Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Meezhveno Muzhgiduveno - 12

  • Thread Author
அத்தியாயம் 12

வனிதாவின் பேச்சை திசை திருப்பி விட்டதில் ரேவதியும், வைதேகியும், நிம்மதி அடைந்து.. “ சரி காலையில் அவங்க அவங்க வேலையை பார்க்காம இங்கு என்ன வேடிக்கை..” என்று குடும்ப உறுப்பினர்களை அனுப்பி விட்டு அவர்கள் இருவரும் காலை உணவை பரி மாற சென்று விட்டனர்..

அவர்களுக்கு வனிதா பிரச்சனை செய்ய கூடாது.. இதில் தான் அவர்கள் கவனம் இருந்ததே தவிர.. மான்சியின் கண்ணீரும், இந்த கலங்கிய தோற்றமும் அவர்கள் கவனித்தாக கூட தெரியவில்லை..

என் என்றால் வனிதா கத்திய பின், அனைவரும் அவளை தான் கவனித்தனரே தவிர.. மான்சியை யாரும் கவனிக்கவில்லை.. அதனால் அவள் தலை குனிந்து அமர்ந்திருந்த தோற்றத்தில் , அவள் முகத்தில் வெளிப்படும் உணர்ச்சிகள் யாருக்கும் தெரியாது போய் விட்டது.. .

அனைவரும் சென்ற பின் அந்த இடத்தில் சர்வேஷ்வரன் , சூர்ய நாரயணன் மட்டும் தான் மிச்சம் இருந்தனர்.. சர்வேஷ்வரன் மான்சி அப்படி அமர்ந்திருப்பதை பார்த்து, அவள் அருகில் ஆறுதலாக பேசும் முன், மான்சியில் அருகில் சூர்ய நாரயணன் சென்றதோடு..

அவள் கை பிடித்து… “ சாரி.. மான்சி.. சாரி.. நான் இன்னும் இன்னும் உனக்கு வேதனையையும், அவமானத்தையும் தான் தர்றேன்… உனக்கு நல்லது என்று நினைத்து தான் சர்வாவுக்கு உன்னை கல்யாணம் செய்து வைக்க சொன்னேன்..

துளசி சர்வா நல்லவன் என்று நான் சொன்ன பேச்சுக்கு மதிப்பு கொடுத்தா… சர்வா நல்லவன் தான் மான்சி.. நான் பேசுறேன்.. இங்கு இருந்தா தானே உனக்கு இங்கு அவமானம் நடக்கும்…

நான் சர்வா கிட்ட சொல்றேன்.. உன்னோடு தனி குடித்தனம் நடத்த…” என்ற அந்த வார்த்தையை சர்வாவையும், தன் அண்ணாவையும் , அதோடு மான்சியையும் சாப்பிட அழைக்க வந்த வைதேகி கேட்டதில், அதிர்ந்து போய் தன் மகன் சர்வாவை பார்த்தாள்..

சர்வாவுக்கு சூர்யநாரயணன் பேச்சு அதிர்ச்சி என்பதை விட… கோபத்தையும்,, ஆத்திரத்தையும் தான் கொடுத்தது…

ஓ இவர் இந்த குடும்பத்தை விட்டு விலகியதோடு என்னையும் இழுக்க பார்க்கிறாரோ… ஏதோ மான்சியின் கை பிடித்து சொன்னாரே சர்வா நல்லவன் என்று, இவளோடு நான் தனிக்குடுத்தனம் செய்வேன் என்று தான் அந்த பொம்பளையிடம் சொல்லி இருப்பார் போல… என்று சூர்ய நாரயணன் மான்சியிடம் பேசியதை தவறாக அர்த்தம் கொண்டு, மேலும் மேலும் துளசியை பற்றி தவறான பிம்பத்தை தன் மனதில் பதித்துக் கொண்டான் சர்வேஷ்வரன்..

மேலும் சூர்ய நாரயணனின், பிடித்திருந்த கையை விடுக்கென்று பிடிங்கி கொண்ட மான்சி சூர்ய நாரயணனை துச்சமாக ஒரு பார்வை பார்த்து விட்டு சென்ற மான்சியின் செயலில்..

இங்கு சொந்த பெண்ணை கவனிக்காது, அந்த பொம்பளை மீது இருக்கும் மோகத்தில், அந்த பெண் மீது தான் அக்கறை எல்லாம் வைத்துக் கொண்டு இருக்கார் போல.. இதோ மான்சி ஒவ்வொரு முறையும் சூர்ய நாரயணனை மதிக்காத பார்வை தான் பார்க்கிறாள் …

.இருந்தும் இந்த பெண் மீது காட்டும் அக்கறையை தன் சொந்த பெண் மீது காட்டி இருக்கலாம்.. இப்படியாக எண்ணிக் கொண்டு இருந்த சர்வாவின் கை பிடித்த அன்னையின் மீது கை வைத்த சர்வேஷ்வரன்…

“ நீங்க ஏம்மா கவலை படுறிங்க..? என்னை பற்றி தெரியாதா..?” என்று கேட்டதற்க்கு.

“ தெரியும் சர்வா… ஆனால் அண்ணன் இப்படி பேசுவார் என்று நானே எதிர் பார்க்கவில்லை சர்வா.. அதுவும் இல்லாம அவசரத்தில் கல்யாணம் செய்து விட்டோம்.. இப்போ அவதிப்பட போகிறோம் என்ற பயம் தான்.

அதோட இப்போ வனி, பேச்சு மாமா பேச்சு இதை எல்லாம் கேட்ட பின் காலையில் கிடைத்த நிம்மதி இப்போ துணி கொண்டு துடைத்தது போல் ஆகி விட்டது சர்வா..” என்ற அன்னையின் பேச்சுக்கு,

“ கவலை படாதிங்க மாம்.. . என்னை மீறி எதுவும் ஆக விட மாட்டேன்… அதோடு என் வாழ்க்கையும் பாழாகவும் நான் விட மாட்டேன்..” என்று தன் அன்னையிடம் சொல்லி விட்டு தன் அறைக்கு சென்றவன்..

மான்சி அங்கு இருக்கும் ஷோபாவில் எப்போதும் போல் தலை குனிந்து அமர்ந்தவளிடம்..

“ சாப்பிட வா மான்சி… அம்மா கோயிலுக்கு போயிட்டு வர சொன்னாங்க..” என்று எதுவும் நடவாதது போல் பேசிய கணவனை நிமிர்ந்தும் அவள் பார்க்கவில்லை..

திரும்பவும் “ மான்சி எனக்கு நேரம் ஆகுது.. கோயில் போயிட்டு உன்னை வீட்டில் விட்டு விட்டு நான் ஒரு மீட்டிங்கை வேற நான் அட்டன் செய்யனும்…” என்று திரும்பவும் சாப்பிட அழைத்தவனிடம்..

“ எனக்கு சாப்பாடு வேண்டாம்..” என்று தான் அவள் சொல்ல நினைத்தாள்.. ஆனால் அது எத்தனை நாளைக்கு..? என்று அவள் அறிவு எடுத்து உரைத்ததில் எதுவும் பேசாது அந்த அறையை விட்டு செல்ல பார்த்தவளின் கை பிடித்து இழுத்ததில், அவனின் மார்பில் தன் முகம் புதைய நெருக்கத்தில் வந்தவளின் முகத்தை நிமிர்த்தி தன்னை பார்க்க வைத்தவன்…

“ எழுந்ததும் நீ ஏன் என்னை எழுப்பாது வெளியில் போன.. அட்லீஸ்ட் நான் எழும் வரையாவது, நம்ம ரூமில் இருந்து இருக்கலாம் தானே.. பார் என்னை நீ கவனிக்காது போனதால் தான் , காலையிலேயே வீட்டில் பிரச்சனை ஆகி விட்டது…

இனி காலையில் என்னை கவனிக்காது இந்த ரூமை விட்டு போக கூடாது..என்ன…? ” என்று பேசிக் கொண்டே ஆசையோடு மனைவியின் முகம் நோக்கி குனிந்தவனின் கண்ணுக்கு தன்னையே பார்த்திருந்த மான்சியின் கண்ணில் என்ன கண்டானோ சட்டென்று அவளை தன்னில் இருந்து பிரித்து நிறுத்தியவன்..

“ வா சாப்பிட போகலாம்..” என்று சொல்லி விட்டு விறு விறு என்று அவன் அந்த அறையை விட்டு போக,, அவன் பின் மெல்ல தான் தனக்கு எந்த பாதிப்பும் இல்லாதது போல், மான்சி அவன் பின் சென்றாள் …

சாப்பிடும் இடத்தில் இவர்களுக்கு முன் அனைவரும் அமர்ந்திருந்தனர்.. சர்வேஷ்வரன் தான் அமர்ந்த பின் தன் பக்கத்து இருக்கையை காட்டி..

“ உட்கார்..” என்பது போல் கண் ஜாடை காட்டவும், மான்சியும் எதுவும் பேசாது அவன் அருகில் அமர்ந்து கொண்டாள்…

வனிதா இவர்கள் இருவரும் வந்ததில் இருந்து அவர்கள் செயல்களை கவனித்துக் கொண்டு இருந்தவளுக்கு, என்னவோ காலம் காலமாக நடப்பது போல் இருந்த அவர்களின் செயல்களை பார்த்தவளுக்கு, ஆத்திரத்தில் கோபமாக ஏதோ பேச வரும் முன்..

சர்வேஷ்வரன்… “ உன் பொண்டாட்டிய சும்மா இருக்க சொல் மகி… அப்புறம் நான் ஏதாவது பேசினா நல்லா இருக்காது..” என்று முகத்தில் அடித்தது போல் பேசிய சர்வேஷ்வரனின் பேச்சுக்கு, மகேஷ்வரன் என்ன பதில் சொல்வது என்று முழித்துக் கொண்டு இருந்தான்..

ஆனால் வனிதாவுக்கு அது போல் எந்த தயக்கமும் இல்லை என்பது போல்… அதன் வெளிப்பாடாய்..

“ இப்போ கொஞ்ச நேரம் முன் சண்டையில் எதுவும் பேசாது அமைதியா இருந்த சர்வா.. கொஞ்சம் கொஞ்சமே நேரம் தான் அவர் ரூமில் இருந்தார்… அதுக்குள்ள… நல்ல கைக்காரி தான்…” என்று சர்வேஷ்வரனிடம் பேச்சை ஆரம்பித்து, மான்சியிடம் முடித்து வைத்த வனிதாவின் பேச்சில்..

இப்போது சர்வேஷ்வரன் வாய் திறக்கும் முன், வெங்கட பூபதி தன் அண்ணாவிடம்…

“காலையில் ஒரு சண்டை.. இதோ இப்போ ஒரு சண்டை என்று இது தொடர்ந்தால், வீட்டில் நிம்மதி இருக்காது அண்ணா.. இவங்க சண்டை நாளை பின்ன .. சர்வா மகி சண்டையாக கூட மாறலாம்..

ஏன்..? அது நம்ம வரை கூட தொடரலாம்..அது வரை போக கூடாது என்றால், நாம இப்போவே..” என்ற வெங்கட பூபதி அடுத்து என்ன சொல்ல போகிறார் என்று புரிந்துக் கொண்ட மகேஷ்வரன் அவசரமாக..

“ சித்தா அப்படி எல்லாம் எதுவும் நடக்காது.. என்னை வரை நான் பார்த்து கொள்கிறேன் சித்தா.. இதுக்கு என்று ஒன்றா இருக்கும் குடும்பம் பிரிய கூடாது..

வெளியில் பூபதி குடும்பம் என்றால், சமூகத்தில் அந்தஸ்த்தில் மட்டும் இல்லாம.. ஒற்றுமைக்கும், நம்ம குடும்பம் தான் என்று பேசுவதை நாமே கெடுத்துக்க வேண்டாம் சித்தா..” என்ற அண்ணன் மகனின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து அதோடு அந்த பேச்சை விட்டு விட்டார் வெங்கட பூபதி…

அதன் பின்னும் வனிதா ஏதோ பேச வர மகேஷ்வரன் அவள் காது அருகில் என்ன பேசினானோ… அவனை முறைத்து விட்டு அமைதியாக சாப்பிடும் தங்கள் வேலையை மட்டும் பார்க்க தொடங்கினாள்..

இதை எல்லாம் ஒரு பார்வையாளராக மட்டும் பார்த்து கொண்டு இருந்த சூர்ய நாரயணனின், கவனம் முழுவதும் மான்சியின் மீது தான்..

மான்சி சர்வேஷ்வரனின் கண் அசைவில் அமர்ந்து தலை குனிந்து சாப்பிட ஆரம்பித்தவள் தான்.. அதன் பின் தலை நிமிர்ந்து பார்க்கவும் இல்லை.. அங்கு தானும் அமர்ந்து இருப்பதை கவனித்தது போல் கூட தெரியவில்லை.. .

சூர்ய நாரயணனுக்கு இந்த திருமண முடிவு பெரிய தப்போ என்று இப்போது யோசித்தார்… அதுவும் மான்சியிடம் பேசிய பின் தன் தங்கை பேசிய பேச்சான..

“ நான் அவங்க அம்மா அப்படி இருந்தும் அந்த பெண்ணை இங்கு கொண்டு வந்ததுக்கு, என் மகனை என் கிட்ட இருந்து பிரிப்பிங்களோ.. அந்த எண்ணத்தோடு தான் அந்த பெண்ணை இங்கு அனுப்பியதோ..” என்று பேசிய பேச்சில், அவரின் இந்த முடிவு தப்பே என்று உறுதியாக நினைத்தார்…

வைதேகிக்கும் காலையில் மான்சியை பார்த்த அந்த மகிழ்ச்சி சுத்தமாக இப்போது இல்லாது போய் விட்டது…

அதனால் தான் மான்சியை பற்றி பேசும் போது மருமகள் என்று குறிப்பிடாததோடு மட்டும் அல்லாது, பெயரை கூட சொல்லாது… வேறு யாரோ என்பது போல் அந்த பெண் என்று சொல்லி பேச வைத்தது…

இவை அனைத்தையும் கவனித்த சூர்ய நாரயணன் அடுத்து என்ன என்பது போல் தான் இருந்தது..

ஆனால் மான்சியோ சாப்பிட்டு முடித்தும் அப்படியே அமர்ந்திருப்பது பார்த்த சர்வேஷ்வரன்..

“ நீ கோயிலுக்கு கிளம்பி ரெடியா இரு.. நான் வர்றேன்..” என்ற பேச்சுக்கு, ஒரு தலை அசைப்போடு மேல் சென்றவள் பின் சிறிது நேரத்துக்கு எல்லாம் சர்வேஷ்வரனும் சென்றான்..

அங்கு மான்சி தன் கை பேசியில்… “ இன்னும் நீ கிளம்பாது என்ன செய்துட்டு இருக்க நவீன்.. சீக்கிரம் கிளம்பு.. எந்த ஒரு க்ளாசும் மிஸ் செய்யாதே… உன் ஏய்ம் எப்போதும் டாக்டர்.. அது மட்டும் தான் இருக்கனும்.. வேண்டாத குப்பையை மனதில் வைத்துக் கொள்ளாதே புரியுதா..?” என்று பேசிக் கொண்டு இருந்தாள்..

அது மான்சி தன் தம்பிக்கு சொன்னதா.. இல்லை அவளுக்கே சொல்லிக் கொண்டதா என்பது வேறு..

சிறிது நேரம் நவீன் பேச்சை கேட்டவள்.. பின்.. “ சரி சரி.. இனி நான் எழுந்ததும் உனக்கு போன் போட்டுட்டு தான் வேறு வேலையே சரியா..? சரி சாப்பிட்டு கிளம்பு..” என்று சொன்னவள் மீண்டும் நவீன் என்ன சொன்னானோ அதற்க்கு மான்சி..

“ வேண்டாம்.. வேண்டாம்.. இங்கு வேண்டாம்.. ஒரு இரண்டு நாள் பொறு.. வெளியில் பார்த்து கொள்ளலாம்..”

பின்.. “ ம்ம்…” என்று ம் கொட்டலுக்கு பின் தன் பேசியை அணைத்த பின் தான் மான்சி சர்வேஷ்வரனை கவனித்தது…

இவன் எப்போது வந்தான்..? எவ்வளவு நேரம் தான் பேசுவதை கவனித்துக் கொண்டு இருக்கிறான்.. இனி இதையும் பார்த்து தான் பேச வேண்டும்.. என்று நினைத்தாளே தவிர.. அவனிடம் எதுவும் பேசாது இருந்தாள்..

சர்வேஷ்வரனுன் மான்சியின் பேசியில் பேசிய பேச்சை விடுத்து..

“ என்ன கிளம்பலையா…?” என்று கேட்டதற்க்கு,..

“ காலையிலேயே குளிச்சிட்டு தான் கீழே போனேன்…” என்ற அவளின் பதிலை எப்படி எடுத்துக் கொள்வது என்று யோசித்த சர்வேஷ்வரன்..

“ இல்ல வெளியில் போறோம் வேற ட்ரஸ்…” என்று சொன்னவன் முகத்தை சுழட்டி காட்டி..

“ இதில் ஏதாவது செய்யலையா…? என்று தான் கேட்டேன்..” என்று சர்வேஷ்வரன் கொடுத்த விளக்கத்திற்க்கு மான்சி ஒரே பதிலாக..

“ எனக்கு அது பழக்கம் இல்ல,.. ட்ரஸ் இது புதியது தான்..” என்று பதில் கொடுத்தாள்.. அதன் பின் அவனும் வேறு எதுவும் பேசாது… அன்னையின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து அவளை கோயிலுக்கு அழைத்து சென்றவன்.. திரும்பவும் வீட்டில் விட்டு விட்டு அவன் அலுவலகம் பார்க்க சென்று விட்டான்..

முன் படி அவன் அனிதாவை திருமணம் செய்து இருந்தாலும், அவன் ப்ளான் இது தான்… ஒரு வாரம் டைட் ஷெடில் தான் அவனுக்கு, அதற்க்கு அடுத்த வாரம் தான் ஹனிமூன் செல்ல ப்ளைட் டிக்கட் ஆஸ்திரேலியாவுக்கு எடுத்து இருந்தான்..

அங்கு ஒரு பிஸ்னஸ் மீட்டிங்… இரண்டு நாள் தான்.. ஆனால் அங்கு பதினைந்து நாள் தங்கும் படி தான் அனைத்தும் புக் செய்து இருந்தான்..

அந்த பிஸ்னஸ் மீட்டிங் இவன் செல்வதில் அதில் எந்த மாற்றமும் இல்லை.. ஆனால் கூட மான்சி,,, இவளுக்கு பாஸ் போர்ட் இருக்கா…?

ஈவினிங் தான் விசாரிக்க வேண்டும்.. இதை அனைத்தும் அலுவலகத்துக்கு செல்ல காரில் பயணம் செய்யும் போது திட்டம் இட்டது…

மான்சியும் வீட்டுக்கு வந்த பின் தன் அறையை விட்டு எங்கும் போகாது இருந்தாள்.. இங்கு இருந்து படித்தால் தன் படிப்பில் தன்னால் கவனம் செலுத்த முடியுமா..? என்று யோசித்தவள்…

முடியனும்… கண்டிப்பா முடியனும்… எந்த பிரச்சனை வந்தாலும், தன் படிப்பை பாதிக்காத வாறு பார்த்து கொள்ள வேண்டும்.. அங்கு அவர் வந்து விட்டால், எப்படி இருப்போம்.. தங்கள் அறையை விட்டு வெளியில் செல்லாது தானே..

அதே போல் இங்கு எப்போதும் இருந்து விடலாம்.. அது மட்டும் தன் வீடா..? அதுவும் நமக்கு சொந்தம் இல்லாத வீடு தானே.. என்று தன் மனதில் உறுதி எடுத்த பின் தான் அவளால் அடுத்து என்ன என்று கூட யோசிக்க முடிந்தது…

இங்கு இருந்து அண்ணா நூலகத்திற்கு செல்லும் வழி தடத்தை கூகுல் மேப்பில் போட்டு பார்த்து, பின் தன் பேசியில் டவுன் லோட் செய்து வைத்திருந்த தன் பாட சம்மந்தம் ஆனதை படித்துக் கொண்டு என்று நேரம் மதியம் ஆகி விட்டது.

ரேவதி வைதேகியிடம்.. “ மான்சி இன்னும் சாப்பிட வரலையா…?” என்று கேட்டுக் கொண்டே பணியாளர் பரிமாறுவதை சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்..

அவ்வீட்டில் காலையிலும் இரவிலும் மட்டுமே வீட்டு பெண்களுக்கு பரி மாறும் வேலை.. அந்த சமயம் வீட்டு ஆண்கள் தொழில் சம்மந்தமாகவும், தனிப்பட்டு குடும்ப விசயமாகவும் அவர்களுக்கு நேரம் இல்லாத்தால் அந்த நேரம் பேச கூடும்..

அப்போ வேலையாட்கள் முன் பேச கூடாது என்று தான் வீட்டு பெண்கள் பரிமாறுவது.. மதியம் அனைத்தும் வேலையாட்கள் தான் பரிமாறுவது.. தன் தொட்டு வேலையாள் உபசரிப்பில் சாப்பிட்டுக் கொண்டு இருந்த ரேவதி தன் ஓரவத்தியிடம் கேட்டார்..

“ம்.. சாப்பிட கூப்பிடனும் அக்கா ..” என்று சுரத்தே இல்லாது வைதேதி பதில் அளிக்கவும்..

ரேவதி தான்.. “ என்ன வைதேகி ஒரு மாதிரி இருக்க..?” என்று கேட்டதற்க்கு..

“ இல்ல காலையில் நம்ம பத்துவ பத்தி மான்சி பேசுனது எனக்கு சுத்தமா பிடிக்கல அக்கா.. அம்மா பத்தி பேசினா அப்படி கோபப்படுறா..? வனி என்ன இல்லாததையா சொன்னா..?” என்று தன் மன ஆதங்கத்தை தன் ஓரவத்தியிடம் சொன்னார்..

“ எனக்கும் மான்சி பத்துவை பத்தி அப்படி சொன்னதும், ஒரு மாதிரியாக தான் ஆயிடுச்சி.. இருந்தாலும், அந்த பெண் காலையில் கூட சரியா சாப்பிடல.. அதற்க்கு பின் நாம் ஜூஸ் குடித்தோம்.. அந்த பெண் கீழேவே இறங்கி வரல..” என்ற ரேவதியின் பேச்சை வைதேகி..

“ நாம எடுத்துட்டு போய் சேவகம் செய்ய முடியாது அக்கா.. அவளுக்கு வேண்டும் என்றால் அவள் தான் கீழே இறங்கி வர வேண்டும்..” என்று சொன்ன இதே வைதேகி தான் காலையில் மான்சியின் ஈர கூந்தலை அவள் வேண்டாம் என்று மறுக்க மறுக்க துவட்டி விட்டது..

என்ன தான் இருந்தாலும், தன் நாத்தனார்...தான் தன் அண்ணனுக்கு தான் பார்த்து மணம் முடித்த பெண் என்று பத்மாவதியை பேசியதில் தன்னால் மான்சியின் மீது ஆதங்கம் வந்து விட்டது என்பது தான் உண்மை...

“ சரி விடு வைதேகி அதை எல்லாம் பெருசா எடுத்துக்காதே..” என்று ரேவதி சொல்லவும்..

“ நானும் காலையில் இருந்து அது தான் நினச்சிட்டு இருக்கேன் அக்கா… இருந்தாலும், “ என்று மேலும் ஏதோ சொல்ல ஆரம்பித்த வைதேகி சூர்ய நாரயணன் தனிக்குடுத்தனத்தை பற்றி பேசாது..

தன் அண்ணனை விட்டு கொடுக்க மனம் இல்லாது.. . “ வனி சாப்பிட வரல அக்கா..” என்று கேட்டுக் கொண்டே வைதேகியும் சாப்பிட ரேவதியின் அருகில் அமர்ந்தார்..

ரேவதி தயங்கிய வாறே.. “ வெளியில் போய் இருக்கா..” என்று அதற்க்கு அடுத்த என்ன பேசுவது என்று தயங்கினார்..

வனிதா எப்போதும் மதியம் வீட்டில் இருக்க மாட்டாள்.. அதே போல் இரவும் நேரம் கழித்து தான் வருவாள். சொந்தத்தில் பெண் எடுத்து விட்டு, தன் கணவனிடம் கூட இதை பற்றி பேச முடியாது..

ஒரு முறை பேசியதற்க்கு தன்னிடம் இரண்டு மாதம் தன் கணவன் பேசாது இருந்ததில், அதன் பின் அதை பற்றி பேசுவது இல்லை.. இருந்தாலும் ஒரு ஆதங்கம். இங்கு இவள் குடும்பம் நடத்தா தான் வந்தாளா..? என்று.. ஆனால் அதை பற்றி வெளியில் சொல்ல முடியாது.. இதோ இது போல் வனிதா பேச்சு வரும் போது எல்லாம் அந்த பேச்சை தவிர்த்து விடுவார்..

அதே போல் இப்போதும் ரேவதி வேறு பேச்சுக்கு தாவும் போது தான், மான்சி உணவு உண்ண அங்கு வந்து சேர்ந்தது…

இருவரும் ஒரு சேர.. “ வா மான்சி வா சாப்பிட்டு..” என்று தன் உபசரித்ததில் காலையில் இருந்த மனநிலை மான்சிக்கு இப்போது சுத்தமாக இல்லை..

ஏன் என்றால், அவளுமே அவர்கள் இருவரும் பேசுவதை கேட்டுக் கொண்டே தான் மான்சி வந்தது… அவர்கள் பேசுவதில் மான்சி புரிந்துக் கொண்டது இது தான்..

வெளியாட்களே பரவாயில்லை.. அதாவது இது வரை தன்னை வெளியாட்கள் பார்த்த அந்த அப்பட்டமான கேவலமான பார்வையை விட.. இவர்கள் தனக்கும் முன்னும் பின்னும் மாறுப்பட்டு பேசுவது தான் மோசமானது.. என்று நினைத்தவள் அவளும் இருவரையும் பார்த்து பொதுவாக ஒரு புன்னகை சிந்தியவள் பின் தன் உணவை முடித்து கொண்டு தன் அறைக்கு சென்று விட்டாள்..

தன் அறைக்கு போக படியில் ஏறும் போது மான்சி இதை தான் நினைத்தாள்.. கண்டிப்பாக தன்னை பற்றி தான் இப்போது பேசிக் கொண்டு இருப்பார்கள் என்று..

அதே போல் தான் ரேவதி.. “ என்ன இது வந்தா சாப்பிட்டா போயிட்டே இருக்கா…” என்ற பேச்சுக்கு..

வைதேகி எப்போதும் அனைவரும் பேசும் பேச்சான .. “ வளர்ப்பு சரியில்லை அக்கா…” என்று பேசிக் கொண்டு இருந்தவர்கள் ஒன்றை மறந்து விட்டார்கள்..

இந்த வீட்டு பெண்.. இந்த வீட்டு பெண் என்று கொண்டாடும் வளர்ப்பான வனிதா… வீட்டிலேயே இல்லை என்பதும்.. அடுத்த அனிதாவின் இப்போதைய நிலையையுமே…

தங்கள் அறைக்கு வந்த மான்சி தன் படிப்பை தொடர்ந்தவள்.. தன் தம்பி வீட்டுக்கு வரும் நேரத்தையும் கணக்கிட்டு இடையே அவனை அழைத்து பேசவும் அவள் மறக்கவில்லை…

ஒரளவுக்கு இன்றைய படிப்புக்கான கோட்டா முடிந்த பின் தன் மனதை ரிலேக்ஸ் செய்ய எப்போதும் போல் மெலடி இளையராஜா பாடல்களை கேட்டுக் கொண்டு இருந்தவளின் மனதில் நாளையில் இருந்து நூலகம் சென்று விட வேண்டும்..

இதே போல் ஒரே அறையில் படித்துக் கொண்டு இருந்தால், கூடிய சீக்கிரம் மனது கண்டிப்பாக சோர்வாகி விடும் என்று அவள் நினைத்துக் கொண்டு இருக்கும் போதே அறைக்குள் நுழைந்த சர்வேஷ்வரனை இப்போது தான் எழுந்து வர வேற்க வேண்டுமா..

இல்லை அவன் கையில் இருக்கு கனிணியை வாங்க வேண்டுமா என்று அவள் யோசித்து முடிக்கும் போதே அவள் நினைத்ததையும் மீறி அவன் குளியல் அறையில் இருந்து தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தவன்..

மான்சியின் பக்கத்தில் சாவுகாசமாக அமர்ந்தவன். “ மான்சி தலை வலியா இருக்கு கொஞ்சம் பிடித்து விடு…” என்று கண் மூடி சொன்னவனின் பேச்சை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியாது முழிந்த்திருந்தாள் மான்சி..’

தான் தலை பிடித்து விட சொல்லியும் தன் நெற்றி மீது நேற்று இரவு கண்ட மென்மையின் பரிசம் உணராது போகவும் கண் திறந்து தன் மனைவியின் முகத்தை பார்த்தான் சர்வேஷ்வரன்..

அங்கு அவன் கண்டது குழப்பமான போன முகத்தோடு, தன்னையே பார்த்து கொண்டு இருந்த மனைவியின் முகத்தில் அவன் என்ன கண்டானோ … அவனே தன் மனையின் கை பற்றி தன் நெற்றி மீது வைத்து கொண்டான்…

அவன் தொடு உணர்சியில் தன் நிலைக்கு மீண்ட மான்சியின் கை தன்னால் அவள் நெற்றியை பிடித்து விட ஆரம்பித்த்தில் சர்வேஷ்வரனின் கண் மீண்டும் மூடிக் கொண்டது என்றால், மான்சியின் மனது விழித்து கொண்டது…

விழித்துக் கொன்ட அவள் மனது சொன்னது இது தான்.. நேற்றி இரவு சர்வேஷ்வரனின் செயல்கள்.. அதாவது இந்த அறையில் தன்னிடம் காட்டிய நெருக்கம்… காலை அதாவது இந்த அறைக்கு வெளியில் அவன் காட்டிய முகம் .. பின் மீண்டும் இந்த அறைக்கு வந்ததும் தன்னிடம் நெருங்க முயன்றது… பின் இதோ இப்போது இவனின் செயல்கள் என்று ஒன்றன் பின் ஒன்றாக அவள் மனது அசைப்போட்டு பார்த்ததில் அவளுக்கு கிடைத்த விடை..

இவனுக்கு தேவை என் உடல்… இந்த உலகிற்க்கு அவன் வாழும் குடும்ப வாழ்வு.. தன் குடும்ப மானம்.. இது தான். இதில் தன் மனதோ.. தன் மனமோ இவனுக்கு பெரியது என்ன கண்ணுக்கே தெரியவில்லை என்பது தான்..

மான்சி நினைத்தில் ஒரு சிலது சரி தான்.. அதாவது அவன் குடும்ப மானம்..அதன் ஒற்றுமை என்று பார்த்ததில், தன் மனைவியின் மனதை பாராது விட்டு விட்டான் என்பது உண்மை தான்..

ஆனால் அது மட்டும் தான் உண்மை.. மான்சி நினைத்த அவனுக்கு தேவை தன் உடல் தான் என்று நினைத்த மான்சியின் நினைப்பு முற்றிலும் தவறானதே…
 
Top