Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Meezhveno Muzhgiduveno - 13

  • Thread Author
அத்தியாயம் 13

இதோ இது போல் அவன் இந்த நேரம் வீட்டுக்கு வரவே மாட்டான்… அதனால் தான் வீட்டின் உள் நுழைந்த அவனை அவன் தாயே..

“ என்ன சர்வா இந்த நேரம் வீட்டுக்கு வந்து இருக்க..?” என்று ஏதாவது பிரச்சனையாக இருக்குமோ என்று அதிர்ந்து கேட்ட பின் தான், அவர் நியாபகத்துக்கு நேற்று தான் தன் மகனுக்கு திருமணம் ஆனதே நியாபகத்தில் வந்தது போல்.. உடனே தன் முகபாவனையை மாற்றி கொண்டவர்..

“ காபியோடு ஏதாவது சாப்பிட்டே உன் ரூமுக்கு போ சர்வா…” என்று மேல தன் அறை பக்கமே தன் பார்வையை செலுத்தியவனிடம் கூறி வைதேகி எடுத்து கொண்டு வந்ததில், அவசர அவசரமாக காபியை மட்டுமே பருகியவன் சிற்றுண்டியை மறுத்து விட்டு தன் அறைக்கு வந்தவனுக்கு தன் மனைவியின் அருகாமை உடனே தேவை போல் இருந்தது..

ஆனால் அது எப்படி கேட்க என்ற யோசனையிலேயே தன் குளியலை முடித்திக் கொண்டு வந்தவனுக்கு, தன் மனைவியை தன் அருகில் வர வழைக்க வந்தது தான் இந்த தலைவலி… அவனுமே என்ன இது நானா இப்படி பெண் உடலுக்கு அலைகிறேன் என்று அவன் மனமே அவனுக்கு எதிராக முதலில் சொல்லியது தான்..

ஆனால் அவனின் மற்றொரு மனமோ.. மான்சியோடு அழகான பெண்கள் எல்லாம் இபனிடம் நெருங்கி பழக நினைக்கும் போது எல்லாம் அவர்களை அவன் விலக்கி தானே வைத்தான்.. அதுவும் அந்த இருபத்திர்ந்ண்டு இருபத்தி மூன்று வயதிலேயே.. இப்போது இதோ முப்பது தொடும் வயதிலா இப்படி அலைவேன் என்று யோசித்தவனுக்கு இதுவும் தோன்றியது..

ஒரு வேலை இது தான் தாலி கயிற்றின் வேலையோ என்றும்.. ஆனால் இதே தாலியை அனிதாவின் கழுத்தில் நான் கட்டி இருந்தால், இப்படி இவளின் அண்மைக்காக ஓடி வந்து இருப்பேனா..? கண்டிப்பாக இருக்காது தான் அவன் கேள்விக்கு பதில் கிட்டியது…

தன் மனைவியின் கை பரிசத்தில் கண் மூடி கிரங்கி கொண்டு இருந்தவனுக்கு என்ன தோன்றியதோ, மான்சியின் கை மீது தன் கை வைத்து அதை சிறை பிடித்தவனுக்கு, அடுத்து அவளின் கை மென்மையை பரிசோதனை செய்தவனிடம் இருந்து தன் கையை வெடுக்கென்று இழுத்து கொண்டதில், இனிமையான இசையை கேட்டு கொண்டு இருக்கும் வேளையில் அபஸ்வரமாய் இசையின் இடையில் இடையூறு ஏற்ப்பட்டால் எப்படி கோபம் வருமோ அந்த கோபம் தான் சர்வேஷ்வரனுக்கு வந்தது…

வந்த கோபத்தை மறைக்காது அதை முகத்தில் காட்டிய வாறு கண் திறந்து பார்த்தவனின் கண்ணுக்கு, ஒரு வித இறுக்கத்தோடு இருக்கும் மனைவியின் முகம் தான் அவனுக்கு தெரிந்தது…

அதில் இன்னும் கோபம் அவனுக்கு கூடியதில், … “ நேற்று இரவு இதுக்கு மேலான நெருக்கத்துக்கு எல்லாம் எனக்கு ஒத்துழைத்தவளுக்கு, இப்போது என்ன வந்தது…?” என்ற வார்த்தைகள் தாறுவாறாக அவன் வாயில் இருந்து வந்ததில், இறுக்கத்தில் இருந்த மான்சியின் முகம் நொடியில் அதிர்ச்சிக்கு மாறியதை பார்த்த்தும் தான் சர்வேஷ்வரனுக்கு, நாம் அதிகப்படியான வார்த்தைகளை விட்டு விட்டோம் என்றே தோன்றியது..

தோன்றியும் ஒரு மன்னிப்பு கேட்டு இருந்தால், மான்சியின் மனம் கொஞ்சம் ஆறி இருக்குமோ என்னவோ, ஆனால் அதை விடுத்து அடுத்த பேச்சாக..

“ உன்னை வெளியில் கூட்டிட்டு போக தான் இயர்லியா வீட்டுக்கு வந்தேன்.. ஆனா நீ என்னவோ அசோக வனத்து சீதை போல் உட்கார்ந்துட்டு இருக்க.. எனக்கு இது போல் இருந்தால் எல்லாம் சுத்தமா பிடிக்காது..

மாம் சொன்னாங்க, மதியம் சாப்பிட மட்டும் தான் கீழே போன போல… அதுவும் எதுவும் பேசாது சாப்பிட்டு திரும்ப மேல வந்துட்ட போல.. இனி அது போல் எல்லாம் இருக்க கூடாது… வீட்டில் உள்ளவங்க கூட பழக பார்…” என்று அவன் கட்டளை போல சொன்ன விதத்தில், தான் இங்கு அடிமை போல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறானோ..

அதாவது இவனுக்கு தேவைப்படும் போது அனைத்து தேவைகளையுக் பூர்த்தி செய்யவும், வீட்டுக்கு மருமகளாகவும், சொன்ன பேச்சை கேட்டு நடக்கும் தலையாட்டி பொம்மை போலவும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறானோ…

ஆனால் இந்த காலத்தில் யார் இது போல் இருப்பார்கள்..? இந்த காலத்தில் என்ன எந்த காலத்திலும் தன்மானம் இருக்கும் யாரும்.. அது ஆணாக இருந்தாலும் என்ன..? பெண்ணாக இருந்தாலும் என்ன…? இருக்க முடியாது என்று நினைத்தவள் அதை சர்வேஷ்வரனிடம் கேட்கவும் செய்தாள்…

“ நான் உங்களுக்கு அடிமையாக இருக்கனும் என்று நீங்க எதிர் பார்க்கிறீர்களா…?” என்று மான்சி கேட்டதில், இவ்வளவு நேரமும் படுத்த வாக்கில் பேசிக் கொண்டு இருந்தவன் எழுந்து அமர்ந்தான்..

சிறிது சிறிதே தான் கொஞ்சம் தள்ளி அமர்ந்திருந்தவளின் கை சதையை பிடித்து தன் அருகில் இழுத்தவன்..

“ வீட்டுக்கு மருமகளாக.. எனக்கு மனைவியாக இரு என்று சொன்னால், உனக்கு அது அடிமை தனமா…?” என்று அவன் ஒவ்வொரு பேச்சுக்கும், மான்சியை பிடித்துக் கொண்டு இருந்த சர்வேஷ்வரனின் கை பற்றுத்தளில் அழுத்தம் கூடியதில், அவளுக்கு வலித்தது தான்..

இருந்தும் அதை முகத்தில் காட்டாது, அதே விரைப்போடு தான் மான்சி சர்வேஷ்வரனின் முகம் பார்த்துக் கொண்டு இருந்தாள்..

கொஞ்சம் தனிந்து பேசி இருந்தால், சர்வேஷ்வரன் அடுத்து அவ்வளவு பெரிய வார்த்தையை விட்டு இருக்க மாட்டானோ என்னவோ.. ஆனால் மான்சியின் அந்த விரைப்பான தோற்றம்… நமக்கு சுயமரியாதையாக தோன்றுகிறது.. ஆனால் அவன் கண்ணுக்கு அது திமிர் தனமாக தோன்றியதில்…

“ ஒரு பெண்ணுக்கு கணவனிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அவள் அம்மா தான் சொல்லி கொடுப்பாள்.. இல்லை அம்மா தன் அப்பாவிடம் நடந்து கொள்வதை பார்த்து புரிந்து கொல்வாள்…

உனக்கு முன்னது உன் அம்மா சொல்லி கொடுக்க முடியாது… அதுக்கு அவங்க ஒருத்தருக்கு மனைவியாக இருந்து இருக்க வேண்டும்… முன்னது இருந்தால் தானே பின்னதுக்கு வழி.. அது தான் நான் சொல்லி கொடுப்பது உனக்கு அடிமை தனமா தெரியுது…” என்ற அவன் வார்த்தையில், அவனின் கை பிடியின் வலியை முகத்தில் காட்டாது தாங்கி கொண்டவளுக்கு, வார்த்தை எனும் திரவகத்தை தன் முகத்தில் பட்டதில், உண்மையாக திரவகம் வீச்சால் எப்படி முகம் வலியை காட்டுமோ அது அப்பட்டமாக அவள் முகத்தில் காட்டி அதிர்ந்து போய் சிலையானாள்…

இந்த பேச்சுக்கு எப்படி பேசுவது என்ன..? எப்படி முகத்தை வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூட தெரியாது போனாள் என்பது தான் உண்மை.. அவள் மனம் அனிச்சை பூ கிடையாது..

பல பேர்களின் பார்வையில் அவள் மனம் கொஞ்சம் இறுகி தான் போய் விட்டது… அதனால் தான் காலையின் வனிதா பேசிய பேச்சுக்கு அப்படி உடனடியாக பதில் கொடுக்க மான்சியால் முடிந்தது..

அதே போல் காலையில் நல்ல மாதிரியாக நடந்து கொண்ட தன் மாமியார் .. பின் அவர் பார்த்த பார்வையும், பேசிய விதமும், மாறியதில் பெரியதாக காயம் படாது ஒதுங்கி அவளால் போக முடிந்தது…

ஆனால் வார்த்தையில் திராவகம் தோய்த்து வீசிய சர்வேஷ்வரனின் பேச்சில், முன் எப்போதும் இல்லாத வகையில் பெரியாதக அடிவாங்கி போனாள்…

இங்கு அவளுக்கு மரியாதை கிட்டாது.. என்பது அவள் எதிர் பார்த்த ஒன்று தான்.. ஆனால் இது.. அதற்க்கு மேல் அங்கு இருக்க முடியது கிடு கிடு என்று கீழ் இறங்கியவளின் கால் தன்னால் தோட்டத்தின் பக்கம் சென்றது…

அங்காவது தன் அறையில் முடங்கி கொள்ளலாம்.. அங்கு அவளே ராஜா.. ராணி போல் இருப்பாள்.. அவ்வப்போது இந்த வீடு தனக்கு உரிமை இல்லாது என்ற நெருடல் அவளுக்கு வந்தாலுமே, அங்கு யாரின் தலையீடும் இல்லாது சுதந்திரமாக அவளாள் இருக்க முடிந்தது…

ஆனால் இங்கு அதுவும் முடியாது போலவே… கணவன் மனைவி எனும் ஆன பின்.. அதுவும் நேற்றைய கூடலுக்கு பின்.. தனித்து என்பது.. அவன் விடுவானா..?

அது தான் சொல்லி விட்டானே.. மனைவியின் கடமை என்று.. மறுத்தால் தன் அம்மாவின் வாழ்கை தான் சுட்டி காட்டுவான்.. என்று ஏதேதோ நினைத்ததில் , மான்சி தன் கணவன் அவசர அவசரமாக வெளியேறியதை கவனிக்க தவறி இருந்தாள்..

ஆனால் தன் ஓரகத்தியோடு பேசிக் கொண்டு இருந்த வைதேகி, தன் மகன் அலுவலகத்தில் இருந்து ஆசையோடு வந்தது.. பின் முகத்தில் ஒரு இறுக்கத்தோடு தான் கூப்பிட கூப்பிட அவசரமாக வெளியேறியதில், ஏன் என்று யோசிக்கும் போதே, தோட்டத்தில் தன் நினைவு இல்லாது யோசித்து கொண்டு இருந்த மான்சி, இருட்டி விட்டதும் தோட்டக்காரன்…

இரண்டு முறை… “ சின்னம்மா சின்னம்மா சின்னய்யா உங்களை வீட்டுக்கு உள்ளே போக சொன்னார்.. இருட்டி விட்ட பின் தோட்டத்தில் பூச்சி ஏதாவது வரும்… அவ்வளவு பாதுகாப்பு இல்லை..” என்றதில் தான் தன் உணர்வு பெற்று மான்சி வீட்டுக்குள் நுழைந்தது…

ஆசையோடு வீட்டுக்கு வந்த மகன். ஏன்..? இப்படி ஒரு இறுக்கத்தோடு தான் கூப்பிட கூப்பிட தன்னிடம் என்ன என்று கூட கேளாது விரைந்து போனான் என்ற வைதேகியின் கேள்விக்கு விடையாக மான்சி வீட்டுக்குள் நுழைந்ததை பார்த்த்தில் விடை கிடைத்து விட்டது தான்…

ஆனால் அந்த விடை வைதேகியின் மனம் ஒப்புக் கொள்ளும் படியாக இல்லாததால், அந்த புகைச்சல் கொடுத்த அழுத்தத்தில் வார்த்தைகளாக…

“ ஒரு புருஷன் வீட்டுக்கு வந்தா… பார்த்து காபி டீ.. கொடுக்க.. சாப்பிட ஏதாவது கொடுக்க …தான் நீ கீழே இல்ல.. அவனே உன்னை தேடி அறைக்கு வந்தா…பேச கூட நீ அங்கு இல்லேன்னா என்ன…? அதுவும் நேற்று தான் உங்க இரண்டு பேருக்கும் திருமணம் ஆகி இருக்கு… இது போல் இருந்தா அது குடும்பத்துக்கு நல்லது இல்ல சொல்லி விட்டேன்…” என்று கட கட என்று சொல்லி விட்டு தங்கள் அறைக்கு போக பார்த்த வைதேகியின் செவியில் ..

“ அது தான் சொல்லிட்டிங்களே அத்த.. குடும்பத்துக்கு நல்லது இல்லேன்னு.. அது குடும்ப அமைப்பில் இருந்து வந்தவங்களுக்கு தெரியும்… நீங்க இவ கிட்ட அதை பத்தி பேசுனா பாவம் அவளுக்கு எங்கு இருந்து இது எல்லாம் தெரிய போகுது…” என்று வனிதா அவள் பங்குக்கு பேசிய வார்த்தைகள் வைதேகியின் காதில் விழுந்தது…

வனிதாவின் பேச்சில் தன் அறைக்கு போக பார்த்த வைதேகி திரும்பி தன் ஒரகத்தி ரேவதியை ஒரு பார்வை பார்த்தவர் .. ஏதோ பேசும் முன் அந்த இடத்துக்கு வந்த சர்வேஷ்வரன் வனிதா உடுத்தி இருந்த ஆடையை அருவெருக்க தக்க விதமாக ஒரு பார்வை பார்த்து கொண்டே..

“ குடும்ப அமைப்பில் இருந்து வந்த நீ இந்த நேரத்துக்கு எங்கேம்மா போற.. ? அதுவும் மகி இப்போ தான் வீட்டுக்கு வந்து இருக்கான் போல..” என்று கேட்டான்..

வேறு யார் கேட்டு இருந்தாலும் வனிதா என்ன பதில் சொல்லி இருப்பாளோ.. ஆனால் அது என்னவோ இந்த சர்வேஷ்வரன் ஏதாவது கேட்டால் மட்டும் வனிதா ஒழுங்காக தான் பதில் சொல்வாள்..

ஏன் என்றால் சர்வா மற்றவர்கள் விசயத்தில் அவ்வளவாக தலையிட மாட்டான்.. தலையிட்டால் குடும்ப உறுப்பினர் மொத்த பேரும் அவனுக்கு பின் தான் நிற்பர்.. அவ்வளவு நம்பிக்கை அவன் பெயரில்..

இவனை எதிர்த்து பேசி மற்றவர்களின் அனைவரின் கவனமும் தன்னிடம் விழுவதில் அவளுக்கு அவ்வளவு பிடித்தம் இல்லாத காரணத்தினால், அவனிடம் மட்டும் கொஞ்சம் ஒழுங்காக தான் பேசுவாள்..

அதன் தொட்டு அவன் பேசிய அந்த வார்த்தகளை காதில் விழாதது போல் சர்வா கேட்ட கேள்விக்காக விடையாக..

“ அம்மா கூட நையிட் தங்க தான் சர்வா.. என்ன செய்யிறது அப்பா அந்த பொம்பளை வீட்டுக்கு போயிட்டார் போல.. அம்மா தனியா இருப்பது என்னவோ போல் இருக்கு வனி.. என்று சொன்னாங்க… அது தான்…” என்று வனிதா அந்த பொம்பளை என்று சொல்லும் போது மான்சியை குரோதமாக பார்த்து கொண்டே சொன்னாள்..

அதற்க்கு சர்வேஷ்வரன்.. “ மாமா ஹாஸ்பிட்டலில் தான் இருக்கார்…” என்ற சர்வாவின் பேச்சில் வனிதா என்ன பதிலில் சொல்லி சமாளிப்பது என்று யோசிக்கும் போதே சர்வா தொடர்ந்து…

“ ஹாஸ்ப்பிட்டலுக்கு போகும் படி தான் ட்ரஸ் பண்ணிட்டு இருக்க போ… “ என்று வனிதாவிடம் உன்னை நான் அறிவேன் என்பது போல் அவளை பார்த்து பேசினான்..

பின் தன் அன்னையை பார்த்து… “ மருமகள் கிட்ட எப்படி நடந்துக்கனும் என்று வீட்டு பெரியவங்களா நீங்க சொல்லி கொடுங்க… அதில் தப்பு இல்ல தான்.. ஆனா என் கிட்ட அவள் எப்படி நடந்துக்கனும் என்று நான் அதை அவளுக்கு புரிய வைப்பேன்..

அதே போல் அவளை எது சொல்றது என்றாலும், இது போல் ஹாலில் வேலையாள் பார்ப்பது போலவோ, இல்ல தகுதியில்லாதவங்க எல்லோரின் முன்னும் குறை சொல்வது போலவும் அவளை சொல்லாதிங்க..

நாளையில் இருந்து அவள் லைப்ரேரி போகனும்.. நான் அதுக்கு அவளுக்கு என்று ஒரு கார் வாங்க தான் கார் ஷோ ரூம் போனேன்..” என்ற சர்வேஷ்வரனின் பேச்சில் அவன் சொன்னது மற்றதை எல்லாம் விட்டு விட்ட வனிதா..

அவனின் கார் வாங்க என்றதில், அதுவும் மான்சிக்கு போய் வர கார் என்றதில், வெகுண்டு..

“ அது எப்படி ஒன்னா பிஸினஸ் ஒன்னா குடும்பம் எனும் போது இப்படி பெரொயவங்க கிட்ட டிஸ்கஸ் செய்யாது அவளுக்கு என்று தனிப்பட்டு கர் வாங்கு தருவீங்க.. உங்க அண்ணா எல்லாம் எனக்கு ஒரு சின்ன நகை வாங்கி கொடுப்பது என்றாலும், பெரியா மாமா சின்ன மானா ஏன் உங்க கிட்ட கூட சொல்லிட்டு தானே வாங்கிவார்.. “ என்று கோபத்தில் மூச்சு வாங்க பேசிவளின் கையில் தண்ணீர் பாட்டிலை திணித்த சர்வேஷ்வரன்..

அவள் அந்த தண்ணீரை குடித்து முடிக்கும் வரை காத்திருந்து விட்டு பின்…

“ ஏன்னா மகி வாங்கும் எந்த் ஒரு பொருளும் குடும்ப பிஸினசில் இருந்து எடுப்பது.. அதனால் அவன் எல்லோரிடம் அனுமதி வாங்கிட்டு தான் வாங்க முடியும்..

ஆனால் நான் என் சொந்த பிசினஸில் இருந்து வரும் பணத்தில் இருந்து வாங்குவதற்க்கு யாரிடமும் அனுமதி என்ன சொல்ல கூட தேவையில்லை… இன்குளூடிங் என் டாடியிடம் கூட…” என்று சொன்ன சர்வேஷ்வறை முறைக்காது அப்போது தான் வீட்டுக்குள் நுழைந்த மகேஷ்வரனின் தந்தை சங்கர பூபதி வனிதாவை பார்த்து முறைத்தவர்..

“ நீ வாயை வைத்து கொண்டு சும்மா இருக்க மாட்டியா…? காலையில் தானே சொன்னேன்.. வீணா இந்த வீட்டுல் பிரச்சனை வர கூடாது என்று.. சர்வா அவன் மனைக்கு எது வாங்கினா உனக்கு என்ன…?” என்று கோபத்துடன் பேசினார்..

வனிதா அதற்க்கு .. “இல்ல பெரொய மாமா சர்வா நம்ம மகியை அவன் குடும்ப தொழிலில் இருந்து மட்டும் தான் பணம் எடுப்பது போல் சொல்றார் மாமா..” என்று அழகு என்று கருதி மழலையாக பேசியவளை என்ன செய்தால் தகும் என்பது போல் தான் அவரின் பார்வையில் இன்னும் கோபம்கூடியது..

அவர் இந்த சமயத்தில் கோப்ச்த்தை மட்டும் தான் காட்ட முடியும்.. அதுவும் தன் மகனை ஆதரவாக பேசும் வனிதாவிடம் மட்டும் தான் அவரால் காட்ட முடியும்..

ஏன் என்றால் சர்வேஷ்வரன் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை எனும் போது அவரால் எப்படி மறுக்க முடியும்..

மறுக்க முடியாது என்பது போல் தான் சர்வேஷ்வரனின் அடுத்த பேச்சும் இருந்தது…

“ நான் உண்மையை தான் சொல்லும் போது பெரியப்பா எப்படி மறுப்பார் வனி… எப்போ நான் எனக்கு என்று தனி தொழில் தொடங்கி அதில் வெர்றி பெற தொடங்கினேனோ அப்போ இருந்து மானுக்கு கார் என்ன என்னிட இரிஉக்கும் அனைத்து காரும் என் பணத்தில், அதாவது என் தனிப்பட்ட தொழிலில் இருந்து எடுத்த்து..

ஆனால் நீங்ல போனிங்களே ஹனிமூன் அது கூட நம்ம குடும்ப தொழிலில் இருந்து வந்த பணத்தில் தான்..” என்ற அவனின் பேச்சை கேட்டுக் கொண்டே முதலில் அண்ணனை அனுப்பி விட்டு, அடுத்து வீட்டுக்குள் வந்த வெங்கட பூபதியின் காதில் விழுந்தது..
 
Active member
Joined
Jul 13, 2024
Messages
165
ivalavu Kaya padithutu Car vaangina aacha? Muthal pondattiyai purinchakkada.
 
Top