அத்தியாயம் 8
மான்சி சர்வேஷ்வரனின் திருமணத்தில் அனைத்தும் முறைப்படி செய்து முடித்து விட்டனர்.. ஒன்றை தவிர.. அது பெற்றோர்களுக்கு செய்யும் பாத பூஜை..
மகன் சொன்ன அனைத்திற்க்கும் ஒத்துக் கொண்ட வெங்கட பூபதி… சங்கர பூபதி.. இதற்க்கு மட்டும் ஒத்துக் கொள்ளவில்லை..
“ எப்படி என் தங்கை இடத்தில் இன்னொருத்தியை நிற்க வைத்து நாங்களே அழகு பார்ப்பதா…? என்ற அந்த சடங்கை மட்டும் தவிர்த்து விட்டனர்.. சர்வேஷ்வரன் அதை பற்றி எல்லாம் கவலை படவில்லை… அவனுக்கு அவன் மானம் தான் பெரியது.. இதில் மற்றவர்களின் மனதை பற்றி அவன் யோசிக்கவே இல்லை..
அவனின் இந்த அலட்சியம் இன்றோடு இருந்தால் பரவாயில்லை.. வரும் காலங்களிலும் அவன் அலட்சியம் மான்சியிடம் தொடருமானால், தன்மானம் மிக்க மான்சி கண்டிப்பாக இதற்க்கு ஒத்துக் கொள்ள மாட்டாள்..
இது அவன் அவளை தொடர்ந்து அவமானம் படுத்தும் போது அவனே தெரிந்துக் கொள்வான்..
அந்த பாத பூஜை சடங்கு இவர்களுக்கு விட்டு, மற்ற ஜோடிகளான கீதாஞ்சலி விக்ரம் இருவரும் முறையே அவர் அவர் பெற்றோர்களுக்கு செய்யும் போது தான் மான்சியின் கவனம் அதில் படிந்தது.
இதே அந்த சடங்கு அவர்களும் செய்யவில்லை என்றால், அவளுக்கு அது பெரியதாக மனதில் பட்டு இருக்காதோ என்னவோ.. ஆனால் இப்போது அந்த பாத பூஜை மட்டும் விடுத்து அனைத்தும் முறையாக செய்தது அவள் நெஞ்சில் முள் குத்தியது போல் ஆனது…
அந்த முள் குத்தளை இன்னும் கூட்டும் வகையாக தம்பதியர்களின் மணப்பெண் முதலில் புகுந்த வீட்டில் முகூர்த்த தேங்காய் உடைத்து பின் மீண்டும் தாய் வீட்டுக்கு செல்லும் சடங்கை கீதாஞ்சலி தம்பதியருக்கு செய்ய..
மான்சிக்கு இனி பிறந்த வீடு இல்லை என்பது போல் மான்சியோடு காரின் அருகில் சென்ற சர்வேஷ்வரன் என்ன நினைத்தானோ நவீனை அருகில் அழைத்தவன்..
“ உன் அக்காவோட திங்ஸ் எல்லாத்தையும் நீ என் வீட்டுக்கு அனுப்பி வைத்து விடு.. அட்ரஸ் தெரியும் தானே..?” என்று கேட்டதற்க்கு..
நவீன்.. “ எனக்கு தெரியாது..” என்பதற்க்குள் அங்கு வந்த சூர்ய நாரயணன்..
“ நான் ஏற்பாடு செய்யிறேன் சர்வா…” என்று பதில் அளித்தார்..
அந்த பேச்சில் நவீன் மான்சி அதிர்ச்சியாக ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.. அதுவும் நவீன் முகத்தில் தெரிந்த அந்த பதைப்பில் மான்சிக்கு, மனது தாங்க முடியாது..
இது வரை சர்வேஷ்வரனிடம் ஒரு வார்த்தை பேசாது சிலை போல் அனைவரும் சொன்னதை மட்டுமே செய்துக் கொண்டு இருந்தவள்.
நவீன் கூட வந்து அவளிடன் காதுக்கு அருகில் பேசுவானே ஒழிய.. இவள் வாய் திறந்து பேசாது, ஒரு சிறு தலையப்பை மட்டும் பதிலாக கொடுத்து கொண்டு இருந்தவள்..
சர்வேஷ்வரனின் முகம் பார்த்து…
“ உங்க வீட்டுக்கு போயிட்டு , பின் என் வீட்டுக்கு தானே போகனும்..” என்று தொடர்ந்தால் போல பேசிய பேச்சில், சர்வேஷ்வரன் அவள் கேட்டதற்க்கு பதில் அளிக்காது சம்மந்தமே இல்லாது....
“ பரவாயில்லை… உனக்கு நல்லாவே பேச வருது.. குரலும் நல்லா தான் இருக்கு..” என்ற அவன் பேச்சில் என்ன..? இது என்பது போல் புரியாது குழப்பத்துடன் சர்வேஷ்வரன் முகம் பார்த்தாள் மான்சி..
“ இல்ல நேற்றில் இருந்து என்னிடம் என்ன…? நீ யாரிடமும் பேசி நான் பார்க்கல.. அதனால் குரல் நல்லா இருக்காதோ.. இல்ல கொஞ்சம் திக்கி திக்கி பேசுவீயோ என்று நினைத்தேன்..” என்று அவளின் பார்வைக்கு அர்த்தம் புரிந்து, பேசிய சர்வேஷ்வரன், அவள் மனதை புரிந்து பேசினால், பிற்காலத்தில் தன் வாழ்க்கை தொலைந்து விடுமோ என்ற பயத்தில் அவன் பல நாள் இரவு தூக்கம் கெட்டு, அல்லும் பகலும் மனைவியின் நினைவில் துன்பம் படும் சூழ்நிலை அவனுக்கு வராது இருந்து இருக்கும்.
என்ன செய்வது..? என்ன தான் அறிவாளியாக இருந்தாலும், விதி என்று ஒன்று இருப்பது இது போல் ஒரு சின்ன நிகழ்வுகள் மூலம் தான் தெரிய வருகிறது…
சர்வேஷ்வரனின் பேச்சில் மான்சிக்கு எரிச்சல் தான் வந்தது.. என்ன இது நான் கேட்டதற்க்கு பதில் சொல்லாது தேவையில்லாது பேச்சு என்பது போல் அவன் முகத்தை பார்த்து நின்றாள்…
மான்சி சர்வேஷ்வரனிடம் தன் எரிச்சலை காட்டவில்லை என்றாலும், அது அவள் முகத்தில் நன்றாகவே அவனுக்கு தெரிந்தது…
அது தந்த தாக்கத்தில் …“ என்ன தான் நீ எரிச்சல் பட்டாலும், நீயே அங்கு போக முடியாது எனும் போது, நான் எப்படி அங்கு வருவேன் என்று நீ எதிர் பார்த்த…?” என்று கேட்டவன்..
பின்.. “ ஓ தாலி கட்டிட்டா நம்ம பேச்சை தான் கேட்டு தான் ஆக வேண்டும் என்று நீ நினைத்தால், உன் நினைப்புக்கு நான் பொறுப்பாக முடியாதும்மா…” என்று அவன் பேசியதில் மான்சி அதிர்ந்து போய் தான் அவன் முகத்தை பார்த்தாள்..
இவன் என்ன சொல்க்கிறான்.. இனி நான் அங்கு போக முடியாதா..? ஏன்..? எதற்க்கு…? இவன் வரவில்லை என்றால் போகுது.. ஆனால் நான் ஏன் போக கூடாது.. நான் என் தம்பியை பார்க்க வேண்டும் என்றால், என் அம்மா..” என்று நினைக்கும் போதே தன்னால் அவள் நெஞ்சம் பதறியது..
என்ன தான் அவள் அம்மாவின் வாழ்க்கை அவளுக்கு பிடிக்காது, அவரிடம் பேசாது அவரை தள்ளி நிறுத்தினாலும், துளசி மான்சியை பார்க்காத போது அவள் தன் அம்மாவை பார்ப்பாள்.. பார்க்கும் போது எல்லாம் எட்டு வயதில் புரியாத ஒரு சில நிகழ்வுகள் கண் முன் தோன்றி அவளை பயமுறுத்தும்..
அதே வேளை தன் அம்மாவின் இந்த வாழ்க்கைக்கு தானும் ஒரு காரணமோ என்ற எண்ணம் அவளுக்கு தோன்றும் தான்.. ஆனால் என்ன தான் இருந்தாலும்…. அதற்க்கு மேல் அவள் அதை பற்றி யோசிக்காது கடந்து விடுவாள்..
இப்போது சர்வேஷ்வரன் உன் வீட்டுக்கு போக முடியாது என்றதில், அதிர்ந்து போனவளின் முகத்தை கவனித்த சர்வேஷ்வரன்..
“ அங்கு போக கூடாது என்று தான் சொன்னேன்.. ஆனால் நீ உன் தம்பியை .. உன் அம்மாவை வெளியில் பார்க்கலாம்.. ஏன் உன் தம்பியை என் வீட்டுக்கே அழைத்து வந்து பேசலாம்.. ஆனால் ..” துளசியின் பக்கம் கை காட்டிய சர்வேஷ்வரன்..
“ அவங்களுக்கு என் வீட்டில் நோ என்ரி தான்.. அந்த வீடு என் அத்தையின் தாய் வீடு.. அது அவங்களுக்கு மட்டுமே ஆன வீடு..” என்று அவன் பேச பேச மான்சி பதில் அளிக்க முடியாது வாய் அடைத்து போனாள்..
சூர்ய நாரயணன் தான்.. “ இப்போ இந்த பேச்சு எல்லாம் எதுக்கு…?” என்று அவர் சொல்லவும்..
சர்வேஷ்வரன்.. “ அவள் முழித்து இருப்பதிலேயே தெரிக்கிறது.. நான் சொன்னது எதுவும் நீங்க அவள் கிட்ட சொல்லலே போல..” என்று சர்வேஷ்வரன் கேட்கவும்..
இப்போது மான்சி அதிர்ந்து எல்லாம் நிற்கவில்லை.. சூர்ய நாரயணனை நேருக்கு நேர் பார்த்த வாறே..
“ ஏன் மொத்தமா அவங்க கிட்ட இருந்து ஒதுக்கி வைத்தா நல்லது என்று நினச்சிட்டிங்களா..?” என்று துளசி பக்கம் கை காட்டி அவள் பேசிய அந்த பேச்சும் கோபமான அந்த பார்வையும் பார்த்து சூர்ய நாரயணன் தர்ம சங்கடத்துடன் தலை குனிந்து நின்றார்..
மான்சி தன் தாய் மாமன் சூர்ய நாரயணனை பார்த்து பேசிய பேச்சில் சர்வேஷ்வரன் இப்போது அதிர்ந்து போய் நின்று விட்டான்.. என்ன இது இந்த பெண் இப்படி தன் மாமாவை பேசுகிறாள் என்று..
இன்றும் சூர்ய நாரயணன் தன் வீட்டுக்கு வந்தால், அவ்வளவு மரியாதை.. அவன் வீட்டில் மாப்பிள்ளைக்கு மரியாதை கொடுக்க வேண்டும்.. சூர்ய நாரயணனை பற்று கேள்வி பட்டு..
“ நான் கேட்கிறேன்..” என்று அவன் கோபமாக பேசிய போது தன் அப்பா பெரியப்பா.. இந்த உறவு இதோட முடியும் உறவு கிடையாது சர்வா.. எல்லாம் பார்த்து தான் பேசி தீர்க்கனும்..” என்று சொல்லி பெரியவர்கள் மட்டுமே பேச சென்றது..
பின் அங்கு என்ன நடந்ததோ..வீட்டுக்கு வந்தவர்கள்.. “ பத்து தலையில் இது தான் எழுதி இருக்குன்னா நாம அதை மாத்தவா முடியும்.. உனக்கு ஒப்பவில்லை என்றால் நம்ம வீட்டுக்கே வந்து விடு என்று கூப்பிட்டேன்…
ஆனால் அவள் நான் வர மாட்டேன் என்று சொல்லியதோடு, இனி அவர் நம்ம வீட்டுக்கு வந்தா இது பத்தி அவர் கிட்ட பேச கூடாது.. முன் மாதிரி தான் அவரை நடத்தனும்.. இல்லேன்னா நான் அங்கு வரவே மாட்டேன் என்று சொல்லிட்டா..” என்று அன்று பேசியது அவன் காதிலும் விழுந்தது தான்.
அப்போது அத்தைக்கு என்ன அப்படி பதி பக்தி வேண்டி இருக்கிறது என்று நினைத்துக் கொண்டவன் அப்போது தன் அத்தைக்காக மாமாவிடம் நல்ல படியாக நடந்துக் கொண்டவன்.. வளர்ந்த பின் தொழிலில் சூர்ய நாரயணன் காட்டும் வேகம், விவேகத்தை பார்த்து தன்னால் அவரிடம் மரியாதை வந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்…
தன் வீட்டில் அப்பா.. பெரியப்பா . தன் மாமாவை அப்படி மரியாதையோடு நடத்த.. இங்கு இப்படி ஒரு சின்ன பெண்ணிடம் அவர் பேச்சு வாங்குவதா..? என்ற கோபத்தில்..
“ என் மாமா கிட்ட நீ இப்படி தான் மரியாதை இல்லாது பேசுவியா..?” என்று சர்வேஷ்வரன் கோபத்துடன் கேட்க.. அதற்க்கு மான்சி பதில் அளிக்காது பதட்டத்துடன் இருந்த தன் அன்னையையும், சூர்ய நாரயணனையும் மாறி மாறி பார்த்தாள்..
சூர்ய நாரயணன் தான்.. “ சர்வா என் மேல் தான் தப்பு.. நீ சொன்னதை நான் மான்சி கிட்ட சொல்லி இருக்கனும்… சொல்லாது விட்டது என் தப்பு தானே…” என்ற அவர் பேச்சுக்கு சர்வேஷ்வரன் பதில் அளிக்கும் முன் மான்சி..
“ நீங்க இந்த தப்பை மட்டும் தான் செய்திங்களா..?” என்ற கேள்வியில் மீண்டும் கோபத்துடன் சர்வேஷ்வரன் தன் மனைவியின் முகம் பார்த்தான்..
இன்னும் கேட்டால், அவனும் தன் மாமனை பார்த்து அதே கேள்வியை தான் கேட்க நினைத்தான்… அதை மான்சி கேட்டதில், அவனுக்கு அவ்வளவு கோபம்..
“ என்னவோ தப்பு என் மாமா மட்டும் செய்தது போல் நீ பேசுவது தான் எனக்கு ஆச்சரியமா இருக்கு… சின்ன பெண்ணை வலுக்கட்டாயமாக..” என்று மேலும் என்ன சொல்லி இருப்பானோ… மான்சி நவீனின் கசங்கிய முகத்தை பார்த்தவன்..
அப்போது தான் அவன் பேச வந்த வார்த்தையின் வீரியம் புரிந்து அமைதி காத்தான்.. அமையாகி விட்டானே ஒழிய.. தான் பேசியதற்க்கு அவன் யாரிடமும் மன்னிப்பு கேட்கவில்லை..
ஒரு சில ஆண்கள் இப்படி தான் இருக்கிறார்கள்.. பெண் புகுந்த வீட்டை பற்றி ஒரு வார்த்தை தப்பி தவறி விட வார்த்தைகளை விட்டு விட கூடாது.. ஆனால் ஆண்கள் மனைவியின் வீட்டை பற்றி என்ன என்றாலும் பேசலாம். அது அவர்களின் உரிமை போல் இருக்கும்..
சாதாரண குடும்பத்துக்கே இப்படி எனும் போது, மான்சியின் அம்மா வாழ்க்கைக்கு இது போல் வார்த்தைகள் கேட்பது அதிர்ச்சி இல்லை தான்..
ஆனால் மான்சியின் நிலையும், டீன் ஏஜில் இருக்கும் நவீனின் நிலையில் இருந்து பார்த்தால், தான் அவர்களின் மனது படும் வேதனை நமக்கு புரியும்..
இதோ இப்போது கொஞ்ச நேரத்துக்கு முன் தாலி கட்டிய கணவன்.. தன் அம்மாவை பற்றி பேசும் இந்த அநாகரிகமான பேச்சில் ,ஒரு பெண்ணின் மனது வேதனை அடையவில்லை என்றால் தான் அது அதிசயம்…
அதுவும் இத்தனை பேர் சூழ இருக்க …என்று அவள் மனது நினைக்கும் போதே கண்ணீரோடு தன்னை சுற்றி பார்வையை சுழற்றியவளின் பார்வைக்கு நேர் எதிராக மகேஷ்வரன் தெரிந்தான்..
அவன் யார் என்று அப்போது மான்சிக்கு தெரியவில்லை.. ஏன் என்றால் தன் மாமியார்.. மச்சினச்சி மருத்துவமனையில் இருக்கும் போது..
அதுவும் அவர்களுக்கு துணையாக அவன் மனைவி வனிதா… “ என்னை ஆஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போங்க..” என்று அவள் அவனை அழைக்கும் போது..
“ நடு ராத்திரி கூட பப்பில் இருந்து தனியே கார் ஓட்டிட்டு வீட்டுக்கு வருவியே... இப்போ பகல்.. பக்கத்தில் இருக்கும் நம்ம ஆஸ்பிட்டலுக்கு நான் துணைக்கு வரனுமா…?” என்று மகேஷ்ரன் தன் மனைவியிடம் கேட்கவா முடியும்..?
மகேஷ்வரன் போல் ஒரு சில ஆண்கள் மனைவியின் அட்டகாசத்தை அடக்க முடியாததா ..? இல்லை வீட்டில் இதனால் அமைதி கெட கூடாது என்று நினைத்தா..? ஏதோ ஒரு காரணத்திற்க்காக மனைவியின் செயல்கள் பிடிக்காது போனாலும், அதை பெரிது படுத்தாது… அவர்கள் வழிக்கே சென்று விடும் சாதுவான கணவன்மார்களும் இங்கு இருக்க தான் செய்கிறார்கள்..
ஆனால் அந்த மனைவிமார்கள் ஒன்றை புரிந்துக் கொண்டால் நன்றாக இருக்கும்.. சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதனை…
நம் மகேஷ்வரன் சாது கணவனாக வனிதா அழைத்ததிற்க்கு வீண் விவாதம் செய்யாது.. தன் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றாள்..
அழைத்து சென்றவள் தன் புகுந்த வீட்டின் மீது இருக்கும் கோபத்தில்.. “ தன் அம்மா தங்கையின் உடல் நிலை இப்படி இருக்கு.. நீங்க என் கூட இருந்தா எனக்கு தைரியமா இருக்கும்.. “ என்று தன் கணவனை சர்வேஷ்வரன் திருமணத்திற்க்கு போக விடாது திட்டம் இட்டு பேசிக் கொண்டு நேரத்தை கடத்திக் கொண்டு இருந்தாள்…
மகேஷ்வரனுக்கு அது தெரிந்து தான் இருந்தது.. இருந்தும் அமைதி காத்தான்.. அவனுக்குமே திருமண வர வேற்ப்பில் கலந்து கொள்ள அந்த அளவுக்கு விருப்பம் இல்லை..
பத்மா அத்தை மீது சர்வேஷ்வரனோடு, மகேஷ்வரனுக்கு பாசம் அதிகம்.. அதனால் தான் வனிதா செய்வதை பெரிது படுத்தாது விட்டு கொடுத்து கொண்டு செல்கிறான்.. ஆனால் விட்டு கொடுக்கும் விசயத்தை பொறுத்தும் ஒரு சிலது இருக்கிறது தானே..
அனைத்திலும் தன் அத்தைக்காக விட்டு கொடுத்து போன மகேஷ்வரன், ஒரு நாள் தன் அத்தை அவன் காலில் விழுந்தும்…
“ நீங்க உங்க பெண்ணை கூட்டிட்டு போகலாம்..” என்று சொல்லுவான் என்று அவனிடமே சொன்னால் கூட அவன் நம்பி இருப்பானோ என்னவோ… அப்போது நானா..? என்று தான் அவன் கேட்டு சிரித்து இருப்பான்..அந்த அளவுக்கு அவனுக்கு தன் பத்மாவதி அத்தை மீது பாசம்..
அந்த பாசத்தில் தன் அத்தை இருக்க வேண்டிய இடத்தில் வேறு ஒருத்தரை பார்க்க முடியாது .. வனிதா பேச்சை கேட்டுக் கொண்டு மருத்துவனையிலேயே இரவை கழித்து விட்டான்..
தன் செயல் வெற்றி அடைந்த களிப்பில் மறு நாளும் வனிதா அதே பாணியை தொடர..
“ சீப்பை ஒளித்து வைத்து கொண்டால், கல்யாணம் நிற்காது வனி… உனக்கு இன்னும் சர்வாவை பற்றி சரியா தெரியாது நடந்து கொள்கிறாய்.. நாளை பெரிய பிரச்சனை வந்தால் அப்போ தெரியும்.. உனக்கு…” என்று சொன்னவனின் பேச்சை அப்போதே வனிதா காது கொடுத்து கேட்டுக் கொண்டு இருந்தால், நன்றாக இருந்து இருக்கும்..
இவள் சொல்லி திருந்தும் ரகம் கிடையாது..பட்டா தான் புரியும் என்று அவள் முகபாவனையிலேயே புரிந்துக் கொண்ட மகேஷ்வரன்..
“ முகூர்த்தம் நேரம் ஆகுது.. நான் கிளம்புக்கிறேன்..” என்று சொல்லி விட்டு.. இதோ தாலி கட்டும் நேரம் தான் அவன் மண்டபத்திற்க்கு வந்தது..
என்ன தான் துளசி சூர்ய நாரயணனை விட்டு தள்ளி தள்ளி போனாலுமே.. அதை கவனித்துக் கொண்டு இருந்த மகேஷ்வரனுக்கு கோபம் இன்னும் ஏறத்தான் செய்தது..
இப்போது தன் தம்பி அந்த பொம்பளையை பார்த்து பேசிய பேச்சில் அவன் மனது கொஞ்சம் சமாதானம் ஆகி அது தந்த மகிழ்ச்சியில் அவன் சிரித்தான்..
அந்த நேரம் தான் மான்சி தலை நிமிர்ந்து அவமானத்தோடு அவனை நிமிர்ந்து பார்த்தது சிரித்து கொண்டு இருக்கும் மகேஷ்வரனின் முகத்தை தான்.. யார்..? என்று தெரியாது .. இன்னும் அவமானம் படும் படி போய் பதை பதைத்து தன் தம்பியின் முகத்தை பார்த்தாள்..
அவன் முகத்தில் தெரிந்த அவமானத்தில் இதற்க்கு தானே வேண்டாம் என்று சொன்னது… இதோ ஆரம்பம் ஆகி விட்டது ..தன் தாயின் வாழ்க்கை முறையை பற்றி பேசுவது.. இது தொடரும்.. அவளுக்கு தெரியும் ..
தெரிந்தே தான் மான்சி சர்வேஷ்வரன் வீட்டுக்கு சென்றது.. அங்கும் அனைத்தும் முறையாக மணமக்களுக்கு செய்ய கூடிய முறையை செய்துக் கொண்டு இருந்தனர்.. பெண் வீட்டு சார்பாக ஒருவரும் இல்லாது..
தன்னை பார்த்து கேலியாக சிரித்த இளைஞனும் அதே வீட்டில், அதுவும் உரிமையுடன் வளைய வருவதை பார்த்த மான்சி.. இவன் யார் …? என்று அவள் மனது யோசனை செய்யும் போதே ..
பால் பழம் சாப்பிட அவள் பக்கத்தில் அமர்ந்திருந்த சர்வேஷ்வரன்.. “அவன் என் அண்ணன்..” என்று அவள் கேட்காது அவள் முக பாவனையை பார்த்தே அவளிடம் சொன்னான்..
இவன் நம்மையே தான் பார்த்துக் கொண்டு இருக்கிறானா..? என்று நினைத்துக் கொண்டே வீட்டை சுற்றி பார்ப்பது போல் பார்வையை சுழல விட்ட மான்சி, எதார்த்தமாக பார்ப்பது போல் சர்வேஷ்வரனை பார்த்தாள்..
பார்த்ததில் தெரிந்தது.. அவன் அவள் பக்கமே திரும்பி அவளை கவனித்துக் கொண்டு இருப்பது.. தான் பார்ப்பதை அவன் பார்த்து விட்ட பின், இப்போது நான் பார்ப்பதா…? இல்லை முகத்தை திருப்பி கொள்ள வேண்டுமா..? என்று அவள் யோசனை செய்துக் கொண்டு இருக்கும் போதே…
சர்வேஷ்வரன்… “ இப்போ சொல்வது தான் மான்சி.. எனக்கு இந்த திருட்டு தனம் எல்லாம் பிடிக்காது…” என்ற அவனின் பேச்சில், இப்போ ஏன் இதை என் கிட்ட சொல்றான் என்பது போல் இப்போது அவனை பார்ப்பதா..? இல்லை வேண்டாமா..? என்ற தயக்கம் எல்லாம் இல்லாது அவனை யோசனையுடன் நேருக்கு நேர் அவன் முகம் பார்த்தாள்..
“ இப்போ வீட்டை சுற்றி பார்ப்பது போல் என்னை பார்த்தியே அதை தான் சொல்றேன்… நான் உன் கணவன்… என்னை பார்க்க நினைத்தால், திரும்பி என்னை நேருக்கு நேர் பார்..
பேச நினைத்தால் பேசு.. ஏதாவது கேட்க நினைத்தால் கேள்.. புரியுதா…? எனக்கு எது என்றாலும் நேர்மை வேண்டும் புரியுதா…?” என்று சொன்னவன்.. அதோடு விட்டு இருந்தால் கூட பரவாயில்லையா இருந்து இருக்கும்..
ஆனால் சர்வேஷ்வரன் அதோடு விடாது… “ உன் பிறப்பு எப்படியோ… ஆனால் இனி..” என்று அவன் பேச்சை முடிக்க விடாத மான்சி..
“ பிறப்பு என்றால் எதை சொல்றிங்க நீங்க… என் பிறப்புக்கு காரணமானவரையா..? இல்லை எனக்கு உயிர் கொடுத்தவங்களையா…? “ என்று சர்வேஷ்வரன் இப்போது சொன்ன எது என்றால் என்னை நேராக பார்க்கலாம்…
எது என்றாலும் என்னிடம் பேசலாம். எதை என்றாலும் என்னிடம் கேட்கலாம்..” என்று அனைத்தையுமே அவன் சொன்ன மறு நொடி அவனிடம் செய்து காட்டிக் கொண்டு இருந்தாள் மான்சி..
மான்சியின் பேச்சில்… அதாவது அவனை பார்த்து கேட்ட கேள்வியில் கேட்ட விதத்தில் சர்வேஷ்வரன் முதலில் அதிர்ந்தாலும்.. பின் அவள் கேள்வி கேட்ட தோரணையில் அவளை ரசித்தே..
“ இரண்டையும் தான்…” என்று சொன்னவனுக்கு பதிலாக மான்சி…
“ என் பிறப்புக்கு காரணமானவர் இப்போது இல்லை.. அதாவது என் அப்பா கணேஷ் பிரபாகர் இப்போது உயிரோடு இல்லை..
நான் பிறக்கும் போது என் அம்மா அவங்க மனைவியா இருந்தாங்க… என் தம்பி பிறக்கும் போதும்… அதனால் தந்தை வழியில் என் பிறப்பு சரியானது தான்..
தாய் வழி எனும் போது, நீங்க எல்லோர் முன்னும் மண்டபத்தின் வாசலி வைத்து சொன்னிங்களே… என் அம்மா சின்ன வயது கிடையாது கட்டாயப்படுத்த என்று.. அதே போல் தான் அவரும்..” என்று சூர்ய நாரயணன் நின்றுக் கொண்டு இருந்த இடத்தை கை காட்டி சொன்ன மான்சி…
“ அப்படி பார்த்தால் என் பிறப்போடு அவருக்கு பிறந்த பிறப்பும் தானே அதில் அடக்கம்..” என்ற மான்சியின் பேச்சுக்கு, சர்வேஷ்வரன் பதில் சொல்ல முடியாது திகைத்து போய் தான் அவளை பார்த்தான்..
எத்தனையோ தொழில் முறை பேச்சுக்களை சாதரணமாக பேசி விட்டு வருபவன்.. இன்று ஒரு சிறு பெண்ணின் உண்மை பேச்சுக்கு அவனால் பதில் கொடுக்க முடியவில்லை…
சர்வேஷ்வரனின் மெளனம் மான்சியை இன்னும் பேச தூண்டியது..
“ கால் கேல்.. அதாவது விபாச்சாரிக்கு குழந்தை பிறந்தால் கூட, அதன் தந்தை ஒருவனாக தான் இருக்க முடியும்…” என்ற அவள் தொடர் பேச்சில், சர்வேஷ்வரன் இன்னும் அதிர்ந்து போய் மான்சியை பார்த்தானே தவிர… அவளுக்கு பதில் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லாது, தன் மனைவியின் உண்மை தன்மையான பேச்சை அவன் மனது உள்வாங்கிக் கொண்டு இருக்கும் போதே..
தன்னை காட்டி காட்டி மான்சி சர்வேஷ்வரனிடம் ஏதோ பேசிக் கொண்டு இருப்பதை, கவனித்த சூர்ய நாரயணன் பதறி அவர்கள் அருகில் விரைந்து வந்தார்…