Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Meezhveno Muzhgiduveno - 10

  • Thread Author
அத்தியாயம் 10

வைதேகி… “ கீதா அவள் ரூமுக்கு போய் விட்டாளா…” என்று கேட்டதற்க்கு. ரேவதி..

“ அவள் நாத்தனார் வந்து இருக்காளே.. அவள் தான் கூட்டிட்டு போனா… சர்வா அவன் ரூமுக்கு போய் ரொம்ப நேரம் ஆகுது… “ என்று அவசரப்படுத்தவும் வைதேகி இப்போது தயங்கினார்..

இப்போது மான்சியை யார் சர்வாவின் அறைக்கு அழைத்து கொண்டு போவது… மான்சியின் உறவு முறை பெண் இருந்தால், அவள் அழைத்து போக சொல்லி இருக்கலாம். இல்லை கீதாவுக்கு இன்று திருமணம் இல்லாது இருந்தால், அவளை கொண்டு போய் விட சொல்லி இருக்கலாம்..

ஒரு அன்னையாக தான் எப்படி..? என்று தயங்கி நின்றவளின் தோளை பற்றிய ரேவதி..

“ நான் கூட்டிட்டு போறேன்.. இப்படியே தயங்கிட்டு இருந்தா எப்படி..?” என்று சொல்லி விட்டு மான்சியை, சர்வேஷ்வரனின் அறைக்கு அழைத்து செல்லும் போது..

“ எப்படி எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று மேலோட்டமாக ஒரு அனுபவ வாய்ந்த பெண் மணியாக சொல்லிக் கொண்டு வந்தவர்.. கடைசியில் அது என்னவோ ஒரு இடக்கான பேச்சாக..

“ இது எல்லாம் நான் சொல்லாமலேயே உனக்கு தெரிந்து இருக்கும்..” என்று சொன்னவரின் பேச்சை மான்சி எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியாது போனாள்..

கேட்க தோனவில்லை… பதில் மனதுக்கு உவப்பானதாக இல்லை என்றால், வேண்டாம் நல்லதே நினைப்போம் என்று அவள் நினைவை கலைக்கும் வகையாக ரேவதி..

“ இது தான் சர்வா ரூம்.. நான் சொன்னது எல்லாம் நியாபகத்தில் இருக்கு தானே…. உனக்கு சொல்ல தேவையிருக்காது..” என்று திரும்பவும் அந்த வார்த்தையை ரேவதி உச்சரித்து சென்று விட்டார்..

அந்த வார்த்தையின் யோசனையுடனே அறைக்குள் நுழைந்தவளை, சர்வேஷ்வரன் இப்போது யோசனையுடன் பார்த்தான்…

சர்வேஷ்வரன் தன்னையே பார்த்துக் கொண்டு இருப்பதை கூட உணராது ரேவதி பேசிய பேச்சின் தாக்கத்திலேயே மான்சி நின்று விட்டாள்.. அதுவும் கதவின் இடையில்…

சிறிது நேரம் அவளையே பார்த்திருந்த சர்வேஷ்வரன் என்ன நினைத்தானோ, அவளின் தோளை சாவுகாசமாக பிடித்து தங்கள் அறைக்குள் விட்டு, பின் கதவையும் அடைத்தான்..

அவன் தன்னை தொட்ட உடன் தான் தன்னிலைக்கு வந்து பதறிய மான்சி.. அவனை ஒட்டிக் கொண்டு தான் நின்றுக் கொண்டு இருந்த நெருக்கத்தில், மீண்டும் பதறி அவனை விட்டு கொஞ்சம் தூரம் நின்றாள்.

“ இப்போ எதுக்கு நீ இப்படி ஷாக் ஆகுற..? நான் உன் கணவன் தானே.. கணவன் தான் உன்னை பிடித்தான்.. நீ கணவன் பக்கத்தில் தான் நெருக்கமா நின்னுட்டு இருந்த.. மத்தவ புருஷன் பக்கத்தில் இல்லை.. புரியுதா..?” என்ற சர்வேஷ்வரனின் பேச்சில், மான்சி இன்னும் குழம்பி போனாள் என்று தான் சொல்ல வேண்டும்..

இப்போ இவன் என்ன சொல்ல வருகிறான்.. என்பதை விட யாரை பற்றி பேசுக்கிறான் என்பதில் தான் அவளுக்கு குழப்பம்.. இவன் பெரியம்மா மறை முகமாக என்னவோ பேசிட்டு போறாங்க.. இவன் என்னவோ மறச்சி பேசுவது போல் பேசுகிறான்.. என்று மனதோடு பேசிக் கொண்டு இருந்தாள்..

மான்சி மனதோடு பேசுவது எல்லாம் அவளுக்கு புதியது கிடையாது.. எப்போது தனிமை தான் அவளுக்கு துணை என்று ஆனதோ. அப்போது இருந்தே… இது போல் மனதோடு பேச்சு தான் அவளுக்கு…

அதை சரியாக ஊகித்த சர்வேஷ்வரன்.. “ நீ எப்போ மனதில் பேசாது நேரா என்னிடம் பேச போற…?” என்ற கேள்வியில்..

“ அது எல்லாம் ஒன்றும் கிடையாதே..” என்று ஒரு வாறு தன்னை சமாளித்து நின்றுக் கொண்டு இருந்தவளை, மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்துக் கொண்டு வந்தவன்..

அவள் கையில் எதுவும் இல்லாததை பார்த்து..

“ உன்னிடம் பால் கொடுத்து விடலையா…?” என்று அப்போது அது தான் முக்கியம் என்பது போல் கேட்டான்..

“ இல்ல அத்தை இங்கு பிளாஸ்க்கில் வைத்து இருக்கோம் என்று சொன்னாங்க..” என்ற மான்சியின் பதிலுக்கு..

“ம்..” என்றான்.

சர்வேஷ்வரன் ம் என்றதோடு பேச்சு முடிந்து சிறிது நேரம் அந்த இடத்தில் அமைதி மட்டுமே நிலவியது..

தலை குனிந்து கொண்டு இருந்த மான்சி, அடுத்து அவன் ஏதாவது பேசுவான்.. கேட்பான் ..என்று காத்துக் கொண்டு இருந்தவளின் காதில் எதுவும் விழாது போகவும்..

சிறிது சிறிதாக குனிந்து இருந்த தன் தலையை மேல் நோக்கி பார்த்ததில், சர்வா கட்டிலில் அமர்ந்துக் கொண்டு மேல் கால் மேல் போட்ட வாறு, தன்னையே பார்த்துக் கொண்டு இருந்தவனை பார்த்தவள்.. மீண்டும் சட்டென்று தன் தலையை குனிந்து கொண்டாள்..

அவள் தலையை குனிந்த பின்னும் பேச்சு இல்லை தான்.. ஆனால் சத்தம் இருந்தது.. அது சர்வாவின் காலடி சத்தம்.. அந்த சத்தம் மெல்ல மெல்ல தன்னை நெருங்கி வருவதில், அவள் காதுக்கு சத்தம் கொஞ்சம் அதிகமாக கேட்டதில், கையை தொங்க போட்டுக் கொண்டு இருந்தவள்…

அது கொடுத்த நடுக்கத்திலும், தன்னை திடப்படுத்திக் கொள்ளவும், தன் முந்தியை ஒரு பற்றுக் கோளாக பற்றி கொண்டு இருந்தவளின் கையை, இப்போது சர்வேஷ்வரன் பற்றிக் கொண்டான்..

“இன்னைக்கு இந்த கை என்னை தான் பிடிக்கனும்.. அது என் கை என்பது இல்லை… வேறு எது வேண்டுமானாலும் பிடிக்கலாம்..” என்றவனின் பேச்சில் மான்சி அதிர்ந்து போய் அவனை பார்த்தாள்..

“ எது என்றாலும் என்றால், இந்த கைய்யால் என் முகம் பற்றலாம், இல்லை என் தோள் மீது உன் கையை படர விடலாம்.. இல்லை இப்படி உன் கையை என் இடுப்பை சுத்தி வளைத்துக் கொள்ளலாம்..” என்று சொல்லிக் கொண்டே அதை செய்தும் கொண்டு இருந்தான்..

மான்சி இன்னும் அதிர்ச்சியாகி… “ என்ன செய்யிறிங்க.. விடுங்க..” என்று தன் கையை இழுத்துக் கொண்டவளை.. தான் இழுத்து தன் அருகில் வைத்துக் கொண்டவன்.

“ இன்று என்ன செய்யனுமோ.. அது தான் செய்யிறேன்..” என்று சொல்லி அலங்கரித்து வைத்திருந்த கட்டிலை காட்டி சொன்னவனை…

இப்போது தன் அதிர்ச்சியில் இருந்து விலகி அவனை யோசனையுடன் பார்த்தவள்..

“ நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்.. பேசலாமா..?” என்று பேச மான்சி அவனிடம் அனுமதி கேட்டாள்..

“ ம் பேசலாமே.. தாரளமாக பேசலாம்.. ஆனால் இப்போ இல்ல.. குறிப்பா இந்த நொடி கிடையாது…” என்று சொன்னவனின் பேச்சு அதோடு முற்று பெற்றது..

அவன் கை அவளிடம் பேசியதில், மான்சி முதலில் அதிர்ச்சிக்கு உள்ளாகியவள்.. பின் நடந்தது தெரியாது.. நடப்பது புரியாது… அதுவும் தன்னுள் தன் உடலில் நிகழும் மாற்றம், புரிந்தும்.. புரியாதும் ..என்பார்களே.. அது போல் ஒரு மன நிலையில் தான் மான்சி இருந்தாள்…

சர்வேஷ்வரன் தன் அன்னையிடம் பேசிய பேச்சில் இருந்த இப்போது என்ன நடக்கும் என்று அவள் ஒரளவுக்கு அனுமானித்து தான் இருந்தாள்…

இருந்தாலும், பேசி பார்க்கலாமே என்று நினைத்தவளுக்குள், இப்படி ஒரு மாற்றம் அவள் உடலில் எழும் என்று அவள் நினைத்தும் பார்க்கவில்லை..

ஆம் இது உடல் மாற்றம் தான் என்பதில் அவளுக்கு எந்த வித ஐய்யமும் கிடையாது… இவனை நான் மீடியா செய்திதாள்களில் என்று பார்த்து இருக்கிறேன்… அதுவும் தங்களுக்கு உண்டான உறவை நினைத்தால், அவள் உன்னிப்பாக கூட கவனிக்க மாட்டாள்..

சர்வேஷ்வரன் சுத்தம். தன் பெயர் கூட இவனுக்கு தெரியுமோ தெரியாதோ.. என்று நினைத்தவளின் நினைப்பு ஒரு வகையில் உண்மை தானே. அவன் டிடெக்டீவ் சொல்லி தானே மான்சி என்ற பெயரே அவனுக்கு தெரியும்..

அப்படி இருக்க.. எப்படி… அவனும் எப்படி.. ஏதோ கால காலமாக காதல் செய்து மணம் புரிந்தளிடம் நடப்பது போல்.. எத்தனை குட்டி குட்டி முத்தங்கள்...

அதுவும் முதலில் மென்மையில் ஆரம்பித்து, மெல்ல மெல்ல வன்மையில் முடிவடைந்த அவனின் ஒவ்வொரு முத்தத்தையும் மான்சி அனுபவிக்கும் போதும்.. ஒரு சில தொடுகையில் தன் முகத்தில் காணப்பட்ட வலியின் சாயலில் மீண்டும் மென்மையாக என்று அவளின் அவன் காதலில் கலப்பது போல் இந்த சங்கமம்..

இதில் அவளுள் ஒரு சந்தேகம்.. இவன் எங்காவது என்னை இதற்க்கு முன் பார்த்து இருக்கிறானா என்று… அவனும் பித்து பிடித்து அவளையும் பித்து பிடிக்க வைத்துக் கொண்டு இருந்தான் சர்வேஷ்வரன்..

ஆம் அவனும் பித்து பிடித்த நிலை தான்.. அவனுக்கு இந்த காதலின் மீது எல்லாம் நம்பிக்கை இல்லை என்பதை விட.. அவனுக்கு நேரம் கிடையாது.. அதோடு அவனுக்கு பொறுமை என்பது துளியும் இல்லை..

அதனால் தான் முன்னவே முடிவு செய்து வைத்து இருந்தான்.. தன் வீட்டில் பார்க்கும் பெண்ணை மணந்து பின் வாழலாம் என்று.. அப்போது கூட அவன் மனதில் காதல் என்று எல்லாம் எண்ண வில்லை…

அதன் பின் நடந்து முடிந்த நிகழ்வில்.. அவனுக்கு பெரியதாக எந்த மாற்றமும்.. ஏன் ஏமாற்றமும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்…

அதனால் தான் மான்சியோடான அவன் வாழ்வை அன்றே ஆரம்பிக்க முடிவு செய்தான்.. அவன் அன்னையிடம் பேசியதும் அவரை சமாதானம் படுத்த வேண்டி பேசிய பேச்சு கிடையாது.. அவன் உண்மையை தான் பேசினான்..

அதை செயல் படுத்தவும் ஆரம்பித்தவனின் மனம் ,என்ன உணர்க்கிறது என்று அவனால் கூட கணிக்க முடியாது. அது பாட்டுக்கு துடிப்பு துணையோடு போகும் படகு போல்..

அவள் தேகம் கொண்டு அவன் மனம் எங்கு எங்கோ பயணித்துக் கொண்டு, ஒரு சுக போக உணர்வு அவன் உடல் கொடுப்பது ஒரு பக்கம் என்றால் அவன் மனம்…

அவளை முதலில் மென்மையாக கைய்யாண்டாலும், பின் அவன் மனது இது போதாது இதற்க்கு மேல்.. இதற்க்கு மேல்.. என்று கொடுத்த உந்து சக்தியில், அவன் வன்மையை கையில் எடுத்த அடுத்த நொடியே.. அவள் முகத்தில் காணப்பட்ட வலியின் சாயலில், திரும்பவும் மென்மைக்கு மாறி.. என்று அவன் மனமே அவன் சொல் பேச்சு கேளாது போனது..

இருந்தாலும் அவளின் பரிசத்தை விட மனதும் இல்லாது, அவளோடு கூடி களித்தவனின் மனது அவ்வளவு ஒரு நிம்மதி.. திருப்தி.. மகிழ்ச்சி… தாம்பத்தியத்தால் மனது இவ்வளவு லேசாகுமா…? மற்றவர்களுக்கு எப்படியோ… கோடி கோடியாக லாபத்தை சம்பாதித்து இருக்கிறான்..

அப்போது அவன் மனது மகிழ்ச்சி அடையும்.. சில சமயம் ஒரு அகம்பாவமும் தன்னால் அவனுள் எழும்.. ஆனால் திருப்தி.. திருப்தியோடு சேர்ந்த இந்த நிம்மதி.. அவன் இது வரை அனுபவித்து இராதது… இன்னும் கூட அவன் மனது அவளை நாட துடித்தாலும், .. கடைசியாக சிறு வலி போல் அவள் முகத்தில் வந்து போன பாவனையில் சட்டென்று அவளை விட்டு விலகியவனை…

என்ன என்று அவள் பார்த்த அந்த பார்வையில்… அவள் நெற்றியில் மீண்டும் ஒரு குட்டி முத்தம் இட்டவன்.. மீண்டும் வன்மைக்கு தாவ அவன் மனம் ஏங்கினாலும், அவள் கலைத்து போன முகத்தை பார்த்து விட்டு, பட்டும் படாமல் ஒரு முத்தத்தை அவள் இதழுக்கு கொடுத்து விட்டு, பக்கத்தில் படுத்தவனை இப்போது மான்சியால் கண் எடுத்து பார்க்க முடியாது போனது..
அவனுக்கு முதுகு காட்டி படுத்தவளின் இடையில், அவன் கைகள் தஞ்சம் புகுந்தது தெரிந்தாலும், அதை விலக்காது தூக்கத்தை விலக்கியவளாக அன்றைய இரவு அவளுக்கு முடிவடைந்தது..
 
Top