Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Mogathin Monam....டீசர்

  • Thread Author
அத்தியாயம்….22…2

மனைவி தன் தலை கோதிக் கொண்டு இருந்தாலுமே, அவளின் கவனம் தன்னிடம் இல்லை.. அதோடு எதையோ யோசித்து கொன்டு இருப்பது போல அவளின் முக பாவனை காட்டியதை புரிந்து கொண்ட தீக்க்ஷயன்…

படுத்து கொண்டு இருந்தவன் சட்டென்று எழுந்து அமர்ந்தவன் வசியை பார்த்தான்.. கணவன் எழுந்ததில் வர்ஷினியுமே தன் யோசனையில் இருந்து வெளி வந்தவள் தன் கணவனை பார்க்க.. இருவரின் பார்வையுமே சந்திக் கொண்டது..

வர்ஷினிக்கு கணவனின் முகத்தில் நிம்மதி மகிழ்ச்சி என்று கலந்து பார்த்தாள் என்றால், தீக்ஷயன் குழம்பி போனவளான முகத்தை தான் பார்த்தது..

“ என்ன வசி.. என்ன பிரச்சனை…?” என்று பதட்டமாக தான் தீக்ஷயன் வர்ஷிபியிடம் கேட்டான்..

முன் எல்லாம் தீக்ஷயன் தான் மனைவியை நாம் சரியாக வைத்து கொள்ள வில்லையோ என்ற யோசனையில் அவன் முகம் குழப்பத்தை காட்டும்..

ஆனால் வர்ஷினி முகத்தில் ஸ்ப்படி ஒரு தெளிவை தான் அவன் பார்த்து இருக்கிறான்.. அப்படி குழம்பி ஏதோ யோசனையாக இருந்தாலுமே தன்னிடம் சொல்லி விடுபவள்.. இப்போது ஏன் தூங்காது என்று நினைத்தவனுக்கு அத்தனை பதட்டம்..

உடம்பு சரியில்லையோ என்று நினைத்து..

“ஒன்னும் இல்ல,..” என்று வர்ஷினி சொல்லியுமே… தீக்க்ஷயன்…

“ இல்ல சொல்.. ஏதோ இருக்கு… ஏதோ இருக்கு…” என்று விடாது கேட்டுக் கொண்டு இருந்தான்..

கணவனிடம் அவள் என்ன என்று சொல்லுவாள்.. இல்ல உங்க அம்மா நான் கன்சீவா இருப்பதில் சந்தோஷம் கிடையாது.. உங்க கிட்ட சந்தோஷமா இருப்பது போல நடிக்கிறாங்க என்று சொல்லவா முடியும்..

ஆம் இத்தனை யோசித்ததில் வர்ஷினிக்கு இது தான் தோன்றியது.. ஆனாலுமே இது தான் என்று உறுதியாக மாமியார் வார்த்தையாக சொல்லாத போது அவள் என்ன என்று சொல்லுவாள்..

கணவனுக்கு தன்னை பிடிக்கும் தான்.. ஆனாலுமே சரஸ்வதி அம்மா. ஒரு மகன் அம்மாவையும் நம்ப தானே செய்வார்கள்.

அதுவும் இது வரை தன்னை பிடிக்கவில்லை என்பதை அனைத்தையும் நேரிடையாக காட்டி தான் பழக்கது. இது போல மறைத்து எல்லாம் பழக்கம் இல்லாத போது தீக்ஷயன் நம்புவானா..

வர்ஷினிக்குமே சரஸ்வதி தன்னை திட்டி பேசும் போதும் கரித்து கொட்டும் போது கூட அவளின் மனது பயப்படவில்லை.. ஆனால் மாமியாரின் இந்த நடிப்பில் கொஞ்சம் பயம்.. ஏதோ பெரியதாக வரப்போகிறதோ என்று நினைத்து.

எது என்று தெரியாத போது என்ன என்று சொல்லுவாள்..

அதனால்… “ இல்ல தீரா இல்லாது ஒரு மாதிரி இருக்கு.. அதுவும் இங்கு வந்ததில் இருந்து மேல இருக்கும் நம்ம ரூமில் தூங்கியதில் இந்த ரூமில் தூக்கம் வரவில்லை..”

வர்ஷினி சொன்னது இதுவும் ஒரு வகையில் உண்மை தான்.. இந்த அறையும் அவளுக்கு பிடிக்கவில்லை.. அதோடு திருமணம் ஆனதில் இருந்தே தீரா இருந்த பழக்கத்தில் இன்று இல்லாது இருக்கும் இந்த படுக்கையும் அவளுக்கு ஒரு மாதிரி வெறிச்சோடி இருப்பது போல் தான் தெரிந்தது..

“இதுக்கா முகத்தை இப்படி வைத்து இருப்ப.. கவலை படாதே இன்னும் கொஞ்சம் நாள் தான்…இன்னும் ஒரு குட்டி பேபி வந்து விடும்.. அப்போ இன்னுமே பெரிய பெட்டா வாங்கி மேல் ரூமில் போட்டுக்கலாம்..” என்று சொன்னவன்.

“இந்த நேரத்தில் ரொம்ப எல்லாம் யோசிக்கவும் கூடாது . கவலையும் பட கூடாது வசி… தூங்கு.. “ என்று சொன்னவனிடம்..

சரி என்றவள் தூங்கியும் போனாள்.. இன்று மாலையில் இருந்து அவளுக்கு கொஞ்சம் வாந்தி அதிகமாக தான் வர ஆரம்பித்து விட்டது.. அதோடு உணவை வாய் அருகில் கொண்டு சென்றாலே குமட்டிக் கொண்டு வர. சரி வர இரவில் சாப்பிடாது வேறு அவளுக்கு மிக சோர்வை கொடுத்ததில் உறங்கி விட்டாள்..

அடுத்த நாளுமே அவளாள் எழுந்து கொள்ள கூட முடியவில்லை.. எழுந்து அமர்ந்தாளே தலை சுற்றி போவது போலான நிலையில் இருந்தவளை பார்த்த தீக்ஷயன்..

“வேலைக்கு ஒன் வீக் லீவ் போடு வசி.. எப்படி வண்டி ஒட்டிட்டு போவ.. அதோட இந்த சமயத்தில் டூவீலர் ஓட்டுவது அவ்வள்வு சேப் இல்ல என்று தான் நினைக்கிறேன்.. அதோடு டாக்டரை பார்த்துட்டு வந்த பின். வேலைக்கி போகலாம்… இது போல வாமிட் செய்துட்டே இருந்தா வேலைக்கு போனாலுமே வேலை பார்க்க முடியுமா.?” என்று சொன்னவனின் பேச்சில்..

வர்ஷினியுமே… “ சரி..” என்று விட்டாள்..

தீராவை குளிக்க வைத்து சாப்படு கொடுத்து கட்டி கொடுத்து பள்ளிக்கு அனுப்பி வைத்தது கூட அன்று சரஸ்வதி அம்மா தான்..

சரஸ்வதியம்மா தீராவை கிளப்பி விட.. அன்று தீக்ஷயன் தான் தீராவை பள்ளியில் விட்டு அவனின் வேலைக்கு செல்லலாம் என்று தான் நினைத்து இருந்தான்..

மதியத்திற்க்கு மேல் அந்த பெண் ஆட்டோ ஓட்டுனரே வீட்டில் கொண்டு வந்து விட்டு விடுவதால், தீராவை பற்றி பிரச்சனை இல்லை..

தீக்க்ஷயன் குழந்தையை பள்ளியில் விட்ட பின் தன் வேலைக்கு செல்ல மனது இல்லாது திரும்பவும் வீடு வர. அப்போது தான் பாதி இட்லி சாப்பிட்டுக் கொண்டு இருந்த வர்ஷினி குடல் வெளியில் வந்து விழும் அளவுக்கு வாந்தி எடுத்து கொண்டு இருப்பதை பார்த்தவன் ஓடி சென்று இதமாக அவளின் தலையை பிடித்து கொண்டான்..

பின் வென்நீர் குடிக்க கொடுத்து வாய் கொப்பளிக்க வைத்த பின் சிறிது குடிக்கும் வைத்தவன்.. இது போல வெறும் வயிற்றில் இருந்தால் எப்படி ஏதாவது சாப்பிடு என்று ஒரு அரை மணி நேரம் சென்ற பின் மனைவியிடம் கேட்டான்..

வர்ஷினிக்குமே ஏதாவது சாப்பிட்டால் நன்றாக இருக்கும் போல் தான் இருந்தது.. ஆனாலுமே எந்த உணவை வாயின் அருகில் கொண்டு சென்றாலுமே குமட்டிக் கொண்டு வருவது போல் இருக்க

எந்த சுவையும் இல்லாது அரிசி கஞ்சி குடிக்க வேண்டும் போல இருக்க… அதை தீக்க்ஷயனிடமும் கூறினாள்..

அதை கேட்டுக் கொண்டு இருந்த சரஸ்வதியம்மா… உடனே சமையல் அறைக்கு சென்று வர்ஷினி சொன்னது பொல அரிசி கஞ்சி காய்த்து கொண்டு வந்து வைத்தார்..

‘கூடவே ஜீரணம் ஆக அதில் மிளகு சீரகம் கொஞ்சம் பொடி செய்து கஞ்சி காச்சிய சரஸ்வதியம்மா அதற்க்கு தொட்டு கொள வாய்க்கு தோதாக புதினா சட்னியும் கொண்டு வந்து கொடுக்க.

அது வர்ஷினியின் வாய்க்கு தோதாகவும் இருந்தது.. வாந்தியும் வரவில்லை.. அதனால் இரண்டு க்ளாஸ் புதினா சட்னியை வைத்து குடித்தும் முடித்தவளுக்கு இப்போது பரவாயில்லை போல் இருக்க..

அம்மாடி என்பது போல் ஷோபாவில் அமர்ந்து கொண்டான்.. கூட தீக்ஷயனுமே அமர்ந்து கொள்ள சரஸ்வதியம்மா அவர்களுக்கு இடையூறு கொடுக்காது தன் அறைக்கு சென்று விட்டாள்..

அப்போது தான் தீக்ஷயனுக்கு விடாது ஆபிசில் இருந்து அவனுக்கு அழைப்பு வந்த வண்ணம் இருந்தது,. ஒரு அவசர வேலை.. இவர்கள் முடித்த வேலையை சப்மிட் செய்யும் நாள் இன்று… மாலை தான்.. இருந்துமே இது போலான நேரத்தில் ஒரு ஐந்து நால் முன்பு இருந்தே.. அந்த டீம் ஒரு பர பரப்புடன் தான் காணப்படும்…

அப்படி இருக்கு இன்று மாலை சப்மிட் செய்ய வேண்டும் என்றால் கேட்கவும் வேண்டுமோ… அதனால் தான் தீக்ஷயனுக்கு இந்த தொடர் கை பேசி அழைப்பு..

இது வர்ஷினிக்கும் தெரியும் என்பதினால்.

“தீனா இப்போ நான் ஒகே தான்.. நீங்க ஆபிஸ் போயிட்டு வாங்க..” என்று சொல்ல.

தீக்ஷயனுக்குமே ஆபிஸ் போயே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தினால் மனதே இல்லாமல் தான் சென்றான்..

ஆனாலும் செல்லும் போது.. மனைவியிடம். “ சும்மா ரூமிலே இருக்காதே முன் பக்கம் இருக்கு தோட்டத்தில் உட்கார்ந்துட்டு இரு வசி… காத்தோட்டமா இருந்தா நல்லா இருக்கும்..” என்று சொல்ல..

வர்ஷினிக்குமே ஒரே அறையில் அடைந்து கொண்டு இருப்பது ஒரு மாதிரியாக இருந்ததினால் மெல்ல கணவன் கூடவே முன் பக்கம் தோட்டத்திற்க்கு சென்றவள்.. கணவனை வழி அனுப்பி வைத்து விட்டு ஒரு மரம் கீழ் இருக்கும் இருக்கையில் அமர்ந்து கொண்டாள்…

தன் கையில் கை பேசி இருந்தாலுமே அதை அவள் பார்க்கவில்லை..காரணம் கை பேசி திறந்தாளே இது போலான நேரத்தில் என்ன என்ன செய்யலாம் சாப்பிடலாம் செய்ய கூடாது சாப்பிட கூடாது என்று பார்க்க தான் அவள் மனது தூண்டியது.. ஆனால் ஏனோ மனது அது எல்லாம் படிக்க வேண்டாம் என்றும் மனது சொல்ல.. இரண்டுக்கும் நடுவில் கை பேசியை எடுத்து பார்ப்பது இன் வைப்பதுமாக இருந்தவளின் அருகில் ஒரு குரல்.

“நீ மாசமா இருக்கியா பாப்பா..?” என்று ..

யார் என்று நிமிர்ந்து பார்க்க. அங்கு மீனை விற்க்கும் வயதான அந்த பெண்மணி நின்று கொண்டு இருந்தார்..

அவரின் வயதை தொட்டு சட்டென்று எழுந்து கொள்ள பார்த்த வர்ஷினியிடம்.. அந்த பெண்மணி…

“வேண்டாம் பாப்பா எழுந்துக்காதே..” என்று சொன்ன அந்த மூத்த பெண் மணியின் பேச்சில் எழாது அமர்ந்து கொண்டவள்.. சிறிது தள்ளி அமர்ந்த வர்ஷினி..

“நீங்களும் உட்காருங்க பாட்டி…” என்று அவருக்கு இடம் கொடுக்க… வர்ஷினியின் கன்னம் தொட்டு வழித்து முத்தம் இட்ட அந்த பெண்மணி..

“ராசாத்தி நீ நல்லா இருப்படா. உன் இந்த மனசுக்கு யார் என்ன சூழ்ச்சி செய்தாலுமே நீ ரொம்ப ரொம்ப நல்லா இருப்ப..” என்று வாழ்த்திய அந்த மூத்த பெண்மணியின் கண்கள் கலங்க உதட்டில் புன்னமை பூக்க சொன்னவரையே என்ன இது என்பது போல் தான் வர்ஷினி புரியாது பார்த்தாள்..


 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
914
Why viji madam. Why. Why this kolai வெறி. இப்படி கொண்டு வந்து நிறுத்திட்டீங்களே. Full epi please
இது வரை தான் எழுதி இருக்கேன்.. இப்போது நான் டிபன் செய்ய போகணும்... எழுதியதை போட்டு விடலாம் என்று நல்ல மனசில் போட்டு விட்டேன்
 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
914
Viji ma, please innaikae koduthidunga. This is too much on Saraswathi’s part.

Tiffin saapittutu fulla potturunga Mam.
எழுதிய பின் தான் போட முடியும் பா.. எழுதிய வரை போட்டு விட்டேன்.. நான் இந்த அத்தியாயத்தில் நிறுத்த வேண்டிய இடத்திர்க்கு இன்னுமே நிறைய எழுத வேண்டும்... பா.. ப்ளீஸ் நாளை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ போட்டு விடுகிறேன் பா...நன்றி
 
Active member
Joined
Jun 23, 2024
Messages
71
@Vijayalakshmi சிஸ் காலை சாப்பாட்டை முடிச்சிட்டு சீக்கிரம் வாங்க 🙋🏻‍♀️ 🙋🏻‍♀️ 🙋🏻‍♀️ 🙋🏻‍♀️ 🙋🏻‍♀️
 
Top