Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

M.M.M. 12

  • Thread Author
Chapter…12

சுப்ரஜாவின் மகள் பவித்ரா.. தன் படிப்பு முடித்ததுமே தன் தந்தையிடம் கூறி விட்டாள்..

“நான் உங்களுடன் வந்து விடட்டுமா…?” என்று.. பவித்ராவின் தந்தை மகேஷ் இப்போதும் வெளி நாட்டில் தான் வேலை பார்க்கிறார்..

தன் பெற்றோர்களை தன் தங்கை வீட்டில் விட்டு விட்டு.. தங்கையும் அவள் கணவனுமே நல்ல மாதிரியாக தான் மகேஷ் பெற்றோர்களை கவனித்து கொள்கின்றனர்.. அதற்க்கு காரணம் பாசமா என்றால் கிடையாது..

தங்கை இப்போது இருக்கும் அந்த வீடு மகேஷ் உடைய சொந்த வருமானத்தில் வாங்கிய வீடு.. அதே போல் மாதம் மாதம் ஒரு பெரும் தொகையை பெற்றோர்களின் பராமரிப்பு செலவுக்கு என்று தங்கைக்கு அனுப்பி வைக்கிறான்.. இந்தியா வராது..

அதனால் மகேஷ் மகளிடம் பேசுவது கூட பேசியில் மட்டும் என்ற நிலையில் தான்.. தந்தையும் முன் மாதிரி உடல் நிலை இல்லை.. நான் இந்தியாவிலேயே வந்து விட போகிறேன்.. அப்போ என்னோடு வந்து விடு.” என்று கூறி இருக்கிறார்..

அதை தன் காதலன் விகாஷிடம் கூறிய போது.

“நீ உன் அப்பா கூட இருந்தால், இது ஒகே போல் தோன்றுக்கிறது.. உன் அப்பா உன் அம்மா போல வேறு கல்யாணம் செய்து கொள்ளவில்லை தானே…” என்று விகாஷ் சொன்ன போது பவித்ராவின் முகம் வாடி போயிற்று..

பவித்ரா முகம் தன் பேச்சில் வாடியது தெரிந்தும் விகாஷ்..”பிராக்ட்டிக்கலா யோசி பவி.. நாங்க டெல்லியில் இருந்தாலும் அம்மா ஊர் கிராமம்.. இன்னுமே எல்லாம் பார்ப்பாங்க.

ஒரு பழமொழி கூட அடிக்கடி சொல்வாங்க தாயை போல் பிள்ளை நூல போல சேலை என்று உன் அப்பாவை பிரிந்ததுக்கு காரணம் அவங்களுடைய எக்ஸ் லவ்வரை பார்த்தது தான் என்று தெரிந்தால், இந்த ஜென்மத்துக்கு நம்ம லவ்வை என் வீட்டில் ஒத்து கொள்ள மாட்டாங்க. இப்போ நீ மேஜர்..

நீ யார் கூட இருக்கனும் என்று முடிவு செய்வது உன் விருப்பம். நீ உன் அப்பா கூட இருந்தால், நான் என் வீட்டில் பேசி சம்மதம் வாங்குவது எளிதாக இருக்கும்.” என்று விகாஷ் அவன் தரப்பு நியாயத்தை கூறினான்..

அதன் பின் பவித்ரா. வீட்டில் ஒரு பிரச்சனையை ஆரம்பித்து வைத்தாள்..

எப்போதும் போல் தான் சந்தானம் நடந்து கொண்டார். திண் பண்டம் முதல் சமையல் வரை காவ்யாவுக்கு பிடித்தது போல் தான் அந்த வீட்டில் நடந்தது..

ஆனால் தன் மனதில் புகைபவள்.. இல்லை அம்மாவிடம் பாருங்க என்று சொல்பவள்.. இன்று சந்தானத்திற்க்கு நேராக கேட்க ஆரம்பித்து விட்டாள்..

முதலில் சந்தானமும்.. “நான் எப்போதும் போல் தானே செய்யிறேன்..” என்று தான் கூறினார்..

அதற்க்கு ..”அப்போ நான் சின்ன பென்.. இப்போ நானும் சம்பாதிக்கிறேன்..” என்று எதிர்த்து கேட்டாள்..

பவித்ரா இப்போது எல்லாம் சந்தானத்தை டாடி என்று அழைப்பது இல்லை.. அதை சுப்ரஜா கவனித்தாளோ இல்லையோ.. சந்தானத்திற்க்கு பவித்ராவின் அந்த மாற்றம் நன்றாகவே தெரிந்தது..

அதனால்.. “நீ சம்பாதித்தாலுமே இன்னும் இந்த வீடு என் சம்பாதியத்தில் தான் நடந்து கொண்டு இருக்கு. அதே போல் நீ சம்பாதிக்க உதவும் இந்த வேலையும் நான் உனக்கு கொடுத்த படிப்பின் மூலம் தான் கிடைத்து இருக்கு.. நான் என் சொந்த பெண் படிப்புக்கு கூட கொடுக்காத பணத்தை உனக்கு செலவு செய்து இருக்கிறேன்..” என்றதும்.. இது வரை கணவனுக்கு பேசுவதா மகளுக்கு பேசுவதா என்று இருந்த சுப்ரஜா கணவனின் இந்த பேச்சில்..

“என்னங்க.. பெண் படிப்புக்கு செலவு செய்வதை சொல்லி காட்டுறிங்க..?” என்று சுப்ரஜா சந்தானத்திடம் கேட்கும் போது பவித்ரா..

“நான் தான் அவர் சொந்த மகள் இல்லையே அம்மா… சொந்த மகள் இல்லாத பெண்ணை பார்க்கும் பார்வையும் வேறு மாதிரி தான் இருக்கும்..” என்ற பவித்ராவின் இந்த பேச்சில் சந்தானம் அதிர்ந்து போய் விட்டார்..

இந்த பெண் என்ன சொல்கிறது என்பது போல்.. சுப்ரஜாவுக்கோ பதட்டம்..

“லூசு மாதிரி பேசாதே… அப்பா அப்படி இல்ல.” என்று இரு வேறுப்பட்ட மனநிலையில் தான் கேட்டது.

அதற்க்கும் பவித்ரா.. “அப்பா அப்படி இல்ல தான்.. ஆனால் இவர் எனக்கு அப்பா கிடையாது தானே..” என்று ஏதோ செய்து பவித்ரா தன் தந்தையுடன் சேர்ந்து கொண்டாள்..

பாவம் தந்தையோடு போவது தவறு கிடையாது.. அதுவும் தன் எதிர்கால வாழ்வுக்கு நல்லது என்று படும் போது போவது தவறு இல்லை.. ஆனால் பழியை சந்தானத்தின் மீது போடாது தந்தையிடம் பவித்ரா சேர்ந்து இருக்கலாம்..

அதுவும் அடுத்த மாதம் மகேஷ் இந்தியா வருகிறார் என்று தெரிந்ததும்.. ஒரு மாதம் முன் வீட்டில் இப்படி செய்து விகாஷ் முன் ஏற்பாடு செய்து இருந்தஆஸ்ட்டலில் அந்த ஒரு மாதத்திற்க்கு தங்கியவள் தந்தை வந்ததும் தந்தையோடு இணைந்து கொண்டாள்.. பவித்ராவுக்கு அடுத்து தன் காதல் கை கூடுவதில் சுலபமாக ஆகி விட்டது..

ஆனால் சந்தானத்திற்க்கு தான் அடுத்து சுப்ரஜாவுடான வாழ்வு நரகம் போல் சென்றது..பவித்ரா அன்று அப்படி பேசிய போது..அவர் அப்படி இல்லை என்று அடித்து பேசாத மனைவியிடம் அவரால் சரியாக பேச முடியாது போயிற்று..

அதுவும் தன் மகள் வயது.. உறவும் மகள் உறவு அப்படியா நான்..?” என்று மனது குமுறலில் ஒரு நாள் தன் நண்பனிடம் சொல்ல..

“இப்போ எல்லாம் சொந்த மகளை கூட விட்டு வைக்க மாட்டேங்குறாங்க.இதுல ஸ்டெப் பாதர். உன் சைட் இன்னும் வீக் ஆக்க.. உன்னுடைய இந்த மேரஜே போதுமே சந்தானம்..” என்ற நண்பனின் பேச்சில் சந்தானத்திற்க்கு மற்றது எல்லாம் மறந்து சொந்த பெண்ணையே என்ற அந்த வார்த்தையில் தன் மகள் இளந்தமிழ் நியாபகத்திற்க்கு வந்தாள்.

அடுத்து அவரால் டெல்லியில் நிம்மதியா உறங்க முடியவில்லை.. தன் பக்கத்தில் படுத்து உறங்கும் காவ்யாவை பார்க்கும் போது. அந்த பெண் யார் பக்கத்தில் படுத்து உறங்கி இருப்பாள்..

எட்டு வருடம் முன் சின்ன பெண் தானே தனியே உறங்கி இருக்க மாட்டாள்.. அம்மாவுடன் என்றால் பரவாயில்லை.. வேறு யார் பக்கத்திலாவது என்று எதேதோ யோசித்து தான் சென்னைக்கு வந்து விட்டார்.. வேலை விசயம் என்று சுப்ரஜாவிடம் பொய் சொல்லி விட்டு..

சந்தானம் சென்னையில் ஒரு வாரம் தங்கி அவர் சேகரித்த விசயம்.. மகளின் பேசி எண்.. அவளின் திருமணம்.. அதுவும் அவசரகத்தியில் அதே தெரு பையனுடன் என்றதில் பயந்து விட்டார்..

படிப்பு முடிக்காத பெண்ணுக்கு எதற்க்கு இந்த அவசர திருமணம் என்றதில் தான் தன் மகளுக்கு அழைத்து பேசியது..

ஆனால் அதுவே பாவம் இங்கு மகளுக்கு வினையாகி போனது.. ஆம் வினையாக தான் போய் விட்டது..

அதுவும் இளந்தமிழ் எதை நினைத்து எந்த உறவை நினைத்து வீரவேலோனை மணந்து கொண்டாளோ.. அது எல்லாம் ஒன்னும் இல்லை என்று ஆவது என்பது ..கொடுமை தானே..

வீரா இளந்தமிழை மருத்துவமனையில் பார்த்து கொண்டதோடு விடாது வீட்டிற்க்கு வந்த பின்னும் வீரா தான் மனைவியை பார்த்து கொண்டது.

காரணம் அவன் அம்மா பவானியும் தமிழை பார்த்து கொள்ள முன் வரவில்லை.. தங்கை நயனிக்காவும் முன் வரவில்லை..

ட்ரவல்ஸை வீட்டில் இருந்தே பேசியின் மூலம் கவனித்து கொண்டான்.. அதற்க்கும் பவானி.

“அதை நம்பி தான் தம்பி நம்ம பிழைப்பு இருக்கு.. அதை பார்க்காது வீட்டோடு இருந்தால் எப்படி.? அதுவும் தங்கைக்கு கல்யாணம் செய்யனும்.. அது எல்லாம் உனக்கு நியாபகத்தில் இருக்கா.என்ன.?” உன்னை நம்பி தான் அவர் விட்டுட்டு போனார்..” என்று அங்கு புகைப்படத்தில் இருந்த கணவனின் புகைப்படத்தை பார்த்து கூறினார்..

இது என்ன புதுசா என்பது போல் தான் வீரா அம்மாவை பார்த்தது.. தந்தை இறந்ததுமே.. யாரும் சொல்லாது தானே தன் படிப்பை கூட முடிக்காது அவன் பார்த்து கொண்டது.

தங்கை திருமணம்.. அதற்க்கு அனைத்துமே செய்து விட்டேன் என்று தெரியும் தானே.. அப்பா இருந்த போது இருந்ததை விட இப்போது நல்ல மாதிரியாக தானே இப்போது நான் வைத்து கொண்டு இருக்கிறேன்..

இதை எல்லாம் மனதில் நினைக்கவில்லை கேட்டு விட்டான்.. எப்போதும் வீரா மனதில் ஒன்று வைத்து வெளியில் ஒன்று பேசும் பழக்கம் கிடையாது.. எதுவும் வெளிப்படையாக பேசி தான் வீராவுக்கு பழக்கம்.. அதே பழக்கத்தில் தான் பேசியது.

ஆனால் பவானி அதை.. “கல்யாணம் ஆனதில் மாறி விட்ட. செய்வதை சொல்லி காட்டுறியா…? அதுக்கு தான் கல்யாணம் ஆகும் வயதில் பெண் இருந்தால், பெண்ணுக்கு கல்யாணம் செய்த பின் பையனுக்கு செய்யனும் என்று சொல்றாங்க போல..” என்று தன் அறையில் படுத்து இருந்த மருமகள் இளந்தமிழை பார்த்த வாறே கூற.

வீரவேலோனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.. தான் என்ன சொன்னால் இவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது போல் பார்த்தவன்.. அடுத்து எதுவும் பேசவில்லை.. பேசினால் தவறாக போய் விடும் என்பது ஒரு காரணம் என்றால் மற்றோரு காரணம்.. வீட்டிற்க்கு தெரியாது இளந்தமிழை திருமணம் செய்து கொண்டது தவறு தானே.

அதுவும் தன்னை மட்டுமே நம்பி இருக்கும் குடும்பத்ற்க்கு சொல்லாது செய்தது. இவர்களுக்கு ஒரு பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கி இருக்க கூடும்.

அதனால் தான் நயனியும் அம்மாவும் இப்படி நடந்து கொள்கிறார்கள்.. அதுவும் நயனி இளந்தமிழ் மீது எவ்வளவு பாசமாக இருந்தாள்.. அதோடு தங்கள் விசயம் தமிழ் சொல்லவில்லை என்ற கோபம் இருக்கும் .. தங்கள் விசயம் தான் ஒன்றும் இல்லை என்று நயனிக்கு தெரியாதே என்று அவன் எதுவும் பேசவில்லை..

ஆனால் இதை அனைத்துமே கேட்டு கொண்டு அந்த வீட்டிற்க்கு வந்த இளந்தமிழ் வீட்டினர் அமைதியாக இருக்கவில்லை.

அதுவும் தாமரையின் இரண்டு நாட்களாக சாப்பிடாது.

“என் மகள்..” என்று புலம்பி கொண்டு இருக்க சுகன் கார்முகில் சந்திரமதி அனைவரும்..

“ஒன்னும் நடக்காது மாப்பிள்ளை நல்ல மாதிரியாக தானே இருக்கார்.. அவர் பார்த்து கொள்வார்.” என்று எவ்வளவு சமாதானம் செய்தும் தாமரை சமாதானம் ஆகிவில்லை என்பது தான் உண்மை..

அதோடு இளந்தமிழின் தந்தை மகளை பேசியில் அழைத்து இருக்கிறார். இது எல்லாம் சேர்ந்து தாமரையை நிலை இழக்க செய்து விட்டது.

இன்று எழுந்ததில் இருந்தே தாமரை..தன் அண்ணன் அண்ணியிடம்..

“வாங்க தமிழை பார்த்துட்டு வரலாம்.. என்னை மட்டும் பார்த்தா மாப்பிள்ளை அம்மா ஏதாவது சொல்ல போறாங்க.. என்று இருக்கு “ என்று அடம்பி பிடித்து தான் தாமரை தன் அண்ணன் குடும்பத்தை வீரா வீட்டிற்க்கு அழைத்து வந்தார்..

வந்தவர்கள் காதில் பவானி பேசியது அனைத்தும் கேட்டது மட்டும் அல்லாது அதற்க்கு வீரா எதுவும் பேசாது அமைதி காத்தது பெண் கொடுத்தவர்களுக்கு ஏற்புடையதாக இல்லை..

சுகனுக்குமே பிடிக்கவில்லை பவானியம்மாவின் பேச்சு.. அதிலும் நயனி இதை ஆதரிப்பது போல் அம்மா பேசுவதை கேட்டு கொண்டு இருப்பதும் பிடிக்காது போனது.

அதனால் தமிழுக்கு தாய் மாமன் என்ற முறையில் வீட்டிற்க்கு பெரியவராய்.. பவானியிடம்..

“நான் எங்க வீட்டு பெண்ணை என் வீட்டிற்க்கு கூப்பிட்டு போறேன் சம்மந்தியம்மா.. நீங்க உங்க வீட்டு பெண்ணுக்கு திருமணம் செய்த பின் சொல்லுங்க.. நான் எங்க வீட்டு பெண்ணை அனுப்பி வைக்கிறோம்..



ஆனால் அதுவும் இந்த முறை முறையாக ஊர் கூட்டி ஒரு வரவேற்ப்பு போல் வைத்த பின் தான் இங்கு அனுப்புவதாக இருக்கோம்..” என்று சொன்னவரின் பேச்சுக்கு பவானி அமைதியாகி நின்று விட.

வீரா தான் கார் முகிலனிடம். “என்ன அங்கிள். தமிழ் இங்கேயே இருக்கட்டும்.. நான் பார்த்து கொள்கிறேன்..” என்று சொல்லியும் கேட்காது ஒரே பிடியாக நின்று தான் தங்கள் வீட்டு பெண்ணை கூட்டி கொண்டு சென்றது..

தமிழாவது அங்கு போக மறுப்பாள் என்று வீரா எதிர் பார்க்க.. தமிழ் மறுப்பது என்ன..? தாய் மாமன் சொன்ன உடனே.. அவர்களோடு கிளம்பி விட்டாள்.. இந்த கிளம்பல் வீராவை பிடிக்காது கிளம்பி விட்டாளா..? பாவம் பெண்ணுக்கு தெரியவில்லை..

இது வரை விளையாட்டாக இருந்த பெண்.. இன்னும் படிப்பு கூட முடித்து இராதவள்.. தன்னை சுற்றி நடந்த அந்த சதியை தெரிந்து கொண்ட உடன்.. ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அப்போது அவள் மனதி இருந்தது.. இதை தடுக்க வீராவை திருமணம் செய்தால் போதும்.. இது தான் அவள் எண்ணம்..

ஆனால் அதை செயல்படுத்த இவ்வளவு கடினமாக இருக்கும் என்று அவள் எதிர் பார்க்கவில்லை.. பவானி யம்மா முதலில் நன்றாக பழகியது பின் மகளுக்காக தன்னை கோவித்து கொண்டது.

வீட்டில் ஒரு பெண் காலையில் இருந்து சாப்பிடாது இருக்கிறாள்.. குறைந்த பட்சம் சாப்பிடாவது அழைத்து இருக்கலாம். என்று தலை வலியில் உழன்று கொண்டு இருந்தவளுக்கு அவள் தந்தையின் பேசியின் அழைப்பு எதை பற்றியும் யோசிக்காது தன் நிலை தவறி மயக்க நிலைக்கு சென்று விட்டது..

அதோடு மருத்துவமனையில் பவானியம்மா தன் தந்தை உயிரோடு இருப்பது தெரிந்து பேசிய பேச்சு என்று இருந்தவளுக்கு மருத்துவமனையில் உடல் நிலை பரவாயில்லை என்று வந்தவளுக்கு வீட்டில் மீண்டும் தலை வலி ஆரம்பம் ஆகி விட்டது போல் தோன்றியது..

காரணல் ஹாலில் தாய் மகன் உரையாடல்கள் எல்லாம் அவள் காதில் விழுந்து கொண்டு தான் இருந்தன.

அதுவும் அவள் இப்போதும் பவானியின் அறையில் தானே படுக்கிறாள்.. பவானியின் தொடர் பேச்சு அவளின் தலை வலி இன்னும் கூட்ட தான் செய்தது..

அதனால் மாமா அழைத்ததுமே அவர்களோடு கிளம்பி விட்டாள்.. அவளுக்குமே தனிமையில் நிறைய யோசிக்க வேண்டி இருந்தது..

தமிழ் தன் தாய் மாமன் குடும்பத்தோடு தன் வீட்டை விட்டு செல்வதை மனது பாரத்துடன் பார்த்து கொண்டு இருந்தவன்.. அதற்க்கு மேல் அங்கு இருக்க முடியாது தன் அறைக்குள் புகுந்து கொண்டான்.

இது என்ன இன்னும் உனக்கு வலி இருக்கிறது பார் என்பது போல் இளந்தமிழ் ஏன் தன்னை அவ்வளவு அவசரமாக திருமணம் செய்து கொண்டால் என்பது அவள் வாய் வழி மூலம் கேட்க நேரிடும் போது.. உயில் வலி என்பது இது தானா என்று அனுபவத்தில் உணரும் நாள் தொலைவில் இல்லை என்பது தெரிய வந்தால்.




 
Top