Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

EENGUM GEETHAM...21

  • Thread Author
அத்தியாயம்….21

மகி பாலனுக்கு எப்படியோ.. ஆனால் அன்றைய விடியல் செந்தாழினிக்கு அழகான ஒரு விடியலாக தான் ஆரம்பித்தது… வருடக்கணக்காக மனதில் நினைத்தவன் கணவன்.. அவனோடான ஒரு வாழ்க்கை அமையுமா..? அமையாதா…? என்று நினைக்கும் வேளயில், தானாக … செந்தாழினி எந்த ஒரு முனைப்பும் செய்யாது கை பிடித்தது.. அதிசயத்திலும் ஒரு பேரதிசயம் தானே..

எந்த ஒரு நிகழ்வு அவள் வாழ்க்கையையே புரட்டி போட்டதோ, அந்த நிகழ்வே.. செந்தாழினி மகி பாலனை கை பிடிக்க ஒரு காரணமாக ஆயிற்று..

இல்லை என்றால் கண்டிப்பாக பாண்டியன் வீட்டு பெண் மகி பாலன் வீட்டிற்க்கு, அதுவும் செந்தாழினி குடும்பத்தினரே வலிய வந்து சம்மந்தம் பேசுவது என்பது நடவாத ஒரு விசயம்... அதுவும் மகி பாலன் குடும்பம் அவன் அன்னை செய்த விசயத்தில் இன்னுமே நொடிந்து போய் இருக்கும் இந்த வேளயில்.. அதற்க்கு சாத்தியமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்…

அதை சாத்தியமாக்கியது அந்த ஒரு நிகழ்வு தானே. அதுவும் இத்தனை வருடம் வளர்த்த தாய் வீட்டவர்கள் தன்னை புரிந்து கொள்ளாததை, தன்னிடம் பேசி பழகாத கணவன் புரிந்து கொண்டது… அந்த புரிதலில் நிகழ்ந்த அவர்களின் இந்த தாம்பத்தியம்..

கஷ்டத்தில் மட்டும் தான் தூக்கம் வராது என்பது கிடையாது.. அதிகப்படியாக மகிழ்ச்சியிலுமே தூக்கம் என்பது வராது தான் -போல.

விடியும் முன் தான் இருவரும் தூங்க ஆரம்பித்தது.. ஆனால் சிறிது நேரத்திற்க்குள்ளாகவே செந்தாழினிக்கு விழிப்பு தட்டி விட்டது.. இருந்தும் படுக்கையை விட்டு அவள் எழவில்லை… படுத்து உறங்கும் தன் கணவனை தான் அவள் ரசித்து கொண்டு இருந்தாள்..

அவன் கண் மூக்கு மீசை உதடு ஏன் அவன் அடர்த்தியான புரிவத்தின் இடையில் வெட்டி காயத்தினால் அந்த இடத்தில் இடையில் முடி வளராத அந்த விடுப்பட்ட புருவத்தை கூட அவள் மனது ரசித்து பார்த்தது…

அப்படி பார்த்த போது தான் அவன் மீசையில் இருந்த ஒற்றை வெள்ளை முடி அவள் கண்களுக்கு தெரிந்தது… அதை எடுக்கும் ஆசை தோன்ற… ஆசை வந்து விட்டாள்.. தனித்து இருக்கும் அவர்களின் அறையில் தடுக்க யார் இருக்கிறார்கள்..

இது எங்கள் அறை.. பக்கத்தில் படுத்து கொண்டு இருப்பது என் கணவராக்கும்… அவனிடம் தோன்றும் ஆசையை தடை செய்ய ஏது தடை என்று நினைத்து விட்டாள் போல.. எடுத்து விட்டாள்..

தவறு தவறு தன் பற்களை கொண்டு அதை எடுத்து விட்டவளையே இப்போது விழி விரித்து பார்த்து கொண்டு இருந்தான் மகி பாலன்…

தூக்கத்திலும் அவன் மனைவி உன்னித்து பார்த்தது அவனுக்கு உணர்த்தி விட்டது போல… மனைவி தன் வெள்ளை முடியின் மீது பற்களை வைத்து எடுக்கும் வேளையில் கண்களை திறந்து கொண்டவன்.. மனைவி செய்த வேளையில் மயங்கி, பின் அவளை மயக்க வைத்து ஆழியை ஆழ்ந்து ஆண்டு முடித்தவன்.. கூடத்திற்க்கு வர மணி எட்டை தொட்டு தான் இருந்தது…

அதுவும் அவன் மட்டும் தான் தனித்து வந்தான். ஆண் மகன் குளித்து முடித்து ஒரு லுங்கியை கட்டிக் கொண்டால் போதுமானது.. பெண்களுக்கு அப்படியா.? அதுவும் அன்று ஞாயிறு என்பதினால் நிதானமாக தான் வந்தான்.

வந்தவன் கண்ணுக்கு இரண்டு வாரங்கள் முன் தான் திருமணம் முடித்து கொண்டு சென்ற சின்ன தங்கையும், மாப்பிள்ளையும், அமர்ந்து இருப்பதை பார்த்தவன்..

மரியாதைக்கு… “ வாங்க எப்படி இருக்கிங்க…?” என்று விசாரித்தவன் தங்கையையும் பார்த்து..

“ஏப்படி இருக்க…?” என்று கேட்டவன் சமையல் அறைப்பக்கம் பார்த்து..

“ம்மா காபி..” என்று ஒரு குரலும் கொடுத்தான்..

மகன் குரலுக்கு காபியை கொண்டு வந்து கொடுத்த கெளசல்யாவின் முகத்தில் அந்த அளவுக்கு சுரத்து இல்லை தான்.. ஆனால் அதை கவனிக்கும் மனநிலையில் அன்று மகி பாலன் இல்லை.. அவன் கவனம் முழுவதுமே தங்கள் அறையில் இருந்த மனைவி மீது தான் இருந்தது.

எத்தனை வருட காதல் தன் மீது தன் மனைவிக்கு.. அதுவும் அவளின் அந்த குணம்.. தன் மீது இருக்கும் அந்த காதலினால் தானே ராகவ்விடம் அவளே சென்று வலிய நட்பு கொண்டது.. அதே காதல் தானே அவர்கள் செய்த தவறை கூட தன் மீது போட்டு கொண்டது.. அதுவும் எப்படிப்பட்ட பெயர் வரும் என்று தெரிந்தே… இந்த மூன்று வருடங்கள் அவள் பட்ட கஷ்டங்கள்..

அவள் இத்தனை தன் மீது காதல் கொள்ள தன்னிடம் என்ன இருக்கிறது.. அவனுக்கே தெரியவில்லை.. அதனால் இரவு மனைவியிடம் கேட்ட போது ..

அவளுமே . “எனக்குமே தெரியல… ஆனா எனக்கு உங்களை அத்தனை பிடிக்கும்…” என்று சொன்னவள் கூடவே மனைவி அவனிடம் ஒரு கேள்வி கேட்டாள்.

“ஊரே என்னை பத்தி தப்பா நினைக்கும் போது.. அதுவும் என் அப்பா அம்மா முதல் கொண்டு எல்லோருமே தப்பா நினைக்கும் போது நீங்க ஏன் நினைக்கல.. அவள் அப்படி இல்லை என்று அடித்து சொல்லும் அளவுக்கு நம்மிடையே பழக்கம் கூட இல்லையே…?” என்ற மனைவியின் கேள்விக்கும் சத்தியமாக அவனிடத்தில் பதில் இல்லை தான்..

ஒரு சில நிகழ்வுகளுக்கு இன்னது என்று பிரித்தெடுக்க முடியாது… அது போலான ஒரு காதல் தான் செந்தாழினிக்கு மகி பாலன் மீது… செந்தாழினி மீது நம்பிக்கை மகி பாலனுக்கு, இரவில் நடந்த பேச்சு , அது தொடர்ந்த நிகழ்வுகள் என்று மனைவியை பற்றியே நினைத்து கொண்டு இருக்க.. தன்னை சுற்றி தன்னையே முறைத்து கொண்டு இருந்த தன் அன்னை சகோதிரிகளை கவனிக்க தவறி விட்டான்..

அதோடு மகி பாலனின் கவனம் தன் மீது இல்லாததோடு, அறையில் இருந்து வெளி வந்த மனைவியின் மீது படிந்ததில், அதுவும் செந்தாழினி மகி பாலனை பார்த்த அந்த பார்வை, பதிலுக்கு மகி பாலன் தன் கையில் இருந்த காபி கப்பை மனைவியிடம் காட்டி குடிக்கிறியா..? என்பது போலான சமிஞ்சை என்பதை பார்த்து மாப்பிள்ளை எதிரில் எதுவும் சொல்ல முடியாத கோபத்தை கெளசல்யா பல்லை கடித்து கொண்டு இருந்தார்.

ஆனால் அது எல்லாம் அந்த வீட்டு மாப்பிள்ளைக்கு இல்லை போல. அதனால் தான் கணவன் மனைவியின் சாடைகளை பார்த்ததை கண்டும் காணாது போகாது.. அதை பகிரங்கம் படுத்தும் விதமாக…

“என்ன மாப்பிள்ளை.. நான் தான் புது மாப்பிள்ளை.. ஆனா நான் ஹாலில் உட்கார்ந்துட்டு இருக்கேன்.. நீங்க இப்போது தான் ரூமை விட்டே வெளியில் வந்திங்க.. சரி தான் பார்த்தா வெளியிலும் உங்க ரொமான்ஸ் தொடருது.. பார்த்துங்க மாப்பிள்ளை…” என்று மகி பாலனின் தனிப்பட்ட விசயத்தை சொன்னதோடு, அதை பெரிய ஜோக் அடித்தது போல அவனே சொல்லி விட்டு சத்தமாக சிரித்தும் வைத்தான் நரேந்திரன்..

அதை கேட்ட மற்றவர்களும் அந்த வீட்டு மாப்பிள்ளை பெரிய ஜோக் அடித்தது போல சிரித்து வைக்க.. இது என்ன பேச்சு என்பது போல் தான் மகி பாலனும் செந்தாழினியும் ஒருவருக்கு ஒருவர் பார்த்து கொண்டனர்..

அதுவும் செந்தாழினிக்கு ஆவது மகிளா நரேந்திரன் ஒரு விசயம் தெரியாது.. ஆனால் மகி பாலனுக்கு தெரியும் தானே.. அதை நினைத்து உன்னை போலவா நான் என்பது போல ஒரு பார்வை பார்த்தானே ஒழிய… வாய் திறந்து பேசவில்லை.. என்ன செய்வது ஒரு மத்தியதர வர்க்கத்தில் இரு சகோதரிக்கும் இடையில் பிறந்து விட்ட மகி பாலன் ஒரு சில விசயங்கள் பிடிக்கிறதோ இல்லையோ… குடும்பத்திற்க்காக விட்டு கொடுத்து செல்ல வேண்டிய ஒரு சூழல்..

ஆனால் அது போல எந்த வித சூழலும் செந்தாழினிக்கு இல்லாது போனதால், வெடுக்கென்று.

“ஜோக் சொன்னா அது மத்தவங்க தான் சிரிக்கனும்.. நீங்களே சிரிக்க கூடாது..” என்று சொன்னவள்..

தொடர்ந்து… “மத்தவங்களை வைத்து அது ஜோக்கா என்றாலும் பேசுவது நாகரிகம் இல்லை…” என்று முகத்தில் அடிப்பது போல பேசியவள்.. பாதி குடித்து கையில் வைத்திருந்த கணவனின் கையில் இருந்து அந்த காபியை பிடுங்கி குடித்தவள் அந்த கப்பை ஷிங்கில் போட சமையல் அறைக்குள் சென்றவளையே கூடத்தில் அமர்ந்திருந்த அனைவரும் ஆ என்று வாயை பிளந்து பார்த்து கொண்டு இருந்தனர்..

ஆனால் நரேனுக்கும் மகிளாவுக்கும் அது மிகவும் தலை இறக்கமாக போய் விட்டது… அதில் மகிளா தன் அன்னையை முறைத்து பார்க்க, கெளசல்யாவுக்குமே செந்தாழினியின் இந்த பேச்சு பிடிக்கவில்லை..

என்ன இது வீட்டு மாப்பிள்ளையிடம் இப்படி தான் பேசுவதா.. என்று நினைத்தார்..

இந்த பேச்சில் நரேனுக்கு அங்கு இருக்க பிடிக்கவில்லை போல.. அதனால் “இங்கு ஒரு பிரண்ட் வீடு இருக்கு போய் பார்த்துட்டு வரேன்..” என்று பொதுவாக கூறியவன் மகிளாவை முறைத்து பார்த்து விட்டு செல்லவும் நரேந்திரன் மறக்கவில்லை..

இந்த முறைத்து பார்ப்பது எல்லாம் அனைவரும் பார்க்க தான் நரேன் மகிளாவை பார்த்து விட்டு சென்றது.

அவன் கோபமாக போவது.. எல்லோருக்கும் தெரிய வேண்டுமாம்.. அதுவும் புது மனைவியை முறைத்து பார்ப்பது.. இப்போது தான் திருமணம் ஆனது.. பிரச்சனை என்று வந்தால் பெண்ணின் வாழ்க்கை தானே பாதிக்கும்.. அதை உணர்த்துவது போல உணர்த்தி செல்ல..

கெளசல்யாவும் அதையே கெட்டியாக பிடித்து கொண்டது போல..

“மகி என்ன டா பேச்சு… அவர் இந்த வீட்டு மாப்பிள்ளை… அது உங்களுக்கு நினைவு இருக்கா இல்லையா…?” என்று பேச்சு மகனிடம் இருந்தாலும், கெளசல்யாவின் பார்வை மருமகளிடம் தான் இருந்தது.. ஏன் என்றால் இந்த பேச்சு மருமகளுக்கு உண்டான பேச்சு அல்லவா…?

ஆனால் அது செந்தாழினிக்கு புரிந்ததா.? இல்லையா.? என்று தெரியவில்லை.. ஏன் என்றால் கணவனிடம் இருந்து ஒரு முனுக்கு தான் காபி குடித்தது..

இரவு முழுவதுமே தூங்காது இருந்ததில், இன்னுமே வேண்டும் போல இருக்க… சூடாக இருந்த பாலில் தனக்கு ஒரு காபொ போட்டு கொண்டு குடிக்க ஆரம்பித்தவளின் காதில் மாமியாரின் பேச்சு விழுந்தது…

ஆனால் சட்டை செய்யவில்லை.. முன் என்றால், மகி பாலனின் அன்னை கூட பிறந்தவர்கள் என்ற இந்த ஒரு காரணம் போதும், அவர்கள் என்ன தவறு செய்தாலும், அதை மன்னித்து என்பதை விட கண்டும் காணாமல் போக.

ஏன் ரத்தம் சம்மந்தமே இல்லாது.. மகி பாலனின் நட்பு என்ற இந்த ஒரே ஒரு காரணம் மட்டும் தானே.. மூன்று வருடங்களாக இந்த பழியே அவள் ஏற்க வைத்தது… அவள் அதை ஏற்க காரணம்.. அவர்கள் மகி பாலனின் நட்புக்கு உண்மையாக இருந்தார்கள்..

ஆனால் இவர்கள்.. மகிபாலனுக்கு தெரியாது.. தன் விட்டில் வாங்கிய அந்த சொத்தை இன்று வரை மகனிடம் சொல்ல கூட இல்லை..

அதுவும் தங்களை கல்யாணத்திற்க்கு பணத்திற்க்கு கணவன் அத்தனை கஷ்ட்டப்பட்டு கூட.. அதை பற்றி வாய் திறக்கவில்லையே.. இங்கு இருப்பவர்கள்…

அந்த சொத்து வாங்கியதில் தன் தாய் வீட்டில் மகி பாலனுக்கு தானே மானக்கேடு.. தன் அண்ணி அதை வைத்து தானே பேசியது.. என்று அதில் இவர்கள் மீது அத்தனை கோபத்தில் இருந்தாள்..

அவள் இயல்புக்கு அவள் உடனே கேட்டுக் இருந்து இருப்பாள்.. ஆனால் என்ன தான் இருந்தாலும் தங்கை கல்யாணத்திற்க்கு ஒரு அண்ணனாக அங்கும் இங்கும் அலைந்து கொண்டு இருக்கும் இந்த வேளயில், அதுவும் பணத்தை வைத்தும் அலையும் போது வீட்டில் பெண்களுக்கு இடையே பிரச்சனை என்றால், அது கணவனுக்கு தான் இன்னுமே கவலை அளிக்க கூடும் என்று தான் இன்று வரை செந்தாழ்ழினி அதை பற்றி பேசாது இருக்கிறாள்..

ஆனால் என் கணவன் என்னை பார்ப்பதும். நான் என் கணவனை பார்ப்பதும்.. இவங்க ஜோக் என்று பேசுவாங்க.. அதுக்கு இவங்க கீய சேர்ந்து நானுமே சிரிக்கனுமா…? என்று தான் இருந்தது.. அதனால் இவள் வாய் திறக்கவில்லை..

ஆனால் மகிபாலன் அந்த வீட்டின் மகன்.. அதனால் அம்மாவின் பேச்சுக்கு…

“யாரும் இங்கு தப்பா பேசலையேம்மா…?” என்று மகி பாலன் சொன்னது தான் தாமதம்…

மகிளா. “ என்னது தப்பா பேசலையா.. ? அப்போ உங்க பொண்டாட்டி பேச்சு சரி என்று சொறிங்கலா…?” என்று வரிந்து கட்டிக் கொண்டு கேட்டவளுக்கு.

அப்போது தான் காபியை குடித்து முடித்து விட்டு காய் கப்பை தன் முன் இருந்த டீப்பாவின் மீது வைத்த செந்தாழினி..

“அப்போ உங்க கணவன் பேசுனது சரி என்று நீங்க சொல்றிங்கலா…?” என்று செந்தாழினியின் கேள்வி மிக நிதானமாக அவளிடம் இருந்து வந்தது…

செந்தாழினியின் நிதானம் மகிளாவிடம் இல்லை… அதன் விளைவாக….

“என்ன என்ன தப்பா சொன்னாரு.. இருக்கிறதை தா…” என்று அடுத்து என்ன சொல்லி இருப்பாளோ மகிளா.. ஆனால் அவள் கையை வீசி கொண்டு செந்தாழினியின் அருகில் ஒரு மாதிரியாக சென்ற மகிளாவின் தோரணையில் மகி பாலன்.. தன் முகத்தில் அவளின் அந்த செயலின் பிடித்தம் இன்மையை அப்பட்டமாக காட்டியவனாக..

“மகி.” என்று மகி பாலன் ஏதோ சொல்ல ஆரம்பிக்கும் போதே… கெளசல்யா..

“என்ன இது சின்ன பசங்க போல பேசிட்டு.. காலையில் இத்தனை நேரத்திக்கு காபி மட்டும் தான் நடந்து முடிந்து இருக்கு.. வீட்டுக்கு வந்த மாப்பிள்ளை கூட வெறும் காபியோட தான் போனார்..” என்று கெளசல்யா சொல்லும் போதே மகிளா..

மீண்டும்.. “ இங்கு தான்..” என்று எதோ சொல்ல ஆரம்பித்தால் தான்..

ஆனால் அதற்க்குள் கெளசல்யா மகளிடம் கண்ணை காட்டியவாரே… சமிஞ்சை செய்தவர்…

“பிள்ளை உண்டாகி இருக்கும் பெண்.. இத்தனை நேரம் வெறும் வயிற்றில் இருக்க கூடாது பாலா…” என்று மகனிடம் சொன்னவர்..

கூடவே வாங்கி வரும் பொருட்களை ஒரு அட்டவணை சொல்வது போல அத்தனை நீளத்திற்க்கு சொன்னார்…

அவர் இத்தனை சொல்ல சொல்ல பாவம் மகி பாலன்.. இத்தனையா என்பது போல் தான் அன்னையை பார்த்தான்.. ஆனால் வாய் திறந்து எதுவும் கேட்கவில்லை.. பாவம் இதுவுமே ஒரு சில வீட்டில் ஆண்களின் சாபக்கேடு போல தான் இருக்கிறது..

நான் வெஜ்ஜில் எத்தனை வகைகள் உள்ளதோ அத்தனை வகைகளையும் அடக்கி சொல்லி முடித்த கெளசல்யாவுக்கே மூச்சு வாங்கி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்,.

இதுவுமே மகி பாலன் வாய் திறக்கவில்லை என்றாலுமே, செந்தாழினி கேட்டு விட்டாள்..

“ஏன் அத்தை இத்தனை. ஒரே நாளில் இத்தனையும் சாப்பிட முடியுமா..? என்று.

அவ்வளவு தான் இந்த முறை அந்த வீட்டின் பெரிய மகளும்..

“என்ன இது சாப்பிடுவதுக்கு எல்லாம்… கணக்கு சொல்ற… இது அப்பா கட்டின வீடு.. இது எங்களுடையதும் தான்…” என்று கோபமாக பேசிய மகள்களையும் கெளசல்யா….

“செந்தாழினி என்ன தப்பா சொல்லிட்டா ஒரே நாள்ளே காலி ஆகிடும்மா.. வேஸ்ட் ஆக போகுது என்று சொல்றா… நாம இது தான் என்று சொன்னா புரிஞ்சிக்க போறா… சின்ன பெண் தானே… “ என்று மகள்களிடம் மீண்டும் சாடை காட்டி அடக்கி தான் வைத்தார்…

பின் மருமகளிடம்… “மதியம் பெரிய மாப்பிள்ளையுமே சுதாவை பார்க்க வராங்கம்மா… அதோட அவள் நாத்தனார்… சம்மந்தி வீட்டவங்களை எப்படி சாப்பிடாமல் அனுப்புவது… அதோட சாப்பிட்டு பேசிட்டு பொழுது சாய தான் போவாங்க… சுதா இங்கு இருக்க தொட்டு அவங்க வீட்டுக்கு போய் பாவம் வயசான காலத்தில் என்னத்த என்று ராவுக்கு அவங்க செய்வது… அது தான் கொடுத்து விட நினைக்கிறேன்.

சுதா முழுகாம இருக்குறது தெரிஞ்சி மகிளா மாமியாருமே அவளை பார்க்க வரதா சொல்லி இருக்காங்க… மதியம் ஆகிடும் வரதுக்கு .. சாப்பிடாம எப்படி அனுப்ப முடியும்… அதோட சுதா மாமியாருக்கு வீட்டுக்கு கொடுத்து விட்டுட்டு இவங்களுக்கு கொடுத்து விடலேன்னா தப்பா போயிடுமே.. அது தான்.” என்று மருமகளிடம் விளக்கம் கொடுத்த கெளசல்யா..

மகனை பார்த்து… “ நேரம் ஆகுது பாலா.. சீக்கிரம் போய் வாங்கிட்டு வந்து கொடுத்தா தானே சாப்பிடும் நேரத்துக்கு செய்து முடிக்க முடியும்..” என்று சொன்னவர் கூடவே..

சுதா தான் எப்போவும் எனக்கு சமையலில் உதவுவது.. ஆனா அவளே வாந்தியும் தலை சுத்தலுமா இருக்கா.. அதோட இந்த வாடையில் இன்னுமே தான் குமட்டிட்டு வரும்… மகிளா சமையல் கட்டுக்கு வந்து பழக்கம் இல்லை.. அதோட புதுசா கல்யாணம் ஆனவ.. மாப்பிள்ளையோட கொஞ்சம் பேசிட்டு இருப்பா..” என்று இன்னுமே விளக்கி சொன்னவர்..

முடிவில்.. “ செந்தாழினி உன் கை பக்குவமும் நல்லா தான் இருக்கு.. நீயும் வாம்மா கொஞ்சம் விரசா சமையலை முடிச்சுடுவோம்..” என்று சொன்னவர்..

சொன்னது போலவே பத்து மணியளவின் நரேன் விந்து விட்டான். புது மாப்பிள்ளைக்க்கு ஆட்டுக்கால் சூப் கொடுத்து…

மகிளாவிடம். “இப்போ தான் கல்யாணம் ஆகி இருக்கு.. வீட்டிலேயே ஏன் அடங்கி இருக்கிங்க.. மாப்பிள்ளையோடு வெளியில் போயிட்டு வாம்மா…” என்று சின்ன மகளையும் சின்ன மாப்பிள்ளையையும் ஊர் சுத்த அனுப்பி வைத்த கெளசல்யா.

மசக்கையான பெண்ணை ஒய்வு எடுக்க சொல்லி… அனுப்பி விட்டவர்.. சொன்னது போலவே செந்தாழினியை வைத்து கொண்டு அனைத்து சமையலையும் செய்து முடித்து விட்டார்…

செந்தாழினிக்கு இந்த வேலைகளை பார்த்து எல்லாம் கவலை இல்லை.. செய்து முடித்து விட்டாள்..

அவள் கவலை எல்லாம்.. இத்தனை சொன்ன மாமியார் கணவனிடம் காசே கொடுத்து அனுப்பவில்லை..

அவளுக்கு தெரியும்.. குடும்பம் பார்ப்பது கெளசல்யா தான் என்பது.. அதோடு கணவன் தன் செலவுக்கு வைத்து கொண்டு மற்றது அனைத்தும் கெளசல்யாவிடம் தந்து விடுவான் என்பதும்..

இப்போது இதற்க்கு எல்லாம் பணத்திற்க்கு கணவன் என்ன செய்வான்.. அவளிடம் இருக்கிறது தான்.. ஆனால் அதை எடுத்து கொடுத்தால், கணவனின் தன்மானம் அடிப்பட்டு போகாதா…? இந்த குடும்பத்தில் அரசியல் நிறைய இருக்கிறது போல…

கெளசல்யாவின் பேச்சு சாதுர்யம்.. செந்தாழினிக்கு புரியாமல் எல்லாம் இல்லை.. ஆனால் தான் ஏதாவது சொல்ல போய் கணவனின் நிம்மதி கெட்டு விட கூடாது.. அதனால் தான் அவள் அமைதியாக சென்றது..

செந்தாழினி நினைத்தது போல் தான் கெளசல்யாவின் இந்த பேச்சில் தனிமையில் அம்மாவிடம் இரு மகள்களுமே.

“என்னம்மா அவள் இத்தனை பேசுறா.. நீங்க அடங்கி போவது போல பேசுறிங்க…?” என்று கோபத்துடன் கேட்ட போது.

“தோ பார்.. பாலாவினால் தான் குடும்பமே ஓடுது.. உங்க அப்பா பின்ஷனை வைத்து எல்லாம் உங்களுக்கு இனி வரும் சீர் எல்லாம் நிறைவா செய்ய முடியாது… கொஞ்சம் பார்த்து தான் நடந்துக்கனும்..

அதோட செந்தாழினி சொத்தான அந்த வாடகை வைத்து தான் இனி எல்லாம் உங்களுக்கு செய்யனும்… புரியுதா.. “ என்றதுமே… இரு மகள்களுக்குமே அன்னையின் பேச்சை ஒத்து கொண்ட போதுமெ…

செந்தாழினி பேச.. தாங்கள் அமைதியாக இருப்பதா…? என்ற ஆதங்கமும் மனதில் இருக்க தான் செய்தது…

பின் விருந்து இரு மாப்பிள்ளை இரு சம்மந்தி வீட்டவர்கள் சாப்பிட்டு விட்டு மாலை செல்வார்கள் என்று பார்த்தால், இரவும் அங்கேயே டேரா போட்டு விட. செந்தாழினிக்கு தான் முதுகு ஒடிந்து விட்டது..

ஆனால் செந்தாழினி அதை கூட விட்டு விட்டாள்.. இரவு அந்த வீட்டின் இரு படுக்கை அறைகளையுமே அந்த வீட்டின் இரு மகள்களுமே ஆக்கிரமித்து கொள்ள.. செந்தாழினியும் மகி பாலனும்.. கூடத்தில் வயதானவர்களோடு தான் படுக்க வேண்டி இருந்தது..



அது போலான அவர்களின் இரவு உறக்கம் அன்று மட்டும் இல்லாது தொடர்ந்ததில், ஒரு நாள் செந்தாழினி அனைவரும் இருக்க தன் மாமியாரிடம்..

“மேல ஒரு அறை கட்டலாம் என்று இருக்கேன்…” என்று கூறினாள்… இந்த விசயம் மகிபாலனுக்குமே புதிய செய்தி தான். அதில் மனைவியின் முகத்தை தான் பார்த்தான்…
















 
Active member
Joined
Jul 13, 2024
Messages
165
Arumai. Senthazhini, poruthathu pothum pongi Elu. Thappae pannathae nee ethuku adangi poganum.Amma and magalukku vaaiyai thirakka rights illai
 
Last edited:
Active member
Joined
May 12, 2024
Messages
199
Senthazhini porumaiya irukka koodathu… antha kizhavi ya adakkina matha rendum thana adangum
 
Top