Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Kambathu Ponnu...Epilouge

  • Thread Author
ஐந்து வருடம் கடந்த நிலையில்…

ஜெர்மனியில் உதயேந்திரன் தன் அலுவகத்தில் தன் முன் இருந்த கணினியை காட்டி அவனின் பி.ஏ எலிசா ஏதோ சொல்ல…

அதற்க்கு மாற்று கருத்தாய் உதயேந்திரன் ஏதோ சொல்லி தீவிரமாக விவாதித்துக் கொண்டு இருக்கும் சமயத்தில், உதயேந்திரனின் கைய் பேசியின் அழைப்பாய்…

“கம்பத்து பொண்ணு

கம்பத்து பொண்ணு

கண்ணால வெட்டி தூக்குற

எங்கூரு காத்து சுராளி போல

புழுதி பறக்க தாக்குற

என்ற பாடல் இசையிலேயே… அழைத்தது என்று தெரிந்தமையால், கைய் பேசியை பார்க்காது கூட அதை அணைத்தவன்…

எலிசாவிடம்… “நெக்ஸ்ட்…” என்று கணினியை பார்த்து கேட்டவனுக்கு, பதில் ஒன்றும் வராது போகவே நிமிர்ந்து எலிசாவை பார்த்தான்.

எலிசாவோ அணைக்கப்பட்ட தன் கைய் பேசியையே பார்த்திருப்பதை பார்த்து…. “மிஸ் எலிசா லுக் அட் திஸ்.” என்று கணினியை காட்டி சொல்லவும்…

“சாரி சர்.சாரி சர்.” என்று மன்னிப்பு கேட்டவள் தன் வேலையை முடித்து விட்டு தன் அறையை விட்டு வெளியேறியதும்…

இந்த பாட்டை போட்டு போட்டு நம்ம மானத்தை வாங்குவதே இவளுக்கு பொழப்ப போச்சி. இந்த பாட்டை கேட்டாளே இந்த சப்ப மூக்கு எலிசா என்று நினைத்தவன்...சீ இந்த கிருஷ்ணாவால் எனக்கும் எலிசா என்றாலே...கூடவே சப்ப மூக்குன்னு வந்துடுது. என்று தன் மனையாளை மனதில் திட்டிய வாரே…

அணைக்கப்பட்ட தன் பேசியில் இருந்து கம்பத்து பொண்ணுக்கு அழைப்பை விடுத்தான்.

அந்த பக்கத்தில் அழைப்பை ஏற்ற உடன் உதயேந்திரன்… “ஏய் பட்டிகாடு. நான் மாத்த மாத்த நீ ஏன்டி என் போன்ல காலர் ட்யூனை அந்த பாட்டையே போடுற…” என்று திட்டுக்கிறேன் என்ற பெயரில் உதயேந்திரன் தன் மனையாளை கொஞ்சிக் கொண்டு இருந்தான்.

அவள் அழைப்பை ஏற்காது அணைத்ததிற்க்கு, தான் அழைத்ததும், அந்த பக்கத்தில் இருந்து வந்து விழும் சர மாரியாக திட்டுக்களில் இருந்து தப்பிக்கவே வேணி தன் திட்டை ஆராம்பிப்பதற்க்குள் அவன் திட்டி விடுவான்.

முதலில் வேணி அவன் திட்டுவதற்க்கு ஏற்றவாறு பதில் அளித்தவள், தன் அழைப்பை அவன் ஏன் ஏற்கவில்லை என்பதையே மறந்தவளாய் பேசியை வைத்து விடுவாள்.

அதே டெக்னிக்கை உதயேந்திரன் இன்றும் பின் பற்ற… ஆனால் எப்போதும் இல்லாது அவன் பேச்சை காதில் வாங்கதவளாய்…

“எதுக்கு என் அழைப்பை கட் செஞ்சிங்க…?” என்று தன் காரியமே பெரிது என்பது போல் கேட்டாள்.

“வேல டி. அது தான் உன்னை கட் செஞ்சேன். அந்த எலிசா வேற சமயத்துக்கு குழப்பிட்டு இருக்கா” என்று கூடுதல் தகவலாய் உதயேந்திரன் சொல்லி முடித்த நொடி…

அந்த பக்கத்தில் இருந்து… “ஆ என்னை கட் செய்வீங்க. ஏன் செய்ய மாட்டிங்க. போங்க போங்க அந்த சப்ப மூக்கு எலிசா கிட்டயே பேசுங்க. நான் எல்லாம் உங்களுக்கு சரிப்பட்டு வர மாட்டேன்.” என்று வேணி சொல்லிக் கொண்டு தன் பேசியை அணைக்கும் வேளயில்…

உதயேந்திரன்… “இப்போ என்ன ராஜா ராணி படம் பார்த்தியா…?” சம்மபந்தமே இல்லாது கணவனின் பேச்சில்…

“ஆமாம் இப்போ என்ன அதுக்கு…?” என்று சிடு சிடுப்பாய் கிருஷ்ணவேணி கேட்டாள்.

“உன்னை சும்மா வீட்ல விட்டு வெச்சதுக்கு, கண்ட படத்தை பார்த்து இப்படி தான் கேள்வி கேட்ப...மரியாதையா நாளையில் இருந்து நீயும் என் கூட ஆபிசுக்கு வா.”

திருமணமாகி ஜெர்மனி வந்த நாளில் இருந்து… “கிருஷ்ணா படிச்ச படிப்பை வேஸ்ட் பண்ணாதே...நம்ம கம்பெனிக்கு வா. வேலை கத்துப்ப...எனக்கும் உபயோகமா இருக்கும்.” என்பதை இது போல் பல சமயத்தில் பலவிதமாய் உதயேந்திரன் வேணியிடம் சொல்லி விட்டான்.

அதற்க்கு பதிலாய் “நான் எங்கே என் படிப்பை வேஸ்ட் செய்யிறேன். பக்கத்துல இருக்க பசங்களுக்கு தமிழ் சொல்லி கொடுத்துட்டு தானே இருக்கேன்.”

“ஆமா அம்மா சொல்லி கொடுக்குற உன் தமிழால் ஒரு பைசா லாபம் இல்லை.”

என்ன தான் உதயேந்திரன் வேணியின் காதலால் தன்னை மாற்றிக் கொண்டாலும், இது போல் பணக்கணக்கு விசயத்தில் நான் பரமேஸ்வரரின் மகன் என்பதை நிரூபிப்பான்.

“ஓ அப்போ என்னால உங்களுக்கு எந்த லாபமும் இல்ல...அப்படி தானே…” என்று தன் முந்தியை இடுப்பில் சொருகிய வாறே சண்டை இடுவது போல் அவனை நெருங்கி கேட்டாள்.

“உன்னால எனக்கு லாபம் இல்லையா…?எந்த மடையன்டி அப்படி சொன்னான். தேவதை போல அந்த நிலவே நமக்கு மகளா பிறந்து இருக்க நம்ம வெண்ணிலா இருக்க உன்னை நான் உபயோகம் இல்லேன்னு சொல்வேன்னா…

என்ன அப்போ அப்போ நையிட்ல தான் கொஞ்சம் முரண்டு பிடிக்கிற…நானும் என்ன தான் ட்ரையிங் கொடுத்தாலும், இந்த மாமனுக்கு ஈடு கொடுக்க மாட்டேங்குற… அது உன் மேல தப்பு இல்ல உன் ஊர் தப்பு.”

அது என்னவோ உதயேந்திரனுக்கு ஒரு நாளில் ஒரு தடவையாவது வேணியின் ஊரை சொல்லாது இருக்க மாட்டான். வேணி எது சொன்னாluம் பொறுத்துக் கொள்வாள்.

தன் ஊரை பற்றி ஏதாவது சொன்னா அவ்வளவு தான் மூக்கு விடைக்க...முந்தியை சொருகிய வாறு கோபத்துடன் தன்னை நெருங்கும் போது அருகில் கோபத்தால் சிவந்த அவள் முகத்தை பார்க்க அவனுக்கு அவ்வளவு பிடிக்கும்.

என்ன எல்லோருக்கும் வெட்கத்தால் சிவந்த முகத்தை பார்க்க தானே பிடிக்கும் என்பார்கள். இவன் என்ன கோபத்தால் சிவந்த முகத்தை பார்க்க பிடிக்கிறது என்கிறானே ...இது தானே உங்கள் கேள்வி என்றால்…

அதற்க்கு பதிலாய் உதயேந்தினின் மிக பெரிய புலம்பலை நீங்க கேட்க வேண்டி இருக்கும். உங்களுக்கு நேரம் இருந்தால் இதோ அவனின் புலம்பல்களில் சில…

திருமணம் ஆன புதியதில் ...இந்த ஊர் ஜெர்மனி வந்த அன்று, ஒரு வணிக வளாகத்தில் வெளியில் நிற்க வைத்திருந்த பொம்மை அணிந்திருந்த ஆடையை பார்த்து அதன் அழகில் அங்கயே நின்று விட்டான்.

என்ன என்று தெரியாது அந்த உடை அவனை கவர..யாருக்கு ஏன் தெரியாது அதை வாங்கியும் வந்து விட்டான்.

அந்த ஆடை வாங்கிய போது அவன் ஒரு பெண்ணுடன் லிவிங் டூ கெதரில் தான் இருந்தான். ஏனோ அந்த உடையை அந்த பெண்ணுக்கு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் கூட அவனுக்கு இல்லை.

ஜெர்மனி வந்த அன்று தன் கப்போடை திறந்ததும், அவன் கண்ணில் பட்டது அவன் வாங்கிய அந்த உடை. அப்போதே அந்த உடை தன் மனைவியின் உடலில் தழுவி பார்க்க ஆசை ஏழ…

“குட்டிம்மா இது போட்டு காமிக்கிறியா…”

அன்று தான் அவர்கள் ஜெர்மனிக்கு வந்தது. வருட கணக்கில் பேச்சிலர் வாழ்க்கை நடத்திக் கொண்டு இருந்தவனின் வீடு எப்படி இருக்கும்…

என்ன தான் வேலையாட்கள் வீட்டை சுத்தம் செய்த போதும், வேணிக்கு அவ்வீட்டை பார்த்ததும் இன்று முழுவதும் நமக்கு வேலை பென்ட் கழன்டி விடும் போலவே...என்று நினைத்து ஒரு நிமிடம் கூட நேரம் கடத்தாது தன் வேலையை ஆராம்பித்து விட்டாள்.

தன் கணவன் கையில் என்ன உடை இருக்கிறது என்று கூட பாராது… “நையிட் போட்டு காமிக்கிறேன்ங்க...இப்போ என்னை தொந்தரவு கொடுக்காதிங்க.” என்ற மனைவி சொல்லே மந்திரம் என்பது போல் உதயேந்திரன் இரவு வரையுமே அமைதி காத்தான்.

படுக்கைக்கு மனைவி வந்ததும் அவள் கையில் அந்த உடையை கொடுத்து “போட்டு காமிடா பட்டு.” நேரத்துக்கு ஏற்றவாறு இப்படி தான் நம்ம உதயின் வாயில் இருந்து அம்மூ, பட்டு, குட்டி, என்று ஏராளமாக ஆசை பெயர்கள் அவன் வாயில் இருந்து கொட்டும்.

உதயேந்திரன் கையில் கொடுக்கும் போதே அந்த சல்லடை துணியில் என்ன இது என்பது போல்… பார்த்தவளுக்கு அது இரவு உடை...இதையா போடு என்றான் என்பது போல், எப்போதும் போல் கோபம் வந்தாள் செய்யும் செயலை செய்தாளே தவிர…

அவன் என்ன தான் கெஞ்சியும் கொஞ்சியும் கேட்டு கூட … “இது போல் உடை எல்லாம் என்னை போட சொல்லாதிங்க.” என்று திட்ட வட்டமாக வேணி மறுத்தி விட்டாள்.

“ஏன்டி நான் உன் புருஷன் தானேடி...என் எதிரில் என்ன உனக்கு வெட்கம்…?” என்று கேட்டவனுக்கு தெரியவில்லை.

எப்போதும் ஒரு சிலதில் தன் மனைவி தனக்கு கொடுக்க போவது இல்லை என்பதை. கணவன் என்றாலும் ஒரு சிலதில் வேணி பிடிவதாக தான் இருந்தாள்.

இரவுகளின் குளிர்ச்சியில் அதின் குளிரை உதயன் அனுபவிப்பின் ஆழத்தில் செல்லும் போது, வேணியின் முகம் பார்க்க ஆசை படுவான்.

அந்த ஆசை இன்று வரை அவனுக்கு நிறைவேறாத ஆசையாகவே இருந்து விட்டது. அவன் பிடிவாதமாய்… “எனக்கு லைட் வேணும்.” என்று சொன்னால்…

“அப்போ நான் வேண்டாமா…” என்று வாய் சொல்ல கைய் பக்கத்தில் இருக்கும் தன் ஆடையை தேட தொடங்கும்…

பின் என்ன நடக்கும்…? அவளின் கையில் ஆடையை கிடைக்க விடாது செய்து விட்டு, அவளிடன் தன் தேடலை தொடங்குவான்.

இதோ அதோ என்று அவனின் திருமணம் முடிந்து ஐந்து வருடம் கடந்து விட்ட நிலையிலும், அவன் ஆசை நிறைவேறாது இருக்க…

மனைவியின் வெட்க முகத்தை தான் நம்மால் பார்க்க முடியவில்லை. கோபமுகத்தையே நாம் ஆசை தீர பார்க்கலாம் என்று நினைத்து தான் அவ்வப்போது வேணியின் ஊரை சொல்லி கோபப்படுத்துவான்.

இதோ இப்போது செய்வது போல் சேலையை தன் இடுப்பில் சொருகிக் கொண்டு கிட்ட வரும் போது அவளின் சிவந்த முகம் அவனுக்கு ஒரு போதையை கூட்டும் என்றால், அந்த இடை ஒரு குழந்தைக்கு தாய் ஆனவளா...என்று அந்த நிலையிலும் யோசிக்க வைக்கும் அந்த சிற்றிடையில் தன் கை கோர்த்து தன் அருகில் இணைக்கும் போது கோபம் போல் இருக்கும் அவள் முகத்தில் தோன்றி மறையும் அந்த சிறு வெட்கம்.

அதை பார்க்க அவன் என்ன வேண்டும் என்றாலும் செய்வான். அவள் ஊரை சொல்லும் போது அவள் தன் குடும்பத்தை கொஞ்சம் டேமஜ் செய்வா...இருக்கட்டும் என் மனைவி தானே செய்யிறா...இப்போ அவளும் என் குடும்பம் தானே...அதனால் அந்த திட்டும் அவளையும் தானே இப்படி அவனுக்கு அவனே ஆயிரம் சமாதானம் செய்துக் கொண்டு தான் அவளின் அந்த கோபம் கலந்த தாபமுகத்தை பார்க்க முடிகிறது.

அதே போல் இன்றும் அவளின் ஊரை பற்றி சொல்ல...பேசியில் அந்த பக்கம் இருந்த வேணி கண்ட மேனிக்கு திட்டி தீர்த்து விட்டு…

“வீட்டுக்கு வாங்க வெச்சிக்கிறேன்.” என்று கடைசி அஸ்திரத்தை வேணி உபயோகித்தாள்.

கடைசியாக உபயோகித்த அந்த அஸ்த்திரன் உதயேந்திரனிடம் நன்றாகவே வேலை செய்தது.

“குட்டிம்மா நான் பாவம் இல்லையா...நான் உன் மாமன் டி.” என்று கொஞ்சலில் இருந்து கெஞ்சலுக்கு இறங்கி வந்து தன் மனைவியை சமாதனப்பேசி முடித்த பின்னே அவன் தன் அலுவலக வேலையை தொடங்கினான்.

காரணம் இல்லாது உதயேந்திரன் தன் அலிவலக வேலையையும் விட்டு மனைவியை சமாதானம் படுத்தவில்லை.அனைத்து மனைவி மார்களும் கணவனிடம்…”உங்கல வெச்சிக்கிறேன்.” என்று சொன்னதும் கணவன் மார்களும்…”அதுக்கு தான்டி காத்து இருக்கேன்.” என்று சொல்வாங்க.

ஆனால் நம் வேணி வெச்சிக்கிறேன் என்று சொன்னால் அவள் உதயை ஒரு வாரம் வெச்சி செய்வாள். அதான் ஒரு வாரம் அவனின் படுக்கை தனி தான். அதற்க்கு என்றே அவனுக்கு எவ்வளவு வேலை இருந்தாலும் வேணி இந்த வார்த்தை சொல்லி விட்டால், எப்பாடு பட்டாவது அவளை மலை இறக்கிய பிறகு தான் தன் வேலையை பார்ப்பான்.அவனுக்கு சம்சார சாகரம் தான் முக்கியம்.

அன்று இரவு அவன் தன் மனைவி குழந்தையோடு ஒரு பார்ட்டிக்கு செல்ல வேண்டும். அதை நினைத்து அவன் இப்போதையில் இருந்தே கவலையில் ஆழ்ந்தான்.

முதலில் எல்லாம் பேச்சிலராய் இருக்கும் போது, இது போல் பார்ட்டி என்றால் எவ்வளவு என்ஜாய் செய்வான். ஆனால் இப்போது எல்லாம்... உதயேந்திரனின் கவலைக்கு காரணம் இன்று இரவே நீங்க பார்க்கலாம்.

சான் உதயேந்திரன் தொழில் தொடர்பான ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் பிசினஸ் தான் செய்கிறான். அவன் மகனுக்கு தான் இன்று ஐந்தாவது பிறந்த நாள். அதற்க்கு தான் குடும்பமாய் வந்து இருக்கிறார்கள்.

தன் மனைவி எப்போதும் போல் சேலை கட்டி மிதமான ஒப்பனை தான் செய்திருந்தாள். ஆனால் அதிலேயே அங்கு இருக்கும் அனைவரையும் தூக்கி சாப்பிடுவது போல் தன் கணவன் கை பற்றி அந்த பார்ட்டி ஹாலுக்குள் நுழைந்ததும், அனைவரின் கண்ணும் வேணியின் பக்கமே...அதுவும் குறிப்பாய் ஆண்களின் கண்கள்.

இப்போ புரியுதுங்கலா…? நம்ம உதய் பார்ட்டின்னா ஏன் கடுப்பாகுறான்னு. “பொண்டாட்டி பக்கத்துல இருக்கும் போதே இந்த பார்வை பாக்குறாங்க.” உதய் முனு முனுப்பது வேணியின் காதில் நன்றாகவே விழுந்தது.

எதுவும் சொல்லாது ஒரு புன் சிரிப்போடு தன்னை வரவேற்றவர்களை பார்த்து வீசினாள். ஆனால் கை பிடித்து அழைத்து வந்த உதயனின் குட்டி தேவதை … “என்னப்பா சொன்னிங்க…” என்ற மகளின் கேள்விக்கு என்ன பதில் அளிப்பது என்று யோசிக்க…

“அது ஒன்னும் இல்லடா..அப்பாக்கு ஸ்டோமக்கு பெயின் அதான் முடியலேன்னு சொல்றார்.” என்ற அன்னையின் பேச்சில் தன் தந்தையின் பக்கம் பார்த்து...

“ரொம்ப வலிக்குதாப்பா…?” உண்மையான அக்கறையில் மகள் கேட்ட விசாரிப்பில்..

“இல்லேடா...அப்படி எல்லாம் ரொம்ப இல்ல.” என்று தன் மகளை சமாதானப்படுத்திக் கொண்டே தன் மனைவியை உதயேந்திரன் முறைத்து பார்த்தான்.

மனைவியோ… “அப்படியா…?” என்பது போல் வாய் அசைக்கும் வேளயில்…

எங்கிருந்தோ இவர்களை பார்த்து ஓடி வந்த சான்… “மிஸஸ் கிருட்ஷட்ட வணி. எப்போ வந்திங்க நான் கவனிக்கவே இல்ல.” என்று தன் மனைவியை வரவேற்றுக் கொண்டு இருந்த தன் நண்பனை உதயேந்திரன் கொலை வெறியோடு பார்த்துக் கொண்டு இருந்தான்.

அவ பெயரை கூட ஒழுங்கா சொல்ல தெரியல...இவன் எல்லாம் என்று பல்லை கடித்துக் கொண்டே…

“டேய் டேய் நானும் வந்து இருக்கேன். என் பொண்ணை தூக்கிட்டு நிக்குறேன்டா…” என்று குரல் கொடுக்கவும் தான் தன் பக்கம் பார்த்த சான்…

“ம் பார்த்தேன். பார்த்தேன். நாம் எப்போவும் பார்த்துக்குறோம் ஆனா உன் மிஸஸை எப்போவோ தானே பாக்குறேன் அதான்.” தன் வழிசலை ஒரு மாதிரியாக சமாளித்து தன்னிடம் பேசியவனை மனதில் திட்டிக் கொண்டு இருந்தாலும், நாகரிகம் கருதி சிரித்த முகமாய் பேசினான்.

அவன் தொல்லை அதோடு விடவில்லை. இவன் தன் மனைவியோடு சென்றாளே அனைவரின் கண்ணும் வேணியின் பக்கம் தான் இருக்கும். இன்னும் சொல்ல போனால் அவளின் உடையிலும் ஆகட்டும், அவள் நடந்துக் கொள்ளும் விதத்திலும் ஆகட்டும், அவ்வளவு கட்டுபாடு இருக்கும். இருந்தும் அனைவரும் அவளை பார்ப்பர்.

ஒரு காலத்தில் இவனும் அழகை ரசிக்க தான் என்று சொன்னவன் தான். ஆனால் அந்த அழகு தன் மனைவியிடம் இருந்து மற்றவர்கள் ரசித்தால்... விளைவு பார்ட்டி முடியும் வரை மனைவியை விட்டு அங்கு இங்கு நகரமாட்டான்.

இதை அனைத்தும் ஒரு புன் சிரிப்போடு பார்த்துக் கொண்டு இடுப்பவளோ...அந்த பார்ட்டியை ஈடு பாட்டோடு கலந்துக் கொள்வாள்.

ஜெர்மனியில் தான் இப்படி என்றால் அடுத்த வாரம் இந்தியாவுக்கு, இவள் ஊரான கம்பத்துக்கு போக வேண்டும். அங்கு இவங்க எல்லோரையும் ,மீறிய ஒரு வில்லன் அவனுக்கு என்று காத்துக் கொண்டு இருப்பான்.

அதை நினைத்தாலே ஒரு பெரும் மூச்சு அவனிடம் இருந்து வந்தது. “என்ன பவியை பத்தி நினச்சிங்கலா…?” அவனின் பெரும் மூச்சில் இருந்தே அவன் யாரை பற்றி நினைத்தான் என்று தெரிந்தவளாய் வேணி கேட்டாள்.

“ம் ஆமான்டி ஆமாம். எனக்கு மட்டும் ஊரு முழுக்க வில்லனா வந்து தொலைக்கிறாங்க.”

“நீங்க என்ன டையட் பாலோ பண்றிங்க...கொஞ்சம் என் மனைவிக்கும் சொல்லுங்கலே…” என்று கேட்டுக் கொண்டு இருந்தவனிடம்..

“அதை உங்க மனைவி கிட்டயே சொல்ல சொல்றேன்.” என்று சொல்லி விட்டு ஒரு வழியாக அந்த பார்ட்டியில் இருந்து தன் மனைவியை அழைத்து வந்து விட்டான்.

இந்தியா…

நாரயணன் … “பவி கோயில்ல எல்லா ஏற்பாடும் செஞ்சாச்சா…?என்று கேட்டுக் கொண்டே அங்கு இருக்கும் துளசி செடியில் இருந்து ஒரு இலையை எடுத்து வாயில் போட்டு கொண்டே கேட்டார்.

“தாத்தா நீங்க டென்ஷன் ஆகாதிங்க. எல்லாம் நான் பாத்துக்குறேன்.” என்று பவித்ரன் இங்கு வந்த மூன்று நாளில் இதே வார்த்தையை நூறு முறையாவது சொல்லி இருப்பான்.

அப்போதைக்கு … “சரி.” என்று சொல்லும் நாரயணன் பின் திரும்பவும் “எல்லா சரியா நடக்குமா…?” என்று திரும்பவும் அதே அர்த்தத்தை கொண்ட வார்த்தைகளையே வேறு மாதிரியாக கேட்டு வைப்பார்.

பவித்ரன் சென்னையில் இருந்து கம்பத்துக்கு வந்து மூன்று தினம் ஆகிறது. மூன்று நாள் கழித்து தன் இரட்டை குழந்தை செல்வங்களான கிருஷ்க்கும், இந்திரனுக்கும், கூடவே வேணியின் மகள் வெண்ணிலாவுக்கு முடி இறக்கி காது குத்தும் விழா அவர்கள் குலதெய்வ கோயிலில் நடை பெற உள்ளது.

அனைத்து ஏற்பாட்டையும் மூன்று நாள் முன்னவே வந்து பவித்ரன் செய்து முடித்து விட்டான். இதோ இப்போது திரும்பவும் சென்னை போகிறான். தன் வேணியை அழைத்து வர…

எப்போதும் இது போல் தான் பவித்ரன் சென்னையில் இருந்தால், உதய் வேணி சென்னையில் வந்து இறங்கிய உடன் வேணியை ஒரு கைய்யால் பற்றிக் கொண்டால், மறுகையில் வெண்ணிலா இருப்பாள்.

கம்பத்து வரும் வரை பிடித்த கையை பவித்ரன் விட மாட்டான். உதய் ஒரு வாரம் தன் தந்தையின் வீட்டில் இருந்து பார்க்க வேண்டிய வேலைகளை பார்த்து விட்டு தான் கம்பத்துக்கு செல்வான்.

ஒரு வாரம் பிரிய வேண்டுமே மனைவியிடம் ஏதாவது பேசலாம் என்று நினைத்தால் கூட அவனால் செயல் படுத்த முடியாது.

எங்கு இருந்துடா எனக்கு வில்லனா வந்து வாய்க்கிறிங்க...மனதில் தான் திட்டி தீர்ப்பான். வெளியில் மூச்ச்ச்…

அதே போல் சென்னைக்கு கிளம்பி கொண்டு இருக்கும் பவித்ரன் கையில் காபியை திணித்த காயத்ரி… “இந்த தடவையாவது மொட்டை அடித்து விடுவோமா…?” என்று கணவனிடம் கேட்டுக் கொண்டே அங்கு இருக்கும் தன் இரு பிள்ளைகளையும் காயத்ரி பார்த்தார்.

இருவருக்கும் இரட்டை சடை போட்டு மடித்து கட்டினால் கூட, தோள் வரை வந்து விழும் அளவுக்கு முடி வளர்ந்து நீண்டு இருந்தது. ஐந்து வரை முடி வெட்டாது இருந்தால் முடி வளர்ந்து நீண்டு தொங்க தானே செய்யும்.

வேணியின் மகள் வெண்ணிலாவுக்கு முதல் மொட்டை உதயேந்திரனின் குலதெய்வம் சென்னையில் உள்ள பாடிகாட் முனிஸ்வரர் கோயிலுக்கு மொட்டையாகி, இப்போது போடும் மொட்டை அவளுக்கு இரண்டாம் மொட்டை.

ஆனால் பாவம் நம் கிருஷ், இந்திரனுக்கோ.. இதுவே முதல் மொட்டை. சென்னையில் ஒன்றாம் வகுப்பில் படிக்கும் அவர்களுக்கு இந்த முடியால் ஏகப்பட்ட தொல்லைகள் தான்.

அதுவும் அவர்கள் கூட படிக்கும் பிள்ளைகள் இவர்களை பார்த்து… “இரண்டு பேரும் பேன் பாத்துப்பிங்கலா…?”என்று சேது படத்தில் வரும் வசனம் போல் பேச…

அதற்க்கு எதிரொலி வீட்டில் தான் கேட்கும்… இருவரும் ஒரு சேர…. “இந்த முடி வெட்டாம நான் இனி ஸ்கூலுக்கு போக மாட்டேன்.” என்று அடம்பிடித்து நிற்பவர்களை தாஜா செய்து திரும்பவும் பள்ளிக்கூடம் அனுப்பும் வேலை நம் பவித்ரனுடையதாகி விடும்.

இனி பவித்ரன் ஜாதா என்ன கூஜா கூட செல்லாது என்பது போல் இரு பிள்ளைகளும் தீர்த்து சொல்லி விட்டனர்…

“இந்த முடி எடுக்காது அடுத்த இரண்டாம் வகுப்புக்கு கால் எடுத்து வைக்க மாட்டோம்.” என்று.

அது தான் முந்தையது போல் இந்த தடவையும் தன் குழந்தைகளின் முடி இறக்குவதில் ஏதாவது தடங்கள் வந்து விடுமோ என்று பயந்து போய் தான் காயத்ரி கேட்டாள்.

முதல் தடவை முடி இறக்கும் போது முதல் நாள் தான் இந்தியா வர உதய் ப்ளைட் டிக்கட் புக் செய்து இருந்தான். வானிலை காரணமாக அந்த விமானம் ரத்து செய்து விட…

வேணி இந்தியா வர முடியாது போனது. வேணி… “பவி ஆம்பிள்ளை பிள்ளைங்க முடி இருந்தா ஹன் ஈசியா இருக்கும். நான் வெண்ணிலாவுக்கு முதல் மொட்டை போட்டுட்டேன். நீ குழந்தைகளுக்கு முடி இறக்கு. அடுத்த தடவை வெண்ணிலாவோடு முடி இறக்கலாம்.” என்று வேணி எவ்வளவு சொல்லியும் பவித்ரன்…

“நம்ம குழந்தைங்களுக்கு ஒன்னாவே முடி இறக்கனும்.” என்று சொல்லி விட்டான்.

சரி என்று வேணி அடுத்த தடவை விமானத்திற்க்கு டிக்கெட் முன் பதிவு செய்வதை ஒரு வாரம் முன்னவே செய்து இந்தியா வந்து கம்பத்துக்கும் வந்து இறங்கி விட்டாள்.

கம்பத்தில் வந்து இறங்கிய தன் மகளை பார்த்த குஷியில் புனிதா ஆட்டை அடிப்பது. கோழியை சூப்பு வைப்பது. கூடவே இந்த நண்டை சாப்ஸ் வைத்து கொடுப்பது என்று மகளை கவனித்த கவனிப்பில் மாதவிடாய் பத்து நாள் முன்னவே வந்து அவள் கோயில் உள் நுழையக்கூடாது என்ற நிலையில்…

அப்போதும்… “ஏன்டா என் புருஷனை கூட்டிட்டு போய் முடி இறக்கிட்டு வாடா…” என்று வேணி சொன்னதற்க்கு உதயைய் ஒரு பார்வை பார்த்த பவித்ரன்…

“நீ இல்லாது உன் குழந்தைக்கு முடி இறக்குவதா…? அது முடியாது முடியாது.” என்று பவித்ரன் திட்ட வட்டமாய் மறுத்து விட்டான்.

“அவ என் பொண்ணும் தான்டா…” இவர்களின் பேச்சுக்கு நடுவில் போக கூடாது என்று நினைத்தாலும், இவர்கள் பண்ணும் அழிச்சாட்டியத்தை பார்த்து போகாது அவனால் இருக்க முடியவில்லை. அதனால் தன்னையும் மீறி கேட்டு விட்டான்.

“என் வேணி இல்லாம உனக்கு குழந்தை வந்து விட்டதா…?” என்று சொல்லி விட்டு செல்லும் பவித்ரனின் முதுகை பார்த்துக் கொண்டு இருந்தவனின் முகம் கோபத்துக்கு பதிலாய் புன்னகையே நிறைந்து இருந்தது.

அவனுக்கு தெரியாதா…?அவன் வெண்ணிலாவுக்காக எல்லாம் முடி இறக்கும் விழாவை ரத்து செய்யவில்லை. தன் குழந்தைகளின் விழாவுக்கு வேணி இல்லாமல் நடப்பதா…?

அதை மனதில் வைத்து தான் பவித்ரன் அந்த விழாவை ரத்து செய்தான் என்பது அங்கு இருக்கும் அனைவருக்கும் தெரியுமே… இந்த தடவை எந்த வித தடங்களும் வரக்கூடாது என்பது தான் அனைவரின் கவலையாய் இருந்தது.

இதோ சென்னையில் விமானநிலையத்தில் வேணியையும் அவள் மகளையும் பார்க்க ஆவளோடு காத்துக் கொண்டு இருந்தான் பவித்ரன்…

அவன் ஆவளுக்கு குறையாத அன்போடு அங்கு வந்த வேணி… “பவி….” அடுத்த வார்த்தை பேசாது அவன் தோள் சாய்தவளை….

“குட்டிம்மா….எப்படிடா இருக்க…?” என்று பாசத்துடன் கேட்டான். அவன் குட்டிம்மாவின் குட்டியோ இதை ஏதோ படம் பார்ப்பது போல் பார்த்திருந்தாள்.

“நான் நல்லா இருக்கேன். நீ எப்படிடா இருக்க…?” என்று திரும்ப வேணி பவித்ரனை நலம் விசாரிக்க…

இதை எல்லாம் பார்க்க முடியாது தன் லக்கேஜ் மேல் அமர்ந்த உதய்...அடுத்த லக்கேஜ் மேல் தன் குழந்தையை அமர வைத்தான்.

என்னவோ பேசி பார்த்து வருட கணக்காக ஆனது போல இவங்க பில்டப் தாங்க முடியலடா... உதய் எப்போது போல் இதையும் மனதில் தான் நினைத்தான் வெளியில் மூச்ச்ச்ச் தான்.

வேணியிடம் பேச வேண்டியது எல்லாம் பேசி விட்டு, அடுத்து வெண்ணிலா பக்கம் பார்வையை திருப்பிய பவித்ரன் அவளை கொஞ்சோ...கொஞ்சு என்று கொஞ்சி விட்டு போனா போகுது என்று கடைசியாக தன்னை பார்த்த பவி…

“எப்படி இருக்கிங்க மிஸ்டர் உதயேந்திரன்.” கை குலுக்கி நலம் விசாரித்தான்.

ஆ இருக்கேன் இருக்கேன். உன்னை போல வில்லன் எல்லாம் வெச்சிட்டு நான் எப்படி நல்லா இருக்க முடியும் …?என்று மனதில் நினைத்தாலும் வெளியில் தன் பல்லை மொத்தமாய் காட்டி…

“ஓ ரொம்ப நல்லா இருக்கேன் மிஸ்டர் பவித்ரன்.” என்று சிரித்த முகமாகவே சொன்னான்.

இருவரும் வெளியில் சாதரணமாக பேசிக் கொண்டாலும், பவிக்கு வேணியை தினம் பார்க்க முடியாது செய்து விட்டானே இவன் என்று உதயைய் வில்லன் போல் பார்ப்பதும்...உதய் என்னோடு என் ஏஞ்சலுக்கு நீ முக்கியமா…? அவன் இடம் வேறு. தன் இடம் வேறு என்று அவன் அறிவு எடுத்துரைத்தாலும், அவ்வப்போது அவன் இதயம் இவர்களின் அன்பை பார்த்து லேசாக பொறாமை கொள்ளும். அதனால் எப்போதும் இருவருக்கும் ஏழாம் பொருத்தமாக தான் இருந்துக் கொண்டு இருக்கிறது.

அனைத்து நல விசாரிப்புக்கு பின் எப்போதும் போல் பவித்ரன் வேணி குழந்தையோடு கம்பத்துக்கு செல்ல...உதயேந்திரன் தன் இல்லம் நோக்கி சென்றான்.

பரமேஸ்வரர் அதே நிலையில் தான் இருக்கிறார்.தான் எதிரில் நின்றாலும் தன்னை அடையாளம் காண முடியாத நிலையில்...

ஆனால் அதற்க்கு எதிர் பதமாய் அவருடைய பேத்தி அனைவரும் அடையாளம் காணும் விதமாய் தொழிலில் எங்கேயோ சென்று விட்டாள்.

பார்க்க வேணி தந்தையை போல் இருந்தாலும், தொழிலில் சந்திர சேகரின் மகளாகவும் தொழிலில் எதிராளியைய் வீழ்த்துவதில் பரமேஸ்வரரின் பேத்தியாகவும் அந்த குழுமத்தையே தாங்கி நிற்க்கும் தூணாய் கீர்த்தி உயர்ந்து விட்டாள்.

உதய் இந்தியா வந்த அன்று தான் க்ரீஷுக்கும் பிறந்த தினம். அதை ஓட்டியே உதயும் விமானத்திற்க்கு டிக்கட்டை புக் செய்தது.

“உன் தம்பிக்கு வாழ்த்து சொல்ல வர்றியா…?” விமானத்திலேயே வேணியை தன் இல்லத்திற்க்கு அழைத்தான்.

அதற்க்கு மறுப்பாக தலையசைத்த வேணி… “நான் போன்ல பேசிக்கிறேன்.” என்று ஒரே வார்த்தையில் பதில் அளித்து முடித்துக் கொண்டாள்.

“பேபி…” என்று அவன் வெண்ணிலாவை குறிப்பிட… அதற்க்கும் வேண்டாம் என்று தலையாட்டலே உதய்க்கு பதிலாய் கிடைத்தது.

என்ன தான் வேணி உதயேந்திரனை விரும்பி மணந்து மனமொத்த தம்பதியார்களாய் வாழ்ந்தாலுமே...அந்த வீடு, ஜெய்சக்தி ...பரமேஸ்வரர் இவர்கள் வேணிக்கு அலர்ஜி..

வேணி க்ரீஷ் கீர்த்தியிடம் பவித்ரனிடம் பேசுவது போல் தினம் போனில் பேசவில்லை என்றாலும், வாரம் ஒரு முறை அழைத்து பேசிவிடுவாள். பெரியவர்கள் செய்த பாவத்தை பிள்ளைகள் மீது போட கூடாது என்பது அவள் எண்ணம்.

ஜெய்சக்தி தம்பியை பார்த்ததும் …”எப்படிடா இருக்க நல்லா இருக்கியா…?அவ உன்ன நல்லா பார்த்துக்குறாளா…?” என்று கேள்வி கேட்டவள் உதயை பதில் சொல்ல விடாது அவளே…

“அவளுக்கு அவ அம்மா வீட்டு ஆளோடு பேசவே நேரம் போதாது. வீட்ல சும்மா தானே இருக்கா..உனக்கு நல்லா சமச்சி போடலாம்லே...பாரு எவ்வளவு மெலிஞ்சி போயிட்ட….உன்னை கவனிக்கிறதோட அவளுக்கு என்ன வேலை இருக்கு…? என் பொண்ணு போல பிசினஸையா பார்க்குறா…? வெட்டியா வீட்ல தானே இருக்கா… “ எப்போதும் போல் தன் பிரசங்கத்தை ஜெய்சக்தி பேசி முடிக்க...

ஒரு புன்னகையோடு அனைத்தையும் மவுனமாக கேட்டுக் கொண்டு இருந்தான் உதயேந்திரன்…

க்ரீஷ் தான்… “அம்மா போன தடவை வந்ததோடு இப்போ மாமா வெயிட் போட்டு தான் இருக்கார்.” என்று சொல்லி விட்டு தன் அன்னையிடம் முறைப்பையும் வாங்கி கொண்டான்.

க்ரீஷ் சொன்னது போல் ஐந்து கிலோ ஏறி தான் இருக்கிறான். ஆனால் ஜெய்சக்தி சொன்னதற்க்கு எதுவும் எதிர்த்து பேச மாட்டான். வேணியின் மனதுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறானோ…

அதே போல் தான் தன் சகோதரியின் மன ஆதாங்கத்தையும், அறிந்தவனாய் அவள் பேச்சுக்கு எதிர் பேச்சு பேசாது அனைத்தையும் ஒரு புன்னகையோடு கேட்டுக் கொள்வான்.(குடும்பஸ்தன் ஆகிவிட்டான்ல.)

அன்று மாலை க்ரீஷ் பிறந்த நாள் விழாவில் க்ரிஷ் பிரன்ட் அனைவரும் வந்து இருந்தனர்...வந்தவர்களை பார்த்த உதய் க்ரீஷ் அருகில் போகும் போது அவன் போனில்…

“ஆ சரிக்கா...சரி நான் ஒழுங்கா நடந்துக்குறேன். ம்...நல்லா படிக்கிறேன்.” அந்த பக்கம் கேட்ட கேள்விக்கு பவ்யமாய் பதில் அளித்துக் கொண்டு இருந்தான் க்ரீஷ்..

போனை அணைக்கும் வேளயில்.. “அக்கா தேங்ஸ். கிப்ட் எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்குக்கா…” என்று ஒரு புன் சிரிப்போடு போனை அணைத்தான்.

போனில் வேணி என்று தெரிந்தமையால் யார் என்று கேட்காது வந்த அவனின் நட்பு வட்டத்தை காண்பித்து…

“ஏன்டா உனக்கு பாய் பிரண்டே இல்லையா…?” என்று உதய் கேட்டதற்க்கு…

“அக்கா அப்பா போல் தாத்தா போல் இருக்கா... நான் என் மாமன் போல் இருக்கேன் அவ்வளவு தான்.” என்று சொன்னதோடு அங்கு சென்று கொண்டு இருந்த ஒரு பெண்ணை நோக்கி “ரம்யா…” என்று அழைத்துக் கொண்டே அவளிடம் சென்றான்.

“ம்ம் இருடா இரு. என்னை போல் ஒருத்தி வரும் வரை தான் இது எல்லாம்.” என்று சுகமாகவே தன் மனையாளை நினைத்து மகிழ்ச்சியோடு சென்னையில் தன் வருகையை முடித்துக் கொண்டு…

நாளை விழாவுக்காக இன்று தன் அக்காவின் இரு பிள்ளைகளோடு கம்பத்தை நோக்கி சென்றான்…

குலதெய்வ ம்கோயிலில் முறைப்படி பொங்கல் வைத்து மூன்று குழந்தைகளுக்கும் முடி இறக்கியது காது குத்தும் விழாவும் அமர்க்களமாய் நடந்து முடிந்தது.

மொட்டை தலையோடு வெண்ணிலா காது குத்திய வலி பொறுக்க முடியாது அழுதுக் கொண்டு இருக்க..அவளின் இருப்பக்கமும் கிருஷ்...இந்திரன் அவளின் கண்ணீரை துடைத்து விட்டு…

“பாப்பூ அழாதே இந்தா இந்த மிட்டாய் சாப்பிடு வலி தெரியாது.” என்று அவளின் அழுகாது இருக்க என்ன என்னவோ செய்து ஒரு வழியாக வெண்ணிலாவின் அழுகையை நிறுத்தி விட்டனர்…

இதை பார்த்த அனைவருக்கும் தோன்றியது இது தான் .அடுத்த நட்பு தொடங்கி விட்டது.

நிறைவு




















 
Active member
Joined
May 11, 2024
Messages
123
அருமையான அழகான கதை நிறைவு அருமை 👌👌👌👌👌👌👌👌👌🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
 
Top