Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Meezhveno Muzhgiduveno....19

  • Thread Author


அத்தியாயம்….19



சூர்ய நாரயணன் தன் வேலை முடிந்து சென்னை வர இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில், தன் வேலையை பாதியிலேயே விட்டு விட்டு அவசர அவசராமக சென்னை விமான நிலையத்தில் இறங்க்கியவர்… நேராக தன் வீடு செல்லாது, சர்வேஷ்வரனின் அலுவலகத்திற்க்கு சென்று விட்டார்…



அன்று அந்த நேரத்தில் சர்வேஷ்வரன் தன் மாமாவை அங்கு எதிர் பார்க்கவில்லை … அவனுக்குமே மாமா சென்ற வேலை முதல்.. அது முடியும் நேரம் வரை அனைத்துமே தெரிந்து இருந்த நிலையில்.



இப்படி தன் வேலையை கூட பாதியில் விட்டு சென்னை வந்து இருக்கிறார் என்றால், அது இவர் மான்சி மீது வைத்து இருக்கும் அக்கறை.. அன்பு ஏதோ ஒன்று தான் காரணம் என்பது சர்வேஷ்வரருக்கு புரித்து தான் இருந்தது…



ஆனால் சர்வா எப்போதும் போல் இவருக்கு பெத்த பெண்ணோடு அந்த பொம்பளையின் பெண் மீது தான் பாசம் அதிகம் என்று நினைக்க தோன்றவில்லை..



காரணம் அவனுமே அதே நிலையில் தான் இருந்தான்.. இரண்டு நாள் முன் தன் மனைவி தன்னிடம் சொல்லாது டிடெட்டீவ் ஏஜென்ஸியை நாடியது பிடிக்காது தான் போனது..



அந்த கோபத்தோடு தன் மாமன் தன்னை அழைத்து பேசிய பேச்சில், இன்னும் அவன் கோபம் கூடி தான் தன் வீடு சென்றான்..



ஆனால் அங்கு சென்ற பின் மான்சி சொன்ன என் சந்தேகமே உன் வீடு ஆட்கள் எனும் போது, நான் எப்படி …? உன்னிடம் சொல்வேன்.. என்றது அவனுக்கு ஏற்கும் படி இருந்ததால், அவன் கோபம் கொஞ்சம் தணிந்தது என்று தான் சொல்ல வேண்டும்..



தன் மனைவி தன்னிடம் சொன்ன விசயத்தில் இது எல்லாம் பெரிய பிரச்சனை இல்லை என்று சொன்னாலுமே, அவன் மனது லேசாக இடர தான் செய்தது..



ஒன்று வீடு என்பது ஒரு பாதுகாப்பு என்று தானே சொல்ல வேண்டும்.. ஆனால் மான்சி தனக்கு வந்த அழைப்பு வீட்டு ஆட்கள் செய்து இருப்பார்களோ எனும் சந்தேகப்படுகிறாள் என்றால், அவள் எது போலான சூழ்நிலையில் அவள் இங்கு இருக்கிறாள் என்பது அவனுக்கு புரியவே செய்தது..



கூடவே அவள் படிப்புக்கு மனது அமைதியாக இருப்பது தானே முக்கியம், இது போல் இருந்தால் அவள் எப்படி வெற்றி பெறுவாள்.. என்று யோசனையுடன் தான் அவனின் இரண்டு நாளும் கழிந்தது..



எப்போதும் தங்கள் அறையில் இருக்கும் போது அவள் தன்னை பார்க்கிறாளா..? என்று தான் சர்வேஷ்வரன் அவ்வப்போது மான்சியை தன் வேலையின் நடு நடுவே நிமிர்ந்து பார்ப்பது..



ஆனால் இந்த இரண்டு நாளும் அவள் சாதரணமாக இருக்கிறாளா..? இல்லை டிஸ்டபண்ஸா இருக்கிறாளா..? என்று அறிந்து கொள்ள அவ்வப்போது அவளை நிமிர்ந்து பார்க்கும் போது எல்லாம் அவள் படித்து கொண்டு இருப்பதை பார்த்த பின் தான் அவனுக்கு கொஞ்சம் நிம்மதி கிடைத்த பின் தான் …அவனும் தன் வேலையை பார்க்க ஆரம்பித்தான்..



அந்த இரண்டு நாளிலும் அழைப்பு வந்தது… டிடெக்டீவ் சொன்னது போல் மான்சி இரண்டு முறை ஏற்றாள் என்றால், மூன்று முறை சர்வேஷ்வரன் ஏற்றான்.. ஆனால் பேசாது அமைதி காத்தான்..



பேசியில் அழைத்தவர்களும் மான்சி சொன்னது போல் எதுவும் பேசாது சிறிது நேரம் கழித்து பேசி அணையவும்..



மான்சி சொன்னது அவனுக்கு ஊர்ஜிதம் ஆகியது.. அதாவது இவள் பெயர் கெடுக்க தான் இந்த வேலை என்பது.. ஆனால் அது யார்..?



இன்று தெரிய தான் இன்று அலுவலகம் எப்போதையும் விட நேரத்துக்கு வந்தது.. தான் வந்த உடன் மாமாவும் வரவும்.. அவரிடம் இதை பற்றி எதுவும் பேசாது சாதரண பேச்சு வார்த்தைகயாக..



“ ப்ரைஷ் பண்ணிட்டு வாங்க.. நான் காபி வர வழைக்கிறேன்..” என்று தனக்கு என்று இருந்த ஒய்வு அறைக்கு சூர்ய நாரயணனை அனுப்பியவன்..



அவரிடம் சொன்னது போல் காபியை வர வழைத்தான்.. தனக்கும் சேர்த்தே…



சூர்ய நாரயணனும்.. பரவாயில்லை என்று ஒரு பேச்சுக்கு கூட சொல்லாது சர்வாவின் ஓய்வு அறைக்கு சென்று, தன்னை சுத்தப்படுத்தி வெளி வந்தவரின் முகம் அப்போது தான் கொஞ்சம் தெளிந்தது போல் காணப்பட்டது..



சூர்ய நாரயணன் வெளி வந்த உடன் அவர் பக்கம் ஒரு காபி கப்பை நகர்த்தியவன்.. தனது எடுத்து பருகி கொண்டு இருந்தவனின் யோசனை இங்கு இல்லை என்பது போல் புருவ மத்தியில் ஒரு சுழிப்புடனே காணப்பட்டான்…



சூர்ய நாரயணனும் சர்வாவை பார்த்து கொண்டே காபியை பருகினாரே தவிர வாய் திறந்து எதுவும் கேட்கவில்லை..



சிறிது நேரம் கடந்த நிலையில் தான் சர்வா சூர்ய நாரயணன் தன்னையே பார்த்து கொண்டு இருக்கிறார் என்பதையே கவனித்தான்..



அவரின் பார்வைக்கு சர்வேஷ்வரன்…

“ என்ன மாமா ..?” என்ற கேள்விக்கு, முதலில் ஒன்றும் இல்லை என்று தான் சொல்ல நினைத்தார்.. பின் சிறிது யோசித்தவர்..

“ உனக்கு யார் மீதாவது சந்தேகம் இருக்கா சர்வா..?” என்ற கேள்விக்கு சர்வேஷ்வரன்..



“ எனக்கு இல்ல மான்சிக்கு இருக்கு…” என்றவனின் பதில் சூர்ய நாரயணன் பதட்டம் கொள்ள செய்தது…



“ யார் மீது..?” என்று கேட்ட கேள்விக்கும் சர்வேஷ்வரன்..

“ உங்க இரண்டு மகள் மீதாம்..” என்ற பதிலில் சூர்ய நாரயணன் அமைதி காக்கா..



“ என்ன மாமா சைலண்டா ஆகிட்டிங்க.. அப்போ நீங்களும் அவங்களையே தான் நினைச்சிங்களா..” என்ற கேள்விக்கு, சூர்ய நாரயணன் எதுவும் பேசாது தொடர்ந்து அமைதி காத்தார்..



அதற்க்குள் சூர்ய நாரயணனுக்கு மான்சி அனுகிய டிடென்டீவ் ஏஜென்ஸியிடம் இருந்து அழைப்பு வர..



சூர்ய நாரயணன் தன் அமைதியை கை விட்டவராக பர பரப்பாக.. “ என்னப்பா யார்..? என்று தெரிந்ததா…?” என்று பதட்டத்துடன் கேட்டார்…



“ சார் ஏன் இப்படி பதட்ட படுறிங்க.. யார்..? என்பது தெரிந்து விட்டது.. உங்க மெயிலுக்கு எல்லா தகவல்களையும் அனுப்பி இருக்கிறேன் பாருங்க..” என்று சொன்னவருக்கு பதில் கூட சொல்லாது தன் கை பேசியை அணைத்து விட்டு.



அதே பர பரப்புடன் சர்வேஷ்வரன் எதிரில் இருந்த அவன் கனிணியை காண்பித்து.. தன் மெயில் ஐடியையும் கட கட என்று சொன்னவர்..



“ அனுப்பி விட்டாங்க பார் சர்வா..” என்றவருக்கு ஒரு தலையசைப்புடன் சர்வா அவர் சொன்னதை செய்து..

அவர்கள் அனுப்பி இருந்த தகவல்களை இருவரும் படிக்க ஆரம்பித்தனர்..

அதில் இருந்தது இது தான்..



பெயர் பாஸ்கரன்.. அவன் தான் ஐந்து எண்களில் இருந்து மான்சியை தொடர்ந்து அழைத்தது… என்று அவன் புகைப்படத்தோடு அனுப்பியவர்..



பாஸ்கர் எண்..





குடும்பத்து உறுப்பினர்கள் அவர்களின் பெயர்கள் மற்றும் அவனின் தற்போதைய முகவரி என்று அனைத்தும் ஒன்று விடாது இருந்தன.. கூடவே புகைப்படங்கள் சூர்ய நாரயணன் கை பேசிக்கு வந்து விழுந்தன..



முதலில் பாஸ்கரன் யார்..? என்று சர்வேஷ்வரன் முழித்து இருந்தான்.. அப்படி பட்ட பெயரில் அவனுக்கு ஒருவரும் தெரியவில்லை..



யோசனையுடன் தன் மாமாவை பார்க்க… அவர் பாஸ்கரன் என்ற பெயரையும், அவன் புகைப்படத்தையும் மாறி மாறி பார்த்தவரின் முகத்தில் குழப்பத்தின் சாயல் அப்பட்டமாக தெரிந்தன..





“ என்ன மாமா உங்களுக்கு யார் என்று தெரியுதா..? என்ற கேள்விக்கு பதில் அளிக்காது சர்வாவை குழப்பத்துடன் பார்த்தார்..



“ என்ன மாமா யார்..? என்று கேட்டவன் பின் ஏதோ யோசனை வந்தவனாக..



“ மான்சி அப்பா வழியில்…” என்ற அவன் கேள்வியை முடிக்க விடாது சூர்ய நாரயணன்..



“ இல்லை..” என்று ஒரு வார்த்தையில் பதில் அளித்தவர் மீது இப்போது சர்வேஷ்வரனுக்கு கோபம் தான் வந்தது..



நான் என்ன மாதிரி டென்ஷனில் இருக்கேன்.. இவர் என்ன என்றால்… இப்போது கோபத்துடனே..



“ அப்போ யார் என்று சொல்லுங்க மாமா..? இல்ல என்றால் எனக்கு தெரிந்த ஐ. ஜீயை வைத்து மூவ் பண்ணிக்கிறேன்.. அது தான் லட்டு மாதிரி எல்லாம் தகவலும் இருக்க.. லாக்கப்பில் இரண்டு தட்டு தட்டினா எல்லாம் சொல்லிட போறான்..’ என்று சொல்லிக் கொண்டே சர்வேஷ்வரன் தன் கை பேசியை எடுப்பதற்க்குள், சூர்ய நாரயணன் அவன் கையை பிடித்து தடுத்தவராக..



“ அவசரப்படாதே.. இது பொறுமையா தான் ஹான்டில் செய்யனும்…. “ என்றவரின் பேச்சில்..



“ எனக்கு நீங்க என்ன சொல்றிங்க என்று புரியல மாமா..’” என்றவனுக்கு சூர்ய நாரயணன் அனைத்தும் புரியும் படி சொல்ல தொடங்கினார்…



“ நான் முதல் முதல்ல துளசியை இந்த பாஸ்கர் வீட்டில் தான் பார்த்தேன்..” என்ற மாமாவின் பேச்சில், முதலில் துளசி யார்..? என்று குழம்பி பின் தெளிந்து… பின் அதிர்ந்து தன் தாய் மாமனை பார்த்தான் சர்வேஷ்வரன்..



“ அவங்க அங்க என்ன செய்துட்டு இருந்தாங்க நீங்க ஏன் அங்கு போனிங்க..?”



“ துளசி அங்கு வீடு வேலை பார்த்துட்டு இருந்தா.. அப்போ மான்சிக்கு எட்டு வயது..” என்று அவன் மாமன் சொல்லும் போதே, சர்வேஷ்வரனுக்கு நெஞ்சத்தில் பாரம் கூடி எதேதோ நினைக்கும் படி ஆனது..



அது கொடுத்த அழுத்தத்தில்.. “ என்ன மாமா…?

சீக்கிரம் சொல்லுங்க… மான்சிக்..கு மா… னு…க்கு அங்…கு எந்த பிரச்சனையும் வரலையே…” என்ற அவனின் கேள்விக்கு சூர்ய நாரய்ணனிடம் இருந்து பதில் இல்லாது போக ஒரு வித திகிலுடன் தான் அவரை பார்த்திருந்தான்…



“ என் பிரண்ட் தட்சாண மூர்த்தியோட தம்பி தான் இந்த பாஸ்கரன்… “ என்று சூர்ய நாரயணன் சொல்லும் போதே சர்வேஷ்வரனின் மனதில் வர வேற்ப்பு அன்று தன் மாமனின் நண்பன் என்று ஒருவர் தன்னை தட்சாண மூர்த்தி என்று தன் மனைவியோடு அறிமுகப்படுத்தியவர் முகமும்…



அவர்களை பார்த்ததும் உடல் பதற தன்னை ஒட்டி நின்ற மான்சியின் உடல் நடுக்கமும்… அவனின் நினைக்வுகு வந்து சூர்ய நாரயணனை வெறித்து பார்த்தான்.. அடுத்து என்ன சொல்ல போகிறாரோ என்று ..



சொன்னார் அவரும் அனைத்தையும் ஒன்று விடாது சொன்னார்.. ஒரு மருமகனிடம் அதுவும் தங்கையின் மகன் என்று மட்டும் அல்லாது தன் மகளாக நினைக்கும் மான்சியின் கணவன் சர்வேஷ்வரன் என்று ஆன போதும் தன் மனதில் இருந்த சங்கடத்தை கொட்டி விட்டார்..



என்ன ஒன்று சூர்ய நாரயணன் அதை சங்கடம் என்று சொன்னார்.. சர்வேஷ்வரன்.. இது உங்க மனதில் இருந்த குப்பைகளின் வெளிப்பாடு என்று பெயர் மாற்றி சொன்னான் அவர் சொன்ன விசயங்களை கேட்டு..



அப்படி என்ன சொன்னார்..என்பதை நமக்கும் தெரிந்தால் தானே அது சங்கடமா..? குப்பையா…? என்று நம்மால் பிரித்து எடுத்து சொல்ல முடியும்..



இதோ சூர்ய நாரயணன் சொன்னவை…



தட்சாண மூர்த்தியும் நானும் பள்ளி காலம் முதலே நட்பில் தான் இருந்துட்டு இருந்தோம்… அவங்க வீடு வில்லிவாக்கத்தில் இருந்தது…



அப்போ நான் அங்கு ஒரு வீடு வாங்க போன போது, இங்கு தானே தட்சாண மூர்த்தி இருக்கிறான் என்று அவன் வீட்டுக்கு போன போது தான் நான் துளசியையும், அவளின் எட்டு வயது மகள் மான்சி அப்புறம் மூன்று வயது குழந்தை நவீனை பார்த்தது..



நான் அந்த வீட்டில் காலடி எடுத்து வைக்கும் போது வீட்டுக்குள் இருந்து ஒரே சத்தம்.. உள்ளே போகலாமா..? வேண்டாமா..? என்று யோசிக்கும் போது என் பின் பக்கம் முதுகை தட்டி விட்டு முன் பக்கம் வந்து நின்றான்..

தட்சணா..



“ என்ன இதுக்கே பயந்து வெளியே ஒட பார்க்குறியா…?” என்று சொல்லி கொண்டே அவன் என்னை வீட்டுக்குள் அழைத்து சென்று விட்டான்…



வீட்டில் சத்தம் போடுவது தட்சாண மூர்த்தியின் மனைவி என்று நான் நினைக்க..ஆனால் அங்கு சின்ன பெண்ணாக நின்று கொண்டு இருந்த மான்சியை சத்தம் இட்டு கொண்டு இருந்தது பாஸ்கரனின் மனைவி ராஜி..



அதை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தான் பாஸ்கரன்….” என்ற மாமனின் பேச்சில்.. சர்வேஷ்வரனுக்கு ஒரு மாதிரியாக ஆகி விட்டது..



குழந்தையாக இருந்த மான்சியை ஏன் திட்ட வேண்டும்.. தட்சணா மூர்த்தி வீட்டில் தானே மான்சி அம்மா வேலை பார்த்ததாக மாமா சொன்னார்.. அங்கு எப்படி பாஸ்கர்.. அதுவும் மனைவியோடு, என்று யோசித்தவன் அதை தன் மாமனிடம் கேட்கவில்லை ..



இருந்தும் சூர்ய நாரயணனே சொன்னார்.. “ உனக்கு குழப்பமா இருக்கும் சர்வா.. பாஸ்கர் அங்கு எப்படி என்று…

தட்சணா மூர்த்தியின் தம்பி தான் இந்த பாஸ்கர்… இரண்டு பேரும் அவங்க மூதையார் வைத்த வீட்டில் தான் இருந்தனர்…



ஆனால் பாஸ்கர் தட்சணா மூர்த்திக்கு எதிர் பதம் என்று தான் சொல்ல வேண்டும்…

மான்சி அவங்க கழிப்பறையை உபயோகித்தால் என்று தான் அன்னைக்கு அந்த பொம்பளை குழந்தையை சத்தம் போட்டுட்டு இருந்தா..” என்று மாமன் சொல்ல கேட்டதும் சர்வேஷ்வரனுக்கு அய்யோ என்று ஆனது..



ஒரு குழந்தையை திட்டுக்கிறார்கள் என்றது இவன் வேறு என்ன என்னவோ தான் நினைத்து விட்டான்..

பசிக்கு ஸ்நாக்ஸ் எடுத்து இருக்கலாம். இல்லை அங்கு இருந்த விளையாட்டு பொம்மை எடுத்து விளையாடி இருக்கலாம்..அதற்க்கு திட்டுவதா..? என்று அதற்க்கே அவன் அப்படி நினைக்க..





ஆனால் இங்கு குழந்தை அவர்களின் கழிவறையை உபயோகித்து விட்டாள் என்று திட்டுவதா..?



“ஏன்ன பொம்பளை மாமா..” என்று தன் மாமனிடம் சர்வேஷ்வரன் கேட்கவும் செய்தான்..



“ நீ இதுக்கே இப்படி சொல்றியே இன்னும் இருக்கு… அந்த பொம்பளையே மேல் என்று பாஸ்கரன் நடந்து கொண்டான்..



துளசி எங்க எல்லோருக்கும் காபி எடுத்துட்டு வந்து கொடுக்கும் போது அவள் கை பிடித்து தொட்டு .. இதுக்கு மேல என்னால சொல்ல முடியல சர்வா..



அதுவும் நான் இருக்கேன்.. அது கூட பார்க்காது .. கை பிடிக்கிறான்.. நான் போகும் போது தட்சணா மூர்த்தி கிட்ட சொல்லிட்டு தான் போனேன்.. அதுக்கு நான் பார்த்துக்குறேன் என்று சொன்னான்..



ஆனால் நான் அடுத்து அவங்களை பார்க்கும் போது எல்லாம் நான் பார்க்கும் படி தான் ஆகி விட்டது..” என்ற இந்த வார்த்தை ஏனோ சர்வேஷ்வரனுக்கு பிடிக்கவில்லை..



பருந்து கிட்ட இருந்து தப்பித்து கழுகு கிட்ட மாட்டினது போல் .. ஆனா இவர் அவர் விருப்படி படி சொல்ல போகிறார் என்று மனது ஏளனமாக எண்ணிக் கொண்டு இருக்கும் போது..



சூர்ய நாரயணன்.. “ எனக்கு தெரியும் சர்வா.. நான் செய்தது ரொம்ப ரொம்ப பெரிய தப்பு என்று.. ஆனால் அந்த தப்பை நான் தெரியாது செய்தேன் எல்லாம் சொல்ல மாட்டேன்.. தெரிந்தே என் தேவைக்கு செய்தேன்..

துளசி பிரச்சனையை நான் எனக்கு சாதகமா பயன் படுத்திக் கொண்டேன்…



“ ஒரு நாள் மதியம் திரும்பவும் எனக்கு வில்லிவாக்கம் போகும் வேலை ஒன்று இருந்தது..” என்ற சூர்ய நாரயணன் பேச்சை இடையிட்டு தடுத்து நிறுத்திய சர்வேஷ்வரன்..



“ வேலை இருந்ததா.. இல்லை அந்த வீட்டுக்கு போக வேலை இருப்பது போல் சொல்றிங்ககளா மாமா..” என்று தன் மனதில் எழுந்த சந்தேகத்தை கேட்டு விட்டான்..



இதோ இப்போது மான்சிக்கு என்ன பிரச்சனை என்று எனக்கு துடிக்கிறதே… இன்னும் கேட்டால் என் திருமணம் சந்தர்ப்ப வசத்தால் நடந்தது தான்..



ஆனால் அது தான் என் வாழ்க்கை என்று நான் முடிவு செய்ததால் தானே இதோ மான்சிக்காக என் நெஞ்சு பதறுது..

ஆனால் இவருக்கும் அத்தைக்கும் நடந்த திருமணம் அப்படி இல்லையே.. அதுவும் அத்தை… கட்டுனா இவரை தான் கட்டுவேன்.. இல்லை கல்யாணமே வேண்டாம் என்று சொன்னவங்களுக்கு இவர் செய்தது என்ன…?



இவரை பற்றி தெரிந்ததில் இருந்து கேட்க நினைத்த கேள்வியை இன்று கேட்டு விட்டான்..



“ உங்களுக்கு அத்தை நியாபகத்தில் வரவே இல்லையா மாமா..?” என்று..

ஆனால் அவர் அதற்க்கு சொன்ன பதில்.. “ வந்தது.. அதனால் தான்..” என்றவரின் பேச்சை எதில் சேர்த்து கொள்வது என்று தெரியாது முறைக்க மட்டும் தான் அவனால் முடிந்தது..

பின் முடிவு செய்து விட்டான் இவர் செய்த செயல்களுக்கு இவர் ஏதாவது சப்பை கட்டு தான் கட்டுவார்.. அவர் என்ன சொல்ல வருகிறார் என்று தான் கேட்போமே என்று முடிவு செய்த பின் அவன் வாய் திறக்கவில்லை..



சூர்ய நாரயணன் எண்ணம் முழுவதும்.. பதினைந்து வருடத்திற்க்கு முன் சென்று விட்டது என்று தான் சொல்ல வேண்டும்..



அவர் ஞாயிறு அன்று மதியம் நேரம் தான் அவர் அந்த வீட்டுக்கு சென்றார்… ஒரு டாக்குமெண்ஸ் அவரிடம் இருந்தது.. அதை வாங்க தான் அன்று சென்றார்..



அவர் சென்ற போது வீடே அமைதியாக இருந்தது… வீட்டுக்குள் போகும் போதே என்னடா அன்று வீட்டுக்கு வெளியில் அவ்வளவு சத்தம் கேட்டது.. இப்போ என்ன ஆள் இருக்கும் அரவமே கேட்கல என்று நினைத்து கொண்டே சென்றவர்..

ஒரு வேலை வீட்டில் ஆட்கள் இல்லையோ… என்று நினைத்து கொண்டே தட்சணா மூர்த்திக்கு அழைப்பு விடுத்தார்..

அவர் சொன்னது நாங்க குடும்பமா வெளியில் இருக்கேன்.. வீட்டில் என் தம்பி இருக்கான்.. காலிங்க் பெல் அடி அவன் திறப்பான்.. என்று சொன்னதுமே..அடித்தார் அடுத்தார் அடித்து கொண்டே இருந்தார் ..கதவு தான் திறப்பதாக இல்லை..



சூர்ய நாரயணன் திரும்பவும் நண்பனுக்கு அழைப்பு விடுக்க.. அவர் பாஸ்கரின் கை பேசி எண்ணையும் வீட்டு எண்ணையும் சேர்த்தே தான் கொடுத்தார்..

வெளியில் இருந்து அழைப்பு விடுக்க பேசியின் சத்தம் வீட்டுக்குள் இருந்து வந்தது.. சரி இருக்கிறார் என்று நினைத்து இருக்க.. அந்த பேசியை எடுத்தால் தானே நான் உங்க வீட்டுக்கு வெளியில் இருக்கேன் என்று பேச…



சரி லேண்ட் நம்பருக்கு அவன் முயற்சி செய்ய அதுவும் எடுக்க படாது போகவும், என்ன இது சரி வீட்டுக்கு போய் விடலாம் என்று கூட சூர்ய நாரயணன் முடிவு எடுத்து விட்டார்..

சரி போகும் போது கடைசியாக ஒரு முறை முயற்சி என்று நினைத்து தான் பாஸ்கரின் செல்லுக்கு அழைத்தது..

கடைசி அணையும் முன் அதை எடுக்க ஒரு அறையில் இருந்து நடந்து வந்த பாஸ்கரை க்ரீல் கேட் வழியாக சூர்ய நாரயணன் பார்த்து விட்டார்..

பேசி அணைந்து விடவும் பாஸ்கர் அவசரமாக வந்த அறைக்கு திரும்ப செல்ல பார்த்தவரை சூர்ய நாரயணம் சத்தம் போட்டு அழைக்கவும்..



பாஸ்கரும் வாசல் பக்கம் பார்க்க.. அங்கு சூர்ய நாரயணன் நின்று இருப்பதை பார்த்து.. பாஸ்கரின் முகத்தில் லேசாக பதட்டம் தென்பட்டது..

தான் வந்த அறையை ஒரு பார்வை பார்த்த வாறு சூர்ய நாரயணன் அருகில் வந்த பாஸ்கர்..

கதவு திறவாது.. “ அண்ணா வீட்டில் இல்ல சார்… அண்ணா மட்டும் இல்ல.. வீட்டில் யாரும் இல்ல..” என்று அந்த யாருமே என்று சொல்லும் போது அந்த வார்த்தைக்கு, அவன் அழுத்ததை கூட்டினான்..”

சூர்ய் நாரயணனுக்கு வீட்டை திறக்காது இது போல் அவன் பேசும் பேச்சில் அவ்வளவு கோபம் எழுந்தன…



அவர் எப்போதும் தான் உயர்ந்தவன் என்ற எண்ணம் எல்லாம் பார்க்க மாட்டார்.. ஆனால் அன்று பாஸ்கர் தன்னை நடத்திய விதத்தில்..



“ உங்க இடம் ஒன்று விற்காது இருக்கிறது.. பணம் ரொம்ப தேவை என்று உன் அண்ணன் சொன்னான்.. அதை நான் வாங்கலாம் என்று தான் அதன் பத்திரம் வாங்க வந்தேன்.. “ என்று அவர் சொல்லி முடிக்கும் முன் ஜீ பூம்பா என்பது போல் கதவு சட்டென்று திறந்து விட்டது..



அவனை கீழ் பார்வை பார்த்து கொண்டே சூர்ய நாரயணன் அந்த வீட்டின் ஹாலுக்குள் நுழைந்தார்..

பாஸ்கரின் முகத்தில் ஏன் இந்த பதட்டம் என்று அவன் முகத்தையும் இடை இடையே பார்த்தவருக்கு ஏதோ தவறாக மனதில் பட்டது…

அதனால் அவசர அவசரமா ஒரு அறைக்கு சென்று கையில் பத்திரத்தோடு ஓடி வந்தவன்.. அதை தன்னிடம் கொடுத்து விட்டு..





“ இது தான் சார்..” என்றவனின் பேச்சை காதில் வாங்காது பொறுமையாக அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று ஒன்று ஒன்றாக பார்த்து கொண்டு வந்த சூர்ய நாரயணனிடம் ..



“ எல்லாம் சரியா தான் சார் இருக்கு.. இது எல்லாம் பொறுமையா உங்க வீட்டில் போய் பார்க்கலாமே சார்..” என்று தன்னை அங்கு இருந்து அவன் அனுப்ப அவசர்ப்படுத்து கிறான் என்பது வரை சூர்ய நாரயணனுக்கு புரிந்தது..



ஆனால் ஏன்.. ? என்று அவர் யோசிக்கும் வேளயில் பாஸ்கர் வந்த அறையில் இருந்த மெல்ல ஒரு முனகல் சத்தம் கேட்கவும் சூர்ய நாரயணனுக்கு பதட்டம் வந்தது..

கூடவே அன்று துளசியின் கையை இவன் பிடித்ததும்.. சத்தம் வந்த அறைக்கு சூர்ய நாரயணன் செல்ல பார்க்க அவரை செல்ல விடாது பாஸ்கரன் தடுக்க..

அவனை ஒரே தள்ளாக தள்ளி விட்டு அந்த அறைக்கு சென்றவர் பார்த்த அந்த கோலத்தில். அந்த இடத்தில் துளசி இருந்து இருந்தால் கூட அவர் அந்த அளவுக்கு பதறி இருக்க மாட்டார்.



ஆனால் குழந்தை எட்டு வயதே ஆன ஒரு குழந்தையின் உடம்பின் மேல் ஒட்டு துணி இல்லாது அவள் இருந்த கோலத்தை பார்த்தவருக்கு மயக்கம் வரும் போல் ஆனது…

ஆனால் அந்த நிலையிலும் அவர் ஒன்றை கவனித்தார்.. தான் நேரம் கடந்து வரவில்லை என்பதை..






























 
Top