Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Meezhveno Muzhgiduveno - 24

  • Thread Author
அத்தியாயம்….24

துளசியின் வாழ்க்கை எப்படி இருந்ததோ, ஆனால் அவர் இறந்த பின் அவரின் கடைசி யாத்திரை, பின் அதனை ஒட்டிய சடங்குகள் அனைத்தையுமே நல்ல படி முடித்து வைத்திருந்தான் சர்வேஷ்வரன்…



அங்கு சூர்ய நாரயணனே மூன்றாம் மனிதனை போல் நிற்க வைத்து விட்டான்.. முறைப்படி அனைத்துமே குறையில்லாது மான்சி நவீனை வைத்து செய்து முடித்து விட்டான் தான்..



சூர்ய நாரயணன் இந்த சடங்கில் செய்ய அருகில் சென்ற போது அவன் சர்வா சொன்னது இது தான்..



“ அவர்கள் வாழும் போது தான் அப்படி வாழ்ந்து விட்டார்கள்.. குழந்தைகளிடம் பேச முடியாது… இறப்பிலாவது அவர்கள் மரியாதையோடு செய்ய விடுங்க..” என்ற சர்வாவின் வார்த்தையில் முற்றிலும் ஒதுங்கி விட்டார் சூர்ய நாரயணன்…



அந்த வகையில் சர்வாவின் அப்பா பெரியப்பாவுக்கு மகிழ்ச்சியே… வைதேகி, ரேவதி சம்மந்தி என்ற முறையில் வந்து அனைத்திலும் கலந்து கொண்டனர்..



ஆனால் அனிதா, வனிதா, அந்த திசைப்பக்கம் கூட எட்டி பார்க்கவில்லை.. ஒரு வகையில் சனியன் விட்டது என்ற மனநிலையில் தான் அவர்கள் இருவரும் பேசிக் கொண்டனர்..



ஆனால் பத்மாவதிக்கு துளசியின் இறப்பை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ள முடியவில்லை… மன அழுத்தம் அதனால் வந்த மாரடைப்பு என்றதில், துளசியின் நிலை பத்மாவதிக்கு புரியவே செய்தது..



துளசி தன்னோடு வயதில் மிக சிறியவள் என்பதும் பத்மாவதிக்கு தெரியும்… அதோடு அவள் வாழ்ந்த வாழ்க்கைக்கு தானும் ஒரு காரணமாக அமைந்து விட்டமோ…



பத்மாவதிக்கு சிறு வயது முதலே சூர்ய நாரயணன் என்றால், அவ்வளவு விருப்பம்.. தன் உடல் நிலை பற்றி தெரிந்து, தன் விருப்பம் நிறைவேறாது என்று இருந்தவர்..



பின் மருந்து மாத்திரை மூலம் கொஞ்சம் சரியான பிறகு, மீண்டும் சூர்ய நாரணனை திருமணம் செய்யும் அவரின் விருப்பம் மேல் எழுந்தன…



அதற்க்கு வலு சேர்க்கும் வகையாக, தன் சின்ன அண்ணன் சூர்ய நாரயணன் தங்கையை திருமணம் செய்யவும்… பத்மாவதிக்கு ஒரு நம்பிக்கை…



திருமணத்திற்க்கு பின் தன் உடல் நிலைப்பற்றி சூர்ய நாரயணனுக்கு தெரிய வந்தால் கூட, தங்கையின் வாழ்கைக்காவது தன்னை வைத்து கொள்வார் என்று..



ஆனால் அவர் நினைத்தது போல் வைத்து கொண்டார் தான் .. தன்னை தவிர இன்னொரு பெண்ணையும்… கணவனின் பலவீனம் பத்மாவதிக்கு தெரிந்தது தான்..



திருமணம் ஆன புதியதிலேயே, கணவனின் ஆசையை முழுவதுமாக நிறைவேற்ற முடியவில்லை என்பதை பத்மாவதி நன்கு உணர்ந்து தான் இருந்தார்..



அதுவும் சில சமயம்.. “ நான் ரொம்ப முரட்டு தனமா கூட உன்னை ஹான்டில் செய்வது இல்லையே பத்து.. ” என்று திருமணம் ஆன புதியதில் கேட்கும் போது பத்மாவதி வேறு என்ன என்னவோ பேசி பேச்சின் திசையை மாற்றி விடுவார்…



பின் இரு குழந்தைக்கு தாய் ஆனதே தன் வாழ் நாளின் சாதனை போல் ஆகி விட்டது பத்மாவதிக்கு, அடுத்து தன் உடல் நிலை சூர்ய நாரயணனுக்கு தெரிந்த பின்…



இன்று வரை இந்த பிரச்சனை திருமணத்திற்க்கு முன் இருந்தது என்று தெரியாது.. ஏன் அதை பற்றிய சிறு சந்தேகம் கூட சூர்ய நாரயணனுக்கு எழவில்லை..



அன்று சர்வேஷ்வரன் தன் உடல் நிலை பற்றி சொன்ன போது சூர்ய நாரயணன் அதிர்ந்து தன்னை பார்த்த அந்த பார்வை, இப்போது நினைத்தால் கூட மனது பிசைய தான் செய்கிறது..



பின் அடுத்து இதோ இன்று வரை அதை பற்றி வாய் திறவாது இருக்கும் கணவனை நினைத்து மனது கலங்கி போனவளாக தான் பத்மாவதியும் தன் வீட்டில் சுற்றிக் கொண்டு இருக்கிறார்..



அதுவும் வனிதா.. “ அந்த பையன் அந்த வீட்டில் இருப்பதற்க்கு நான் சும்மா விட மாட்டேன்…” என்று தன் தந்தையின் முன் கத்திக் கொண்டு இருப்பவளை…



சூர்ய நாரயணன் எதுவும் சொல்லாது ஒரு பார்வை மட்டும் பார்த்து சென்றவர் மனதில் என்ன நினைத்து கொண்டு இருக்கிறார் என்ன செய்ய போகிறார் என்று இதுவும் சேர்ந்து பத்மாவதியின் நிலை ஒரு நிலையில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்…



சூர்ய நாரயணன் வீட்டின் சூழ்நிலை இப்படி என்றால், சர்வேஷ்வரனின் வீட்டின் நிலை வேறு மாதிரியாக தான் இருந்தது..



காரியம் முடிந்த பின்னும் அந்த நவீன் இங்கு வரவும், யாராலும் வாய் திறந்து பேசாது.. பூனைக்கு யார் மணி கட்டுவது என்பது போல் ஒருவருக்கு ஒருவர்..



“ நீ கேள்.. நீ கேள்..” என்று ஒருவருக்கு ஒருவர் கை காட்டிக் கொண்டு இருக்க,

வனிதாவோ..” எனக்கு என்ன பயம்..” என்று அன்று காலை உணவு குடும்பமாக உண்ணும் சமயம்…



எப்போதும் போல் கடைசியாக உணவு உண்ண வந்து அமர்ந்த வனிதா…



நவீன் சாப்பிட்டு கொண்டு இருப்பதை பார்த்த வாறு சர்வாவிடம்… “ என்ன சர்வா.. பையனுக்கு ஹாஸ்ட்டல் பார்த்தாச்சா..? என்று கேட்டவள் அவன் பதிலை எதிர் பாராது..



“ ஓ எக்ஸாம் நடந்து கொண்டு இருக்கு.. அது முடிந்த பின் காலேஜ் ஹாஸ்ட்டலில் சேர்த்து விடலாம் என்ற எண்ணமா…?” என்ற வனிதாவின் கேள்விக்கு சர்வேஷ்வரன் பதில் அளிக்காது, தன்னையே சங்கடத்துடன் பார்த்து கொண்டு இருந்த நவீனை பார்த்து..



“என் முகத்தையே பார்த்துட்டு இருக்க.. எக்ஸாமுக்கு டைம் ஆகுது பார்..” என்று சொல்லி அவனை உணவு உண்ண சொன்னவன்…



தன் மனைவியின் பக்கம் பார்வையை செலுத்தி.. “ இந்த பதினைந்து நாளா உன் தம்பி பத்திய பேச்சு தான் போயிட்டு இருக்கு… ஆனா நீயும் உன் பாட்டுக்கு போற வற.. சரி எக்ஸாம் என்று இருந்துட்டேன்…



அந்த எக்ஸாம் முடிந்தும் மூன்று நாள் ஆகி விட்டது.. இப்போ நீ சொல் உன் தம்பி பற்றி நீ என்ன முடிவு எடுத்து இருக்க…?” என்ற சர்வேஷ்வரன் கேள்வியில், மான்சி விக்கித்து போய் விட்டாள்..



அவள் என்ன முடிவு எடுக்க முடியும்… அவளிடம் என்ன இருக்கிறது முடிவு எடுக்க…? நிஜமாக அவளுக்கு புரியவில்லை…



கையில் தம்புடி இல்லை என்று சொல்வார்களே… மான்சியை பொறுத்த வரை.. அவள் அந்த நிலையில் தான் இருக்கிறாள்…



உடுக்க உடை.. படிக்க கல்வி.. இருக்க இடம் ..உண்ண உணவு.. இந்த தேவைகள் அனைத்தும் அந்த வீட்டில் எந்த பிரச்சனையும் இல்லாது அவளுக்கு கிடைத்து கொண்டு இருந்தது…



என்ன ஒன்று.. அவ்வப்போது இதற்க்கு தாங்கள் கொடுக்கும் விலை.. என்ற அந்த நினைப்பு வந்தால், மான்சி பாதி உணவில் எழுந்து தன் அறையில் முடங்கி கொள்பவள் இதுவும் நினைப்பாள்..



பாதி உணவில் எழுந்தது போல் தன் படிப்பை பாதியில் விட முடியுமா..? இல்லை இந்த வீட்டை விட்டு தான் சென்று விட முடியுமா…?



இது போல் முடிவு எடுக்கலாம்.. ஆனால் அதன் பின்… அது தான் அவள் முன் இருந்த பெரிய கேள்வியாக இருந்தது..



அதே கேள்வி இப்போது தன் முன் நிற்கிறது.. தன் தம்பியை பற்றி.. என்ன செய்வாள்.. தெரியவில்லை… இது வரை அம்மாவுக்கு அனைத்தும் செய்த சர்வா..





தம்பியின் விசயத்திலும் ஏதாவது ஒரு முடிவு எடுப்பான் என்று ஏதோ ஒரு வகையில் அவள் நம்பி கொண்டு இருந்தாள் தான்..





ஆனால் இப்போது அனைத்து பொறுப்பையும் தன் முன் நிறுத்துவான் என்று அவள் நினைத்து பார்க்கவில்லை…



அதுவும் அனைவரும் முன்னும் கேட்பான் என்றும்… என்ன சொல்வது என்று திரு திரு என்று விழுக்கு போது..



சர்வேஷ்வரன்… “ இவங்க எல்லாம் உன் தம்பியை ஹாஸ்ட்டலில் சேர்க்க சொல்றாங்க… என்ன உன் முடிவும் இது தானா…” என்று சர்வேஷ்வரன்ன் கேட்கும் போதே அவள் கண்கள் இரண்டும் கலங்கி விட்டது..

ஹாஸ்ட்டலில் இருந்து படிப்பது தவறு கிடையாது தான்.. ஆனால் எந்த மாதிரி ஒரு சூழ்நிலையில், அதை நினைக்கும் போதே மனது தாளாது கேட்டு விட்டாள்..



“ நான் இருக்கும் போது எதற்க்கு..” என்று..



அவளின் அந்த நான்கு வார்த்தைக்கு நாளா பக்கத்திலும் இருந்து, வார்த்தையின் மூலம் அவளுக்கு தாக்குதல் வந்தது..



“ நீ இருக்கும் போதா…? நீ இருக்க.. உன் கிட்ட என்ன இருக்கு..? இப்போ அது தான் கேள்வி.. இப்போ ஹாஸ்ட்டல் படிப்பு.. இதுக்கே பாவம் பார்த்து தான் செய்ய வேண்டி இருக்கு… உன் தம்பியை இங்கு வைத்து கொள்வது எல்லாம் பேராசை என்று உனக்கு புரியல..” என்று முதல் தாக்குதல் வனிதாவிடம் ஆரம்பிக்க…



அடுத்த தாக்குதல் அவளின் மாமனார்… “ என் மகன் உங்க அம்மாவுக்கு செய்ய வேண்டிய கடமை எல்லாம் முறையா செய்தான்.. அதுக்கு நான் ஏதாவது தடை செய்தேன்னா… அது மருமகனா அவன் கடமை…



அதுவும் உங்க அம்மா என் தங்கை வாழ்க்கையில் இடஞ்சலாக இருந்தவங்க… அப்படி இருந்தும் நான் அவனை செய்ய விட்டது என் பெருந்தன்மை…” என்பது போல் அவர் பேச்சு இருக்க..



அடுத்து மான்சியின் பெரிய மாமனார்… “ தம்பி சொல்றது தான்மா.. பெண் கொடுத்த வீட்டில் இது போல் தம்பி எல்லாம் இருப்பது நம்ம வீட்டு முறை கிடையாது..” என்று அவர் முறையை பற்றி முறையாக சொன்னார்..



அனைவரும் பேச தான் மட்டும் என் சும்மா இருக்க வேண்டும் என்பது போல் மான்சியின் இரு மாமியார்களும்..



“ ஹாஸ்ட்டலில் சேர்த்தாலும், நீ உன் தம்பியை அப்போ அப்போ பார்த்துட்டு வரலாம்.. அதுக்கு நாங்க ஒன்னும் சொல்ல மாட்டோம்.. அதே போல் சர்வாவை நல்ல காலேஜில் பார்த்து சேர்க்க சொல்லிடறேன்..

நல்ல காலேஜ் என்றாலே அங்கு நல்ல ஹாஸ்ட்டலா தான் இருக்கும்” என்று சர்வேஷ்வரனிடம் படிப்புக்கும் இருக்கும் இருப்பிடத்திற்க்கு. நல்லதாகவே அமையும் படி தங்கள் வீட்டு மகனிடம் ரெகமெண்ட் செய்கிறேன் என்று சொல்ல..



அனைவரின் பேச்சிலும் நவீன் எழுந்து நின்றவன்…



“ உங்க எல்லோருக்கும் பெரிய மனது.. கண்டிப்பா நான் அதை ஒத்துக் கொண்டே ஆக வேண்டும்… என் மார்குக்கு எனக்கு ஸ்காலர்ஷிப்பிலேயே நல்ல காலேஜ் கிடைக்கும்..” என்று அவன் சொல்லி கொண்டு இருக்கும் போதே மான்சி..



“ நீ நீட்..” என்று அவள் பேச்சை முடிக்க விடாது..



வனிதா.. “ உனக்கே இது அநியாயமா தெரியல… ஒரு உதவி என்றால் படிக்க தான் வைக்க முடியும்.. ஏதோ ஒரு டிகிரி .. அதை வைத்து, அதற்க்கு மேல் அவன் வாழ்கையை அவன் தான் பார்த்து கொள்ள வேண்டும்..



நீயே கல்யாணம் ஆன பின் கூட கிச்சன் பக்கம் போகாது என்னவோ வர போற… சரி நீ ஏதோ படுக்கிற என்று இவங்க இருக்காங்க.. இந்த ஒரு முறை நீ இந்த தேர்வின் பாஸ் செய்தால், பார்க்கலாம் என்று விட்டு விட்டு இருக்காங்க..” என்று சொன்னவள் அனைவரையும் பார்த்து அப்படி தானே என்பது போல் பார்த்தாள்..



அவளுக்கு மான்சி ஐ.ஏ. எஸ் எக்ஸாமுக்கு மான்சி படிப்பதில் துளி கூட விருப்பம் கிடையாது.. எங்கு வெற்றி பெற்று விடுவாளோ என்ற பயம்.. வெற்றி பெற்று விட்டால், கண்டிப்பாக இந்த வீட்டில் அவளை தலையில் வைத்து கொண்டாடுவார்கள் என்பது நிச்சயம்..

எந்த வகையிலுமே துளசியின் மகள் தன்னோடு உயர்ந்து இருக்க கூடாது என்ற எண்ணம் வனிதாவுக்கு.. அதனால் இந்த ஒரு முறை தான்… என்று சொன்னது..



அவளுக்கு கண்டிப்பாக இதில் வெற்றி பெற மாட்டாள் என்ற எண்ணம்… அவளுக்கு எங்கு தெரிய போகிறது.. முதல் இரண்டு தகுதி தேர்வில் வெற்றி பெற்று விட்டாள்..



இதில் வெற்றி பெற்றால் அடுத்து பயிற்ச்சி தான் என்பது… அதனால் இப்படி பேச.. அனைத்தையும் ஒரு பார்வையாளராக மட்டும் பார்த்து கொண்டு இருந்த சர்வா..

நவீனிடம்.. “ உனக்கு டைம் ஆகிறது பார்.. “ என்று அவனை அங்கு இருந்து அனுப்ப பார்த்தான்..

நவீனுக்குமே தேர்வுக்கு நேரம் தான் ஆகிறது.. அதுவும் தான் மின் இருந்த வீட்டில் இருந்து அவன் பயின்ற பள்ளி அருகில் இருந்தது.. ஆனால் இங்கு இருந்து சிறிது தூரம் தான்..

இப்போது கிளம்பினால் தான் சரியாக இருக்கும்.. இருந்தும் தன்னால் இங்கு பிரச்சனை.. அதுவும் தன்னால் தன் அக்காவுக்கு பிரச்சனை ஆகி விட போகிறது என்ற பயம் தான் அவனுக்கு அதிகம்..



அதனால் தயங்கி.. “ மாமா என்னால் பிரச்சனை ஆக வேண்டாம்.. சொன்னது போல நான் ஏதாவது ஒரு டிகிரி படிக்கிறேன்.. ஆனால் அக்கா படிப்பு..” என்று அவன் பேசும் போதே அவன் தொண்டை கமறியது…

அதை சரி செய்தவன்.. “ அக்கா படிப்பை மட்டும் தடை செய்யாதிங்க மாமா..” என்றவனின் பேச்சுக்கு வனிதா மீண்டுக் ஏதோ வாய் திறக்க போக.

அவளை கை காட்டி பேசாது தடுத்த சர்வா.. நவீனிடம் .. “ உனக்கு எக்ஸாமுக்கு டைம் ஆகுது பார்… நீ கிளம்பு.. இதை எல்லாம் மனதில் போட்டு குழப்பி கொள்ளாதே.. எக்ஸாமுக்கு போற… உன் மனது அமைதி அடைய இது மட்டும் கேட்டுட்டு எக்ஸாமுக்கு கிளம்பி..” என்று நவீனிடம் பேசிய சர்வா..



பின் அனைவரையும் பார்த்து..” நான் என் மச்சானுக்கு செய்ய வேண்டியது எது என்றாலும் சரி.. அதே போல் என் மனைவிக்கு செய்ய வேண்டியது எது என்றாலும் சரி.. இந்த வீட்டு பணத்தில், அதாவது குடும்ப தொழிலில் இருந்து வரும் பணத்தில் இருந்து செய்ய போறது கிடையாது..” என்று சொல்லி அவன் வாய் மூடும் முன் வனிதா மீண்டும்..



“ இந்த வீடு கூட உன் சொந்த காசில் இருந்து வாங்கினதா சர்வா…? ஏன் என்றால், உன் மச்சானும், உன் மனைவியும் இந்த வீட்டில் தானே இருக்காங்க..” என்று கேட்டு விட்டு அவனை ஒர் நக்கல் பார்வை பார்த்தாள்…



சர்வா நவீனுக்கு நேரம் ஆவதை உணர்ந்து.. “ நீ முதல்ல கிளம்பு..” என்று சொன்னவனிடம் நவீன் போகாது தயங்கி ..” மாமா..” என்று நிற்க..





“ உங்க அக்காவுக்கு தான் என் மீது நம்பிக்கை இல்லாது யார் என்ன சொன்னாலும், வாயை மூடிட்டு இருக்கா.. நீயாவது என்னை நம்புறியா இல்லை..” என்று அவன் பேச்சை முடிக்கும் முன் நவீன் அங்கு இருந்து சென்று இருந்தான்..

இப்போது அனைவரையும் ஒரு பார்வை பார்த்து கொண்டு வந்த சர்வா முடிவில் தன் பார்வையை வனிதாவின் முகத்தில் நிலைப்பெற்று..

“ நீ சொன்னது ஒரு வகையில் சரி தான் வனிதா… இந்த வீடு என் வீடு கிடையாது… இந்த வீட்டில் யார் இருக்க வேண்டும் என்ற முடிவு செய்யும் அதிகாரம் பெரியவங்க கிட்ட தான் இருக்கு..



அதே போல் மான்சி இந்த வீட்டில் இருந்து கிட்டு படிப்பு படிப்பு என்று போயிட்டு உன்னை மாதிரி குடும்ப பொறுப்பை பார்க்காது இருப்பது தவறு தான்.. “ என்று வனிதாவை விட நக்கலாக பேசிக் கொண்டு வந்த சர்வேஷ்வரன் முடிவில்..

“ அதனால் தான் நான் என் சொந்த தொழில்லில் வந்த பணத்தில் இருந்து போன வாரம் என் மனைவியின் பெயரில் ஒரு கட்டின வீட்டை வாங்கி இருக்கேன்..” என்றான்..
 
Top