Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Meezhveno Muzhgiduveno - 25

  • Thread Author
அத்தியாயம்….25

சர்வா அந்த பதட்டமான சூழ்நிலையிலும் நல்ல வேலை தங்கள் அறைக்கு வந்த பின் தான் கேட்டோம் என்று ஆசுவாசம் அடைந்தான்…



மான்சி என்ன சொல்ல போகிறாள் என்பதை சர்வா ஒரளவுக்கு அனுமானித்து தான் இருந்தான்.. பாஸ்கரன் மான்சியை பெரியதாக செய்யவில்லை என்றாலும், ஏதோ செய்து இருக்கிறான் என்பது அவன் கணிப்பு..



அந்த கணிப்பில் அவன் இதுவா..? அதுவா..? என்று யோசித்து வைத்து இருக்க… ஆனால் மான்சி சொன்ன…



“அப்போ நான் அவனை ஒன்றுமே செய்ய முடியல.. அவன் என்னை என்ன செய்ய சொல்றான் என்று கூட புரியவில்லை..” என்று மான்சி சொல்லும் போதே..



‘ இவளை அவன் என்ன செய்ய சொல்லி கேட்டு இருப்பான்…? அவன் தான் இவளை .. என்று சர்வா யோசிக்கும் போதே..



மான்சி சொன்ன ..” என் கையை அவன் **** அங்கு அங்கு கொண்டு போய் வைப்பான்… முதல்ல எனக்கு சுத்தமா தெரியல பின்..” என்று சொல்ல முடியாது அவள் உதடு நடுங்க பேசிக் கொண்டு போனவளை… மேலும் பேச விடாது அவள் முகத்தை தன் நெஞ்சில் புதைத்துக் கொண்ட சர்வா..



“ வேண்டாம் டா.. நீ ஒன்றும் சொல்லாதே.. ஒன்றுமே எனக்கு தெரிய வேண்டாம்..” என்று அவன் சொல்லும் போதே அவன் கண்கள் கலங்கி விட்டது..



எதற்க்கும் கலங்காதவன் சர்வேஷ்வரன்.. நாளை திருமணம் இன்று மணப்பெண்ணுக்கு கருக்கலைப்பு எத்தனை முறையோ நடந்து இருக்கிறது என்று தெரிந்த பின் கூட கலங்காது அடுத்து என்ன என்று யோசித்தவன் தான் அவன்..





ஆனால் தன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டு அழும் தன் மனைவிக்கு என்ன சொல்வது என்று கூட தெரியாது என்பதை விட அவள் அனுபவித்த அந்த வேதனை..



அதுவும் அந்த வயதில்.. தான் ஒரு ஆணாக பிறந்ததை நினைத்தே சீ என்று ஆகி போனது.. அப்படி அவனே அவள் பட்ட வேதனையை ஜீரணித்து கொள்ள முடியாது கண் கலங்கி கொண்டு இருக்கும் போது, அவன் எப்படி தன் மனைவிக்கு தைரியத்தையும் ஆறுதலையும் கொடுக்க முடியும்…?



தன்னை மார்பில் புதைத்து கொண்டவன் .. “ நினைக்க வேண்டாம் என்று சொல்லோடு வேறு எதுவும் சொல்லது இருந்ததில் மான்சியின் மனம் ஒரு நிமிடம் கலங்கி போய் விட்டது..



இவனுக்கு அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லையா..? என்னை பார்த்து அருவெறுப்பு இப்படி ஏதாவது படுவானா…?



சொந்த அத்தை மகளை பற்றி கேள்வி பட்டதும் தூக்கி எரிந்து விட்டான்.. ஒழுக்கம் குடும்ப மானம் என்று திருமணம் ஆன புதியதில் தன்னிடம் இதை பற்றி தான் நிறைய முறை பேசி இருக்கிறான்..



தன்னை இப்படி செய்ய சொன்னான் என்று தெரிந்ததும்.. நான் கரை படிந்தவள் என்று நினைத்து விட்டானோ…



மனது என்பது ஒரு ராட்டிணம் போல்.. அது நினைவுக்கு ஏற்ப சுழலும் என்பது போல் தான் அவள் மனது நொடிக்கு கண்ட படி சுழண்டு கொண்டு இருந்தது…



அவனோடு வாழ்ந்தது ஒரு நாள் தான் .. ஆனால் அதை மனதில் ஒராயிரம் முறை நினைத்து இருப்பாள் என்பது அவள் மட்டும் அறிந்த ரகசியம் அல்லவா..?



தன்னை கேளாது தன்னை அவன் தொடவில்லை என்றாலும், தன் விருப்பம் இல்லாது அந்த நிகழ்வு நடக்கவில்லை என்பது அவள் உணர்ந்தது தானே..



பின் வரும் நாளில் ஒரிரு இரு முறை தன்னை தன் அன்னையோடு தொடர்பு படுத்தி பேசும் போது துடித்தாள் தான்..



ஆனால் அதன் பின் அது போல் எந்த பேச்சும் அவனிடம் இல்லாது தான் கேட்காது தனக்கு என்ன வேண்டும் என்று பார்த்து செய்ததோ.. இல்லை பார்க்க அவன் நன்றாக இருப்பதில் வயது கோலாரில் வரும் ஆசையோ.. இல்லை தாலி கயிற்றின் மாயமோ…



ஏதோ ஒன்று… ஆனால் இப்போது எல்லாம் மான்சிக்கு சர்வாவை பிடித்து தான் இருக்கிறது… அதுவும் மிகவுமே..



அதுவும் தன் அன்னை இறப்பில் தன் அன்னையின் உடலுக்கு செய்த மரியாதை.. எந்த இடத்திலும் சூர்ய நாரயணனை நிற்க வைக்காது துளசியின் இறுதி யாத்திரையை ஒரு மருமகனாக.. செய்ய வேண்டிய முறையை செய்தது..



அனைத்தும் பார்த்து அவளுக்கு அவன் மீது அவளுக்கு ஒரு வித தாக்கம் உருவானது உண்மை…



அதனால் தான் தன் தாயிடம் கூட சொல்லாத ஒரு நாள் பாஸ்கரன் அந்த வீட்டில் இல்லாததை பார்த்து…



“ அம்மா அந்த அங்கிள் இனி வர மாட்டாரா..?” என்றதற்க்கு துளசி சொன்ன இல்லை என்ற பதிலில்..

“ ஐய் ஜாலி..” என்று மான்சி குதிக்க..



துளசி அலண்டு போனவளாக.. “ என்ன என்ன ஜாலி.. அவன் உன்னை என்ன பண்ணான்.. என்ன செய்தான்.. “ என்று பதறி கேட்க..



முழுவதும் சொல்லாது ஒரு சிலது தான் அந்த வயதிலேயே மான்சி சொன்னாள்.. சொல்ல கூடாது என்பது எல்லாம் கிடையாது..



ஆனால் சொல்ல தெரியவில்லையா..? இல்லை சொன்னால் தன்னை அடிப்பாங்களா.. என்று ஏதோ ஒன்று அவளை தன் தாயிடமே முழுவதும் சொல்ல விடாது தடுத்தது என்பது மட்டும் நிச்சயம்..







ஆனால் சர்வாவிடம்.. சொல்ல கூச்சம் கிடையாது.. எந்த வித தயக்கமும் அவளுக்கு ஏற்படவில்லை..



ஏன் அவன் தன் கணவன் இதை சொன்னால் தன் வாழ்க்கை பாதிக்கப்படுமோ என்ற பயம் கூட இல்லாது தான் அனைத்தும் சொல்ல பேச்சாய் ஆரம்பித்து விட்டாள்..



என்ன ஒன்று முழுவதும் அவன் சொல்ல விடவில்லை.. இவளும் சுற்றி வளைத்து பேசாது முக்கியமான விசயத்தை போட்டு உடைத்ததில் தான் அவன் மனது தாளாது..



“ வேண்டாம் சொல்லாதே சொல்லாதே..” என்று மட்டும் சொல்லிக் கொண்டு இருந்தவனின் இதயத்துடிப்பு மட்டும் மார்பில் சாய்ந்து கொண்டு இருந்தவளின் சேவியில் கேட்டு கொண்டு இருக்கும் போது தான் மான்சியின் நினைப்பு எங்கு எங்கோ சென்று விட்டது..



ஆனால் உன் துடிப்புக்கு அர்த்தமே இல்லை என்பது போல்.. உடல் குலுங்கியவனின் அதிர்வில்.. இவள் அதிர்ந்து போய் அன்னாந்து மான்சி சர்வா முகத்தை பார்க்க முயலும் போது..



சர்வாவின் கண்ணீர் துளி மான்சியின் கன்னத்தில் பட்டு அது ஈரம் உணரும் போது தான் மான்சி தன் உணர்வுக்கு வந்து இப்போது அவள் அவனை அணைத்துக் கொண்டு..



“ விடு ஈசா… விடு… மறந்துடு மறந்துடு.. நானும் அதை மறந்துடுறேன்.. ப்ளீஸ் ப்ளீஸ் ..” என்று சொல்லி இவள் வேதனையை அவன் மறக்க இவள் அவனுக்கு ஆறுதல் வழங்கி கொண்டு இருந்தாள்..



சிறிது நேரம் கழித்து தன்னை நிலப்படுத்திக் கொண்ட பின் தன் உள்ளங்கையில் அவன் முகத்தை வைத்து கொண்டு..



“ நீ மறந்து விட்ட தானே.. நீ மறந்து விட்ட தானே..” என்று அவள் கண்ணை பார்த்து அவன் கேட்கும் போதே மீண்டும் அவன் கண்களில் இருந்து கண்ணீர் உடைப்பெடுக்க ஆரம்பிக்க..



ஓருவரின் அழுகை மற்றவர்களுக்கு சந்தோஷத்தை கொடுக்க முடியுமா..? கொடுக்க முடியும்.. இதோ தான் பட்ட வேதனையை நினைக்கும் போதே, வேதனையில் இவன் கண்களில் இருந்து வரும் அந்த கண்ணீர் எனக்காக.. எனக்காக மட்டுமே… என்று நினைக்க நினைக்க மான்சியின் முகம் கொஞ்சம் புன்னகையை பூசிக் கொண்டது…



முன் போல் தன் கண்ணீரை துடைக்காது சிரித்த முகத்துடன் தன்னை பார்த்து கொண்டு இருந்தவனுக்கு என்ன தோன்றியதோ தன் மிக அருகில் இருந்த அவள் முகத்தை இன்னும் அருகில் கொண்டு வரும் போது…



அகள் முகம் ஒரு வித எதிர் பார்ப்போடு தன் கண்ணை மூடிக் கொண்டாள்.. ஆனால் சிறிது நேரம் சென்ற பின் கூட தான் நினைத்தது நடவாது போகவும் கண்ணை திறந்து பார்த்த உடன் ஒரு கேலி சிரிப்போடு.. அவள் நெற்றி மீது தன் நெற்றிக் கொண்டு முட்டியவன்..



பின் அதே நிலையை தொடர்ந்த வண்ணம்.. “ முடியாது டா.. இப்போ நீ எதிர் பார்ப்பதை என்னால் கொடுக்க முடியாதுடா … ஒரு பாட்டு இருக்கே அது என்ன..?



ஆ தொட தொட தொட மாட்டேன் தொட்டால் நானும் விட மாட்டேன்.. அந்த நிலையில் தான்டா நான் இப்போ இருக்கேன்.. இன்னும் கொஞ்ச நேரத்தில் உன் தம்பி வந்துடுவான்..



அதோடு இல்லாது இத்தனை நாள் அவனை இதே அறையில் படுக்க வைத்து கொண்டு இன்று வேறு அறை கொடுத்தால்,,



அவன் சின்ன பையனும் இல்ல.. அதே சமயம் வளர்ந்த முழுமையான ஆணும் இல்ல.. இந்த வயதில் நாம் ரொம்ப பார்த்து நடந்து கொள்ளனும்…



இன்னும் இரண்டே நாள் தான்.. நாம நம்ம புது வீட்டுக்கு போயிடலாம்.. அங்கு உன் தம்பிக்கு ஒரு தனி ரூம்.. நமக்கு நமக்கு..” என்று சொல்லிக் கொண்டவனின் காதல் மொழி…



தொடாது பேச்சால் மட்டுமே.. ஒரு அழகிய நிறைவான தாம்பத்திய உறவை கொடுக்க முடியுமா..? முடியும் என்பது போல் தான் தன் பேச்சால் மட்டுமே மான்சியை வெட்கப்படுத்தி கொண்டு இருந்தான்…



இருவருக்கும் ஆண்டு கணக்கில் எல்லாம் காதல் கிடையாது.. அதே போல் பெரியவர்கள் முறைப்படி செய்து வைத்த திருமணம் என்றாலும், அது நடந்த சூழல்..அதுவும் இருவருக்கும் இருக்கும் அந்த உறவில் இடையே நின்ற சூர்ய நாரயணன்.. மான்சியின் தாயின் வாழ்க்கை முறையால் மான்சிக்கு வந்த சங்கடங்கள்..



என்று அத்தனை வேற்றுமைகள் இருந்தும்…. ஒரே நாள் அந்த உறவில் இருவரும் என்ன கண்டார்களோ என்ன உணர்ந்தார்களோ… ஆனால் ஏதோ ஒரு நிறைவை கண்டு இருந்து இருப்பார்கள்.. நான் உனக்கானவன்.. நீ எனக்கானவள்…



அதனால் தான்.. முதல் நாள் உறவை தொடராது.. மான்சியின் மனதுக்கு மதிப்பு கொடுத்து தள்ளி இருந்தானோ.. இல்லை அவள் படிக்கும் போது குழந்தை ஏதாவது வந்து விட்டால், அவள் கனவு கலைந்து விடும் என்று நினைத்தானோ..



ஆனால் ஏதோ ஒன்று இவர்கள் இருவருக்கும் போட்ட அந்த மூன்று முடிச்சி.. அந்த கடவுள் அவிழ முடியாது பலமாக தான் போட்டு விட்டார் போல.



அதனால் தான் இத்தனை சிக்கலையும் இருவரும் ஒரு சேர பிரித்து எடுத்து, இவர்கள் இருவரும் பிரிக்க முடியாது பிணைத்து இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்…



பத்மாவதிக்கு வனிதா அரஸ்ட் ஆகி அன்றே வெளியில் வந்தால் கூட.. மனது ஆறவில்லை.. இரு அண்ணங்களின் முகத்தை பார்க்க முடியவில்லை..



“ என்ன வளர்த்து இருக்க உன் இரண்டு பெண்களையும்.. தங்கை மகள்கள் என்று தான் எங்க வீட்டுக்கு மருமகளாக கொண்டு வர நினைத்தொம்..

முதல் மகளை கொண்டும் வந்தோம்.. அவளை பார்த்தே சின்ன மகளை எடுக்க தான் வேண்டுமா என்று உன் இரண்டு அண்ணிங்களுக்கும் விருப்பம் இல்லாது தான் போயின..

நாங்க தான் வலுக்கட்டயமாக என் தங்கை மகள் தான் இந்த வீட்டு மருமகள் என்று எங்க பெண்டாட்டி வாயை அடைத்து சம்மந்த பேசினோம்..

சர்வா.. நீங்க பார்த்து முடிங்க எறு அவன் வாழ்க்கையை எங்க கையில் தூக்கி கொடுத்தான்..



ஆனால் நடந்தது…? எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகம்… வயது பெண் எங்கு போகுது எங்கு வருது என்று பார்க்க மாட்டியா..? கண்டிக்க மாட்டியா…? வீட்டில் இதோடு வேறு என்ன வேலை உனக்கு..?



ஸரி அது தான் போனது என்று விட்டால், இப்போ உன் மகள் என்ன காரியம் செய்ய இருந்தா… அந்த பாஸ்கருக்கு சர்வா என்ன தண்டனை கொடுத்தான் தெரியும் தானே…



அதே தண்டனையை வனிதாவுக்கு கொடிக்க அவனுக்கு எவ்வளவு நேரம் ஆகும்..? பார்த்து நடந்துக்க. இப்போ எல்லாலோருடைய செயலால் சர்வா தனியா போகிறான்…” என்று சொன்ன அண்ணன்மார்கள்..



பின் வனிதாவை பார்த்து.. “ மகிக்கு உன் மேல் கோபம் குறையல.. குறையுமா என்று கூட தெரியல… ஆனால் ஒன்று… நல்லபடியா வாழும் சூழல் அனைத்தும் கொடுத்து..

சமூகத்தில் மதிப்பு மரியாதை.. அந்தஸ்த்து, உறவு முறைகள் என்று எல்லாம் நல்ல படியாக அமைந்தும்.. நீங்கள் செய்த செயலாலேயே உங்க வாழ்க்கையை மூழ்கி விட்டது..



ஆனால் மான்சிக்கும், நவீனுக்கும், படிப்பு.. அது ஒன்று தான் அவங்க கையில் இருக்கும் பிடிப்பு.. அதை வைத்து அவர்களில் அந்த கரை படிந்த வாழ்க்கையில் இருந்து தன்னை மீட்டு எடுத்து கொண்டார்கள்..” என்று சொன்னவரின் பேச்சை அனைவரும் அமைதியாக கேட்க வேண்டியது தான் ஆனதே ஒழிய…



மகளின் வாழ்க்கைக்காக கூட பத்மாவதி தன் அண்ணன்மார்களிடம் வாயை திறந்து பேச முடியவில்லை.. காரணம் அண்ணன்களின் அருகில் நின்று கொண்டு இருந்த அண்ணிமார்களின் முறைப்பில் அமைதியாகி விட்டார்..



ஆனால் போகும் போது சூர்ய நாரயணனை அவரின் இரு மச்சான்களும்…

“ தப்பு தான்.. என் தங்கையின் பிரச்சனை தெரிந்து அவள் ஆசைப்பட்டாள் என்று அவள் உடல் நிலையை பற்றி உங்களிடம் சொல்லாது திருமணம் செய்து வைத்தது தப்பு தான்..



ஆனால் நீங்க செய்தது…? உங்களுக்கு ஒரு துணை உடல் ரீதியாக கண்டிப்பா வேண்டும் என்றால், என் தங்கையை அவள் உடல் நலனை காட்டியே விவாகரத்து செய்து இருக்கலாம்..

இல்லை எங்களிடம் வந்து பத்துவின் பிரச்சனையை சொல்லி இருக்கலாம்..”



ஆம் திருமணத்திற்க்கு முன் சூர்ய நாரயணனிற்க்கு பத்மாவதியின் உடல் நிலை தெரியாதது போலவே..

அதன் பின் அவர் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபட கூடாது என்ற விவரத்தை சூர்ய நாரயணனும் தன் மச்சான்களிடம் சொல்லவில்லை

..

அதே போல் பத்மாவதியும் அண்ணன்களிடம் சொல்ல முடியாத விசயம் ஆனாலுமே, அன்னை போல் பாசம் காட்டும் அண்ணிகளிடம் சொல்லி இருக்கலாம்.. ஆனால் அவரும் சொல்லாது விட்டு விட்டார்…



குறைந்த பட்சம் துளசி விசயம் தெரிந்து இரண்டு அண்ணன்களும் கோபம் கொண்ட போதாவது பத்மாவதி தன் அண்ணனிடம் சொல்லி இருக்கலாம்..



அனைவரும் அவர் அவர் சூழலுக்கு ஏற்ப உண்மையை மறைத்து அவர்களின் சூழலுக்கு ஏற்ப நிலமையை கைய்யாண்டு கொண்டனர்..



ஆனால் அவர் அவர் சூழலுக்கு பலியாக பார்த்தது மான்சியும் நவீனும் தான்… சமூகத்தில் அவர்களுக்கு கிடைத்த பெயர்… வேறு..



ஆனால் சமூகம் அவர்களை சாட்டிய அந்த குற்றசாட்டே அவர்களை இவர்கள் முன் தாங்கள் உயர்ந்து நிற்க வேண்டும் என்ற வேகத்தை கூட்டியது….



மான்சியை தவறாக பேசியவர்களே ஏன் மற்றவர்களை விடுங்கள்.. சர்வேஷ்வரனே மான்சியை பிடித்து இருந்தாலுமே, அவள் அன்னையை வைத்து அவளை தவறாக தானே பேசினான்…



பின் மான்சியின் நடத்தை, அவளின் அமைதி.. யார் வம்புக்கும் செல்லாது… இருக்கும் அவளின் செயல். அனைத்தும் பார்த்து சர்வேஷ்வரனுக்கு பிடித்தது போலவே சர்வேஷ்வரனின் வீட்டில் இருப்பர்கள் அனைவருக்குமே பிடித்து விட்டது..

ஆனால் அவர்களுக்கு பிடிக்கும் நேரம் மான்சி அந்த வீட்டில் இல்லாது தனியாக போய் விட்டாள்…

போய் விட்டாள் என்பதை விட தன் மகன் அழைத்து சென்று விட்டான் என்று சொன்னால் சரியாக இருக்கும்..

தனி குடித்தனம் சென்ற அந்த நாளை மான்சியாலும் சரி.. சர்வேஷ்வரனாலும் சரி மறக்கவே முடியாது..

மான்சி அந்த வீட்டை சுற்றி சுற்றி பார்வை இடும் போது… சர்வா..

“ ஏய் மாசி… அந்த வீட்டோட இது சின்ன வீடு தான்..” என்று வீட்டின் அளவை வைத்து தான் சர்வா சொன்னான்…



ஆனால் அந்த சின்ன வீடு என்பது உங்கள் வாயில் இருந்து கூட வர கூடாது என்று அவன் வாய் மீதே இரண்டு வைத்து விட்டாள் அவள்…



“ இல்ல இந்த வீட்டை இப்படி ஆசையா பார்க்கிறியே அதனால் தான்..” என்று தன் உதட்டில் அவள் அடித்ததால் பட்ட காயத்தை அவன் விரும்பும் வகையில் அவளிடம் ஒத்தடம் வாங்கிய பின் கேட்டான்…



“ இது எனக்கான வீடு… இதில் என் தம்பியும் நானும்… சுதந்திரம இருப்போம்.. இனி எங்களை யாரும் தப்பா பார்க்க மாட்டாங்க.. பேச மாட்டாங்க…” என்று கண்களில் கனவு மின்ன சொல்லிக் கொம்டு இருக்கும் போது நவீனும் அக்காவின் கை பற்றிக் கொண்டு அவள் மகிழ்ச்சியில் பங்கு கொண்டான்..



அடுத்து அவளின் கனவை நோக்கி அவளின் பயணம் தொடர்ந்தது… ஆம் தேர்வில் அவள் வெற்றி பெற்றாள்… பயிற்ச்சிக்காக முசோலின் சென்றவள் அதிலும் நல்ல முறையில் தேறி.. காஞ்சிப்புரம் மாவட்டத்திற்க்கு கலெக்ட்டர் என்ற பதவியோடு அவள் பொறுபேற்ற போது.. அனைவரின் பார்வையும் அவள் மீது மரியாதையாக நோக்கியது…



நவீனும் அவன் நீட் தேர்வில் வெற்றி பெற்று இப்போது மருத்துவ படிப்பில் மூன்றாம் ஆண்டில் இருக்கிறான்.. அனைத்திற்க்கு உற்ற துணையாக இருப்பது சர்வேஷ்வரனே..



வாழ்க்கையில் பிறப்பு நமக்கு எப்படி அமைந்ததோ… அது நம் கையில் இல்லை.. ஆனால் நாம் வாழும் வாழ்க்கையும், வாழ போகும் வாழ்க்கையும் நம் கையில் தான் இருக்கிறது…
 
Active member
Joined
Jul 13, 2024
Messages
165
Nice. Missing previous episode. No continuity
 
Last edited:
Active member
Joined
Aug 16, 2024
Messages
267
நடுவில் கொஞ்சம் பக்கத்தை காணோம்.
 
Top