Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

M.M.M....14

  • Thread Author
Chapter….14

சுகன் நயனிக்கு அனுப்பிய மெசஜ்..” மொட்டை மாடிக்கு வா” என்பதை பார்த்த உடன் தன் அறையை விட்டு வெளி வந்த நயனி தன் அன்னை படுத்திருந்த அறையை திறந்து பார்த்தவள்..

அவர் தூங்கி கொண்டு இருக்கிறார் என்பதை உறுதி செய்த பின் மெல்ல மாடிக்கு சென்றாள்..

மாடியில் பக்கத்து வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்திருந்த சுகம் நயனியின் கொலுசு சத்தத்தில் எட்டி பார்த்து விட்டு வருவது நயனி தான் என்று உறுதியான பின்.. வீராவின் மாடிக்கு குதித்தவன் தரையில் அமர்ந்தவன் அவளையும் தரையில் அமர சொன்னான்..

“அப்போது தான் யாராவது அவர்கள் வீட்டு , மாடிக்கு வந்தாலும் நம்மலை பார்க்க முடியாது..” நயனி காரணம் கேட்டதற்க்கு சொல்ல..

ஒரு மாதிரி முகத்தை திருப்பி கொண்டு தான் “இதை எல்லாம் விவரமா செய்ங்க.. ஆனா விவரமா இருக்கிறதில் கோட்டையை விட்டு விடுங்க.. “ என்று முனு முனுத்து கொண்டே தான் அமர்ந்தாள்..

சுகன்.. “நாம இதே பிரச்சனையை பேசிட்டே இருந்தால் இதுக்கு ஒரு விடிவு வராது நயனி.”

எப்போதும் அதாவது வீரா தமிழ் திருமணம் நடந்ததில் இருந்து இதுவே பேசி கொண்டு இருக்கும் எரிச்சலில் கொஞ்சம் சத்தமாகவே கடிந்து கொண்டான்..

மொட்டை மாடியில் இருந்த அறையில் கண் மூடி படுத்து கொண்டு இருந்த வீராவின் காதிலும் கொலுசு சத்தம் கேட்டது தான்.. அவனுக்குமே நயனி வருகிறாள் என்று தெரிந்தது தான்.. துணி காய வைக்கவோ.. இல்லை காய்ந்த துணியை எடுக்கவோ வந்து இருப்பாள் என்று நினைத்தவன் மூடிய கண்ணை திறக்கவில்லை..

பின் எந்த சத்தமும் கேட்கவில்லை.. காரணம் இருவரும் மெல்ல குசு குசு என்று தான் பேசினார்.. ஆனால் சுகனின் இந்த பேச்சு வீராவின் காதில் நன்றாகவே விழுந்தது.. அதுவுன் அவன் நயனி என்று சொன்னதுமே.

அப்போது தான் வீராவுக்கு தன்னுள் உழன்டு கொண்டு இருந்த மூளை கொஞ்சம் விழித்து கொண்டது..

தான் வரும் போது சுகன் பக்கத்து வீடு மாடி ஏறியது என்று யோசித்தவனுக்கு அப்படி இருக்குமா..? என்று அதிர்ந்து தன் கட்டிலில் இருந்து எழுந்து அமர்ந்து கொண்டான்..

இங்கு இவர்கள் இருவருமே அடுத்து மெல்ல எல்லாம் பேசவில்லை.. சுகன் அப்படி கத்ததியம் அவளுமே.. “கத்து நல்லா கத்து.. நாம இதுக்கு மட்டும் தான் லாயக்கி.. என்ன என்ன திட்டம் போட்டு என்ன பிரயோசனம்..” என்று தாங்கள் போட்ட திட்டம் அனைத்தையும் அவள் வாய் வழி மூலமாகவே வாக்கு மூலம் கொடுப்பது போல் சொன்ன நயனி.

பின்.. “ஆனா பார் உன் அத்தை பெத்த ரத்தினம். ஒன்னும் தெரியாத குழந்தை போல முகத்தை வைத்து கொண்டு.. நம்ம திட்டம் தெரிந்த அடுத்த நொடி என்னம்மா காய் நகர்த்தி விட்டா..” என்று வெடித்து சிதறியவளையே பார்த்து கொண்டு சுகன் இருந்தான் என்றால், கேட்டு கொண்டு வீரா இருந்தான்.. அதுவும் அதிர்ந்து என்று ஒரு எளிய வார்த்தையில் சொல்லி விட முடியாத படி அப்படியே கண் தெரிக்க அமர்ந்திருந்தான்..

அவள் தன்னை ஏன் இவ்வளவு அவசரமாக அதுவும் அன்றே திருமணம் செய்ய கேட்டாள் என்று என்ன என்னவோ காரணங்கள் யோசித்தான்.. ஆனால் இது போல் ஒரு காரணம் இருக்கும் என்று அவன் நினைத்தும் பார்க்கவில்லை..

நயனி சுகனின் திட்டத்தை கேட்டும் அவனுக்கு அப்படி ஒரு அதிர்ச்சி. இது என்ன இவர்கள் காதல் செய்தார்களா.. ? இல்லை நாசவேலை செய்ய சதி திட்டம் தீட்டினார்களா..? வீரா இப்படி தான் நினைத்தான்..



ஒரு பக்கம் இப்போதைய நிலையான நயனி சுகனை பற்றி வருந்தினாலும், இவர்கள் இளாவுக்கு செய்ய நினைத்ததும் சரியில்லையே.. என்றும் நினைத்தான்..

அதுவும் நயனி அடுத்து பேசிய.” என்ன எப்போவும் நான் உன் அத்தை பெண்ணுக்கு தெரியும் என்று சொன்னா. இல்ல அப்படி இல்ல என்று என்னை அடக்குவ. இன்னைக்கு அமைதியா இருக்க. என்ன உனக்கும் பல்பு எரிந்து விட்டதா..?” என்று கேட்டதுமே.

சுகன் நயனியின் அந்த எகத்தாள பேச்சை விடுத்து. தமிழ் சமையல் அம்மாவிடம் நல்ல பெயர் இரண்டையும் கூறிய சுகன். அதுல எனக்கு சந்தேகம் தான்..

அப்பாவுக்கும் அம்மாவுக்கும் தமிழ் வீராவை லவ் பண்ணியதில் சந்தேகம்.. உன் அண்ணன் தான் ஏதாவது மிரட்டி.” எனும் போது நயனி அவனை முறைத்து.

“எனக்கு நல்லா வாயில் வருது சுகன்.. ஆனா ஒன்னு நம்ம காதல் எத்தனை வருஷ காதல். இதோ நம்ம கல்யாணம் நடக்குமா..? நடக்காதா..? இந்த முறை மாறியதில் குழம்பி போய் இருக்கும் போது கூட நீ என்னை நினைத்து இப்படி சோகமா இல்ல.. ஆனா என் அண்ணன்.. தமிழ் இங்கு இருந்த போன நாளில் இருந்து.. யப்ப யப்பா.. நீயும் இருக்கியே.” என்று சொல்லி சுகனின் தலையில் கொட்டவும் செய்தாள்..

சுகனோ.. அவள் கொட்டியதை சட்டை செய்யாது.. “அப்போ லவ் பண்ணி இருப்பாங்க தானே..” என்று அதுலேயே குறியாக கேட்டான்..

“இல்ல இல்ல லவ் எல்லாம் பண்ணல ..அது எனக்கு கண்டிப்பா தெரியும்.. ஆனா என் அண்ணாவுக்கு தமிழை பிடித்து இருக்கு… அது லவ்வா தெரியல.. “ என்று சொன்னவளின் பேச்சை கேட்ட சுகன்.. இவளிடம் பேசி தெளிவு பெறலாம் என்று வந்தால் இவள் இன்னும் தான் தன்னை குழப்பி விடுகிறாள் என்று நினைத்தவன் அதை சொல்லியும் விட்டான்..

அதற்க்கு நயனி.. “மத்தது எது என்று எனக்கு சரியா தெரியல சுகன்.. ஆனா நாம அன்னைக்கு பேசிட்டு இருந்ததை கேட்டுட்டு தான் என் அண்ணாவை அவசரமா மேரஜ் செய்து இருக்கா.. நீங்க எனக்கு அண் சொல்லவே ஒரு மாதிரி இருக்கு சுகன்.நம்மல எங்கு நிற்க வைத்து இருக்கா பார்.” என்று அடி தொண்டையில் கத்த.. அவள் முன் வந்து நின்றவரை பார்த்து நயனி சுகன். அதிர்ந்து எழுந்து நின்றவர்கள்..

நயனி. “அ…ம்மா.” என்று அதிர்ந்தாள் என்றால் சுகனுக்கு வார்த்தை வரவில்லை.. அதுவும் மொட்டை மாடியில் இருந்த அறையில் இருந்து வெளி வந்த வீராவை பார்த்து இன்னும் அதிர்ந்து என்பதை விட.. வெல வெலத்து போய் விட்டனர் என்று தான் சொல்ல வேண்டும்.

அதிலும் சுகன் கூனி குறுகி போய் விட்டான்.. இவர்கள் தாங்கள் பேசியதை கேட்டு விட்டார்களா..? என்று பயந்ததை விட கேட்காது இருந்து தாங்கள் இப்படி தனிமையில் அமர்ந்து இருப்பதை பார்த்து தவறாக நினைத்து விட்டாள் என்ற பயம் தான் அவனுக்கு அதிகமாக இருந்தது..

ஆம் கேட்டு இருந்தாலும் பரவாயில்லை என்று தான் நினைத்தான்.. காரணம் அதே முறை குழறுபடி தான்.. ஆனால் கேட்டு இருக்கிறார்கள் என்பது நயனியின் அம்மா அவர் நயனியை அடித்த அடியிலும், பேசிய பேச்சிலும் தெரிந்து கொண்டான்..

“என்ன என்ன டீ காரியம் செய்து வைத்து இருக்க.. நான் கூட அந்த பொண்ணு மேல பாசம் என்று நினைத்தேன்.. கோலம் போட கத்துக்குறேன்.. சமையல் சொல்லி கொடுங்க எனும் போது எல்லாம் பரவாயில்லை நம்ம பொண்ணுக்கு பொறுப்பு வந்துடுச்சி நினச்சேன்.அதை எல்லாம் விட.. இந்த வீடு வாங்கியது.. ஒராண இரண்டான சமாச்சாரமா வீடு வாங்குவது.. அவனின் உழைப்பு டி அவனின் உழைப்பு.. நான் கூட கூட பழகிய பெண்ணின் அண்ணாவை அவளுக்கு தெரியாம பழகி கல்யாணம் செய்து கிட்டா என்று வருத்தம் இருந்தது டி.. ஆனா நீ செய்ததுக்கு இதோ உங்களை நல்லா புலம்ப விட்டு இருக்கா பாரு. அவள் செய்தது சரி தான்டி.” என்று விட்டு வீராவை பார்த்தார் பவானி..

வீராவின் முகமும் இன்னதென்று சொல்ல முடியாத ஒரு பாவனையை காட்டியது.. “ அவள் எதுக்கு என்னை கல்யாணம் செய்தா என்று எனக்கு தெரியாதும்மா ஆனா.. இன்னைக்கு தாலி கட்டினா தான் இல்ல. என்னைக்கும் வேண்டாம் என்று சொன்னதுமே.. என் கை தாலியை எடுத்து விட்டதுமா…

பிடிச்சி தான் மா தாலி கட்டினேன்.. அதுவும் அவளும் என்னை போல.” என்ற வீரா பேச ஆரம்பிக்கும் போதே.. பவானி.. “வீரா.” என்று அதட்டியதில் தன் நிலைக்கு வந்து விட்ட வீரா.

சுகனை பார்த்து. “நீங்க வீட்டிற்க்கு போங்க சுகன்… நான் உங்க வீட்டிற்க்கு வந்து பேசிக்கிறேன்..” என்றதும் சுகன் என்ன பேச போறிங்க என்று கூட கேட்காது சென்று விட்டான்..

ஆனால் இனி எது நடந்தாலும் பரவாயில்லை என்ற மனநிலையில் தான் சுகன் இருந்தான்..

என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று நினைத்தான் தான்,. ஆனால் இப்படி ஒரு ஒன்றை அவன் எதிர் பார்க்கவில்லை.

மறு நாள் வீரா தன் அன்னையோடு தன் வீட்டிற்க்கு வந்ததும்.. சுகனுக்கு அதிர்ச்சி தான்.. நேற்று நடந்து சொல்ல போகிறார்களா. என்று..அதுவும் நயனியும் தானும் திட்டம் போட்டது மட்டும் தன் அப்பாவுக்கு தெரிந்தாள் அவ்வளவு தான் என்று பயம் இருந்தாலுமே, எது என்றாலும் எதிர் கொண்டு தான் ஆக வேண்டும் என்று ஒரு முடிவோடு தான் அவனுமே அவர்களை வர வேற்றது.

சுகனின் அன்னை சந்திரமதி.” வா..” என்று அழைத்தாலுமே, அந்த குரலில் அவ்வளவு சுரத்து இல்லை என்று தான் சொல்ல வெண்டும்..

ஆனால் கார்முகில்..
“வாங்க சம்மந்தி.. வாங்க மாப்பிள்ளை..” என்று அவர் வர வேற்ப்பில் ஒரு குறையும் சொல்ல முடியாது தான் இருந்தது.. காரணம் தன் வீட்டு பெண் வாழ போகிற இடம் என்ற எண்ணம்..



தன் தங்கையின் வாழ்க்கை தான் தோற்று விட்டது. தங்கையின் மகள் வாழ்வாவது நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு..

அதனால் நல்ல முறையில் வர வேற்றதோடு மனைவியிடம்.. “என்ன என் வாய் பார்த்துட்டு இருக்க போ போய் ஏதாவது சாப்பிட எடுத்துட்டு வா.” என்றும் கூறினார்..

பவானி தான்.. “பரவாயில்லை சாப்பிட்டு தான் வந்தோம் சம்மந்தி.. அவங்களும் இருக்கட்டும் பேச தான் வந்தோம்..” என்று சொல்ல சந்திரமதிக்கும் சரி கார்முகில் அவருக்கும் சரி. இந்த அம்மா என்ன ஒரு ஒரு தடவையும் ஒவ்வொரு மாதிரி பேசுது என்று தான் நினைத்து கொண்டார்கள்…

இருந்தும் முகத்தை சாதாரணாம வைத்து கொண்டு. மனைவியிடம்.. “காபியாவது கொண்டுட்டு வா..” என்று சொன்னவர் மகனிடம்.. “ மேல போய் தாமரையையும் தமிழையும் அழச்சிட்டு வா.” என்று சொல்ல சுகனும் மேல செல்ல.

முகில்.. “இன்னும் தமிழ் குழப்பத்தில் இருப்பது போல் இருக்கு இன்னும் கொஞ்ச நாள் இங்கு இருக்கட்டுமே..” என்று வீரா பவானியை பார்த்து பொதுவாக கூறினார்..

அதற்க்கு வீரா.” அது பத்தி பேச வரல அங்கிள் இது வேறு விசயம்..’ என்று வீரா சொல்ல அதை கேட்டு கொண்டே தான் மாடியில் இருந்து மூவரும் கீழே வந்தனர்..

வீரா இங்கு வரும் போதே மனைவியை பார்க்காதே.. ஒன்னும் கைய்யோடு கூட்டிட்டு வந்துடுவ. இல்ல அவளிடம் சண்டை போடுவ. இது இரண்டுமே அவளுக்கு நல்லது இல்ல. அவள் உடம்பு தேறி வரட்டும்.. அதோடு முதலில் நயனி விசயத்தை முடிப்போம் பின் பார்க்கலாம்..

நயனி செய்தது தப்பு தான்.. ஆனால் அவளை எந்த நாளும் விட்டு விட முடியாது.. நன்றி கடன் என்ற ஒன்று இந்த உலகில் உண்டு.. அது அனைத்து கடனையும் விட மிக பெரிய கடன்..

பணக்கடன் என்றால் அந்த தொகையை எவ்வளவு வட்டி போட்டு என்றாலும் கொடுத்து விடலாம். அந்த பணத்தை கொடுக்க கால அவகாசம் மட்டுமே கடன் பட்டவர்களாக இருப்பர்.. ஆனால் நன்றி கடனுக்கு இவ்வளவு காலம். இவ்வளவு ஆண்டு.. எந்த அந்த கணக்கில் சேராதது.. அந்த கணக்கில் தான் நம் வீரா மாட்டி கொண்டு இருக்கிறான்..

அந்த கடனை தீர்த்து விட்டு தான் இனி தனக்கு என்று எது என்றாலும் தனித்து என்று ஒரு முடிவோடு தான் இந்த வீட்டு வாசலை மிதித்தது.

ஆனால் தமிழ் மாடியில் இருந்து இறங்கி வரும் போதே. அதுவும் அம்மா.

“என்ன தமிழ் எப்படி இருக்க..” என்ற கேள்விக்கு ..

“ம் பரவாயில்லை..” என்ற இந்த பதில்.. அதுவும் மெல்ல. தன் இளாவுக்கு சத்தம் இல்லாது இவ்வளவு மெல்ல பேச முடியுமா..? என்று நினைத்தவனின் கண் அவனையும் மீறி அவளை பார்த்தது.. அப்போது அவளுமே அவனை தான் பார்த்து கொண்டு இருந்தாள் ஏதோ ஒரு பாவனையில்..














 
Top