அத்தியாயம் 7
நவீனின் தன்மையான பேச்சு, அவனின் அந்த அணுகு முறையில் வைதேகியின் மனது பரவாயில்லை மகன் நல்ல மாதிரியாக தான் இருக்கிறான். அப்போ பெண் என்று நினைக்கும் போதே, துளசி தன் மகளை அனைவரும் இருக்கும் இடத்திற்க்கு அழைத்து வரும் போதே வைதேகிக்கும் சரி …ரேவதிக்கும் சரி… மனது திருப்தி படும் படி தான் பெண்ணின் தோற்றம் இருந்தது.
துளசியின் தோற்றமும் சொல்லும் படி, ஒரு தெய்வீக கலையோடு தான் இருக்கும்.. ஆனால் தன் அண்ணனோடு அப்படி என்று பார்க்கும் போது, அந்த தெய்வீக அழகு வேறு போல் தானே நமக்கு தோன்றும்..
நம் மனது என்ன நினைக்கிறதோ, பிம்பமும் அதை தான் பிரதிபலிக்கும் என்ற சொல்லுக்கு எற்ப.. இன்று தன் வீட்டு மருமகளாக மான்சியை பார்த்தவர்களுக்கு, ஏனோ அப்படி ஒரு திருப்தி..
அதுவும் துளசி சொல்வதற்க்கு முன்னவே அனைவரையும் பார்த்து பொதுவாக விழுந்து வணங்கி விட்டு, கை கூப்பி அவள் நின்ற பாங்கில் வைதேகி தன்னால்..
“ வாம்மா என் பக்கத்தில் வந்து உட்கார்..” என்று அன்புடன் அழைத்தார்..
அந்த அவரின் பேச்சை கேட்டதும் தான் துளசிக்கு கொஞ்சம் நிம்மதி கிட்டியது.. என்ன தான் தன் மகளுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்று நினைத்து, தன் மகள் இந்த கல்யாணத்திற்க்கு சம்மதிக்க வேண்டும் என்று கடவுளை பிராத்தனை செய்து.. இதோ அவளின் இந்த முடிவால், மனது சந்தோஷம் அடைந்தாலும், மனதில் ஓரத்தில் ஒரு பயம் துளசிக்கு இருக்க தான் செய்தது..
அந்த வீட்டில் இருப்பவர்கள் தன் மகளை எப்படி நடத்துவார்கள் என்று.. இப்போது வைதேகியின் பேச்சில் நிம்மதியடைய சூர்ய நாரயணனை பார்த்தாள்..
சூர்ய நாரயணனுக்கும் தன் தங்கையின் பேச்சில் நிம்மதி அடைந்தவராய் அடுத்து அடுத்து ஆக வேண்டிய வேலைகள் கட கட என்று நடைப்பெற்றுக் கொண்டு இருந்தன.
ஏன் என்றால் மாலை திருமண வர வேற்ப்பு இப்போதே மணி ஐந்து முப்பதை காட்ட சர்வேஷ்வரன் நிறைய முறை அழைத்து விட்டான்..
“ இன்னும் அங்கு என்ன செய்து கொண்டு இருக்கிங்க…? நான் மண்டபத்துக்கு வந்து விட்டேன்..” என்று..
பின் அனைத்தும் அவசரமாக நடைப்பெற்றாலும், செய்ய வேண்டிய சடங்குகள் அனைத்தும் முறையாகவே செய்து பெண்ணை மண்டபத்தின் வாயிலில் நிறுத்தினர்..
மான்சி ஏன் எல்லோரும் வெளியிலேயே நிற்கிறாங்க என்று யோசிக்கும் போதே அவளை ஒட்டினார் போல் யாரோ வந்து நின்றதில், அனிச்சை செயலாக அவள் ஒதுங்கி நின்று விட்டு,..
யார்..? என்று அப்போது தான் பக்க வாட்டில் திரும்பி பார்த்தவளுக்கு, கொஞ்ச நேரம் முன் தொலைக்காட்சி நேரடி ஒலிப்பரப்பில் தன்னை காதலிப்பதாக சொன்ன சர்வேஷ்வரன் நின்று கொண்டு இருப்பதை பார்த்ததும், இப்போது தான் என்ன செய்ய வேண்டும்..? என்று முழித்துக் கொண்டு இருந்தவளின் முகம் பற்றி..
“ என்னை பின் பொறுமையாவே பார்த்து கொள்ளலாம்.. ஹனி .. இப்போ நம்ம முன் இருக்கிறவங்களை முதலில் பார்..” என்ற அவனின் பேச்சில் கட்டளை போல் தான் மான்சிக்கு தெரிந்தது..
ஆனால் பார்ப்பவர்கள் அனைவருக்கும் மான்சியிடம் ஏதோ ரகசியம் பேசுவது போலான பிம்பம் தான் அனைவருக்கும் தெரிந்தது..
ஏன் என்றால், சர்வேஷ்வரன் மான்சியிடம் பேசும் போது தன் கட்டளையான பேச்சை குரலில் காண்பித்தானே தவிர.. முகம் முழுவதும் புன்னகை பூக்க.. பார்த்த அனைவருக்கும், காதலர்கள் நெடுநாள் பிரிந்து பின் பார்த்தால் முகத்தில் ஒரு மகிழ்ச்சி தெரியுமே, அந்த மகிழ்ச்சி தான் சர்வேஷ்வரனின் முகத்தில் தெரிந்தது…
சத்தியமாக மான்சிக்கு இதற்க்கு எப்படி ரியாக்ட் செய்ய வேண்டும் என்று கூட தெரியாது. இன்னும் முழித்து நின்றாள்.. அவளுக்கு இந்த கேமிரா.. இது போக நடிப்பு எல்லாம் பழக்கம் இல்லாதது…
இன்னும் கேட்டால், மற்றவர்களின் பார்வை படும் படி கூட அவள் அநாவசியமாக நிற்க மாட்டாள்.. சின்ன வயதில் ஒரு சில அனுபவங்கள் அவளை அது போல் அனைவரிடமும் இருந்தும் தள்ளி நிற்க செய்தது…
மான்சியின் இந்த முகம் பாவனையில்… “ இந்த கல்யாணம் உன் வாழ்க்கை முறைக்கு ஒத்துக் கொள்ளாதுன்னா முன்னவே சொல்லி இருக்கிறதுக்கு என்ன…?” என்ற கேள்வி கோபத்துடன் அவனிடம் இருந்து வெளிப்படவும்…
அவன் பேசுவது மான்சிக்கு சுத்தமாக விளங்காது.. அதே முழித்துக் கொண்டு இருக்கவும், சர்வேஷ்வரனுக்கு கோபம் கொஞ்சம் கொஞ்சமாக அவன் காட்டுப்பாட்டையும் மீறி வெளிப்பட்டு விடுமோ என்று நினைத்து அவளிடம் பேசாது தங்களையே பார்த்துக் கொண்டு இருந்த தன் தாய் மாமன் சூர்ய நாரயணனை பார்த்தான்..
சூர்ய நாரயணனுக்கு தன் மருமகனின் பார்வைக்கு உண்டான அர்த்தம் தெரிந்தாலுமே, மான்சியிடம் தான் எப்படி சொல்வது என்று தெரியாது அவருமே மான்சிக்கு அருகில் செல்லாது தயங்கினார்..
இதை அனைத்தையும் கவனித்து கொண்டு இருந்த நவீன் தன் அக்காவின் அருகில் விரைந்து சென்றவன்.. மான்சியின் காதில் என்ன சொன்னானோ… அதன் பின் மான்சி சிரித்த முகத்துடன் எதிரில் இருப்பவர்களை பார்த்ததோடு சர்வேஷ்வரன் அவள் அருகில்நெருங்கி நின்றதும் எட்டி நில்லாது, அதே சிரிப்பை முகத்தை விட்டு அகலாது பார்த்துக் கொண்டாள்..
ஆலம் சுற்றியதும் சர்வேஷ்வரன் மான்சியின் கையை பற்றும் போது, தன்னால் அவள் உடலுக்குள் ஒரு அதிர்வு வந்தாலுமே, அதை அப்போது உணராது சர்வேஷ்வரனோடு அந்த பிரம்மாண்ட மண்டப்பதிற்க்கு இருவரும் ஒரு சேர வலது காலை எடுத்து வைத்து உள் நுழைந்தனர்…
சர்வேஷ்வரன் நவீனை மெச்சுதலாக ஒரு பார்வை பார்த்துக் கொண்டே மான்சியோடு அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டாலுமே, அங்கு நிலவும் சூழ்நிலைகளையும் அவன் மனது கிரகித்துக் கொண்டும் தான் இருந்தது…
அவன் கிரகித்ததில் தன் மாமா சூர்ய நாரயணன் மான்சியிடம் பேச தயங்குவதும், அதே போல் மான்சியின் அம்மா துளசியும் மான்சியிடம் ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் நவீனிடம் சொல்லியே அனைத்தும் மான்சியின் காதுக்கு வருவதும்..
நவீன் கூட தன் அம்மா அவனிடம் பேசும் போது ஒரு வித இறுக்கத்துடன் கேட்பதும், ஆனால் அதை தன் அக்கா மான்சியிடம் சொல்லும் போது மட்டும் முகம் முழுவதும் புன்னகையின் பூரிப்போடு சொல்வதும்.. என்று அனைத்தையுமே சர்வேஷ்வரன் கவனித்துக் கொண்டு தான் இருந்தான்…
அதே போல் சூர்ய நாரயணன் துளசியின் அருகில் போய் நின்று திருமண சடங்குகளை செய்யும் போது எல்லாம், துளசி கூடிய மட்டும் அவரை விட்டு தள்ளி தள்ளி நிற்பதும் அவன் கண்ணுக்கு தெரிந்தது தான்..
அதே போல் வந்த உறவுகளில், சில நட்பில் சிலர் சூர்ய நாரயணனையும் துளசியையும் பார்த்து குசு குசு என்று பேசிக் கொள்வதும், இடை இடையே மான்சியை ஒரு மாதிரியான பார்வையை பார்ப்பதையுமே பார்த்தவன்,. திரும்பி நாளை தன் மனைவியாக வரப்போகும் மான்சியை அப்போது தன் அவன் உன்னிப்பாக கவனித்தான்..
அதுவும் நேரில் பார்த்தது இதோ இப்போது மான்சியோடு ஆலம் சுற்ற அவள் பக்கத்தில் போய் அவன் நின்ற போது தான்.. .அப்போது கூட அவள் திகைத்த தோற்றத்தில் மற்றவர்களின் கேள்விக்கு ஆளாக நேரிடுமோ என்று அவளை கண்டிக்க தான் அவளை பார்த்து பேசினான் என்பதை விட, அவளிடமான அவனின் பேச்சு முதலில் கண்டிப்பில் தான் ஆரம்பித்தது..
இதோ இப்போது வரை அந்த கண்டிப்பான பேச்சோடு தான் நின்று விட்டது. பின் அவனை சுற்றி நிகழும் நிகழ்விகளை கவனிக்க ஆரம்பித்தான்..
அதுவும் மான்சியின் மற்ற உறவுகளை கவனித்தவன் மான்சியை கவனிக்கவில்லை என்பது தான் உண்மை.. அவனுக்கு இந்த திருமணம் மற்றவர்களுக்கு எந்த வித சந்தேகமும் ஏற்படாத வரையில் நடந்து முடிய வேண்டும்.. அதில் தான் அவனின் முழு கவனமும் இருந்ததே தவிர..
தனக்கு மனைவியாக வருபவளின் எழில் வடிவத்தையோ, அவளின் அழகையோ பார்த்து ரசிக்கும் மனநிலையில் அவன் இல்லை..
ஆனால் மற்றவர்கள் மான்சியை பார்க்கும் அந்த மரியாதையற்ற பார்வையில் திரும்பி யோசனையுடன் தன் வருங்கால மனைவியின் முகத்தை கவனித்த சர்வேஷ்வரனால், அவன் கண்ணை அவள் முகத்தை விட்டு அகல சிறிது நேரம் பிடித்தது…
அடுத்து சர்வேஷ்வரனின் கண்கள் அவள் மேனியில் பயணப்பட்ட இடங்களை எழுத்தால் சொல்ல முடியாத அங்கங்களை பார்த்த போதே, அவனுள் எழும் உணர்வு என்ன என்று கூட தெரியாத அளவுக்கு அவன் டீன் ஏஜில் இருப்பவன் அல்லவே..
மான்சியை டிடெக்டீவ் கொடுத்த தகவல் அறிக்கையில் இணைத்து இருந்த புகைப்படத்தை பார்த்து தான் அவள் தோற்றமே அவன் கண்ணில் விழுந்தது..
பார்த்த அளவில் அழகாக இருக்கிறாள்.. அவ்வளவு தான் அவன் நினைத்தது… புகைப்படத்தில் பார்த்த போதே அவள் நல்ல நிறம் என்று தெரிந்தது.. நிறம் இல்லை என்றால் கூட, அவன் கவலை பட்டு இருக்க மாட்டான் தான்..
அவன் புகைப்படத்தை கூட பார்த்தது தன்னோடு ஒரளவுக்காகவது நன்றாக இருந்தால் தானே நன்றாக இருக்கும்.. காதல் திருமணம் என்றால் நம்புவார்கள்.. ஏன் என்றால் இப்போதைய காதல் அழகானவர்களுக்கு மட்டும் தான் என்பது போல் தானே வெளி பிம்பம் உருவகப்படுத்தி இருக்கிறது..
பின் அடுத்து அவன் இந்த திருமணத்திற்க்கு பேச வேண்டியது செய்ய வேண்டியது என்று அவன் மனம் அதை திட்ட மிடவே சரியாக இருக்கும் போது, மான்சியை பற்றியே யோசிக்காத போது, அவளின் அழகு எப்படி அவனின் நினைவுக்கு வரும்..
ஆனால் இப்போது… இந்த நொடி.. அதுவும் அவன் தேர்ந்தெடுத்த உடை.. நகையில் தன் பக்கத்தில், அந்த நேரத்தில் மான்சியை பார்த்ததும் அவனுக்குள் எழும் அந்த உணர்வினை இனம் கண்டுக் கொண்டவனுக்கு என்ன இது நானா..? என்பது போல் அவனுக்கு அவனே அடக்கி கொண்டாலுமே, அவன் கண்கள் அவளை அடிக்கடி திரும்பி பார்த்து கொண்டு, அதன் வேலையை செவ்வனே செய்து கொண்டு தான் இருந்தது…
அப்படி அடிக்கடி மான்சியை சர்வேஷ்வரன் திரும்பி பார்த்ததில் அவன் கவனித்தது.. மற்றவர்களின் பார்வைக்கு ஒரு வித சங்கடத்துடன் தலை குனிவதும். பின் போட்டோ கிராபர் இரு முறை..
“ மேடம் முகத்தை நிமிர்த்தி பாருங்க..” என்று சொல்லும் போது மட்டும் நிமிர்ந்து பார்ப்பதும்.. என்ற அவளின் செயலை கவனித்துக் கொண்டு இருந்த சர்வேஷ்வரனின் மனதில் மான்சியை பற்றிய எண்ணம் மட்டுமே முழுமையாக நிறைந்து போய் இருந்தன..
சிறு வயது முதல் பார்த்த அவனின் அத்தை மற்றும் தாய் மாமன் மகளான அனிதாவை அவன் திருமணம் செய்ய கேட்ட போது..
“ம் சரி..” என்று ஒத்துக் கொண்டான்..தன் திருமணம் பெரியவர்கள் பார்த்து நடத்தி வைக்க வேண்டும்.. பெரியவர்கள் அனிதாவை தேர்வு செய்து இருக்கிறார்கள்..
மூன்று வருடம் முன் தன் அண்ணன் மகேஷ்வரன் திருமணத்தில் அவன் அனிதாவை பார்த்து இருக்கிறான்.. தோற்றம் குறை சொல்லும் படி இல்லை.. பின் என்ன..? அது தான் அவன் அனிதாவை பற்றி நினைத்தது…
திருமணம் முடிவு செய்த பின் அவளோடு பேச வேண்டும் என்ற எண்ணம் கூட அவனுக்கு தோன்றவில்லை.. சில சமயம் அனிதா ஏன் நம்மை அழைக்கவில்லை.. இந்த திருமணத்தில் விருப்பம் இல்லையோ..? என்று ஜெர்மனியில் ஒரே ஒரு முறை மட்டும் நினைத்தான்..
பின் அவனே நீ மட்டும் அவளை அழைத்து பேசினியா..? இது போல் திருமண பேச்சில் முதல் அடி ஆண் தானே எடுத்து வைக்க வேண்டும் என்று பெண்கள் நினைப்பார்கள். அதே எண்ணம் கூட அனிதாவுக்கு இருக்கும் அல்லவா..?
மேலும் அனிதாவுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாத பட்சத்தில், அதை வெளிப்படையாக சொல்லும் பெண் தான்.. அந்த தயக்கம் எல்லாம் அவளுக்கு கிடையாது என்று தான் அப்போது அனிதாவை பற்றி அவன் நினைத்தானே ஒழியே..
அவள் அனைத்து எல்லையையுமே கடக்கும் பெண்.. கடந்த பெண் என்று அவன் அனிதாவை பற்றி நினைத்து கூட பார்த்தது கிடையாது…
அவளை பற்றி அறிந்ததும் அவனுக்கு அதிர்ச்சியாக தான் இருந்தன.. அவன் நிச்சயம் இது போல் ஒரு செயலை அனிதாவிடம் எதிர் பார்க்கவில்லை என்பதை விட, தன் குடும்பத்து பெண்ணிடம் அவன் எதிர் பார்க்கவில்லை என்று சொன்னால் சரியாக இருக்கும்..
அனிதாவை பற்றி கேள்வி பட்ட உடன் தான் முதல் அதிர்ச்சியில் தான் இப்படி நினைத்து. பின் அடுத்து அவன் பெயர்.. அவன் குடும்பத்தின் பெயர் காப்பற்ற என்ன செய்ய வேண்டும்…? இது தான் அவன் மனது முழுவதும் ஆக்கிரமித்து இருந்தன…
அப்படி இத்தனை மாதம் தான் திருமணம் செய்யும் பெண் அனிதாவிடம் தோன்றாத ஒரு எண்ணம் மான்சியை பார்த்து தோன்றியது..
மான்சி அழகி தான்.. அதில் எள்ளலவும் அவனுக்கு சந்தேகம் கிடையாது.. அழகை பார்த்து மயங்கி விட்டேன் என்று நினைக்க கூட முடியாத அளவுக்கு, இவளோடு அழகியை எல்லாம் அவன் வெளி நாட்டில் பார்த்து இருக்கிறானே…
அதோடு அவனோடு எந்த அளவுக்கும் பழக நினைக்கும் பெண்களையும் தான்.. இவன் தான் அதில் விருப்பம் இல்லாது ஒரே வார்த்தையில்..
“ நோ இன்ரெஸ்டட்டு ..” என்று சொல்லி விடுவான்.. இப்போது என்ன இவளோடு பேச என் மனம் விழைகிறது.. பழக என் இதயம் துடிக்கிறது…
அதற்க்கு மேலும் என்று அவன் நினைக்கும் போதே, எந்திர கதியில் இத்தனை நேரம் மேடையில் நின்றுக் கொண்டு வந்தவர்களுக்கு வணக்கம் செய்து கை தன்னால் வந்தவர்கள் பக்கம் சென்று அவர்களை முறையே மான்சியின் முகம் பார்த்து வந்தவர்களை மான்சிக்கு அறிமுகம் செய்யும் போது எல்லாம், மான்சியின் முகம் பார்ப்பதில் அவனுக்கு அவ்வளவு விருப்பமாக இருந்தது..
அதனால் அவன் மதிக்காதவர்கள் வந்த போதும், மான்சிக்கு முறையாக அறிமுகம் படுத்திக் கொண்டு இருந்தாலுமே, அவன் போக்கு மாறிய விதமும் அவன் மனம் எடைப்போட்டு கொண்டு தான் இருந்தது..
அதை தடை செய்யும் படியாக சூர்ய நாரயணனோடு ஒரு குடும்பம் மேடை ஏறி வந்தது. அவர்கள் வரும் போது கூட சர்வேஷ்வரன் தன் மாமாவின் தொழில் துறை நட்போ என்று தான் மிக சாதரணமாக அவர்களை எதிர் கொண்டான்..
ஆனால் வந்த தம்பதியர்களில் ஆண் மான்சியிடம்.. “ எப்படி இருக்க மான்சி.. அம்மா எங்கே..?” என்று கேட்டதில் மான்சி…
“ நல்..லா இரு...க்கேன்..” என்று மான்யின் திணறலான பதிலில் தான் சர்வேஷ்வரன் முதலில் மான்சியின் பதட்டமான முகத்தை பார்த்தவன், பின் வந்தவர்களை கவனிக்க ஆரம்பித்தான்..
“ம் ஓகேம்மா.. நீ டென்ஷன் பண்ணிக்காதே…” என்று வந்தவர் சொல்லிக் கொண்டு மேடையை விட்டு கீழே இறங்கவும், மான்சி ஒரு நிம்மதி பெரும் மூச்சை விட்டாள்..
பின் தான் தன்னையே கவனித்துக் கொண்டு இருந்த சர்வேஷ்வரனை அப்போது தான் கருத்தில் கொண்டு தன் முக பாவனையை மாற்றிக் கொண்டு, அவள் சாதரணமாக மற்றவர்களை எதிர் கொண்டதில் சர்வேஷ்வரன் தன் மாமா சூர்ய நாரயணனோடு பேசிக் கொண்டு செல்லும் தம்பதியர்களில் குறிப்பாக அந்த ஆணை பார்த்தவன் இது கவனிக்க பட ஒன்று என்று மனதில் குறித்துக் கொண்டான்…
இப்படி மணமகளுக்கே உரிய பூரிப்பில் சிறிது நேரம் அவன் மனது துள்ளினாலும். பின் மீண்டவனாக அடுத்து தன்னை சுற்றி கவனிப்பதிலும், வந்தவர்களை வர வேற்பதிலும் அன்றைய அவனின் கல்யாண வர வேற்ப்பு முடிந்தது என்றால்,
மான்சிக்கு இது தனக்கான இடம் கிடையாது. இங்கு நான் பொருந்த மாட்டேன்.. கண்டிப்பாக இந்த வாழ்க்கை தனக்கு நல்லது செய்யவில்லை என்றாலும், தீயது செய்யாது இருந்தால் போதும் என்று அவள் மனது நினைக்கும் போதே …
இந்த வாழ்வில் இருக்கும் கொஞ்ச நஞ்ச என் நிம்மதியும் கெடும் என்று தான் அவள் உள் மனது அவளுக்கு கொல்லிக் கொண்டே இருந்தது…
அதுவும் சூர்ய நாரயணனோடு கடைசியில் வந்தவரை பார்த்ததில் சிறு வயது நியாபகமும் கண் முன் வலம் வர.. அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியில் நாம் மேடையிலேயே விழுந்து விடுவோமோ என்ற பயம் வேறு வந்து விட்டது..
அதுவும் மேடையில் நாம் வீழ்ந்தால், என் அம்மாவின் வாழ்க்கை முறைக்கு, என் மயக்கத்தை வேறு விதமாக தான் எடுத்துக் கொள்ளும்..
இதோ அனிதா இது போல் ஒரு விசயத்தை செய்து இருக்கிறாள்.. ஆனால் பெண் மாறியதில் அனிதா மீது தவறு இருக்குமோ என்று கூட யாரும் அவள் மீது சிறு சந்தேகம் கூட கொள்ளவில்லையே..
அதுக்கு காரணம் அவள் அம்மாவின் தாலி கட்டிய வாழ்க்கை.. அந்த வாழ்க்கை எனக்கு வேண்டும் என்று தம்பியின் ஆசையில் தானே நான் இங்கு வந்து நிற்க்கிறேன்…
அதுவும் அவன் மனதில் இது போல் சங்கடம் எல்லாம் இல்லாது இருந்தால் தான் அவன் படிப்பில் கவனத்தை செலுத்த முடியும் என்று நினைத்து தான்.. இதோ இந்த வாழ்வை ஏற்றுக் கொள்கிறேன்..
இதோ இந்த வாழ்க்கையில் நான் இன்னும் காலடி எடுத்துக் கூட வைக்க வில்லை.. அதற்க்குள்ளே என் பிரச்சனை ஆரம்பித்து விட்டது.. இதோ மற்றவர்களின் அந்த பார்வை..
அதிலும் தன் பக்கத்தில் நிற்பவனை அப்படி ஏதோ தேவ தூதனை போல் பார்த்து விட்டு, தன்னை பார்க்கும் போது அந்த பார்வை மாறிய விதம்.. இவனுக்கு இவளா…? என்பது போல் இப்போது ஏளனத்தோடு வேறு ஏதோ சேர்ந்து தெரிவதில், மான்சி நொந்து போய் விட்டாள்.
இதே மன நிலை எனக்கு நீடித்தால், தன் தம்பியின் கனவு நிறை வேற்ற தன் கனவை சிதைப்பதோடு, இது போல் பார்வையில் என்னை நானே வெறுத்து விடும் சூழ்நிலைக்கும் நான் ஆளாகி விடுவது நிச்சயம்.. மாற்ற வேண்டும் நான் என் மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்..
மற்றவர்களின் பார்வை என்ன…? பேச்சு கூட என் மனதை பாதிக்க கூடாது என்று நினைத்தவளுக்கு அப்போது தெரியவில்லை.. ஒரு சில வார்த்தைகள்.. அதுவும் ஒரு சிலரோட வார்த்தைகள் நெருப்பை அள்ளி தலையில் கொட்டுவது போல் இருக்கும் என்று…
இப்படி இந்த ஜோடி மண மக்கள் இருவேறு மன நிலையில் வர வேற்ப்பு முடிந்து.. அதே போல் தான் மறு நாளும் மான்சிக்கு மட்டும் அல்லாது துளசிக்கும் சில சங்கடத்தோடு தான் அந்த திருமண வைபோகம் ஒரு முடிவுக்கு வந்தது..
ஆனால் இதற்க்கு எதிர் பதமாக சர்வேஷ்வரனின் தங்கை கீதாஞ்சலி விக்ரம் வர வேற்ப்பு இருவரின் காதல் பார்வை பரி மாற்றத்திலும், மெல்லிய தேக தீண்டலான கை பற்றல்.. மாலையில் நடுவில் விக்ரம் கீதாஞ்சலியின் இடை மீது தெரியாது கை படுவது போல் தொடுவது…
பின் கீதாஞ்சலியின் முறைப்பில் ஒரு கண் சிமிட்டலோடு நல்ல பிள்ளை போல்.. வந்தவர்களை வர வேற்ப்பது என்று மிக சந்தோஷமான மன நிலையில் அந்த ஜோடியின் வர வேற்ப்பு ஒரு முடிவுக்கு வந்தன..
இதில் மான்சிக்கு மகிழ்ச்சி தரும் விசயம் ஒன்று இருந்தது என்றால், அது நவீன் சிரித்த முகத்தோடு அந்த மண்டபத்தை சுற்றிக் கொண்டு வந்ததும் பெரும்பாலான திருமண வேலைகளை செய்ததும் தான்..
அதுவும் சர்வேஷ்வரனின் அப்பாவும், பெரியப்பாவும் நவீனிடம் ஏதோ சொல்வதும், அதற்க்கு நவீன் தலையை தலையை ஆட்டுவது பின்..
அவர்கள் சொன்ன வேலைக்காக வெளியில் ஓடி போய் பின் வந்து என்று அவன் பம்பரமாக சுற்றிக் கொண்டு இருந்தவன்..
சரியாக தாலிக்கட்டும் நேரம் மேடைக்கு ஓடி வந்தவன் தன் அக்கா பின் பக்கம் நின்றுக் கொண்டவன்… சர்வேஷ்வரன் அந்த தாலியை கையில் எடுக்கும் வேளயில், நவீனின் கண்ணில் இருந்து வழிந்த கண்ணீரை பார்த்துக் கொண்டே தான் மான்சி சர்வேஷ்வரனின் தாலியை வாங்கிக் கொண்டாள்..
சர்வேஷ்வரனும் தாலியை கட்டும் போது மான்சியின் முகத்தை தான் பார்த்தான்.. மான்சி தன்னை பார்க்காது அவள் பார்வை சென்ற திசையையும் பார்த்த வண்ணம் தான் அவனும் மான்சிக்கு தாலியை கட்டியது..
நவீனின் முகத்தில் வந்து போன பாவனை அவன் கண்ணில் வழிந்த கண்ணீர்… சர்வேஷ்வரனும் அதை கவனித்தான் தான்..
அதை பார்த்த சர்வேஷ்வரன் கண்களுக்கு , அது அக்கா தம்பியின் பாசமாக மட்டும் தான் தெரிந்தது…
ஓ அக்கா மீது ரொம்ப பாசம் போல்.. பின் அம்மா அப்படி இருந்தால், ஒரு பையன் அக்கா மீது தானே பாசத்தை காட்ட முடியும்.. அவன் நினைத்தது இது தான்…
ஒரு சிலதோடு மகிமை அது இருப்பவர்களுக்கு தெரியாது.. இல்லாதவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.. அந்த தாலியின் மூன்று முடிச்சியின் மகிமை சிறு பைய்யனான நவீனுக்கு தெரிந்து இருக்கிறது.. அதே போல் சர்வேஷ்வரனுக்கும் தெரிந்து இருந்தால் நன்றாக இருக்கும் பார்க்கலாம்..