அத்தியாயம்… 26
ஐந்து வருடம் கடந்து…
சர்வேஷ்வரன் தலையில் கை வைத்து அமர்ந்து இருந்தான்.. இடம் அவன் கூட்டு குடும்பமாக இருந்த பங்களா.. எதிர் இருக்கையில் தன் அண்ணன் மகேஷ்வரன்.. இரு பக்கமும் அப்பா பெரியப்பா…
அவனின் பெரியப்பா… சர்வேஷ்வரனிடம் “ உன் பெண்டாட்டி தானே நீ கேட்க கூடாதா..? நீ தானே படிக்க வெச்ச… இந்த பிரச்சனை அவளையும் தானே பாதிக்கும்.. அது அவளுக்கு தெரியாதா…?
அவள் இந்த வீட்டை விட்டு தான் தனியா போய் இருக்கா..? என்னவோ இந்த குடும்பத்தை விட்டே போனது போல் தான் இருக்கு அவள் செய்யிறது எல்லாம்..” என்று அவர் முதலில் ஆரம்பிக்க..
அடுத்த படியாக அவனின் அப்பா.. “ அனிதாவை கல்யாணம் பேசும் போது என்னமோ சொன்ன நான் கல்யாணம் செய்தா என் படி தான் நடந்துக்க வைப்பேன் .. நான் ஒன்றும் மகி மாதிரி விட்டு வைக்க மாட்டேன்..” என்று அவன் பேசியதை சமையம் பார்த்து போட்டு கொடுத்தார்..
ஒரே சமயம்.. அவனின் அண்ணன் மகியும். ஆபிஸ் ரூமுக்கு காபி போட்டு வனியிடம் கொடுத்து..
“ அந்த ரூமுக்குள்ள அடைந்து மூன்று மணி நேரம் ஆகுது.. இன்னும் யார் தலையும் வெளியில் தெரியல.. இந்த காபியாவது எடுத்துட்டு போய் கொடு..” என்று அந்த வீட்டின் மூத்த மருமகளிடம்..
ஆம் வனிதா இந்த வீட்டுக்கு வந்து விட்டாள்.. காரணம் அவள் புடவையின் முந்தி பிடித்து நடந்து வந்த அந்த வீட்டில் வாரிசு அனுஷ்கா தான் காரணம்..
அது தான் சொல்வார்கள்.. தாங்கள் ஒன்று நினைத்தால் வேறு ஒன்று நடக்கும் என்று.. அதற்க்கு ஏற்ப தான்… வனிதாவை அவள் அம்மா வீட்டில் விட்டு வந்த இரண்டு மணி நேரத்திற்க்குள் இவர்களுக்கு சொந்தமான மருத்துவமனையில் இருந்து மகேஷ்வரனுக்கு அழைப்பு..
“ உங்கள் மனைவி இங்கு வந்து இருக்காங்க..” என்று..
இவனின் விட்டேறியாக.. “ அதை ஏன் என் கிட்ட சொல்றிங்க…?” என்று கேட்டதற்க்கு ..
“ அபார்ஷன் செய்யனும் என்று சொல்றாங்க.. நம்ம மருத்துவமனையில் அது எல்லாம் செய்யிறது இல்ல என்று சொன்னால். எங்கு செய்வது என்று கேட்கிறாங்க..உங்களுக்கு தெரியுமா…?”
நண்பனின் தங்கை சிறு வயது முதலே தெரியும்.. இப்பொது இவர்களுக்குள் நடக்கும் பிரச்சனையும் தெரியும் என்பதால், சொல்ல வேண்டிய விசயத்தை சொல்லபட வேண்டிய நபருக்கு சொல்லி விட்டு.. தீர்வு நீயே சொல் என்பது போல் பேசி விட்டாள்..
பின் அடுத்து என்ன மூன்றரை வருடங்கள் கழித்து வீட்டின் முதல் வாரிசு.. ஆம் முதல் வாரிசு என்று தான் சொல வேண்டும்..
திருமணம் முடிந்து அடுத்த மாதமே அந்த வீட்டு பேன் கீதாஞ்சலி தன் கணவன் விக்கரமோடு அமெரிக்கா சென்று விட்டாள்..
எப்போது போன் செய்தாலும் ஏதாவது நல்ல செய்தி சொல்வாளா என்று காத்து கொண்டு இருக்க.. சொன்னார்கள் விசயத்தை.. அஞ்சலிக்கு சிறிய அளவில் ஏதோ பிரச்சனை ட்ரீட் மெண்ட் எடுத்தால் குழந்தை பிறக்கும் என்று…
வீட்டு பெரியவர்கள் என்னடா இது ஒன்றுக்கு மூன்று பேருக்கு திருமணம் செய்து வைத்தும் ஒருவரும் தங்களை பாட்டி தாத்தாவாக்க வில்லை என்று ஏங்கி கொண்டு இருக்கும் போது வனிதாவின் இந்த கருவுற்றல் அனைத்தும் மறந்து அவளை ஏற்றுக் கொள்ளும் படி ஆகி விட்டது..
அவள் குணம் மாறவில்லை.. அப்படியே தான் இருக்கிறது.. என்ன ஒன்று அதை வெளிக்காட்டினால், திரும்பவும் ஏதாவது பிரச்சனையில் மாட்டிக் கொள்வோம் என்று அடக்கி வாசிக்கிறாள்..
இதோ இப்போது காபி கொடுக்கும் போது அவள் காதில் விழுந்த விசயத்தில்..
“ என்ன செய்யிறது.. அப்படி சர்வாவை மயக்கி வைத்து இருக்கா.. அவள் மாவட்டத்தை மட்டுமா ஆள்கிறாள்.. நம்ம எல்லொரையும் தான் ஆட்டி வைக்கிறாள்..” என்று ஒரு பிட்டை போட்டாள் தான்..
ஆனால் அவள் பேச்சை காதில் விழாது போல் அவள் பின் நின்றுக் கொண்டு இருந்த தன் பேத்தி..அனுஷ்க்காவை மடி தாங்கி கொண்ட சர்வேஷ்வர்..
“ என்னடா செல்லம் ஸ்கூல் போகலையா.. ?” என்று கேட்டதற்க்கு..
“ போயிட்டு வந்துட்டேன் சித்தா..” என்று சொன்னவள் கூடவே..
“ நானும் சித்தியை போலவே படிப்பேன் சித்தா..” என்று சொல்லி விட்டு ஒடி போய் விட்டவளை பார்த்து சிரித்த சர்வேஷ்வரன்..
வனிதாவை பார்த்து.. “ என்னை அவள் மயக்கல வனி.. நானே தான் அவள் கிட்ட மயங்கி போய் இருக்கேன்.. அதே போல் என் வீட்டை இல்ல இந்த மாவட்டத்தை ஆளும் தகுதியும் அவள் கிட்ட இருக்கு..
இதோ கோடி கணக்கு பிசினஸ்.. நம்ம மருந்து கம்பெனியில் இருந்து போன மருந்துகள் ஒரு சிலது காலவாதி ஆகி வெளியில் போய் இருக்கு.. கேஸ் பைல் பண்ணி இருக்கு..
மான்சி கிட்ட தான் இந்த விசயமும் போய் இருக்கு,, அவள் நினைத்த வெளியே விசயம் போகாம கூட தடுத்து இருக்கலாம்.. அதுவும் அவளுக்கு தெரியும்.. இதில் நம்ம தப்பு இல்ல.. வெளியில் போன மருந்துகள் காலவாதி ஆன பின் பழைய ஸ்டாக் வைத்து இருந்து அந்த அந்த மருந்தகம் தான் வித்து இருக்கு என்று..
தெரிந்தும்… முறையா தான் இதை நீங்க ஹான்டில் செய்யனும் என்று சொல்லிட்டா… தப்பு உங்க மேல இல்ல நீங்க ப்ரூப் செய்யுங்க.. உங்க மீது தப்பு இல்லேன்னா இதை பத்தி என் கிட்ட நீங்க பேசவே தேவை இலையே என்றும் சொல்லிடா..
இந்த பேச்சு எல்லாம் எங்கு நடந்தது தெரியுமா..? அவள் ஆபிசில்.. இந்த பிரச்சனை ஆரம்பிக்கும் போதே சொல்லிட்டா.. இதை பற்றி எது பேசுவது என்றாலும், முறையா முன் அனுமதி வாங்கிட்டு என் ஆபிசிக்கு வந்து தான் பேசனும்..
இங்கு நான் உங்க மனைவி.. ஆனால் ஆபிசில் ஒரு மாவட்டத்தை ஆளும் அதிகாரியாக தான் நான் நடந்துப்பேன் என்று… இப்போ புரியுத வனிதா..எல்லாத்துக்கும் அவள் பர்பையிட் என்று..” என்று சர்வா மான்சியின் புகழ் பாட.
வனிதா சவேஷ்வரனை முறைத்து கொண்டே சென்று விட்டாள்..
ஆம் சர்வா சொன்னது போல் மாவட்டத்துக்கு அவள் அதிகாரியாக இருந்தாலும் வீட்டுக்கு நல்ல மனைவி.. நல்ல அக்கா.. ஒரு நல்ல தாயாகவும் இருப்பாள்..
இது அவளுக்கு ஏழாம் மாதம்… சர்வா மான்சியின் கனவுக்காக தன் தந்தை ஆகும் பாக்கியத்தையே இத்தனை ஆண்டு தள்ளி வைத்து இருந்தான்..
அந்த ஸ்தானத்தை தான் தள்ளி வைத்தானே தவிர மனைவியை எந்த எந்த விதத்திலும் தள்ளி வைக்க வில்லை..
அவள் பயிற்ச்சியில் இருக்கும் போது கூட சமயம் கிடைக்கும் போது எல்லாம் மான்சியை சென்று பார்ப்பான்.. தன் கணவன் என்ற அந்த சலுகையை அந்த இடத்திலுமே நிலை நாட்டிய பின் தான் ஊருக்கே வருவான்…
இதோ பத்மாவதியும் அனிதாவும், கூடவே சூர்ய நாரயணனும் அந்த விழாவில் எங்கோ ஒரு மூலையில் இருக்க.. மான்சி பச்சை பட்டு உடுத்தி.. ஏற்கனவே அழகாக இருப்பவள் தாய்மஒயின் பூரிப்பிலும், கணவனின் கவனிப்பிலும் தம்பியின் பாசத்திலும். இன்னும் அழகு கூடி தெரிந்தாள் என்றால்.. அவள் பதவி அவளுக்கு ஒரு ஆளுமையும் கொடுத்து அழகோடு மிடுக்கும் சேர்ந்து அந்த ராஜங்கம் போன்ற அந்த இருக்கையில் அமர்ந்தவளின் தோற்றம் ஒரு ராணி போலவே அனைவரும் கண்ணுக்கு தெரிந்தது..
தட்சணா மூர்த்தி தந்தை ஸதானத்தில் முதல் வளையலை தன் மனைவியின் கைய்யால் போட வைத்து.. பக்கத்தில் நின்று கொண்டு இருந்த நவீனிடம்..
“ என்னப்பா வேலை எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு..” என்ற அவரின் கேள்விக்கு..
“ வேலை இல்ல அங்கிள் சேவை.. நல்ல போயிட்டு இருக்கு.. மாமா நான் சின்னது போல அவர் ஹாஸ்ப்பிட்டலில் இருபது சதவீதம் ஏழைங்களுக்கு செய்ய ஒத்து கொண்டு விட்டார்..” என்று மகிழ்ச்சியோடு பேசிக் கொண்டு இருந்தான்..
வாழ்க்கையின் சக்கர சூழலில் மூழ்காது மீண்டு விட்டனர்..
நிறைவு…