Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Kambathu Ponnu....23(2)

  • Thread Author
அத்தியாயம்….23(2)

பரமேஸ்வரர் சொல்லுக்கு கட்டு பட்டு, வேணி அவர் பின் செல்லவில்லை. என்ன தான் நடக்கும் என்று பார்க்கலாமே… இருபது வருடம் முன் ஏதேதோ பேசி அவர் மகள் வாழ்க்கையில் இருந்து என் அன்னையை முற்றிலுமாக அகற்றி விட்டார்.

அது போல் தன்னை அவர் மகன் வாழ்வில் இருந்து அகற்ற அவர் என்ன வேண்டும் என்றாலும் செய்வார். இதை முதலிலேயே அவள் எதிர் பார்த்தது தானே… ஏதோ ஒரு தைரியம் வர பெற்றவளாய் வேணி பரமேஸ்வரர் பின் சென்றாள்.

வேணி எதிர் பார்த்தது போலவே அந்த குழுமத்தின் மூத்த உறுப்பினர் அனைவரும் அங்கு கூடி இருந்தனர். அதில் உதயேந்திரனும் அடக்கம். தன்னை பார்த்து உதய் சிரித்த அந்த சிரிப்பில் ஏதோ யானை பலம் பெற்றவளாய் திரும்ப அவனை பார்த்து இவளும் புன்னகை புரிந்தாள்.

இதை எல்லாம் பார்த்தும் பார்க்காதது போல் பார்த்துக் கொண்டு இருந்த பரமேஸ்வரரோ… இன்னும் உன் ஆட்டம் எது வரை என்று தான் பார்க்க போகிறேன். இன்னும் கொஞ்ச நேரம் தான் இந்த ஆட்டம் எல்லாம். இங்கு இருக்கும் அனைவரும் உன் மூஞ்சில் காறி உமிழ இந்த இடத்தை விட்டு நீ போக வேண்டும்.

அதுவும் என் மகனே உன்னை கழுத்து பிடித்து வெளியே தள்ள வேண்டும். என்று மனதில் நினைத்தவராய் வேணியை ஒரு இறுமாப்புடன் பார்த்துக் கொண்டே தன் இருக்கையில் அமர்ந்தார்.

வேணி தன் கைய் பேசியை பார்த்துக் கொண்டே தலமை இருக்கையில் யோசனையுடன் அமர்ந்தாள். பவித்ரன் இது வரை தான் அழைத்து அழைப்பை ஏற்காது இருந்தது இல்லையே… ட்ரைவிங்கில் இருந்தால் கூட வண்டியை நிறுத்திய உடன் தன்னை அழைத்து… “என்ன…?” என்று விசாரிப்பானே...அவனுக்கு ஏதாவது…? அந்த யோசனையே அவளுக்கு பயத்தை கொடுத்தது.

தன்னை பழி வாங்க இந்த பெரிய மனிதர் பவித்ரனை ஏதாவது செய்து விட்டாரோ...தனக்கு ஏதாவது இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் பவித்ரனுக்கு ஏதாவது ஒன்று என்றால்…

முதலில் வேணி பவித்ரனை அழைத்ததோ தன் பாதுகாப்புக்கு தான். ஆனால் இப்போது அவனுக்கு என்னவோ ஏதோ என்று மனது பயந்து துடிக்க, வேணியின் அந்த பயம் முகத்தில் பதட்டமாய் தெரிந்ததில், பரமேஸ்வரருக்கு கொண்டாட்டமாய் ஆனது.

வேணி தன் பின் வரும் போது அவள் முகத்தில் தெரிந்த நம்பிக்கையில், இவள் இப்படி இருந்தால், நாம் இவளை இங்கு இருந்து வெளியில் அனுப்புவதில் ரொம்ப சிரமப்பட வேண்டுமே…

அவர் சிரமப்பட நேரிடும் என்று தான் நினைத்தாரே ஒழிய. இங்கு இருந்து வெளியேற்ற முடியாது என்று நினைக்கவில்லை.

பெண்களை எப்படி எங்கு அடித்தால், வீழ்வார்கள் என்று தெரிந்து வைத்ததோடு, அதை நடை முறை படுத்தி வெற்றியும் கண்டு இருக்கிறாரே… அதை நினைத்து இருந்தவர் வேணியின் இந்த பதட்ட முகம் அவருக்கு குதுகலத்தையே கொடுத்தது.

பரமேஸ்வரருக்கே வேணியின் முகம் மாறுதல் தெரியும் போது, நம் உதயேந்திரனுக்கு தெரியாமல் இருக்குமா…? மனதில் இடம் பிடித்தவனுக்கு வேணியின் முகம் மாறுதலோடு காரணமும் தெரிந்தது.

அவன் அவள் கைய் பேசிக்கு ஒரு குறுந்தகவல் அனுப்ப...அதில் சொல்ல பட்ட செய்தியால் அவள் மகிழ்ந்தாளா… அதில் வந்த எண்ணை பார்த்து மகிழ்ந்தாளா…? என்று தெரியவில்லை. ஆனால் வேணியின் பதட்ட முகம் மாறி அதில் மகிழ்ச்சி குடிக் கொண்டது.

அந்த மகிழ்ச்சியை கெடுக்கும் வகையாக பரமேஸ்வரர்… அந்த குழுமத்தின் மூத்த உறுப்பினர்களை பார்த்து… “எதுக்கு நீங்க எல்லோரும் இந்த மீட்டிங்கை ஏற்படுத்தினிங்க…?அதுவும் இந்த குழுமத்தின் தலமை பொறுப்பில் இருக்கும் செல்வி கிருஷ்ணவேணி அவர்களுக்கு கூட தெரிவிக்காது. அதன் காரணம் நான் தெரிஞ்சிக்கலாமா…?” மிக பவ்யமுடன் கேட்பது போல் பரமேஸ்வரர் கேட்டார்.

இருப்பதிலேயே மூத்த வயதுடைய ஒருவர் எழுந்து நின்றவர்… “ உங்களுடைய இந்த குழுமம் பழமை வாய்ந்தது, நேர்மையானது, நியாயமானதோடு மரியாதையானது என்று தான் இந்த குழுமத்தில் பங்கை வாங்கினேன்.

போன இரு முறை நடந்த மீட்டிங்கில் கூட ஏதேதோ பேசினிர்கள். சரி உங்க குடும்ப விவகாரம் உங்க மருமகன் உங்க மகளுக்கு துரோகம் செய்து விட்டார். அதற்க்கு சாட்சியாக வந்த பெண்ணின் மீது சொத்தை எழுதி வைத்து விட்டார். ஏதோ கண்டும் காணாமல் விட்டு விட்டோம்.

போன மீட்டிங்கில் இந்த சின்ன பெண்ணுக்கு தலமை பதவி கொடுத்திங்க. சரி அதையும் விட்டு விட்டோம். நாங்கள் விட்டு விட்டோம் என்றால், இங்கு நடப்பது எங்களுக்கு ஒன்றும் தெரியாது அர்த்தம் இல்லை.

எங்க ஆளும் இங்கு இருக்காங்க. இங்கு நடப்பதை அவங்க சொல்லி கேட்கும் போது இது கம்பெனியா இல்ல வேறு ஏதாவதா…? என்று நாங்கள் யோசிக்கும் படியான விசயங்கள் எல்லாம் இங்கு நடக்குது.

எங்களுக்கு தெரிய வேண்டியது எல்லாம். இது எல்லாம் உங்களுக்கு தெரிஞ்சி நடக்குதா..? இல்ல தெரியாம நடக்குதா என்பது தான்.” என்று சொன்ன அந்த மூத்த உறுப்பினர், மற்ற உறுப்பினர்கள் அனைவரையும் பார்த்து….

“நீங்க என்ன சொல்றிங்க…?” என்று பொதுவாக கேட்டு விட்டு அவர் இருக்கையில் அமர்ந்து விட்டார்.

மற்ற அனைத்து உறுப்பினர்களுமே… “எங்க காதுகளுக்கும் ஒரு சில விசயங்கள் வந்தது தான்.ஆனால் பூனைக்கு யார் மணி கட்டுவது என்று நாங்க அமைதியா இருந்துட்டோம். இப்போ நீங்க தைரியமா கேட்கும் போது உங்க கூட நாங்க எல்லோரும் இருக்கோம்.

இந்த குழுமம் ஒழுக்கத்திற்க்கு பெயர் போனது.” என்று அவர்கள் பங்குக்கு சொல்லினர்.

இதை எல்லாம் அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்த வேணி, இந்த குழுமம் ஒழுக்கத்திற்க்கு பெயர் போனது என்று சொல்லும் போது அருகருகே அமர்ந்து இருந்த உதயையும், ஜெய்சக்தியையும் பார்த்து வேணி…

“அப்படியா…” என்பது போல் உதட்டசைவு கொடுத்தாள். அதற்க்கு ஜெய்சக்தி முறைத்தாள் என்றால், உதயேந்திரன் முழித்தான்.

அனைவரும் பேசிய பிறகு வேணி… “இந்த குழுமத்தின் தலமை பொறுப்பில் நான் இருப்பதால், என்னிடம் நீங்கள் இங்கு என்ன ஒழுக்க கேடு நடந்தது என்று சொன்னால், விசாரித்து நடவடிக்கை எடுக்க எனக்கு வசதியாக இருக்கும்.” என்று சொன்னாள்.

அதுவும் அவள் விசாரித்து என்று சொல்லும் போது அதில் மிக அழுத்ததை கொடுத்தே சொன்னாள்.

முதலில் பேசிய மூத்த உறுப்பினர்… “பிராதே உன் மீது தான் எனும் போது…” அவர் இழுத்து நிறுத்தியம் …

வேணி தான் அமர்ந்து இருக்கையை விட்டு அகன்றவள். “என் மீது தான் என்னும் போது அதை நிருபித்தால், இந்த பதவியை விட்டு விலகி கொள்கிறேன்.” என்று சொன்னதும்…

அதற்க்கு பரமேஸ்வரர் ஏதோ சொல்ல வர…வேணி அவரை தடுத்து “அனைவரும் பேச நான் அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்தேன். என் மீது தான் பிராது என்னும் போது இதோ நான் அந்த இருக்கையை விட்டு எழுந்து விட்டேன். இப்போ நான் சொல்வதை கேட்டுட்டு என் மீதான விசாரணையை ஆராம்பிங்க.” என்று வேணி சொன்னதும்..

முதலில் பேசியவர்… “ம் சொல்லுமா நீ என்ன சொல்றேன்னு கேட்கிறோம். ஆனா நீ சொன்னது போல் உன் மீதான தவறு நிருபித்தால் இந்த பதவியை விட்டு விலகிடுவே தானே…” தன் சந்தேகத்தை தீர்த்த பின்னவே வேணியை பேச அவர் அனுமதித்தார்.

“கண்டிப்பா என் மீது பிழை என்று நிருபித்தால் இந்த பதவியை விட்டு விலகிடுவேன். ஆனால் என் மீது தவறு இல்லை என்றால்...இதோ அனைவரும் கூடி இருக்க என் மீது சேற்றை வாறி இரைக்க பாக்குறிங்கலே நீங்க என்ன செய்வீங்க…

தவறு தவறு இங்கு உங்களை எல்லாம் கூட்டி வந்த இந்த பெரியவர் என்ன செய்வார்.” என்று சொன்ன வேணி பரமேஸ்வரர் பக்கம் தன் கையை நீட்டி காமிக்க.

பரமேஸ்வரரும் மற்றவர்களை பேச விட்டு வேடிக்கை பார்க்காது… “நீ என்ன சொன்னாலும் செய்கிறேன். ஆனால் நீ சொன்னது போல் உன் மீது தவறு இருப்பதை நிருபித்தால் நீ பதவியை விட்டு விலக வேண்டும்.” என்று சொன்னார்.தன் மீதும் தான் வகுத்த திட்டத்தின் மீது மிகந்த நம்பிக்கை வைத்த பரமேஸ்வரர்.

“கண்டிப்பா…” என்று வேணி சொன்னதும்..

அங்கு வேலை செய்தவர்களை அழைத்த பரமேஸ்வரர்… “என்னிடம் போனில் சொன்னிங்கலே இங்கு எல்லோரும் கூடி இருக்காங்க. நீங்க என்ன பார்த்தேன்னு சொல்லுங்க.” என்று சொன்னதும் அந்த ஊழியர்கள் தயக்கத்துடன் வேணியை பார்த்தனர்.

அதை பார்த்த பரமேஸ்வர்ர்.. “பயப்படாதிங்க. இனி இந்த அம்மா இந்த பதவியில் இருக்க போவது இல்லை. தைரியாம சொல்லுங்க.” என்று சொன்னதும்..

முதலில் ஒருவர் சங்கரனை காண்பித்து… “இந்த சாருக்கு இந்த அம்மா ரூமில் அப்படி என்ன தான் வேலைன்னு தெரியாது. ஆவுன்னா அந்த அம்மா ரூமுக்கு போயிடுவார்.” என்று ஒருவர் சொன்னார் என்றால் மற்றொருவரோ…

“இரண்டு பேரும் ஒன்னா தான் வருவாங்க. லிப்ட்ல நாங்க எல்லாம் வந்துடுவோம் இவங்க பேசிட்டு பொறுமையா தான் வருவாங்க.

அதுவும் சில சமையம் இவங்க ஏறுனா மட்டும் தான் லிப்ட் ரிப்பேர் ஆவது போல் ரிப்பர் ஆகும். இன்னைக்கு கூட நாங்க வந்தோம் எங்க கூட வராம இவங்க இரண்டு பேரு மட்டும் பிறகு வந்தாங்க. அதுவும் இவங்க வர்றப்ப சரியா லிப்ட் ரிப்பேர் ஆகும்.” என்று சொன்னதும் ..

“அப்படியா…?” என்பது போல் சங்கரன் வேணியை பார்த்து கேட்க..

சங்கரன் அவன் முகத்தில் மாட்டிக் கொண்ட பாவனை காட்டினான் என்றால், வேணியோ இது எதுவும் என்னை பாதிக்க வில்லை. பாதிக்காது என்பது போல் அமைதியாக நின்றுக் கொண்டு இருந்தாள். இதை பார்த்த பரமேஸ்வரருக்கோ கோபம் ஏகத்துக்கும் எகிறியது.

ஒரு பெண்ணான வேணியின் மீது அவளின் ஒழுக்கத்தின் மீது சந்தேகப்படும் படி பேசினால், துடிப்பாள். அழுவாள். இல்லை குறைந்த பட்சம் கோப்ப்படுவாள். இல்லை தன்னை நிருப்பிக்க இது பொய் என்று பேசுவாள் என்று பரமேஸ்வரர் எதிர் பார்த்திருக்க...அவர் எதிர் பாரா வேணியின் இந்த நிதானம் அவரை கோபம் ஊட்டியது.

அதில் உன்னை கதற விடுகிறேன் பார் என்பது போல் வேணியை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே…”லிப்ட் ஆபிரேட்டரை அழச்சிட்டு வா.” என்று ஒருவனை ஏவினார்.

அந்த ஏவளுக்கு பலனாய் சிறிது நேரத்துக்கு எல்லாம் அந்த லிப்ட் ஆபிரேட்டர் வந்து கை கட்டி பவ்யமாய் பரமேஸ்வரர் முன் வந்து நின்றான்.

“லிப்ட்டை பராமரிக்க தானே உன்னை இங்கு வெச்சி இருக்கு. அதை சரியா செய்யாம வேறு என்ன செய்யிற…?” அந்த லிப்ட் ஆபிரேட்டரை அதட்டி கேட்க…

“லிப்ட்ல எந்த பிரச்சனையும் இல்லையே சார்.ஏன் யாராவது புகார் கொடுத்தாங்கலா…?” என்று கேட்க…

“யாரும் புகார் கொடுக்கல.” என்று இழுத்து நிறுத்திய பரமேஸ்வரர்…

“ஆனால் இவங்க வரும் போது லிப்ட் நின்னிட்டதா மத்த ஊழியர்கள் சொல்றாங்கலே…” வேணி, சங்கரனின் பக்கம் கை காட்டி கேட்டதற்க்கு,

அந்த லிப்ட் ஆபிரேட்டர் தலையை சொறிந்த வாறே… “அது அம்மா இவங்க தான் நான் போன் செய்யும் போது கொஞ்ச நேரம் ஆப் பண்ணி வை என்று சொல்லி இருக்காங்க.” என்று தயங்கி தயங்கி சொல்வது போல் சொன்னான்.

“ஓ..” என்று சொல்லி விட்டு வேணியை பார்த்து ஒரு இளக்காரம் புன்னகை சிந்திய பரமேஸ்வரர் திரும்பவும் அந்த லிப்ட் ஆபிரேட்டரை பார்த்து…

“எதுக்குன்னு நீங்க கேக்கலையா…?” என்ற பரமேஸ்வரரின் கேள்விக்கு,

“ஐய்யா இது பெரிய இடத்து சமாச்சாரம். நமக்கு எதுக்கு பொல்லாப்புன்னு அவங்க சொன்னதை செஞ்சுடுறது.” என்று சொன்னதும்..

வேணியை பார்த்த பரமேஸ்வரர்… “இப்போ என்ன சொல்ற…? என்ன உன் பதவியை விட்டு விலகிடுறியா…?” என்று நக்கலாக வினவ.

“இப்போவும் என் மீது தவறு நிருபனம் ஆனால் விலகிடுவேன்.” என்று சொன்ன வேணி…

அனைவரையும் பார்த்து… “இதுக்கு என்ன ஆதாரம்…?” என்று கேட்ட்தற்க்கு…

அதில் இருந்த ஒருவர்… “என்னம்மா ஒருவருக்கு மூனு பேரு உன்னை பத்தியும் அந்த பையனை பத்தியும் சேர்த்து வெச்சி சொல்லி இருக்காங்க. நீ என்ன என்றால் ஆதாரம் கேட்குற…”

“இவங்க மூனு பேரும் இவர் ஆளா இருந்தா…” என்று வேணி நிறுத்தவும்…

பரமேஸ்வரர்… “பொம்பள புள்ள நீ தாம்மா தைரியமா நிக்கிற. இதோ உன் பக்கத்துல நிக்கிற உனக்கு துணை வந்த அந்த பையன் முகத்தை பார். நாம மாட்டிக் கிட்டோம் என்று முழிப்பதை.” என்று பரமேஸ்வரர் சொல்லி வாய் மூடும் முன் அவர் காலில் விழுந்த சங்கரன்..

“சார் என்னை மன்னிச்சிடுங்க சார். வயசு கோலாருல தெரியாம செஞ்சிட்டேன். என்னை வேலை விட்டு நீக்கிடாதிங்க சார்.” என்று கதறி அழ…

“பார்த்தியா...இதுக்கு மேல ஆதாரம் வேணுமா…?அவனே அவன் செஞ்ச தப்ப ஒத்துக்கிட்டான்.” என்று சொன்ன பரமேஸ்வரரின் பேச்சு, உன் கதை அவ்வளவு தான் என்பது போல் இருந்தது.

அதற்க்கும் வேணி விடாது… “இவனும் உங்கள் ஆளாய் இருந்தால்…” என்று கேட்டதும்.

பரமேஸ்வரர் சங்கரனை பார்த்து… “உங்க உறவுக்கு நீ ஆதாரம் காட்டினால் உன் வேலை உனக்கு நிலைக்கும்.” என்று சொல்லவும்…

“இருக்கு சார் இருக்கு.” என்று அவசரமாய் தன் கைய் பேசியை டேபுள் மீது வைத்தவன்.

இந்த ஒரு வாரமாய் “காலையில் நான் அவங்களுக்கு மெசஜ் அனுப்பிட்டு அப்புறம் பேசுவோம்.” என்று சொன்னதும்…

சங்கரனின் கைய் பேசி அனைவரின் கைக்கும் மாறி கடைசியாக உதயேந்திரனின் கைக்கு வந்து நின்றது.

“இப்போ என்ன சொல்ற…” என்று பரமேஸ்வரர் கேட்க…

“அவன் யாருக்கு மெசஜ் அனுப்பினான் பாருங்க. யாரு கிட்ட கடலை வறுத்து கிட்டு இருந்தான்னு பாருங்க.” என்று தைரியமாய் கை கட்டி நின்றவளின் பேச்சில், பரமேஸ்வரர் குழம்பி போய் வேணியை பார்த்துக் கொண்டே அந்த கைய் பேசி எடுத்து சங்கரன் பதிவு செய்து வைத்திருந்த வேணி என்ற பெயரின் இடம் பெற்று இருந்த எண்ணை பார்த்தார்.

தான் பார்த்த எண் சரியா என்பது போல் திரும்பவும் விழி விரித்து பார்த்தவர் பின் கோபத்துடம் தன் மகனை பார்த்தார்.

இவரின் பார்வை புரியாது அனைவரும் குழப்பத்துடன் இவர்களை பார்த்தனர்.






















 
Active member
Joined
May 11, 2024
Messages
123
அவர் விரிச்ச வலையில் அவரே மாட்டிகிட்டரோ 🤔🤔🤔🤔🌺🌺🌺
 
Top