Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Eengum Geetham.... 2

  • Thread Author
அத்தியாயம்…2

சுதா பேசியதும் , அதற்க்கு அம்மா சொன்னதையுமே மனதில் நினைத்து கொண்டு தான் மொட்டை மாடியில் பாய் விரித்து படுத்து கொண்டது..

இதோ இதை நினைத்து தான் அவனின் பயமே… அந்த பெண்ணை பிடித்து இருக்கு பிடிக்கவில்லை.. அவள் தப்பு செய்தாளா..? இல்லையா..? அதை எல்லாம் தான்டி… என்ன இருந்தாலுமே ஒரு பெண்ணை நல்ல முறையில் நடத்த வேண்டும்.. அது தான் அவனின் எண்ணம்.. இரண்டு பெண்களுக்கு நடுவில் பிறந்தவனின் சிந்தனை இப்படியாக தான் இருந்தது..

ஆனால் அது சாத்தியமா…? அவனுக்கு தெரியவில்லை.. ஆனாலுமே வீட்டின் சூழல் காரணமாக அந்த பெண்ணை திருமணம் செய்ய சம்மதித்து விட்டான்..

அவனுக்கு தெரியாத பெண் கிடையாது செந்தாழினி…. ஆம் அந்த பெண்ணின் பெயர் செந்தாழினி தான்.. மிக அழகான பெயர் தான்.. பார்க்கவுமே மிக அழகாகவே இருப்பாள்..

முன்பு எல்லாம் அனைத்து விழாவிலும் அவளை பார்க்கலாம்.. முன்பு என்றால் அதிக வருடங்கள் எல்லாம் கிடையாது மூன்று வருடங்கள் முன் தான்..

தங்கள் சாதி சனத்தில் மிகவும் செல்வாக்கான குடும்பம் தான் பாண்டியனின் குடும்பம்.. செந்தாழினி அப்பா பெயர் மருது பாண்டி.. தம்பி பெயர் சரவண பாண்டி..

உறவு முறைகளில் நல்லது கெட்டது என்று அனைத்திற்க்குமே அந்த குடும்பத்தை தான் முன் நிறுத்தி அனைத்தும் செய்வர்.. ஏன் சில சமயம் குடும்ப பிரச்சனைக்குமே தங்கள் சாதியினர் அவரை அழைத்து தான் மத்திசம் செய்து வைக்க சொல்வர்..

மற்றவர்களுக்கு மத்திசம் செய்த குடும்பத்திற்க்கே மத்திசம் செய்யும் நிலை வந்தது மூன்று வருடங்கள் முன்..

செந்தாழினி தான் அந்த குடும்பத்தின் ஒரே பெண் குழந்தை. மருது பாண்டியனுக்கு செந்தாழினி முன் இரண்டு ஆண்மகன்கள்.. அதே போல் தான் மருது தம்பியான சரவண பாண்டியனுக்கும் இரண்டு ஆண்மகன் தான்.

ஏன் அந்த வீட்டின் வெளி இடத்தில் கட்டி கொடுத்த மருதுவின் இரண்டு சகோதரிகளுக்குமே தலா இரண்டு ஆண்மக்கள் தான்..

அதனால் செந்தாழினி அந்த வீட்டின் குலதெய்வம் போல் தான் பார்த்தனர்.. அதை மருது பாண்டியனும், சரவண பாண்டியனுமே அடிக்கடி சொல்வது என்று,.

“எங்க செந்தா தான் எங்க குல தெய்வம்.. “ என்று… சில சமயம்..

“என் அம்மாவே வந்து பிறந்து இருக்கா ,.” என்றும் சொல்ல இவனே கேட்டு இருக்கிறான்..

எந்த கடை திறப்பு என்றாலும், செந்தாழினி கைய்யால் தான் திறப்பார்கள்… அவள் பெரியவள் ஆன நிகழ்ச்சியை இந்த மதுரையே பார்க்கும் படி அப்படி அமர்க்களம் செய்து விட்டார்கள்..

இவனே தன் தந்தையிடம்.. “ என்னப்பா இது… அந்த பெண் நாளை பின் எப்படி வெளியில் போகும்.” என்று கேட்ட போது இதே அன்னை தான் அன்று ..

“அந்த பெண் ஏன் தனியா எல்லாம் போக போகுது.. அந்த பெண் போக வர தனியா ஒரு கார் வூட்டு முன் நிற்க்குமா.. அதை ஒட்ட என்றும் ஒருத்தன் எப்போதும் வீட்டில் நிற்ப்பாங்கலாம்.. பள்ளிக்கு கூட அதுல தான் போய் வரும்.. நம்ம வீட்டு பெண்கள் போல பஸ் ட்ரையினிலா போக போகுது… முதல்ல அந்த வீட்டு பெண்ணை ஒருத்தன் பார்த்துட்டு இந்த ஊரில் இருந்துட தான் முடியுமா..?

அம்மா சொன்னது ஒரு வகையில் அனைத்துமே உண்மை தான்.. தனியாக பார்க்க முடியுமா என்று அம்மா கேட்ட போதே.. அப்போதே நினைத்தான். நான் பார்த்து இருக்கேன் பேசியும் இருக்கேன்னே என்று…

ஆம் செந்தாழினியை நம் மகி பாலன்… ஒரு கல்யாணத்தின் போது பார்த்து இருக்கிறான்.. அப்போ செந்தாழினிக்கு ஒரு பதினொன்று வயது இருக்கும்..

நெத்தியில் நெத்தி சுட்டி முதல் காலில் தங்க கொலுசு வரை தங்கத்திலேயே தான் அனைத்தும் பூட்டிக் கொண்டு தன் குடும்பம் தங்க நகை வைத்து இருக்கும் குடும்பம் என்பதை தெரியப்படுத்தும் வகையாக தான் அவள் உடலில் தங்கம் ஜொலித்து கொண்டு இருந்தது..

தங்க தேட் போல் தன் அன்று அந்த திருமண வாசலில் வெளியில் நின்று கொண்டு வெளியே வெளியே எட்டி எட்டி பார்த்து கொண்டு இருப்பவளை அப்போது தான் அந்த திருமண மண்டபத்திற்க்குள் நுழைந்த இவன் கவனித்தது..

அப்போது மகிபாலன் கல்லூரியின் இறுதி ஆண்டில் இருந்தான்.. இத்தனை நகைகள் போட்டு கொண்டு வெளியில் நிற்கிறாளே என்று தான் இவளை பார்த்ததுமே இவன் உள்ளே போகாது இவனுமே அந்த மண்டப்பத்தின் நுழை வாயிலின் இந்த ஒரம் நின்று கொண்டான்.

செந்தாழினியை நகை இல்லாது எல்லாம் பார்க்க முடியாது.. அவளே ஒரு நகை கடை போல தான் எப்போதுமே வலம் வருவது… ஆனால் இன்று இன்னும் அதிகம் தான் போட்டு இருக்கிறாள் என்று அவளை பார்த்து கொண்டே நினைத்தான்…

அவள் மண்டத்திற்க்குள் போகாது நின்று கொண்டு இருந்ததிலும்.. இவனின் அம்மா மண்டபத்தின் உள் இருந்து. பேசியின் மூலம்

“என்ன மகி இன்னுமா நீ வரல.” என்று கெளசல்யா கேட்கும் போதே மண்டபத்தில் அப்போது ஒலித்து கொண்டு இருந்த பாடல் அம்மாவுக்குமே தன் பேசியின் மூலம் கேட்டு விட்டது போல…

“வந்துட்டியா மகி.. சரி..” என்று அவர் இவன் பதிலை எதிர் பாராது வைத்து விட்டார்...

மகிபாலன் தான் இன்னுமே இங்கு நிற்க முடியாது என்று நினைத்து கொண்டு… செந்தாழினியின் அருகில் சென்றான்..

அப்போது பதினொன்று வயதுடைய செந்தாழினி அவனுக்கு பாப்பாவாக தான் அவன் கண்ணுக்கு தெரிந்தது..

அதனால் .. “பாப்பா இங்கே ஏன் நிற்கிறே..? உள்ளே போ…” என்று கொஞ்சம் அதட்டும் குரலில் தான் மகிபாலன் செந்தாழினியிடம் முதன் முதலில் பேசியது..

அது வரை செந்தாழினியின் பார்வை மண்டபத்தின் கார் பார்க்கிங்கில் கண் வைத்து கொண்டு இருந்தவளின் பார்வை இவனை சட்டென்று பார்க்க.

அப்போதுமே மகிபாலன் ஒரு குழந்தையை பார்ப்பது போல தான்… இப்போது கொஞ்சம் மென்மையான குரலில்…

“இங்கு எல்லாம் நிற்க கூடாது பாப்பா..” என்று சொன்னவனிடம் நம் நாயகி செந்தாழினி பேசிய முதல் வார்த்தையே.

“அங்கிள் சித்தா எனக்கு சோம்பப்பூடி வாங்கிட்டு வரேன் என்று சொன்னாரு. அதுக்கு தான் வெயிட் பண்றேன்..” என்றவளின் அழைப்பு அவனுக்கு சிரிப்பை தான் கொடுத்தது.

என்ன டா இது.. இருபது வயசுலேயே. உன்னை அங்கிள் ஆக்கிட்டா என்று மனதில் சிரித்து கொண்டாலுமே,

“அவர் வாங்கிட்டு வருவாரு.. நீ உள்ளே போ பாப்பா. “ என்று சொன்னவன் கூடவே..

“கல்யாண வீட்டில் ஸ்வீட் வாங்க உங்க சித்தப்பா வெளியில் போய் இருக்காரா..?” என்று கேட்டு சிரித்தவன் கல்யாண மண்டபத்தை நோக்கி நடக்க..

செந்தாழினியும் கூடவே நடந்தப்படி… “இன்னைக்கு மார்னிங் இந்த மேரஜூக்கு காலையில் ப்ரேக் பாஸ்ட்க்கு சோம்பப்பூடி தான் போட சொன்னேன் அங்கிள்.. ஆனா அது சரியா வரலையாம்.. குலோப்ஜாமூன் போட்டுட்டாங்க.. அது தான் சித்தாவே வாங்கிட்டு வர சொல்லி இருக்கேன்..” என்று சொன்னவளின் பேச்சில் இன்னுமே சிரித்து கொண்டவன்..

“மேடத்தின் மெனு தானா.. இந்த மேரஜில்..?” என்று கேட்டவனிடம்..

“இல்ல இல்ல இந்த ஸ்வீட் மட்டும் தான் நான் கேட்டேன்… ஆனா அது கூட போடல.. இந்த தாத்தா…” என்று சிணுங்கியவளின் கன்னத்தை தட்டி விட்டு..

“இனி தனியா எல்லாம் நிற்க கூடாது சரியா…?” என்று சொல்லி விட்டு அவன் தன் அன்னை அமர்ந்து இருக்கும் பக்கம் சென்று விட்டான்..

பின் கல்யாணம் முடிந்து வரும் போது கெளசல்யா.. “வா மகி மருது அண்ணன் கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு போகலாம்..” என்று தன்னை அழைத்த போது முறைத்தவன் தன் அம்மாவோடு செல்லாது கொஞ்சம் தூரம் நின்று கொண்டு விட்டான்..

ஆனால் அவனின் பார்வை தன் அன்னை மருது பாண்டியனிடம் சென்று ஏதோ பேசுவது அதற்க்கு ஏதோ அவர் சொல்வதுமாக பார்த்தவனின் கண்கள் தந்தையின் பக்கத்தில் அமர்ந்து கொண்டு தன் இரு பக்கமும் அமர்ந்திருந்த இரண்டு சிறுவர்களோடு பேசிக் கொண்டு இருந்த செந்தாழினியை மீண்டும் பார்த்தவனுக்கு சிரிப்பு தான் வந்தது..

காரணம் இப்போதும் அவள் ஏதோ சாப்பிட்டு கொண்டு தான் அந்த சிறுவர்களுடன் பேசிக் கொண்டு இருந்தது..

செந்தாழினி பேசிக் கொண்டு இருந்த சிறுவர்கள் பதினைந்து பதனாறு வயது இருக்கும்.. அவளின் சித்தப்பா மகனாக இருக்கலாம்.. இல்லை இரண்டு அத்தை இருக்கிறார்கள்.. அவர்களின் மகங்களில் யாராவது இருக்கலாம்.. என்று நினைத்தவனின் யோசனை இது தான் இந்த பெண்ணுக்கு வாய் வலிக்குமா .. வலிக்காதா..? என்பது தான்..

அதோடு அந்த திருமண மண்டபத்தில் ஏசி கிடையாது.. செந்தாழினி உடுத்திக் இருந்த அந்த பட்டுப்பாவாடையின் கணமும் பாவம் அவளுக்கு வியர்வையை வர வழைத்தது.. அதை பார்த்தவனுக்கு சின்ன பெண்ணுக்கு ஏன் இத்தனை நகைகள் இத்தனை அகலமான பட்டு உடைகள் தான் என்று நினைத்தது..

இவன் அவளையே பார்த்து கொண்டு இருந்த வேளை செந்தாழினியுமே மகிபாலனை பார்க்க.. மீண்டும் ..”என்ன அங்கிள் நான் தனியா எல்லாம் இல்லையே…” என்று சத்தமாக பேசியவளின் பேச்சில் பக்கத்தில் அமர்ந்திருந்த மருது பாண்டியனும் இவனை பார்த்தார்..

அவர் பார்வையை அவரிடம் பேசிக் கொண்டு இருந்த கெளசல்யா கவனித்து விட.. “என் மகன் தான் அண்ணா..” என்று சொன்னவர்..

தன்னை பார்த்து வா என்று சைகை செய்ததில், இப்போது போகாது இருந்தால் நன்றாக இருக்காது என்று நினைத்து தான் அவர்கள் அருகில் சென்றது..

தன் முன் நின்று இருந்த தன்னை மருது பாண்டி ஆராயும் பார்வை பார்த்த போது அப்போதும் இன்று நினைத்ததை தான் அன்றும் நினைத்தான்..

‘இவன் என்ன மாப்பிள்ளையை பார்ப்பது போல பார்க்கிறார் ‘ என்று.. பிற்காலத்தில் அது தான் உண்மையாக போகிறது என்று தெரியாது..

பார்த்தவன் . “பரவாயில்லை உன் மவன் கம்பீரமா தான் இருக்கான்.. படிச்ச கலை தெரியுதே…” என்று தன் அன்னையிடம் தன்னிடம்..

“என்னப்பா படிச்சிட்டு இருக்க..? என்ற கேள்விக்கு..பதில் சொன்னான்..B.E..EEE என்று..

உடனே பக்கத்தில் அமர்ந்திருந்த தன் மகளை பார்த்த மருது பாண்டி.. “ஏன் தாயி நீ என்னவோ படிப்பு படிக்கனும் என்று சொல்லிட்டு இருந்தியே.. அது இந்த படிப்பு தானா…”என்று கேட்டவரின் பேச்சில் மகிபாலனுக்கு சிரிப்பு வந்து விட்டது..

இது கூட இவருக்கு தெரியாதா.. என்று நினைத்து.. அவன் நினைப்பை அதற்க்கு மேல் கொண்டு செல்லாது செந்தாழினி..

“அய்யோ ப்பா.. நான் படிக்க போற படிப்பு இது இல்ல.. நானு கலெக்ட்டருக்கு படிக்க போறேன்.. நான் படிக்க போகும் படிப்பு இதோட ரொம்ப பெருசு… “ அவள் கண்களை அகல விரிக்கும் போது அவள் கையுமே அதற்க்கு ஏற்ற போல விரிய.

தந்தையின் பேச்சில் தன் சிரிப்பை அடக்கி கொண்டு நின்று இருந்தவன் மகளின் பேச்சில் மட்டும் அல்லாது அவளின் அந்த செயலிலுமே பக் என்று சிரித்து விட்டான்..

அந்த பாசமிகு தந்தைக்குமே மகளின் பேச்சில் சிரிப்பு தான் போல. ஆனால் மகளை பற்றி நங்கு தெரிந்தவராக.

“எதுக்குப்பா சிரிக்கிற.. என் தாயி கண்டிப்பா படிப்பா பாரு.. படிச்சிட்டு நம்ம மதுரையே அவள் ஆள போறாளா இல்லையான்னு பாரு..” என்று சொல்ல.

தந்தையின் தோளில் சாய்ந்து கொண்ட செந்தாழினி, சிரித்த இவனை கோபத்துடன் பார்த்து கொண்டே தன் முகத்தில் வழிந்த வியர்வையை தன் பட்டு பாவடையை தூக்கி முகத்தில் துடைக்க..

அந்த பட்டு பவாடையில் இருந்த சரிகை செதாழினியின் முகத்தில் பட்டு எரிச்சலை கொடுத்தது போல. முகத்தை சுளிக்க.

“பாவடை தூக்கிடா துடைப்ப..” என்று தந்தையின் முன் நிலையில் தான் அன்று செந்தாழினியை அதட்டியது.

முதன் முதலாக கோபமுகத்தையும், கண்டிப்பையும் காட்டிய தன்னை அவளுக்கு பிடிக்கவில்லை போல..

அதனால் கோபமாக தன்னை பார்த்து கொண்டே தன் கையை தன் முன் நீட்டியவள்..

“கட்சீப் இருந்தா துடச்சி இருக்க மாட்டேனா..?” என்று மூச்சு வாங்கி கேட்டவளின் கையில் அன்று தன்னிடம் இருந்த கட்சீப்பை வைத்து விட்டு .

மருது பாண்டியனிடம் ஒரு தலையசைப்போடு வந்து விட்டான்.. பின் அவன் படிப்பு மேல் படிப்பு என்று சென்ற சமயத்தில் தான் மீண்டுமே…

மஞ்சள் நீராட்டு விழா என்று மதுரையையே ஒரு புரட்டு போட்டது.. அதன் பின்னுமே இரண்டு மூன்று முறை கல்யாணம் காது குத்து என்று ஏதாவது ஒரு விழாவில் அவளை பார்த்து இருக்கிறான்.

குழந்தையில் இருந்து குமரியாக தான் அவன் கண்ணுக்கு தெரிந்தாள்.. பெண் வளர்ந்தது போலவே அவளின் உடலில் இருந்த நகைகளின் அளவுமே அதிகரித்து விட்டது போல தான் அவன் கண்ணுக்கு தெரிந்தது.

அதன் பின் தன் வீட்டு பிரச்சனையில், மற்றவர்களின் வீட்டு பிரச்சனை காதில் விழுந்தாலுமே, அதை யோசிக்கும் நிலையில் அவன் இல்லை..

அப்போது அவன் காதில் விழுந்த விசயங்கள் இது தான்..முதலில், பாண்டி வீட்டு பெண்ணையையே தூக்கிட்டாங்கலா என்பது தான்.. பின் இரண்டு நாள் கழித்து வீடு வந்தாள். அதன் பின் அவளை கடத்தியவர்கள் அவள் கல்லூரியில் படித்த அவளின் சீனியர்கள் தான் என்று கண்டு பிடித்து விட்டார்கள் என்பதுமே.

ஆனால் அவர்களை தண்டிக்க விடாது இவளே காவல் நிலையத்திற்க்கு சென்று நான் விருப்பப்பட்டு தான் அவங்களுடன் போனேன் என்று சொன்னாள் என்பது போல கேள்வி பட்டான்.. ஆனால் அதை பற்றி யோசிக்கும் நிலையில் அப்போது அவனின் குடும்ப சூழல் இல்லை..

காரணம் இவன் அம்மா இங்கு செய்து வைத்த வேலையில் அவன் எதை பற்றியும் யோசிக்கும் நிலையில் அவன் மட்டும் அல்லாது அவனின் குடும்பமும் இல்லை என்பது வேறு விசயம்…

அதன் பின்னுமே யாரை பற்றியும் யோசிக்கும் நிலையில் இவன் குடும்பம் இல்லை தான். ஆனால் யோசிக்கும் படி அவளையே தான் திருமணத்திற்க்கு பேசியதில்..

செந்தாழினியை பற்றி தான்.. இது சரி வருமா…? என்று யோசித்து யோசித்து இதற்க்கு மேல் யோசித்தால் நான் அவ்வளவு தான் என்று அவனின் மனதின் சோர்வு விடியற்காலை நான்கு மணிக்கு மேல் தான் அவனின் கண்கள் உறக்கத்தை தழுவியது.

தூங்கும் முன் அவனின் மனது இதையும் எண்ணியது நாளை ஞயிறு… லேட்டா எழுந்தா கூட பரவாயில்லை என்று நினைத்து கொண்டு தூங்கியவனின் காதில் ஒன்றன் பின் ஒன்றாக தன் வீட்டின் முன் வந்து நின்ற கார்களின் சத்தத்தில் லேசாக விழித்த அவனின் தூக்கம் பின் கேட்ட கணீர் குரலில் முற்றிலுமாக அவனிடம் இருந்து விடைப்பெற்று சென்று விட்டது.. அந்த குரலுக்கு சொந்தக்காரன் மருது பாண்டியனின் குரல் என்று அவன் இனம் கண்டு கொண்டதால்,

எந்த நேரத்துக்கு தன் அம்மா தங்கள் சம்மதத்தை சொல்லி இருப்பாங்க… இப்படி விடியல்கலையிலேயே வந்து விட்டார்கள். நினைத்தவன் கீழே இறங்கி செல்லவில்லை அவர்கள் போகும் வரை.
அந்த தெருவிலேயே மிக பெரிய வீடு அது தான் என்று சொல்லும் அளவுக்கு அந்த வீடு அவ்வளவு பெரியதாக இருந்தது.

ஆனால் அங்கு வசிப்பவர்களின் அனைவரின் மனமும் அத்தனை பெரியதாக இருக்குமா.? நேரத்துக்கும் சூழலுக்கும் ஏற்ப தான் மனதின் தன்மை மாறுப்படும் போல.. அது சரி தான் என்பது போல அந்த வீட்டில் கொண்டாடிய செந்தாழினியை இப்போது அப்படி கீழாக பேசிக் கொண்டு இருந்தாள் செந்தாழினியின் பெரிய அண்ணி செண்பகம்.

செந்தாழினியின் கையில் பெரிய அளவு பட்டுப்புடவையை கையில் கொடுத்தவள் கூடவே… அதற்க்கு தோதாக நகைகளுமே கையில் கொடுத்தவள்..

“உன்னை இதை எல்லாம் போட்டுட்டு ரெடியாக சொன்னாங்க உங்க அப்பா..” என்று ஒரு மாதிரியான குரலில் சொன்னவள்..

தன் ஒரவத்தி அதாவது செந்தாழியின் சித்தப்பா சரவண பாண்டியனின் பெரிய மருமகள் மருமகளிடம்..

“இது எல்லாம் சும்மா தான் பெண் பார்க்க வருவது எல்லாம் மேல் பூச்சுக்கு..” என்று சொன்னவள் பின் செந்தாழினியின் காதில் விழ வேண்டும் என்றே..

“அது தான் விலை பேசி முடிச்சிட்டாங்கலே..” என்ற இந்த பேச்சில் இத்தனை நேரம் தன் கையில் இருந்த புடவையை கட்டுவதா..? வேண்டாமா..? என்று யோசித்து கொண்டு இருந்தவள் தன் பெரிய அண்ணியின் இந்த பேச்சில் சட்டென்று அவளை நிமிர்ந்து பார்த்தாள்.. பார்த்தவளின் கண்களில் அவ்வளவு அதிர்ச்சியும் தெரிந்தது…
 
Active member
Joined
May 11, 2024
Messages
167
மகி அம்மா என்னமோ பண்ணி வைச்சிருக்காங்க அதான் கவரிங் போட்டு கல்யாணம் பண்ண வேண்டியதா போச்சி
 
Active member
Joined
May 12, 2024
Messages
199
May be Senthazhini oda seniors ku edhum panniduwanga nu ava poi sollirukkalam Police la
 
Top