Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Eengum Geetham...22...1

  • Thread Author
அத்தியாயம்…22..1

மகிபாலன் ஆழி சொன்னது போல மேல ஒரு ரூம் எடுத்து விடலாம் என்ற பேச்சில், கெளசல்யா மகனை ஒரு மாதிரியாக தான் பார்த்தார்…

காரணம் அவரால் வீட்டில் அத்தனை பொருளாதார சிக்கல் வந்த பின் கூட.. வீட்டு நிர்வாகம் முதல் கொண்டு அந்த வீட்டில் எடுக்கும் முக்கியமான முடிவுகள் அனைத்துமே கெளசல்யா தான் எடுப்பது…

இப்போது தான் வேண்டாம் என்று சொல்லி கூட.. மனைவி சொன்னது போல வீடு கட்டலாம் என்று மகன் சொன்னதில், இப்போது பணம் பிரச்சனை போய்… அவனுக்கு மனைவி முக்கியமா…? அம்மாவா…? என்ற புதியதாக மனதில் ஈகோ பிரச்சனை கெளசல்யாக்கு வந்து விட…

அதில்… “செந்தாழினிக்கு நம்ம வீட்டு நிலை என்ன தெரியும் பாலா….? அவங்க வீட்டில் பணத்தை பற்றி யோசிக்க தேவையே இல்லை… அதனால் தான் ரூம் போடலாம் என்று எதை பற்றியும் யோசிக்காது சட்டுன்னு சொல்றா..

ஆனா உனக்கு நம்ம குடும்ப சூழல் தெரியும் தானே பாலா.. இப்போ தான் ஒரு கல்யாணத்திற்க்கு இரண்டு கல்யாணம் முடிச்சு இருக்கோம்.. அதோட சுதா குழந்தை உண்டாகி இருக்கா.. அதுக்கு பிரசவம் குழந்தைக்கு தொட்டில், மாமியார் வீட்டிற்க்கு அனுப்பும் போது குழந்தைக்கு நகைகள் எல்லாம் போட்டு அனுப்பனும் பாலா…

நாளையும் யோசிச்சி தான் நான் இப்போ வேண்டாம் என்று சொன்னேன்…. இன்னும் இரண்டு வருஷம் போகட்டும் பாலா… செந்தாழினி விருப்பப்படியே மேல ரூம் போடலாம்..” என்று மகனிடம் பதமாக தான் சொன்னார்..

ஒன்றுக்கு இரண்டு பெண்ணை வைத்து கொண்டு இருக்கும் கெளசல்யா… அனைத்திற்க்குமே மகனை சார்ந்த நிலையில் இருப்பவரும்… அதோடு பெரிய இடத்தில் மருமகள் வந்த பின் கொஞ்சம் இதமாக பதமாக தான் பார்த்து பேச வேண்டி இருந்தது..

முன் இது பற்றி யோசிக்காது பேசி விட்டதில் மருமகளும் தன் முகத்திற்க்கு நேராக பேசி விட. கெளசல்யாவுக்கு அத்தனை ஆத்திரம் தான்.. அதில் தன் ஒன்று விட்ட அக்காவிடம்..

“பாருக்கா இப்படி பேசிட்டா… நாம எல்லாம் கல்யாணம் முடிந்து இப்படியா பேசினோம்.. பெரியவங்களை மரியாதை இல்லாது நடத்தி தான் இருக்கோம்மா…” என்று மாமியாரோடு குடும்பம் நடத்தாத கெளசல்யா தன் ஒன்று விட்ட அக்காவிடம் புலம்பியதில்..

அவர் தான்.. “தோ பாரு கெளசல்யா நீ இது போல கோபமாகவும் வீராப்பாகவும் பேசிட்டு இருந்தா வேலைக்கு ஆகாது…” என்று அவர் பக்குவமாக தங்கைக்கு சொல்ல..

அதற்க்கு கெளசல்யா… “அப்போ நான் நேத்து வந்தவளுக்கு பணிந்து போக வேண்டுமா…?” என்று கோபத்துடன் கேட்டார்..

இவருமே இந்த வீட்டிற்க்கு முன் நேத்து வந்தவர் தான் என்பதையும், இவர் இன்று அளவுக்குமே இந்த குடும்பத்தில் ஆணி வேராக இருப்பது போல தான் நாளை இந்த வீட்டின் ஆணி வேர் தன் மருமகள் தான் என்பதை மறந்து விட்டு கேட்டார்…

அதற்க்கு அந்த ஒன்று விட்ட அக்காவும்.. “ அடியே அவசரத்துக்கு பிறந்தவள் போல நான் சொல்ல வருவது என்ன என்று முழுசா கேட்காது எண்ணையில் விழுந்த அப்பளம் போல குதிக்காதே டி…” என்று அடுத்து கெளசல்யாவை பேச விடாது செய்த பின்.

அவர் சொன்னது இது தான்.. “உன் பின்ஷன் பணத்தை மட்டும் வைத்து உன்னால குடும்பத்தையும் நடத்தி உன் இரண்டு பெண்களுக்குமே நல்லது கெட்டதை உன்னால பார்க்க முடியுமா.?” என்று கேட்டதற்க்கு கெளசல்யாவின் தன்னால் முடியாது என்று தான் மறுத்து கூறியது.

“அது தான் சொல்ல வரேன்… அதோட உன் மருமகளுக்கு தான் அந்த சொத்து இருக்கு… முறைப்படி பார்த்தா அந்த வாடகை எல்லாம் மருமகள் மகன் தான் வாங்கனும்… உன் மகன் கிட்ட இதை சொல்லலே என்று சொல்ற.. அது வேறு தெரிந்தா.. அவன் என்ன செய்வான் என்று தெரியல.. அதோட நீயே சொல்ற இப்போவே மகன் மருமகளை அப்படி பார்க்கிறான் என்று நாளை பின்னே தனியா போனா நீ என்ன செய்வே…

ஒரே வீட்டில் பிறந்தவங்க நாளை பின்னே பொருளாதார நிலையில் ஒருத்தவங்க உயர்ந்து கூட பிறந்தவங்க தாழ்ந்து இருந்தா நிச்சயம் தாழ்ந்தவங்களை மதிக்க மாட்டாங்க… உன் மருமகள் அம்மா வீட்டிலேயே அப்படி பணம் இருக்கு..”

“ இதுல இந்த வாடகை எல்லாம் சேர்ந்தா.. அவங்க எங்கேயோ போயிடுவாங்க.. உன் இரண்டு மகள்களுமே என்ன தான் மாங்கு மாங்கு என்று வேலை செய்து சிக்கனம் பிடித்து சேர்த்து வைத்தாலுமே, உன் மகன் உயரத்தை உங்க இரண்டு மகள்களும் தொட முடியாத உயரத்தில் தான் நிற்ப்பாங்க… அதனால நீ உன் மகனையும், மருமகளையும் அனுசரித்து போவது தான் நல்லது…”

“அந்த வாடகை பணத்தை கொண்டு நீ கொஞ்சம் உன் மகளுங்களுக்கு சேர்த்து வைக்கலாம் தானே.. உன் மகன் இனி சேர்த்து வைக்கனும் என்பது இல்ல. உன் மருமகளுக்கு கொடுத்து அந்த சொத்து மதிப்பே அத்தனை கோடியை எட்டும்.. இதுல தூக்கி நிறுத்த மாமனார் இருக்காங்க. புத்தியோட பிழச்சிக்கோ .. நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்..” என்று தன் ஒன்று விட்ட அக்காவின் புத்திமதியில் தான்..

கெளசல்யா இந்த வீட்டில் எப்போதும் போல தான் நினைத்ததும் நடக்கனும்.. அதே சமயம் மகன் மருமகளை பகைத்தும் கொள்ள கூடாது என்று நினைத்து கெளசல்யா அம்மா என்னவோ இதமாக பதமாக தான் பேசினார்.

ஆனால் செந்தாழினி ஒன்றும் தெரியாத பெண் இல்லையே. இவர்களை பற்றிய அவளின் அனுமானம் வேறு என்றதில், கெளசல்யாவின் இந்த ஜால வார்த்தைகள் எல்லாம் செந்தாழினியிடம் எடுப்பட வில்லை என்று தான் சொல்ல வேண்டும்..

அதனால் தான் அவர் கெளசல்யா சொன்ன. “இரண்டு வருஷம் கழிச்சி மேல ரூம் எடுக்கலாம்..” என்றதற்க்கு.

உடனே செந்தாழினியிடம் இருந்து …. “ அப்போ அந்த இரண்டு வருஷமும் நாங்க இங்கேயே படுத்துக்கட்டுமா..?” என்று அவர்கள் அமர்ந்திருந்த கூடத்தை சுட்டி காட்டி கேட்டவளை மகிபாலனை தவிர்த்து கெளசல்யா மட்டும் அல்லாது மகள்கள் மருமகன்கள் அனைவருமே அதிர்ச்சியோடு தான் பார்த்தனர் செந்தாழினியை…

மகிளா தான்… “என்ன பேசுற. செந்தாழினி… நீ உங்க வீட்டிற்க்கு போனா உனக்கு தனி ரூம் கொடுக்க மாட்டாங்கலா.. நாங்க என்ன இங்ககேயேவா இருந்துட போறோம்..” என்றவளை செந்தாழினி ஒரு மாதிரியாத தான் பார்த்தாள்..

காரணம்… செந்தாழினி உடனே அறை கட்ட வேண்டும் என்று இந்த முடிவு எடுக்க காரணமே.. காலையில் பின் கட்டில் கெளசல்யா தன் இரு மகள்களிடம் பேசியதை இவர் கேட்க நேர்ந்ததினால் தான்…

கெளசல்யாவின் பெரிய மகள் சுதா தன் அம்மாவிடம்…

“ம்மா என் மாமியார் அவங்க வீட்டிற்க்கு எப்போ வரேன் என்று கேட்டுட்டு இருக்காரும்மா.. அதோட இவருமே நமக்கு கல்யாணம் முடிந்து மூன்று வருஷம் முடிஞ்சிடுச்சி ஆனா நாம ஆறு மாசம் கூட சேர்ந்தாப்ப்பப இல்ல.. எத்தனை நாளை தான் நான் இங்கு வந்து இருக்க முடியும்.. அதுவும் புதுசா கல்யாணம் செய் உன் தமி கூடத்தில் படுத்துட்டு இருக்கும் போது நாம இங்கு.. எனக்கு என்னவோ போல இருக்கு என்று சொல்றார்.. ம்மா..” என்று சொன்னவள் கூடவே…

“ஆனா இங்கு போல எனக்கு வேலை வேலைக்கு எதுவும் செய்து கொடுக்க மாட்டாங்க.. நான் தான் அவங்களுக்கு செய்து கொடுக்கனும்.. இந்த வயதுக்கு பிரகன்ஸி.. ஒன்னும் ஆக கூடாது… என்று தோனுதும்மா… ஆனா அவரையும் நினைக்கனும்..” என்று சிதா சொன்னதற்க்கு தான் கெளசல்யா…

“நீ அங்கு எல்லாம் போக வேண்டாம் . குழந்தை பிறந்து ஏழு மாதம் கழித்து நீ உன் மாமியார் வீட்டிற்க்கு போனா போதும்.. .. மாப்பிள்ளை இங்கு வந்து போக சொல்.. “ என்று அந்த வீட்டின் மாப்பிள்ளை பாஸ்கரன் புது மாப்பிள்ளை கூடத்தில் படுத்து இருக்கிறான் என்று அவன் யோசிக்கும் அளவுக்கு கூட பெத்த தாய் யோசிக்காது பேச..

உடனே மகிளா.. “ம்மா நானுமே என் மாமியார் வீட்டிற்க்கு போனா இப்போதைக்கு குழந்தை உண்டாகாதும்மா… நானே சமையல் செய்து கட்டிட்டு போகனும்.. அதோட இங்கு இருந்து என் ஆபிஸ் பக்கம்.. ஆனா என் மாமியார் வீட்டில் இருந்து தூரம்மா…” என்று சொல்ல

“உன்னை யாருடி அங்கு போக சொன்னா.. நீ குழந்தை உண்டாகும் வரை இங்கேயே இரு.. அது தான் மாப்பிள்ளை வந்துட்டு தானே இருக்கார்…”

பின் பக்கம் இருக்கும் கழிப்பறையை உபயோகிக்கு சென்றவளின் காதில் இத்தனையும் விழ .. அதனால் மீண்டுமே வீட்டிற்க்கு திரும்பும் போது கடைசியாக..

கெளசல்யா சொன்ன. “ பாலா கூடத்தில் படுத்துக்குறான் என்று எல்லாம் ரொம்ப் அ யோசிக்க வேண்டாம்.. உங்க இரண்டு பேருக்கும் பிள்ளை பேறு பார்த்துட்டு செந்தாழினி குழந்தை உண்டாகினால் போதும்.. அவளுக்கு என்ன உங்களை போல வயது அதிகமா என்ன…?” என்றும் கேட்ட தாய்க்கு தன் மகனின் வயதை மறந்தது ஏனோ…

அனைத்தும் கேட்டவளுக்கு அப்போதே மாடியில் ஒரு அறை கட்ட வேண்டும் என்ற முடிவை எடுத்து விட்டாள் செந்தாழினி..

கீழேயே இடம் நிறைய இருக்கிறது தான். அறை கீழே கூட கட்ட வசதி இருக்கிறது தான்.. இருந்தும் செந்தாழினி மேல அறை எடுக்க காரணம்.. ஒன்று மேல் மொட்டை மாடி தன் கணவனுக்கு மிகவும் பிடித்த இடம்.. என்பது ஒரு காரணம் என்றால், இன்னொரு காரணம் கூட்டு குடும்பத்தில் இருந்தாலுமே, தனக்கும் தன் கணவனுக்கும் பிரவேஸி வேண்டும் என்று நினைத்தாள்.. கீழே அறை இருக்கும் வரை அது எப்போதுமே நடக்காது என்பதை உணர்ந்து தான் மேல அறை எடுக்க எண்ணியது..

ஆனால் இப்போது அறை கட்டுவதையே இரண்டு வருடத்திற்க்கு தள்ளி போட்டதில் செந்தாழினி கேட்டு விட்டாள்..

இரண்டு வருஷன் கூடத்தில் தூங்கட்டுமா… என்று… செந்தாழினிக்கு அவ்வளவு ஆத்திரமாக இருந்தது..

இதில் மகிளா. “உங்க வீட்டில் உனக்கு ரூம் கொடுப்பாங்க தானே …” என்று கேட்டவளுக்கு பதில் செந்தாழினி அவளிடம் கொடுக்கவில்லை..

நீ எல்லாம் எனக்கு ஒன்றுமே இல்லை என்பது தான் செந்தாழினியின் எண்ணம். அதனால் அவள் பேச்சு முழுவதுமே தன் மாமியாரை பார்த்து தான்…

“கொடுப்பாங்க… கண்டிப்பா கொடுப்பாங்க தான. இப்போவுமே என் ரூம் எனக்கு அங்கு இருக்கு தான்… ஆனா பாருங்க நான் அங்கு இருந்தாலும், இல்லை என்றாலுமே என்னுடைய இரண்டு அண்ணங்களும் அண்ணிகளும் கூடத்தில் தூங்குவது இல்லை.” என்றும் சொல்லி விட்டாள்..

செந்தாழினி இதை சொன்ன அடுத்த நொடி மகிளாவுக்கு, அத்தனை.. அத்திரம்… அதுவும் தன் அம்மா சிறிது நாட்களாக தங்களுக்கு என்று பார்த்து பார்த்து செய்தாலுமே, மருமகளின் இந்த பேச்சில் தழைந்து பதில் சொல்வது அவளுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை…

அதன் எதிரொலியாக செந்தாழினியின் வீக் பாயிண்டான.. மற்றவர்களை பொறுத்த வரை தான் அது வீன் பாயிண்ட்.. ஆனால் செந்தாழினியை பொறுத்த வரை தான் அவளின் பலமே என்று தெரியாது..

மகிளா.. “ ஆமாம் ம்மா ஆமாம் ஆமாம். இனி அவளை கூடத்தில் எல்லாம் படுக்க வைக்க வேண்டாம்.. ஏன்னா அந்த வயசுலேயே ஒன்றுக்கு ஐந்து பேரு கூட இருந்துட்டு வந்தவ… ஆம்பிள்ளை இல்லாது அவளாள் இருக்க முடியாது.. இப்போ கூடத்தில் படுக்க வைத்து.. இங்கு ஒன்றும் வேலைக்கு ஆகல என்று வெளியில் பார்த்துட போறா.” என்று மகிளா சொன்ன நொடி…

செந்தாழி அதிர்ச்சி.. அவமானம் என்று எல்லாம் ஆகவில்லை.. அவள் பேச்சை கை கட்டிக் கொண்டு தான் கேட்டு கொண்டு இருந்தாள்.

ஆனால் மகிபாலன் கை கட்டிக் கொண்டு இருக்கவில்லை.. கை நீட்டி விட்டான்..

ஆம் மகிளாவை மகிபாலன் தன் ஐந்து விரல் அவளின் கன்னத்தில் படியும் அளவுக்கு அடித்து விட்டான்…

அடித்ததோடு மட்டும் அல்லாது.. அவளை ஏதாவது சொன்ன… தொலைத்து விடுவே என்று விரக் நீட்டி எச்சரிக்கையும் விடுக்க..

மகிளாவின் கணவன் நரேன்.. மகிபாலனின் சட்டையை பிடித்ததோடு மட்டும் அல்லாது…

“அவள் என்ன தப்பா சொல்லிட்டா.. உன் பொண்டாட்டி போஷியை தானே சொன்னா….ஓ பணம் உள்ள மனைவி என்றால் ஒழுக்கம் எல்லாம் தேவையில்லை போல…” என்று நக்கல் குரலில் சொன்னவனிடம் இருந்து தன் சட்டையை விடுவித்து கொண்டவன்..

“ஒழுக்கம்… இந்த ஒழுக்கத்தை பத்தி யார் பேசுவது என்று தெரியல பாரு.. அது தான் எனக்கு காமெடியா இருக்கு டா…” என்ற மகிபாலனின் இந்த பேச்சில்,

கெளசல்யா… “ என்ன பேசுற என்று தெரிந்து தான் பேசுறியா பாலா…” என்று கோபத்துடன் கேட்டவளிடம் மகிபாலன்..

“நான் தெரிந்து தான் பேசுறேன்ம்மா. ஆனா உங்க மகள் என் பொண்டாட்டியை பேசும் போது பேசாத நீங்க இப்போ மட்டும் ஏன்மா பேசுறிங்க…?” என்று அவனுமே விடவில்லை… அதுவும் செந்தாழினி தன் மீது வைத்திருக்கும் அந்த காதல்.

தான் எதுவுமே அவளுக்கு செய்யவில்லை.. ஆனால் அவள் தனக்காக செய்த விசயங்கள்… தன்னால் இத்தனை நாட்கள் அந்த பெயரோடு இருக்க. இங்குமே அதை வைத்து பேசியதில், மகிபாலனுக்கு தன் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை.. அதில் பேசி விட..

கெளசல்யாவுக்குமே இப்போது தன் அக்காவின் போதனைகள் அனைத்துமே மறக்கடித்து விட்டது தன் மகனின் இந்த பேச்சு…

“இல்லாது ஒன்னும் என் பொண்ணும் மாப்பிள்ளையும் சொல்லலே.. ஆனா இப்போ நீ சொல்ற பாரு.. இது தான் அபாண்டம்… நானும் தான்டா இரண்டு பெண்களை பெத்தேன்.. வயது கூடி தான் டா கல்யாணம் செய்து வைத்தேன்.. ஆனா என் இரண்டு பொண்ணை பத்தி யாராவது ஒரு வார்த்தை தப்பா பேச முடியுமா.. சொல்.. ஆனா இவளை பத்தி ஊரே பேசும்.” என்றதில்..

மகிபாலன் தன்னிலை மறந்து விட்டவனாய்.. “ ஆமாம் ஆமாம் இந்த ஊருக்குள்ள யாரும் தப்பா பேச முடியாது.. ஆனா ஊரு விட்டு ஊரு போய் தான் எல்லாமே.. அப்போ இங்கு இருக்கிறவங்களுக்கு என்ன தெரிய போகுது.. தப்பு செய்தவள் நல்லவளா இருக்கா எந்த தப்பும் செய்யாதவ. கெட்டவளா தெரியிற.” என்ற மகிபாலனின் இந்த பேச்சு செந்தாழினிக்கே புதியதாக இருக்க. கணவனை யோசனையுடன் அவள் பார்க்க… மகிளா ஒரு வித பயத்துடன் தன் அண்ணனை பார்த்தாள் என்றால், கெளசல்யா ஊக்கிரமாக மகி பாலனை பார்த்தவள்…

“என்ன டா சொல்ற. என்ன சொல்ற. உன் பொண்ட்டாட்டி மேல இருக்கும் தப்பை மறைக்க உன் கூட பிறந்தவள் மீது பழியை தூக்கி போடுவீயா…” என்று மகனை பாய்ந்து அவன் சட்டையை பிடித்து கொண்டு..

“எப்படி டா..? எப்படி உன் கூட பிறந்தவளையே நீ தப்பா பேசுவ. சொல். சொ..” என்று அப்படி ஒரு ஆவேசம் ஆக்கிரோஷம் தெரிந்தது கெளசல்யாவின் பேச்சில்..

இரு மாப்பிள்ளை வீட்டில் இருக்க.. அவர்கள் முன்நிலையிலேயே கூட பிறந்தவனே இப்படி தப்பாக பேசினாள் மகளின் வாழ்க்கை என்னாவது….?

இப்போதே… அதை தீர்த்து வைத்து விட வேப்டும் என்ற ஆவேசம் கெளசல்யாவுக்கு..

அதில்.. “ நீ இதை வைத்து இப்படி சொன்ன.. நீ எனக்கு இப்போவே சொல்லி ஆக வேண்டும்.. சொல்.. சொல்..” என்று கத்திக் கொண்டு இருக்க…

மகிளா தான்…. “ விடுங்கம்மா.. விடுங்க. ண்ணா கோபத்தில் ஏதோ சொல்லிட்டாரு விடுங்க…” என்று அந்த பேச்சை அப்படியே கத்தரிக்க தான் அவள் பார்த்தாள்..

ஆனால் கெளசல்யா…. “ அது எப்படி டி விட சொல்ற…. கூட பிறந்தவனே இப்படி சொன்னா.. இதை கேட்டுட்டு இருக்க மாப்பிள்ளை உங்களை பத்தி என்ன நினைப்பாங்க… பொண்டாட்டி மோகத்தில் கூட பிறந்தவங்க வாழ்க்கையை கூட பார்க்க மாட்டானா.. அந்த அளவுக்கு மயக்கி வெச்சி இருக்காளா….?” என்று தன் பயத்தை கூற.

நரேன் தாம் .. “ விடுங்க அத்த. இது எல்லா பெருசா நான் எடுத்துக்க மாட்டேன்… விடுங்க விடுங்க. “ என்று இந்த சண்டையை தீர்க்க நினைத்ததோடு நரேன்.. இந்த ஆட்டத்தை கலைக்க தான் பார்த்தான்..

பாவம் இதில் சுதாவுக்கு தான் ஒன்றும் புரியவில்லை.. ஆனால் அவள் கணவன் பாஸ்கரனுக்கு என்ன பிரச்சனை என்று புரியவில்லை என்றாலுமே ஏதோ ஒரு பிரச்சனை என்பதை புரிந்து கொண்டதோடு… அந்த பிரச்சனைக்கு காரண கர்த்தா மகிளா நரேன் என்பதையும் பிரச்சனையின் நுனியை பாஸ்கரன் புரிந்து கொண்டு விட்டான்.

அதை தெரிந்து கொள்ள வேண்டி… “அது எப்படி விட முடியும் சகல.. . நீ எப்படியோ ஆனா எனக்கு மச்சான் ஏன் இதை சொன்னார் என்று எனக்கு தெரிந்து ஆக வேண்டும்.. ஏன் என்றால் கல்யாணம் முடிந்தும் என் பொண்டாட்டி இங்கு இரண்டு வருஷம் இருந்தா பாரு…”

தன் மனைவியை வைத்து இல்லை என்றாலுமே விசயம் தெரிந்து கொள்ள வேண்டி.. தன் மனைவியை இந்த பிரச்சனையில் இழுத்து விட்டு விட்டான் பாஸ்கரன்…

இதை கேட்ட கெளசல்யா தலையிலேயே அடித்து கொண்டு…. மகனை பார்த்து….

“ பார்த்தி பார்த்தியா….” என்று கதறியவர்.

வெறி கொண்டவராக.. “ உன் ஒழுக்கம் கெட்ட பொண்டாட்டியை காப்பத்த பத்திரமாத்து தங்கம் என் பொண்ணுங்களை நீ குறை சொல்லுவீயா டா..” என்று மீண்டுமே மகனின் சட்டையை பிடித்து குலுக்கி எடுத்தவரின் கையில் இருந்த தன் கணவனின் சட்டையை பிரித்து எடுத்தாள் செந்தாழினி..

பின் தன் ஒரு விரல் நீட்டி… “ பார்த்து பார்த்து பேசுங்க. நான் எப்போதும் அமைதியா இருக்க முடியாது.” என்று தன் மாமியாரை எச்சரித்தாள் செந்தாழினி..

இப்போது கெளசல்யாவின் மொத்த கோபமும் மருமகள் பக்கம் திரும்பியது..

“எல்லாம் உன்னால தான்.. இப்போ அவசரமா அறை கட்டனுமா…? உங்க வீடு போல வசதியா… பணம் இருக்கா…? இல்லையா…? என்று எல்லாம் நீ யோசிக்க மாட்டியா…?” என்று அடுத்து கெளசல்யா என்ன பேசி இருப்பாளோ..

ஆனால் அடுத்து பேச விடாது செந்தழினி.. தன் அப்பா கொடுத்த காம்பிளக்ஸ் அந்த அப்பார்ட்மெண்ட் பற்றி சொன்ன செந்தாழினி கூடவே… அதில் இருந்து வரும் வாடகை பணத்தையும் சொல்லி விட்டாள்..

மகிபாலன் அதிர்ந்தே போய் விட்டான்.. இதை வேறு யாராவது சொல்லி இருந்தால் கண்டிப்பாக மகிபாலன் நம்பி இருக்க மாட்டான்…

ஆனால் சொன்ன அவன் மனைவி.. கண்டிப்பாக பொய் சொல்ல மாட்டாள்.. அதுவும் தன்னிடம் கிடையவே கிடையாது.. அதனால் தன் அம்மாவிடம் இது உண்மையா பொய்யா…? என்று எல்லாம் கேட்க வில்லை…

“ஏன் என் கிட்ட சொல்லலே..?” அவன் குரலே சொன்னது… அவன் கோபத்தை அடக்கி கொண்டு கெளசல்யாவிடம் கேட்பது..

தலைக்கு மேல் தண்ணீர் போன பின் சான் போனால் என்ன. முழம் போனால் என்ன.? என்று கெளசல்யா நினைத்து விட்டார் போல…

அதனால் கெளசல்யாவுக்கு இப்போது இந்த பயம் போய் விட்டது போல. காரணம் ஒரு சின்ன கோடுக்கு அடுத்து பெரிய கோடு போட்டால் அது தான் கண்ணுக்கு தெரியும் என்பது போல..

தன் மகள்களை பற்றி மகனின் பேச்சில் உண்மை கிடையாது… தன் மனைவியின் தப்பை சரி செய்ய தான் கூட பிறந்தவளின் மீது பழி போட்டான்.. இதை தன் இரண்டு மருமகங்களின் முன் நிருபித்தாக வேண்டும்…. கெளல்யாவுமே அதை தான் நினைத்தார்…

இது மகள்களின் வாழ்க்கை பிரச்சனை.. இதற்க்கு முன் வேறு எதுவும் அவருக்கு பெரியதாக தோன்றவில்லை போல.

அதனால்… “ மகள் ஒழுக்ககெட்ட தனத்திற்க்கு அவங்க வீட்டில் கொடுத்தாங்க,, நான் ஏன் வேண்டாம் என்று சொல்லனும்..” என்று திமிராக சொன்ன கெளசல்யா தொடர்ந்து…

“அது விடு… நீ உன் ஒழுக்ககெட்ட பொண்டாட்டியை காப்பாத்த என் மகள்களின் மீது பழியை போடுவீயா..?” என்று ஆவேசத்துடன் கேட்ட அன்னையிடம் மகிபாலன் அவரை விட ஆவேசமாக…

“யார் ஒழுக்கம் கெட்டவள்.. என் பொண்டாட்டி ஒழுக்கமானவ தான் . ஆனா ஐந்து பேரின் எதிர் காலத்துக்காக.. அதுவும் என் மீது இருக்கும் காதலினால் தான் அந்த பழியை அவள் மீது போட்டுட்டா..

ஆனா உங்க பெண்.. காதலித்து… அந்த காதலனையே வீட்டில் பார்த்து வைக்கும் மாப்பிள்ளை போல ஏற்பாடு செய்து.. இதில் காதலித்தவன் இத்தனை சவரன் போட்டால் தான் நான் தாலியே கட்டுவேன்.. என்று சொல்ல தெரிந்தவன்…

காதலித்தவளை முறையா தாலி கட்டி மனைவி ஆக்காது அவளை தொட கூடாது என்று மட்டும் தெரியலையோ… ஊருக்கு முன் நல்ல பெண்.. சீ. இவங்களோட ஐந்து பேரின் எதிர்காலத்திற்க்காக தன் மீது பழியை போட்டவளை பத்தி பேச உங்க யாருக்குமே அருகதை இல்லை என்று விட்டான்,…














 
Active member
Joined
Jul 13, 2024
Messages
165
Arumai. Bala, Nalla pottu udaithai. Mahila un moonjiyai engae veppae.

Sentha, ini nee nimirnthu nil. Antha vadagai ellam nee vaangu. Give it to charity, not to these people.

Please give the next part soon Viji ma.
 
Last edited:
Active member
Joined
May 11, 2024
Messages
167
செந்தாழினி ஒழுக்கம் கெட்டவளாவே இருக்கட்டும், சூடு சொரணை இருந்தா அந்த ஒழுக்கம் கெட்டவளோட பணத்தை கௌசல்யா தொடாம கௌரவமா இருக்க வேண்டியது தானே
 
Active member
Joined
Aug 16, 2024
Messages
267
ஆனாலும் மகிபாலன் இப்படி பட்டென்று பேசியிருக்க கூடாது.
 
Active member
Joined
May 12, 2024
Messages
199
Sabash da Bala… 👏🏻👏🏻👏🏻
Kowshalya ippo ava moonjai enge kondu poai vaikkira nu nan pakuren
 
Top