போகிறது என்று நினைத்து விட்டார்கள் போல.. இதில் நடுவில் ராகவ் சென்னை சென்று அன்னையின் நகைகளையும் மதுரைக்கு கொண்டு வந்தான்..

காரணம் சாந்தி நகைகள் அனைத்துமே செய்தது.. அதை சென்னையுல் விற்கும் போது பாதி விளைக்கு தான் எடுப்போம் என்று விட..

மதுரையில் இவர்களுக்கு தெரிந்த குடும்பத்தினர்.. “ நானே வாங்கி கொள்கிறேன்.. உங்க அம்மா டிசைன் எல்லாம் நன்றாக இருக்கும் என்றதில்.

சென்னையில் இருக்கும் அம்மாவிடம் இருந்து நகைகள் வாங்க் மதுரையில் விற்று மகிபாலம் கொடுத்த அந்த ஐந்து லட்சத்தோடு மதுரையில் வங்கியில் இருந்த தொகை என்று அனைத்தும் சேர்ந்து ராகவ் பஸ்ஸில் கொண்டு சென்ற போது அதை தொலைத்து விட்டதில் ராகவ் மொத்தமாக இடிந்து போய் உட்கார்ந்து விட்டான்..

என்ன செய்வான்.. பதிவு செய்து வைத்திருந்த லங்கஸ் கிடைத்து விட்டது.. உடனே பணம் கட்டுங்கள் உங்க அம்மாவுக்கு ஆப்பிரேஷன் செய்து விடுவோம் என்று மருத்துவர் சொன்னதுமே ராகவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை..

இந்த விசயத்தை தன் அண்ணன் வேதாந்துக்கு கூட ராகவ் சொல்லவில்லை. காரணம் படிப்பு கூட அம்மாவை அருகில் இருந்து பார்த்து கொள்வது.. பணத்தை புரட்டியது என்று அனைத்துமே வேதாந்த் தான் பார்த்து கொண்டது..

வேதாந்த் ராகவ்வை செய்ய சொன்னது இதை தான்.. ..

“மகி பணம் கொடுப்பான்.. நகை விற்று கொண்டு வா பேங்கில் இருக்கும் பணத்தையும் கொண்டு வா.” . என்று சொன்ன வேதாந்த் தம்பியிடம் அத்தனை பத்திரம் சொன்னான்..

தனிப்பட்ட காரில் அதுவும் தெரிந்த ஒருவரை சொல்லி அவர் காரில் வா ராகவ் பணம் பத்திரம் என்று சொன்ன அண்ணன் பேச்சை கேளாது..

மதுரையில் இருந்து சென்னைக்கு காரில் செல்ல கேட்ட பணத்தில்.. இத்தனை பணக்கஷ்டத்தில் இது ஏன் செலவு.. பஸ்ஸில் கொண்டு சென்று விடலாம் என்று ராகவ் தான் அண்ணனுக்கு கூட சொல்லாது மொத்தம் பதினைந்து லட்சத்தை கொண்டு சென்று தவறவிட்டது.

போலீஸ் கம்பிளையண்ட் கொடுத்து அது வருமா வராதா…? இது தெரியாது இருக்கும் இந்த சமயத்தில் அம்மாவுக்கு ஏதாவது ஆகி விட்டால் என்ன செய்வது என்று ராகவ் தவித்து போய் இருந்த சமயத்தில் தான் ராகவ் பிரண்ட் ஒரு யோசனை சொன்னது.

செந்தாழினி குடும்பம் எத்தனை வசதி என்று இந்த மதுரைக்கே தெரியும்… கடத்தி கொண்டு சென்றால் எத்தனை லட்சம் கேட்டாலுமே கொடுப்பார்கள் என்று சொன்னதற்க்கு ராகவ் முதலில் ஒத்து கொள்ளவே இல்லை தான்..

பின் வேதாந்த் தம்பியை பேசியில் அழைத்து..

“என்ன ராகவ் ஆஸ்ப்பிட்டலில் இன்னும் இரண்டு நாளில் பணத்தை கட்ட சொல்றாங்க. நீ என்ன இன்னும் கொண்டு வந்து கொடுக்கல.. அம்மாவுக்கு உடம்பு இன்னுமே மோசமா தான் ஆகிட்டு இருக்கு.. “ என்றதில்.

ராகவ் நீதி நியாயம் என்பது அனைத்தையும் மறந்து விட்டான்.. தன் அன்னைக்காக எதையும் செய்வேன் என்பது போல் தான் அவனின் நண்பர்கள் சொன்னதை கேட்டு விட்டான்..

அதாவது செந்தாழினியை கடத்தி விட்டார்கள் ராகவ் நட்பு வட்டத்தவர்கள்..

செந்தாழினி அன்றும் கல்லூரி முடிந்து வீட்டிற்க்கு செல்ல வெளி வந்த போது செந்தாழினியிடம் மூன்றாம் ஆண்டு கல்லூரி மாணவன் ஒருவன்..

“ராகவ்வை யாரோ அடித்து கொண்டு இருக்காங்க..” என்று சொன்னதில் செந்தாழினி எதை பற்றியும் யோசிக்காது. எங்கு என்று கேட்டவள் அடித்து பிடித்து பின் கேட் அருகில் சென்ற போது அவளின் பின் பக்கத்தில் இருந்து முன் பக்கமாக ஏதோ ஒரு கட்சீப்பை அவளின் மூக்கில் வைத்தனர். இது மட்டும் தான் அவள் உணர்ந்தது..

யார் எவர் எல்லாம் அவளுக்கு தெரியவில்லை…. விழித்து பார்த்த போது ஒரு வீடு வீட்டில் தன்னை கட்டி வைத்திருப்பதை அவள் உணர்ந்தாள்.. முதலில் பயந்து விட்டாள் தான்..

அதுவும் தன் முன்று பேர் முகமூடி அணிந்து கொண்டு நின்று கொண்டு இருந்தவர்களை பார்த்த நொடி பெண்ணவளுக்கு அப்படி ஒரு பயம்..

தான் எங்கு இருக்கிறோம் என்பது கூட தெரியவில்லை.. தான் இருந்த அறையை சுற்றும் முற்றும் பார்த்தாள்.. பார்த்த வரை அது ஒரு வீடு தன்னை கட்டி வைத்து இருப்பது அந்த வீட்டின் படுக்கை அறை என்பது மட்டும் தெரிந்தது..

பின் நாங்காம் ஒரு நபர்.. மூன்று பேர் இருப்பது போல் தான் அவனுமே முக மூடி அணிந்து கொண்டு வந்து நின்றான்..

நின்றவன் கையில் உணவு பொட்டலம்.. அதை செந்தாழினியிடம் கொடுத்தவன்.

“சாப்பிடு..” என்று சொல்லி இவன் முன் நீட்டினான்… குரல் மாற்றமாக இருக்க வேண்டும் என்று உணவு பொட்டலம் கொடுத்து சாப்பிட சொன்னவன் தன் ஒற்றை விரலை தொண்டை பகுதியில் அமுக்கி கொண்டே தான் பேசியது..

அதில் இருந்து செந்தாழி அறிந்து கொண்டது.. இவன் தனக்கு தெரிந்தவனாக தான் இருக்க வேண்டும்.. அதனால் தான் அவன் குரல் அவனை தன்னிடம் காட்டி கொடுத்து விட கூடாது என்று குரலை மாற்றி பேசுகிறான் என்பது தெரிந்து கொண்டவள்..

தெரிந்தவன் யார் என்ற அலைவரிசையில் தங்கள் கடையில் வேலைப்பார்ப்பவர்கள். தன் வீட்டிற்க்கு வந்து போவோர் உறவு முறையில் உள்ளவர்கள் ஏன் தன் அத்தை மகன்களை கூட இவர்களின் உயரத்திற்க்கு ஒத்து போவோர்களை யோசித்து கொண்டு இருந்தவள்.

தன் கல்லூரியின் பக்கம் அவளின் சிந்தனை துளி கூட செல்லவில்லை.. சென்றது அது எப்போது என்றால், மதியம் சாப்பட்டை வேறு ஒருத்தன் வாங்கி வந்து இவளிடம் தந்த போது அவனின் கையில் வேதாந்த் என்ற பெயர் எழுதி வைத்து இருப்பதை பார்த்தவள்..

“ராகவ் அண்ணா….” என்று அழைத்தவளின் அந்த அழைப்பில் ஒவ்வொருவராக தன் முக மூடியை கழட்ட… ராகவ் சரண் சுரேஷ் கபிலன் என்று நிற்க. ஐந்தாவதாக தன் அம்மா கேட்ட அவர்களின் தந்தையின புகைப்படத்தை எடுக்க்ச் வீடு வந்த போது ஐந்தாவதாக வேதாந்த் அண்ணன் வந்து நிற்க.

இதில் யார் அதிகமாக அதிர்ந்தது என்பது போன்று வேதாந்த் செந்தாழினியை பார்த்து அதிர்ந்தவன்.. தன் தம்பியையும் தம்பி நண்பர்களையும் பார்த்து ..

“என்னடா இது.. அம்மா அங்கு அப்படி இருக்காங்க. நீங்க என்னடா இது… செந்தாழியின் கட்டை அவிழ்த்து விட்ட வாறே கத்தி கொண்டு இருக்க.

ராகவ்.. “ ண்ணா தப்பான எண்ணத்தில் எல்லாம் இல்லேண்ணா.. பணம் தொலைஞ்சிடுச்சி ண்ணா. எங்களுக்கு வேறு வழி தெரியலேண்ணா.” என்று சொல்லி ராகவோடு அவர்களின் நண்பர்களும் வேதாந்தின் காலில் சாஷ்ட்டாங்கமாக விழுந்து விட்டனர்..

அந்த நிலையிலும் வேதாந்த் அதிர்ந்து தான் விட்டான்..

“என்ன பணம் தொலைந்து விட்டதா…?” என்று..

“என்னடா சொல்ற..எப்படி..?” என்று கேட்ட அண்ணனிடம் அனைத்தையும் சொல்லி முடிக்க…

“நாம எந்த நிலையில் இருக்கோம்.. அம்மாவுக்கு இன்னும் இரண்டு நாளில் பணம் கட்டி விடனும்.. இல்லேன்னா அந்த லங்கஸ் மத்தவங்களுக்கு பொருத்தி விடுவேன் என்று மருத்துவமமை நிர்வாகம் சொல்லிட்டாங்க டா.. இப்படி சொல்ற… கடைசி சொட்டு சொல்வாங்கலே.. அது வரை பிரட்டியது தாடா அந்த பணம். அதுவும் மகிக்கு இப்போ எவ்வளவு பிரச்சனை தெரியுமா.? இந்த நிலையிலும் ஐந்து லட்சம் கொடுத்தான் .. ஆனா எல்லாத்தையுமே தொலச்சிட்ட வந்து சொல்ற.” என்று கத்திய வேதாந்த்..

தங்கள் பேச்சை உன்னிப்பாக கவனித்து கொண்டு இருந்த செந்தாழினியை கை காண்பித்து..

“முதல்ல இந்த பெண்ணை இவள் வீட்டில் கொண்டு போய் விட்டுட்டு வாங்க. எல்லா விசயமும் சொல்லி விட்டுட்டு வா. இதனால எந்த பிரச்சனை வந்தாலுமே பரவாயில்லை..” என்று வேதாந்த் சொல்ல.

செந்தாழினி முடியாது என்று சொன்னாள்..






 
Active member
Joined
May 24, 2024
Messages
194
Adeii ragav
Iva PanAm vangi kuduthuta pola
Amma epdi irukanga ipo
 
Active member
Joined
Jun 1, 2024
Messages
105
ராகவ் 😡😡😡😡
பணத்துக்காக கடத்தி இருக்கானுங்க....
அதுக்கு அப்புறம் செந்தாவை ஊர் எவ்ளோ கேவலமா பேசுனாங்க அப்போ கூட எதுவும் சொல்லாம அவன் அவன் வேலையை பார்த்திட்டு இருந்திருக்கானுங்க.... 😤😤😤😤😤😤
 
New member
Joined
Sep 14, 2024
Messages
1
Super the way your write the story..keep going...
please let me know when is the next update..What happened mam.. usually daily you will provide the update but this month I couldn't find the regular update.
 
Active member
Joined
May 12, 2024
Messages
199
Adappavi Raghav… ava kitta kettirukka avale thandhiruppa 🥴🥴🥴
 
Top