Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Meezhveno Muzhgiduveno....2

  • Thread Author
அத்தியாயம்…2

தன் அத்தையின் பேச்சை கேட்டு கொண்டு வந்த சர்வேஷ்வர்.. “ என்ன அத்தை சாப்பிட்டிங்கலா…?” என்று கேட்டுக் கொண்டே அவர் பக்கத்தில் அமர்ந்தவனை வாஞ்சையாக கன்னத்தை தடவியவர்..

“ சாப்பிட்டேன் சர்வா.. உனக்கு ஆபிசுக்கு நேரம் ஆச்சி பார்.. நீ போய் சாப்பிடு.” என்று சொன்ன பத்மாவதி, தன் பெரிய அண்ணி ரேவதியின் முறைப்பில் தன் பார்வையை தன் பெரிய மருமகன் பக்கம் திருப்பியவர்..

“ நீயும் சாப்பிடு மகி..” என்று சொன்னார்.

பத்மாவதி தன் ஒரு மகளை மகேஷ்வரனுக்கு கட்டி கொடுத்து இருந்தாலும், இன்னொரு மகளை சர்வேஷ்வரனுக்கு கட்டி கொடுப்பதாக இருந்தாலுமே இருவரையும் பெயர் சொல்லி தான் அழைப்பார்.

இப்போது மருமகன் என்ற உறவை விட, பத்மாவதிக்கு அவர்களை சிறு குழந்தையாக இருந்த போது தூக்கி வளர்த்த பாசம் தான் அவருக்கு அதிகம்..

தன் அன்னையின் பார்வைக்கு அத்தை தன்னை உபசரித்ததில் சிரித்த மகேஷ்வர் .. “ஏன் அத்தை அம்மா கிட்ட சொல்லுங்க.. எனக்கு மகியோட .. கொஞ்சம் அதிகமா சர்வாவே பிடிக்குமுன்னு…” என்று சொன்ன மகேஷ்வரனின் பேச்சில் துளியும் கோபம் இல்லை…

தன் இரு மருமகன்களையும் வாஞ்சையோடு பார்த்த பத்மாவதிக்கு, தன் இருமகள்களையும் நினைத்து தான் கொஞ்சம் கோபம் வந்தது…

இதோ மகேஷ்வர் அலுவலகத்திற்க்கு கிளம்பி விட்டான். ஆனால் இன்னும் தன் மகள் வனிதா படுக்கையை விட்டு கூட எழுந்து இருக்க மாட்டாள்.

சரி காலை தான் அப்படி என்றால், சர்வேஷ்வர் அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வரும் நேரம், ஒரு நாளும் அவள் வீட்டில் இருக்க மாட்டாள்.

ஏதாவது ஒரு பார்ட்டி.. தினம் இருக்கும். இல்லை என்றால் ஷாப்பிங்… தன் அண்ணன் மகனுக்கு கொடுத்ததால் இவர்கள் மானம் தப்பியது..

தன் மகள் புகுந்த வீட்டில் பெயருக்காவது வாழ்ந்து கொண்டு இருக்கிறாள் என்று வெளி உலகத்தில் கவுரவமாக சொல்லிக் கொண்டு இருக்கிறோம்… இதே இவளை வெளியில் கொடுத்து இருந்தோம், இவளை தங்கள் வீட்டுக்கு அனுப்பியதோடு நாக்கு பிடிங்கி கொள்வது போல் கண்டிப்பாக கேட்டு இருப்பார்கள்.

சரி பெரிய மகள் தான் இப்படி என்றால், தன் சின்ன மகள் அனிதா இவளுக்கு மேல் தான் இருக்கிறாள்.. இவளாவது உள்ளூரில் சுற்றுக்கிறாள்.. அவள் சுற்றுவது எல்லாம் வெளி ஊர்.. ஒரு சில சமயம் அந்த சுற்றலில் வெளிநாடும் அடங்கும்..

கட்டுப்படுத்த முடியவில்லை… ஒரு சில சமயம் கோபமாக கேட்டால்.. “ உங்க புருஷனை விட்டு விட்டு எங்களை திட்டம் செய்யிறிங்கலா..?” என்று மகள்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்க முடியாது ஊமையாகி போய் விடுவார்..

அதனாலே அந்த இருமகள்களும் தங்களின் ஆயுதமாக இந்த வார்த்தையை உபயோகிக்க… அப்படி விட்டது.. இதோ இவர்களின் இந்த நடவடிக்கை எங்கு வந்து முடியுமோ என்பது போல் ஒரு சில சமயம் இவர் மனதில் பயமே ஏற்ப்பட்டு விடுகிறது..

ஏன் என்றால் இப்போது எல்லாம் தன் சின்ன மகள் அனிதா அடிக்கடி வெளிநாடு சென்று விடுகிறாள்.. தன் மன குறையை ஒரு பெண் தாய் வீட்டில் சொல்லி தீர்த்து கொள்ளலாம்..

ஆனால் அந்த வீட்டில் தன் மகளை கொடுத்து விட்டு, இன்னொரு மகளை கொடுக்க இருக்கும் போது, அவர்களிடமே எப்படி தன் மகளின் குறையை சொல்வது என்று தெரியாது.. மனதில் வைத்தே அழுத்திக் கொள்வதால்,

ஏற்கனவே உடல் நிலையில் கொஞ்சம் தோய்வை கண்ட அந்த உடல், இப்போது எல்லாம் இன்னும் கொஞ்சம் மோசமாகி அடிக்கடி உடல் நிலையில் பாதிப்பு ஏற்படுகிறது..

தன் அத்தையின் சோர்ந்த முகத்தை பார்த்த சர்வேஷ்வர்.. “ என்ன அத்தை உடம்பு சரியில்லையா..? என்ன செய்யுது…? என்று கேட்டுக் கொண்டு இருக்கும் போதே, அங்கு வந்த சர்வேஷ்வரின் தந்தை வெங்கட பூபதி..

“ என் தங்கையின் உடம்போட அவள் மனது தான் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கு என்ன செய்யிறது..?” என்று மகனிடம் சொன்னவர்..

தங்கையை பார்த்து…” என்ன மாப்பிள்ளை அங்கு போயிட்டாரா..?” என்று கோபத்துடன் கேட்டார்.

“ம்..” என்று தலை குனிந்து தன் கை நகத்தை பார்த்து கொண்டு சொன்ன அத்தையின் இந்த நிலையை பார்த்து சர்வேஷ்வரனுக்கு அவ்வளவு கோபம்..

என்ன இருந்து என்ன பிரயோசனம்..? தங்கள் வீட்டு பெண்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயத்தை பிடிங்கி கொடுக்காது, ஊரின் முன் உயர்ந்து நின்று என்ன பயன்..?

“ இப்படியே பேசிட்டே இருங்க..நீங்களும் ஒன்றும் செய்யாதிங்க.. எங்களையும் செய்ய விடாதிங்க…?” என்று தன் தந்தையிடமும், அப்போது தான் அங்கு வந்த தன் பெரியப்பாவிடமும் காட்டினான்..

சர்வேஷ்வரனின் இந்த கோபம் இப்போது வந்தது கிடையாது.. அவனுக்கு எப்போது தன் தாய் மாமனும், தன் அத்தையின் கணவனுமான சூர்ய நாரயணனை பற்றி அவனின் பதினெட்டாவது வயதில் தெரிய வந்ததோ அப்போதே, கோபத்துடன் தன் அத்தையின் வீட்டுக்கு கிளம்பி விட்டான்.

தன் அப்பா பெரியப்பா சொன்ன.. “ பேசலாம்.. பேசி விடலாம்.. ஆனால் பேசிய பின் உன் அத்தையை நாம் இங்கு கூட்டி கொண்டு வந்து விட வேண்டும்.. அதே போல் உன் அம்மாவை அங்கு அனுப்பி விட வேண்டும்.. அப்படி இருந்தால் போ…” என்ற தன் தந்தையின் பேச்சில் அப்படியே அமைதி காத்து விட்டான்.

அவன் என்ன தான் வெளிநாடு போய் படித்து வந்தாலுமே, ஒருவனுக்கு ஒருத்தி.. அதே போல் தான் திருமணம் பந்தம் என்பது வாழ்க்கையில் ஒரு முறை தான்..

அந்த பந்தத்தை தக்க வைத்து கொள்ள போராட வேண்டுமே தவிர.. அதை அறுத்து எரிந்து வருவதில் அவனுக்கு எப்போதுமே உடன்ப்பாடு இல்லை… அத்தையோடு தன் அன்னையையும் அங்கு அனுப்பி விட வேண்டும் என்பதில் அப்போது அமைதி காத்தான்.

தெரியும் தன் அத்தையை இங்கு அழைத்து வந்து விட்டால், அன்னையின் அண்ணன் அத்தையின் கணவன் எனும் போது, தன் அம்மாவை பார்க்கும் பார்வை மாறும் தான்.. அது இயற்க்கையும் கூட.. ஏன் இப்போதே ஒரு சில சமயம் அப்பா.. கோபம் வந்தால் தன் மாமனை வைத்து அம்மாவை திட்டுவதை அவன் கல்லூரி படிக்கும் சமயத்தில் கேட்டு இருக்கிறான்.

தன் தந்தை அப்படி பேசினால் சர்வேஷ்வர் கேட்டு விடுவான்.. “ யாரின் சட்டையை பிடித்து கேட்க வேண்டுமோ அதை செய்யாது, இவங்களை ஏன் பிடித்து சத்தம் போடுறிங்க..?” என்று இரண்டு முறை கேட்டதில், இது போலான பேச்சு அவன் எதிரில் நடை பெறுவது கிடையாது…

மகேஷ்வரனும் இதை தான் சொல்வான்.. “ ஏன் விட்டோம் அவரை என்று..” பெரியவர்கள் அமைதி காத்து விடுவார்கள்..

அதுவும் அந்த பொம்பளையை அழைத்து கொண்டு வெளியில் சுற்றுவதை செய்தி தாள்களில் பார்த்தால், ,இன்னும் இன்னும் கோபம் தான் எழும்.. நாயை குளிப்பாட்டி நடு வீட்டில் வைப்பதா..? என்று..

பெரியவர்களுக்காக சிறியவர்கள் தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அமைதி காத்து இருக்கின்றனர்..

பின் இவர்களின் பேச்சு தொழில் பற்றி வீட்டு ஆண்கள் பேசிக் கொண்டு இருக்கும் போது தான் இரவு உடையோடு கையை மேல தூக்கி முறுக்கி விட்ட வாறு படியில் இருந்து இறங்கி கொண்டு இருந்தாள் வனிதா..

அதை பார்த்த பத்மாவதி இதே படிக்கட்டில் தன் சின்ன மருமகன் இறங்கி வந்த போது ரசித்த கண்கள்.. வனிதாவின் இந்த செயல்களில் அருவெருத்து என்ன இது உடை என்பது போல் ஒரு தாயாக அவர் கூசி தான் போனார்..

ஏன் என்றால் உள்ள அணிந்து இருந்த இரு சிறிய உடை அப்படியே வெளிச்சம் போட்டு காட்டுவது போல் தான் இரவு உடை என்ற பெயரில் கொசு வலையை தைத்து அணிந்து கொண்டு இருந்தாள்.

அதுவும் அவள் சோம்பல் முறிக்கிறேன் என்று கையை தூக்கும் சமயம் கை இல்லாத அந்த உடை, உள்ளே அணிந்து இருந்த அந்த உடையை மேல் துணி இல்லாது அனைவரும் பார்க்கும் படி காட்சி தந்தது.

ஒரு அன்னையால் கூட அதை பார்க்க முடியாது அவர் தலை குனிந்து கொள்ளும் போது.. அந்த வீட்டின் ஆண்களின் நிலை சொல்லவும் வேண்டுமோ…

சர்வேஷ்ரர் பல்லை கடித்து கொண்டு தலை குனிந்து கொள்ள மகேஷ்வரன் வெட்கத்தில் தலை குனிந்து கொண்டான்..

வெளியில் அனைவரையும் கட்டி ஆண்டு என்ன பிரயோசனம்.. மனைவியின் இது போல் செயல்களை திட்டம் செய்ய முடியவில்லையே… அதுவும் ஒரு சில சமயம் பார்ட்டி என்று போனவள் நடுயிரவு வீடு திரும்புபவளின் மீது வீசும் மது வாடையில்..

“ என்ன வனி குடிச்சிட்டு வந்தியா..?” என்று கேட்டதற்க்கு, அன்று அவள் பேசிய பெண்ணியவாதிய பேச்சில். ஏன் கேட்டோம் என்று நொந்து போய் விட்டான்..

உண்மையை சொல்வது என்றால், மகேஷ்வரனால் தன் மனைவியை அடக்க முடியவில்லை.. முயன்று பார்த்தால் இன்னும் இன்னும் தான் பிரச்சனை கூடுகிறது..

சொந்தத்தில் முடிந்த திருமணம்.. வெளிப்படையாக எதுவும் சொல்ல முடியவில்லை.. அதுவும் தன் அத்தையின் உடல்நிலை.. அதோடு அவர் கணவனால் ஏற்கனவே மன உளச்சலில் இருக்கும் அத்தைக்கு, நானும் பிரச்சனை கொடுக்க வேண்டுமா என்று இவன் அனுசரித்து நடந்தால், அதை வனிதா இன்னும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு போகிறாள்..

இதில் இவள் தங்கை வேறு இன்னும் மூன்று மாதத்தில் இங்கு வர போகிறாள்.. அவள் என்ன…? என்ன…? எல்லாம் செய்ய காத்துக் கொண்டு இருக்கிறாளோ.. என்று நினைத்துக் கொண்டு இருந்தான்… அனைத்தும் மனதில் தான்…

பத்மாவதி தன் மகள் நின்ற கோலத்தில் தன் அண்ணன்கள் உட்பட தலை குனிந்து இருப்பதை காண சகிக்காது..

“ என்ன வனி இது… ரூமில் இது போல போடுற சரி.. இப்படி அனைவரும், அதுவும் வேலையாட்கள் இருக்கும் இடத்தில் கூட நீ இப்படி தான் வரனுமா..?” என்று கேட்டு விட்டார்.

அதற்க்கு வனிதா.. “ நானாவது வீட்டோட இந்த ட்ரஸ் போட்டுட்டு இருக்கேன்.. ஆனா இப்போ நீ இங்கு வந்து இருக்கேன்னா, அப்போ அவரு அந்த பொம்பளை வீட்டுக்கு போய் இருப்பார்

அதோட விட்டா கூட பரவாயில்ல.. என்னவோ அவள் தான் தாலி கட்டிய பெண்டாட்டி போல எந்த விழா என்றாலும் அவளை இழுத்துட்டு அலையுறார்…” என்று சூடாக கேட்டவள்.

பின் தன் தாயின் உடல் வாகை குறிப்பு காட்டி.. “ உங்க மேலயும் கொஞ்சம் தப்பு இருக்க மாம்… அந்த பொம்பளை பார்.. இன்னும் சின்ன பெண் போல சிக்குன்னு, அவள் பெண்ணுக்கு அக்கா போலவே இருக்கா.. ஆனா நீங்க…?” என்று சொல்லி பத்மாவதியின் ஊதிய உடல் வாகை குறிப்பிட்டு உதட்டு பிதிக்கிய வனிதாவின் இந்த பேச்சை அங்கு இருப்பவர்கள் யாரும் ரசிக்கவில்லை..

சர்வேஷ்வர் தான் .. “ என்ன பேச்சு வனி இது ..?” என்று அதட்டினான்.

தன் பெரியப்பா மகன் மகேஷ்வரனை திருமணம் செய்து இருந்தாலும், சிறுவயது முதலே தெரிந்த அத்தை மகள். அதோடு தன்னோடு இரண்டு வயது சிறியவள் வனிதா என்பதால், சர்வா எப்போதும் வனிதாவை பெயர் வைத்து தான் அழைப்பான்.

அதே போல் அந்த வீட்டில் சர்வேஷ்வரனுக்கு தான் வனிதா கொஞ்சம் அடங்கியும் போவாள்.. ஆனால் இந்த முறை..

“ நான் ஒன்றும் உங்க அம்மாவை பேசலேயே.. என் அம்மாவை அதுவும் உண்மையை தானே பேசினேன்.” என்று நெஞ்சை நிமிர்த்தி சர்வா முன் வந்து பேசியதில், கோபத்துடன் அவளை நிமிர்ந்து பார்த்த சர்வா, அவள் நின்று இருந்த கோலத்தில் சங்கடத்துடன் தலை குனிந்தவன்..

“ என் அம்மாவை பத்தி பேசிட்டு நீ இங்கு இருந்துடுவீயா…?” என்று கத்தி விட்டு பாதி சாப்பாட்ட்டிலேயே எழுந்து போனவன் பின்னால் அவனின் அம்மா வைதேகி…

“ சர்வா..சர்வா..” என்று அழைத்துக் கொண்டு அவன் பின் செல்லவும், சர்வா கொஞ்சம் தயங்கி நின்று விட்டு தன் அன்னையை பார்த்தவன்..

“கவலை படாதிங்க.. வெளியில் சாப்பிட்டு தான் ஆபிசுக்கு போவேன்..” என்று தன் அம்மா என்ன சொல்ல வந்தார்களோ.. அதற்க்கு உண்டான பதிலை கொடுத்து விட்டு அவன் செல்லவும், வைதேகி கொஞ்சம் நிம்மதி அடைந்தவராக அனைவரும் அமர்ந்து இருந்த இடம் நோக்கி சென்றார்..

அவர் போகும் போது வனிதா பத்மாவதியிடம்… “ பார்த்திங்களா…? நான் அவங்க அம்மாவை பத்தி ஒன்றும் சொல்ல கூட இல்ல.. சொன்னா நான் இந்த வீட்டில் இருக்க முடியாதாம்..

ஆனால் உங்களை பாருங்க.. அங்கு உங்க வாழ்க்கையை பங்கு போட்டுட்டு அவர் மச்சான் வாழும் போதும் கூட, இங்கு அவர் தங்கைக்கு எந்த பிரச்சனையும் இல்லாது எல்லாம் சுமுகமா தான் போயிட்டு இருக்கு…” என்று பேசி விட்டு செல்லும் வனிதாவை பார்க்க பார்க்க வைதேகிக்கு அவ்வளவு வெருப்பு தான்..

ஆனால் அதை காட்டாது மற்றவர்களுக்கு என்ன தேவை என்று கேட்டு பரிமாறிக் கொண்டு இருந்த வைதேகியின், முகத்தில் ஒரு இறுக்கம் இருந்த வண்ணம் இருந்தது.

இந்த இறுக்கம் வைதேகிக்கு இன்று வந்தது கிடையாது.. பதினான்கு வருடம் முன் வந்தது.., வெங்கட பூபதி வைதேகிக்கு சொந்த அத்தை மகன் தான்..

மிக நெருங்கிய சொந்தம்.. மிகவும் பிடித்து தான் வெங்கட பூபதி வைதேகியை திருமணம் செய்து கொண்டது.. பின் தான் தன் நாத்தநாரான பத்மாவதிக்கு சூர்ய நாரயணனை கொடுக்க வேண்டும் என்ற பேச்சு தன் புகுந்த வீட்டில் பேசினார்கள்…

வைதேகிக்கும் பத்மாவதியை மிகவும் பிடித்தம் தான்.. தான் உண்டு.. தன் வேலை உண்டு என்று இருப்பாள்.. பார்க்கவும் குறை சொல்ல முடியாத அழகு.. என்ன ஒன்று அவ்வப்போது சோர்ந்து சோர்ந்து படுத்துக் கொள்வாள்..

பணம் நிறைந்த வீட்டில் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை என்பதால், அது ஒரு குறையா என்பது போல் தான் புகுந்த வீட்டில் தன் அண்ணனோடு தன்னை பேச தூது அனுப்பிய போது..

தன் அண்ணன் சூர்ய நாரயணன் சொன்ன.. “ கொஞ்சம் யோசிக்க விடும்மா..?” என்று சொல்லும் போது தன் நாத்தனாருக்கு என்ன குறை என்று தன் அண்ணனிடம் சண்டை போட்டாள்..

“ சரி சரி.. குறை ஒன்றும் இல்லை தான்.. ஆனால் கொஞ்சம் யோசிக்க விடும்மா..?” என்று இரு நாள் அவகாசம் சொல்லி அனுப்பிய தன்னை இந்த வீட்டில் அன்று என்ன பேச்சு பேசினார்கள்..

அதுவும் தன் கணவன்.. “ என் தங்கைக்கு என்ன குறை என்று உன் அண்ணன் இரண்டு நாள் பொருத்து சொல்கிறேன் என்று சொல்றார்.. என் தங்கை என்ன அப்படி கீழ் இறங்கி போய் விட்டாள்..” என்று அந்த திருமண பேச்சை அதோடு நின்று விடும் போல் இருந்ததை பத்மாவதி சொன்ன..

“ அவருக்கு என்னை மணம் முடித்து கொடுப்பது என்றால் கொடுங்க.. இல்லேன்னா இனி என் திருமண பேச்சையே இந்த வீட்டில் எடுக்க கூடாது…” என்று திட்ட வட்டமாக சொல்லி விட்ட பின், சூர்ய நாரயணன் கேட்ட அந்த இரண்டு நாள் அவகாசத்திற்க்காக பூபதி குடும்பம் காத்து கொண்டு இருந்தனர்..

பின் தன் அண்ணன் நல்ல பதிலாக .. “ நானே பத்துவை திருமணம் செய்து கொள்கிறேன்..” என்று வீட்டில் வந்து சொல்லவும், சூர்ய நாரயணனை தலையில் வைத்து கொண்டாடி தீர்த்தனர்.

அந்த கொண்டாடல் இன்றும் அவருக்கு இந்த வீட்டில் நடைப்பெற்றுக் கொண்டு தான் இருக்கிறது.. அவர் வந்து விட்டால் போதும், இன்னும் மாப்பிள்ளை விருந்து நடக்க தான் செய்கிறது..

நம் பழக்கம் தான் வீட்டுக்கு வந்த மருமகளுக்கு ஒரு நீதி.. மருமகனுக்கு என்று ஒரு நீதி உள்ளதே.. தவறு செய்த மருமகன் சூர்ய நாரயணனை நேரில் ஒன்றும் பேசாது… அவர் தங்கை இந்த வீட்டின் மருமகள் ஆன தன்னிடம் தானே இது போல் எல்லா பேச்சும் நடைப்பெறும்..

இதோ இப்போது பேசி விட்டு செல்கிறாளே வனிதா இது போலான பேச்சுக்கள் வைதேகி நிறையவே கேட்டு விட்டாள்..

அதுவும் பதினான்கு வருடம் முன் தன் மாமியார் இருந்த போது, நான் எங்கள் அறைக்குள் போகும் போதே காதே கூசும் அளவுக்கு..

“ என் மகள் அங்கு தன் புருஷனை சக்காளத்திக்கு மொத்தமா கொடுத்து விட்டு தனியே படுத்துட்டு இருக்கா..

ஆனா நீ பத்து மணி ஆனா போதும்.. கதவை இழுத்து மூடிக்கிறது.. புருஷன் கூட இருக்கும் போது தன் அண்ணிய பத்தி கொஞ்சம் நினச்சா அந்த தாழ்ப்பாளை போட தோனுமா…? யாரு எக்கேடு கெட்டா எனக்கு என்ன..? எனக்கு என் சுகம்.. அப்படி என்ன அலச்சலோ..” என்று தன் மாமியார் பேசும் போது தன் மகன் அப்போது பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதி முடித்த பதினைந்து வயது மகன்.. அப்போது இது போல் பேசிய பேச்சுல் கூசி போய் அறைக்கு செல்லாது இருந்தால்,

கணவன் முறைத்து கொள்ள.. வைதேகி இருக்கும் நிலையை சொன்ன பின், ஒன்று தனக்கு கணவனாக தன் அன்னையிடம் இது பற்றி பேச முடியாது தான்.. ஆனால் மறை முகமாக கண்டித்து இருக்கலாம்..

சரி அதை தான் செய்யவில்லை.. தன் மனதை புரிந்து தன்னை தனியே இருக்க விட்டு இருக்கலாம்..

அதை விடுத்து.. “ தன் மகள் வாழ்க்கை போய் விட்டதே என்ற ஆதங்கத்தில் வீட்டு பெரியவர்கள் அப்படி தான் பேசுவாங்க.. அதுக்குன்னு நீ என்னை விட்டு தள்ளி இருப்பியா…?” என்று கேட்டு விட்டு..

“ எப்போதும் போல் பத்து மணிக்கு அறைக்கு வர பார்..” என்று சொன்ன கணவனின் பேச்சை ஒரு மனைவியாக வைதேகி கேட்க தான் வேண்டி தான் இருந்தது.. வெங்கட பூபதிக்கு அப்போது எல்லாம் வாரத்துக்கு இரண்டு நாளாவது அவருக்கு தன் மனைவி வேண்டும்..
 
Active member
Joined
Jun 23, 2024
Messages
71
துளசி சூர்ய நாராயணன் செயலால் எத்தனை பேர் வாழ்க்கை நிம்மதி இல்லாமல் போயிட்டு இருக்கு 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶

துளசி ஏதோ ஒரு காரணத்தால் இப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்தாலும் அவர் கூட வெளியே போறதையாச்சும் நிறுத்தலாம் 👿👿👿👿 ஒரு மனைவியா அவங்க மனசு எவ்வளவு வேதனை படும் 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

புருஷன் தான் அப்படி என்றால் பிள்ளைங்களும் அதை சொல்லியே அம்மாவை காயப்படுத்துறாங்க 🙁🙁🙁🙁🙁

பத்மாவுக்கு சின்ன வயசில் இருந்தே உடம்புல ஏதோ பிரச்சினை இருக்கும் போல 🤔 🧐 🤔 🤔
 
Active member
Joined
Aug 16, 2024
Messages
267
சூர்ய நாராயணன் செயலால் வைதேகி தான் அதிகம் பாதிக்கப் பட்டிருக்கிறாள் போல.
 
Top