Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Mogathin Monam-10

  • Thread Author
அத்தியாயம்…10

தன் அறைக்கு வந்த வர்ஷினிக்கு தான் அப்படி ஒரு அதிர்ச்சி… கை கால் எல்லாம் நடுங்கி விட்டது.. தூக்கி கொண்டு இருந்த குழந்தையை எங்கு கீழே போட்டு விடுவோமோ என்ற பயத்தில் முதலில் படுக்கையில் படுக்க வைத்த வர்ஷினி…

தொண்டை கவ்வி பிடிப்பது போல் இருக்கவும் தண்ணீரை குடித்தாள்.. அப்போதுமே ஒரு மாதிரியான மனநிலை தான் அவளுக்கு..

சுகன் தன்னிடம் தனியே பேச வேண்டும் என்று சொன்னதுமே தீக்க்ஷயனை பார்த்தவள்.. அவனுமே போகாது இருக்கவும் தான்..

ஒரு தைரியம் பெண்ணவளுக்கு.. அந்த தைரியம் கூட.. சுகன் என்ன சொல்வான் என்று தெரிந்தது தானே.. காதல் சொல்ல போகிறான்..

தான் மறுக்க போகிறோம்.. இதை இனியும் வளர விட அவளுக்குமே விருப்பம் கிடையாது தான்.. வீணாக ஒருவன் மனதில் நம்பிக்கை நாம் கொடுத்து விட கூடாது என்பதும் அவள் எண்ணம்..

அதோடு தீக்க்ஷயன் இந்த நிலையிலாவது தன் மனதை அவன் திறப்பான்.. என்பது அவள் ஆசை.. ஆம் பெண்ணவளுக்கும் புரிந்து தான் இருக்கிறது.. தீக்க்ஷயனுக்கு தன்னை பிடித்து இருக்கிறது என்பது..

ஒரு சமயம் ஏற்கனவே திருமணம் ஆனவன்.. ஒரு குழந்தைக்கு தந்தை என்று தன் காதலை சொல்ல தயங்குறானா என்று தீக்க்ஷயனின் மனநிலையை அப்போது வர்ஷினி சரியாக தான் கணித்தாள்..

அதனால் தான் கெளதம் தீக்க்ஷயன் முன் நிலையில் சுகன்..

“நான் உன்னை விரும்புகிறேன் வர்ஷி.. உன்னை நான் நல்லப்படியாக வைத்து கொள்வேன்.. உன் அப்பா அம்மா.” என்று மேல என்ன பேசி இருப்பானோ..

சுகன் நான் உன்னை விரும்புகிறேன் என்ற போதே வர்ஷி தீக்க்ஷயனை தான் அப்போதும் பார்த்தது.. அவனுமே தன்னை பார்ப்பதை பார்த்தவள். இதையும் புரிந்து கொண்டாள்..

அதாவது இவனாக தன் காதலை சொல்ல மாட்டான். ஒரு குழந்தைக்கு தந்தையாக தன் காதலை சொல்ல தயக்கம் என்று நினைத்து தான்.

அடுத்து சுகனை பேச விடாது யார் காதலை சொன்னால் என்ன என்று நினைத்து தன் மனதை சொல்லி விட்டாள்..

அதாவது.. “தீரா என்னை அம்மா என்ற அந்த அழைப்பை உண்மையாக்க தான் என் விருப்பம் ..” என்று..

சுகனுக்கு உடனே புரியவில்லை .. புரிந்த பின்.. “வாட் கம் அகையின்..” என்று கேட்க.. திரும்பவுமே வர்ஷினி தெள்ள தெளிவாக சொல்ல.

தீக்க்ஷயன் முகத்தில் அப்படி ஒரு திருப்தியை பார்த்தவள்.. பின் மீண்டுமே குழம்பிய முகத்தை பார்த்த பின் தான் வர்ஷினிக்கு தான் ஏதும் தவறாக பேசி விட்டோமோ என்று நினைத்தாள்..

அது என்ன என்று தெரியாததினாலும், தான் சொன்னதிற்க்கு எந்த ஒரு பதிலும் தீக்க்ஷயனிடம் இருந்து வராததினாலும். கெளதமும் சுபனும் தங்களையே மாறி மாறி பார்த்து கொண்டு இருந்தது வர்ஷினிக்கு ஒரு வித சங்கடத்தை கொடுத்தது.

அதனால் தான் அங்கு நிற்க முடியாது குழந்தையை தூக்கி கொண்டு தன் அறை நோக்கி வரும் போது தான், வர்ஷினிக்கு ஒன்று உரைத்தது..

அது தான் இவனுக்கு தம்பி முறையில் இருப்பவனுக்கு நிச்சயம் செய்து திருமணம் வரை வந்தவள்.. பாதி பேருக்கு மேல் பத்திரிக்கையும் வைத்து விட்ட நிலையில், தன் பெற்றோர் மட்டும் இறக்காமல் இருந்து இருந்தால், நிச்சயம் இவன் தம்பி மனைவியாக தான் நான் இருந்து இருப்பேன்..

ஒரு சமயம் இது நினைத்து தான் அவன் தயங்குகிறானா.? என்று அதுவாக இருக்குமோ என்று நினைத்த நொடி தான் அவளுக்கு கை கால் ஆட்டம் கண்டது..

தன் அறைக்கு வந்து குழந்தையை படுக்கையில் படுக்க வைத்த பின் தண்ணீர் குடித்துமே அந்த நடுக்கம் நிற்கவில்லை..

தலை மீது கை வைத்து அமர்ந்து விட்டாள்.. நான் என்ன காரியம் செய்து விட்டு வந்து இருக்கேன்.. கடவுளே கடவுளே என்று அந்த கடவுளை அத்தனை முறை அழைத்து விட்டாள்..

ஒரு குழந்தைக்கு தந்தை ஏற்கனவே திருமணன் ஆனவன்.. என்று தன்னை அவன் தாழ்வாக நினைக்கிறான்.. அதனால் தான் தன் காதலை சொல்ல தயங்குகிறான் என்று நினைத்த நான் ஏன் என் குறையை நினைக்கவில்லை..

அதுவும் அவன் தம்பியோடு நிச்சயம் செய்த பெண் நான்.. நாங்கள் திருமணத்திற்க்கு எங்கள் பக்கம் பத்திரிக்கை வைத்து அழைத்தது போல் தானே மாப்பிள்ளை வீட்டவர்களும் அழைத்து இருப்பார்கள்..

இப்போது அதே வீட்டில் தன் மனைவி என்று தன்னை அவன் தன்னை அவன் குடும்பத்திற்க்குள் புகுத்தி கொள்ள தயங்குகிறானோ.. நிச்சயத்திற்க்கு வந்த உறவுகள் தன்னை பார்த்து இருப்பார்கள்.

அதே குடும்பத்தில் அண்ணன் மனைவியாக.. எப்படி.. தீக்க்ஷயனுமே பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்குமே. நான் ஏன் இதை நினைக்கவில்லை நினைக்கவில்லை.. என்று நினைத்து தலையில் அடித்து கொண்ட போது தான் வர்ஷினி அறைக்கு தீக்க்ஷயன் முதல் முறையாக வந்தது.

ஆம் முதல் முறை தான். இது வரை வர்ஷினி தான் தீக்க்ஷயன் அறைக்கு சென்று இருக்கிறாள்.. குழந்தையை தூக்கி கொண்டு இங்கு வருபவள்.. பின் குழந்தையை விட என்று இவள் தான் தீக்க்ஷயன் அறைக்கு செல்வது.. அவன் வந்தது கிடையாது..

இப்போது தன் அறையில் அவனை பார்த்த வர்ஷினி இதையுமே நினைத்தாள்.. இவன் முதலில் இருந்தே இதை நினைத்து தான் தயங்கி உள்ளான்.. ஆனால் நான் நான்..

தன் அறையில் அவனை பார்த்தது பார்த்த படி அமர்ந்திருக்க..

தீக்க்ஷயன் வர்ஷினி அறைக்கு போகும் போது அவள் தலையில் குட்டி கொண்டு இருந்த காட்சியை பார்த்தப்படி தான் வந்தது.. அதோடு தன்னை பார்த்தும் திக் பிரம்மை போல அமர்ந்திருந்த வர்ஷினியையே பார்த்தவாறு.. அவள் எதிரில் சென்று அமர்ந்தான் தீக்க்ஷயன்..

வர்ஷினியின் பார்வையும் தீக்க்ஷயன் நகரும் இடம் நோக்கி நகர.. தீக்க்ஷயன் வர்ஷினியிடம் அனைத்தையும் பேச வேண்டும் என்று நினைத்து தான் வர்ஷினி அறைக்கு வந்தது.. ஆனால் வர்ஷினியின் பார்வையில் தீக்க்ஷயன தான் பேச வந்ததை மறந்தவனாக.

“வசி என் கிட்ட ஏதாது பேசனுமா.? சொல்லனுமா..?” அவளின் திக் பிரம்மையின் பார்வையில் அவசரப்பட்டு தன் காதலை சொல்லி விட்டோம் என்று நினைக்கிறாளோ என்று நினைத்தான்.

அவன் நினைத்தது சரி தான்.. அவசரப்பட்டு தான் சொல்லி இருக்க கூடாதோ என்று தான் வர்ஷினி இப்போது நினைக்கிறாள்..

ஆனால் அவன் நினைத்த காரணம் வேறாக இருக்க. தீக்க்ஷயன் நினைத்த காரணமோ.. தான் ஏற்கனவே திருமணம் ஆனவன்.. அந்த பெண்ணோடு வாழ்ந்து ஒரு குழந்தைக்கும் தந்தையானவனாய் மணந்தால், எதிர் நோக்கும் பிரச்சனையை நினைக்கிறாளோ என்று நினைத்து தான் அப்படி கேட்டது.

வர்ஷினியுமே. “சாரி சாரி தீனா.. நான் நான் உங்களை காதலித்தாலுமே நான் உங்க கிட்ட சொல்லி இருக்க கூடாது.. எப்படி எப்படி நம்ம காதல் மேரஜில் முடியும்.. அதை அதை நான் சுத்தமா நினைத்து கூட பார்க்கல பாரேன் தீனா.”

“நான் இத்தனை பட்டுமே எனக்கு இன்னுமே மெச்சூரிட்டி வரல போல. எப்படி எப்படி நம்ம மேர்ஜ் பாஸிபுல் ஆகும்.. நீங்க எப்படி எப்படி உங்க ஒய்ப் என்று உங்க ரிலேடீவ் கிட்ட இன்டிட்யூஸ் பண்ணுவீங்க. அதை விடுங்க முதல்ல உங்க அப்பா அம்மா கிட்ட போய்.. என்னை மேரஜ் செய்துக்க போறேன் என்று எப்படி சொல்லுவீங்க… சொல்ல முடியும். போன வருஷம் உங்க தம்பி..” என்று வர்ஷினி ஆரம்பிக்கும் போது தான்..

வர்ஷினி முதலில் பேச பேச தீக்க்ஷயனின் முகம் முதலில் சுண்டி தான் விட்டது. பின் கோபமாக நான் உங்களிடம் என் விருப்பத்தை சொல்லி இருக்க கூடாது நாம எப்படி மேரஜ் செய்துக்க முடியும்..? என்ற வர்ஷினியின் பேச்சில் தீக்க்ஷயனுக்கு அப்படி ஒரு கோபம் வந்தது..

ஏன் என்னை மேரஜ் செய்துக்க முடியாதாம்.. இவனுமே தன் முதல் திருமணம்.. நடந்ததை சொல்லி பின் தன்னை திருமணம் செய்து கொண்டால், அவள் சந்திக்கும் பிரச்சனைகளை எல்லாம் சொல்ல தான் வர்ஷினியின் அறைக்கு வந்தது.

ஆனால் அதையே வர்ஷினி சொன்ன போது… ஆசை காண்பித்து மோசம் செய்யும் நிலையில் தான் அவன் மனநிலை ஆகி விட்டது..

என்ன தான் தீக்க்ஷயன் தன் மனதிலும். ஏன் சற்று முன் கூட இங்கு வரும் முன் தன் நண்பன் கெளதமிடம்..

“தன்னை திருமணம் செய்தால் கண்டிப்பாக வசி வாழ்க்கை நல்லப்படியாக செல்லாது…” என்று சொன்னான் தான். ஆனால் அவன் மனதில் இருக்கும் வர்ஷினி மீதான அந்த ஆசை வர்ஷினியை திருமணம் செய்ய தானே விருப்பம் கொண்டது..

ஆனால் இப்போது வர்ஷினி இது போல பேசவும்.. ஓ அவசரப்பட்டு லவ் சொல்லி விட்டோம் என்று வருந்துகிறாள் போல என்று கோபத்தில் அவளை முறைத்து கொண்டு இருந்த போது தான் வர்ஷினி தன் சித்தி மகனோடான அந்த திருமணத்தை ஒட்டி நினைத்து தான் இப்படி பேசுகிறாள் என்று உணர்ந்த சமயம். அப்படி ஒரு ஆசுவாசம் தீக்க்ஷயனுக்கு..

அவனுமே அதை பற்றி நினைக்கவில்லை தான். ஆனால் அது எல்லாம் அவனுக்கு ஒரு விசயம் கிடையாது..

அதனால்.. தான் வர்ஷினி பேச்சை இடையிட்டு தடுத்து நிறுத்திய தீக்ஷயன்…

“நீ அந்த மேரஜ் நின்னதில் உனக்கு..” எனும் போது..

இப்போது வர்ஷினிக்கு கோபம்… “நான் அந்த எங்கேஜ்மெண்ட் ரிங் கழட்டி கொடுக்கும் போதே அந்த உறவை மொத்தமா கழட்டியது என்ற முடிவோடு தான் கழட்டியது.. அதோடு இன்னை வரை கூட அந்த மேரஜ் நின்றதில் எனக்கு துளி கூட வருத்தம் கிடையாது..” என்று விட்டாள்..

தீக்க்ஷயன் “பின் என்ன. அதை நினைத்து ஏன் இப்படி பேசுற.” இப்போதுமே தீக்க்ஷயன் குரலில் லேசாக கோபம் எட்டி பார்த்தது..

அவன் இத்தனை தடவை என்ன.? எத்தனை தடவை கூட. இந்த திருமணம் சரிப்பட்டு வருமா என்று நினைக்கலாம்..

ஆனால் அதை வர்ஷினி சொன்ன போது மட்டும் அவனால் அதை அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை… அதன் தொட்டு தான் இந்த கேள்வி..

இப்போது வர்ஷினிக்குமே வந்த கோபம் குறையாது தான்.. “பெண் ஆன நானே என் மனச சொன்ன போது கூட நீங்க ஒன்னும் சொல்லாம இருந்தா. வேறு என்ன நினைப்பதாம்..?” என்று கேட்டாள்..

அதற்க்கு தீக்க்ஷயன்.. “அது என்ன பெண் ஆன நானே என் காதலை சொன்னேன் என்று சொல்ற.. காதல் இருவருக்குமே பொது தானே.. இதுல ஆண் என்ன இருக்கு பெண் என்ன இருக்கு..?” என்று கேட்க.

வர்ஷினிக்கு அது எல்லாம் காதில் விழவில்லை.. தீக்க்ஷயனின் கேள்வியில் இருந்து அவன் தம்பியோடான அந்த நிச்சயம் பெரிது இல்லை போல பேசுகிறான்.. அப்போ பெரிதாக எதை நினைக்கிறான்..

அதை கேட்டு விட்டாள் பெண்ணவள்..

இத்தனை நேரம் கோபத்துடன் இருந்த முகம் இப்போது ஒரு வித சங்கடம் அவன் முகத்தில் குடி கொண்டது.

என்ன பிரச்சனை.. தான் முன் நினைத்த அவனுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து குழந்தை இருக்கிறது என்பதா..? அதை கேட்டும் விட்டாள்..

இந்த பேச்சு ஆரம்பித்தவுடன் வர்ஷினி முகத்தை பார்ப்பதை தவிர்த்தவன்.. இப்போது பார்த்தான்..

“உனக்கு பிரச்சனை இல்லையா வசி..?” என்று..

இதற்க்கு வர்ஷ்னியிடம் உடனே பதில் இல்லை.. தூங்கி கொண்டு இருந்த தீராவை பார்த்தவள் பின் மீண்டும் தீக்க்ஷயனை பார்த்தாள் பெண்ணவள்..

“சங்கடம் சங்கடம் இல்லை.. இது எல்லாம் கடந்தும் உங்களை எனக்கு பிடித்து இருக்கு தீனா. உங்களை பிடித்து இருக்கு என்றால், தீராவையும் தான் உள்ளடங்கும் என் விருப்பம்…” என்று விட்டாள்..

தன் விருப்பத்தை சொல்லி விட்டு தீக்க்ஷயன் முகத்தை பார்த்த வர்ஷினி இன்னுமே தீக்க்ஷயம் முகம் தெளிவாகாத போது.. இதை அனைத்தையும் தான்டி வேறு ஏதோ இருக்கோ என்று முதல் முறை.. தன் தனிப்பட்ட பிரச்சனை அவன் பிரச்சனையையும் தான்டி யோசித்தவள்..

அதை கேட்கவும் செய்தாள்.. பின் அவளே.. “எது என்றாலுமே தெளிவா சொன்னா தானே தீனா எனக்கு புரியும்.. நானே தனித்து எல்லாமே செய்வது இந்த ஒன் இயரா தான் தீனா. இந்த மேரஜ் இது ரொம்ப பெரிய டிசிஷன்.. இது எனக்கு நல்லாவே தெரியும்.. புரியவும் செய்யுது.. நானே யோசித்தேன் இன்னுமே டைம் எடுத்துக்கலாம் என்று.. ஆனா எத்தனை நேரம் எடுத்தாலுமே.. முடிவில் உங்களை தான் என் மனது காட்டும் எனும் போது.. ஏன் காலம் நேரம். அது தான் முடிவு எடுத்து உங்க கிட்ட சொன்னது தீனா..” என்றவளின் பேச்சு தீக்ஷயனுக்கு உணர்த்தியது.

அவளுமே அவள் விருப்பத்தை பற்றி நிறைய யோசித்து இருக்கிறாள் என்பது.. அதுவும் தனித்து எனும் போது கொஞ்சம் கடினமானது தான்.. இன்னுமே தன் மனதை சொல்லாது போக கூடாது என்பதை இது வரை கண்ணில் அவன் சின்ன சின்ன செய்கையில் காட்டிய அவன் விருப்பத்தை காதலை..

“எனக்குமே உன்னை ரொம்ப பிடிக்கும் வசி… என் பெண்ணுக்கு அம்மாவா என்று என் மனசு நினைக்கும் போது பவித்ராவோட நீ தான் என் மனசுல நிற்கிற.” என்ற பேச்சில் மனதில்.

ஓ தீரா அம்மா பெயர் பவித்ராவா.? என்று நினைக்கும் போது.

தீக்க்ஷயன் பேச ஆரம்பித்து விட்டு இருந்தான் தன் வாழ்க்கையில் நடந்ததை.. “தீரா அம்மா பெயர் பவித்ரா. என் சொந்த மாமா பெண் தான் பவித்ரா..” என்று தன் பேச்சை ஆரம்பித்தவன் பின் சிறிது நேரம் மெளனம் காத்தான்…

வர்ஷினியுமே அவனின் அந்த மெளனத்தை கலைக்கவில்லை.. சொல்வான் பேசுவான் என்று காத்திருந்து அவன் முகத்தையே பார்த்து கொண்டு இருந்தவள் கண்ணுக்கு தீக்க்ஷயனின் கலங்கிய முகமும் இறுகிய முகமும் மாறி மாறி தெரிய,..

பெண்ணவளின் மனது பெரியதாக அடிவாங்கியது என்னவோ உண்மை.. அவர் மனைவி பவித்ராவை மிகவும் விரும்பி இருக்கிறான் போல என்று நினைத்து..

அதனால் தான் அவளின் பெயரை சொன்னதும் அவர்களின் இறப்பு நியாபகத்தில் வந்து விட்டது போல என்று நினைத்தவளுக்கு,,

தன் எண்ணம் போகும் பாதையை நினைத்து தன்னையே நிந்தித்து கொண்டாள்.. என்ன நான் இப்படி நினைக்கிறேன்.. என்னை இப்போது விரும்புகிறான் என்றதுமே.. பழைய காதலின் சுவடு துணி கொண்டு துடைத்து விட வேண்டுமா..? அது முடியுமா.? அதுவும் அவர்களின் காதலின் சாட்சியாக தீரா கண் முன் இருக்கும் போது.. இது போலான என் எண்ணம் நல்லத்திற்க்கு கிடையாது..

நாளை திரும்பவும் இது போலான நிகழ்வுகள் வர கூடும்.. என் இது போலான எண்ணமும் நினைப்பும் தங்களின் வருங்கால வாழ்க்கைக்கு நல்லது இல்லை என்று வர்ஷினி நினைத்து கொண்டு இருக்க…

பின் அவனே மெளனத்தை கலைத்து அனைத்துமே சொன்னான்.. “ என் தங்கை சுப்ரியாவும் என் மாமா மகனை தான் திருமணம் செய்து கொண்டாள்.. அவள் காதலுக்காக சொந்த அண்ணன் வாழ்க்கையையே புதை குழியில் போனால் கூட பரவாயில்லை என்று நினைக்கும் அளவுக்கு அவள் அந்த ராஜஷை விரும்பி இருக்கிறாள்..” என்று தீக்க்ஷயன் சொல்லவும் தான்..

என்ன இது என்பது போல பார்த்தவள் தீக்க்ஷயன் மற்றது சொல்ல சொல்ல. அப்படி ஒரு அதிர்ச்சி அவளுக்கு..

அவள் அதிர்ச்சியில் தீக்ஷயனுக்கு ஆறுதல் அளிக்க கூட முடியாத நிலை தான் வர்ஷினிக்கு.. தன்னுடையதை விட தீக்க்ஷயனின் நிலை இன்னுமே மோசம் என்று தான் நினைத்தாள்..

யோசித்தாள் தான்.. எப்படி குழந்தையோடு வெளிநாட்டுக்கு தனியாக தீக்ஷயனின் குடும்பத்தினர் அனுப்பினார்கள் என்று…

ஒரு வேளை தீக்க்ஷயனின் இரண்டாம் திருமணம் தடைப்படும் காரணம் தான் முன்னவே அவளுக்கு தெரியுமே. அந்த பிரச்சனையில் தான் குழந்தையோடு இங்கு வந்து விட்டானோ என்று தான் நினைத்தாள்..

ஆனால் இப்படி இருக்கும் என்று அவள் துளியும் எதிர் பார்க்கவில்லை.. காரணம் மூன்று நான்கு முறை தீக்க்ஷயனின் அம்மாவை அவள் தான் பார்த்து இருக்கிறாளே…

நல்ல மாதிரியாக தான் நடந்து கொண்டது.. தீக்க்ஷயன் அண்ணி அண்ணன் எல்லாம் நிச்சயத்தின் போது தான் பார்த்தது.. பெரியதாக பேசவில்லை. அதனால் அவர்கள் பற்றி தனிப்பட்ட கருத்தும் அவள் மனதில் இல்லை..

இப்போதுமே இல்லை ஏன் என்றால் தீக்க்ஷயன் தன் முதல் திருமணம் தன் தங்கை என்று பேசினானே தவிர.. தன் அண்ணியை பற்றி இன்னும் சொல்லவில்லை…

காரணம் இன்னுமே அவனின் அண்ணியின் உண்மையான சுயரூபம் என்ன என்று அவனுக்கே தெரியவில்லை என்று தான் நினைக்கிறேன்..

அப்படி தெரிந்து புரிந்து இருந்தால், வர்ஷினியிடம் எச்சரிக்கை கொடுத்து இருப்பான்.. இல்லை என்றால் தனிக்குடுத்தனம் சென்று இருப்பானோ என்னவோ..

என்ன செய்வது வர்ஷினிக்கு திருமணத்தின் பின்னுமே அவள் திருமண வாழ்க்கையிலும் கூட பிரச்சனையை சந்திக்க வேண்டும் என்று எழுது இருக்கு போல. அதோடு தீக்க்ஷயன் முதல் திருமணத்தில் தான் மனைவியோடு சுகப்படவில்லை என்றால், இரண்டாம் திருமணம் செய்த பின்னுமே.. மனைவியோடு மகிழ்ச்சியோடு வாழ போராட வேண்டி இருக்கிறது என்று அவன் தலையில் எழுதி வைத்து இருக்கு போல.

தான் சொன்ன செய்தியில் வர்ஷினி பயந்து விட்டாள் போல என்று தீக்க்ஷயனே தன் மன வேதனையில் இருந்து வெளி வந்து அவளை பார்த்திருக்க. அவன் பார்வையில் இப்போது வர்ஷ்னியுமே கொஞ்சம் தெளிவுக்கு வந்தவளாக.

“பெரிய அத்தை ஒன்னுமே சொல்லலையா.” என்று கேட்டாள்..

பாவம் வர்ஷினியின் அந்த பெரிய அத்தை என்ற அழைப்பு யாரை சொல்கிறாள் என்பது தீக்ஷயனுக்கு புரியவில்லை.

அதனால் தான்.. தீக்ஷயன் வர்ஷினியிடம்.. “ உங்க பெரிய அத்தை என் கிட்ட என்ன சொல்லனும் வசி..?” என்று கேட்டது..

வர்ஷ்னிக்கு அப்போது தான் தன் பேச்சின் தப்பு அர்த்தம் மண்டைக்கு உரைத்தது போல.. இப்போது தீக்க்ஷயனின் கேள்விக்கு வர்ஷினியால் பதில் சொல்ல முடியவில்லை..

பின் என்ன என்று சொல்லுவாள்.. உன் சித்தி மகனான உன் தம்பிக்கு என்னை நிச்சயம் செய்த போது உன் சித்தியோடு உன் அம்மாவும் என் வீட்டிற்க்கு வந்தார்கள்..

வந்த உன் அம்மாவை நான் ஆன்ட்டி என்று அழைத்தான்.. அப்போ உன் அம்மா என் தங்கை உனக்கு மாமியார்ன்னா நான் உனக்கு பெரிய மாமியார்.. என் தங்கையை நீ அத்தை என்று தானே கூப்பிடுற. அதனால என்னை பெரிய அத்தை என்று கூப்பிடு என்று உங்க அம்மா தான் சொன்னார்கள் என்று சொல்லவா முடியும்..

மிகவும் தர்மசங்கடமான நிலை.. அவளுக்கு இதுவும் தெரிந்தது.. இது ஆரம்பம் தான் இன்னுமே நிறைய பார்க்க வேண்டி இருக்கும் என்று..

ஆம் அது உண்மையும் தான். தீக்க்ஷயனும் முதலில் வர்ஷ்னி பெரிய அத்தை என்று யார் என்பது புரியவில்லை தான். பின் வர்ஷினியின் தர்ம சங்கடமான முகத்தை பார்த்ததுமே புரிந்து கொண்டு விட்டான்..

அவனுமே வர்ஷினி நினைத்ததை தான் நினைத்தான்..

அதை வர்ஷினியிடம் சொல்லவும் செய்தான்..

“இது போல எல்லாத்துக்குமே அனிச்சமலர் போல கூம்பி விட்டால், நாளை நம்ம மேரஜ் லைப் கேள்வி குறியாக தான் நிற்கும் வசி… உனக்கு என்னை பிடிச்சி இருக்கு. எனக்கு உன்னை பிடிச்சி இருக்கு..

இதை தவிர்த்து எல்லாமே நமக்கு பாதகமா தான் நிற்க்குது.. முதல்ல நான் திருமணம் ஆனவன்..” என்று தீக்க்ஷயன் ஆரம்பிக்கும் போதே வர்ஷினி ..

“அதை விடுங்கலேன்.. தீனா… எனக்கு உங்களையும் சேர்த்து தீராவையுமே பிடித்து இருக்கு என்று தானே சொல்றேன்..” என்று வர்ஷினி ஒரு வித சலிப்போடு பேச..

“இல்ல வர்ஷி என் முதல் திருமண வாழ்க்கை எனக்கு தீராவை மட்டும் கொடுக்கல.. தீராவோடு மாமியார்…அவங்களும் உள் நுழைவாங்க… அதுவும் என் முதல் மனைவி வெளியில் இருந்து வந்த பெண் கிடையாது.. என் சொந்த மாமன் மகள்.. அதோட என் தங்கை கணவன் எனக்கு இருவழி உறவா மச்சான் என்ற உறவு வருது… நீ கேட்டியே உங்க அம்மா இதுக்கு ஒன்றும் சொல்ல வில்லையா என்று..

எப்படி சொல்லுவாங்க. என் முதல் மனைவி அவங்களுக்கு சொந்த அண்ணன் மகள்.. அதோடு இவங்க பெண்ணை அந்த வீட்டிற்க்கு கொடுத்து இருக்கு.

இது போல உடம்பு சரியில்லாத பெண்ணை என் அம்மா வெளியில் இருந்து எடுத்து இருந்தா கண்டிப்பா இது போல இருந்து இருக்க மாட்டாங்க. என் வாழ்க்கை தான் அவங்களுக்கு முதன்மையா நின்று இருக்கும்.. என்ன செய்யிறது இரட்டை பிணைந்த கயிறு போல என் தங்கை வாழ்க்கையுமே ஒட்டி இருப்பதால் அவங்க ஒன்னும் பேசல..”

“என் கிட்ட தான் அவங்களுமே பெண் இறக்கும் என்று தெரிந்து இருந்தால் கல்யாணம் செய்து இருப்பாங்கலா என்று என் கிட்ட அவங்க சார்பா நியாயம் பேசுறாங்க. என் கிட்ட அந்த மருத்துவ அறிக்கை இருக்கு. ஆனாலுமே நான் எல்லாத்தையுமே அமைதியா தான் கடக்க வேண்டிய சூழல். ஏன்னா அவள் எனக்கும் தங்கை தானே… அவள் எப்படியோ.. ஆனா நான்..” அடுத்து தீக்க்ஷயனால் பேச முடியவில்லை.

இது வரை தீக்ஷயனை பேச விட்டு அமைதியாக கேட்டு கொண்டு இருந்த வர்ஷினி மெல்ல அவன் அருகில் சென்று அமர்ந்தவள் அவப் தோள் மீது கை வைத்தாள்..

தன் தோள் மீது இருந்த வர்ஷினியின் கை மீது தன் கன்னத்தை தொடுவது போல வைத்து கொண்டவன்.

“இப்போவும் நான் சொல்றேன் வசி. என்னோடான இந்த திருமணத்தில் நீ ரொம்ப பிரச்சனையை பேஸ் பண்ண வேண்டி இருக்கும்..”

“நார்மல் மேரஜ் லைப் இது கிடையாது.. ஒரு சிலதை என்னால உன் கிட்ட பிராங்க சொல்ல முடியல வசி. இப்போ அதை பற்றி பேச எனக்கே ஒரு மாதிரி இருக்கு. ஏன்னா அது எல்லாம் மேரஜ் பின்னே பேசி இல்ல. அனுபவத்துல உனக்கு புரியும்.. புரியறப்ப என்னடா இது லைப் என்று நீ ஒரே ஒரு முறை நீ நினச்சா கூட.. நிஜமா நான் செத்துடுவேன் வசி.” என்று சொன்னவனின் வாயை தன் கை கொண்டு மூடிய வர்ஷினி…

“என்ன தீனா, என்ன பேச்சு இது..?” என்று கோபமான குரலில் கொஞ்சம் அதட்டலோடு கேட்டாள்..

“நான் உண்மையை பேசுறேன் வசி.. நம்ம இந்த கல்யாணம் நாளை பின்னே எந்த பிரச்சனை வந்தாலுமே, நாம பிரிய கூடாது.”

வர்ஷினியின் முறைப்பையும் மீறி தீக்க்ஷயன் தொடர்ந்து..

“ஏன்னா இது எனக்கு இரண்டாம் மேரஜ் வசி.. இதுலையும் நான் தோத்துட்டா…” என்று சொன்னவனிடம்..

“எனக்குமே உங்க போல நிலை தான் வசி.. நிச்சயம் செய்து ஊர் கூட்டி பத்திரிக்கை வைத்து என் கல்யாணம் நின்னு போயிடுச்சி.. அதுவும் என் அம்மா அப்பா இறந்து.. சாவுக்கு வந்தவங்களில் வாயில் இருந்து ஒரு சிலர்.. என் ராசி பத்தி கூட பேச்சு அடிப்பட்டுச்சி…”

“என் அண்ணன் அக்கா உங்களுக்கு தான் ஏற்கனவே தெரியுமே.. நானுமே இந்த திருமணத்தை தோல்வி ஆக விட கூடாது என்று தான் நினைக்கிறேன் தீனா.” என்றவளையே பார்த்து கொண்டு இருந்த வசியின் தீனா என்ன நினைத்தானோ..

அவள் உதட்டின் மீது மென்மையாக தன் உதட்டை ஒட்டி எடுத்தவன். மீண்டும் ஒரு ஆழ்ந்த முத்தம் அவனின் வசிக்கு கொடுக்க வசியின் தீனா நினைத்தான்..

ஆனால் அதை செயலில் காட்ட முடியாது அவர்களின் இளவரசி தீரா.. படுக்கையில் புரல்வது போல் இருக்க. குழந்தை எழுந்து விடுவாளோ என்று தீக்க்ஷயனுமே வர்ஷினியை விட்டு கொஞ்சம் விலகி கொண்டான்..

வர்ஷினியுமே குழந்தை எழாது இருக்க சட்டென்று குழந்தையின் அருகில் சென்றவள்.. அவள் தூங்க தீராவின் முதுகை தட்டி கொடுக்க கொடுக்க குழந்தையுமே சுகமாக தூங்கி போயின தான்..

ஆனால் தீக்ஷயனுக்கு தான் கை எட்டிய அவன் சுகம் தூரம் சென்றது போல. வர்ஷினிக்குமே… ஒரு சுகமான கனவு பாதியில் தூக்கத்தில் விழித்து கெட்டது போலான ஒரு நிலை.

இவர்களின் இந்த நிலை தான் இனியுமே இவர்கள் வாழ்நாள் முழுவதுமே தொடரும் என்று தெரியாது.. அப்போது ஒருவருக்கு ஒருவர் பார்த்து மன நிறைவுடன் சிரித்துக் கொண்டனர்

( இந்த கதையானது ஒரு சித்தி அன்னையாக மாறினால், அவள் எதிர் கொள்ளும் பிரச்சனை என்ன என்ன என்று சொல்வதோடு.. ஒரு சாதாரண பெண் திருமணம் செய்து கொண்டால் கிடைக்கும் எந்த ஒரு சுகமும் அவளுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் கிடைத்து விடாது என்று சொல்லும் கதை.. அதாவது சித்தி சித்தியாக இருந்தால், பிரச்சனை கிடையாது.. அவள் தான் அங்கு ராஜங்கம் செய்வாள்.. இது போல கதைகளை தான் நாம் படித்து இருக்கோம்.. ஆனால் இந்த கதை சித்தியாக இல்லாது அம்மாவாக இருந்தால் எதிர் கொள்ளும் பிரச்சனைகளும்.. இரண்டாம் மனைவியானாவளுக்கு அவளின் தனிப்பட்ட வாழ்க்கை எப்படி பாதிக்கும் என்பதை சொல்லும் கதை.. வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால், தாம்பத்தியம் கூட குழந்தை எழுந்து விட போகிறது என்று பயந்து பயந்து தான் நடக்கும். அதனால் அடுத்த அத்தியாயத்தில் திருமணத்தை முடித்து விட்டு.. இனி அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை பார்ப்போம்.. இல்லை இல்லை படிப்போம்)








 
Active member
Joined
Jun 23, 2024
Messages
71
இவங்க இரண்டு பேரும் மனசில் இருந்த தயக்கத்தை வெளிப்படையாக பேசி தெளிவு படுத்திக்கிட்டாங்க 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

இதே மாதிரி கல்யாணத்துக்கு பிறகும் எதுவா இருந்தாலும் மறைக்காமல் பேசிக்கிட்டா நல்லது 🤗 🤗 🤗 🤗

இவன் தங்கச்சி அண்ணி இதுங்க இரண்டும் தான் ரொம்ப மோசமான வில்லியாக தெரியுது 🧐 🧐 🧐 🧐 🧐
 
Last edited:
Active member
Joined
May 11, 2024
Messages
123
இனி தான் அவர்கள் வாழ்வில் பிரச்சனைகளை சந்திக்க வேண்டுமோ 🤔🤔🤔🌺🌺🌺
 
Active member
Joined
May 24, 2024
Messages
194
Athdlam samdlichukalam
Analum intha pisasunhdla oda vidanum
Theena happy ah irukanum
Atha seinga ji
 
Active member
Joined
May 11, 2024
Messages
167
குடும்பத்துல இருக்கறவங்களை பத்தி இன்னும் முழுசா தெரிஞ்சுக்கலையோ
 
Active member
Joined
Jun 1, 2024
Messages
105
தங்கச்சி பத்தி சொன்னவன் அண்ணியை விட்டுட்டான் முக்கியமா இவங்க கூட ஒரே வீட்ல இருக்க போறது அவங்க தானே..... இனி வர்ஷினி பார்த்து எல்லாரையும் புரிஞ்சுப்பா...... அதுக்குள்ள எவ்வளவு கஷ்டம் படணுமோ....
 
Top