Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Meezhveno Muzhgiduveno...5

  • Thread Author
அத்தியாயம்…5

மான்சி… “ நான் இது வரை என் கல்யாணத்தை பற்றி யோசித்ததே இல்ல… நமக்கு உண்டான இந்த என் அடையாளத்தை மாற்றனும்.. என்னை கேவலமா பார்க்கறவங்க எல்லோரும் மரியாதையோடு பார்க்கனும்.. என் மனது முழுவதும் இது தான் யோசனை.. .

அதற்க்கு நவீன் .. “கண்டிப்பா நீங்க நினச்சதை சாதிப்பிங்க அக்கா.. எனக்கு தெரியும்.. ஆனால் அதற்க்கு அடுத்து .. அதாவது மரியாதை கிடைத்து அடுத்து உங்களுக்கு என்று தனிப்பட்ட வாழ்க்கை இருக்கு தானே..

அப்போ நீங்க யோசிக்கும் போது உங்க பதவி வைத்து நல்ல கவுரவமான வாழ்க்கை வருமா…? ” என்று கேள்வி கேட்டு, நவீன் தன் அக்காவின் முகத்தை பார்த்தான்..

அதில் அவனுக்கு கிடைத்த விடை.. இல்லை என்பது.. எங்கு எப்படி ஆனாலும், தன் தாயின் வாழ்க்கை தங்கள் மீது நிழல் போல் படியும் என்பது அவளுக்கு நிச்சயம்.. அந்த பயம் தான் அவனுக்கு இப்போது எல்லாம்.. அதை தன் அக்காவிடம் சொல்லியும் விட்டான்…

“ இதை நினைக்கும் போது எல்லாம் என் படிப்பில் கூட என்னால் கவனத்தை செலுத்த முடிவது இல்லை அக்கா..” என்ற தம்பியின் பேச்சில், மான்சிக்கு உள்ளம் பதறி போனது..

ஒரு தாயின் வாழ்க்கை முறை மாறினால், அது எந்த எந்த வகையில் குழந்தைகளின் எதிர் காலத்தை பாதிக்கும் என்பதற்க்கு தாங்களே சான்று என்று நினைத்துக் கொண்டாள்..

இதோ தன் எதிரில் நிற்க்கும் தம்பி.. படிப்பில் சுட்டி.. எந்த ஒரு வகையிலுமே, அவனால் பிரச்சனை கிடையாது.. இதோ இந்த வயதிலேயே தன் அக்காவின் எதிர் காலத்தை பற்றி யோசிக்கும் அளவுக்கு முதிர்ச்சியானவன்…

நான் இது வரை எந்த ஒழுக்க கேடான விசயத்தையும் செய்தது கிடையாது… அலங்காரம்… இல்லவே இல்ல.. அலங்காரம் தவறானது என்று சொல்ல வரவில்லை.. நான் ஒரு புது உடை போட்டாலுமே, மற்றவர்களின் பார்வை இது போல் வாழ்ந்து இது எல்லாம் செய்ய வேண்டுமா என்பது போல் தான் இருக்கும்..

அதுவும் துளசி போல் நான்.. எனும் போது ஒரு சாதரண உடையே என்னை அழகாக காட்டுவதால், அவள் எப்போதும் சிம்பிள்.. அப்படி இருந்தும் என்னை மற்றவர்கள் பார்க்கும் அந்த பார்வையில் ஒவ்வொரு முறையும் தான் செத்து செத்து தானே பிழைக்கிறேன்..

இதோ சூர்ய நாரயணனின் தாலி கட்டிய மனைவியின் அந்த பெண் செய்த செயல்.. அவளை அனைவரும் நல்ல முறையில் தானே பார்த்து இருப்பார்கள்.. இப்போது கூட அவள் விசயத்தை வெளியில் தெரிய கூடாது என்று தான் இரு குடும்பமும் சேர்ந்து என்ன என்ன எல்லாம் திட்டம் இடுகிறது…

நன்றாக படிக்கும் பிள்ளை… தாய் முறை சரியில்லாது வாழ்வதனால், இதோ படிப்பில் கூட கவனம் செலுத்த முடியவில்லை என்று சொல்கிறான்..

அங்கு அங்கு மண்டையில் இந்த படிப்பை ஏற்ற பெற்றோர்கள் என்ன என்ன எல்லாம் செய்கிறார்கள் என்பதும் அவளுக்கு தெரியுமே என்று மான்சிக்கு பல யோசனைகள்..

ஆனால் இப்போது நான் யோசனை செய்யும் நேரம் கிடையாது.. நவீன் மனது நல்ல முறையில் இருந்தால் தான் அவன் நினைத்ததை சாதிக்க முடியும் என்று நினைத்தவள்..

“ சொல் நவீன்.. என் வாழ்க்கையை பற்றிய பயம் உனக்கு போவது என்றால் நான் என்ன செய்ய வேண்டும்..?” என்று நவீனை பார்த்து மான்சி கேட்டாள்.

அவளுக்கு தன் கவுரவத்தோடு தன் தம்பியின் படிப்பு.. அதில் இருந்து அவனுக்கு கிடைக்கும் நல்வாழ்வு அது தான் முக்கியம் என்று நினைத்தாள்..

அதனால் சொல் உன் மனது அமைதியடைவதை செய்கிறேன் என்பது போல் மான்சி கேட்டாள்..

அதற்க்கு நவீன்.. “ நீ இந்த கல்யாணத்துக்கு ஒத்து கொள்ள வேண்டும் அக்கா…” என்ற பதில் உடனே அவனிடம் இருந்து வந்து விழுந்தன..

“ நான் இந்த கல்யாணம் செய்தா எனக்கு ஒழுங்கான அங்கிகாரம் கிடைக்கும் என்று நினைக்கிறியா நவீன்…?” என்று மான்சி திரும்பவும் நவீனிடம் கேள்வி கேட்டாள்..

“ கண்டிப்பா.. கல்யாணத்திற்க்கு பின் ஒரு பெண்ணோட இன்ஷியல் மாறும் தானே. அப்போ உன்னை பார்க்கும் மத்தவங்க பார்வையும் மாறும் அக்கா..” என்று சொன்ன நவீனை பார்த்து ஒரு விரக்தி புன்னகை சிந்தியவள்..

“ மத்தவங்க பார்வை மாறும் தான்.. ஆனால் அந்த வீட்டில் இருப்பவங்க பார்வை.. இப்போ ஒன்றும் அந்த மாப்பிள்ளை என்னை ஆசைப்பட்டோ..

இல்ல பெரியவங்க முடிவு செய்தோ கேட்கல .. சூழ்நிலை.. சூழ்நிலை தான் அவங்களை இங்கு வந்து நிற்க வைத்து இருக்கு…

இதோ இப்போது கூட இவர் மட்டும் தான் இங்கு வந்து இருக்கிறார்.. அவங்க.. நீ சொன்னது போல இந்த கல்யாணத்தை நான் ஒத்துக் கொண்டால், இந்த ஒதுக்கம் தான் கடைசி வரை இருக்கும் நவீன்..” என்ற மான்சியின் பேச்சு நவீனுக்கும் புரிந்தது தான்.. ஆனாலும்.. அதையும் நவீன் சொல்லி விட்டான்.. .

“ நான் சின்ன வயதில் இருந்தே அம்மா கழுத்தில் நிறைய நகைப்போட்டு பார்த்து இருக்கிறேன் அக்கா.. ஆனால் மத்த அம்மா கழுத்தில் இருக்கும் அந்த தாலி.. நான் பார்த்தது கிடையாது..” என்று சொன்னவன்..

பின் தன் பள்ளி பேகை எடுத்து வந்தவன் அதில் இருந்து எடுத்த அந்த பொருளை பார்த்து மான்சி அதிர்ச்சியாகி..

“ இதை நீ ஏன்டா வைத்து இருக்க..?” என்று கேட்டுக் கொண்டே அவன் கையில் இருந்த மஞ்சள் முடித்து வைத்த அந்த தாலி கயிறை வாங்கினாள்..

“ இதுவும் என் பையில் இரண்டு வருடமா இருக்கு அக்கா.. அவர் வரும் போது எல்லா, வாசல் படியிலேயே நிற்க வைத்து விட்டு, இதை என் அம்மா கழுத்தில் கட்டி விட்டு, பின் உள்ளே வாங்க..” என்று சொல்ல தான் நினைப்பேன்..

ஆனால் சொல்ல முடியாது.. நாம இருக்கும் இந்த வீடு ..நாம சாப்பிடும் சாப்பாடு.. ஏன்..? நம் லட்சியம் என்று படிக்கும் இந்த படிப்பு கூட அவர் கொடுக்கும் போது..

எப்படி அக்கா அவரிடம் இப்படி சொல்வேன்.. அது மட்டும் இல்லாம, அது கட்டினா கூட முதல் மனைவி இருக்கும் போது அதற்க்கு வேல்யூ இருக்கா…?

இதோ இப்போவாவது அவங்க சும்மா இருக்காங்க… அந்த தாலியோடு அவங்க நம்ம அம்மாவை வெளியில் அவர் கூட பார்த்தால்…

கண்டிப்பா நாம இன்னும் அசிங்கப்பட்டு தான் போவோம்.. என்று நினைத்து தான் அக்கா இது அப்படியே என் பேகிலேயே வைத்து இருக்கேன்…

சரி நம்ம அம்மா கழுத்தில் தான் இதை பார்க்க முடியாது போயிடுச்சி, உன் கழுத்திலாவது பார்க்கனும் என்று எனக்கு ரொம்ப ஆசை அக்கா..

போன வருடம் என் பிறந்த நாளுக்கு, பக்கத்தில் இருக்கும் கோயிலுக்கு போனோமே அக்கா.. அப்போ நீங்க பூஜை பொருள் வாங்க போகும் போது, உன்னை பார்த்த ஒருத்தவங்க..

“ பெண் பார்க்க நல்லா இருக்கு.. யார் பெண்..? என்ன இனம்..? நான் என் மகனுக்கு பெண் தேடிட்டு இருக்கேன்..” என்று மத்தவங்க கிட்ட கேட்ட போது..

அவங்க.. “ நம்ம அம்மா பெயரை சொல்லி அவங்க பெண் தான்.. இது எல்லாம் தாலி கட்டி வாழ வேண்டிய பெண் இல்ல..” என்று சொன்னதை கேட்டதில் இருந்து எனக்கு இன்னும் பயமா ஆயிடுச்சி அக்கா..

அம்மாவை தான் நான் அது போல பார்க்க முடியல.. உங்களையும்..” என்று அதற்க்கு மேல் பேசாது ஓடி வந்து தன் அக்காவை இறுக்க அணைத்துக் கொண்டான்..

மான்சி நவீன் பேச பேச.. அவள் என்ன மாதிரி உணர்ந்தால் என்று அவளாலேயே இனம் கண்டு கொள்ள முடியவில்லை..

ஆனால் ஒன்று மட்டும் தெரிந்தது.. இவன் யோசனை செய்ததை விட நாம் யோசிக்க வில்லை என்று.. அதோடு இவன் தன்னை விட மனதளவில் பெரியதாக அடி வாங்கி இருக்கிறான்.. இந்த நிலை இவனுக்கு நீடிப்பது, அவன் மனநிலைக்கு நல்லது இல்லை என்று நினைத்தவள்..

“ உன் விருப்பம் என்ன நவீ.. நான் இந்த கல்யாணத்திற்க்கு ஒத்துக் கொள்ள வேண்டும் தானே.. எனக்கு சம்மதம் தான் நவீ..” என்று சொன்னவளின் பேச்சில், முதலில் துக்கத்தில் தன் அக்காவை அணைத்தவன்.. இப்போது மகிழ்ச்சியில் அணைத்து கொண்டான்..

“ அக்கா அக்கா..” என்று சந்தோஷமாக அழைத்தவன் பின் தயங்கி.. “ நான் அவங்களை நான் படிக்கும் ஸ்கூல் கெஸ்ட்டா பார்த்து இருக்கேன் அக்கா.. நல்லா இருப்பாங்க.. எல்லோரும் நல்ல மாதிரியா தான் சொன்னாங்க அக்கா..” என்றவனின் தலையை கலைத்து விட்டவள்..

“ சரிடா பெரிய மனுஷா..” என்று சொல்லி மான்சி சிரித்தாள்… அந்த சிரிப்பை மனது நிறைவோடு பார்த்த நவீன் ஒன்றை கவனிக்க மறந்து விட்டான். அந்த சிரிப்பில் ஜீவன் இல்லை என்பதை.. என்ன தான் அவன் வாழ்க்கை அவனுக்கு பலது கற்று கொடுத்தாலும், ஒரு சிலதை அவனுக்கு தெரியாது தான் போய் விட்டது… என்ன இருந்தாலும் அவன் சின்ன பையன் தானே..

பின் மகிழ்ச்சியோடு தன் அக்காவின் கை பிடித்து கீழே அழைத்து வந்தவனின் முக பாவம் பாதி படிக்கட்டில் மாறி போய் முகத்தை ஒரு இறுக்கத்துக்கு கொண்டு வந்த நவீன்..

சூர்ய நாரயணன் அருகில் சென்று.. “ என் அக்கா இந்த கல்யாணத்திற்க்கு ஒத்து கொள்ளனும் என்றால், ஒரு சில கன்டிஷன் இருக்கு..” என்று சொன்னவனின் பேச்சையும், தோரணையையும், பார்த்து மனதுக்குள் சிரித்துக் கொண்டவர்..

“ சொல்லு நவீன் என்ன கன்டிஷன்…?” என்று பெரிய மனிதரிடம் பேசுவது போல் தான் தன் வளர்ப்பு மகனிடம் பேசினார்…

“ என் அக்கா அவள் படிப்பை எப்போதும் விட மாட்டா..” என்று சொன்னதற்க்கு சூர்ய நாரயணன் …

“ விட தேவை இருக்காது நவீன்…” என்று உடனே அவரிடம் இருந்து பதில் வந்தது..

பின் நவீன்…

“ இந்த கல்யாணம் மாப்பிள்ளை வீடு செய்யுதா..? இல்லை பெண் வீடு செய்யிறாங்களா…?” என்று கேள்விக்கு..

“ மாப்பிள்ளை வீடு தான் நவீன்..” என்று சூர்ய நாரயணன் சொன்னதும்..,

“ அப்போ அவங்க இங்கு வந்து முறையா பெண் அழைத்து போக வேண்டும்..” என்றதில் சூர்ய நாரயணன் முன் சொன்னதற்க்கு உடனே ஒத்துக் கொண்டது போல் இதற்க்கு ஒத்துக் கொள்ள முடியாது..

கொஞ்சம் தயங்கி.. “ நான் அங்கு பேசிட்டு சொல்றேன் நவீன்..” என்று சொன்னவர்..

அவர்கள் கேட்காத தூரத்தில் நின்று கொண்டு பேசியில் சிறிது நேரம் பேசி விட்டு வந்தவர் முகத்தில் நிம்மதி தெரிய..

“ சர்வா ஒத்துக் கொண்டு விட்டான்..” என்று சொன்னவர் கூடவே..

“ இன்னும் இரண்டு மணி நேரத்தில் அவன் அம்மா வருவாங்க.. அப்புறம் இன்னும் கொஞ்ச நேரத்தில் ப்யூட்டிஷன் வருவாங்க.. என்று சொன்னான்..” என்று சொன்னதும் தான்..

துளசிக்கு மாலை வர வேற்ப்பு ஆனால்.. ட்ரஸ் அதற்க்கு உண்டான நகை என்று யோசிக்கும் போதே, சூர்ய நாரயணனுக்கு அவர் பேசிக்கு அழைப்பு வந்தது…

பேசியவர் பேசியை மான்சியிடம் கொடுக்கவும் யார் என்பது போல் வாங்கி பேசியவள் அந்த பக்கம் ஆடை வடிவமைப்பாளர்..

“ சர்வேஷ்வரன் என் பிரண்ட். தான் . உங்க உள்ளாடையின் அளவு சொன்னா நான் அதுக்கு ஏத்தது போல ட்ரஸ் அளவு எடுத்துக் கொண்டு வந்து விடுவேன்.கூடவே எங்க ட்ரஸ் ஸ்டிச்சரும் வருவாங்க..

ஏதாவது சரியில்லேன்னா கூட அவங்க உடனே சரிப்படுத்தி கொடுத்து விடுவாங்க.. ஆனால் இன்றைய உடை தேர்வு எங்களுடையதா தான் இருக்கும் மேடம்.. வேறு ஆப்ஷன் இல்ல..

ஆனால் நாளை முகூர்த்தம் புடவை நகை எல்லாம் உங்க தேர்வு தான்…” என்று மேலும் ஏதேதோ சொன்னவளின் பேச்சு அதற்க்கு அடுத்து அவள் காதில் விழவில்லை..

‘ இங்கு மாப்பிள்ளையே என் தேர்வு இல்லை.. “ என்று நினைத்தவள் அவர்கள் பேசிய பேச்சு அனைத்திற்க்கு மான்சி..

“ம்..” என்ற பதில் மட்டும் தான் அளித்தாள்..

பணம் மட்டும் இருந்தால் போதும் அனைத்தும் நம் கையில் என்பது போல் மான்சியை அழகு படுத்த அழகு நிலைய பெண் இருவர் வந்து அவர்கள் பாட்டுக்கு அவர்கள் வேலையை செய்துக் கொண்டு இருந்தனர்..

பின் உடை வடிவமைப்பளார் ரோஜா நிறத்தில் லெகேங்காவும்… அதற்க்கு ஏற்றது போல டைமெண் செட்டை கொண்டு வந்தாள்..
உடைக்கு தகுந்தது போல் அதே பூ வடிவில் இருக்க..என்ன தான் ஆர்வம் இல்லாது தன்னை அவர்களிடம் ஒப்படைத்து விட்டு அமர்ந்து இருந்தாலும் மான்சிக்கு அந்த நகையின் டிசைனும்.. அந்த ட்ரஸின் அழகும்.. அதை ஒரு நிமிடம் உற்று பார்க்க வைத்தது அவளை.
 
Active member
Joined
Jun 23, 2024
Messages
71
நவீன் 😨😨😨😨 சின்ன வயசில் மனதால் எவ்வளவு அடி வாங்கி இருக்கான் 😣😣😣😣

மான்சி 🥺🥺🥺🥺 இவ அம்மாவோட வாழ்க்கை நிச்சயம் அங்கு நிம்மதியா வாழ விடாது 😞😞😞😞

சர்வா 🤔🤔🤔 என்ன மனநிலையில் இருக்கானோ 🧐🧐🧐

பத்மா இன்னும் எத்தனை கஷ்டத்தை எல்லாம் பார்க்கணுமோ 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

தன் பொண்ணுங்க வழி மாறி போனது தன்னோட கேவலமான நடத்தையால் என்று இவருக்கு புரியுதா 😡😡😡😡
 
Top