அத்தியாயம்…20
செந்தாழினி தன் கணவனிடம் இதை சொல்லும் போதே அன்று அவள் அத்தனை பயந்ததும்.. பின் ராகவ் கையில் எழுதிய அந்த பெயர் கொண்டு தான் அத்தனை ஆசுவாசம் அடைந்ததை இன்றும் நினைத்து பார்த்தவளுக்கு கணவனிடம் இது தான் என்று சுருக்கமாக சொல்லி விட்டாலுமே, அன்று நடந்ததை நினைத்து பார்த்தவளுக்கு இன்றும் நம்ப முடியாத ஒரு நிகழ்வாக தான் இருந்தது..
பின் இருக்காதா…? அன்றைய அந்த நாள் தானே.. அவள் வாழ்க்கையை புரட்டி போட காரணம் ஆயிற்று…
அன்று கண் முழித்த போது செந்தாழினி இருந்தது படுக்கை அறையில்.. அந்த அறை சின்னதும் இல்லாது பெரியதும் இல்லாதது போலான அளவில் இருந்தது அந்த அறை…
கண் விழித்தவளுக்கு, அதுவும் ஒரு இருக்கையில் கட்டி போட்டு நிலையில் தான் அமர்ந்திருந்த நிலையில் பயந்து போனவளாக, முதலில் என்ன நடந்தது என்று யோசிக்கவே அவளுக்கு செந்தாழினிக்கு சிறிது நேரம் பிடித்தது..
‘ராகவ் அண்ணாவை அடிக்கிறாங்க…என்று சொன்னாங்க.. ராகவ் அண்ணாவை அடிச்சவங்க தான் என்னை கடத்தியதா…?’ என்று நினைத்த நொடி..
‘இல்ல இல்ல ராகவ் அண்ணாவை அடிக்கிறதை நான் பார்க்கவே இல்லையே… என்ற நினைப்பு ஓடும் போதே… ராகவ் அண்ணாவை சொல்லி தன்னை கடத்திட்டாங்கலா அய்யோ…’ என்று நினைத்த நொடி.. அத்தனை பயம் வந்தது.
அப்பா சித்தப்பா எப்போதும் சொல்வது… இது தான்.. கார் ட்ரைவரோடு தான் எங்கும் போகனும்.. வரனும்.. ஒரு நாள் அவள் பஸ்ஸில் பயணம் செய்ததை வைத்து யாரோ வீட்டில் போட்டு கொடுத்து விட. அதை வைத்து வீட்டில் அத்தனை பத்திரம் அவளிடம் சொல்லி விட்டார்கள்..
எங்க தொழில் எதிரி… நாங்க போய் பஞ்சாயத்து செய்ததினால் பாதிக்கப்பட்டவங்க இப்படியானவங்க வீட்டு பெண்களை வைத்து தான் எங்களை மடக்குவாங்க… நீ இப்படி அவங்களுக்கு சுளுவா கிடைக்கிறது போல இருக்கலாமா..?” என்று அத்தனை சொன்னது எல்லாம் நியாயபகத்தில் வர… செந்தாழினி அப்பா சித்தப்பா சொன்னது போல தான் கடத்தி விட்டார்களா என்று நினைத்து பயந்தவள் தன் முன் முகத்தை மூடிக் கொண்ட மூன்று ஆண்கள் வந்து நிற்க.. அதுவும் பேசும் போது தொண்டை பகுதியில் ஒரு விரல் வைத்து குரலை மாற்றி கட்டை குரல் போன்று பேசியதில், தனக்கு தெரிந்தவர்கள் தான் என்று கடையில் வேலை செய்பவர்கள் இது போன்று யோசித்து கொண்டு இருந்த போது தான் நான்காவதாக இன்னொருவர் அவள் இருந்த அறையின் கதவை திறந்து கொண்டு நுழைந்தான்..
அப்படி கதவு திறக்கும் போது தான்.. அது வீடு என்பது அவளுக்கு நிச்சயம் ஆனது.. காரணம் அவள் கண் பார்வைக்கு கூடமும், அதில் ஷோபாவும் கண்ணில் பட்டது… அதோடு கூடத்தில் துணி காய வைக்கும் ஒரு கயிறு கட்டி இருக்க அதில் புடவையும் தொங்கி கொண்டு இருந்ததில், அவளின் பயத்தில் கொஞ்சம் குறைந்தது. பெண்ணும் இருக்கிறாங்க என்றதில், இருந்துமே பயம் முழுவதும் தெளியவில்லை…
அதுவும் இன்னொருவன் புதியதாக வந்து நின்றதில், அவனுமே குரலை மாற்றி… “சாப்பிடு..” என்று தன் முன் நீட்டிய உணவு பொட்டலையும் அவனையுமே மாறி மாறி பார்த்து கொண்டு இருந்தவளுக்கு குரலை மாற்றி பேசினாலுமே, ஏனோ இந்த குரல் கொஞ்சம் பரிச்சயமானது போல தோன்ற, யாருடையது என்று யோசிக்கும் போதே அவன் கையில் இருந்த அந்த ஆறு விரலை பார்த்த நொடி அதிர்ச்சியாகி யோசிக்கும் முன்னவே தன்னுடைய முழு கை உடைய டீ ஷர்ட்டை கொஞ்சம் மேல் நோக்கி கொஞ்சம் இழுத்து விட்டவன் அவன் கையில் அவன் அண்ணன் பெயரான வேதாந்த் என்ற அந்த எழுத்தில்,
தான் ராகவ் தான் என்று செந்தாழினிக்கு அப்பட்டமாக எடுத்து கொடுத்து விட.. செந்தாழினிக்கோ இத்தனை நேரம் இருந்த அந்த பயம் அனைத்தும் மறந்தவளாக..
“ராகவ் ண்ணா..’ என்று சந்தோஷ மிகுதியில் கத்தி விட்டாள்..
அதில் முக மூடி அணிந்து கொண்டு இருந்த இன்னொருவன்..
“ஏய் கோல்ட்.. உன்னை யார் அந்த டி ஷர்ட்டை இழுத்து விட சொன்னது…?” என்று கேட்டு அவன் கபிலன் என்பவன் அவன் வாயின் மூலமே செந்தாழினிக்கு உணர்த்தி விட்டான்… கபிலன் தான் ராகவ்வை அவனும் அவன் அண்ணனுமே வாங்கும் கோல்ட் மெடலை வைத்து கோல்ட் கோல்ட் என்று அழைப்பது..
அதில் செந்தாழினி.. “ கபிலன் ண்ணா..” என்று இன்னுமே கத்தியவள் பின் ஒவ்வொரு பெயராக…
“சுரேஷ் சரண் ண்ணா.. என்ன ண்ணா இது விளையாட்டு…?” என்பது போல கேட்டவள்..
பின்.. “ ண்ணா என் அப்பா சித்தப்பா பத்தி தெரியாம இது என்ன விளையாட்டுண்ணா.. சீக்கிரம் யார் போனாவது கொடுங்க.. என் போன் கொடுங்க.. நான் எதாவது காரணம் சொல்லி பிரண்ட் வீட்டில் இருக்கேன் என்று சொல்லிடுறேன். இந்த விளையாட்டு எங்க வீட்டிற்க்கு தெரிந்தால், பிரச்சனை செய்து விடுவாங்க ண்ணா.. அப்புறம் உங்களுக்கு தான் பிரச்சனை ஆகி விடும் “ என்று அவர்கள் தன்னை விளையாட்டுக்கு தான் தங்களை இங்கு அழைத்து வந்து இருக்கிறார்கள் என்று நினைத்து கொண்டு விட்டாள்..இருந்துமே அப்போதுமே அவர்களை பற்றிய பயம் தான் இருந்ததே ஒழிய.. தன்னை பற்றி சிறிதும் அவள் யோசிக்கவில்லை…
அதோடு இப்போது சென்னையில் இருக்கிறோம் என்று தெரியாது மதுரையில் தான் இருக்கிறோம் என்று நினைத்து கொண்டவள்..
“ண்ணா சீக்கிரம் வீட்டிற்க்கு போயிடுறேன்.. “ என்று இருக்கை விட்டு எழ பார்த்தவளின் தோள் பற்று மீண்டும் அமர வைத்த ராகவ்.
“சாரி செந்தாழினி..” என்று மன்னிப்பு கேட்டவன்..
பின். “ நான் உன்னை விளையாட எல்லாம் கடத்தி சென்னைக்கு கூட்டிட்டு வரல உண்மையில் தான் நாங்க உன்னை கடத்திட்டு தான் வந்தோம்..” என்று ராகவ் சொல்லியும் செந்தாழினி நம்பவில்லை..”
“ராகவ் ண்ணா விளையாடாதிங்க ண்ணா.. உங்களுக்கு தான் ண்ணா பிரச்சனை ஆகிடும்.. எங்க வீட்டு ஆண்களை பத்தி தெரியாதுண்ணா. உங்களை போல எல்லாம் கிடையாது…” என்று சொன்னவள் பின் ஏதோ யோசித்தவளா..
“ண்ணா நேரம் ஆகுதுண்ணா.. இதுக்கே என்ன சொல்லி சமாளிக்க என்று நான் யோசிக்கனும்.. சீக்கிரம் ண்ணா…” என்று அவர்களை அவசரப்படுத்தினாலே ஒழிய செந்தாழினி அவர்கள் சொன்னதை நம்பவில்லை.. செந்தாழினிக்கு அத்தனை நம்பிக்கை மகிபாலன் நண்பனின் தம்பி மீது…
ராகவ்விடம் அவள் வலிய சென்று பேசியதே மகிபாலன் அந்த ஒருவனுக்கு தானே… தன் கனவான ஐ.ஏ,எஸ் படிப்பை நீங்க இருவரும் படிக்கனும் என்று வேதாந்திடம் பேசியதை கேட்டவளுக்கு, ராகவ்வே படிப்பு தான்.. இதில் எப்போதாவது நண்பர்களுடன் படத்திற்க்கு அவன் சென்றான் என்று கேள்வி பட்டால், உடனே,…
“ண்ணா படிக்காம என்ன ண்ணா இது…? என்று சொல்லி இடுப்பில் கை வைத்து முறைத்து கேட்டவளை.. பார்த்து ராகவுக்கும் அவனின் நட்புக்களுக்குமே…
என்னடா இவள் என்று தான் எண்ண தோன்றும்.. அதுவும் மூச்சுக்கு முன்னுறு முறை அண்ணன் அண்ணன் என்று அழைப்பதால், வேறு மாதிரியாகவுக் நினைக்க முடியவில்லை… அப்படி ராகவ்வின் அந்த படிப்பை தன் கனவோடு அதிகமாக நினைத்தவள் இப்போது இதனால் இவர்களுக்கு பிரச்சனை வந்து விட போகிறது என்று பயந்து கொண்டு இருந்த போது தான்.
மருத்துவமனையில் இருக்கும் அன்னைக்கு மாற்றிக் கொள்ள மாற்றுடை எடுக்க வீட்டிற்க்கு வந்த வேதாந்த் தன்னிடம் இருந்த இன்னொரு சாவீயை வைத்து தன் வீட்டிற்க்குள் நுழையும் போதே தன் தம்பி மதுரையில் இருந்து வந்து இருக்கிறான் போல… என்று நினைத்து கொண்டே தான் நுழைந்தது..
இன்று பணம் கட்டி விட வேண்டும் என்று மருத்துவமனையில் சொல்லி விட்டதால் பணத்தை தான் கொண்டு வந்தான் என்று நினைத்தான்..
ஆனால் ஒரு பெண்ணை அழைத்து.. இல்லை இல்லை கடத்திக் கொண்டு வந்து இருப்பான் என்று அவன் கனவிலும் நினைத்து பார்த்து இருந்து இருக்க மாட்டான்..
அதுவும் கட்டப்பட்ட நிலையில் இருந்த அந்த பெண்ணை பார்த்ததுமே தெரிந்து விட்டது வேதாந்துக்கு யார் வீட்டு பெண் என்று..
வீட்டின் நுழைந்தவனுக்கு படுக்கை அறையில் இருந்து கபிலன்.
“நாங்க விளையாட்டுக்கு எல்லாம் இதை செய்யல. புரியுதா..?” அதட்டுவது போல பேசியவனின் குரலை கேட்டு கொண்டே தான் அந்த அறைக்குள் நுழைந்தது..
செந்தாழினி இருக்கையில் அமர்த்தி கட்டி வைத்து இருந்ததால் வேதாந்தின் கண்கள் மேல் நோக்கிய பார்வையின் வட்டத்தில் தம்பி தம்பியின் நண்பர்கள் தான் முதலில் விழுந்தனர்..
அந்த நிலையிலுமே “நீ மட்டும் வரதுக்கு என்ன…? இவங்களும் காலேஜ் லீவ் போடனுமா.?” என்று படிப்பை முதன்மை வைத்து தான் வேதாந்த் கேட்டது..
அந்த சமயம் அண்ணனை ராகவ் துளியும் எதிர் பார்க்கவில்லை.. வேதாந்த பார்த்து ராகப் மட்டும் கிடையாது அவன் நண்பர்களுமே அதிர்ந்து தான் போய் விட்டனர்..
அதில் ராகவின் அதிர்ந்த முகம் இன்னுமே அதிர்ந்து போய் செந்தாழினியை பார்க்க.. தம்பியின் பார்வை கொண்டு வேதாந்துமே ராகவ் கண் சென்ற திசை பக்கம் பார்த்தவனுக்கு செந்தாழினியை வேதாந்துமே பார்க்க… பார்த்தவனுக்கு செந்தாழினி யார் வீட்டு பெண் என்பது புரிந்து விட்டது…
அதுவும் கட்டப்பட்ட நிலையில் பார்த்த வேதாந்துக்கு ஒன்றும் புரியவில்லை… வேதாந்துக்கு மட்டுமா புரியவில்லை… பாவம் செந்தாழினிக்குமே இன்னுமே தெளிவாக புரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்..
சும்மா விளையாட்டுக்கு இப்படி செய்து உள்ளார்கள் என்று தான் அப்போது வரை நினைத்து கொண்டாள்… அதற்க்கு காரணமும் இருக்கிறது..
இவளே எப்போதும் ராகவ் க்ரூப்பிடம் சென்று சென்று பேசுவதால் அவள் தங்கள் பக்கம் வராது இருக்க ஏதாவது ஒன்று செய்வார்கள்… நாங்கு பேருமே இளைஞர்கள்…ஒரு கனவோடு படித்து கொண்டு இருக்கிறார்கள்… செந்தாழினி அவர்களை அண்ணன் என்று அழைத்தாலுமே, மற்றவர்கள் பார்வைக்கு அது வேறாக தான் தெரிந்தது போல.
அதனால் தான் ஒரு சிலர் ராகவ் கேங்கிடம்… என்ன டா செந்தாழினி உங்களில் யார் ஆளு… ?” என்று கேட்பவர்கள் கூடவே.
“பார்த்துடா பொண்ணு பெரிய இடம்.. வீட்டுக்கு தெரிந்தா பொண்ணை ஒன்னும் பண்ண மாட்டாங்க… உங்களை தான் செய்து விட்டு விடுவாங்க..” என்ற பேச்சில் இது என்ன டா வம்பா இருக்கு..
இவனுங்க சொல்வது போல செந்தாழினி வீட்டு ஆட்கள் ஏதாவது புரிந்து கொண்டு எதாவது செய்து விடுவார்களோ என்ற பயமும் அவர்களுக்கு அப்போது இருக்க தான் செய்தது..’தங்களின் கனவுக்கு எதுவும் இடையூறாக வருவதில் அவர்களுக்கு விருப்பம் கிடையாது.
அதனால் தான் தங்களிடம் பேச வந்தாலே அவளை பயம் காட்டுவது போல ஏதாவது செய்வார்கள்.. இன்றும் அது போல தான் என்று நினைத்து கொண்டாள் பாவன் செந்தாழினி..
ஆனால் வேதாந்த் கேட்ட போது தான் ராவவ் தன் அண்ணனிடம் அனைத்து உண்மையும் சொன்னவனை வேதாந்து அரைந்து விட்டான்..
ராகவை மட்டும் அல்லாது அவன் நண்பர்களையுமே வேதாந்த் அடித்து விட்டான்..
“என்ன வேலை டா செய்து வைத்து இருக்கிங்க…/” என்று தலையில் அடித்து கொண்ட வேதாந்துக்குமே அப்போது ஒன்றும் புரியவில்லை…
காரணம் சிறிது நேரம் முன் தான் மகி பால வேதாந்தை அழைத்து இருந்தான்.
“அம்மாவை பற்றி விசாரித்தவன் பணம் பிரச்சனை இல்லையே.?” என்று கேட்டவனிடம் அன்னையின் உடல் நிலையில் உண்மையை சொன்ன வேதாந்த் பணம் இன்னுமே தேவை என்பதை மட்டும் சொல்லவில்லை. காரணம் அவனமே அப்போது அவனின் அம்மா அவனை பணப்பிரச்சனையில் மாட்டி விட்டு இருந்த சமயம் அது..
அப்போது தான்… “பாண்டி வீட்டு பெண்ணை காணும்.. யாரோ தூக்கிட்டாங்க என்று தான் சொல்றாங்க..” என்றவன் கூடவே..
“தூக்கினவங்க மட்டும் மாட்டினா அவ்வளவு தான் மச்சான்..” என்றும் சொல்லி இருந்தான் மகி பாலன்.
அப்போது அந்த பேச்சை வேதாந்த் ஏனோ தானோ என்று தான் கேட்டு கொண்டு இருந்தான்..அவனுக்கு தான் அவனின் அம்மா பிரச்சனையே தலைக்கு மேல் இருக்கிறதே..
ஆனால் இப்போது தன் கண் முண் கடத்தப்பட்ட செந்தாழினி கடத்தியது தன் தம்பியும் தம்பியின் நண்பர்களும்..
இப்போது அம்மா பிரச்சனையோடு இது தான் வேதாந்துக்கு பெரிய பிரச்சனையாகி விட்டது.. என்ன டா என்ன செய்வது தலை மீது கை வைத்து அமர்ந்து விட்ட வேதாந்துக்கு செந்தாழினியின் கட்டை அவிழ்க்க வேண்டும் என்று கூட தோன்றவில்லை..
செந்தாழினியுமே ராகவ் தன் அண்ணனிடம் சொன்னதை வைத்து தான் உண்மையில் இவர்கள் தங்களை கடத்தி தான் வந்து இருக்கிறார்கள் என்பதே அவள் உணர்ந்தது..
அப்போது கூட செந்தாழினி தான் அத்தனை முறை கேட்டேனே. ராகவ் அண்ணாவுக்கு என்ன பிரச்சனை என்று சொல்லி இருந்து இருக்கலாமே…
ஒரே நிமிடத்தில் சரி செய்து உருந்து இருப்பேனே…. இப்படி பிரச்சனையில் இவங்க மாட்டி இருக்க தேவையில்லையே…
அப்போது கூட செந்தாழினி அவளை பற்றி ஒரு துளி கூட கவலை படவில்லை… தன்னை கடத்தினார்கள் என்று தெரிந்தால் தன் வீட்டவர்கள் இவர்களை சும்மா விட மாட்டார்கள் என்பது அவளுக்கு தெரியுமே… காவ துறையில் இருப்பவர்களை தன் அப்பா சித்தப்பாவுக்கு நன்கு தெரியும்… கேஸ் பைல் ஆனால் கடவுளே… இவங்க படிப்பு… கனவு.. அது இவர்களின் கனவு மட்டும் கிடையாதே.. தன்னுடைய மகி பாலனின் கனவுமே இவர்களின் படிப்பு தானே..
என்ன செய்து இருக்காங்க . இவங்களுக்கு பிரச்சனை இல்லாது என்ன செய்யலாம்.. இதை பற்றி வேதாந்தை விட செந்தாழினி தான் அதிகம் யோசித்தாள்..
அதில் அவளுக்கு கிடைத்த விடை இது தான்..
“ண்ணா ண்ணா வேதாந்த ண்ணா…” என்று செந்தாழினி அழைக்கவும் தான் வேதாந்த் செந்தாழியின் கட்டை அவிழ்க்கவில்லௌ என்பதே தோன்றியது..
கட்டை அனைத்தும் அவிழ்த்து விட்டவன்.. செந்தாழினியின் கையை பிடித்து கொண்டான்.
“ மன்னிச்சிடும்மா. மன்னிச்சிடு… இவனுங்க இது போல செய்து இருக்க கூடாது.” என்று மன்னுப்பி கேட்டவனிடம்..
செந்தாழினி… “ முதலில் என் கையை விடுங்க ண்ணா..” என்று விடுவித்து கொண்டவள்.. அந்த அறையில் இருந்த பாத் ரூம் நோக்கி தான் அவள் ஓடினாள்..
அதை பார்த்த வேதாந்த் இன்னுமே தன் தம்பியையும் தம்பியின் நட்பையும் அடிக்க… பாத் ரூமில் இருந்து வெளி வந்த செந்தாழினியுமே அடிப்பதில் சேர்ந்து கொண்டாள்..
பின் தான்.. தான் இங்கு இருப்பது இன்னுமே இவர்களுக்கு ஆபத்து ஆக கூடும்க் என்று தன் திட்டத்தை சொன்னாள்..
அதாவது… “ என்னை திரும்பவும் மதுரையில் நம்ம காலேஜ் வாசலிலேயே விட்டு விடுங்க… என்னை யார் கடத்தினாங்க என்று எனக்கு தெரியாது என்று நான் அடித்து சாதிக்கிறேன்…” என்று சொல்ல.
வேதாந்துக்குமே வேறு வழி இல்லை.. தன் தம்பியோடு தன் தம்பியின் நட்புக்களின் எதிர் காலமும் இதில் தான் அடங்கி உள்ளது..அதோடு இவர்கள் இது போல செய்து இருக்காங்க என்று அம்மாவுக்கு தெரிந்தால் நோயினால் போறாங்கலோ இல்லையோ.. இது கேள்விப்பட்ட உடன் தன் அம்மாவுக்கு ஏதாவது ஆகி விடும் என்பது திண்ணம் என்று நினைத்தவன்.
செந்தாழினியின் திட்டத்திற்க்கு சம்மதம் சொன்ன வேதாந்த் அத்தனை முறௌ அவளிடம் மன்னிப்பு கேட்டவன் தன் தம்பி நண்பர்களையுமே கேட்க வைத்தவன். கிளம்பும் சமயம் தான் வேதாந்துக்கு அவன் அன்னை சேர்த்து உள்ள மருத்துவமனையில் அழைப்பு.
“உங்க அம்மாவின் நிலை மோசமா போயிட்டு இருக்கு. ஆபிரேஷன் செய்ய எல்லாம் ரெடியா இருந்துமே நீங்க இன்னுமே மீதி பணம் கட்டல… இன்று ஈவினிங்க வரை தான் டைம்.. நீங்க பணம் கட்டலேன்னா உங்க அம்மாவுக்கு அடுத்த நிலையில் இருப்பவங்களுக்கு அந்த லங்கஸ் பொருத்தி விடுவோம் என்று சொல்லி விட..” வேதாந்துக்கு அம்மாவுக்கு என்ன செய்வது என்ற கவலை..
முதலில் இந்த பெண்ணை மதுரையில் விட்டு விடலாம்.. என்று செந்தாழினியிடம்.. “வாம்மா..” என்று அழைக்க அவளோ தன் உடம்பில் இருந்த வைர நகைகள் அனைத்தும் கழட்டி கொடுத்த பின்…
“இது இப்போதைக்கு வெச்சிக்கோங்க. என் அக்கவுண்டில் இருக்கும் பணத்தை வீட்டிற்க்கு போனதும் அனுப்பி விடறேன்…” என்ற சொல்லி செந்தாழினி வேதாந்த் கையில் தன் வைர நகைகளை கொடுக்க.
வேதாந்த் அதை வாங்கவே இல்லை… “ வேண்டாம் வேண்டாம்..” என்று மறுத்தவனிடம் செந்தாழினி…
“மகி பாலன் கொடுத்தா வாங்கி இருப்பிங்க தானே… “ என்று செந்தாழினி கேட்டதுமே வேதாந்து அதிர்ந்து போய் அவளை பார்த்தவன்..
“உனக்கு மகியை தெரியுமா..?” என்று கேட்டவனிடம் அனைத்தையுமே சொல்லி விட்டாள்..
செந்தாழினி சொல்ல சொல்ல தான் ராகவும் ராகவின் நண்பர்களுமே தாங்கள் என்ன தான் அவளை விரட்டி அடித்தாலுமே, ஏன் தங்களை நாடினாள் என்பது புரிந்தது.
அதுவும் ராகவ்வுக்கு.. மகி அண்ணாவை விரும்பும் பெண்… மகி அண்ணாவும் அவனுக்கு வேதாந்த் அண்ணாவை போல தான்…
நாளை செந்தாழினி மகி அண்ணாவை திருமணம் செய்து கொண்டால், தனக்கு அண்ணியாகும் உறவு.. இப்படி செய்து விட்டோமே…
அதுவும் செந்தாழினி எத்தனை முறை என்ன பிரச்சனை..? என்ன பிரச்சனை …? என்று தன்னிடமும் தன் நண்பர்களிடமும் கேட்டாள்.. சொல்லி இருந்தால் பிரச்சனை தீர்ந்து இருக்குமே… என்று தான் இப்போது செந்தாழினியை யாரோ போல் நிறுத்த தோன்றாது மகி அண்ணாவை போலவே நெருக்கமாக உணர வைத்த அவளின் பேச்சில் ராகவ் நினைத்தது…
பின் வேதாந்த் கையில் நகைகளை வலுக்கட்டயமாக கொடுத்து விட்ட நாளையே வேதாந்த் அம்மாவுக்கு அறுவை சிகிச்சை செய்ய உள்ளதால், ராகவும் சென்னையிலேயே இருக்க மற்ற நட்புக்களளோடு மதுரைக்கு வந்தவள் அவள் சொன்னது போல் தான் தன்னை கடத்தியவர்கள் யார் என்று தெரியாது என்று சாதித்தது..
ஆனால் வேதாந்த் வேண்டாம் வேண்டாம் என்று மறுத்த அந்த நகைகளே அவர்களை காட்டி கொடுத்து விடும் என்று அவள் சிறிதும் யோசித்து பார்க்கவில்லை..
மருது பாண்டி சென்னையில் உள்ள ஒரு புகழ் பெற்ற வைர கடையில் தான் பெண்ணுக்கு என்று பிரத்தியோகமா டிசைன் செய்து வாங்கியது.. ஒருஜினல் வைரம்… பெண்ணுக்கு என்றால் மருது பாண்டியில் தேர்வு எப்போதுமே சிறப்பாக தான் இருக்கும்.. பெண்ணுக்கு வைரத்தை வாங்கிய நாள் முதலாக மருது சென்னையில் அந்த வைர மாளிகையில் தான் ஒவ்வொன்றும் டிசைன் செய்து வாங்குவார்..
வேதாந்த் போதாத காலமா..? இல்லை செந்தாழினியின் போதாத காலமா…? என்று தெரியவில்லை…
வேதாந்த்துக்கு மீண்டும் மீண்டும் மருத்துவமனையில் இருந்து அழைப்பு வர… ராகவுமே.
“ண்ணா செந்தாழினி சொன்னது போல இதை விற்று அம்மாவுக்கு ஆபிரேஷன் செய்து விடலாம் ண்ணா.. நாளைக்கு நீங்களும் நானுமே அத்தனை சம்பாதிக்க போகிறோம்.. செந்தாழினி கண்டிப்பா மகி அண்ணாவை தான் திருமணம் செய்து கொள்வாள்… நம்ம சம்பாத்தியம் முழுவதுமே செந்தாழினிக்கு கொடுத்து விடலாம் ண்ணா..
நாளை நாம எவ்வளவோ சம்பாதிக்கலாம்.. ஆனா அம்மா இல்லேன்னா.” என்ற தம்பியின் அந்த வார்த்தை வேதாந்தை எதை பற்றியும் யோசிக்க விடாது…
மருது பாண்டியன் வாங்கிய அதே நகை கடைக்கு சென்று விற்க. விற்க்கும் அனைத்துமே வைர நகைகள்… மிகவும் மதிப்பு வாய்ந்தது..
ஆனால் அதை கொண்டு வந்தவனின் தோற்றம் ஒன்றும் சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை என்ற பட்சத்தில் நகை உரிமையாளரை அழைத்து விட்டார் அந்த நகை கடை ஊழியர் வேதாந்துக்கு தெரியாது..
வேதாந்த் நல்ல தோற்ற பொலிவு உடையவன் தான்.. ஆனால் சமீப காலமாக அன்னையின் உடல் நிலை பணத்திற்க்கு திரிந்தது.. சரியாக உணவு இல்லாது.. தூக்கம் இல்லாது…
குளிக்காது உடையும் கசங்கி அழுக்கு உடையில் அப்போதைய வேதாந்தின் தோற்றம் சந்தேகிக்கும் படியாக தான் இருந்தது…
அந்த கடையின் உரிமையாளர் வந்து விட. ஒன்று இல்லை அனைத்துமே பிரத்தியோகமாக செய்து கொடுத்த நகைகளை வைத்து மருது பாண்டியது என்று தெரிந்து காவல் துறையை நாட..
பின் என்ன வேதந்த் தம்பி நட்புக்கள் பிடிப்பட… செந்தாழிக்கு அவர்களை காப்பற்ற அந்த பொய்யை தவிர சொல்ல வேறு வழி இல்லாது போயிற்று.. அதுவும் அனைவரின் முன்னும் என்ன தான் வேதாந்த் நிலை பற்றி சொன்னாலுமே கேஸ் பையில் செய்து விட்டால், அவர்களின் ஐந்து பேரின் எதிர்காலம் நினைத்த செந்தாழினி மொத்த பழியையும் தன் மீது போட்டு கொண்டு விட்டாள்.. இப்படி மாட்டி கொள்வோம் என்று அவள் எதிர் பார்க்கவில்லை தான்.. இது மட்டுமா அவள் எதிர் பாராது நடந்தது.. அதன் பின் ஆன அனைத்துமே அவள் நினைத்து கூட பார்க்க முடியாத செயலாக தான் போனது… செந்தாழினி சொன்ன.
நான் தான் விரும்பி சென்றேன் என்ற அந்த வார்த்தையில் வீட்டில் வந்து அப்பா சித்தப்பாவிடம் சொன்னால் போதும்.. தன் அப்பா தன்னை புரிந்து கொள்வார்..
தன்னை யார் தவறாக நினைத்தால் தனக்கு என்ன வந்தது.. இது போல நினைத்த செந்தாழினிக்கு தந்தை தன்னை -பேசிய அந்த பேச்சுக்கள்..
அவள் வாழ்க்கையில் மறக்க முடியாத வடுக்களாக போயின. அது மட்டுமா அனைத்து உறவுகளுமே தான் பொய்த்து போயின…
அதன் பின் அவள் எடுத்த முடிவு தான் .. மகி பாலன் தான் எதுவும் சொல்லாமலேயே தன்னை நம்ப வேண்டும்..
அதனால் தான் வேதாந்த் ராகவ்.. மகிபாலனில் சொல்கிறேன் அனைத்தும் அவன் பார்த்து கொள்வான் என்ற போது வேண்டாம் என்று மறுத்தவளுக்கு..
தான் எதுவும் சொல்லாமலேயே தன் மீது நம்பிக்கை வைத்த மகி பாலன் மீது காதல் இன்னுமே கூடியது..
அதன் தாக்கத்தில் அவன் மார்பில் அவள் சாய்ந்து கொள்ள. தாம்பத்தியத்தின் பாடம் அத்தனை இனிமையாக மகி அவளின் ஆழிக்கு பயிற்பிக்க..’ இப்படியே சென்றால் எப்படி…
இவர்களின் நிம்மதியை குலைக்க என்று… இதோ அந்த வீட்டின் இரண்டாம் மகள் மகிளா தன் கணவனோடு வந்து விட.. முன்பே வீட்டின் மூத்த பெண் மசக்கையின் காரணமாக அன்னை வீட்டில் சீராடி கொண்டு ஒரு படுக்கை அறையில் இருக்க.. மீதம் உள்ள இன்னொரு படுக்கை அறையானது இப்போது தான் புதியதாக திருமணம் செய்து கொண்டு உள்ளார்கள் என்று அவர்களின் அன்னை கெளசல்யா சொல்ல மகி செந்தாழினியின் அறையில் புதுமன தம்பதியர்கள் ஆக்கிரமித்து கொள்ள..
பத்தே நாட்கள் முன் திருமணம் செய்து கொண்ட மகி பாலனும் செந்தாழினியும் பழைய தம்பதி போன்று கூடத்தில் படுக்கும் படி சூழல் உண்டாகி விட்டது…