Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

M.M.M....19

  • Thread Author
அத்தியாயம்…19

மாப்பிள்ளை கொண்டு வந்து கொடுத்த புடவையையும் அதற்க்கு உண்டான நகை செட்டையும் இளந்தமிழ் வெளியில் எடுத்து வைத்தாள்..

பெண்ணுக்கு மாப்பிள்ளை என்ன வாங்கி கொடுத்து இருக்கிறார் என்று பெண்களுக்கே உரிய ஆர்வத்துடன் அதை பார்த்த தாமரைக்கு தோன்றிய ஆர்வமானது, அந்த புடவையின் நிறத்தையும்.. அந்த நகை செட்டையும் பார்த்ததும் வடிந்து போனது..

“என்ன தமிழ் பெரியவங்க கட்டுவது போல மாம்பழ நிறத்தில் சிகப்பு கரை வைத்த புடவையை கொண்டு வந்து கொடுத்து இருக்கார்..

நகையும் இது என்ன அந்த கால நகை போல கெம்பூ கல் நகைகள். இந்த காலத்து பெண்கள் எல்லாம் பட்டு புடவையே லைட் கலரில் தான் எடுத்துக்குறாங்க. நகையும் இப்போது எவ்வளவோ புது மாடல் வந்து இருக்கு..” ச்என்று சொன்ன தாமரையின் கண் முன் நயனிக்கு புடவையும் நகையும் எடுக்க தான் செல்லவில்லை என்றாலும், வாங்கியதை கொண்டு வந்து அண்ணி காட்டியது.. அந்த நகையும் சரி புடவையும் சரி இந்த காலத்திற்க்கு தகுந்தது போல் இருந்தது.. இது என்ன..? இதையா நாளை போட்டுக்க போற.. நாளைக்கு அனைவரின் முன்னும் தன் பெண் குறைந்து தெரிந்து விட கூடாது..

அதுவும் தன் மகளை தாழ்த்தி பார்க்க நினைத்த நயனியின் முன் தன் மகள் தாழ்ந்து தெரிந்திட கூடாது..

அதனால் தாமரை தன் மகளிடம்.. “இது வேண்டாம் தமிழ்.. உன் கல்யாணத்திற்க்கு என்று நான் பட்டு புடவை நகை எல்லாம் வாங்கி வைத்து இருக்கேன் தானே.. அதுல நல்லதா ஒரு புடவையை உடுத்திக்க.. அதுக்கு தோதா நகை செட் போட்டுக்க..” என்ற அன்னையின் பேச்சுக்கு.

அந்த புடவையை ஆசையாக வருடி விட்டவள்..

“அவர் இது தானேம்மா போட்டுக்க சொன்னது.. அதுக்கு தானே அவ்வளவு வேலையிலும் வந்து கொடுத்துட்டு போனார்..” என்ற மகளின் பேச்சில் அன்னைக்கு சந்தோஷம் தான். என்ன தான் நயனி அத்தனை சதி செய்தாலும்.. தன் மகள் பிடித்து தான் வீராவை திருமணம் செய்து இருக்கிறாள் என்று நினைத்து இருந்தும்..

“இந்த புடவை பெரியவங்க கட்டுவது போல இருக்கேடி..” என்ற அன்னையின் பேச்சை கேளாது இளந்தமிழ்.. வீரா கொண்டு வந்து கொடுத்த அந்த புடவையையும் அந்த நகைகளையும் தான் அணிந்து கொண்டாள்..

தன் அறையில் இருந்து தயாராகி வெளியில் வந்த தமிழை பார்த்து தாமரையே வியந்து விட்டார்..

இதையா உடுத்த வேண்டாம் என்று சொன்னோம் என்று.. தன் மகளின் நிறத்திற்க்கு என்று நெய்தது போல் இருந்தது அந்த புடவை.. அதற்க்கு தோதாக அந்த கெம்ப் கல் வைத்த நகை செட்.. அதை போட்டதுமே மகளின் முகத்தில் ஒரு தனி தேஜஸ் வந்து அமர்ந்து விட்டதோ என்று நினைக்க தோன்றியது.

“நல்லா இருக்கு தமிழ்..” என்று பாராட்ட..”தெரியும் மா. அவர் வாங்குனது நல்லா தான் இருக்கும் என்று.” மகளின் பேச்சில். தன் மகளுக்கு வீராவை அவ்வளவு விருப்பமா.? எப்போதிலிருந்து.? அன்னைக்கு புரியவில்லை.. சிறு பெண்ணாக இருந்த தன் மகள் திடிர் என்று பெரியவளாக மாறி விட்டது போல் அவர் உணர்ந்தார்.

கீழே சென்ற போது அவளின் மாமா மாமியுமே அப்படி தான் சொன்னார்கள்.. சுகனுமே.. தமிழ் தலை மீது கை வைத்தவன் மனதில் என்ன நினைத்தானோ.. லேசாக கண்கள் கலங்கி விட்டது..

அதை பார்த்த பெரியவர்களுக்குமே என்னவோ போல் தான் ஆனது.. திருமணம் போல் தோன்றாது பழகியவர்களிடம் முடிச்சு போட்டது தங்கள் தவறு என்று பெரியவர்கள் உணர்ந்து கொண்டார்கள்..

தமிழ் கூட. “அத்தான் நீங்க என்ன செய்து இருந்தாலுமே, நீங்க எனக்கு நல்லது தான் செய்து இருக்கிங்க. அத்தான்.. அதனால என்னை நினைத்து எல்லாம் நீங்க கவலை படாதிங்க.. இன்றைய நாள் உங்களுடையது.. மகிழ்ச்சியா இருங்க...” என்று கூற..

“நிஜமா நீ சந்தோஷமா தான் இருக்கியா தமிழ்..” என்று கேட்டவனிடம்..

“நான் சந்தோஷமா தான் இருக்கேன் என்று தெரியப்படுத்த நான் என்ன செய்ய வேண்டும்.” என்று கேட்டவளிடம் என்ன சொல்வது என்று சுகன் தயங்கினாலும், இத்தனை நாள் நினைத்து கொண்டு இருந்ததை கேட்டு விட்டான்..

“வீரா வீட்டிற்க்கு எப்போ நீ போவாய் என்று..”

“உன் மனைவி இங்கு வந்த பின்.” என்று தமிழும் சட்டென்று சொல்லி விட்டாள்..

தமிழின் இந்த பதிலில் சுகன் ஒரு மாதிரி உணர்ந்தாலும், அது தான் சரி என்றும் நினைத்து கொண்டான். பெரியவர்களுக்கும் அதே எண்ணம் தான்.

அதுவும் திருமண மண்டபத்திற்க்கு போகும் வழியில் தாமரை மாப்பிள்ளை கொண்டு வந்து கொடுத்த புடவை முதல் கொண்டு போகும் போது சொல்லி விட்டு சென்ற.

“நயனி திருமணம் முடிந்த பின் தமிழை அழைத்து கொள்கிறேன்..” என்று வீரா சொன்னதை தாமரை கூறினார்..

பாக்யவதி. “அந்த தம்பி சொல்றதும் சரி தான்.. நயனி பெண் அங்கு இருக்கும் போது தமிழை அவள் வாழ விட மாட்டாள்..” என்றதும்.. தாமரையின் முகம் சுகனை பார்க்க.. அவர் நினைத்தது போல் வாடி போனவனாக முகத்தை ஜன்னல் பக்கம் திருப்பி கொண்டவனை பார்த்தவர்..

“அண்ணி நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதிங்க. இனி நயனி உங்க மருமகள்.. அந்த பெண்ணை நல்லப்படியா ஏத்துக்க பழகுங்க.. அப்போ தான் நம் சுகன் நல்லா இருப்பான்..” என்று நாத்தனார் கூறியதும்.. பாக்யவதி தன் மகனை திரும்பி பார்த்தார்.

பின் அவருமே சரி என்று தான் தலையாட்டியது வேறு வழி…

கல்யாண மண்டபத்தில் மாப்பிள்ளை வந்து விட்டார் என்று சத்தம் வர. வீரா பெண்ணுக்கு அண்ணனாக முறைப்படி மாப்பிள்ளையை வர வழைக்க மண்டபத்திற்க்கு வெளியில் வந்து நின்றான்..

சுகன் பக்கம் அவனின் அப்பா அம்மா நின்று கொண்டனர்.. சுகன் பின் தான் இளந்தமிழ் நின்று இருந்தாள்.. தாமரை மண்டபத்தில் ஒரத்தில் இருந்த இடம் வழியாக மண்டபத்திற்க்குள் சென்று விட்டார்..

தமிழ் சுகனுக்கு பின் நின்று இருந்ததால் வீராவுக்கு சட்டென்று அவளை பார்க்க முடியவில்லை..

அதுவும் மாப்பிள்ளையை வேரவேற்க்க வேண்டும் என்ற பொறுப்பில் இருந்தவன்.. கண்ணை அலைய விடாது.. வீட்டின் ஆண்மகனாக சிரித்த முகத்துடன் கை கூப்பி அழைத்தான்..

ஆலம் சுற்ற சுமங்களி பெண் வர நயனியும் சுகன் பக்கம் நின்று கொண்டாள்.. இருவருக்கும் ஒரு சேர ஆலம் சுற்றி மண்டபத்தின் உள் நுழையவும் தான் வீராவின் கண்ணுக்கு பளிச் என்று அவளின் மனைவி தெரிந்தாள்..

மனைவியை பார்த்ததும், அதுவும் தான் வாங்கி தந்த புடவை நகையில் பார்த்த மனைவியின் அழகில், ஒரு நிமிடம் தன் கடமை எல்லாம் மறந்தவனாக இப்போதே தன் மனைவியின் கை பிடித்து கொண்டு வீட்டிற்க்கு அழைத்து சென்று விடலாமா என்று நினைத்தவனின் சிந்தனை..

இவன் ஏற்பாடு செய்து வைத்திருந்த இன்னிசை கச்சேரியில் பாடிய பாட்டானா..

“இது தானா. இது தானா. எதிர் பார்த்த நன்நாளும் இது தானா..” என்ற பாடலில் சுயம் வந்த பின் தான் இன்றைய நாளான நிகழ்வே வீராவின் நினைவுக்கு வந்தது.

தன் கடமை செய்ய மோகத்தில் பிடியில் இருந்து மீண்டு கொண்டவன்.. அடுத்த வேலையை பார்க்க சென்று விட்டான்..

தமிழுக்கும் வீராவின் அந்த பார்வை.. நிலைத்த அவன் தோற்றத்தை பார்த்து மனதிற்க்குள் புன்னகை தான்.. ஆனால் வெளியில் காட்டி கொள்ளவில்லை.

இவர்களின் பார்வை பரிமாற்றம் பாவம் பெரியவர்களுக்கு தான் தெரியவில்லை.. பாக்யவதி தன் நாத்தனாரிடம்

“என்ன தாமரை வழியில் என்னவோ உன் மாப்பிள்ளையை பத்தி அப்படி சொல்லிட்டு வந்த.. அவர் வாங்கி கொடுத்த புடவை நகை போட்டு வந்து நிற்கிற மனைவி கிட்ட நல்லா இருக்கு என்று கூட சொல்லாது போறார்..” என்று அங்கலாய்ப்பாக கேட்டு விட. தாமரையும்.

“அது தான் புரியல அண்ணி.. கல்யாண வேலையில் கவனிக்கவில்லையோ..” என்று கூற..

சுகனோ.. “அது எல்லாம் உங்க மாப்பிள்ளை நல்லா தான் கவனித்து விட்டு போனார். அதை பற்றி எல்லாம் நீங்க கவலை பட தேவையில்லை..” என்று சொன்னதும் இரு பெண்மணிகளும் அப்படியா சுகன் என்று கேட்டனர்.

“நானும் இவங்க பேசியே பார்க்கலையே எப்படி கல்யாண வரை போனாங்க.. அதுவும் தமிழ் இங்கு வந்த பின்னும்.. வீரா மீது எப்படி அவ்வளவு நம்பிக்கை வந்தது என்று நினச்சிட்டு இருந்தேன்.. ஆனா சும்மா சொல்ல கூடாது. இவங்களுக்கு பேச்சே தேவையில்லை.. பார்வையே போதும்..” என்று சொன்னான்..

இந்த பேச்சுக்கள் அனைத்தும் சுகன் கல்யாண மண்டபத்தின் வாசல் தொடங்கி உள் நோக்கி நடந்து கொண்டே நடந்த பேச்சுக்கள்..

ஆரத்தி சுற்ற சுகன் பக்கத்தில் வந்து நின்ற நயனி சுகன் தன்னை பார்க்க மாட்டானா.? என்று அவனையே தான் அவள் பார்த்து கொண்டு இருந்தாள்..

ஆனால் சுகனோ.. வீரா தமிழை பார்க்கிறானா. பார்த்த பின் அவர்களின் பார்வை பரி மாற்றம்.. பின் இதோ பேச்சும் அவர்களை பற்றியது தான்.. இன்று திருமணம் தனக்கும் இவனுக்குமா வீராவுக்கும் தமிழுக்குமா.. தன்னுடைய இன்றைய நாளின் முக்கியத்துவத்தை தமிழ் மொத்தமாக பரித்து கொண்டு விட்டாள்..

பெரியவர்களும் என்னை கவனித்தார்களா.. நாளை இகர்கள் வீட்டிற்க்கு தானே நான் செல்ல போகிறேன்.. நான் தானே இவர்கள் வீட்டு மருமகள்.. என்னை பற்றி நினையாது.. இன்றும் அவளை பற்றி தானா. கல்யாணம் ஆகட்டும் அங்கு போய் பார்த்து கொள்கிறேன்.. என்று மனதில் நினைத்து கொண்டு தான் மணமகள் அறைக்கு சென்றது.

ஆறு ஏழரை முகூர்த்தம்.. பெண்ணுக்கு முன்னவே ப்யூட்டிஷியன் நயனியை அழகு படுத்த தொடங்கி விட்டனர். சுகனும் தயாராகி மேடையில் வந்து அமர ஐயர் ஒவ்வொரு சாங்கியமாக தொடங்க. பாத பூஜை செய்யும் அந்த நிகழ்வில் சுகனுக்கு அவனின் அப்பா அம்மா செய்து கொண்டனர்..

நயனிக்கு.. இது நயனியின் அம்மா கூட யோசிக்கவில்லை. யாரை என்று நினைக்கும் போதே.. முதல் வரிசையில் தன் அம்மாவோடு அமர்ந்திருந்த தன் மனைவி இளந்தமிழை கை பிடித்து மேடைக்கு அழைத்து சென்ற வீரா..

பாத பூஜை செய்ய ஏதுவாக அந்த தட்டில் தன் ஒற்றை பாதத்தை வைத்து விட்டு தன் மனைவியை பார்க்க,, கணவனின் பார்வையில் தன் ஒற்றை கால் எடுத்து அந்த தட்டில் வைத்தாள்..

நயனிக்கோ மேடையில் அமர்ந்து இருந்தவளுக்கு தன் முகத்தில் கூட எதுவும் காட்ட முடியாத ஒரு நிலை.. ஒரு சின்ன அதிருப்தியுடன். மேடையின் ஒரம் நின்று கொன்டு இருந்த தன் அன்னை பவானியை பார்த்தாள்..

மகளின் முகத்தை வைத்தே அவளின் பிடித்தம் இன்மை தெரிந்து விட்டது.. அதோடு இங்கு மேடையில் அமரும் முன் பெண்ணின் அறையில் தமிழை பற்றி அப்படி கோபமாக தன்னிடம் பேசி கொண்டு இருந்த மகள் எப்படி தமிழின் பாதத்தை தொட்டு பாத பூஜை செய்வாள்..

மேடையிலேயே ஏதாவது பிரச்சனை ஆகி விடுமோ என்ற பயம் பவானிக்கு.. சட்டென்று ஒன்று தோன்ற.

வீராவிடம் கத்தியே.. “தமிழ் நயனியோட சின்னவ வீரா பாதபூஜை செய்ய கூடாது..” என்று சொல்ல. வீராவோ.. அந்த ஐயர் முகத்தை பார்த்தான்..

வீராவின் பார்வையில் .அந்த ஐயர். “இதற்க்கு வயது முக்கியம் கிடையாதும்மா ஸ்தானம் தான் முக்கியம். உங்க பிள்ளையாண்டான் தானே தோப்பனார் ஸ்தானத்தில் எல்லாம் பார்ந்துண்டு இருக்கார்.. அவர் ஆம்புடையான் நின்னு பண்றதில் தப்பே இல்ல.” என்று ஒரே போடாக போட்டு விட்டார்.

அடுத்து என்ன என்று பவானி கெஞ்சலுடன் தன் மகளை பார்த்தார்.. நயனி அன்னையின் கெஞ்சல் பார்வைக்கு மசிந்தாளா.. இல்லை சுகனின் கோபப்பார்வைக்கு மசிந்தாளா என்று தெரியவில்லை.. வேண்டா வெறுப்பா வீராவுக்கும் தமிழுக்கும் பாத பூஜை செய்து முடித்தாள்..

வீராவுக்கும் தமிழுக்கும் ஊர் பார்க்க திருமணம் நடை பெறவில்லை.. குறைந்த பட்சம் ஒரு வர வேற்ப்பு கூட வைக்கவில்லை..

ஆனால் ஊரை கூட்டி.. இவள் தான் என் ,மனைவி என்று சொல்லி விட்டான்.. அதுவும் கணவனோடு வாழாது ஒரு பெண்ணை கன்னிகாதானம் செய்யும் பாக்கியம் யாருக்கு கிடைக்கும்.. தானத்தில் பெரியது கன்னிகா தானம் என்று சொல்வார்கள்..உங்கள் வம்சத்தை வளர என் வீட்டு பெண்ணை கொடுக்கிறேன்…

அதுவும் தன் வெற்று பாதத்தை பார்த்து ஐயர் தன்னை பார்த்ததும் தமிழ் வீராவை பார்த்ததும் தன் சட்டை பையில் வைத்து இருந்த மொட்டியை போட்டு விட்டு பின் தட்டில் பாதம் வைக்க…

தன் தடுமாற்றத்தை தடுக்க அவன் இடையை தமிழ் பிடித்து கொள்ள.. தன் இணையாக வீராவின் கை தமிழின் தோள் மீது பதிய வைத்து கொண்டு தம்பதியர்களாய் நின்ற அந்த கோலம் பார்க்க அவ்வளவு அழகாக இருந்தன.

அதை பார்த்த தமிழின் அம்மா மாமா மாமி பூரித்து போய் விட்டனர்.. ஏன் பவானியின் மனது நிறைந்து விட்டது.. வீரா மனைவியோடு நின்று இருந்ததை பார்த்து. அதே மனநிறைவோடு அனைத்து சாங்கியமும் செய்து முடித்து சுகன் நயனியை தன் இணையாக இணைத்து கொள்ள அவள் கழுத்தில் பொன் தாலி கட்டினான்..

ஆனால் அனைவரும் மகிழ்ந்து இருக்க.. தாலி கட்டிய சுகன் மனதிலும் ஒரு மகிழ்ச்சி இல்லை.. தாலியை வாங்கி கொண்ட நயனியின் மனதிலும்.. மகிழ்ச்சி இல்லை.

பின் மாலை வர வேற்ப்பு என்று அப்படி ஒரு விருந்தை வைத்து வீரா அசத்தி விட்டான்.. இதற்க்கு இடையில் எப்படி முறை ஆகும் என்ற பேச்சுக்களும் காலையில் தொடங்கி விட்டது.. மாலைக்குள் உறவு முறை வந்தவர்கள் அனைவருக்கும் தெரிந்து விட.

அனைவரும் வீராவை அப்படி பாராட்டி தள்ளி விட்டனர்.

இதில் கவனிக்க வேண்டியது தமிழ் அப்பா சந்தானம் காலையிலேயே கல்யாண மண்டபத்திற்க்கு வந்து விட்டார்.

அவ்வளவு ஆவேசமாக வந்தவர் கண்டது வீரா தமிழின் காலில் மெட்டியை அணிவித்த காட்சி தான்.. வீராவை சந்தானம் பார்த்தது இல்லை தானே.. சொந்த மகளையே சின்ன வயதில் பார்த்தது..

இப்போது மகளின் அந்த தோற்றம்.. அவள் பக்கத்தில் கணவன் நின்று கொண்டு இருந்த காட்சியை பார்த்து கோபத்தில் வந்தவரின் மனது ஏனோ குளிர்ந்து விட்டது.. வீராவின் தோற்றத்தில் பாதி திருப்தி என்றால், தன் பக்கம் நின்று கொண்டு இருந்தவர்களின் பேச்சான.

“இது என்ன முறை இல்லாது.?” என்று கேட்ட ஒரு பெண்மணிடம் மற்றோரு பெண்..

“கல்யாண பெண்ணுக்கு இந்த பையன் சொந்த அண்ணன் கிடையாதாம்.. அத்தை மகன் தான் போல. ஆனா அண்ணன் போல தான் வளர்ந்து இருக்காங்க. கல்யாண பெண்ணுக்கே கொஞ்ச நாள் முன் தான் தெரியும்னா பார்த்துக்கோ..

தமிழை கோயிலில் அவ்வளவு அவசரமா கல்யாணம் கட்டிக்க காரணம்.. தமிழை சுகன் கூட சேர்த்து வைத்து பேச்சு நடந்துச்சி போல பேச்சுக்கு கூட தான் விருப்பப்பட்ட பெண் வேறு ஒருவருடன் சேர்த்து வைத்து பேசுவது பிடிக்காது தான் தாலி கட்டி இருக்கார்.

ஆனாலும் இந்த பெண்ணுக்கு அண்ணனா செய்ய வேண்டியதை செய்துட்டு தான் தன் வாழ்க்கை என்று பெண்டாட்டியை அம்மா வீட்டில் விட்டு இருக்கார்.. இப்போ தங்கையா நினச்ச இந்த பெண்ணை மாமியார் வீட்டிற்க்கு அனுப்பிய பின் மனைவியை கூப்பிட்டுப்பாராம்.”இருபெண்களின் இந்த பேச்சை கேட்டு விட்டு மனதிருப்தியுடன் செல்லாது மகளிடன் தனித்து பேச காத்து கொண்டு இருந்தார்..












 
Well-known member
Joined
Mar 31, 2025
Messages
123
வினை விதைத்தவன் வினை அறுப்பான்
 
Top