அத்தியாயம்….21.2
சுதாவின் புகுந்த வீட்டினர், மகிளாவின் புகுந்த வீட்டினர் என்று விருந்தாட வந்ததில் கெளசல்யாவோடு செந்தாழினிக்கு தான் அதிகப்படியான வேலையில் முதுகும். இடுப்பும் வலி எடுத்து கொண்டது..
தன் பிறந்த வீட்டில் வேலைகள் செய்தவள் தான். அந்த வேலைகள் எல்லாம் பிறந்த வீட்டினர்கள் மீது இருந்த கோபத்தில், தனக்கு உண்டானதை மட்டும் செய்து கொள்பவள்..
ஒரு சிலதை ராகவ்விடம் பேச்சு வாக்கில் உணவில் மகி பாலனுக்கு என்ன என்ன பிடிக்கும் என்று கேட்டு அறிந்து கொண்டு, பிற்காலத்தில் அவனுக்கு செய்து கொடுக்க வேண்டும் என்று ஒரு சிலதை செய்து இருக்கிறாள் தான் செந்தாழினி… அவ்வளவே. இத்தனை பேருக்கு, அதுவும் தொடர்ந்து வேலைகள் எல்லாம் அவளுக்கு பழக்கம் இல்லாதது…
அதோடு வேலையோடு, புதியதாக தொடங்கிய அவளின் அந்த தாம்பத்தியமுமே, இந்த வலிக்கு ஒரு காரணம் எனலாம்… ஆனால் அது ஒரு சுகமான வலி, அதுவும் தனக்கு பிடித்த கணவன் கொடுத்த வலி அவளுக்கு அது பெரியதாக தெரியவில்லை.
ஆனால் இவர்கள்…? வேலை ஒரு பக்கம் செந்தாழினிக்கு எரிச்சல் கொடுத்தது என்றால், இன்னொரு பக்கம் இவர்களின் சுயநலத்தில், தனக்கு பிடித்தவனின் குடும்பம் என்றது போய்.. எனக்கு பிடித்தவனை பிடிங்கி திண்கிறார்கள் என்ற எண்ணம் தான் இப்போது அவளுக்கு, அந்த அளவுக்கு அந்த குடும்பத்தினர்களின் செயல்கள் சுயநலமாக இருந்தது…
தனக்கு கொடுத்த சொத்தில் இருந்து, இந்த மாதம் அத்தனை பணம் வந்து இருக்க, அதை பற்றி மூச்சு விடாது இருக்கிறார்களே, என்ற ஆதங்கம் செந்தாழினுக்கு, அதுவும் இன்று அவர்கள் வாங்கி வர சொன்னதை கேட்டு கணவனின் கை தன்னால் அவன் சட்டையின் மேல் பாக்கெட்டை தொட்டு மீண்டதில், செந்தாழினிக்கு கணவனின் நிலை புரிந்து விட்டது தான்.
ஆனாலுமே அவள் … “ பணம் வேண்டுமா.?” என்று கேட்கவில்லை… அப்படி கேட்டால், அவன் தன்மானத்தை பாதிக்கும் என்று அமைதி காத்தாள்..அவள் கேட்காததிற்க்கு மற்றோரு காரணம். இப்போது அவளிடமும் பணம் இல்லை…
படிக்கிறாள், படித்து கொண்டே ஆன்லைனில் வேலை பார்க்கிறாள் தான். ஆனால் அதில் சொல்லிக் கொள்ளும் படி அந்த அளவுக்கு வருமானம் இல்லை..அதை விட தன்னுடைய மேல் தேவைக்கு மட்டும் தான் இது வரை பார்ட் டைம் ஜாப்பாக அதை செய்தாள்.
அவளுக்கு அந்த அளவுக்கு பணத்தேவையும், இது வரை இருந்தது கிடையாது.. ஆனால் கணவனின் கஷ்டத்தை பார்த்தவள், இனி பார்ட்டைம் ஜாப்பை புல் டைம் ஜாப்பாக தன் வேலையை மாற்றிக் கொள்ள கூட நினைத்து விட்டாள் தான்..
ஆனால் இப்போதைய கணவன் தேவையை அவளால் நிறைவேற்றி கொடுக்க முடியவில்லையே என்று ஏற்கனவே மாமியார் வீட்டவர்களின் மீது கொலை காண்டில் இருந்த செந்தாழினி மாலையும் விருந்தினர்கள் போகாது இரவு வரை தங்கியதில், சரி சாப்பிட்டு விட்டு போவார்கள் என்று தான் செந்தாழினி முதலில் நினைத்தது.. மகிபாலனும் அதையே தான் நினைத்தான்..
முதன் முதலில் தாம்பத்தியத்தின் ருசி அறிந்து கொண்ட மகிபாலனுக்கு பகலில் சிறிது நேரம் கூட மனைவியோடான தனிமை கிடைக்கவில்லையே என்று ஏற்கனவே ஏங்கி போய் கிடந்தவனுக்கு, இவர்கள் எப்போது போவார்கள் என்று தான் இருந்தது..
ஆனால் கெளசல்யா. “பொழுது போயிடுச்சி… இனி போய் உங்க வீட்டில் தூங்க தானே போறிங்க. அந்த தூக்கம் இங்கு தூங்கினா ஆகாதா..? என்று கேட்டதுமே அவர்களுமே உடனே சம்மதித்து விட்டனர்.
சரி இனி தூங்க தானே போகிறோம்.. இவ்வளவு வரை பொறுத்தாச்சி, சாப்பிட்டு நம்ம அறைக்கு போயிட போறோம் என்று கணவனும் மனைவியும் நினைத்து கொண்டு இருக்க
சாப்பிட்ட பின் தன் அறைக்கு செல்ல பார்த்த மகி பாலனிடம்…
கெளசல்யா… “பாலா மகி புதுசா கல்யாணம் ஆனவங்க அதனால உங்க ரூமுல மகி இருக்கட்டும்..” எனும் போதே மகி பாலனின் கண்கள் அடுத்து இருந்த மற்றொரு படுக்கை அறையில் தான் அவனின் பார்வை சென்றது..
“சுதாவுக்கு மசக்கை, அவள் உடம்பு என்ன செய்யுதுன்னு தெரியல சில சமயம் தூங்குறா.. உட்கார்ந்துக்குறா.. இங்கு இருந்தா அது மத்தவங்களுக்கும் இடஞ்சலா இருக்கும்…” என்று மகனின் பார்வையை புரிந்து கொண்ட கெளசல்யா இப்படி சொன்னாரா தெரியவில்லை..ஆனால் அந்த அறையில் சுதா தூங்குவாள் என்பதை மகனுக்கு தெளிவுப்படுத்தி விட்டார்..
இந்த பேச்சு அனைத்திற்க்குமே செந்தாழினி அமைதியாக தான் பார்த்தும் , கேட்டும் கொண்டு இருந்தாள்.. அன்னையின் இந்த பேச்சுக்கு மகி பாலனின் பார்வை சங்கடத்துடன் தன் மனைவியின் பக்கம் செல்ல..
கணவன் முகம் சிறிது சுணங்கினாலே, செந்தாழினிக்கு தாங்காது.. இதில் தன்னால் தன் கணவன் சங்கடப்பட்டு கொண்டு தன்னை பார்த்தால் அவள் தாங்குவாளா…?
கணவனோடான தனிமையை அத்தனை எதிர் பார்த்து காத்து கொண்டு இருந்தாலுமே, கணவனின் இந்த ஒரு பார்வைக்கு செந்தாழினி கண் அசைவிலும் உதடு அசைவிலும் பரவாயில்லை என்று சொல்ல.
மகி பாலனும் சரிம்மா.” என்று விட்டு மகிபாலன் மனைவியோடு அந்த இரவை கூடத்தில் தான் தூங்கியது…
இன்று ஒரு நாள் தான் என்று நினைத்து கொண்டு இருந்த மகிபாலனுக்கும், செந்தாழினிக்கும், அந்த வாரம் முழுவதுமே அவர்கள் இரவு தங்கள் கூடத்தில் தான் கழிந்தது…
காரணம் சம்மந்திங்கள் அவர்கள் வீட்டிற்க்கு சென்று விட்டார்கள் தான்.. ஆனால் அந்த வீட்டு பெண்கள்…
சுதாவுக்கு மசக்கை ஒரு காரணமாக அமைந்து விட.. தாய் வீட்டுல் சீராட அமர்ந்து கொண்டு விட்டாள்.. மகிளா வேலைக்கு போகும் பெண்…
மாமியார் வீட்டில் என்னையே சமைத்து வேலைக்கு கொண்டு போக சொல்றாங்க. எனக்கும் என் கணவருக்கும் மட்டும் என்றால் பரவாயில்லை.. மாமியார் மாமனாருக்கும் கூடவே சமச்சிடு என்று சொல்றாங்கம்மா.. என்னால முடியலேம்மா…” என்று அம்மாவிடம் இதை சொன்னவள்..
பின் தயங்கியப்படி வீட்டிலும் வேலை வெளியிலும் வேலை என்றால், நையிட்டு ரூமுக்கு போனதுமே தூக்கம் தான்ம்மா வருது… இப்போவே வயது இருபத்தியெட்டு ஆகிடுச்சி.” என்று மகிளா சொல்லி முடிக்க.
கெளசல்யாவுக்கு மகள் என்ன சொல்ல வருகிறாள் என்பது புரிந்து விட்டது..இந்த காலத்தில் வயதில் திருமணம் செய்தாலே குழந்தை பிறப்பத்தில், அத்தனை சிக்கல் இருக்கு, இதில் நான் கல்யாணம் செய்து வைத்ததே லேட்.. இதில் இப்படி என்றால் எப்படி மகிளாவுக்கு குழந்தை பிறக்கும்…? என்று தன் பெண்ணுக்கு ஒரு நல்ல தாயாக யோசிக்க கெளசல்யா தன் மகனுக்கு ஒரு தாயாக கூட யோசிக்க மறந்தவர்.
“கொஞ்ச நாள் இங்கு இரு மகி, மாப்பிள்ளையும் இங்கேயே இருக்கட்டும்..” என்று விட்டார்.
இந்த ஏற்பாட்டிற்க்கு நரேன் முதலில் மறுத்தான் தான்.. “ அங்கு அம்மா அப்பா தனியா இருப்பாங்க மகி…” என்று..
அதற்க்கு மகிளா.. “ அப்போ நான் வேலையை விட்டு விடுறேன்… என்னால் வீட்டிலும் வேலை செய்து விட்டு.. வெளியில் போயும் என்னால செய்ய முடியாது.. அதோட நமக்கு ஒன்னும் சின்ன வயசு இல்ல… இரண்டு மூன்று வருஷம் கழிச்சி குழந்தை பெத்துக்க.. உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்” என்ற மனைவியின் பேச்சில் நரேன் மாமியார் வீட்டில் இருந்து கொண்டு விட்டான்..
மனைவியின் சம்பளம் பணத்தை வைத்து தான் ஒரு பெரிய அடுக்கு மாடி குடியிருப்பை வாங்க விலை பேசிக் கொண்டு இருக்கிறான்..
மனைவி வேலையை விட்டு விட்டால் என்ன செய்வது என்ற பயம் ஒரு பக்கம் இருந்தாலுமே, இன்னொரு பக்கம் மனைவி சொன்ன சீக்கிரம் குழந்தை பெத்து கொள்ள வேண்டும் என்ற காரணமும்.. அவனுக்குமே சீக்கிரம் குழந்தை பெற்று வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் என்ற ஆசை…
மகிளா நரேன் இருவரின் ஆசையிலும் தவறு கிடையாது தான்… ஆனால் அவர்கள் ஆசை மட்டும் பார்த்து மற்றவர்களை பற்றி யோசிக்காது இருந்து விடுவதில் தான் அவர்கள் செயல்கள் சுயநலமாக உருவம் எடுக்கிறது.
இதோ தன் அம்மா வீட்டில் இருப்பது இரண்டு அறை தான்… தன் அண்ணனுக்குமே இப்போது தான் திருமணம் முடித்தவர்கள். தங்களை போலவே அவர்களுக்கும் ஆசை இருக்கும் என்று மற்றவர்களை பற்றி எல்லாம் யோசிக்க வேண்டாம்…
கூட பிறந்தவனை பற்றி கூட யோசிக்காது தனக்கு ஒரு வீடு, பின் தனக்கு ஒரு குழந்தை என்பதை மட்டும் யோசித்து இதோ அம்மா வீட்டிலேயே ஒரு வாரம் இருந்து விட.
சுதாவுமே அம்மா வீட்டில் இன்னொரு அறையில் இருக்க. புதியதாக திருமணம் முடித்த செந்தாழினியும் மகிபாலனும் அம்மாவோடு தான் கூடத்தில் உறக்கம்..
மகன் திருமணம் ஆகும் வரை மகன் மகன் என்று பார்க்கும் ஒரு சில தாய்கள், மகனுக்கு திருமணம் முடிந்த பின் அது என்னவோ மருமகளின் கணவனாக பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள் போல.. அதனால் தான் தன் இரு மகள்களை பார்த்த கெளசல்யா தன் மகனின் பக்கம் யோசிக்க மறந்து விட்டார்.
அதனால் தான் இரு மகள்களும் குடும்பமாக ஒரு தாய் வீட்டில் இருந்தால், அந்த குடும்பத்தில் எத்தனை செலவுகள் பிடிக்கும்.. அதுவும் தான் இழுத்து வைத்த பிரச்சனையில், மகன் இந்த மூன்று வருடங்களாக தனக்கு என்று யோசிக்காது, குடும்பத்திற்க்கு மட்டுமே யோசிக்க மகனுக்கு தான் என்ன செய்தோம் என்று கூட நினைக்காது..
தினம் தினம் மகன் வேலைக்கு கிளம்பும் முன்.. அன்று வரும் போது வாங்கி வரும் பொருட்களை ஒரு லிஸ்ட் போட்டு கொடுத்து அனுப்ப…
மகிபாலன் தான் மெல்லவும் முடியாது.. முழுங்கவும் முடியாது ஒரு அவஸ்த்தையோடு தான் அந்த ஒரு வாரத்தை அந்த வீட்டில் கடத்தினான்..
மகிபாலனுக்கு இந்த பிரச்சனை என்றால், செந்தாழினிக்கு வேறு மாதிரியான பிரச்சனைகள்.. சரி புதியதாக திருமணம் ஆன தங்களுக்கு தனிமை என்பது இந்த ஒரு வாரம் கிடைக்கவே இல்லை..
செந்தாழினி வீட்டில் இருந்தாலும் மகி பாலன் வேலைக்கு செல்பவன்,, அதுவும் மகிளா வேலைக்கு செல்லும் முன் சென்று அவள் வீடு வந்த பின் தான் மகிபாலன் வீட்டிற்க்கு வருவது.
அதோடு மகிபாலன் மொட்டை மாடிக்கு செல்லும் போது மனைவிடம் ஜாடை காட்டி விட்டு தான் செல்வான்.. செந்தாழினியும் எந்த வேலை செய்து கொண்டு இருந்தாலுமே, மகிபாலன் வீட்டில் இருக்கும் போது அவளின் கவனம் எப்போதுமே கணவனிடம் இருப்பதால், கணவனின் அந்த சாடையை புரிந்து கொண்டு அவளுமே கணவன் மொட்டை மாடிக்கு சென்ற சிறிது நேரத்திற்க்கு எல்லாம் ஏதாவது ஒரு சாக்கை வைத்து கொண்டு அவளுமே செல்வாள் தான்..
ஆனால் செந்தாழினி கணவன் மீது கவனம் வைத்து இருப்பது போல அவளின் மாமியார் இவளின் மீது கவனம் வைத்து இருந்து இருப்பார் போல.. சிறிது நேரத்திற்க்கு எல்லாம், செந்தாழினி என்ற குரல் கெளசல்யாவிடம் இருந்து இவளுக்கு அழைப்பு வந்து விடும்..
அதுவும் ஒரு முறை அழைத்து எல்லாம் கெளசல்யா விட்டு விட மாட்டார்.. தொடர்ந்தார் போல.. நான்கு ஐந்து முறை அழைத்தால், எங்கு இருந்து கணவனிடம் மொட்டை மாடியில் வேறு எதுவும் செய்ய முடியவில்லை என்றாலும் பேசவும் முடியாது கீழே வந்து விடுவாள்…
மருமகள் முகத்தை பார்த்தே கெளசல்யா புரிந்து கொண்டு விடுவார் போல…
“இல்ல செந்தாழினி ஐந்து பேருக்கு சாப்பாடு கட்டனும்.. அது தான் ஒன்டியா என்னால முடியல.. காலையில் தான் இந்த பர பரப்பு எல்லாம். இவங்க எல்லாம் போயிட்டா நமக்கு அப்புறம் என்ன வேலை இருக்கு. வீட்டில் ரெஸ்ட் எடுக்க வேண்டியது தான்..” என்று கெளசல்யா வயதான தன்னோடு மருமகளையும் கூட்டணியாக்க பார்த்தார்..
செந்தாழினி அதற்க்கு எந்த பதிலும் சொல்லாது கெளசல்யா செய்ய சொன்ன வேலைகளை கை பார்த்தாலுமே, அவளின் மனது வேகமாக யோசித்து கொண்டு தான் இருந்தது..
செந்தாழிக்கு மாமியாரின் தந்திரம் தெரியாது எல்லாம் இல்லை.. இதே செந்தாழினிக்கு அந்த நிகழ்வு நடவாது பிறந்த வீட்டில் பிரச்சனை இல்லாது சின்ன வயதில் வாழ்ந்த அந்த வாழ்வு வாழ்ந்து இங்கு வந்து இருந்து இருந்தால், இது போலான பேச்சு புரிந்து இருக்குமோ என்னவோ.. ஆனால் வயது சின்னது என்றாலுமே, அவள் தாய் வீட்டிலேயே தன் அண்ணிகளிடம் இருந்து குடும்ப அரசியல் கற்றுக் கொண்டு வந்ததால், தன் மாமியாரின் எண்ணப்போக்கு செந்தாழினிக்கு பிடிப்பட்டு தான் போனது..
முன் எல்லாம் முகத்துக்கு நேராக பேசும் கெளசல்யாவின் பேச்சில், இப்போது எல்லாம் இது போலான சாதுர்யமான பேச்சுக்கள் தான் கெளசல்யா மருமகளிடம் பேசுவது.. அது ஏன் என்று புரியாது எல்லாம் இல்லை..
ஆனால் எது வரை போகிறார்கள் என்று பார்ப்போம் என்பது ஒரு காரணம் என்றால், மற்றோரு காரணம் தன் கணவனின் மன நிம்மதி எந்த நாளும் கெட கூடாது என்பது தான்..
அதனால் செந்தாழினி அமைதியாக வேலை செய்து கொண்டு இருக்க. அதை ஒர பார்வை பார்த்த கெளசல்யாவுக்கோ, தான் சரியான வழியில் செல்வதில் முகத்தில் ஒரு சின்ன புன்னகையோடு மகள் மருமகள் மகனுக்கு சாப்பாடு கட்டும் வேலையில் மூம்முரமாக இருந்தார்…
ஆம் இரண்டு மருமகனுங்களும் இப்போது மாமியார் வீட்டில் தான் வாசம்… சுதாவுக்குமே வயது கூடி தான் திருமணம் செய்தது.. இதில் இரண்டு வருடம் அம்மா வீட்டிலேயே இருந்து விட்டாள்..
இப்போது மசக்கை என்று இங்கு இருப்பதால், சுதா கணவனோடான வாழ்க்கை எப்படி இருக்கும் என்று நினைத்து சுதாவின் கணவனையும் இங்கு அழைத்து கொள்ள..
சுதாவின் கணவனும்.. அம்மா வீடு மாமியார் வீடு என்று மாறி மாறி இருந்து கொள்கிறார்.
இதில் பாவம் மகிபாலன் தான் அனைத்து வகையிலுமே திண்டாட்டமாக போய் விட்டது. அனைத்திலுமே சமாளித்து கொண்டு தான் மகிபாலனும் செந்தாழினியும் இருந்தனர்..
ஆனால் ஒரு வாரம் சென்ற நிலையில், செந்தாழினிக்கு மாதவிடா வந்து விட்டது.. செந்தாழி சாதாரணமாகவே வசதியாக இருந்த பெண்.. இதில் ஒரு வாரம் அனைவரோடு படுக்கை என்பதே அவளுக்கு என்னவோ போல் தான் இருந்தது..
அது கணவனோடு கூடி களிக்க முடியவில்லை என்பதை விட. தூங்கும் போது உடை விலகுமோ.. தூக்கத்தில் நாம் எது போல தூங்குவோமா..
அதுவும் அந்த வீட்டில் இரு படுக்கை அறையில் ஒரு படுக்கை அறையில் மட்டும் தான் குளியல் அறை இருக்கிறது.. அதுவும் அங்கு குளிக்க மட்டும் தான் முடியும்..
மற்ற விசயமான காலை கடன் எல்லாம் அந்த வீட்டில் பின் கட்டில் இருக்கும் கழிப்பிடத்தில் தான் அனைத்துமே.. இதில் இரண்டு மாப்பிள்ளைகளும் இரவும் வெளியில் வரும் சூழல் வேறு.. தான் என்ன மாதிரி தூங்கிக் கொண்டு இருப்போமோ.. என்ற பயத்தில் தான் செந்தாழினி அந்த ஒரு வாரமும் கூடத்தில் தூங்கியது..
இதில் இந்த மாதவிடாயும் வந்து விட…செந்தாழினி தத்தளித்து போய் விட்டாள்.. அதுவும் மறு நாள் சனிக்கிழமை… இரண்டு மாப்பிள்ளை பெண்கள் என்று அனைவரும் வீட்டில் இருக்க.. சென்ற மாதம் அவள் அறையில் இருந்ததினால், அதே அறையில் இருந்த குளியல் அறையில் குளித்து விட்டு, அந்த சமயத்தில் செய்ய வேண்டிய மற்ற விசயங்கள் செய்ய வசதியாக இருந்தது..
ஆனால் இன்றோ… காலையில் எழும் போதே குளிக்க வேண்டி.. சென்ற வாரம் வரை தங்கள் அறையாக மட்டுமே இருந்த அறையில் தான். பேட் இருந்தது…
மாற்று உடையை முன் நாளே எடுத்து வைத்து இருந்த செந்தாழினி பேட் எடுத்து வைக்க மறந்து விட்டாள்..
குளித்து முடித்து விட்டு, அதை எடுக்க வேண்டி தங்கள் அறைக்கு செல்ல பார்த்த செந்தாழினியை கூடத்தில் அமர்ந்து காபி குடித்து கொண்டு இருந்த மகிளா.
“செந்தாழினி எங்கு போற… அவர் தூங்குறார்..” என்று சொன்னவளின் பேச்சிலும் சரி குரலிலும் சரி.. அத்தனை சிடு சிடுப்பு இருந்தது..
அந்த சமயம் அனைவரும் கூடத்தில் தான் இருந்தனர்.. அனைவரும் என்றால், ஆண்களான மகிபாலன் சுதா கணவன் பாஸ்கருமே தான் காலை காபியை குடித்து கொண்டு இருந்தது.
இப்படி அனைவரும் இருக்க மகிளா கேட்க.. ஒரு வித தயக்கத்துடன் செந்தாழினி மகிபாலனை பார்த்தாள்..
மகிபாலனுக்கு தெரியும்., மனைவியின் இன்றைய பிரச்சனை.. அதனால் மனைவியின் சங்கடம் புரிந்தவனாக..
“அவள் பொருள் ஏதாவது இருக்க போவா மகி.” என்று தங்கையிடம் சொன்னான்..
கணவன் தான் சொல்லி விட்டானே என்று நினைத்து செந்தாழினி மகிளாவுக்கு எதற்க்கு என்று சொல்லாது மீண்டுமே தங்கள் அறையின் கதவின் மீது கை வைக்க..
மகிளாவின்.. “ ஒரு ஆம்பிள்ளை தூங்கும் போது என்ன இது செந்தாழினி.. உனக்கு எப்படியோ.. ஆனா அவருக்கு ஒரு மாதிரி இருக்காதா..? வாரம் முழுவதும் வேலைக்கு போறோம்.. இன்று தான் எங்களுக்கு லீவு.. லீவ் நாளில் தான் இது போல தூங்க முடியும்…” என்று பட பட என்று பொறிய.. செந்தாழினியின் பார்வை இப்போது தன் மாமியாரை பார்த்தது..
இத்தனை நேரம் சமையல் அறையில் தனியாக தத்தளித்து கொண்டு இருந்த கெளசல்யா.. அதுவும் என்ன இது குளித்து விட்டு வருகிறேன் என்று சொன்ன மருமகளை இன்னும் காணுமே என்று மனதில் செந்தாழினியை தாளித்து.. அடுப்பில் கடுகை தாளித்து என்று இருந்த கெளசல்யா தன் சின்ன மகளின் பேச்சில் அவருமே ஸ்டவ்வை அணைத்து விட்டு கூடத்திற்க்கு வந்தவரை தான் நம் செந்தாழினி பார்த்தது..
மாமியாருக்கு செந்தாழிக்கு இன்று தான் மாதவிடாய் என்று தெரியுமே.. அவர் ஏதாவது சொல்லுவார் என்று நினைத்து தான் பார்த்தது.
அவரும் அதை பற்றி சொன்னார் தான்.. என்ன ஒன்று.. செந்தாழினி சார்பாக பேசாது மகளின் சார்பாகவே… ஆனால் யாரும் தவறாகவும் நினைக்காதப்படி…
“நேத்து எடுத்து வைக்கும் போது கூட இன்னுமே இரண்டு எடுத்து வைத்து இருந்து இருக்கலாமே மா…” என்று மருமகளிடம் சொன்ன கெளசல்யா.
தன் மகள் மகிளாவிடமோ… “ அண்ணிக்கு தெரியாது மகிம்மா. அவங்க வீட்டில் இது போல எல்லாம் யோசிக்க தேவையில்லே. அது தான் தோனல போல… நீ கொஞ்சம் சிரமம் பார்க்காம நீயே போய் அண்ணிக்கிட்ட எடுத்துட்டு வந்து கொடுத்துடும்மா..” என்று சொன்னவர்.
முடிவில்… “ சமையல் கட்டில் எனக்கு அவ்வளவு வேலை இருக்கு..செந்தாழினி கொஞ்சம் சீக்கிரம் வந்துடும்மா.” என்று சொல்லி விட்டு மீண்டுமே சமையல் அறைக்குள் புகுந்து கொண்டு விட்டார் கெளசல்யா..
மகிளா தன் அன்னையை முறைத்து பார்த்துவள் தன் கோபத்தை தன் நடையில் காட்டி அறைக்கு சென்றவள் செந்தாழிக்கு தேவைப்படும் பொருளை கொண்டு வந்து கொடுத்த மகிளா முகத்தை ஒரு முழம் நீளத்திற்க்கு தூக்கியும் வைத்து கொண்டாள்..
செந்தாழினி தன் கையில் இருந்த பொருளான பேட்.. ஒன்று இல்லாது அப்படியே எடுத்து வந்து தந்ததின் காரணம் புரிந்தது.. இனி இதையும் எடுக்க கூட அந்த அறைக்கு தான் செல்ல கூடாது என்பது தான்..
தன் கையில் இருப்பதை பார்த்தவள் ஒன்றும் பேசவில்லை… அதை எடுத்து கொண்டு பின் பக்கம் சென்றவள்.. பின் வீட்டிற்க்குள் வந்ததுமே கெளசல்யா அழைத்தது போல சமையல் கட்டிற்க்கு சென்று மாமியாருக்கு உதவி செய்யவும் ஆரம்பித்து விட்டாள்… அதை ஒரு வித திருப்தியோடு பார்த்த கெளசல்யா…
“காபி குடிச்சிட்டியாம்மா..?” குரலில் தேன் தடவி கேட்டவருக்கு..
“இல்ல நான் டிபன் சாப்பிட்ட பின்னவே குடிச்சிக்கிறேன்..” என்று சொன்னவளின் குரலில் ஒரு இயந்திர தன்மை மட்டுமே இருந்தன.
காலை மதியம் இரவு என்று இரண்டு மாப்பிள்ளை மகளுக்கு ஒரு சின்ன விருந்தே அந்த வீட்டில் நடந்து முடிந்து விட்டது.. இதில் வீட்டு மாப்பிள்ளை வேலைக்கு செல்பவன்.. இன்று தான் விடுமுறை தூங்கட்டும் ஒய்வு எடுக்கட்டும் என்று சொன்ன அந்த வீட்டு பெண்கள்..
மகிபாலனும் வேலைக்கு செல்பவன் தான்.. அவனுக்குமே விடுமுறை அன்று தான் பகலில் தூங்க முடியும்.. ஒய்வும் எடுக்க முடியும் என்பதை அந்த வீட்டில் இருப்பவர்கள் யாரும் நினைத்து பார்க்கவில்லை…
அன்று தான் நான்கு ஐந்து முறை மகிபாலனை கடைக்கு அனுப்பினார் கெளசல்யா. செந்தாழினியும் இதை அனைத்தையும் ஒன்றும் சொல்லாது கவனித்து கொண்டு தான் இருந்தாள்..
மகிபாலனுக்குமே இந்த ஒரு வாரத்தில் கூட பிறந்தவளின் நடவடிக்கைகள்.. ஏன் தன் அம்மாவின் செயல்கள் அனைத்துமே துளி கூட பிடிக்கவில்லை..
அதுவும் இன்று ஆழிக்கு மாதவிடாய்… சிறிது கூட ஒய்வு கொடுக்காது தொடர் வேலை.. அதுவும் பேட் மாத்த பின் கட்டுக்கும் வீட்டிற்க்குமே சென்று வந்தது… பிரவஸி இல்லாது கூடத்தில் கூட வீட்டு மாப்பிள்ளையில் யாராவது ஒருவர் இருப்பது என்பதில் செந்தாழினி இன்று முழுவதுமே சிறிது நேரம் கூட படுக்கவில்லை என்பதை அவனுமே கவனித்து கொண்டு தான் இருந்தான்..
செந்தாழினி கணவன் கஷ்டத்தை கவனிக்க.. மகிபாலனோ மனைவியின் கஷ்டத்தை கவனித்து கொண்டு இருந்தான்..
அன்று இரவு அனைவரும் சாப்பிட்ட பின் செந்தாழினி தன் மாமியாரிடம்…
“நாங்க மாடியில் எங்களுக்கு ஒரு ரூம் போட்டுக்கலாம் என்று இருக்கோம்..” என்று சொன்னதுமே…
கெளசல்யாவுக்கு அதிர்ச்சி.. இப்போது ஒரு ரூம் போடுவது என்றால் குறைந்த பட்சம் ஐந்து லட்சம் பிடிக்குமே…
அதனால்… “ என்னம்மா கீழே இரண்டு ரூம் இருக்க மேல எல்லாம் எதுக்கு தண்ட செலவு…” என்று செந்தாழினியிடம் சொன்னவர்..
அந்த பேச்சை தொடர விடாது மகிபாலனிடம்… “ சங்கரா மீன் இரண்டு கிலோ வாங்கிட்டு வந்துடு பாலா… சுதா நாளைக்கு இட்லிக்கு தொட்டுக்க மீன் குழம்பு வைச்சி சாப்பிடனும் போல இருக்கு என்று ஆசைப்படுறா. மீன் குழம்பு எல்லாம் முன் நாள் வெச்சி மறு நாள் சாப்பிட்டா தான் நல்லா இருக்கும்..” என்று சொன்னவர் கூடவே…
“மீனை ஆஞ்சியே வாங்கிட்டு வந்துடு பாலா…” என்று தன் பேச்சை முடித்து கொண்டவர்..
மகன் தன் பேச்சுக்கு கடைக்கு போவான் என்று கெளசல்யா இருக்க.. மகிபாலனோ…
மனைவியின் பேச்சை அவன் தொடர்ந்தான்.. “ எனக்குமே ஆழி சொன்னது போல ஒரு ரூம் போட்டுடலாம் என்று தான் தோனுதும்மா..” என்று விட்டான்…
அதற்க்கு கெளசல்யா ஒத்து கொள்ளவே இல்லை.. இப்போது தான் மகிளா கல்யாணம் முடிந்தது. மகிளா கல்யாணத்தை அப்படி சிம்பிளா செய்தோம்.. பணம் இல்லை என்று.. இப்போது மட்டும் எம்கு இருந்து பாலா பணம் வரும். செந்தாழினிக்கு பணக்கஷ்டம் எல்லாம் தெரியாது.. புரியாது.. நம்ம நிலையை நாம தானே அவளுக்கு சொல்லி புரிய வைக்கனும் பாலா..” என்று சொல்ல..
செந்தாழினியோ… “ பணம் தான் பிரச்சனை என்றால், என் அப்பா கொடுத்த அந்த காம்பிளக்ஸ் பிளாட் வாடகை இரண்டு மூன்று மாதம் சேர்த்து வைத்தால் போதுமே …” என்று கெளசல்யா இது வரை மகனிடம் மறைத்து வைத்த விசயத்தை போட்டு உடைத்து விட்டாள்..