அத்தியாயம்….20
பவித்ரன் வேணியிடம் ஜம்பமாய்… “நான் வேலை பார்த்த கம்பெனிக்கே திரும்பவும் போகிறேன்.” என்று சொல்லி விட்டு வந்து விட்டான்.
ஆனால் “பேப்பர் போட்டு மூன்று மாதம் சென்று தான் ரீலிவ் செய்ய முடியும்.” என்று சொன்ன மேலதிகாரியிடம்..…
“மூன்று மாத சம்பளத்தை கொடுத்தால் என்னை இப்போவே ரீலிவ் செய்துடுவிங்க தானே…” என்று சொன்னதோடு மட்டும் அல்லாது அப்போதே செக்கையும் கொடுத்து வந்து விட்டான்.
இரு முறை மட்டும் தான் வேலை செய்து கொடுத்த க்ளையண்டுக்கு ஏதோ சந்தேகம் என்று அந்த கம்பெனிக்கு சென்று வந்ததோடு சரி..
இப்போது சென்று எனக்கு என் வேலைய கொடுன்னு கேட்டா… “இது என்ன உன் மாமனார் கம்பெனியா….?” தான் யாரிடம் செக்கை கொடுத்தேனோ அவர் இப்படி கேட்டதில் தவறு இல்லை தான்.
ஆனால் அப்போது பார்த்து அந்த குள்ளபிசாசு காயத்ரி அங்கு இருந்து தொலைக்க வேண்டுமா... எல்லாம் என் நேரம் என்று தான் நினைக்க தோன்றியது பவித்ரனுக்கு,
ஆனால் பாவம் அவனுக்கு அப்போது எங்கே தெரிய போகிறுது. இது எல்லாம் செய்வது நேரம் இல்லை. உன் நேரத்தை மாற்றி அமைக்க கூடிய உதயேந்திரன் தான் என்று.
உதயேந்திரன் வேணிக்கு பாதுகாப்புக்கு ஆளை அனுப்பி பின் தொடர சொன்னான் என்றால், பவித்ரன் பின் அவன் எங்கு செல்கிறான் என்று பார்க்க ஒரு ஆளை அவனுக்கு என்று ஏற்பாடு செய்து அனுப்பி இருந்தான்.
அவன் சொல்லி தான் பவித்ரன் இன்று அவன் வேலை பார்த்த கம்பெனிக்கு செல்கிறான் என்ற விவரம் உதயேந்திரனுக்கு தெரிய வந்தது.
அதை கேட்ட உதயேந்திரன் உடனே காயத்ரிக்கு தகவலை அனுப்பி விட்டான். கூடுதலாய் அந்த கம்பெனியும் இவன் குழுமத்தில் தொடர்புடைய கம்பெனி என்பதால், ஒரு லாயராய் காயத்ரி பவித்ரன் இவளுக்கு முன் அங்கு சென்று விட்டாலும், அவன் பார்க்க வேண்டி மேலாதிகாரியை … “தான் வரும் வரை பவித்ரன் யாரையும் பார்க்க அனுமதி தராதிங்க.” என்று காயத்ரி சொல்லி விட்டதால்…
அந்த வரவேற்ப்பு பெண்… பவித்ரனை காக்க வைத்து விட்டு காயத்ரி வந்த பின் தான் அந்த வரவேற்ப்பு பெண் இருவரையும் ஒன்றாக தான் அந்த மேலாதிகாரியை பார்க்க அனுமதி தந்தாள்.
அந்த இடத்தில் காயத்ரிக்கு அவ்வளவு செல்வாக்கா… என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். இதன் பின் இருந்து அனைத்தும் செய்து முடிப்பது நம் உதயேந்திரனே தான்.
அந்த மேலாதிகாரி “இது என்ன உங்க மாமனார் கம்பெனியா…?” என்று கேட்டதற்க்கு, தான் பதில் அளிக்கும் முன் அந்த குள்ளவாத்து சொன்ன…
“இதோட பெரிய ஆபிசா எங்க அப்பா இவருக்கு கட்டி கொடுப்பார்.”
காயத்ரி இப்படி சொன்னதும் அந்த மேலாதிகாரி குழம்பி போனவராய்… “மேடம் நீங்க நம்ம கம்பெனி லாயர் ராஜசேகர் டாட்டர் தானே…”
இந்த வரவேற்ப்பு பெண் தன்னிடம்… “லாயர் ராஜசேகர் டாட்டர் வந்து இருக்காங்க என்று தானே தன்னிடம் சொன்னாள். தவறாய் வேறு யாரையாவது அனுப்பி விட்டாளா…?இல்லை இந்த பெண் பவித்ரன் அழைத்து வந்த பெண்ணா…?அது தான் இரண்டு பேரும் ஒன்றாக வந்து இருக்காங்கலோ என்று அந்த மேலதிகாரி மனதில் சந்தேகம் கொண்டாலும்…
இந்த பெண் பவித்ரன் அழைத்து வந்த பெண்ணாய் தான் இருக்கும். அது தான் எங்க அப்பா ஆபிஸ் கட்டி கொடுப்பார் என்று அப்படி திட்ட வட்டமாய் பேசிட்டு இருக்கு.”
இருந்தும் ஒரு சந்தேகத்தின் பேரில் அந்த மேலாதிகாரி கேட்டார்.
ஆனால் காயத்ரி… “ஆமாம்.” என்று சொன்னதும், அந்த மேலாதிகாரி தன்னை காயத்ரியையும் மாறி மாறி சந்தேகமாய் பார்ப்பதை பார்த்த பவித்ரன்…
“இப்போ எதுக்கு இங்க வந்த…?” ஒரு வாரமாய் தொடர்ந்து நம் பவித்ரன் செல்லும் இடம் எல்லாம் நிழல் போல பின் தொடர்வது மட்டும் அல்லாது அவன் எங்கு அமர்கிறானோ அவன் பக்கத்தில் அமர்ந்துக் கொள்வது..
அது பார்ப்பதற்க்கு இருவரும் ஒரு சேர தான் வந்து இருக்கிறார்கள் என்ற எண்ணத்தை மற்றவர்கள் நினைக்கும் படி தோன்றும். அப்படி தான் இரண்டு நாள் முன் பவித்ரன் ஓட்டலில் காபி குடிக்க சென்ற போது, எப்போதும் போல் அன்றும் காயத்ரி அவன் பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டாள்.
சரி இவளிடம் என் பின் வராதே என்று சொன்னால் தானே பிரச்சனை...சட்டை செய்யாது விட்டு விட்டால், அவளும் தன்னை விட்டு விடுவாள் என்று நினைத்ததோடு ஒன்றும் பேசாது இருந்து விட்டான்.
தான் ஆர்டர் செய்த காபியை குடித்து விட்டு பில்லை பார்க்க..அது ஐநூத்தி ஐம்பதை காண்பித்தது.
உடனே பவித்ரன் அதிர்ந்து போய் தெரியாம நாம் ஸ்டார் ஒட்டலுக்கு வந்து விட்டமோ என்று தான் அமர்ந்து இருந்த ஒட்டலை சுற்றி முற்றியும் பார்த்து வைத்தான். பின் திரும்பவும் அந்த பில்லை நன்று கவனித்ததில் காபியோடு வேறு சில சாப்பிடும் ஐட்டமும் இருப்பதை பார்த்து விட்டு பில் தவறாய் தனக்கு வந்து இருக்கும் என்று நினைத்துக் கொண்டான்.
இன்று வேணியின் நிலை உயர்ந்தாலும் பவித்ரன் எப்போதும் போல் தன் நிலை என்ன…? அதை மனதில் கொண்டு தான் அவன் செலவினங்கள் இருக்கும்.
சென்னைக்கு வேலைக்கு வந்த போது எந்த ஒட்டலுக்கு சாப்பிட செல்வானோ, இப்போதும் அதே ஒட்டலுக்கு தான் சாப்பிட செல்கிறான்.
அதே போல் தனக்கு ட்ரஸ் எடுப்பதிலும் அப்படியே...வேணிக்கு மட்டும் அவள் பதவிக்கு ஏற்றது போல் உயர்ந்த துணிகளை தன் காசில் எடுத்துக் கொடுப்பான்.
இப்போது தன் பில்லை அந்த ஒட்டலின் மேனஜரிடம் தன் பில் அல்லாது வேறு பின் தன்னிடம் வந்து விட்டதை காண்பிக்க அவரிடம் சென்றான்.
“சார் நான் சாப்பிடாத ஐட்டத்தை எல்லாம் இதில் போட்டு இருக்கிங்க. இது எனக்கான பில் கிடையாது.” என்று பவித்ரன் தன்னிடம் உள்ள பில்லை அந்த மேனஜரிடம் காண்பித்து சொல்ல.
அந்த மேனஜர் பவித்ரனுக்கு சர்வீஸ் செய்தவனிடம் என்ன என்று விசாரித்து பவித்ரன் அருகில் வந்தவர்…. “யாரோ சாப்பிட்டத உங்க தலையில் கட்டல சார். உங்க கூட வந்த பெண் சாப்பிட்டதை தான் உங்க பில்லில் சேர்த்து இருக்காங்க.” என்று சத்தமாக சொன்ன அந்த மேனஜர்..
பின் முனு முனுப்பது போல்...ஆனால் பவித்ரன் காதில் விழும் படி… “லவ்வர் கூட சுத்த மட்டும் வேண்டும். ஆனா செலவு பண்ண மாட்டாங்கலா…” என்று சொன்னவன்..
பின் ஒரு பெரும் மூச்சு விட்ட வாறு… “செலவு பண்ண நான் ரெடி. எனக்கான லவ்வர் தான் இன்னும் ரெடியாகல.” என்று பொறாமை பட்ட வாறு அந்த இடத்தை விட்டு அகன்று விட்டான்.
ஆனால் அவன் சொன்ன வார்த்தைகளான லவ்வர் என்ற வார்த்தை அவன் மனதை விட்டு அகலாது அந்த கடுப்பில் காயத்ரியிடம் வந்தவன்…
“உனக்கு கொஞ்சம் கூட வெக்கம் இல்லையா…?” என்று கேட்க…
“அது எதுக்கு…?” என்ற ஒரே வார்த்தையில் பவித்ரனை வாயடைக்க காயத்ரி செய்ய..
இவளிடம் எல்லாம் மனுசன் பேசுவானா என்று அவளை வேண்டிய மட்டும் முறைத்து விட்டு வந்தான். இந்த பின் தொடரலை நிறுத்தாது தன் பின் தொடரும் காயத்ரியிடம் இன்று பேசி இதற்க்கு ஒரு முடிவு கட்டியே ஆகவேண்டும்.
ஏற்கனவே வேணி விசயம் வீட்டுக்கு தெரிந்து என்ன பிரச்சனை ஆகுமோ என்று நானே கதிகலங்கி இருக்கேன். இதில் இவளை பற்றி வீட்டுக்கு தெரிந்தால் அவ்வளவு தான் என்று நினைத்து அந்த மேலாதிகாரியின் எதிரிலேயே..
“ உன்னிடம் பேச வேண்டும்.” என்று பவித்ரன் காயத்ரியிடன் சொல்ல…
“ஓ தாரலமாய் பேசலாமே…” என்று சந்தோஷமாக பவித்ரனுக்கு ஒகே சொன்னவள்…
அந்த மேலாதிரியிடம்… “சார் கொஞ்சம் வெளியே போறிங்கலா…?” என்று காயத்ரி சொல்லியதும், அந்த மேலதிகாரி முறைத்த முறைப்பில் தான்…
‘ஐய்யோ அப்பா ஆபிசில் பேசுவது போல் பேசி தொலச்சிட்டேனோ.’ என்று நினைத்த அடுத்த நொடி உதயேந்திரன் நியாபகம் வர…
‘அட இதுவும் நம்ம ஆபிசு போல தான்.’ என்று மனதில் நினைத்ததோடு மட்டும் அல்லாது அந்த அதிகாரியிடமே…
தன் கை பேசியை அவர் முன் நீட்டிய வாறே… “என்னை முறைக்கிறிங்கலே...இதே வார்த்தையை உதய் அண்ணா சொன்னா கேட்டு இருப்பிங்க தானே…” என்ற காயத்ரியின் பேச்சில்…
“நீங்க யாரை சொல்றிங்க பரமேஸ்வரர் சன் மிஸ்டர் உதயேந்திரனையா…” என்று தன் சந்தேகத்தை அந்த மேலதிகாரி கேட்க…
அதற்க்கு காயத்ரி வாய் மொழியாய் பதில் சொல்லாது, தானும் உதயேந்திரனும் எடுத்த செல்பியை காண்பித்து தான் உதயேந்திரனுக்கு எவ்வளவு நெருக்கம் என்பதை காண்பித்து கெத்தாக அவரை ஒர் பார்வையும் பார்த்து வைத்தாள்.
இதை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த பவித்ரனுக்கு தான் தலையில் அடித்துக் கொள்ளலாம் என்பது போல் இருந்தது.
‘லூசு… லூசு… எந்த போட்டோவை அவரு கிட்ட காண்பிக்குது பாரு. அவரு இவளை பத்தி என்ன நினைப்பார்.’ என்று மனதில் நினைத்தவனுக்கு அப்போது தான் ஒன்று உரைத்தது. தவறு...தவறு… ஒன்று அல்ல. இரண்டு.
தான் எங்கு எப்போது இருக்கிறோம் என்ற விசயம் இவளுக்கு எப்படி தெரிகிறது என்ற அவனின் சந்தேகம் இப்போது தீர்ந்தது. இரண்டு உதயேந்திரன் ஏன் இவளுக்கு உதவி செய்கிறான்.
தன் சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளவாவது இவளிடம் பேசியே ஆக வேண்டும் என்று… “வா போகலாம்.” என்று அவளின் கை பிடித்து இழுத்து சென்றான்.
பவித்ரனின் இந்த கை பற்றல் தானாகவே வந்தது. இது வரை வேணியை தவிர தொட்டு எந்த பெண்ணிடமும் அவன் பேசியது கிடையாது.
தொட்டு என்ன சாதரணமாக வேலை பார்க்கும் இடத்தில் கூட வேலை விசயம் தவிர...வேறு பேச்சு வார்த்தைகள் வராது பார்த்துக் கொள்வான்.
வேணி சொன்னது போல் அழகில் உதயேந்திரனை விட பவித்ரனே அழகு. இவன் சென்னையில் வேலை பார்க்க போகிறேன் என்று சொன்னதுமே…
வீட்டில் இதற்க்கு முன் வேலை பார்க்க சென்ற சந்திரசேகரின் நியாபகம் வந்து விட்டது போல். அந்த நியாபகம் கொடுத்த அதிர்ச்சியில் இவன் சென்னை வரும் முன் அனைவரும் ஒவ்வொரு விதமாய் அவனுக்கு அறிவுரைகள் சொன்னதில், சென்னைக்கு போகலாமா…? வேண்டாமா….? என்ற யோசனையில் பவித்ரன் ஆழ்ந்து விட்டான்.
வீட்டில் அனைவரும் அறிவுரை சொன்னதில் மொத்த சாராம்சம் இது தான். வேறு பெண்ணை பார்க்காதே….வீட்டில் வேணி இருக்கா...அவ தான் உனக்கு. இது போல் அர்த்தம் கொண்ட அறிவுரைகள் தான் அவைகள்.
இந்த அறிவுரைகளை கேட்ட பவித்ரன் பேசாமே நாம சென்னைக்கு போகாம விட்டுடலாமா...என்ற அவன் யோசனையை அறிந்துக் கொண்ட வேணி…
“பெரியவங்கன்னு இருந்தா அறிவுரைகள் சொல்ல தான் செய்வாங்க. அதுக்குன்னு உனக்கான ஆசையை விட்டு விடுவாயா…? அது என்னவோ வேணிக்கு அரசாங்க உத்தியோகத்தில் ஒரு மோகம் என்றால், பவித்ரனுக்கு ஐ.டி கம்பெனியில் வேலை செய்ய வேண்டும் என்ற ஆசை.
அவனின் ஆசை நிறைவேற்ற வேணி தான் வீட்டில் பேசி பவித்ரனை சென்னைக்கு அனுப்பி வைத்தது.பவித்ரனும் வீட்டில் சொன்ன படி தான் சென்னையில் அவன் வாசம் கழிந்தது.
அந்த ஒரு நாளை தவிர, அவன் பெண்களை ஒரு ஆர்வத்தோடு பார்த்தது கிடையாது.
இப்போது பவித்ரனின் இந்த கை பற்றல் எப்படி…? என்பதை விட, அவன் உணராது தன்னியல்பாய் அவள் கை பற்றி அழைத்து சென்ற இடம். முதன் முதலில் காயத்ரியை பவித்ரன் பார்த்த இடமான வண்டலூர் பூங்கா.
****************************************************
கதை எப்படி போகுது…? சரியான பாதையா …?இல்லை ரொம்ப இழுத்தடிக்கிறேனா….? சொல்லுங்க வாசகர்களே….