அத்தியாயம்…3
செந்தாழினியின் வீட்டிற்க்கு சென்று பெண் பார்க்கும் நிகழ்வு முடிந்து இருபது நாட்கள் தான் சென்று இருந்தது.. ஆனால் அந்த இருபது நாட்களிலேயே மகிபாலன் வீட்டில் அத்தனை மாற்றங்கள்…
முதல் விசயமாக சுதா அவள் கணவன் வீட்டிற்க்கு சென்று விட்டாள்… நகை போட்டு கொண்டு தான் சென்றது… இவர்கள் செந்தாழியின் வீட்டில் இருந்து வந்த மறு நாளே இவர்கள் வீட்டின் முன் மருது பாண்டியனின் கார் வந்து நின்றது..
வீட்டு ஆட்கள் வரவில்லை.. ஓட்டுனர் தான்… “அய்யா தங்கம் கடல் நகை கடைக்கு உங்களை அழைச்சி போக சொல்லி இருக்காங்க…” என்று அந்த ஓட்டுனர் கெளல்யாவிடம் சொல்லும் போது மகிபாலன் அங்கு தான் ஒரு சின்ன ஸ்டூலில் அமர்ந்து தன் ஷூவை அணிந்து கொண்டு இருந்தது…
அந்த ஒட்டுனர் பேசியது காதில் விழுந்தது தான்.. ஆனால் நிமிர்ந்து அவன் பார்க்கவில்லை.. என்னால் முடியாத ஒரு விசயம் வேறு ஒருத்தன் செய்து கொடுக்கும் போது அவனால் நிமிர்ந்து அந்த ஒட்டுனரை கூட அவனால் பார்க்க முடியவில்லை..
இப்போதே இப்படி என்றால், வருங்காலங்களில், இப்போதே அவனுக்கு கண்ணை கட்டியது…
இதை நினைத்து வேதனைப்பட கூட அவனுக்கு நேரம் இல்லை.. அலுவலகத்திற்க்கு நேரமாகி விட்டதால்,
‘ம்மா வருகிறேன்..” என்று சொல்லி சென்று விட்டான்..
மகி பாலன் மாலை வீடு வந்த போதும் வீடு பூட்டி தான் இருந்தது..
“எங்கே போனாங்க… ?” என்று மகிபாலன் யோசிக்கும் போதே.. காலையில் மருது பாண்டி வீட்டில் இருந்து நகை கடைக்கு அழைத்து சென்றது நியாபகத்தில் வந்தது…
இன்னுமா..? வீடு திரும்பவில்லை என்று யோசிக்கும் போதே மீண்டும் மருது பாண்டியனின் கார் தங்கள் வீட்டு வாசல் முன் வந்து நின்றது.
இப்போது ஒட்டுனரோடு செந்தாழினியின் சித்தப்பா சரவண பாண்டியனுமே வந்து இருந்தார்..
ஒட்டுனரை தவிர்த்து விட்டான்.. ஆனால் இவரை தவிர்க்க முடியாதே… அதனால் ஒரு முறைக்கு..
“வாங்க.” என்று சின்ன சிரிப்போடு அழைத்தான்..
அவருமே.. “என்ன மாப்பிள்ளை எப்படி இருக்கிங்க..? அது என்ன முறை வைத்து கூப்பிடாது வாங்க போங்க என்று சின்ன மாமா என்று கூப்பிடுங்க மாப்பிள்ளை..” என்று சொன்னவரிடம் கெளசல்யா..
“அது ண்ணா அவன் உறவு முறைங்க கூட எல்லாம் பேசி பழகியது இல்லையா..? அது தான் போக போக சரியாகிடும்..” என்று சமாளிக்க.
இதை பார்த்த மகி பாலனுக்கு தான்.. இவங்க ஏன் இப்படி கூழை கும்பிடு போடுவது போல பேசிக் கொண்டு இருக்காங்க என்று தான் நினைக்க தோன்றியது..
பின் கெளசல்யா வீடு திறந்து சரவண பாண்டியன் அவர் வீடு போல மகி பாலனுக்கு முன் வீட்டிற்க்குள் நுழைந்தார்.. பின் தான் இவர்கள் அனைவரும் அவர் பின் சென்றது..
கெளசல்யாவிடம் தன் கையில் இருந்த நகை பெட்டிகளை கையில் கொடுத்து விட்டு.
“இதை சாமி கிட்ட வைச்சிட்டு பீரோவில் வைம்மா. எங்க கடை ராசியானது ஒன்னு வாங்கினாலே சேர்ந்துட்டே தான் போகும்.. எங்க கடையில் இருந்து உங்க வீட்டிற்க்கு இத்தனை வந்து இருக்கு பாருங்க.. அடுத்த வருஷம் இதை விட இரண்டு மடங்கு உங்க வீட்டிற்க்கு நகை வரும்..” என்று சாதாரணமாக பேசி தான் சரவண பாண்டியன் அந்த நகை பெட்டிகளை கெளசல்யாவின் கையில் கொடுத்தது..
ஆனால் இந்த வார்த்தைகளை கேட்டு கொண்டு இருந்த மகிபாலனுக்கு தான்.. அவர்கள் வீட்டு பெண் இங்கு வரா.. இனி நகை சேர்ந்து கொண்டே தான் இருக்கும் என்று நினைத்து சொன்னது போல அவனுக்கு தோன்றியது..
கெளசல்யா சரவண பாண்டியன் பூஜை அறையில் வைங்க என்று சொல்லாது போனாலுமே, கெளசல்யா பூஜை அறையில் வைத்த பின் தான் பீரோவில் வைப்பார்.
அதை தான் மகிளா சரவண பாண்டியன் கையில் காபியை கொடுத்து கொண்டே.. “ அம்மா எப்போவுமே நகை வாங்கினா சாமீக்கு முன்ன வெச்சிட்டு தான் உள்ளே எடுத்து வைப்பாங்க மாமா….” என்று தான் முறை வைத்து அழைக்காத அழைப்பை சொல்லி அழைத்து சொன்னாள்..
அதற்க்குமே சரவண பாண்டியன்.. “அது தான் சொன்னனேம்மா நம்ம கடையில் வாங்கினா ராசி… சேருமே கண்டி அழியாது என்று.. இதை தான் நான் உங்க அம்மா கிட்ட சொல்லுவேன். சொந்தம் உங்களுக்கு சேதாரம் எல்லாம் பார்த்து தான் போடுவேன் என்று.. ஆனா எங்கே… ?” என்று ஒரு மாதிரி பாதியில் தன் பேச்சை நிறுத்திய சரவண பாண்டியன்..
பின்… “இது போல தான் எங்க கடையில் இருந்து உங்க வீட்டிற்க்கு நகைகள் வரனும் போல இருக்கு.” என்று சொன்ன சரவண பாண்டியனின் இந்த வார்தையை எப்படி எடுத்து கொள்வது என்று மகிபாலனுக்கும் புரியவில்லை… அப்போது தான் நகைகளை பத்திரப்படுத்தி விட்டு கூடத்திற்க்கு வந்த கெளசல்யாவிற்க்குமே புரியவில்லை..
இருவரின் முக மாற்றத்தையுமே பார்த்த சரவண பாண்டி சட்டென்று.. “நம்ம சம்மந்தியா ஆகி தான் நம்ம கடைக்கு நீங்க வரனும் என்று இருக்கு போல..” என்று சொன்னவர் பின் விடைப்பெறும் முறையாக..
“அப்போ வரேன் கெளசல்யா… அண்ணா வெளி வேலைக்கு போகனும் என்று சொன்னாரு நான் போனா தான் அவர் போக முடியும்.” என்று விடைப்பெற்று விட்டு சென்ற பின்..
மகிபாலன்.. “ காலையில் போயிட்டு இப்போ தான் வரிங்கலா…?” என்று ஒரு மாதிரியான குரலில் கேட்டவனிடம்..
அவனின் அன்னை கெளசல்யா சட்டென்று … “மொத்தம் நூறு பவுனுக்கு மேல.. பார்த்து தானே எடுக்க முடியும்..” என்றதுமே தங்கை கொடுத்த காபியை குடித்து குடித்து கொண்டு இருந்த மகிபாலனுக்கு புரை ஏறி விட்டது..
இறுமிக் கொண்டே தன் தலையை தட்ட வந்த தங்கையின் கை படாது தன் தலையை நகர்த்தி கொண்ட மகிபாலன்..
“என்னம்மா சொல்றிங்க நூறு பவுனா…?” என்று அதிர்ச்சியாக கேட்டவனிடம் என்ன பதில் சொல்லி சமாளிப்பது என்று தான் முழித்து இருந்தார்..
பின் சமாளிப்பாக. “இவளுக்குமே போடனுமே ப்பா… நல்ல இடம் சவரனை பார்த்தால், இத்தனை வயசு வரை ஒரு பேர் எடுக்காது இருக்க பெண்ணுக்கு இது கூட செய்யலேன்னா எப்படிப்பா…? என்ற அன்னையின் இந்த பேச்சில் மகிபாலன் தன் தங்கையை தான் முறைத்து பார்த்தது..
மகிளாவோ அண்ணனின் பார்வையை தவிர்த்தவளாக.
“ம்மா மழை வரும் போல இருக்கு காய வைத்த துணியை எடுத்துட்டு வந்திடுரேன்..” என்று சொல்லி விட்டு மாடிக்கு சென்று விட்டாள்..
மீண்டுமே மகிபாலன்.. “ம்மா சுதா புருஷன் இரண்டாவது கல்யாணம் செய்துக்க போறான் என்று சொன்ன. அவளுக்கு மட்டுமே இருந்தாலும், ஆனால் இதுவுமே தப்பு தான்மா…” என்று சொன்னவனின் குரலில் அத்தனை சோர்வு… ஆதாங்கம்.. கைய்யாலாகத்த தனம் அனைத்தும் சேர்ந்து இருந்தது..
எந்த ஒரு ஆண் மகனுக்குமே என் நிலை வர கூடாது என்று தான் அப்போது நினைத்து கொண்டான்..
மீண்டுமே… “ என்ன பால இப்படி சொல்ற.. மகிக்குமே இருபத்தியெட்டு வயசு ஆகுது.. இது வரை நம்ம பெண்ணை ஒருத்தவங்க கை காட்டி தப்பா சொல்லி இருப்பாங்கலா.. இத்தனை வயசு வரை கூட ஒரு தப்பு தண்டாவுக்கு போகாது இருக்கும் பெண்களுக்கு நாமுமே செய்யனும் தானேப்பா.. அதோட மகிக்கு இந்த மாப்பிள்ளையை ரொம்ப பிடித்து இருக்கு போலப்பா..” என்ற அன்னையின் பேச்சில் சிரிக்க தான் தோன்றியது மகிபாலனுக்கு, உங்க மகளுக்கு பிடித்ததினால் தான் இந்த இடமே நம்ம வீடு தேடி வந்து இருக்கு என்று கத்த வேண்டும் என்று தான் நினைத்தான்.
ஆனாலுமே வயது கூடிய பின் கூட ஒரு நல்ல இடத்தை தேடி முடிக்காதத்தில் தங்கள் தப்பும் இருக்கு தானே என்று அமைதியாகி மேல சென்றவன் பார்த்தது அவனின் தங்கை மகிளா பேசியில் இந்நாள் காதலனும் வருங்கால கணவனுமான நரேந்திரனிடம்…
“ம் வாங்கியாச்சி கூட பத்து பவுனோடு தான் உங்க வீட்டிற்க்கு வர போறேன்.. இப்போவாவது உங்க அப்பா அம்மா நம்ம கல்யாணத்தை நடத்தி வைப்பாங்க தானே…?” என்ற வார்த்தையில் மகிபாலன்..
காதலித்த பெண்ணை திருமணம் செய்ய ஐம்பது சவரன் நகை வேண்டும்.. கட்டிய மனைவியோடு குடும்பம் நடத்த ஐம்பது சவர நகை வேண்டும்.. இவனுங்க எல்லாம் என்று நினைக்கும் போதே அடுத்த வார்த்தை கூட அவன் நினைவில் வரவில்லை.. காரணம் அவனுமே அப்படி தானே.. இதோ இத்தனை சவரன் திருமணத்திற்க்கு முன்னவே வாங்கி கொண்டு தான் அவள் கழுத்தில் தாலி கட்ட போகிறேன் நான் எல்லாம் என்ன ஆம்பிள்ளை தன்னை நினைத்தே அவனுக்கு வெட்கமாக தான் இருந்தது..
சொன்னது போலவே அதே வாரத்தில் சுதா தன் கணவன் வீடு சென்று விட்டாள்… மகிளாவை பார்த்து விட்டு சென்ற மாப்பிள்ளை வீடு… தன் அம்மாவை பொறுத்த வரை இது தானே… நரேன் தன் வீட்டில் என்ன சொல்லி இருக்கிறான் என்று மகிபாலனுக்கு புரியவில்லை..
காரணம் அவர்கள் வாயில் இருந்தும் இவர்கள் காதல் விசயம் வரவில்லை.. அப்போ சொல்ல வில்லை என்று தானே அர்த்தம்.. தன்னிடம் கூட தங்கை மறைத்து இருப்பாள் தான்.
செந்தாழினியின் வீட்டு சம்மந்தம் தங்கள் வீடு தேடி வராது போய் இருந்தால்.. செந்தாழினியை திருமணம் செய்து கொள்ள அந்த பெரியவர் வந்து கேட்ட போது கெளசல்யா முதலில் மறுத்தது பின் செந்தாழினியை தனக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்ற முடிவு எடுத்ததுமே அந்த பெரியவர் சென்ற பின்..
“அந்த பெண் முன் எப்படியோ.. ஆனா நம்ம வீட்டிற்க்கு வந்த பின் நான் பார்த்து கொள்கிறேன்.. எங்கு போனாலுமே நானுமே கூட போவேன்..” என்று அன்னை தன்னை இந்த திருமணத்திற்க்கு சம்மதிக்க வைக்க சொன்ன அந்த வார்த்தையில் என்ன ஆனாலுமே அந்த பெண்ணை தான் திருமணம் செய்ய கூடாது என்று தான் நினைத்தான்…
“ம்மா வேண்டாம்.. மகிளாவுக்கு வேறு இடம் பார்ப்போம்..,சுதாவுக்கு போட வேண்டிய நகைக்கு ஏதாவது பார்ப்போம்...” என்று சொன்னவன் பின் கட்டு கிணற்றின் மேடையில் சென்று அமர்ந்து கொண்டு விட்டான்.
சிறிது நேரம் கழித்து மெல்ல தன் அருகில் வந்து நின்ற மகிளா.
“ண்ணா எனக்கு நரேனை ரொம்ப பிடித்து இருக்கு…” என்று சொன்னதுமே மகிபாலனுக்கு நரேன் யார் என்று சட்டென்று நியாபகத்திற்க்கு வரவில்லை..
ஒரு முறை தான் அந்த அவனின் அன்னை மாப்பிள்ளையின் பெயர் வேலை என்று சொல்லி இருக்கிறார்…வேலை படிப்பை நியாபகத்தில் வைத்து கொண்ட அளவுக்கு பெயர் அவனின் நியாபகத்தில் இல்லை..
அதனால்.. “நரேன்…” என்று தன் அண்ணன் பெயர் கூட தெரியாது இருப்பதில் மகிளாவுக்கு என்னவோ போல் ஆகி விட்டது..
அண்ணனுக்கு தனக்கு இந்த இடத்தை முடிக்கும் எண்ணம் இல்லையோ.. அதனால் தான் பெயர் மறந்து விட்டாரா…? என்று நினைத்த நொடி மகிளாவின் கண்கள் கலங்கி விட்டது…
அதில் கிணற்றின் மேடையில் அமர்ந்து இருந்த மகிபாலன்.. தங்கை யாரையோ விரும்புகிறாள் போல. வீட்டின் வேறு இடம் பார்த்து வைப்பது பிடிக்கவில்லை போல என்று தான் நினைத்து விட்டான் பாவம்..
அதனால்.. “தோ பார் மகிளா.. வீட்டில் அம்மா சொல்ற இடம் எல்லாம் முடிக்க முடியாது.. அத்தனை சவரன் போடும் நிலையில் நம் வீட்டின் சூழல் இல்லை என்று உனக்கே தெரியும்..”
“அதனால வீட்டில் பேசிய மாப்பிள்ளையை நினைத்து கவலை படாதே… நீ வேறு யாராவது விரும்புறியா.? இப்போ சொன்னியே நரேன்.. அந்த பையனை விரும்புறியா..? யார் என்ன என்று சொல்லு விசாரிக்கிறேன்… நல்ல பையனா இருக்கும் பட்சத்தில் பார்க்கலாம்..” என்று மகி பாலன் சொன்னது தான் மகிளா இன்னுமே ஓ என்று அழ ஆரம்பித்து விட.
“ஏய் என்ன பிரச்சனை. அது தான் நீ லவ் பண்ற பையனை பத்தி விசாரிக்கிறேன் என்று சொல்றேன் லே..” என்று தங்கையை அதட்ட.
அவளோ அழுது கொண்டே.. “ ண்ணா நான் லவ் பண்றவன் தான் இப்போ என்னை பார்த்துட்டு போனது ண்ணா..” என்றவளின் பேச்சை நம்ப முடியாது பார்த்து இருந்தான்..
விரும்பிய பையன் எப்படி வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையாக ஆனான் என்று கேட்க தான் நினைத்தான். ஆனால் கேட்கவில்லை..
ஆனால் இது கேட்டான்… “அப்போ எதுக்கு சவரன் எல்லாம் கேட்கிறான்… “ என்று..
“ண்ணா அவங்க அப்பா அம்மா கேட்டா அவர் என்ன செய்வார் அண்ணா… “ என்று..
“அப்போ அம்மா அப்பாவை கேட்டு விட்டு தான் உன்னை விரும்பி இருக்கனும் ..” என்ற மகிபாலன் பேச்சில்.
அவன் சொன்னதை விடுத்து.. “அப்போ எனக்கு அவங்க கேட்டதை போட்டு கட்டி கொடுக்க மாட்டியா அண்ணா…?” என்று தன் காரியமே முதன்மையாக தன் முன் நின்று கொண்டு இருந்தவளை ஆற்றாமையாக பார்த்த மகிபாலன்..
“என் கிட்ட இருந்தா வஞ்சனை செய்யிறேன்… அம்மா செய்த வேலைக்கு அப்பா போல எனக்கு ஒன்னும் ஆவாது இருப்பதே பெரிய விசயம்.. இதுல நீ வேறு..” என்று ஒரு வித சலிப்போடு பேசியவனையே பார்த்து இருந்த மகிளா..
பின்.. “ ண்ணா என்னால அவரை தவிர வேறு யாரையுமே கல்யாணம் செய்துக்க முடியாது ண்ணா…” என்றதில் தான் மகிபாலன் இவள் என்ன சொல்கிறாள் என்று அதிர்ச்சியோடு அவளை பார்த்திருந்த அண்ணனிடம் ஒரு தங்கை சொல்ல முடியாத விசயத்தை தான் அன்று சொன்னது மகிளா..
செந்தாழினியை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று சொல்லி விட்டு பின் பக்கம் சென்றவன் மீண்டுமே தன் முன் வந்து நின்ற மகனை கெளசல்யா.. என்ன என்பது போல பார்த்தவரிடம்..
“நான் அந்த பெண்ணையே திருமணம் செய்து கொள்கிறேன்.” என்று விட்டான்..
இதோ அப்படி அந்த மாதிரி சூழ்நிலையில் தன்னை விற்றவனின் விலையாக அக்கா கணவன் வீட்டிற்க்கும் தங்கை பிடித்தவனை திருமணம் செய்ய கரம் பிடிக்க உறுதியாக இதோ வந்து மகிளா தலையில் பூ வைத்து விட்டு சென்றனர் நரேந்திரனின் வீட்டவர்கள்.. முன் அவர்கள் நடந்து கொண்ட விதத்திற்க்கும், இப்போது அவர்கள் நடந்து கொண்ட விதத்திற்க்கும் தான் எத்தனை வித்தியாசங்கள்…
“பெரிய வூட்டு பாண்டியன் குடும்பம் உங்களுக்கு உறவா…? முன் வந்த போது சொல்லவே இல்ல. அதுவும் உங்க வீடு தேடி வந்து பெண்ணை கொடுக்கும் அளவுக்கு..” இது மட்டும் சொல்லி இருந்து இருந்தால் கூட பரவாயில்லை..
அடுத்த வார்த்தையாக. “ அந்த தப்பு எல்லாம் அந்த வயசு செய்துடுச்சி… அதை எல்லாம் பெருசா எடுத்துக்க படாது தம்பி.. இது போல இடம் கிடைக்க கொடுத்து வைத்து இருக்க வேண்டும்.” என்று தன்னை பார்த்து சொல்லி விட்ட பின் தான் மகிளாவின் தலையில் பூவை வைத்து விட்டதோடு மகிளாவுக்கு செந்தாழினியின் வீட்டில் வாங்கி கொடுத்த நகைகளை ஆசையோடு பார்த்து விட்டும் சென்றனர்..
திருமணம் முடிவு ஆனதில் இருந்து சொல்வதை விட ஆகும் முன்பு இருந்தே… மகிபாலனுக்கு சோதனை காலம் தான் என்று சொல்ல வேண்டும்..
அவன் ஆபிசில் அதாவது மத்திய வேலையில் அவன் திருமணத்திற்க்கு என்று எழுதி கொடுத்த லோன் இன்னும் சேங்கஷன் ஆக வில்லை.. பரிசீலனையில் இருக்கு என்ற தகவல் மட்டும் தான் வந்தது..
ஆனால் இவன் கையில் பணம் வரும் வரை நாள் செல்லாது தான் இருக்குமா.. இன்னுமே திருமணத்திற்க்கு இருபது நாளே தான் இருக்கிறது என்று செந்தாழினியின் வீட்டில் இருந்து சொல்ல.
இதோ நட்பு வட்டத்திலும்.. வட்டிக்கும் கடனை வாங்கி ஒரு ஆறு லட்சத்தை புரட்டி விட்டான்… அதற்க்கே அவனுக்கு போதும் போதும் என்று ஆகி விட்டது என்பது வேறு விசயம்..
இதில் சமாளித்து கொண்டு விடலாம் என்று அவன் நினைத்து கொண்டு இருக்க. பெண் வீட்டவர்கள் நாங்கள் இங்கு தான் பட்டு புடவை எடுப்போம் என்று சொன்ன இடமோ. மதுரையிலேயே விலையும் சரி தரமும் சரி உயர்ந்து தான் இருக்கும் என்று சொல்லப்படும் ஜவுளிக்கடையின் உள் தான் பெண்கள் அனைவரும் நுழைந்தனர்.. அந்த பெண்களில் செந்தாழினியும் ஒருவளாக நுழைந்தாள்…