Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Meezhveno muzhgiduveno...14

  • Thread Author
அத்தியாயம்…14

சர்வேஷ்வரன் பேச பேச தன் அண்ணனின் முகத்தில் தெரிந்த மாற்றத்தை பார்த்த வெங்கட பூபதி..

“ சர்வா என்ன பேச்சு இது..” என்று தன் மகனை அதட்டினார்..

தப்பு செய்து இருந்தால் அந்த அதட்டலுக்கு சர்வேஷ்வரன் கட்டுப்பட்டு இருந்து இருப்பான்.. ஆனால் இப்போது தன் தந்தையின் கண்டிப்புக்கு பதிலாக தன் அவரை நேராக பார்த்து..

“ நான் பேசல டாட் ..வனி தான் பேச வைக்கிறா.. அதுவும் இல்லாது எப்போ பார் மானுவை சீண்டி விடுவது போலான இந்த பேச்சு நல்லதுக்கு இல்ல.. அதையும் அவ கிட்ட சொல்லுங்க..” என்று சொன்னவன் தன் மனைவியின் கை பிடித்து மாடி படியில் கால் வைத்தவன் பின் என நினைத்தானோ..

திரும்பி தன் பெரியப்பாவை பார்த்து… “ இப்போ எல்லாம் என் காதுக்கு வரும் விசயம் எதுவும் நல்லதா இல்ல பெரியப்பா… “ என்று வனிதாவை ஒரு பார்வை பார்த்த வாறு சங்கர பூபதியிடம் சொன்னவன் பற்றிய தன் மனைவீன் கையை விடாது அழைத்து சென்றான்..

இங்கோ சர்வேஷ்வரனின் பேச்சில் சங்க்ர பூபதி குழம்பி போனவராய் தன் தம்பியிடம் ஏதோ பேச ஆரம்பிப்பதற்க்குள் வனிதா அவசர அவசரமாக..

“ மாமா அம்மா அப்போவே என்னை ஹாஸ்பிட்டலில் இங்கு என் கூட யாரும் இல்ல.. உன் தங்கை கூடவும் யாரும் இல்ல .. நீ வா என்று என்னை கூப்பிட்டாங்க.. “ என்ற பேச்சில் அண்ணன் தம்பி இருவரும் மற்றதை எல்லாம் மறந்து..

“ போம்மா சீக்கிரம் போ.. பத்து பாவம் தனியா இருப்பா..” என்று தங்கை பாசத்தில் கூறினார்கள்.. எனக்கு இது தானே வேண்டும் என்று நினைத்து கொண்டு, அவசர அவசரமாக தன் கை பேசிக்கு வந்த மெசஞ்சருக்கு பதில் அளித்த வாறு, தன் காரில் ஏறிக் கொண்டு விரைந்து சென்று விட்டாள்..

அப்போது மட்டும் சர்வேஷ்வரனின் பேச்சில், அவன் ஏன் அப்படி சொன்னான்..? என்ன ஏது என்று சங்கர பூபதி யோசித்து இருந்தால், குறைந்த பட்சம் தன் தம்பி மகனை அழைத்து என்ன என்று அவனிடமாவது கேட்டு இருந்தால், பிற்காலத்தில் அனிதாவால் போக பார்த்த அவர்கள் குடும்ப மானம் மான்சியால் ஏதோ தப்பி பிழைத்ததை, வனிதா ஒரே அடியாக குழியில் போட்டு புதைக்க போவதை தடுத்து இருந்து இருக்கலாமோ என்னவோ..?

ஆனால் விதி எனும் நூல் கொண்டு நம்மை எல்லாம் ஆட்டி வைக்கும் ஆட்டத்தை, யாராலும் தடுத்து நிறுத்த முடியாது எனும் போது.. எப்படி சங்கர பூபதியால், சர்வேஷ்வரனின் பேச்சை சரியாக யோசித்து இருந்து இருக்க முடியும்..

தங்கள் அறைக்கு கை பிடித்து அழைத்து வந்தவனின் கையை அறைக்கு வந்ததும், கோபத்துடன் அவன் கையில் இருந்து தன் கையை இழுத்துக் கொண்டவளை தடுக்க பார்த்தனுக்கு, மீண்டும் தன் கையை அவனிடம் சிக்கி கொள்ளாத வாறு கொஞ்சம் தள்ளி நின்றுக் கொண்டு இருந்தவளின் செய்கை சர்வேஷ்வரனுக்கு சிரிப்பை வர வழைத்தது தான் ..இருந்தும் அதை முகத்தில் காட்டாது சாதரணமாக..

தான் எதுவும் பேசாத வாறும்.. கீழே எதுவும் நடவாதது போலவும்… “ உனக்கு இந்த கார் வாங்க வேண்டும் என்று ஏதாவது ஆசை இருக்கா..? கலர் என்ன கலர் பிடிக்கும்..?” என்று கேட்டதில், இவளுக்கு தான் என்ன இது என்பது போல் ஆகி விட்டது..

சிறிது நேரம் முன் இதே அறையில் இவன் தன்னிடம் பேசியது என்ன..? இவன் பேசிய அதே போலான வார்த்தைகளை தான் வனிதாவும் பேசினாள்.

அப்போது மட்டும் இவன் கோபமாக பேசியது.. இது என்ன.? ஒரு சமயம் இது தான் குடும்ப அமைப்பா…? அது தான் பாட்டே இருக்கே.. அடிக்கிற கை தான் அணைக்கும் என்று..

ஆனாலும் இது வரை அடி எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவளுக்கு தெரிந்தது இல்லை.. சிறு வயதில் தன் அம்மா வேலை செய்த வீட்டில், அந்த வீட்டின் உரிமையாளர்களிடம் ஒரு சில முறை அடி வாங்கி இருந்து இருக்கிறாள்..

அந்த அடி எல்லாம், அவளுக்கு இப்போது நியாபகத்தில் இல்லை.. அதனால் தானோ என்னவோ, சர்வேஷ்வரனின் பேச்சு அவளாள் தாங்கி கொள்ளவே முடியவில்லை.. தன் அன்னையின் வாழ்க்கை முறை தெரியும் தானே..

ஏதோ தெரியாது மறைத்து கல்யாணம் செய்தது போல் என்ன இது…? எப்போதும் இது போலான பேச்சு..? அதுவும் நேற்று தான் திருமணம் முடிந்தது.. வந்ததில் இருந்தே ஆரம்பித்து விட்டது இது போலான பேச்சுக்கள்… இது போலான வார்த்தைகளை எத்தனை நாள் கேட்டுக் கொண்டு இருப்பது..

இதோ இவனிடமும் தன்னால் வாயை திறக்க முடியவில்லை. அதே போல் கீழே வனிதாவின் பேச்சுக்கும் தன்னால் பதில் கொடுக்கும் மனநிலையில் அவள் இல்லை..

பேசி இருந்தாலுமே.. பெரியவர்கள் தன்னை தான் ஏதாவது சொல்லி இருப்பார்கள்.. காலையில் நன்றாக பேசியவர்கள் பின் ஏன் அப்படி நடந்து கொண்டார்கள் என்ற காரணம் பத்மாவதியை பற்றிய நான் பேசிய அந்த பேச்சு என்று அவளுக்கு தெரிந்து தான் இருந்தது…

அவர்கள் இந்த வீட்டு பெண்… கண்டிப்பாக இங்கு இருப்பவர்களுக்கு அவர்கள் மீது அன்பும் .. அக்கறையும் இருக்க தான் செய்யும்.. அதுவும் தான் துளசியின் மகள் எனும் போது.. தான் அவர்களை தவறாக பேசுவது தவறு தான்.. இவர்கள் என்னை தான் குறை சொல்வார்கள்..

ஆனால் அனைத்தும் இவர்களுக்கு தெரியும் தானே.. இவர்கள் தானே தன்னை தேடி வந்தார்கள்.. ..? இன்னும் கேட்டால் இதனால் எனக்கு தானே பிரச்சனைகள் அதிகமாகும்… ‘

இவர்களின் குடும்ப மானம் காக்க நான் தேவைப்படும் போது தன்னை உபயோகித்து விட்டு, இப்போது என்ன..? என்று பல விசயங்கள் அவளின் மூளை யோசனை செய்ததில் அவள் உடல் மனம் மிக பலவீனம் ஆனது தான் மிச்சம்..

காலையில் இருந்து யோசித்து யோசித்து மூளை கொடுத்த சோர்வில் தலை மீது கை வைத்துக் கொண்டு அங்கு இருந்த இருக்கையில் அப்படியே அமர்ந்து விட்டாள்.

தான் கேட்ட கேள்விக்கு பதிலாக மான்சியின் முகத்தையே பார்த்து கொண்டு இருந்த சர்வா அவள் முகத்தில் வந்து போன பாவனையிலும், அவள் முகத்தில் தெரிந்த கலைப்பிலும் வேறு எதுவும் கேட்காது அங்கு இருந்த தண்ணீர் பாட்டிலை அவளிடம் கொடுத்தான்..

மான்சியும் மறுக்காது அதை வாங்கி பருகியபின் அடுத்து என்ன என்பது போல் தன் கணவனை ஆயசத்துடன் பார்த்தாள்..

மான்சியின் அந்த பார்வையில் சர்வா என்ன உணர்ந்தானோ.. “ ஈவினிங் ஏதாவது சாப்பிட்டியா…?” என்ற அவனின் கேள்விக்கு மான்சி உடனடியாக பதில் கொடிக்காது யோசிப்பதில் இருந்தே அவள் எதையும் பருகவில்லை என்று புரிந்து கொண்டவன்..

மேற்பார்வையிடும் சரோஜாவை அழைத்து..” குடிக்க ஏதாவது கொடுத்து அனுப்பும் மாறு பணித்தான்..

அவன் பேச்சையும், அவன் செயல்களையும் அமைதியாக மான்சி பார்த்து கொண்டு இருந்தாளே ஒழிய .. சர்வாவிடம் வாய் திறந்து எதுவும் பேசவும் இல்லை.. கேட்கவும் இல்லௌ..

ஆனால் மான்சியின் மனதில் ஆயிரெத்தெட்டு கேள்விகள் உதயமாகிய வண்ணம் தான் இருந்தது… அதில் முதலாவனது இந்த வாழ்க்கை தனக்கு நீடிக்குமா என்பதே…? இது போலான பேச்சுக்களை எத்தனை நாள் கேட்க வேண்டி இருக்கும்…

அதுவும் தன் அன்னையை பற்றிய பேச்சு.. அனைவரின் வாயில் இருந்தும்.. ஆனால் பேசும் முறை மட்டுமே கொஞ்சம் மாறுபாடு காணப்படுகிறது… தான் வாய் திறந்தால், கண்டிப்பாக எதிர்ப்பு அத்தனை பக்கத்தில் இருந்தும் வரும் என்பது நிச்சயம்..

அடுத்து பத்மாவதி அவர்கள் இங்கு வரும் போது, அதை நாம் எப்படி எதிர் கொள்வது..? அவர்கள் தன்னை எப்படி நடத்தினாலும் வாய் திறக்க கூடாது தான்.. ஏன் என்றால் அவர்களை எதிர்த்து பேச தனக்கு எந்த அருகதையும் இல்லை தான்.

இது வரை இது போல் அவர்கள் குடும்ப உறுப்பினர்களை அதாவது சூர்ய நாரயணனின் குடும்பத்தவரை பார்க்கும் சந்தர்ப்பம் அவளுக்கு ஏற்ப்பட்டது கிடையாது..

நேற்றில் இருந்து தவிர்க்க முடியாத சூழ்நிலையில் தான் தள்ளப்பட்ட பின் அடுத்து என்ன..? என்று மான்சி யோசிக்கும் போதே, அவளின் பார்வை மொத்தமும் சர்வாவிடம் தான்.

இதோ இவனே தன்னை குத்தி கிளறுகிறான்.. இதோ இவனே தனக்காக பேசுகிறான்.. இவனை எந்த வகையில் சேர்ப்பது… இவனை எந்த அளவுக்கு நம்புவது என்று அவள் யோசிக்கும் போதே, தன் யோசனையின் அபத்தமும் அவளுக்கு புரிந்தது தான்..

இது எல்லாம் திருமணம் முன் யோசித்து இருக்க வேண்டிய விசயங்கள்.. இப்போது யோசித்து என்ன பயன்..? ஆனால் அவளுக்கு தான் யோசிக்கும் நேரத்தையே யாரும் கொடுக்கவில்லையே...என்று சர்வாவை பார்த்து கொண்டே அவள் சிந்திக்கும் போது சர்வாவும் மான்சியை தான் பார்த்து கொண்டு இருந்தான்..

ஆனால் அதை உணரும் நிலையில் தான் அவள் இல்லாது இருந்தாள்.. அதை சர்வாவும் புரிந்துக் கொண்டவனாக…

அவள் யோசனை இப்போது தன்னை பற்றியதாக தான் இருக்கும் என்று தெரிந்து இருந்தாலும், அதை கேட்காது அவளின் படிப்பு சம்மந்தமாக அவளிடம் பேச்சை ஆரம்பித்தான்..

“ உன் படிப்பு எப்படி போகுது..?” என்ற சர்வாவின் கேள்விக்கு, மான்சி முதலில் முழித்தாலும் பின் அவளே..

“ நானே உங்க கிட்ட அதை பத்தி பேசனும் என்று நினைத்து கொண்டு இருந்தேன்..” என்று சொன்னவள் பின் சிறிது யோசித்து விட்டு..

“ நான் எந்த காரணத்தினாலும், என் படிப்பை மட்டும் விடவே மாட்டேன்..” என்று அழுத்தம் திருத்தமாக அவனிடம் கூறினாள்..

அதற்க்கு சர்வேஷ்வரன்.. “ நானும் விடு என்று சொல்லவே இல்லையே..” என்று சொன்னவன்..

பின்.. “ ஆனால் உன் இந்த படிப்பின் மீது இந்த ஈடு பாடு எந்த அளவு என்று எனக்கு தெரியவில்லை.. இது சாதரணமாக மத்த படிப்பு போல் இல்லை.. அது உனக்கே தெரியும்… உனக்கு இந்த படிப்பின் மீது இருக்கும் பிடிப்பு எது வரை என்று தெரிந்தால் தான் எனக்கு எல்லாவற்றிற்க்கும் வசதியாக இருக்கும்..” என்ற சர்வேஷ்வரனின் பேச்சில், மான்சி குழம்பி போய் அவனை பார்த்தாள்..

அந்த குழப்பத்திற்க்கு காரனம் தன் படிப்பை பற்றி அவனுக்கு இருந்த சந்தேகத்தில் கிடையாது.. அவன் சொன்ன எல்லா வற்றிற்க்கும் வசதியாக இருக்கும் என்ற அவனின் பேச்சினால்..

அதனால் “ என் படிப்பு பற்றி என்ன வசதி எனக்கு புரியல…?” என்று மான்சி மீண்டும் குழம்பி போனவளாக தான் சர்வேஷ்வரனிடம் கேள்வி எழிப்பினாள்.. ..

அதற்க்கு சர்வேஷ்வரன் உண்மையான பதிலாகவே.. “ இல்ல வீட்டில் இருக்கும் யாருக்கும் நீ இனி மேல படிப்பதில் விருப்பம் இல்ல..” என்ற அவன் பேச்சில் அவனை மேல பேச விடாது கொதித்து விட்டாள்..

அவளின் நம்பிக்கையே அவளின் இந்த படிப்பு மட்டும் தான்.. இந்த படிப்பால் அவளின் தாயின் தவறு மறைக்க படாது தான்..

ஆனால் மற்றவர்கள் தன்னை பார்க்கும் அந்த பார்வை மாறுப்படும் தானே.. தன் பதவி தனக்கு மரியாதை ஈட்டி கொடுத்து தானே ஆக வேண்டும்.. அதோடு சிறு வயது முதலே தன் கனவு லட்சியம் என்பது அவளின் கலெக்ட்டர் என்றதிலேயே இருந்து விட்டது..

அதனால் அதை விடுத்து அடுத்து என்ன என்று கூட தன் வாழ்வில் அவளாள் யோசிக்க கூட முடியாது என்பது அவளுக்கு நிச்சயமே..

இந்த திருமணத்தை ஏற்றதற்க்கு கூட முக்கிய காரணம் தன் தம்பி சொன்ன தன் படிப்பு எந்த விதத்திலும் பாதிக்காது என்பதிலும் தான்.. அடித்தளமே ஆட்டம் கண்டதில் பதட்டத்தோடு பயமும் சேர்ந்து வந்ததில், சர்வேஷ்வரன் அருகில் சென்றவள் அவன் தோளை இரண்டை பிடித்து குலுக்கியவளாக..

“ ஏன்..? என் படிப்பு வேண்..டாம் என்று சொ..ல்..றாங்க.. எதுக்கு…? ” என்று பதட்டத்தோடு பேசியவளை இப்போது சர்வேஷ்வரன் அமைதி படுத்துவது போல் அவள் தோளை பிடித்து அங்கு இருக்கும் இருக்கையில் அமர்ந்தியவன்..

“ இப்போ எதுக்கு இந்த பதட்டம்.. அவங்களுக்கு விருப்பம் இல்லேன்னா என்ன.. வீட்டு பெரியவங்க பேச்சு கேட்டு நடக்க வேண்டியது தான்.. அதற்க்கு என்று எல்லா வற்றையும் கேட்டு தான் ஆக வேண்டும் என்று எந்த கட்டாயமும் கிடையாது.. புரியுதா..?

அதுவும் இது போல் படிப்பு சம்மந்தம் என்ற விசயத்தில் நம் விருப்பத்தை நாம் தான் பார்த்து கொள்ள வேண்டும்..” என்று சொன்னவன்..

“ இப்போ சொல்.. உனக்கு இந்த படிப்பு படிப்பது எல்லோரிடமும் நான் ஐ..ஏ.எஸ் என்ஸாமுக்கு பிரோப்பர் செய்யிறேன் என்ற கெத்துக்கு எல்லாம் இல்லையே…?” என்ற அவன் கேள்விக்கு..

தன் பிறப்பு.. தன் தகுதியை உயர்த்தி கொள்ள வேண்டும் என்று எல்லாம் சொல்லாது… ஒரே வார்த்தையில்…

“ இப்போது இந்த வீட்டில் என் படிப்புக்கு தடை என்று வந்தால், அடுத்த நிமிஷம் நான் எதை பற்றியும் யோசிக்காது இங்கு இருந்து சென்று விடுவேன்..” என்ற மான்சியின் வார்த்தையில் அவளுக்கு இந்த படிப்பின் மீது இருக்கும் ஈடு பாடு சர்வேஷ்வரனுக்கு மிக தெள்ள தெளிவாகவே புரிந்து விட்டது தான்..

இருந்தும் அது என்ன…? படிப்புக்காக இந்த வீட்டை விட்டு கூட செல்வேன் என்று சொல்வது என்ற அவளின் அந்த வார்த்தை தான் சர்வேஷ்வரனுக்கு பிடிக்கவில்லை..

இருந்தும் அதை பேசாது அவளின் படிப்பு விருப்பு மட்டுமே கருத்தில் கொண்டு..

“ அப்படி என்றால் ஒன்றும் பிரச்சனை இல்லை.. உன் இந்த படிப்பால் வீட்டில் எந்த பிரச்சனை வந்தாலும் நான் பார்த்து கொள்கிறேன்..” என்று மான்சிக்கு வாக்கு கொடுத்தான்..

சர்வேஷ்வரனின் இந்த பேச்சில் மான்சியின் மனது கொஞ்சம் அமைதி அடைந்தது.. இருந்தாலும் படிப்புக்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கனும் என்று யோசித்து..

“ ஏன் நான் படிக்க கூடாது என்று சொன்னாங்க..?” என்ற கேள்விக்கு சர்வேஷ்வரன் உண்மையான பதிலாக அதாவது மான்சி படிக்க என்று வெளியில் சென்றால் அவளின் அம்மா குணம் ஏதாவது வந்து விட போகிறது என்ற எண்ணத்தில் தான் தடை சொன்னாங்க என்பதை சொல்லாது..

“ எல்லா வீட்டிலும் பெரியவங்க என்ன சொல்வாங்க.. கல்யாணம் ஆனதும் அடுத்து குழந்தை குடும்பத்தை பார்.. இது தானே.. அது தான் அவங்களும் சொன்னாங்க..” என்ற உண்யை சொன்னால் மான்சியின் மன்து கஷ்ட்டபடும்..

ஏற்கனவே நானே நிறைய பேசி விட்டேன்.. அவள் அம்மா பற்றிய பேச்சு தங்களுக்கு இடையில் வர கூடாது என்று நான் நினைத்தாலுமே, அது என்னவோ அது தன்னால் வந்து விடுகிறது.. இனி அது போல் பேச கூடாது என்று அவனே நினைத்ததால், உண்மையை விடுத்து பொய் சொன்னான்..

பாவம் அப்போது அவனுக்கு தெரியவில்லை. இந்த பேச்சு சொன்னால் மான்சி மனது கஷ்டப்படும் என்று சொல்லாது விடுத்தானோ.. அதே வார்த்தைகளை தானே அவளை பார்த்து வீசப்போவது..

அதனால் சிறிது நேரம் முன் மான்சி சொன்னாளே… படிப்புக்காக நான் இந்த வீட்டை விட்டு கூட போவேன் என்ற அந்த அவளின் வார்த்தை பலிக்க போவதும் தெரியாது..

அடுத்து தன் மனைவியை சாப்பிட அழைத்தான். மான்சியும் எந்த மறுப்பும் சொல்லாது சாப்பிட்டு விட்டு அமைதியாக தங்கள் அறைக்குள் புகுந்துக் கொண்டாள்..

இந்த அமைதிக்கு காரணம் வனிதா சாப்பிடும் இடத்தில் இல்லாது போனதால் இருக்கலாம்..

அறைக்கு வந்த மான்சி . முதலில் தன் தம்பிக்கு தான் கை பேசியின் மூலம் அழைப்பு விடுத்தாள்.. அவளின் செயல்களை பார்த்துக் கொண்டே எதுவும் பேசாது அமைதியாக படுக்கையில் படுத்தவனுக்கு ஏனோ அவளிடம் பேச தோன்றவில்லை..

ஆனால் பார்க்க தோன்றியது.. பார்த்து கொண்டே இருக்க தோன்றியது…

அதுவும் மான்சி அவள் தம்பி நவீனிடம் .. “ என்னது ஈவினிங் வீட்டுக்கு வந்து எதுவும் சாப்பிடலையா..? ஏன்..? மதியம் அந்த சின்ன டிபன் பாக்ஸுல கொஞ்சமா தான் கட்டிட்டு போற.. அது எப்படி உனக்கு பத்தும்.. இந்த வயசுல நல்லா சாப்பிடனும் நவீ.. “ என்ற மான்சியின் பேச்சுக்கு அழைப்பின் அந்த பக்கம் மான்சியின் தம்பி என்ன சொன்னானோ..

இங்கு மான்சி கோபத்துடன்.. “ படிப்பு முக்கியம் தான்.. அதோடு உன் உடம்பு ரொம்ப முக்கியம்..” என்று மான்சி சொல்லி விட்டு நவீனை பேச விட்டு கேட்டு கொண்டு இருந்த மான்சியின் முகம் மாறிய விதத்தில் சர்வேஷ்வரனும் தன் பார்வையை மாற்றியவனாக.. அதாவது கூர்ந்து கவனிக்க தொடங்கினான்…

“ ம் இன்னைக்கும் வந்து இருந்தாரா…?” என்று கேட்டவள்..

பின் .. “ அங்கு அவர் மனைவியும் ஆஸ்பிட்டலில் இருக்காங்க… அவர் மகளும் இருக்காங்க… “ என்று மான்சி பல்லை கடித்துக் கொண்டு அடக்கட்ட கோபத்தில் பேசினாலுமே, அமைதியாக அந்த அறை இருந்த்தால், சர்வேஷ்வரனின் காதில் மான்சியின் பேச்சு தெளிவாகவே கேட்டது…
 
Top