Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Kambathu Ponnu...25(4)

  • Thread Author
அத்தியாயம்….25….4

தன்னிடம் அக்கா பேசிய…”அப்பாவுக்கு உடம்பு சரியில்ல நான் நம்ம ஹாஸ்பிட்டலுக்கு அழச்சிட்டு போறேன்.” என்று சொன்ன வார்த்தையில் பொய் இருக்கலாம்.

ஆனால் தன் மகளிடமும் அப்படியே சொல்வது என்றால், ஒரு வேளை உண்மையில் அப்பாவுக்கு உடம்பு முடியலையா…? அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் நாம் இப்படி இங்கு இருப்பது தவறு இல்லையா…

“கிருஷ்ணா உனக்கு ஓலா புக் பண்ணி தர்றேன் நீ வீட்டுக்கு போயிடு.” என்று வேணியிடம் சொன்னவன்…

கீர்த்தியையும், க்ரீஷையும் பார்த்து… “சீக்கிரம் கிளம்புங்க போகலாம்.” என்று அவர்களை துரிதப்படுத்திக் கொண்டே அவனின் கார் சாவியை எடுக்கும் வேளயில்…

“நானும் வரட்டுமா…?” என்ற வேணியின் பேச்சில் காரை எடுக்க சென்றவன் அப்படியே நின்று விட்டு அவளை திரும்பி பார்த்தவன்…

உடனே அவனிடம் இருந்து வந்த பதில்….“வேண்டாம். இப்போ வேண்டாம். உண்மையில் அப்பாவுக்கு உடல் நிலை சரியில்லாத பட்சத்தில் அவர் உன்னை பார்த்தால் இன்னும் அவர் உடல் நிலை பாதிக்கும்.” என்று சொன்னவனின் பேச்சை இடைமற்றிதவளை பேச விடாது மீண்டும் உதயேந்திரனே…

“வேண்டாம் கிருஷ்ணா. என் அப்பா எப்படி பட்டவராக வேண்டுமானலும் இருக்கட்டும். ஆனால் உன்னால் அவருக்கு ஏதாவது வந்தால்… வேண்டாம்.” என்று வேணியை மறுத்து விட்டு அக்கா பிள்ளைகளை அழைத்துக் கொண்டு உதயேந்திரன் ஹாஸ்பிட்டலும் விரைந்தான்.

அங்கு சென்று பார்த்தவனுக்கு உண்மையில் அப்பாவுக்கு உடல் நிலை மோசமாகி அவரை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து இருப்பதை பார்த்து விரைந்து தன் சகோதரியிடம் வந்தவன்…

“என்ன ஆச்சிக்கா…?” உதயேந்திரன் நீண்ட நாட்கள் கழித்து தன் சகோதரியை அக்கா என்று அழைக்க…

சேலை தலைப்பில் வாய் பித்தி அழுதவள்… “எனக்கு ரொம்ப பயமா இருக்குடா...அப்பாவும் என்னை விட்டுட்டு போயிடுவாரோன்னு. இபோத்தைக்கு எனக்கு யாருமே இல்லடா...அவரும் போயிட்டா...நா...ன்” அதற்க்கு மேல் ஜெய்சக்தியால் பேச முடியவில்லை. அவளிடம் இருந்து அழுகை மட்டுமே வந்து கொண்டு இருந்தது.

நிமிடத்து ஒரு தடவை அவசரசிகிச்சை பிரிவின் கதவை பார்ப்பதும் பின் ஏதோ நினைத்து அழுவதுமாய் இருந்தாள்.

ஜெய்சக்தி சொன்ன அவரும் என்னை விட்டு போயிட்டா, என்ற வார்த்தை அவர் பெற்ற இரு பிள்ளைகளையும் பலமாக தாக்கியது.

கீர்த்தி ஜெய்சக்தியின் தோள் பற்றி… “என்ன பேச்சும்மா இது...ஏன் இது மாதிரி யாரும்மே இல்லேன்னு சொல்றிங்க.ஏன் உங்களுக்கு உங்க பிள்ளைங்க எங்களை கண்ணுக்கு தெரியலையா…?” என்று சொன்னவள்.

“தாத்தாவுக்கு ஒன்னும் ஆகாது. அவர் ஸ்டாங் மேன்.” என்று அன்னைக்கு ஆறுதல் வழங்கினாள்.

ஆனால் அதை எல்லாம் கேட்கும் நிலையில் ஜெய்சக்தி இல்லை போலும்… “இல்ல கீர்த்தி எனக்கு ரொம்ப பயமா இருக்கு. அப்பாக்கு ஏதாவது ஆயிடுமோன்னு. கொஞ்ச நாளாவே அவருக்கு என்னால் ரொம்ப டென்ஷன். இன்னைக்கு …” அதற்க்கு மேல் என்ன எப்படி சொல்வது என்று வாய் மூடிக் கொண்டவள் தன் தம்பியை நிமிர்ந்து பார்த்தாள்.

அக்காவின் பார்வையில் வீட்டில் ஏதாவது பிரச்சனை நடந்ததா…? பிரச்சனை யாருக்கு அக்காவுக்கும் அப்பாவுக்குமா…? அப்போது தான் அவன் அங்கு யார் இருக்கிறார்கள் என்று சுற்றி பார்த்தவனுக்கு…

அங்கு தன் அண்ணாவும், அண்ணியும் இல்லாததை பார்த்து… “அண்ணாவும் அண்ணியும் வரலையா…?” என்று கேட்டவனுக்கு…

“இல்லை.” என்று ஜெய்சக்தி தலையாட்ட…

“நான் சொல்றேன்.” அவங்களுக்கு தெரியாது போல என்று தன் கைய் பேசியை எடுக்கும் போது அதை தடுத்து நிறுத்திய ஜெய்சக்தி பின்…

“வீட்ல அப்பாவுக்கும் அண்ணாவுக்கும் பிரச்சனை ஆயிடுச்சி.” என்று சொன்னதும் அதிர்ந்து போய்…

“அண்ணாவுக்கும், அப்பாவுக்குமா…?”

கஜெந்திரன் வாய் திறவாது அப்பா சொல் பேச்சு கேட்டு நடக்கும் பிள்ளை. இப்போது இல்லை சிறுவயது முதலே.. பரமேஸ்வர் என்ன சொன்னாலும், ஏன் எதற்க்கு என்று கேட்காது நடப்பான்.

பின் திருமணம் முடிந்த உடன் மனைவி சொல் பேச்சு கேட்டு நடப்பது. சில சமயம் அண்ணியோடு தான் அப்பாவுக்கு பிரச்சனை வந்து போகும்.

அவன் ஜெர்மனியில் இருக்கும் போது பேசியில் அப்பாவிடம் பேசும் போது அவர் சொல்ல தெரிந்த விசயங்கள் இவை. ஜெய்சக்தி அண்ணாவோடு பிரச்சனை என்றதும்…

“என்ன பிரச்சனை…?” என்று கேட்ட்தற்க்கு…

பக்கத்தில் இருக்கும் தன் பிள்ளைகளை தயக்கத்துடன் பார்த்த வாறே… “அண்ணி கன்சீவா இருக்காங்க.” என்று ஜெய்சக்தி சொன்னதும்,

உதயேந்திரன் மகிழ்ந்து போய்… “இது எவ்வளவு சந்தோஷமான விசயம். இது தெரிஞ்சுமா வீட்டில் பிரச்சனை நடந்தது.”

எத்தனை ஆண்டு திருமணவாழ்க்கையில் அவர்களுக்கு கிடைத்து இருக்கும் வரம் இது. அண்ணா இதை கொண்டாடாது பிரச்சனை செய்தாரா...உதயேந்திரனுக்கு ஆச்சரியமாய் போனது.

ஜெய்சக்தி சொன்ன ... “பிரச்சனையே இந்த குழந்தை வரவு தான். இது வரை அண்ணி தனக்கு குழந்தையா…? குட்டியா…? என்ற நினைப்பில் இந்த சொத்து பத்தி எல்லாம் அதிக கவலை படாது இருந்து விட்டாள்.

என் அப்பா கொடுக்கும் சொத்தோ நான் யாருக்கு கொடுப்பது என்று யோசிச்சிட்டு இருக்கேன் என்ற ரீதியில் இருந்தவள். இப்போது தனக்கு தனக்கு மட்டுமே ஆன ஒரு குழந்தையின் வரவில்…

அதுவும் இன்று வேணியின் பங்கை கீர்த்திக்கும், உதயேந்திரனின் பங்கை க்ரீஷூக்கும் கொடுத்ததை பார்த்து… தன் குழந்தையோடு ஜெய்சக்தியின் குழந்தைக்கு அதிக சொத்து இருப்பதா…?

ஏற்கனவே தங்களுக்கு கொடுத்தது போலவே மதிப்பு உள்ள சொத்தை அந்த சந்திரசேகர் தன் குழந்தைகள் கீர்த்தி, க்ரீஷ் இருவருக்கும் சம பங்காக எழுதி விட்டார்.

இப்போது அதோடு அதிக மதிப்பு உள்ள உதயேந்திரன் பங்கு, வேணியின் பங்கும் அவர்களுக்கு சேர்வதை பார்த்து…. என் அப்பா வீட்டில் எனக்கு கொடுக்கும் சொத்து மதிப்பை சேர்த்தாலும் அவர்கள் கிட்ட கூட நெருங்க முடியாது போலவே…அந்த ஆத்திரத்தில் தன் கணவனிடம்…

“நீங்க என்ன ஆம்பிள்ளை..உன் தம்பி பார் இந்தியா வந்த கொஞ்ச நாளிலேயே அவன் பங்கு நம்ம பங்கு வாங்கி அதிலே சம்பாதித்து பின் நம்ம கொடுத்த பங்கை மட்டும் நமக்கு கொடுத்து மத்ததை ஜெய்சக்தி பிள்ளைகளுக்கு கொடுத்து விட்டான்.

சொத்தை கொடுத்தா தானே ஜெய்சக்தி வாய் மூடிட்டு இருப்பா...அக்கா வாய் மூடினா தானே அந்த பெண் வேணியை கல்யாணம் செய்ய முடியும். அவர் எப்படி ப்ளான் போட்டு எல்லாம் செய்யிறார். நீங்களும் இருக்கிங்கலே…” என்று இத்தோடு கஜெந்திரன் மனைவி நிறுத்தி இருந்தால், கஜெந்திரன் எப்போதும் போல் இருந்து இருப்பாரோ என்னவோ…

ஆனால் கஜெந்திரன் மனைவி வாணி சொன்ன… “உனக்கு எனக்கு பிள்ளை கொடுக்கவே இத்தனை வருசம் ஆச்சி...இதுலேயே தெரியலையா உங்க லட்சணம்.” எந்த ஆணையும் சீண்டி விடும் வார்த்தை அது.

அதன் தாக்கத்தில் தன் தந்தை மகனிடம் எப்போதும் போல் “நீ மட்டும் சரியா இருந்தா உதயேந்திரனை நான் ஏன் இந்தியாவில் தங்க வைக்க போகிறேன். அந்த பொண்ண துரத்த நான் உன் தம்பிய இங்கே நிறுத்தினேன்.

ஆனா அவங்க அவனே வெச்சே என்னை சாச்சிட்டாங்க.”எப்போதும் போல் தான் பரமாஸ்வரர் தன் மகனிடம் புலம்பினார்.

ஆனால் மகன் இன்று எப்போது போல் கேட்டு தலையாட்டும் மூடில் இல்லாது மனைவி கேட்ட நீ என்ன ஆம்பிள்ளை என்ற பேச்சில்...நானும் ஆம்பிள்ளை தான்டி என்று நிரூபிக்க தன் தந்தையிடம்…

“நான் சரியில்ல சரியில்ல சொல்றீங்கலே...நீங்க ரொம்ப சரியோ...பொண்ணு லவ் பண்ணா திட்டு கண்டிச்சி நம்ம இனத்துல மாப்பிள்ளை பார்த்து கட்டி கொடுக்கும் அப்பாவை தான் பார்த்து இருக்கேன்… ஆனா நீங்க தான் புதுவிதமா...கூட்டி கொடுத்து இருக்கிங்க.” என்ற மகனின் வார்த்தையில் பரமேஸ்வரர் அதிர்ந்து போய் விட்டார்.

‘என்ன மாதிரியான வார்த்தை இது…? பெத்த பெண்ணை நான்.’ மகன் சொன்ன வார்த்தையில் எதற்க்கும் கலங்காத அவர் மனம் ஆட்டம் கண்டது.(புனிதாவை நீ சொன்னதுக்கு மேலவா இது.)

“என்னடா என்ன பேச்சு. என் பெண்ணுக்கு ஊரை கூட்டி கல்யாணம் பண்ணேன்டா…” பரமேஸ்வரர் கஜெந்திரனின் சட்டையை பிடித்து கேட்டார்.

தன் தந்தையின் கையை தன் சட்டையில் இருந்து விடுவித்த கஜெந்திரன்… “நீங்க ஊரு என்ன உலகத்தையே கூட்டி கல்யாணம் செய்து இருந்தாலும், முதல் மனைவி உயிரோடு இருக்கும் போது அது செல்லாது.” என்று சொன்ன கஜெந்திரன்…

“அது தான் சந்திரசேகர் போகும் போது யார் உரிமையான வாரிசுன்னு சொல்லிட்டு போயிட்டாரே..தெரியல இதுல இருந்து உங்க பெண்ணை அவர் எங்கு வெச்சி இருந்து இருக்கார் என்று. இப்போ அந்த பெண் போட்ட பிச்சையில் திரும்பவும் அந்த சொத்து உங்க கைக்கு வந்து இருக்கு.” அந்த சொத்து அவர்களுக்கு வந்ததால் தானே தன் மனைவியிடம் பேச்சு வாங்க வேண்டியதாகி விட்டது. அந்த ஆத்திரத்தை தந்தையை திட்டி தீர்த்து விட்டு சென்று விட்டான்.

ஆனால் இதை கேட்ட பரமேஸ்வரரின் உள்ளம் ஆட்டம் கண்டது. பெரிய மகன் திறமை வாய்ந்தவன் இல்லை என்றாலும், தன் சொல் பேச்சு கேட்டு நடந்து கொண்டு இருந்தவன் இப்போது தன்னையே எதிர்த்து பேசியது,மகளின் வாழ்க்கை ஊரார் முன்நிலையில் அவள் இரண்டாம் பட்சமாக ஆனது.

யார் தன்னுடைய வாரிசு என்று இது வரை நினைத்துக் கொண்டு இருந்தாரோ அவன் உன் சொத்து எனக்கு ஒன்றும் வேண்டாம் என்று தன் அக்கா பிள்ளைகளுக்கு எழுதி கொடுத்து விட்டது. இனி அவன் தனக்கு சொந்தம் இல்லை என்று சொல்லாமல் சொன்னது போல் இருந்தது அவருக்கு.

இவைகள் அனைத்தும் நினைத்தவரின் மனது கொதிக்க… இரும்பு இதயம் கொண்ட பரமேஸ்வரருக்கு இந்த கொதிப்பு தாங்க முடியாது b.p எக்க சக்கத்துக்கு எகுற…

போதும் நான் பேசிய வார்த்தைகள் என்று வாய் தன்னால் கோணிக் கொள்ள… நான் செயல் பட்டது போதும் என்று கால் கைய் இழுத்துக் கொள்ள...இந்த நிலையில் தான் ஜெய்சக்தி தன் தந்தையை மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தது.

அனைத்தையும் தன் தம்பியிடம் சொல்லி முடித்த ஜெய்சக்திக்கு இன்னும் உள்ளது என்பது போல் அந்த மருத்தவமனையின் தலமை மருத்துவர் உதயேந்திரனிடம் வந்து…

“சாரி மிஸ்டர் உதயேந்திரன் அவருக்கு கால் கை மட்டும் இல்லை மூளையே செயல் இழந்து விட்டது. இனி அவர் ஒரு ஜடம் போல் தான் இருந்து ஆக வேண்டும்.” என்று சொன்னதும் உதயேந்திரன்.

“சரி படுத்த முடியுமா…?” என்று கேட்டதற்க்கு,

“அவருக்கு வயது ஆனதால் முடியாது. என்னை பொறுத்த வரைக்கும் அவரை அப்படியே விடுறது தான் சரின்னு சொல்லுவேன்.”என்று சொன்ன அந்த மருத்துவரிடம்…

“வேறு எங்காவது…?” ஒரு மகனாய் தன் தந்தையை காப்பற்ற முயற்ச்சிக்க கேட்டான்.

“என்ன உதயேந்திரன் இது உங்க ஹாஸ்பிட்டல் இங்கு அவடுக்கு நாங்கள் பார்ப்பதோடவா மத்த ஹாஸ்பிட்டலில் அவரை கவனிச்சிக்க போறாங்க.” என்று அந்த தலமை மருத்துவர் சொன்னதும் உண்மை தானே…

“சரி…” என்பது போல் தலையாட்டிய உதயேந்திரன் அடுத்து என்ன என்பது போல் அந்த மருத்துவரை பார்த்தான்.

“அவர் இங்கயே வெச்சி பார்ப்பதுனாலும் பார்க்கலாம். இல்ல வீட்டில் வெச்சி பார்ப்பதுனாலும் சொல்லுங்க நல்ல எக்ஸ்பிரியன்ஸ் ஆன நர்ஸை அனுப்புறேன்.”

முடிவை நீங்க தான் எடுக்கனும் என்பது போல் மருத்துவர் சென்று விட்டார்.

அக்காவிடம் மருத்துவர் சொன்னதை சொன்ன உதயேந்திரன்”நீங்க என்னக்கா சொல்றிங்க…?” அக்கா பார்த்துக் கொள்ள முடியுமா என்ற அர்த்ததில் கேட்டான்.

என்ன தான் நர்ஸ் வைத்து பார்த்துக் கொண்டாலும், வீட்டு ஆள் ஒருவர் இருந்தால் தான் நல்லது என்பதை மனதில் வைத்து கேட்டான்.

ஆனால் ஜெய்சக்தி சொன்ன… “நீ வீட்டுக்கு வந்துடுவே தானே…?” தான் என்ன கேட்டால் இவள் என்ன கேட்கிறாள் என்று நினைத்து…

“அக்கா நான் அப்பாவை வீட்டுக்கு அழச்சிட்டு போவதை பத்தி பேசுறேன்.” என்று கேட்க…

“அது தான் உதயா நீ வீட்டுக்கு வருவது என்றாஅல் அப்பாவை வீட்ல வெச்சே பார்த்துக்கலாம்.”

“ஓ…” என்று சொல்லிக் கொண்டே உதயேந்திரன் யோசனையுடன் ஜெய்சக்தியை பார்த்தான்.

உதயேந்திரனின் பார்வையில்… “அண்ணா அவங்க மாமியார் வீட்டோட போயிட்டான். இனி வருவானா இல்லையான்னு தெரியல. வீட்ல வெச்சிட்டு இருக்கும் போது அப்பாவுக்கு ஏதாவது ஆச்சின்னா...ஒன்டியா நான் என்ன செய்ய முடியும்…?” என்று ஜெய்சக்தி கேட்க…

அக்காவின் கேள்வி நியாயமானது தான் அதனால் உடனே… “சரி அப்போ அப்பா இங்கயே இருக்கட்டும்.” என்ற வார்த்தையின் மூலம் நான் அங்கு வர மாட்டேன் என்று உதயேந்திரன் சொல்லாமல் சொல்ல…

ஜெய்சக்திக்கு புரிந்தாலும் மனது தாங்காது… “நீ அங்கு வர மாட்டியா உதயா…?” ஜெய்சக்தியின் குரலில் ஏக்காம் மிகுந்து காணபட்டது. அதை கேட்ட உதயேந்திரனுக்கும் வருத்தம் தான். ஆனால் அவனால் என்ன செய்ய முடியும்.

அவள் தனியாக இருந்தால் அவளின் வேதனை கூடும் என்று… “நான் பிள்ளைங்களிடம் பேசி உன் கூட இருக்க வைக்கிறேன் அக்கா.” என்று சொன்னவனின் கை பற்றி…

“என்னை விட்டுடுவீயாடா…” என்று கேட்டவள்.

“எனக்கு உங்க மாமாவை ரொம்ப பிடிக்கும்டா...ரொம்ப ரொம்ப பிடிக்கும். அதனால தான் நான் வேறு எதை பத்தியும் யோசிக்காது அவரை கல்யாணம் செஞ்சேன். அது தப்பா சரியா நான் இது வரை யோசிச்சது இல்லை. இனியும் யோசிக்க மாட்டேன். ஏன்னா அவரை தவிர வேறு யாரையும் நான் கல்யாணம் செய்து கொண்டு இருந்து இருக்க மாட்டேன்.

நான் செஞ்ச இந்த என்னுடைய கல்யாணம் தான் என்னிடம் இருந்து உங்களை எல்லாம் பிரிச்சதுன்னா பரவாயில்ல. பரவாயில்ல…” என்று சொன்னவளின் கண்ணில் கண்ணீர் வர அதை துடைக்காது கூட இருந்தவளின் கை பற்றிய உதயேந்திரன்…

“அக்கா நான் உன்னை விட்டு போகனும் நினைக்கல.” என்று சொன்னவனின் கை உதறிய ஜெய்சக்தி…

“அப்போ எதுக்கு நம்ம வீட்டுக்கு வர மாட்டேன்னு சொல்ற…?”

“அங்கு வர எனக்கு எந்த வித தயக்கமும் இல்லேக்கா.ஆனா கிருஷ்ணா…” என்று இழுத்து நிறுத்தியவன் ஜெய்சக்தியின் முக மாறுதலை பார்த்து விட்டு…

“உனக்கும் சங்கடமா இருக்கும். கிருஷ்ணாவுக்கும் சங்கடமா இருக்கும். நீ சொன்னியே எனக்கு உங்க மாமாவை பிடிச்சி இருந்தது. அதனால் நான் எதை பத்தியும் யோசிக்கலேன்னு. அதே நிலையில் தான்கா நான் இருக்கேன். எனக்கு கிருஷ்ணாவை பிடிச்சி இருக்கு. ஆனால் நான் எதை பத்தியும் யோசிக்காம இருக்க முடியாது.

கிருஷ்ணா நம்ம குடும்பத்தால ரொம்பவும் கஷ்டப்பட்டு இருக்கா...கிருஷ்ணாவோட அவங்க அம்மா புனிதா அக்காவை நம்ம அப்பா பேச கூடாத வார்த்தை எல்லாம் பேசி இருக்கார்.” என்று சொன்னவனின் வார்த்தையில் ஜெய்சக்தி உதயேந்திரனை முறைத்து பார்த்தாள்.

“அக்கா நீங்க கோபப்பட்டாலும், அது தான் உண்மை. உங்க பெண்ணை கொடுங்கன்னு அவ அம்மா காலில் விழுந்து கட்டதான் முடியுமே தவிர, நம்ம குடும்பத்துல அவளை இணைக்க என்னால முடியாது. அது வேண்டாம் என்பது தான் என் எண்ணமும்.” என்று சொன்னவனி பேச்சில் ..

“அப்போ எங்களை விட்டு விலகி இருக்க போறியா…?”என்று ஜெய்சக்தி ஆதாங்கத்தோடு கேட்டாள்.

“மாமா இறந்த பின் தான் நான் இங்கு இருக்கேன். இதுக்கு முன் நான் ஜெர்மனியில் உங்களை விட்டு விலகி தானேக்கா இருந்தேன். இப்போவும் அதே போல் ஒன்று ஜெர்மனியில் இல்லை கம்பத்துல இருக்க போறேன் அவ்வளவு தான்.” என்று சொன்னவனிடம் எதுவும் பேச முடியாது அமைதியாகி போனாள் ஜெய்சக்தி.
“என்ன ஒரு மாதிரியா இருக்க…” என்று கேட்ட பவித்ரனின் கையை தட்டி விட்டவள்…

“நான் எத்தனை தடவை உனக்கு போன் பண்ணினேன் என்று பார்.” என்று வேணி கேட்டதும் …

“நீயா…?” என்பது போல் தன் கைய் பேசியை பார்த்தவன்… “உன் நம்பரும் இல்ல. அடுத்து உதய் கொடுத்தாருன்னு ஒரு நம்பர் கொடுத்தியே அதுவும் பதிவு பண்ணி தான் வெச்சி இருந்தேன். அந்த நம்பரில் இருந்தும் எனக்கு போன் வரலையே…” என்று சொன்னதோடு தன் கைய் பேசியையும் வேணியிடம் கொடுத்து விட்டான் பவித்ரன்.

அதில் இருந்த ஒரு நம்பரை காட்டி… “இது நான் அழைத்த அழைப்பு தான்.” என்று வேணி ஒரு புதிய எண்ணை காட்டியதும்,

“என்ன வேணி திரும்பவும் ஏதாவது புது பிரச்சனை நடந்ததா…?” என்று கேட்டவனிடம்…இன்று நடந்தை அனைத்தையும் சொல்லி முடித்தவன்..

பின் பரமேஸ்வரர் உடல்நிலை சரியில்லாது மருத்துவமனையில் சேர்த்து இருப்பதை சொன்னவள் கூடுதலாய் இப்போது உதயேந்திரன் கைய் பேசியில் அழைத்து சொன்ன…

“அவருக்கு ஸ்டோக் வந்து கை கால் செயல் இழுந்து போயிடுச்சாம். கூடவே மூளை கூட ஸ்ட்டன் ஆயிடுச்சாம்.” என்று சொன்னதும்…

“அந்த மூளைய வெச்சி கொஞ்ச நஞ்ச வேலையா செய்தார். அதுவும் எவ்வளவு தான் தாங்கும். அதான் ரெஸ்ட் எடுத்துச்சி...” என்ற பவித்ரனின் மகிழ்ச்சியை வேணி கெடுக்கவில்லை.

ஒருவர் உடல் நிலை கெட்டு போவதை பார்த்து மகிழ்ச்சி அடைவது தவறு தான். ஆனால் ஒரு சிலரின் இறப்பு, ஒரு சிலரின் உடல்நலக்கேடு தன்னால் ஒரு வித நிம்மதையை கொடுத்து விட்டே செல்கின்றனர். சில கேடு கெட்டவர்கள்.

இவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போது அந்த இடத்திற்க்கு வந்த புனிதா … “அப்பா உன்னை கூட்டிட்டு வரச்சொன்னார்.” என்று சொன்ன புனிதா...அவளின் உடையை பார்த்து … “இதை மாத்திட்டு ஒரு நல்ல புடவையா கட்டிட்டு வா.” என்ற பேச்சில் சந்தேகம் கொண்ட பவித்ரன்…

“யார் வந்து இருக்கா அத்தை…?” என்ற கேள்விக்கு…

“உன் மாமனார் வேணிக்கு ஒரு இடம் கொண்டு வந்து இருக்கார். மாப்பிள்ளையோட அப்பா அம்மாவை அழச்சிட்டு வந்து இருக்கார்.” என்று புனிதா சொன்னதும்…

வேணியின் கை பற்றி ஹாலுக்கு வந்த பவித்ரன்… ராஜசேகரை பார்த்து… “உங்க பெண்ணை நான் கல்யாணம் கட்டிக்கனுமா…? வேண்டாமா…?” என்ற பவித்ரனின் கேள்வியில் அதிர்ந்து போய்…

“என்ன மாப்பிள்ளை என்ன ஆச்சி.” என்று பதறி போய் கேட்ட ராஜசேகர் தன் பக்கத்தில் அமர்ந்து இருந்த காயத்ரியை பார்த்து… “நீ ஏதாவது லூசு தனம் பண்ணி வெச்சியாடி…” என்று தன் மகளை அதட்டினார்.

“உங்க மக எந்த லூசு தனமும் பண்ணல. அப்படி பண்ணாலும் அதை நான் எப்படி சரி படுத்தனுமோ அப்படி சரிப்படுத்திக்குவேன். ஆனா நீங்க இது போல் பண்ணிட்டு இருந்தா…” அவர் அழைத்து வந்த மாப்பிள்ளையின் பெற்றோர்களை காண்பித்து…

“உங்க மக உங்க மகளாவே தான் எப்போவும் இருப்பா...” எப்படி வசதி என்பது போல் கேட்டான்.

“இல்லேப்பா உங்க தாத்தா தான் நல்ல இடமா எடுத்துட்டு வரச்சொன்னார்.” என்று தயங்கி தயங்கி ராஜசேகர் சொல்ல…

பவித்ரன் தன் தாத்தாவிடம்… “தாத்தா இவங்க போயிட்ட பிறகு நான் உங்க கிட்ட வேணி கல்யாணம் விசயமா பேசனும்.” என்று ராஜசேகர் அழைத்து வந்தவகளை காட்டி பவித்ரன் சொன்னதும்…

வந்தவர்கள் எழுந்து நின்று… “அப்போ நாங்க வர்றோம்.” பவித்ரன் பேச்சில் இருந்து தங்களுடன் சம்மந்தம் வைத்துக் கொள்ள அவனுக்கு விருப்பம் இல்லை போல் என்று நினைத்து அவர்கள் போங்கள் என்று சொல்வதற்க்குள் மரியாதையாக அவர்களே சென்று விட்டனர்.

நாரயணன் போகும் அவர்களை கவனிக்காது தன் பேரன் பவித்ரனையே பார்த்திருந்தார். அன்று காயத்ரியை அழைத்து வந்து … “இவளை தான் நான் கல்யாணம் செய்துக் கொள்வேன்.” என்று சொன்ன போதே… இந்த கதை இதோடு விடாது தொடரும் என்று அவர் அன்றே நினைத்தார்.

பவித்ரன் காயத்ரியை விரும்பி இருந்தாலும், இப்படி அடாவடித்தனமாய், ஏதூம் சொல்லாது பெண்ணை அழைத்து வந்து பெரியவர்கள் முன் பேசுபவன் இல்லை பவித்ரன்.

அவன் இயல்புக்கு மாறாய் பேசுகிறான் என்றால், இதற்க்கு பின் இதோடு வேறு ஏதோ பெரிய விசயம் இருக்க கூடும்.

இவன் இந்த அளவுக்கு இறங்கி செய்கிறான் என்றால், அதன் காரணம் வேணியாக மட்டுமே தான் இருக்கும். வேணிக்காக மட்டுமே இவன் எது என்றாலும் செய்வான். அவர் நினைத்தது இதோ நடக்க போகிறது என்று நினைத்து தன் பேரனை பார்த்தார்.

அதற்க்கு ஏற்றார் போல் தான் பவித்ரன்… “வேணிக்கு இனி மாப்பிள்ளை பார்க்க தேவையில்லை.” என்று சொன்னதும்…

அவன் அப்பா… “நீயும் கட்டிக்க மாட்ட இப்போ அவளுக்கு மாப்பிள்ளையும் பாக்க கூடாதுன்னு சொன்னா என்ன அர்த்தம்டா…?” தன் மகனிடம் கோபமாக கேட்க…

“அதுக்கு அர்த்தம் நாங்களே பார்த்துட்டோம் என்று அர்த்தம்.” என்று பவித்ரன் சொன்னதும் முதலில் புரியாத அவன் தந்தை பின் புரிந்து போய்…

“என்னடா சொல்ற…?” என்று அதிர்ந்து போய் கேட்டார்.

ஆனால் அந்த அதிர்வு எல்லாம் நாரயணனுக்கும், புனிதாவுக்கும் இல்லை போல் பவி பேச பேச அவர்கள் பவித்ரனை பாராது, வேணியை தான் பார்த்திருந்தனர்.

வேணியும் அவர்கள் எதிர் பார்த்ததுக்கு ஏதுவாய் தான் மிகவும் பதட்டத்துடன் தன் நகங்களை கடித்து துப்பிய வாறே மிக பதட்டத்துடன் காணப்பட்டாள்.

“என்னடா நீ பார்த்துட்டியா….மாப்பிள்ளை யாரு…? உன் கூட வேலை பாக்குறவரா…?” என்று அவன் தந்தை கேட்க…

“என் கூட வேலை பாக்குறவர் கிடையாது.” என்று சொல்லிக் கொண்டே வேணியை பார்க்க…

அவளோ வேண்டாம் இப்போது சொல்ல வேண்டாம் என்பது போல் தலையை மறுப்பது போல் ஆட்டினாள்.

ஆனால் பவித்ரனோ இந்த விசயத்தை இன்று இல்லை என்றாலும், வேறு ஒரு நாள் பேசி தானே ஆகவேண்டும். அதை இன்றே பேசி முடித்து விடலாம் என்று நினைத்து தன் தாத்தாவை பார்த்து…

“மாப்பிள்ளை வேறு யாரும் இல்லை. நம்ம உதயேந்திரன் தான்.” என்று அவன் சொல்லி முடித்ததும், அந்த இடமே சிறிது நேரம் அமைதியாக இருந்தது. யாரும் எதுவும் பேசவில்லை.

சிறிது நேரம் கழித்து தான்… “அந்த வீட்டு பிள்ளை எப்போதிலிருந்து நம்ம வீட்டு பிள்ளை ஆனான் என்று மட்டும் சொல்றியா பவி.”

பவித்ரன் சொன்ன நம்ம உதயேந்திரன் என்ற வார்த்தையை தான் பெரியவர் இப்படி கேட்டார்.

அதற்க்கு பவித்ரன் திரு திரு என்று முழித்திருக்க….அவனுக்கு பதிலாய் புனிதா தான்… “எப்போ இந்த வீட்டு பெண் விரும்ப ஆராம்பிச்சாளோ அப்போ இருந்து அந்த வீட்டு பையன் நம்ம வீட்டு பையனா ஆயிட்டான்…” என்று சொன்ன புனிதா பவித்ரனை பார்த்து….

“நான் சொன்னது சரி தானே பவி.” அதற்க்கு பவியும் சரி என்பது போல் தலையாட்டினான்.

அந்த வீட்டின் பெரியவராய் நாரயணன்...அங்கு இருந்த இருக்கையில் சோர்ந்து போய் அமர்ந்த வாறே… “இது சின்ன பசங்க விசயம் இல்ல பவி.”

காயத்ரியை காட்டி… “இந்த பெண்ணை ஏத்துக்குறதே ரொம்ப கஷ்ட்டப்பட்டு மனச தேத்திக்கிட்டு தான் ஏத்துக்கிட்டோம். ஆனால் அந்த வீட்டில் சம்மந்தம் வெச்சிக்கனும் என்றால்…” மிகவும் தயங்கி தன் மருமகள் புனிதாவை பார்த்தவர்…

பின் ஒரு பெரும் மூச்சோடு… “ என் மருமகள் உடஞ்சி போயிடுவா பவி. அவ ஏற்கனவே ரொம்ப கஷ்ட்டப்பட்டுட்டா...இனியாவது சந்தோஷமா இல்லை என்றாலும் நிம்மதியாவது இருக்கட்டும்” என்று சொல்லி முடித்தவர் புனிதாவை பார்த்தவர்…

“நீ என்னம்மா சொல்ற…? முதல்ல நான் எடுத்த முடிவு சரியில்லாமல் போயிடுச்சி. இனியாவது சரியா இருக்கனும் என்பது தான் என் ஆசை.” என்று அவர் சொல்லி முடித்ததும்.

தன் மகள் வேணியை பார்த்துக் கொண்டே… “நீங்க தப்பா எடுத்துக்கலேன்னா நான் ஒன்னும் சொல்லட்டுங்கல மாமா….” தன் மாமனாரிடம் அனுமதி கேட்க..

“என்னம்மா எது என்றாலும் தாரளமாக சொல்லும்மா...இது உன் மக சம்மந்தப்பட்டது.” என்று நாரயணன் சொன்னதும்…

“நீ..ங்க எடுத்...த இ..ந்த முடி...வும் சரியில்ல மாமா.” தயங்கி தயங்கி என்றாலும், புனிதா தன் மனதில் இருப்பதை சொல்லி விட்டாள்.

புனிதா இது வரை தன் மாமனாரை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசியது இல்லை. அவர் மகன் தனக்கு துரோகம் செய்த போது கூட…. அவரிடம்… “உங்க மகன் இப்படி செஞ்சிட்டாரே…” என்று கேட்டாள் இல்லை.

ஆனால் இன்று இப்படி சொன்னதும் தன் மருமகளை அதிர்ச்சியோடு பார்க்காது, ஆச்சரியத்தோடு தான் பார்த்தார் நாரயணன்.

தொடர்ந்து புனிதா… “அன்னிக்கு விருப்பம் இல்லாது உங்க மகனுக்கு என்னை கட்டி வெச்சிங்க. இப்போ விருப்பம் இருக்கிறவங்களுக்கு கட்டி வைக்காம தப்பு செய்யிறிங்க. அந்த பையன் எப்படியோ எனக்கு தெரியாது. ஆனா என் மகள் இந்த பையனை தவிர வேறு ஒருத்தனுக்கு கட்டி வெச்சா அவ சுகமா வாழ மாட்டா என்பது மட்டும் எனக்கு தெரியும்.

நான் தான் ஒழுங்கா வாழல. என் மகளாவது ஒரு நல்ல வாழ்க்கை வாழட்டும் மாமா. நீங்க என்னை பத்தி எல்லாம் யோசிக்காதிங்க. என் மனசு காயப்பட்டு காயப்பட்டு அது மறுத்து போயிடுச்சி...இனி யாராவது அதை காயப்படுத்தினா கூட சுரனை இருக்குமான்னு கூட எனக்கு தெரியல.”

புனிதா எனக்கு இந்த திருமணத்தால் புதிதாய் காயம் பட என்ன இருக்கிறது…? என்பது போல் பேசினாள்.

“நான் உனக்காக மட்டும் தான் பார்த்தேன் அம்மா.” என்று சொல்லியவர் அதற்க்கு அடுத்து என்ன என்று அவர் யோசிக்கும் வேளயில்… தன் அக்கா பிள்ளைகளோடு அங்கு வந்தான் நம் உதயேந்திரன்.

அனைவரும் அவனை எப்படி வரவேற்க்கிறது என்பதில் ஒரு வித தயக்கம் உருவாகியது. அந்த தயக்கம் எல்லாம் சிறுபிள்ளைகளுக்கு இல்லை போலும்… க்ரீஷூம். கீர்த்தியும், நாரயணன் அருகில் சென்று …

“நாங்க வந்தது உங்கள்ளுக்கு பிடிக்கலையா தாத்தா…” என்று இருவரும் நாரயணனின் இரு கை பற்றி கொண்டு கேட்டனர்.

அவருக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. இவர்களும் தனக்கு பேரன் பேத்தி தான். ஆனால் அவர்களிடம் உரிமையுடன் பேச முடியாது.

அப்படி பேசினால் அது தன் மருமகள் புனிதாவுக்கு செய்யும் துரோகம் என்று நினைத்தவர் அவர்கள் முகம் பாராது…

“அதெல்லாம் ஒன்றும் இல்லை.” என்று சொன்னவரின் குரல் கர கரத்து கேட்டது.

அந்த குழந்தைகளை புனிதாவும் வந்ததில் இருந்து பார்த்துக் கொண்டு தானே இருக்கிறாள். இவர்கள் தன் கணவரின் பிள்ளைகள். அவர்களுக்கும் தாத்தா என்ற ஆசை இருக்கும்.

அவர்கள் தன் தாத்தா கை பற்றி கேட்கும் போது அவர்கள் முகத்தில் தெரிந்த அந்த ஏக்கம், ஆர்வத்தை பார்த்த புனிதா குழந்தைகள் என்ன தப்பு செய்தார்கள்.

பெரியவர்கள் செய்த பாவத்தை சிறியவர்கள் ஏன் சுமக்க வேண்டும்…? என்று நினைத்து…

“உங்க தாத்தாவுக்கு நீங்க வந்ததில் ரொம்ப சந்தோஷம் தான் பா…” மனதில் ரணம் இருந்தாலும் அதை வெளியில் காண்பிக்காது முகத்தில் புன்னகை மின்ன சொன்னவளை ஒரு வித ஆற்றாமையோடு பார்த்தார் பெரியவர்.

“விடுங்க மாமா சின்ன பசங்க. வேணி பவித்ரன் போல தானே அவங்களும்.” என்று சொல்லி முடித்தவளின் பார்வை தனக்கு மருமகனாய் வரப்போகும் உதயேந்திரன் பக்கம் சென்றது.

இதற்க்கு தான் காத்துக் கொண்டு இருந்தது போல் புனிதாவின் அருகில் சென்ற உதயேந்திரன் வேணியின் கை பற்றி வேணியிடம் சொன்னது போலவே அவரின் காலில் விழுந்து…

“நீங்க தான் எங்களுக்கு கல்யாணம் செய்து வைக்கனும் அக்கா.” என்று உரிமையுடன் தன் விருப்பத்தை சொன்னான்.

தாத்தா நாரயணன் தான்… “அதெல்லாம் சரிப்பா...உங்க அ.” பரமேஸ்வரரை உன் அப்பா என்று கூட சொல்லாது நிறுத்தி விட்டார்.

கீர்த்தி தான் அவரின் உடல்நிலை பற்றிய முழுவிவரத்தையும் சொன்னவள். அவர் கேட்கும் சூழ்நிலையிலும் இல்லை. புரிந்துக் கொள்ளும் சூழ்நிலையிலும் இல்லை என்று சொன்னதும் தான் அங்கு இருந்தவர்களுக்கு அப்பாடி என்று ஆனது.

ஆம் அவரின் உடல் நிலை கேட்டு நிம்மதி தான் அடைந்தனர். இந்த திருமணம் நடந்தால் அந்த பெரிய மனுஷனால் வேணி என்ன என்ன பிரச்சனையை எதிர் கொள்ள நேரிடுமோ என்று பயந்துக் கொண்டு இருந்தவர்களுக்கு இந்த விசயம் எவ்வளவு பெரிய ஆசுவாசம். அதனால் அனைவரும் ஒரு பெரும் மூச்சி விட்டனர்.

பின்னும் நாரயணனுக்கு இந்த கல்யாணம் விசயமாக பேச ஒரு வித தயக்கமே இருந்தது. அதை பார்த்த உதயேந்திரன் நாரயணன் அருகில் சென்று அவர் கை பற்றியவனாய்…

“உங்க நிலை எனக்கு புரியுது அங்கிள். நானே இதை நினச்சி கூட பாக்கல. உங்க வீட்டுக்கு வந்து உங்க வீட்டு பெண்ணை கேட்பேன் என்று. ஆனால்…” என்று உதயேந்திரன் தன் பேச்சை இழுத்து நிறுத்த…

“ எங்களுக்கும் ஆச்சரியம் தான் எங்க வீட்டு பெண் உன்னை விரும்புவா என்று. அதோடு ஆச்சரியம் என் மருமக இந்த கல்யாணத்துக்கு சம்மதம் தெரிவித்தது.”என்று உதயேந்திரன் நிறுத்திய பேச்சை பெரியவர் முடித்து வைத்தார்.

புனிதாவின் சம்மதம் கிடைத்ததில் உதயேந்திரனுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. தங்களுடைய இந்த கல்யாணத்தில் பெரிதும் பாதிக்கப்பட போவது புனிதா அக்கா தான் என்பது அவனுக்கு தெரியும்.

அவர் சட்ட திட்டமாய் மறுத்து விட்டால் உதயேந்திரனால் ஒன்றும் செய்ய முடியாது. புனிதா அக்கா மறுத்தாலும் அதில் தவறு இல்லை என்று உதயேந்திரனே சொல்வான். புனிதா அக்காவை எப்படி சம்மதிக்க வைப்பது என்ற குழப்பத்தில் தான் இங்கு வந்ததே…

இப்படி உடனே அதுவும் தான் வருவதற்க்கு முன்னவே அவர் சம்மதித்தில் அவ்வளவு மகிழ்ச்சி உதயேந்திரனுக்கு…

அந்த மகிழ்ச்சியோடு புனிதாவிடம்.. “நீங்க சங்கடப்படுவது போல் எதுவும் நடவாது நான் பார்த்துக் கொள்கிறேன். என் கல்யாணத்துக்கு என் அக்கா ஜெய்சக்தி வருவாங்க அத மட்டும் நீங்க கொஞ்சம் பொறுத்துக்குனா போதும்.

அதன் பின் அவங்கல பார்க்கும் சங்கடமான சூழ்நிலையை நான் உங்களுக்கு உருவாக்க மாட்டேன்.” என்று புனிதாவின் மனதை புரிந்தவனாய் வாக்களித்தான்.

அவன் வாக்களித்தது போல் தான் பவித்ரன், வேணியின் திருமணம் ஒரே நாளில் ஒரே மேடையில் நடத்த திட்டமிட்ட படி நடந்தேறியது.

அதில் ஒரு அக்காவாக ஜெய்சக்தி வந்து வாழ்த்தி விட்டு சென்றதோடு சரி. அதன் பின் உதயேந்திரன் தன் வேணியை தன்னோடு ஜெர்மனிக்கு அழைத்து சென்று விட்டான்.

ஆறு மாதத்திற்க்கு ஒரு முறை இந்தியா வரும் போது வேணியை கம்பத்தில் விட்டு விட்டு இவன் சென்னையில் முடிக்க வேண்டிய வேலையை முடித்து விட்டு தன் தந்தை, சகோதரியோடு ஒரு வாரத்தை கழித்து தன் மனைவியை இத்தனை நாள் பிரிந்திருந்ததே பெரிது என்பது போல் தன் மனைவியை பார்க்க கம்பத்துக்கு சென்று விடுவான்.

உதயேந்திரனின் தந்தை அதே ஜடம் போல் தான் வாழ்க்கையை தள்ளுகிறார். வேணியை கம்பத்துக்கே அனுப்புகிறேன் என்று சொல்லிக் கொண்டு இருந்த உதயேந்திரன் அவனே கம்பத்து ஆளாய் ஆகி விட்டான்.

**********************************************

இக்கதையில் குறை எதாவது இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். இந்த கதை முடிக்க எனக்கு பல மாதங்கள் எடுத்து விட்டது. இது போல் நான் எந்த கதையும் இழுத்து அடித்தது கிடையாது. என்ன ரொம்ப வெச்சி செஞ்சிடுச்சி இந்த கதை...அடுத்த வாரம் எபிலாக்கோடு வருகிறேன். அதற்க்கு முன் திங்கட்கிழமை கனவு பட்டறையில் என் முதல் பதிவை பதிவிடுகிறேன். திங்கள் புதன் வெள்ளி வாரம் மூன்று பதிவு கொடுக்கிறேன் வாசகர்களே… இங்கு கொடுக்கு இந்த ஆதாரவை கனவு பட்டறையிலும் கொடுப்பிற்கள் என்ற நம்பிக்கையோடு உங்கள் விஜயலட்சுமி ஜெகன்.






































 
Active member
Joined
May 11, 2024
Messages
123
அருமை 👌👌👌👌👌👌👌🌺🌺🌺🌺🌺
 
Top