Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Kambathu Ponnu...25(1)

  • Thread Author
அத்தியாயம்….25(1)

“இப்போ யார் முறையா வந்தது…? யார் முறையற்று வந்ததுன்னு புரிஞ்சி இருக்கும் என்று நினைக்கிறேன்.” என்று சொன்ன வேணியின் குரல் மட்டும் தான் அந்த அறையில் கேட்டது.

ஜெய்சக்தி… “அப்பா என்ன இது…?அந்த பெண் ஏதேதோ பேசிட்டு இருக்கு…நீங்க அமைதியா கேட்டுட்டு இருக்கிங்க…?” அவமானம் பாதியும், கோபம் மீதியுமாய் எழுந்து நின்று கண் கலங்க கேட்ட சகோதரியை பார்த்த உதயேந்திரனுக்கு, நெஞ்சு பதற தான் செய்தது.

அனைத்தும் திட்ட மிட்டு செய்தது அவன் தான். இதன் பின் விளைவு என்ன என்பதும் அவனுக்கு தெரியும். இதில் அவமானப்படபோவது அவன் குடும்பம் அதையும் தெரிந்து தான் செய்தான்.

தெரிந்த செயல் காட்சியை கண் முன் காண மனசு ஏனோ வலித்தது. இது தான் ரத்த சம்மந்தம் என்பதோ… இங்கு இருந்து எழுந்து போய் விடலாமா….இனி அனைத்தையும் கிருஷ்ணா பார்த்துக் கொள்வாள் என்று நினைத்து உதயேந்திரன் எழ பார்க்க…

வேணி ஜெய்சக்திக்கு பதிலாய்… “இனி நான் மட்டும் தான் பேசுவேன். நீங்க அதை கேட்டு தான் ஆக வேண்டும். ஏன்னா தேவையில்லாதது எல்லாம் நீங்க அளவுக்கு அதிகமாகவே பேசிட்டிங்க.” என்று சொன்னவள்..

குரல் மாற… “என் அம்மா கிட்ட.” என்று அவள் அந்த வார்த்தையை முடிக்கும் சமயம் எழுந்த உதயேந்திரன் தன்னால் தன் இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

“என் அம்மாவை விரட்டுனது போல, என்னையும் விரட்ட தான் இந்த மீட்டிங்கே…” என்று வேணி அனைவரையும் பார்த்து சொன்னாள்.

இது தான் அங்கு இருப்பவர்கள் அனைவருக்கும் தெரியுமே...அதனால் அவள் சொன்னதற்க்கு, எந்த பதிலும் சொல்லாது அனைவரும் அமைதியாக இருந்தனர்.

“இந்த பெரிய மனிதர் என்னை இங்கு இருந்து விரட்ட நினைத்தது உங்க எல்லோருக்கும் தெரியும் தான். ஆனால் ஏன் விரட்ட நினைத்தார் என்று தெரியுமா…?” என்ற வேணியின் கேள்விக்கு பதிலாய் அங்கு அமர்ந்து இருந்தவரில் ஒருவர்..

“ஏன் தெரியாம…?இந்த குழுமத்துக்கு அடிதளம் அமைத்ததே மிஸ்டர் பரமேஸ்வரர் தான். மாப்பிள்ளை என்று நம்பி தான் அனைத்து பொறுப்பையும் உன் அப்பாவிடம் அவர் ஒப்படைத்தது.

ஆனால் அவர் தன் மீது வைத்த நம்பிக்கைக்கு துரோகம் செய்து மொத்தத்தையும் உன் கிட்ட கொடுத்துட்டு போயிட்டார். வாஸ்தவம் தான் உன் அம்மாவுக்கு இவங்க செய்தது பெரிய பாவம் தான். ஆனால் அந்த பாவத்தில் உன் தந்தைக்கும் தான் பங்கு இருக்கு. அவர் உன் மீது சொத்தை எழுதி வைத்து விட்டால் அவர் செய்தது எல்லாம் இல்லை என்று ஆகிவிடுமா…?”

அவர் கேட்டது பேசியது நூத்துக்கு நூறு சரியே… அதை வேணியும் ஒப்புக் கொண்டாள்.

“நீங்க சொன்னது சரி தான். அவர் செய்த பாவத்துக்கு இது தீர்வு ஆகாது. அது உண்மை தான்.அதனால் தான் அவர் மனது துடி துடிக்க செத்தார். ஆரோக்கியமாக இருந்தவர் அவர் சாகும் போது மனசு நிம்மதியிலா இறந்தார். இல்ல இல்லவே இல்ல.” என்று சொல்லி விட்டு ஆழ மூச்சு விட்டுக் கொண்ட வேணி…

ஏதோ நினைத்தவளாய் ஒரு விரக்தி புன்னகை முகத்தில் தவழ…. “என் பிறப்பிற்க்கு காரணவர் அவர் இறப்பதற்க்கு இரண்டு வருடம் முன் என்னை வந்து பார்த்தார்.” என்று வேணி சொல்லி முடிக்கவும்…

“என்ன என்ன சொன்ன உன்னை வந்து பார்த்தாரா…?” வேணி சொன்ன விசயத்தில் அதிர்ச்சியான ஜெய்சக்தி கத்தி விடாள்.

பின் தொடர்ந்து… “நான் போக மாட்டேன் பார்க்க மாட்டேன் என் கிட்ட சொல்லிட்டு திருட்டு தனமா உன்னை வந்து பார்த்து இருக்கார். உன்னை மட்டும் தான் பார்த்தாரா...இல்ல உன் ஆத்தாலையும் பார்த்தாரா….” என்று தான் என்ன பேசுகிறோம் ஏது பேசுகிறோம் என்று தெரியாது கத்திக் கொண்டு இருந்த ஜெய்சக்தி…

தொடர்ந்து தன் தந்தையை பார்த்து…. “பார்த்துங்கலாப்பா உங்க மாப்பிள்ளை எனக்கு எவ்வளவு பெரிய துரோகத்தை செஞ்சிட்டு போய் இருக்கார்.” என்று சொல்லிக் கொண்டே தன் தலையில் அடித்துக் கொண்டாள்.

ஆம் உண்மையிலேயே சந்திரசேகர் வேணியை பார்க்க சென்றது தனக்கு செய்த துரோகமாகவே கருதினாள். இந்த சொத்து அவளுக்கு முக்கியம் இல்லை. இந்த குழுமம் வேணிக்கு போவதை தடுக்க பார்த்ததே… இங்கு இருப்பவர்களுக்கு இவள் யார்….? என்ற கேள்வி எழும்.

பின் தான் இரண்டாம் தாரம் என்று அனைவருக்கும் தெரிந்து விடும். அதை கருதியே வேணியை இங்கு இருந்து அனுப்ப நினைத்தாள்.

ஜெய்சக்திக்கு பணம் தான் குறிக்கோள் என்றால் அவள் சந்திரசேகரை மணந்து இருக்க மாட்டாள். அதுவும் இரண்டாம் தாரமாய். ஜெய்சக்தி சந்திரசேகரை மயக்கத்தில் மணந்தாளா…?இல்லை காதலில் மணந்தாளோ….?ஆனால் ஜெய்சக்தி சந்திரசேகருக்கு உண்மையாக இருந்தாள் என்பதை விட அவரை மிகவும் நம்பினாள் என்று சொன்னால் சரியாக இருக்கும்.

அதனால் தான் தன் தந்தை தந்த சொத்தை அவர் என்ன செய்கிறார் என்று கூட பாராது , தன் படிப்பையும் முடக்கிக் கொண்டு குடும்பம் என்ற அளவில் இருந்து விட்டாள்.

சொத்து போன போது கூட அவள் இவ்வளவு துடிக்கவில்லை. தனக்கு தெரியாது தன் கணவர் தன் சொந்த ஊருக்கு போய் இருக்கார். அதை நினைத்தால் தான் ஜெய்சக்திக்கு மனது ஆரவில்லை.

அந்த கம்பம் என்பது அவரின் முதல் மனைவி இருக்கும் இருப்பிடம். அதனாலேயே கம்பத்து மேல் ஜெய்சக்திக்கு ஒரு வெருப்பு.

தன் கணவர் அங்கு சென்று இருக்கிறார் என்பதை கேட்டதும், என்ன பேசுகிறோம் என்று தெரியாது கத்தி விட்டாள்.

ஜெய்சக்தியின் இந்த பேச்சு அனைவரையும் முகம்சுளிக்க வைத்தது. ‘என்ன இது பெத்த பெண்ணை பார்த்தது தப்பா…?’ என்று அவர்கள் மனதில் நினைத்ததை வேணி…

“தப்பு தான். அவர் செய்தது தப்பு தான்.” என்று கூறி அனைவரின் வாயையும் அடைக்க செய்தாள்.

“இவங்கல கல்யாணம் செய்துட்டு எங்க அம்மாக்கு துரோகம் செய்தார். இந்த சொத்தை அவர் என் பெயரில் எழுதி வெச்சா தான் இந்த சென்னையில் நான் சந்திரசேகரின் மகளாய் அனைவருக்கும் தெரிவேன் என்று என் கிட்ட சொன்னதை செய்து முடிச்சிட்டு…

இதோ இவங்களுக்கும் இவங்க குழந்தைகளுக்கும் துரோகம் செஞ்சி இருக்கார். அவர் யாருக்கும் உண்மையா இல்ல.” என்று சொன்ன வேணி…

“உண்மைய சொல்லனுமுன்னா நான் சென்னைக்கு வர எண்ணமே இல்ல. ஏன்னா எங்க அப்பா ஆசைய நிறைவேத்தும் எண்ணம் எனக்கு இல்ல. அவரு என்னை வந்து பார்த்தது என் குடும்பத்தில் இருக்கும் யாருக்கும் தெரியாது.

நான் யார் கிட்டேயும் இதை சொல்லலே…என் பவி கிட்ட கூட சொல்லலே… அவர் என் கிட்ட பேசும் போது அவர் முகத்தை கூட நான் நிமிர்ந்து பார்க்கல...இன்னும் எனக்கு அவர் உருவம் சிறுவயசுல ஒரு பிம்பமா பார்த்தது தான் என் நினைவில் இருக்கு. அவர் முகத்தை நான் பார்த்தால் கூட அது என் அம்மாவுக்கு நான் செய்யும் துரோகமாய் நினைத்தேன்.

நீங்க நினைக்கலாம். பார்ப்பது துரோகம் என்றால் அவர் சொத்தை அனுபவிப்பது துரோகம் இல்லையா என்று...அவர் சொத்தை என் மீது எழுதி வெச்சும் நான் இங்கு வர மாட்டேன் என்று தான் சொன்னேன்.

ஆனால் இப்போ ஏன் வந்தேன் என்று தானே நினைக்கிறிங்க. நான் வந்ததுக்கு முழு காரணம் இந்த பெரிய மனுஷர் தான்.அவர் எங்க அம்மாவை சொன்ன அந்த வார்த்தை தான்” என்று பரமேஸ்வரரை காட்டி சொன்ன வேணி…

“இதோ இப்போ கூட அவங்க தப்பை உணராது எங்க அம்மாவுக்கு செஞ்ச மாதிரி என்னையும் அனுப்ப பார்க்குறாங்க. நான் புனிதா இல்ல. கிருஷ்ணவேணி….என்று சொன்னவள்.”

உதயேந்திரனை பார்த்துக் கொண்டே… “கிருஷ்ணா…” என்று அந்த கிருஷ்ணாவை வேணி உச்சரிக்கும் போது தன்னால் அவள் முகத்தில் ஒரு இலகு தன்மை வந்து போனது.

“திருட்டு கல்யாணத்துக்கு துணை போக எங்க அம்மாவை அப்படி சொன்னார். ஆனா முறையான கல்யாணத்துக்கு தடை செய்ய, இதோ என்னை இப்படி அசிங்கப்படுத்தி இங்கு இருந்து அனுப்ப பார்க்கிறார்.”

வேணியின் முறையான கல்யாணம் என்ற வார்த்தையில் …”யார் கல்யாணமா…?” என்ற கேள்விக்கு…

உடனடியாக “எங்க கல்யாணம். என்னோடனான கிருஷ்ணாவின் கல்யாணம்.” இவ்வளவு நேரமும் வேணியை பேச விட்டு அமைதியாக இருந்த உதயேந்திரன் இனி தான் மட்டும் தானே பேச வேண்டும் என்று எழுந்து நின்றவன்…

வேணியின் அருகில் சென்று அவள் தோளில் கைய் போட்ட உதயேந்திரன்… “எங்க கல்யாணம்.” என்று சொன்னவன் அனைவரையும் பார்த்து…

“உங்களுக்கு எல்லாம் புரிஞ்சி இருக்கோம் என்று நினைக்கிறேன். யார் முதல் யார் இரண்டாம் என்று.” இந்த வார்த்தை தன் சகோதரியை காயப்படுத்தும் என்று தெரிந்தே அந்த வார்த்தையை உதயேந்திரன் உபயோகித்தான்.

தன் தம்பியின் வாயில் இருந்து இந்த வார்த்தை கேட்ட ஜெய்சக்தி… “அக்கா என்று கூட பாராது இப்படி பேசுற. அவ உன்னை அந்த அளவுக்கு மயக்கி வெச்சி இருக்கா…” என்று ஜெய்சக்தி சொல்ல…

“அக்கா என்னோடையது மயக்கமா…? காதலா…? அது அவங்க அவங்கல பொறுத்தது. ஆனா இந்த என் மயக்கம் யாருடைய வாழ்க்கையையும் கெடாது. அதனால இது தப்பு இல்லேன்னு நினைக்கிறேன்.” என்று தன் சகோதரியை பார்த்து சொன்னவன்…

பின் உதயேந்திரன் வேணியின் முகத்தை பார்த்துக் கொண்டே… “வேணியின் பங்குகளையும், என் பங்குகளையும் இந்த குழுமத்துக்கே கொடுத்துடுறோம்.” என்று உதயேந்திரன் பேச்சை கேட்டதும் அதிர்ந்து போய் அனைவரும் அவர்கள் இருவரையும் பார்த்தனர்.

ஆனால் உதயேந்திரன் கண் மட்டும் அவனின் கிருஷ்ணாவின் முகத்தை மட்டுமே பார்த்திருந்தது. அனைத்தையும் அவன் திட்டம் மிட்டு செய்தது.

அவன் ஒவ்வொரு செயலையும் உதயேந்திரன் வேணியிடம் சொல்லவில்லை என்றாலும், அவள் தன்னை கணித்து விட்டாள் என்று அவனுக்கு தெரிந்தது.

ஆனால் இது...இந்த பங்கை திரும்ப கொடுப்பது அவனே திட்டமிடாதது. இங்கு அனைவரும் கூடி இருக்க ஏதோ குற்றவாளி போல் வேணியை அவனைரும் கேள்வி கேட்க..

ஒரு நிரபராதி, தன்னை குற்றமற்றவள் என்பதை நிருபிக்க வாதாடுவது போல் கிருஷ்ணா அனைவருக்கு தன்னை புரிய வைத்ததை பார்த்ததும்…

இன்று அவளை நிருபித்தாள்.இனி வரும் காலம் முழுவதும் இதே தொடர்கதை ஆகுமா…?தன் தந்தையை பற்றி இப்போது முழுவதும் தெரிந்தவனாய் இது தொடரும்.

தன் தந்தை வேணியை சும்மா விட மாட்டார். அதுவும் அந்த கால மனிதருக்கு பெண்ணை அடக்க தெரிந்த ஒரே வழி அவளின் ஒழுக்கம் மீது பழியை போடுவது.

தானும் எப்போதும் அவர் என்ன செய்கிறார்…? என்ன செய்ய போகிறார்…? என்று யோசித்துக் கொண்டே இருக்க முடியுமா…?

எங்கள் வாழ்க்கையை நாங்கள் வாழ வேண்டாமா…? என்று யோசித்தவனுக்கு இந்த நிமிடம் இதோ இப்போது பேசிக் கொண்டு இருக்கும் போது தோன்றிய எண்ணம் தான் இது.

அதுவும் தன்னுடயதை மட்டும் இல்லாது அவளுடையதையும் சேர்த்து தானே எடுத்த முடிவு இது. அதனால் அவளுக்கு இதில் விருப்பம் இல்லாது போல் போகுமோ என்று அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு சொல்ல…

“என் பங்கை கீர்த்திக்கும், அவர் பங்கை க்ரிஷ்க்கும் கொடுத்து விடுகிறோம்.” இப்படி சொன்னது வேணி. தவறு தவறு உதயேந்திரனின் கிருஷ்ணா…

இருவரும் காதலிக்கிறார்கள் அது இருவருக்குமே தெரியும். ஆனால் தங்கள் மனதை இன்னும் ஒருவருக்கு ஒருவர் வெளிப்படையாக பகிர்ந்துக் கொண்டது கிடையாது.

இருந்தும் அவன் எண்ணைத்தை அவள் நிறைவேற்றியதும் உதயேந்திரன் முகத்தில் எதையோ வென்ற திருப்தி.

ஆனால் ராஜசேகர் தான் இவர்களின் இந்த முடிவில் அதிருப்தி உற்றவராய்… “கொஞ்சம் யோசித்து முடிவு செய் வேணி.”

உதயேந்திரனை முறைத்துக் கொண்டே தான் ராஜசேகர் வேணியிடம் யோசிக்க சொன்னது. இவன் சொத்தை இவன் இவ அக்கா பொண்ணுக்கு கொடுக்கட்டும். வேணியோடதை இவன் ஏன் கொடுக்க வேண்டும்.

வேணியோடு உறவாடி தன் குடும்பத்துக்கு நன்மை செய்து விட்டானோ என்று அவர் சந்தேகப்பட்டார்.

ராஜசேகரின் பேச்சில்… “இல்ல அங்கிள் நான் சென்னைக்கு வந்ததே எங்க அம்மா பின் வாசல் வழியா வரல. அதை தெளிவுப்படுத்த தான். அதோடு பெண்கள் இவர்கள் கிள்ளி போடும் கீரை இல்லை. அவங்களுக்கு என்று தனிப்பட்ட சுயமரியாதை இருக்கு. ஒரு பெண்ணை அசிங்கப்படுத்த அவங்க கேரக்ட்டரை ஸ்பாயில் செய்து விட்டா போதும். அவள் அடுத்து பேச்சு பேசாது போய் விடுவா...அந்த எண்ணத்தை போக்கனும் என்று நினச்சேன். அவ்வளவு தான் நான் வந்த காரியம் ஆல்மோஸ்ட் ஒரு முடிவுக்கு வந்துடுச்சின்னு நினைக்கிறேன்.

ஆனால் நான் நினைத்து கூட பாராது நடந்தது, தன் தோள் மீது கை வைத்திருந்த உதயேந்திரன் கை மீது கை வைத்த வேணி… ஒரு புன்சிரிப்போடு அனைவரையும் பார்த்தாள்.

அன்று நடந்த மீட்டிங் ஒரு முடிவுக்கு வந்து விட்டது. ஆம் அனைத்தும் ஒரு முடிவுக்கு வந்து விட்டது தான்.

அனைவரும் போகும் போது பேசிய வார்த்தை இது தான். வேணியின் கை பிடித்து … “உன் மனச கஷ்டப்படுத்தி இருந்தா எங்கல மன்னிச்சிக்கோமா…” என்று வயது வித்தியாசம் பாராது அனைவரும் முழுமனதுடன் வேணியிடம் மன்னிப்பு கேட்டனர்.

அதுவும் ஒரு சிலர் வேணியிடம்… “நாங்கள் உன் வீட்டுக்கு வரட்டுமா மா…” என்று கேட்டதற்க்கு அவள் அவர்களை ஏன் என்பது போல் கேள்வியாக பார்க்க….

“உன் அம்மாவை பார்க்கனும் மா...கெட்டாலும் மேல் மக்கள் மேல் மக்கள் தான்மா…” என்று அவர்கள் சொன்ன அந்த வார்த்தைகள் வேணியின் மனதை நிறைத்து விட்டது.

இன்னும் என்ன வேண்டும் அவளுக்கு…? என் அம்மா பெயருக்கு ஏற்றது போல் புனிதமானவள். இதோ அனைவரும் சொல்லி விட்டனர். தான் நினைத்தது நடந்து விட்டது…

மகிழ்ச்சியில் அவள் கண் நிறைய தன் பக்கத்தில் நின்றுக் கொண்டு இருந்த உதயேந்திரனை பார்த்தாள்.

கலங்கிய கண்ணுக்கு அவன் உருவம் மங்கலாக தான் தெரிந்தது. ஆனால் அவனோடான தன் வாழ்க்கை அவளுக்கு பிரகாசமாகவே இருக்கும். அதில் அவளுக்கு எந்த வித சந்தேகமும் இல்லை.

ஒரு வித மோன நிலையில் தான் வேணி உதயேந்திரனின் கைய் பற்றி அந்த அறையை விட்டு வெளியில் வந்தது.

“இதை நீ என் மாப்பிள்ளையிடம் கேட்டாவது முடிவு செய்து இருக்கலாம்.”

ராஜசேகருக்கு சந்திரசேகர் ஆசைப்பட்ட தன் மகள் இங்கு ஆட்சி செய்ய வேண்டும் என்று நினைத்தது நடக்கவில்லையே என்ற ஆதாங்கத்தில் வேணி வெளியில் வந்ததும் ராஜசேகர் கேட்டு விட்டார்.

இப்போது எல்லாம் ராஜசேகர் பவித்ரனை பெயர் சொல்லி பேசுவது இல்லை. மாப்பிள்ளை தான். அதுவும் என் மாப்பிள்ளை. என்று தான் சொல்வது.

பவித்ரன் தனக்கு மாப்பிள்ளையாவது கனவா என்று நினைத்து தனக்கு தானே சொல்லிக் கொள்கிறாரோ...இல்லை மற்றவர்களின் மனதில் பவித்ரன் என் மாப்பிள்ளை என்று பதிய வைக்க முயல்கிறாரோ...ஆனால் ஒன்று இப்போது எல்லாம் பவித்ரனிடம் இந்த ராஜசேகர் தன் உரிமையை நிலை நாட்டிக் கொண்டு தான் இருக்கிறார். அது மட்டும் உண்மை.

ராஜசேகரின் பேச்சுக்கு… ஒரு சிரிப்போடு… “அங்கிள் எனக்கும் அவனுக்கும் மாற்று கருத்து எப்போதும் இருந்தது இல்லை. நான் நினைப்பதை அவன் செஞ்சி முடிச்சிடுவான்.” என்று சொன்னவளின் பேச்சில், திமிர் இருந்ததா...இல்லை அவன் என் நண்பன் என்ற உரிமை இருந்ததா….? அது அவளுக்கே வெளிச்சம்.

ஆனால் இப்போது எல்லாம் ராஜசேகரை வேணி மரியாதையோடு அங்கிள் என்று தான் அழைக்கிறாள்.வேணி ராஜசேகருக்கு கொடுக்கும் இந்த மரியாதை அவர் தன் தந்தையின் நண்பன் என்பதால் அல்ல. தன் நண்பனின் மனம் கவர்ந்தவளின் தந்தை என்பதால் மட்டுமே…

அப்போது இடையில் உதயேந்திரன் ராஜசேகரிடம்…“இப்போ கிருஷ்ணா பவியிடம்...அதான் உங்க மாப்பியிடம் உன் சொத்தை கூட என் அக்கா பிள்ளைக்கு கொடுன்னா கொடுத்துடுவான்.” என்று சொன்னவன்…

வேணியின் பக்கம் திரும்பி… “அப்படி தானே கிருஷ்ணா…” என்று கேட்டதும் அவனை வெட்டவா குத்தவா என்று வேணி பார்க்க…

“இதே பார்வையோடு இப்போ என் கூட வா…” அவள் தோள் மீது போட்ட கை எடாது வேணியை தன் வீட்டுக்கு அழைத்து சென்றான்.









பரமேஸ்வரரையும், ஜெய்சக்தியும் பார்த்து… “இந்த சொத்தை இந்த பதவிய நான் உங்க கிட்ட











ஏன் ….? எதற்க்கு என்று கேட்கவில்லை.“ என்னை இந்த்இதோ இந்த பெரிய மனிதர்


 
Top