Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Kambathu Ponnu...16

  • Thread Author
அத்தியாயம்….16

அன்று நடந்த அந்த தலமை பதவி மாற்றம் யாருமே எதிர் பாராத ஒன்றாய் இருந்தது. அந்த குழுமத்தின் பங்குதாரர்களில் ஒரு சிலர் …

“சின்ன பெண். இந்த குழுமத்தின் தலமை பதவி வகிப்பதா…? அந்த பெண்ணுக்கு என்ன தெரியும்…? இந்த பெண்ணை நம்பி எங்க ஷேரை எப்படி இங்கு விட்டு வைப்பது…?” இப்படி சொன்னவர்கள் அனைவரும் வயதில் மூத்தவர்கள்.

இந்த பெண் தலமை பதவி வகித்தால், தாங்கள் தங்கள் பங்கை விற்று விடுவோம் என்று நேரிடையாய் இல்லாது மறைமுகமாய் மிரட்டுவதற்ககே இவ்வாறு பேசினர்.

ஒரே பார்வையில் அவர்கள் எண்ணத்தை புரிந்துக் கொண்ட வேணி… “இங்கு தலமை பதவி வகிக்க போவது நான் தான். கிருஷ்ணவேணி சந்திரசேகர். உங்களுக்கு இதில் விருப்பம் இல்லை என்றால் தாரளமாய் உங்கள் பங்கை விற்க்கலாம். அதையும் வாங்க நான் ரெடி.”

அவ்வளவு தான் என் பேச்சு என்பது போல் ராஜசேகர் தன்னிடம் கொடுத்த கோப்பில் கையெய்ப்பம் இட்டுக் கொண்டு இருந்தவளின் மனதுக்குள்…

சிறிது நேரம் முன் உதயேந்திரன் தன் பேச்சின் இறுதியில் தன் பங்கை தன் அண்ணனிடமே ஒப்படைக்கிறேன் என்று சொன்னதும் தான், எங்கோ கவனம் பதித்திருந்த வேணி நிமிர்ந்து உதயேந்திரன் முகத்தை பார்த்தாள்.

உதயேந்திரன் பேச்சு அனைவரிடம் பொதுவாக பேசுவது போல் இருந்தாலும், பார்வை மட்டும் அவனின் கிருஷ்ணா முகத்தில் மட்டுமே நிலைப் பெற்று இருந்தது.

அவன் எதிர் பார்த்த அந்த நொடி வேணி தன்னை நிமிர்ந்து பார்க்கவும், இதற்க்கு தான் காத்திருந்தது போல் அவள் கண் விழியில் தன் பார்வையை நங்கூரம் இடுவது போல் தன் விழியை அங்கும்… இங்கும்… அசையாது அவள் விழிதிரையில் மட்டுமே பார்த்தது. யார் என்னை பார்த்தால் எனக்கு என்ன என்பது போல் பார்த்திருந்தான்.

வெளியில் தான் தன் தந்தையுடன் பேசிக் கொண்டு இருக்கும் போது தூரத்தில் கிருஷ்ணா வரும் போதே உதயேந்திரன் பார்த்து விட்டான்.

தங்களை கடக்கும் போது ஒரு முறையாவது தன்னை அவள் நிமிர்ந்து பார்க்க மாட்டாளா...என்று அவன் ஏங்கிக் கொண்டு இருக்க...இவள் பார்க்காது தன் பங்காளி பவித்ரன் தன்னை ஆராய்ச்சி பார்வை பார்த்துக் கொண்டு போவதை பார்த்து அவனுக்கு பெரும் மூச்சு ஒன்று தன்னால் வந்தது.

என்னையா பாக்க மாட்டுற...என்னை ஒரு தடவை நிமிர்ந்து பாருடி. பிறகு நீ என்னிடம் இருந்து எப்படி பார்வையை திருப்புறேன்னு நானும் பாக்குறேன் என்று சபதம் எடுத்துக் கொண்டு தான் உதயேந்திரன் இந்த அறைக்குள் வந்தது.

தன் சபதத்தை நிறைவேற்றும் பொருட்டு வேணி தன்னை பார்ப்பாளா என்று காத்துக் கொண்டு இருந்த உதய் அவள் தன்னை நிமிர்ந்து பார்க்கவும், அதை தனக்கு சாதகமாய் நன்றாகவே பயன் படுத்திக் கொண்டான் உதயேந்திரன்.

வேணியும் அவன் பார்வைக்கு கட்டுப்பட்டவள் போல் அவனையே பார்த்திருக்க, பக்கத்தில் அமர்ந்து இருந்த பவித்ரன் தான் வேணியின் கை பிடித்து வேணியை நிகழ் காலத்துக்கு கொண்டு வந்தது.

உதயேந்திரன் வேணி தன்னை ;பார்க்கும் போதே …”நீ இந்த தலமை பொறுப்பை ஏற்க தான் வேண்டும்.”என்பது போல் தன் முன் இருந்த கோப்பின் மீது ஒரே நிமிடம் தன் பார்வையை செலுத்தி அவளுக்கு உணர்த்தி விட்டு தான் தன் நங்கூரும் பார்வையை வேணியின் மீது செலுத்திக் கொண்டு இருந்தது.

இடையில் பவித்ரன் தடை செய்ததை பார்த்த உதயேந்திரன் மனதில்…’டேய் நீ எனக்கு பங்காளியா…?பகையாளியாடா…? நீ சிங்கிளா இருக்குறதால தானே எப்பவும் வேணியையே நோட் செய்துட்டு இருக்க...இருடா உன்னை அந்த லாயர் கூட மிங்கிள் ஆக்குறேன்.

எங்களுக்கு இடஞ்சலா இருக்க உனக்கு இது தான் பனிஷ்மென்ட்’ என்று நினைதுக் கொண்டான்.

வேணி தன்னவனின் பார்வையின் பொருள் புரிந்துக் கொண்டு தான் இப்போது இப்படி பேசியதோடு மட்டும் அல்லாது ராஜசேகரிடம் இருந்த அந்த கோப்பில் கைய்யெப்பம் இட்டு அதை ராஜசேரிடம் நீட்டும் போது இடையில் அதை கைய் பற்றிய பவித்ரன்...

நிதானமாக வேணி கைய்யெப்பம் இட்ட சாராம்சத்தை படித்து முடித்த விட்ட பிறகே ராஜசேகரிடம் கொடுத்தான்.

அதுவும்… “யாரையும் இந்த காலத்துல நம்ப கூடாதுன்னு எங்க அப்பா தாத்தா காலத்திலேயே ஒருத்தர் ஏமாத்தி எனக்கு புரிய வெச்சிட்டார் மிஸ்டர் ராஜசேகர்.” என்று சொன்னவன்.

பின்… “நான் சொல்வது சரி தானே மிஸ்டர் ராஜசேகர்.” என்று ராஜசேகரை வெறுப்பு ஏற்றும் வகையாக திரும்பவும் கேட்க..

பாவம் போல் முழி பிதிங்கி… “ஆமாம்.” என்பது போல் ராஜசேகர் தலையாட்டி வைத்தார்.

இதை பார்த்துக் கொண்டு இருந்த உதயேந்திரன்..’டேய் டேய் அவர் தான்டா உனக்கு மாமனாராய் வரப்போறவர். பார்த்து நடந்துக்க இல்லேன்னா காயூ உன்னை காய வெச்சிடுவா…” என்று பவித்ரனை பார்த்துக் கொண்டே உதய் மனதுக்குள் இப்படி நினைத்துக் கொண்டு இருந்தான்.

அந்த நினைவில் காயூ பவித்ரனை எப்படி காய விடுவாள் என்ற அந்த கற்பனையே அவனுக்கு சிரிப்பை வரவழைத்து விட்டது.

இருந்தும் தான் இருக்கும் இடம் கருதி, உதய் தன் புன்னகையை அடக்கினாலும், அதையும் தான்டி அவன் இதழ் ஓரம் வந்த சிறு சுருக்கம் அவன் வந்த சிரிப்பை அடக்கி கொள்கிறான் என்று அவனையே பார்த்துக் கொண்டு இருந்த வேணியின் கண்ணுக்கு புலப்பட்டு விட்டது.

இந்த காதல் நம்மை எங்கு கொண்டு போய் விடும் என்று உதயையே பார்த்துக் கொண்டு இருந்த வேணி பவித்ரனை பார்த்து சிரிப்பதை பார்த்து அதுவும் அடக்கிய படி சிரிப்பதை பார்த்து அவளுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது.

இவன் என் நண்பனை பார்த்து நக்கலாய் சிரிப்பானா…? ஆராய்ச்சி பார்வை கோப பார்வையாய் உறுமாறி வேணி அவன் மீது செலுத்தும் போது தான் உதயின் பார்வை வேணியின் பக்கம் திரும்பியது.

‘இப்போ தானே இவ என்னை ஆசையா பார்த்தா...சரி இவ ரூட் க்ளியர். இன்னும் இரண்டு குடும்பத்தை சரி கட்டனும். அடுத்து அது தான் என் வேலை என்று நான் நினைத்துக் கொண்டு இருக்க..இவ இப்போ என்னை முறச்சி பாக்குறாளே…

முதல்ல நம்மல பார்த்த ஆசை பார்வை நம்ம பிரம்மையோ...அட கடவுளே முதலில் இருந்தா…’ என்ற சிந்தனையுடன் கோபமாய் தன்னை பார்த்துக் கொண்டு இருந்தவள் தன் பக்கத்தில் அமர்ந்து இருந்த பவித்ரனையும் அதற்க்கு தான்டி அமர்ந்து இருந்த ராஜசேகரையும் வேணி பார்க்கவும் தான்…

அவள் நண்பனை நான் கிண்டலாய் பார்த்து சிரித்து விட்டேன் என்று தான் கோபமா…?இருடி எல்லாத்துக்கும் சேர்த்து வெச்சி உன்னை கவனிச்சிக்கிறேன்.

அந்த கவனிப்பு என்ன விதமான கவனிப்பு என்று அவன் கற்பனை ஒட...அந்த கற்பனையே அவன் மனதை சிறகில்லாது பறக்க போதுமானதாய் இருந்தது.

கற்பனைக்கே இத்தனை சக்தி என்றால் நிஜத்தில். எப்போடி அது நடக்கும்…? தங்கள் குடும்ப சிக்கலை நினைத்து, அது எப்போது…? அவனுக்கே கொஞ்சம் மலைப்பாக தான் இருந்தது. இப்படியாக அந்த குழுமத்தின் வருடாந்திரம் முடிவடைந்து ஒரு வாரம் கடந்து விட்டது.

அந்த ஒரு வாரமும் உதயேந்திரன் வேணியின் பக்கம் திரும்பாது தன் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு இருந்தான். அவன் முடிக்க வேண்டிய வேலைகள், அவன் மட்டுமே பார்த்து முடிக்க வேண்டிய வேலைகள் சில இருந்தன.

உதயேந்திரன் இனி அடுத்து பார்க்க வேண்டியது என்ன…? என்று அவன் மனதில் கேள்வி உதித்ததும் அவன் கண் முன் தோன்றியவள் வேணி என்று நினைத்தால் அது உங்கள் தவறு…

கண் மூடி திறக்கும் வேளயில் அவன் எதிரில் நின்றது ராஜசேகர்…எந்த வித பதட்டமும் இல்லாது “என்ன சார் இவ்வளவு காலையிலேயே வந்து இருக்கிங்க.” என்று ராஜசேகரை பார்த்து உதயேந்திரன் கேட்டான்.

பத்து நாளுக்கு முன் நீ என் வீட்டு வாசலில் வந்து நின்ன...இதே கேள்விய நான் உன்னை பார்த்து கேட்டேன். இப்போ இது உன் தருணமா… என்று மனதில் நினைத்தாலும் தான் வந்த நோக்கத்தின் தீவிரம் உணர்ந்தவராய்…

ராஜசேகர்…. “ நான் அப்பவே சொன்னேன். இதில் அந்த பெண்ணை நுழைக்க வேண்டாம் என்று இப்போ பார்த்திங்கலா…?”என்று ராஜசேகர் முதலும் இல்லாது முடிவும் இல்லாது மொட்டையாக தன் பேச்சை பேசி முடித்தார்.

“கோர்ட்ல கூட இப்படி தான் பேசுவிங்கலா…?” என்று உதயேந்திரன் கேட்க, தான் சொன்னதுக்கு சம்மந்தமே இல்லாது பேசும் உதயேந்திரனை ராஜசேகர் சந்தேகத்துடன் பார்த்தார்.

“இல்ல. என்ன விசயம் என்று சொல்லலே…பெண் பெண் என்று சொல்றிங்க. எந்த பெண் என்றும் சொல்லலே…இப்படி பேசினா எனக்கு எப்படி புரியும். அது தான் கோர்ட்ல இப்படி தான் பேசுவிங்கலா…? ஜட்ஜ் நீங்க பேசுவதை புரிஞ்சி எப்படி தீர்ப்பு சொல்வாருன்னு யோசிச்சேன்.”

‘இவன் வேற சமயத்தில் விளையாடிட்டு இருக்கான். சீரியனஸ் தெரியாம. நானே பதட்டத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாம பேசினா... இப்படி ராஜசேகர் மனதில் தான் நினைத்தார்.

தன்னோடு உயர்ந்த இடத்தில் இருக்கும் உதயேந்திரனை நேரடியாக பகைத்துக் கொள்ள முடியாது அல்லவா..

இருந்தும் அவன் பேச்சுக்கு ஏதாவது சொல்லா விட்டால் சென்னையில் புகழ் பெற்ற கிரிமனல் லாயராய் இருந்து என்ன பிரயோசனம்…? தன் வக்கீலின் பேச்சு திறமையை உதயேந்திரனிடம் காட்டினார்.

“சமீபத்தில் நீங்க ஒரு பெண்ணுக்கு தானே உங்க உரிமைய விட்டு கொடுத்திங்க.” என்று சொல்லி விட்டு பின் யோசிப்பது போல் ஏதோ யோசித்தவராய்..

“எனக்கு தெரிஞ்சி தான் நீங்க எல்லாம் செய்ய வேண்டும் என்பது இல்ல பாருங்க. தெரியாம ஏதாவது பெண்ணுக்கு உதவி இருக்கலாம். அதான் நான் பெண் என்று சொன்னதும் உங்களுக்கு யாருன்னு தெரியல உதய்.”

ராஜசேகர் பேச பேச ஒரு இளம் புன்னகையுடன் கேட்டுக் கொண்டு இருந்த உதயேந்திரன் தன் கையை மேல் தூக்கி சரண் அடைவது போல்…

“நீங்க லாயர் தான். அதுவும் திறமை வாய்ந்த லீடிங் லாயர் தான். அதை நான் ஒத்துக்குறேன்.” என்று சொன்னவன் பின் தன் சிரிப்பு மேலும் விரிய…

“நீங்க சொன்னதிலும் ஒரு உண்மை இருக்கு அங்கிள். இந்த ஒரு வாரத்தில் வேறு ஒரு பெண்ணுக்கும் நான் உதவி செய்து இருக்கேன்.” என்று சொன்ன உதயேந்திரனுக்கு தன் விரிந்த சிரிப்பு மறைந்து அங்கு குறும்பு சிரிப்பு அவன் உதட்டில் மின்னிய மறையலாயிற்று.

அவன் குறும்பு சிரிப்புக்கு பின் ஒளிந்து இருக்கும் விசயம். இந்த ஒரு வாரத்தில் தன் வேலைக்கும் நடுவில் உதவி செய்த பெண். சாட்சாத் நம் காயத்ரி தான். அதுவும் அவன் செய்த உதவி மட்டும் ராஜசேகருக்கு தெரிந்தால்...என்று நினைத்த உதயேந்திரன் மனதுக்குள் ஏதோ கசப்பான நினைவுகள் வந்து போயின…

இனிப்பான லட்டை சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் வேளயின் அதன் லட்டின் உள்மறைந்து இருக்கும் லவங்கம் நம் பல்லில் கடி பட்டால் அந்த சுவை மாறு பாட்டை நம் நாவு எப்படி உணரும். அந்த நிலையில் தான் உதயேந்திரன் இருந்தான்.

இது வரை வேணி அடுத்து காயத்ரியிடம் பேசிய பேச்சு வார்த்தையில் சந்தோஷப்பட்டு கொண்டு இருந்த உதயின் மனது அடுத்து அவன் நினைத்த ராஜசேகர் அவர் பெண்ணுக்கு தான் நான் காதலிக்க உதவினேன் என்று சொல்லும் போதே…

இந்த ராஜசேகர் உதவி செய்த காதல் மனதில் தன்னால் வந்து போய் அங்கு கடுமை குடிக் கொண்டது. அதன் தாக்கம் அவன் முகத்திலும் பிரதிபலிக்க..

இது வரை இருந்த இலகு தன்மை மறைந்து… “எனக்கு தெரியும் மிஸ்டர் ராஜசேகர். நீங்க வேணிய பத்தி தானே சொறிங்க...நான் செஞ்சதால என்ன ஆச்சி வேணிக்கு.”

இது வரை இலகுவாய் தானே பேசிக் கொண்டு இருந்தான் திடிர் என்ன மாற்றம் என்று ராஜசேகர் மனதுக்குள் நினைத்தாலும் உதயேந்திரன் கேட்ட கேள்விக்கு பதிலாய்…

“ஒரு வாரமா வேணி பின்னாடி இரண்டு பேர் பாலோ பண்றாங்க.” என்று ராஜசேகர் தான் ஏன் இவ்வளவு பதட்டப்பட்டேன் என்ற காரணத்தை சொன்னார்.


























 
Active member
Joined
May 11, 2024
Messages
123
வேணியை யார் பாலோ பண்ணுறாங்க என்று உதய்கிட்ட ராஜசேகர் சொல்லுறாரு அது யார் அனுப்பிருப்பா உதிய் தானோ பாதுகாப்புக்கு அனுப்பி இருப்பானோ 🤔🤔🤔
 
Top