அத்தியாயம்….14
தன்னை சரியாக கணித்த உதயேந்திரனை அந்த நிலையிலும் ராஜசேகர் தன் மனதுக்குள் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அதனால் தான் பெரியவர் பரமேஸ்வரர் இருவருடமாய் தன் மருமகன் சந்திரசேகரின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்டு…
“என் சின்ன மகன் இங்கு வந்தால்...இங்கு என்ன…? என்ன…? நடக்குது என்பதை நிமிடத்தில் கண்டு பிடித்து விடுவான்.” என்று அடிக்கடி தன்னிடம் சொன்னது இப்போது நியாபகத்திற்க்கு வந்தது.
ராஜசேகர் தன் பழைய நியாபகங்களை புரம் தள்ளி விட்டு… “நீ சொன்னது சரி தான். சந்திரா கூட முதலில் வேண்டாம் என்று தான் மறுத்தான்.” என்று சந்திரசேகர் சொன்னதும்…
மீண்டும் உதயேந்திரன் முகத்தில் நக்கல் தன்மையோடு எளக்காரமாய் ஒரு புன்னகை புரிந்தவன்… “ எல்லாம் பாசாங்கு. மனதில் அந்த ஆசை இல்லாமல் இருந்து இருந்தால், முதலில் என் அக்காவை பற்றி உங்களிடம் சொல்லியே இருக்க மாட்டார்.
அவர் மனதின் ஆசைக்கு நீங்க நெய் ஊற்றியிருபிங்க. அவர் ஒன்னும் சின்ன பையனோ...டீன் ஏஜில் இருப்பவரோ கிடையாது. திருமணம் முடிந்து நாளும் தெரிந்த மனிதர் தான். மனதின் ஆசை யாரை விட்டது…?” என்று சொன்ன உதயேந்திரன் ராஜசேகரை பார்த்து மேலே சொல்லுங்க என்பது போல் சைகை செய்தான்.
“நான் சொன்னது போல சந்திரா இருமாதத்திலேயே என்னை அவன் வேலை செய்த குழுமத்தில் இணைத்துக் கொண்டான். அங்கு போன பின் தான்…” என்று சொல்லி விட்டு மென்று முழுங்கி ராஜசேகர் உதயேந்திரனை பார்த்தார்.
ராஜசேகரின் பார்வையில் உதயேந்திரனுக்கு இப்போது நெஞ்சில் பாரம் ஏறியது. யாரும் சகோதரியை பற்றி இப்படி விசாரித்து இருக்க மாட்டார்கள். அதுவும் இருபது வருடம் கடந்து… அவளுடைய காதல் கதையை… முதலில் இது காதல் தானா…? முதலில் அது உதயேந்திரனுக்கே தெரியவில்லை.
மனதில் கசப்பு இருந்தாலும், இப்போது தன் சகோதரியை பற்றி கேட்டால் இப்போது இருக்கும் மரியாதை கூட அவனுக்கு இருக்குமா தெரியாது. இருந்தும் உதயேந்திரன் அனைத்தும் தெரிந்துக் கொள்ள விரும்பினான்.
காரணம் கிருஷ்ணவேணி… அவனின் கிருஷ்ணாவுக்காக அவனுக்கு அனைத்தும் தெரிந்தே ஆகவேண்டும். தான் அவளை கிருஷ்ணா என்று அழைத்தால் அதை அவள் காதலோடு உணர வேண்டுமே தவிர…
பழைய அழைப்பு அவளுக்கு நியாபகத்தில் வரமால் செய்ய வேண்டும். அதற்க்கு என்ன நடந்தது என்று தெரிந்தால் தான் அவனால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிக்காவாவது முடியும்.
அதனால் … “எது இருந்தாலும் சொல்லுங்க அங்கிள். என் அக்காவின் தவறு இல்லாது இது சாத்தியம் இல்லை என்று எனக்கு நல்லா தெரியும்.
முழுவதும் தெரிய வேண்டியது. இதில் யார் யாரின் தவறு எவ்வளவு சதவீதம் என்பதே… அதனால எந்த பூசும் இல்லாது எல்லாமே சொல்லுங்க.” என்று உதயேந்திரனின் பேச்சில்..
ராஜசேகர் தைரியம் பெற்றவராய்… “முதல் நாள் உன் அக்காவை ஆபிசில் பார்த்ததுமே தெரிஞ்சி போயிடுச்சி உங்க அக்காவுக்கு சந்திரா மீது இருக்கும் மயக்கத்தின் அளவு.
ஆம் அதை மயக்கம் என்று தான் சொல்ல வேண்டும். காதலுக்கு கண் இல்லை. ஆனால் அறிவு இருக்கும்.அழகு பார்த்து வருவதில்லை காதல். அது காதலுக்கு சரியாக இருக்கலாம். ஆனால் மயக்கத்திற்க்கு…?
ராஜசேகர் ஜெய்சக்தியை முதன் முதலில் அவளிடம் கைய்யெப்பம் வாங்கும் போது தான் பார்த்தார்.
ஜெய்சக்தி முன் பேப்பரை வைத்து… “இங்கு சைன் பண்ணுங்க மேடம்.” என்று ராஜசேகர் சொன்னதை காதில் வாங்கினார்கலா இல்லையா என்று தெரியவில்லை.
ஆனால் ஜெய்சக்தியின் பென் பிடித்த கை அந்த பேப்பர் மீது இருக்க, பார்வை மொத்தமும் அங்கு தன் தந்தையோடு பேசிக் கொண்டு இருந்த சந்திரசேகர் மீதே இருந்தது.
அதுவும் அந்த ஜெய்சக்தியின் பார்வையில் ஆசை என்று சொல்வதை விட, வெறி என்று சொல்லலாம். ஆசையாவது யாராவது ஜெய்சக்தியிடம்…
“அவனுக்கு திருமணம் முடிந்து விட்டது. நீ அவனுக்கு இரண்டாம் தாராமாய் போனால், உன் வாழ்க்கை அந்தரத்தில் தொங்க வேண்டியது தான்.” என்று திரும்ப திரும்ப சொன்னால் கேட்டுக் கொள்ள வாய்ப்பு உள்ளது.
ஆனால் வெறி...அது பொருளோ...மண்ணோ பெண்ணோ...ஆனால் அதை ஆணோ என்று கூட இப்போதைக்கு கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்.
அதை அடைந்தால் தான் அந்த வெறி ஒரு கட்டுக்குள் அடங்கும். ஜெய்சக்தி சந்திரா மீது செலுத்தும் பார்வையில் ராஜசேகர் அந்த வெறியை தான் பார்த்தார்.
பார்த்ததும் ராஜசேகருக்கு நன்கு தெரிந்து விட்டது. இவர்களை இணைக்க நான் அதிகம் மெனக்கெட வேண்டியது இல்லை என்று.
இதில் தன் நண்பன் ஆசைப்பட்ட வாழ்க்கை கிட்டும். ஜெய்சக்தியின் ஆசையை நிறைவேற்றினால்...முதலாளி பெண் ஆனா ஜெய்சக்தியாலேயே நான் நினைத்ததை நடத்திக் கொண்டு விடலாம் என்று…
தன் குறுக்கு மூளை கொண்டு ஜெய்சக்தியின் தந்தை பரமேஸ்வரர் அந்த இடத்தை விட்டு அகன்றதும், ஜெய்சக்தி முன் “சந்திரா ஊருக்கு போகும் போது என்னிடம் சொல். நானும் அப்பாவை பார்த்து ரொம்ப நாள் ஆச்சி.” என்று சொன்ன நொடி…
அது வரை சந்திராவின் மீது மட்டுமே வட்டம் அடித்துக் கொண்டு இருந்த ஜெய்சக்தியின் விழிகள், ஆச்சிரியத்தோடு ராஜசேகரை பார்த்தது.
பின் அவளே வலிய ராஜசேகரிடம்.. “நீங்க தான் புதுசா சேர்ந்த லாயரா…?என்று கேட்டவள். ராஜசேகரின் பதிலை எதிர் பாராது தொடர்ந்து..
“அப்பா நேத்து கூட உங்கல பத்தி வீட்ல சொல்லிட்டு இருந்தார். சின்ன வயசா இருந்தாலும் திறமை நிறைய இருக்குன்னு. உங்கல பார்த்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம்.” என்று சொல்லிக் கொண்டே… ஜெய்சக்தி தன் கையை ராஜசேகர் பக்கம் நீட்டினாள்.
ஆனால் ராஜசேகர் ஜெய்சக்தியின் நீட்டிய கையை பற்றாது… ஒரு வித குறும்பு பார்வையுடன் சந்திரசேகரை பார்த்துக் கொண்டே…
“இந்த கைய்ய பிடிச்சா என் நட்பை இழக்க வேண்டியிருக்குமே மேடம்.” என்று சொல்லி விட்டு தன் சிரிப்பை அடக்குவது போல் நடித்தார் ராஜசேகர்.
ஆம் ராஜசேகர் நடித்தார் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு ஆண் ஒரு பெண் மீது விருப்பம் இருந்தால் தான், அதை தன் நண்பனிடம் பகிர்வான். தன் கை பற்றாது தான் சந்திராவை பார்த்ததில் இருந்தே படித்த பெண்ணான ஜெய்சக்தி புரிந்து கொண்டு இருப்பாள்.
சந்திரசேகர் தன்னை பற்றி என்னிடம் பேசியிருக்கிறான் என்று. இதில் ராஜசேகருக்கு இரு ஆதாயம். ஒன்று சந்திரசேகரும் ஜெய்சக்தியை விரும்புகிறான் என்று சந்திரா தன் விருப்பத்தை ஜெய்சக்தியிடம் சொல்லாமலேயே அவளுக்கு புரியும் படி செய்து விட்டான்.
இன்னொரு ஆதாயம்.. தங்கள் நெருக்கம். தங்கள் நட்பின் நெருக்கத்தை ஜெய்சக்தி எதிரில் காட்ட விரும்பினார் சந்திரசேகர். அது பல வகையில் அவருக்கு உபயோகமாய் இருக்கும் என்றே அவர் கருதினார்.
ராஜசேகரின் அனுமானம் சரியாகவே வேலை செய்தது எனலாம். ஜெய்சக்தி கண்கள் பளிச்சிட… “அதெல்லாம் உங்க நட்பை இழக்க நான் விட மாட்டேன் அண்ணா.” என்று சொல்லி கொண்டே தன் கைய் பற்றாது தன் நீண்டுக் கொண்டு இருந்த ராஜசேகரின் கையை பற்றிக் கொண்டாள் ஜெய்சக்தி.
ஜெய்சக்தியின் “அண்ணா…” என்ற அழைப்பு ராஜசேகருக்கு புனிதாவை நினைவு படுத்தவே செய்தது.இருந்தும் தன் முன் இருந்த தன் வசந்த காலத்தை மனதில் கொண்டவராய்…
சிரித்துக் கொண்டே… “என்னை அண்ணா என்று அழைத்து என் நண்பனின் தீப்பார்வையில் இருந்து என்னை காப்பாற்றிட்டேம்மா…”
இந்த பேச்சின் மூலம் ராஜசேகர் சந்திராவோடு தன் நெருக்கத்தை பறை சாற்றியதோடு, ஆபிசில் இருக்கும் அனைவரும் பார்க்கும் படி ஜெய்சக்தியோடு நெருக்கத்தையும் ஏற்படுத்திக் கொண்டார்.
பின் அவர் நினைத்த படி அனைத்தும் சரியாகவே நடந்தது. ஜெய்சக்தி தன் மனதை சந்திராவிடம் சொல்வதற்க்கு முன் ராஜாவிடமே பகிர்ந்தாள்.
“நான் உங்க பிரன்ட ஓட்டலில் பார்த்ததுமே ரொம்ப பிடிச்சி போயிடுச்சி அண்ணா. அதுவும் என் பிரண்டுங்க உங்க ஆபிசுல தான் இத்தனை வருஷம் வேலை பாக்குறார். நீ இப்போ தான் பாக்குறேன்னு சொல்ற…” என்று தோழிகளோடு நடந்த பேச்சு வார்த்தைகளை ராஜசேகரோடு பகிர்ந்துக் கொண்ட ஜெய்சக்தி…
தொடர்ந்து… “நான் இவரை முதலில் உங்க கூட தான்டி பார்த்தேன்னு சொன்னா கூட என் பிரண்ஸ் நம்பல அண்ணா.” என்ற ஜெய்சக்தி பேச்சின் மூலம் தான் இத்தனை நாள் அவரை பார்க்காமல் மிஸ் பண்ணிட்டனே...என்ற ஆதங்கமே மேலோங்கி காணப்பட்டது.
ஜெய்சக்தியிடன் நன்கு பேசியதிலிருந்து அவள் சந்திரா மீது எவ்வளவு ஆசை வைத்திருகிறாள் என்பதை முதலில் அறிந்துக் கொண்டார்.
பின் நேரம் பார்த்து ராஜசேகர் ஜெய்சக்தியிடம்… “இதோ இந்த கம்பனி பொறுப்பே உங்க அப்பா சந்திராவை நம்பி விட்டு இருக்கார். அந்த அளவுக்கு அவனிடம் திறமை இருக்கு. அழகு அதை நான் உனக்கு சொல்ல வேண்டியது இல்லை. இவ்வளவு இருந்தும் என்ன பிரயோசனம்… அவனுக்கு அதிர்ஷ்டம் இல்லையே…”என்று சந்திராவை நினைத்து மிகவும் கவலை படுவது போல ராஜசேகர் பேசினார்.
“என்ன அண்ணா அவருக்கு என்ன…? ஏதாவது பிரச்சனையா…?” ஜெய்சக்தி பதட்டத்துடன் கேட்டாள்.
ராஜசேகர் தன் பேச்சுக்கு ஜெய்சக்தியிடம் இருந்து என்ன எதிர் வினை எதிர் பார்த்தாரோ சரியாக அதையே தான் அவளும் பேசினாள்.
“சந்திராவுக்கு குடும்பத்து மேல ரொம்ப பிரியம்மா...அவன் குடும்பத்துக்கு அவன் மகனோட சந்திராவின் அப்பா தங்கை குடும்பத்து மேல ரொம்ப பிரியம்.” என்று பேசிக் கொண்டு இருந்த ராஜசேகரை ஜெய்சக்தி அதற்க்கும் சந்திரா அதிர்ஷ்ட்டம் கெட்டவன் ஆவதற்க்கும் என்ன சம்மந்தம் என்பது போல் பார்த்தாள்.
“இவனோட அந்த பிரியம் தான்மா இவனோட ஆசை இவனோட கற்பனை எல்லாம் குழி தோண்டி புதைய காரணம் ஆயிடுச்சி.” என்று சொல்லி விட்டு ஜெய்சக்தி பார்த்தார் ராஜசேகர்.
“அண்ணா நீங்க என்ன சொல்ல வர்றிங்கன்னே எனக்கு புரியலேண்ணா…”என்று ஜெய்சக்தி சொன்னதும்,
“இதை நீ எப்படி எடுத்துப்பேன்னு தெரியலேம்மா…” என்று தன் பேச்சை இழுத்து பிடித்து நிறுத்திய ராஜசேகர்.. பின் நடந்த உண்மையை சொல்லி முடித்தார்.(இதை மட்டும் அப்படியே தான் சொன்னார் ராஜசேகர்.)
தான் சொல்ல சொல்ல ஜெய்சக்தியின் முகத்தில் தோன்றிய அதிர்ச்சி. ஆச்சரியம், பின் கோபம் என்று ஜெய்சக்தியின் முக மாற்றத்தை மட்டுமே பார்த்துக் கொண்டு சொல்லி முடித்த ராஜசேகர்.
பின்.. “இப்போ நீ சொல்லும்மா…?” முடிவு நீ தான் எடுக்க வேண்டும் என்பது போல் ராஜசேகர் பேசினார்
“இதில் பேச என்ன இருக்குண்ணா…அவருக்கு திருமணம் ஆயிடுச்சி.” அவ்வளவு தான் என்பது போல் பேசிய ஜெய்சக்தி..
பின் “என் கிட்ட அதை சொல்லி இருக்கலாம். அவரே சொல்லி இருக்கலாம். இதை சொல்லவாவது அவர் என் கிட்ட பேசியிருக்கலாம்.”
ஜெய்சக்தியின் இந்த பேச்சின் மூலம் ராஜசேகர் புரிந்துக் கொண்டது இதை தான். ஜெய்சக்திக்கு சந்திரசேகர் மீது அளவு கடந்த ஆசையோடு அவன் தன்னிடம் சகஜமாக பேசவில்லையே என்ற ஆதாங்கம் இருக்கிறது.
தான் சொன்னதில் ஏற்கனவே சந்திராவுக்கு திருமணம் ஆனதை கேட்டு இனி அவர் தனக்கு கிடைக்க மாட்டார் என்று நினைக்கும் போது கூட இதை தன்னிடம் சொல்லவாவது பேசியிருக்கலாமே என்ற ஆதாங்கம் ஜெய்சக்தி மனதில் இருப்பதை ராஜசேகர் அறிந்துக் கொண்டார்.
ஜெய்சக்திக்கு கொஞ்சம் மூளை சலவை செய்தால் போதும் சந்திரசேகருக்கு இவளை திருமணத்தை முடித்து விடலாம் என்று கருதினார்.
ராஜசேகர் இந்த திட்டமிடலுக்கு இடையில் அவர் மனசாட்சில் ஒன்று மட்டும் உறுத்திக் கொண்டு இருந்தது. அது சந்திரசேகர் மகள் கிருஷ்ணவேணி. புனிதாவுக்கு குழந்தை பிறந்த பிறகு சந்திரசேகரின் கம்பத்து பயணம் அதிகம் நடைபெற்றது.
ஒரு நாள் தன் குடும்பத்தோடு சொந்த ஊருக்கு போன ராஜசேகர் அப்படியே குழந்தையையும் பார்த்து விட்டு வரலாம் என்று தன் மனைவி தன் கைக்குழந்தை காயத்ரியோடு குழந்தையை பார்க்க சென்றார்.
அவரை பார்த்த புனிதா… “என்ன அண்ணா உங்கல பார்க்கவே முடியல.போன இரண்டு தரம் ஊருக்கு வந்தும் மாமாவ பாக்க வரவே இல்ல.”
ஒரு சொம்பு மோரை ராஜசேகர் கையில் திணித்துக் கொண்டே கேட்ட புனிதா ராஜசேகரின் மனைவியை பார்த்து… “அண்ணி குழந்தைக்கு பால் கொடுக்குறிங்க புதுசா மோர் குடிச்சா உங்களுக்கு சளி பிடிக்கும். அது குழந்தைக்கு ஆகாது.” என்று சொல்லி கரந்த பாலில் அப்போது தான் இறக்கிய டிக்கெஷனை போட்டு தன் மனைவி கையில் கொடுத்த புனிதா…
அவள் கையில் இருக்கும் குழந்தையை வாங்கி கொண்டு… “நீங்க குடிங்க அண்ணி.” என்று சொல்லி விட்டு தன் குழந்தைக்கு வெது வெதுப்பான பசும்பாலை அவளே குடிக்க வைத்தவளை பார்த்த அன்றே ராஜசேகருக்கு குற்றவுணர்ச்சியாக தான் இருந்தது.
பின் புனிதா கையில் உள்ள தன் குழந்தையை பார்த்த ராஜசேகர்… “என் மகளின் எதிர்காலத்திற்க்காக இதை நான் செய்தே ஆகவேண்டும்.”
பின் இடை இடையே வந்த தன் மனசாட்சியை ஓரம் கட்டியவராய், முழுமுனைப்புடன் சந்திரா ஜெய்சக்தி இணைப்பதில் ஈடுபட்டார்.
அவர்களை இணைக்க ராஜசேகர் மிகவும் எல்லாம் சிரமப்படவில்லை. இருவருக்குமே ஆசை இருந்தது. சந்திரசேகர் தன் மனைவியோடு மகளை நினைத்து தயங்கினார்.
ஜெய்சக்தியின் மனம் போக போக அவருக்கு இரண்டாம் தாரமாய் வாழ்க்கை பட்டால் என்ன…? அவர் மனதில் நான் தானே முழுமையாக இருக்கிறேன் என்று நினைத்தாலும், மற்றவர்களின் பார்வைக்கு தான் இரண்டாம் தாரமாய் தானே தெரிவோம்.
அதை ராஜசேகரிடம் சொல்ல… “என்னம்மா...இது எல்லாம் ஒரு பிரச்சனையா…? இங்கு யாருக்கும் அவனுக்கு கல்யாணம் ஆனது தெரியப்போவது இல்ல. சந்திரா அப்பா வயதானவர். அவருக்கு பின் சந்திரா ஊருக்கும் போக மாட்டான்.”
இந்த வகையாக ராஜசேகர் ஜெய்சக்தியிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது தான் நாரயணன் குடும்பம் சந்திரசேகரை பார்க்க அவர் வேலை பார்க்கும் இடத்திற்க்கு வந்தது.
அப்போது தான் ஜெய்சக்தியும் சந்திரசேகர் குடும்பத்தை நேரில் பார்த்தது. சந்திரசேகர் தங்கை பார்க்க மிக அழகாக இல்லாவிட்டாலும், அழகாகவே இருப்பார்.
முதலில் இரு இளம்பெண்களை பார்த்த ஜெய்சக்தி இதில் யார்…? சந்திரசேகர் மனைவி என்று குழம்பிய போது சந்திரசேகர் தந்தை அறிமுகம் படுத்தி வைக்கவும்…
புனிதாவை பார்த்த ஜெய்சக்தி அப்போதே ராஜசேகரிடம்… “என் அழகு சந்திராவுக்கு நான் தான் மனைவியாக இருக்க முடியும்.” என்று அன்று தான் தன் அலைபாயும் மனதுக்கு முற்றுபுள்ளி வைத்தாள் ஜெய்சக்தி.
பின் ஜெய்சக்தி அடுத்து தன் தந்தையிடம்… “நான் சந்திராவை தவிர யாரையும் திருமணம் செய்ய மாட்டேன்.” தற்கொலை முயற்ச்சி ஒன்று ராஜசேகரின் திட்டப்படி நடத்தி முடித்ததோடு, தன் திருமணத்தையும் நடத்தி முடித்துக் கொண்டாள் ஜெய்சக்தி.
இத்திருமணத்திற்க்கு சந்திரசேகர் முதலில் தான் கொஞ்சம் தயங்கினார். பின் ஜெய்சக்தியோடு பேச பேச அந்த தயக்கமும் இருந்த இடம் தெரியாது போனது.
அதன் பின் நாரயணன் விசயம் அறிந்து தன் குடும்பத்தோடு நியாயம் கேட்க வந்த போது பெரிய மனிதர் போர்வையில் இருக்கும் சின்ன புத்தி பரமேஸ்வரர் புனிதாவை கேட்க கூடாததை கேட்டு பின் அவர்களை சென்னையையே வெறுத்து ஓடும் படி செய்து விட்டார்.
இதை அனைத்தையும் ராஜசேகர் சொல்ல சொல்ல எந்த இடையூறும் இல்லாது கேட்டு முடித்த உதயேந்திரன், ஏதோ கசப்பு திண்று முழுங்குபவனை போல் கண் மூடி தன்னை நிலைப்படுத்திக் கொண்ட பின்…
“எல்லாம் சரி. பின் எப்படி மாமாவுக்கு திரும்பவும் பார்வை அவர் குடும்பத்து பக்கம் போச்சி. அதுவும் குறிப்பா வேணியின் பக்கம்.” என்று கேட்ட உதயேந்திரனின் பேச்சில் கிண்டல் இருந்ததோ…
உதயேந்திரனின் குரலில் கிண்டல் இருந்ததோ இல்லையோ...ராஜசேகர் இன்று தன் மனதில் அடைத்து இருந்ததை அனைத்தையும் வெளியேற்றிட நினைத்தாரோ...இல்லை தன் மனதில் இருப்பதில் பாதி சொன்னதற்க்கே மன அழுத்தம் குறைந்தது போல் இருக்கிறதே, முழுவதும் சொன்னால் தன் மனது பாரம் குறைந்து விடுமோ என்று நினைத்தாரோ என்னவோ...உதயேந்திரனின் பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ளாது, தன் குடும்பத்தை நாட்டாற்றில் விட்ட சந்திரசேகரின் கவனம் திரும்பவும் எப்படி திரும்பியது…? அதுவும் தன் உழைப்பு மொத்ததையும் தன் மகளுக்கு கொடுக்கும் அளவுக்கு… அதையும் ராஜசேகர் சொல்ல ஆராம்பித்தார்.
“சென்னையில் தான் இனி என் வாழ்வுன்னு முடிவு செய்துட்ட பிறகு கம்பத்தில் இருக்கும் சொத்தை முக்கால் வாசி என் அப்பா இறந்த பிறகு வித்துட்டேன். மீதி கொஞ்சம் தான் இருந்தது.
அதையும் பாக்க போறது இல்ல. அதுக்கு காரணம் ஒன்று என் வேலை பளு என்றால், மற்றொரு காரணம் புனிதா. என் வாழ்க்கை தரம் உயர உயரவா...இல்ல என் மகள் வளர வளராவான்னு தெரியல.
சின்ன வயசுல செஞ்சது நாம் மத்திய வயசுல வந்தப்ப...நான் செஞ்ச செயலை நினச்சு எனக்கு ஒரு மாதிரியா இருந்தது. அதுவும் மூணு வருசத்துக்கு முன் நான் லீகல் பாத்துக் கொண்டு இருந்த கம்பெனி எம்.டி அவர் மகனுக்கு என் பொண்ணை பாக்கலாமான்னு கேட்டப்ப நான் அவர் கிட்ட இன்னும் என் பொண்ணு படிச்சி முடிக்கலேன்னு சொன்னதற்க்கு…
இப்போ பையனும் பொண்ணும் பார்த்துக்கட்டும் பிடிச்சி இருந்தா நிச்சயம் மட்டும் இப்போ செஞ்சிக்கலாம். கல்யாணம் உங்க பெண் படிப்பு முடிஞ்சே வெச்சிக்கலாம். என் மகனும் மேல் படிப்புக்கு ஒரு வருடம் ஆஸ்திரேலியா போக போறான். என்று அவர் சொன்னதும் எனக்கு ரொம்ப சந்தோஷமா ஆயிடுச்சி…
அவர் திட்டப்படி ஒரு ஓட்டலில் பெண்ணும் பையனும் பாக்கறதா இருந்தது. என் பொண்ணு தனியா போக ஒரு மாதிரி இருக்குன்னு அவ பிரண்ட கூட்டிட்டி போய் இருக்கா…
என் பெண் பத்தி தான் உங்களுக்கு தெரியுமே...எதிலும் விளையாட்டு...அங்கு போய் சுத்தி சுத்தி பார்த்துட்டு இருந்தவளை…
அந்த பையன் நாம பேசி ஒருத்தருக்கு ஒருத்தர் புரிஞ்சிக்க தான் நம்ம பெரியவங்க அனுப்பி இருக்காருன்னு சொன்ன பிறகு என் பெண்ணும் பேசி இருக்கா…
கொஞ்ச நேரத்துலேயே என் பெண் பேச்சு கேட்டு அந்த பையன் நீ வேடிக்கையே பாரும்மான்னு சொல்லிட்டு, அந்த பையன் என் பெண் கூட வந்த பெண் கூட பேசி...அந்த பெண்ணையே நிச்சயமும் செய்துட்டு அவன் வெளி நாட்டுக்கு பறந்துட்டான்.
அன்னிக்கி முழுசும் என் மனம் அறிச்சுட்டே இருந்தது. அப்போ தான் எனக்கும் புனிதா நிலமை புரிஞ்சுது. இன்னும் சொல்லனுமுன்னா என் பெண்ணுக்கு இதனால எந்த பாதிப்பும் இல்ல.
ஆனா என் பெண்ணை பார்க்க வந்து...எப்படி வேறு பெண்ணை முடிச்சிப்பான்…? அந்த ஆதாங்கமே எனக்கு.
ஆனா புனிதா நிலை. கல்யாணம் முடிஞ்சு ஒரு குழந்தையோடு விட்டுட்டு போயிட்டா...அதுவும் அப்போ புனிதாவுக்கு பத்தொன்பது வயசு தான்.
இந்த நிலையில் தான் என் கொஞ்ச நிலத்தைடும் விக்க கம்பத்துக்கு போனேன். அப்போ ஊரில் திருவிழா நடந்துட்டு இருந்தது. அங்கே தான் நான் நாரயணன் அப்பா குடும்பத்தை பார்த்தேன்.
குடும்பத்தோட கோயிலுக்கு சாமி கும்பிட வந்து இருந்தாங்க. நானும் என் மனைவியும் அதே கோயிலுக்கு சாமி கும்பிட போய் இருந்தோம்.
அப்போ தான் பவித்ரன் வேணியை பார்த்தேன்.அவங்கல பார்த்ததும் அப்படியே அசந்துட்டேன். அவங்க இரண்டு பேரையும் பாக்க அப்படியே ராஜா ராணி போல அவ்வளவு தேஜஸா இருந்தாங்க.
ஒருத்தர் கை ஒருத்தர் பிடுச்சிட்டு அப்படியே விடாது தான் அவங்க அந்த கோயிலை சுத்தி வந்தாங்க.
பவித்ரன் அப்படியே அவன் அம்மா மாதிரி. வேணி அச்சு அசல் வார்த்தது போல் என் சந்திரா போல. அவங்கல பார்த்த அப்ப தான் நான் என்ன காரியம் செஞ்சி வெச்சி இருக்கேன்னு உரச்சது.
நாரயணன் குடும்பம் என்ன பார்த்தும் கண்டுக்காம போயிட்டாங்க. பவித்ரன் மட்டும் என்னை பார்த்துட்டு முறச்சிட்டு போயிட்டான்.
வேணி என் நன்பனின் மறுவுருவாய் இருந்தவளுக்கு நான் யாருன்னு கூட தெரியல. அவங்க குடும்பத்தையும் என்னையும் மாறி மாறி குழப்பமா பார்த்துட்ட போயிட்டா…
அதுக்கு அப்புறம் தான் பவித்ரன் வேணியை பத்தி விசாரிச்சேன். பவித்ரன் சென்னையில் தான் ஒரு ஐடி கம்பெனியில ஒர்க் பண்றது தெரிஞ்சது.
அதுவும் அந்த கம்பெனி நம்ம கம்பெனி கூட டைய்யப்ல இருக்க கம்பெனி தான். வேணி படிச்சிட்டே ஒரு தனியார் பள்ளியில் வேலை பார்த்துட்டு, அரசுவேலைக்கும் தேர்வு எழுதுறதா தெரிஞ்சது.
சென்னையில் இவள் அப்பன் ஆயிரம் பேருக்கு வேலை போட்டு கொடுத்துட்டு இருக்கான். அவன் பொண்ணு ஒரு தனியார் பள்ளியில் குறைந்த சம்பளத்துக்கு வேலை பாக்குறத நினச்சி மனசுக்கு ரொம்ப கஷ்டமா ஆயிடுச்சி.
சென்னை வந்ததும் சந்திரா கிட்ட இதை சொன்னதோடு தன் கைய்பேசியில் நான் பிடிச்ச அவங்க குடும்ப புகைப்படத்தை காட்டினேன்.
அந்த புகைப்படத்தையே கொஞ்சம் நேரம் உற்று பார்த்துட்டு இருந்த சந்திராவின் கண்ணில் இருந்து தன்னால் கண்ணீர் வந்துட்டே இருந்தது.
பிறகு கண்ணை துடைத்துக் கொண்டவன். என் பெண்ணுக்கு நான் இது வரை செய்யாத்தையும் சேர்த்து வைத்து செஞ்சி முடிப்பேன்டா என்று சொன்னவன் முதல் வேலையா…
பவித்ரன் வேலை செய்யிற கம்பெனிக்கு இரண்டு தடவை பிசினஸ் பேசுவது போல் பவித்ரனை பார்த்துட்டு வந்தான்.
அந்த இரண்டு தடவையும் அவனை பார்த்துட்டு வந்துட்டு… “ பையன் நல்லா இருக்கான்டா...விவரமானவன் தான். பாக்க நல்ல பையனா தான் தெரியுறான்.” என்று என் கிட்ட அவனை பத்தி அடிக்கிட்ட சொல்லிட்டு போனவன்…
கொஞ்ச நேரம் கழிச்சி… “சம்பளம் கம்மிடா...நான் என் ட்ரைவருக்கு கொடுக்கும் சம்பளம் தான்டா அவன் வாங்குறான். ஏதாவது செய்யனும். அதுவும் அவன் என் மகள கல்யாணம் செய்துக்க போறவன். அவன் இப்படி இருக்க கூடாது.”
இப்படி தான் பேசிட்டே இருந்தான் சந்திரா...அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாய் நம்ம குழுமத்தின் பங்கை உங்க அப்பாவுக்கு தெரியாம மத்தவங்க கிட்ட இருந்து வாங்க ஆராம்பிச்சிட்டான்.
நான் கூட அவன் கிட்ட… “என்னடா..இப்படி செய்யிற…? நீயே பிரச்சனைய விலை கொடுத்து வாங்காதடா…” என்று சொன்னதற்க்கு…
“இது ஒன்று தான் கிருஷ்ணாவை என் மகளாய் காட்ட போற அடையாளம். இது வரை எப்படியோ இனி அனைவருக்கும் அவள் என் மகளாய் தான் தெரியனும். நான் ஏன் என் மகளுக்கு வேறு சொத்து வாங்காம நம்ம குழுமத்தின் பங்கை வாங்கினேன். நான் இல்லை என்றாலும் அவள் என் மகளாய் அனைவருக்கும் அடையாளம் காட்டப்பட வேண்டும் என்று தான்.”
ராஜசேகர் அனைத்தையும் சொல்லி முடித்த பின் கண் மூடிக் கொண்டார்.
****************************************************மக்களே அவ்வளவு தான் ப்ளாஷ் பேக் முடிஞ்சது. இனி விறு விறுப்பாய் அடுத்து அடுத்து கதை நகரும். இந்த கதையை நாப்பத்தை ஐந்து அத்தியாயத்தில் முடித்து விடுவேன்.