அத்தியாயம்---15
வர்ஷினிக்கு ஒரு வாரமாக இருந்த அந்த மனதின் சோர்வு இன்று ஓடி எங்கோ மறைந்து போய் ஒளிந்து கொண்டது என்பது போன்று இன்று பளிச் என்று தான் தன் அலுவலகத்திற்க்கு சென்றாள்..
வெவ்வேறு மாநிலத்தில் இருந்து வந்த போதுமே ஒரு கம்பெனி தங்கும் இடம் ஒன்று என்று அந்த ஒற்றுமை ஆண் பெண் பதவி என்ற அந்த வித வேறு பாடும் காட்டாது தான் அங்கு இருந்தவர்கள் பழகினார்கள்.. ஒரு சமயம் இந்த ஒற்றுமை வேற்று நாட்டில் நாம் இருக்கிறோம் என்றதினால் வந்த ஒற்றுமையாக கூட இருக்கலாம்..
ஆனால் பகை பாராட்டாது தான் அங்கு வேலை செய்தனர்.. வர்ஷினியை மனம் விட்டு சிரித்து அந்த அலுவலகத்தில் இருக்கும் யாரும் பார்த்தது கிடையாது.. எப்போதுமே அமைதியான பெண்ணாக தான் அனைவருக்கும் காட்சி தந்தாள்..
ஆனால் அவள் முன் எப்படி இருந்தாள் என்பதை திவ்யா இன்னும் சிலர் சொல்லி தெரிந்து கொண்டனர்.. மேலும் அவளின் பெற்றோர்கள் இறந்தது என்று தெரிந்ததில் இருந்து வர்ஷினியிடம் அனைவருமே கொஞ்சம் அனுசரணையாக தான் நடந்து கொள்வர்..
ஒரு வாரமாக.. அதாவது தீக்க்ஷயன் இந்தியா சென்ற இந்த ஒரு வாரமாக வர்ஷினியின் முகம் இன்னுமே சோர்ந்தது போல் தான் தெரிந்தது..
கெளதமுக்கு அதன் காரணம் தெரியும்.. ஆனால் மற்றவர்களுக்கு தெரியாது என்பதினால்,
“என்ன வர்ஷி உடம்பு சரியில்லையா.? அதனால் தான் இன்னுமே இங்கு வேலை செய்ய விசா இருந்த போதும் இந்தியாவுக்கு போக போறியா.?” என்று கேட்டதற்க்கு.
“அது எல்லாம் ஒன்னும் இல்லை .” என்று மட்டும் சொல்லி விட்டாள்.
அன்று சுகன் பிறந்த நாள் அன்று அனைவரும் இருக்க தானே வர்ஷினியிடம் தனியாக பேச வேண்டும் என்று சொன்னது.
அனைவரும் சென்ற பின் தானே அன்று கெளதம் தீக்க்ஷயன் முன் நிலையில் சுகன் வர்ஷினியிடம் தன் காதலை சொன்னது.
தெரியும் காதல் சொல்ல தான் தனியே நிற்க வைக்கிறான் என்று புரிந்து தான் நாசுக்காக சென்றது.
பின் வர்ஷினி சாதாரணமாக ஏன் இன்னும் கேட்டால் முன்பை விட முகத்தில் கொஞ்சம் மகிழ்ச்சி தெரிவது போல இருக்கவும்.. ஓ ஓ என்று விட்டனர்..
என்ன தான் ஒரே இடத்தில் வேலை தங்கள் என்று இருந்தாலுமே, மற்றவர்களின் தனிப்பட்ட விசயத்தில், தலையிடுவது நாகரிகம் கிடையாது என்பதினால் ஒன்றும் கேட்கவில்லை..
ஆனால் வர்ஷினி கடந்த இந்த ஒரு வாரமாக ஒரு மாதிரி இருப்பது திடிர் என்ற இந்தியாவுக்கு திரும்புவது என்றதில் சுகன் ஏதாவது பிரச்சனை கொடுக்கிறானா என்று நேற்று தான் வர்ஷினியிடம் மற்றவர்கள் கேட்டது..
பாவம் சுகனும் அங்கு தான் இருந்தான்..
“அய்யோ அப்படி எல்லாம் இல்ல.. இது இது வேறு..” என்று தயங்கி நிறுத்தியவள் பின் எப்படி இருந்தாலுமே மற்றவர்களுக்கு தெரிய தானே போகிறது என்றதில்..
“நானும் தீனாவும் நெக்ஸ்ட் வீக் மேரஜ் செய்துக்க போறோம்..” என்று சொல்லி விட்டாள்..
பின் இந்த ஒரு வாரம் தீனா இல்லாதது தான் நான் நானாக இல்லை என்றா சொல்ல முடியும்..?
பாவம் வர்ஷினி சொன்ன தீனா யார் என்று புரியாது..
முதலில் அனைவரும் மகிழ்ச்சியுடன் வர்ஷினிக்கு வாழ்த்து சொன்னார்கள்.. அதில் சுகனுமே அடக்கம் தான்.. அவனுமே முதலில் அதிர்ந்தான் தான். பின் பிக்கல் பிடுங்களில் மாட்டிக் கொள்ளனும் என்று உன் தலையில் எழுதி இருந்தால் நான் என்ன செய்ய முடியும் என்பது போல என் தகுதிக்கு இன்னுமே அழகான பெண் கிடைப்பாள் என்று மறந்து விட்டான்..
அதனால் உன் நிராகரிப்பு என்னை பாதிக்கவில்லை என்பது போல் தான் வர்ஷினியிடம் முன் போலவே பேசினான்.. இதோ வாழ்த்தவும் செய்தான்..
பின் தான் அனைவரும் தீனா என்ன செய்யிறார் உன் சொந்தமா இல்ல..” என்று இழுக்கும் போதே.
கெளதம்.. “ ஏன்டாப்பா நம்ம தீக்க்ஷயனை தான் மேடம் செல்லமா தீனா என்று கூப்பிடுவாங்க..” என்றதில் அனைவருக்குமே அதிர்ச்சி தான்..
இருந்துமே சந்தோஷம் சந்தோஷம் என்று தான் சொன்னது.
தீக்க்ஷயன் திறமையானவன் தான்.. அழகன் தான்.. ஆனால் ஒரு குழந்தைக்கு தந்தை எனும் போது எப்படி இந்த பெண் அவனை திருமணம் செய்ய சம்மதித்தாள் என்பது தான் அவர்கள் எண்ணமாக இருந்தது.. ஆனால் எதுவும் கேட்டு கொள்ளவில்லை..
பின் அனைவரும் ஒன்று சேர்ந்து.. “ எங்களுக்கு பார்ட்டி வைக்கனும்..” என்று கிண்டல் செய்ய..
கெளதம் ..”அதை நான் தருகிறேன்..” என்று விட்டான்.. அதை நேற்று இரவு கொடுத்தும் விட்டான்..
இதோ இன்று முகத்தில் ஒரு நிம்மதி மின்ன வந்த வர்ஷினியிடம் மீண்டும் ஒரு கலாட்டா.
“மேடம் இந்தியாவுக்கு போறதினால் சந்தோஷமா இல்ல அவங்க தீனாவை பார்க்க போறதினால் மகிழ்ச்சியா..?” என்று கேட்டு கிண்டல் செய்ய..
வர்ஷினி எப்போதுமே எந்த கிண்டலிலும் கலந்து கொள்ளாது அமைதியாக கடந்து விடுபவள்..
இதற்க்கு மட்டும்.. “இரண்டும் இல்லை தீராவை பார்க்க போகிறேன்.. அதனால்..” என்று வெளியில் சொன்னாலுமே, அவள் மனது அறிந்த ரகசியம்.. தீராவோடு தீக்க்ஷயனையுமே அவள் இந்த ஒரு வாரத்தில் மிகவும் மிஸ் செய்தாள் என்று தான் சொல்ல வேண்டும்…
அவள் மனமே அவ்வளவுக்கா என் மனம் அவனுக்கு அடிமையாகி விட்டது என்று கேட்கும் அளவுக்கு அவள் மனம் அவனை தேடியது..
வர்ஷினி தீராவையும் தேடுவது உண்மை தான்.. ஆனால் அதை சொன்னதில் மற்றவர்கள் ஓ என்று விட்டனர்.
ஆனால் தனிமையில் திவ்யா மட்டும்.. “ நீ நல்லா யோசித்து தான் இந்த மேரஜ் முடிவை எடுத்தியா வர்ஷி… பின்னாடி நீ யோசிக்கும் படியோ… ஏன் இந்த மேரஜை செய்து கொண்டோம் என்று நினைக்க கூடாது வர்ஷி..” என்று நல்ல தோழியாக வர்ஷினியின் எதிர் கால வாழ்க்கையில் அக்கறை கொண்டவளாக இதை கேட்டாள்..
வர்ஷினி.. “ஏன் வித்யா இப்படி கேட்கிற…? உனக்குமே தீனாவை பத்தி தெரியும் தானே… அவரை மேரஜ் செய்வதால் நான் ஏன் அப்படி நினைக்க போறேன் வித்யா.?” என்று கேட்டவளிடம்..
“நீ இதை புரிந்து தான் கேட்கிறியா என்று எனக்கு தெரியல வர்ஷி.. கணவன் மனைவி உறவுக்குள் யாரும் உள்ள வர கூடாது.. முக்கியமா பெட் ரூமுக்குள்.. ஆனா நீ தேர்ந்தெடுத்து இருக்கும் இந்த வாழ்க்கையில், ஏற்கனவே ஒரு குழந்தை அந்த அறையில் இருக்கு, இதுல நீ..” எனும் போது..
வர்ஷினி சிரித்து விட்டாள்.. “கணவன் மனைவி கணவன் மனைவியா மட்டுமே காலம் முழுவதுமே இருப்பது இல்ல வித்யா. நாளை பின்ன பெற்றோர்கள் ஆவாங்க.. அப்போ அந்த குழந்தையை நாம எங்கு கொண்டு போய் விடுறோம்.” என்று கேட்டவள்..
“ப்ளீஸ் வித்யா.. இதை பத்தி அதுவும் தீராவை வைத்து இந்த மேரஜ் நான் செலக்ட் செய்வது தப்பு என்பது போல என் கிட்ட பேசாதே…” என்று சொன்னவளிடம் இதற்க்கு மேல் என்ன சொல்வது என்று தெரியாது விட்டு விட்டாள்..
ஆனால் வர்ஷினி சொன்ன தீராவை வைத்து என் மேரஜ் லைப் ஹாப்பியா இருக்காது என்பது போல் பேசாதே என்று சொன்னவளிடம் தான் மற்றவர்கள் தீராவை வைத்து தான் அவளை கட்டம் கட்ட போகிறார்கள் என்பதுமே.. அவளை வைத்து தான் தினம் தினம் அவளுக்கு ஒரு பிரச்சனை காத்து கொண்டு இருக்கிறது என்பதும் தெரியாது..
அன்று மிகவும் மனது மகிழ்வுடனே வர்ஷினி ஜார்டனில் தன் அன்றைய கடைசி நாள் வேலை நாளை முடித்து விட்டு தன் இடத்திற்க்கு வந்தவளை தன் அறையில் தன்னை வர வேற்ற தீக்க்ஷயன் தீராவை பார்த்ததுமே தன்னை மறந்து அவர்கள் இருவரையும் ஒரு சேர கட்டி அணைத்து கொண்டாள்..
அவளின் அந்த அணைப்பு காமத்தில் சேராத பாசத்தில் மட்டுமே பொருந்தும் ஒரு அணைப்பு.. அதனால் தான் தீரா முன் நிலையில் தன் தீனாவை அவள் அணைத்தது..
தீக்க்ஷயனுக்குமே வர்ஷினியின் மன நிலை புரிந்ததினால், முதல் முறை அவனுமே லேசாக அவனுமே தன்னிடம் இன்னுமே நெருக்கி கொள்ள. எப்போதுமே இடை வெளி விட்டு இருக்கும் இருவரும் கட்டி கொண்டதை பார்த்த தீராவுமே..
“நானு நானு.” என்று இருவருக்கும் இடையில் நின்று கொண்டவள் இருவரும் தன்னை அணைப்பது போல நின்று கொண்டாள்..
பின் அனைவரும் வர. தீக்ஷயன் வந்து இருப்பதை ஒரு விதமாக கிண்டல் கலாட்டா செய்து தீராவை கொஞ்சி என்று விட்டு செல்ல கெளதம் மட்டும் தீக்ஷயனிடம் தனிமையில்.
“நீ ரொம்ப லக்கி டா. நீ கஷ்டப்பட்டது போதும் என்று தான் உனக்கு வர்னிஷியை உன் கண்ணில் காட்டி இருக்காரு அந்த கடவுள்…” என்ற பேச்சு புரியாது தீக்க்ஷயன் தன் நண்பன் கெளதமை பார்க்க.
சிரித்துக் கொண்டே.. “மேடம் இந்த ஒன் வீக்கா ஒரே சோக கீதம் தான் போ.” என்று கிண்டலாக பேச.
அது உண்மை தான் என்பது கொஞ்ச நேரம் முன் அவள் தனக்கு கொடுத்த அந்த அணைப்பு தான் தீக்ஷயனுக்கு சொல்லி விட்டதே..
ஆனால் அதை நண்பனிடம் சொல்லாது.. “ சும்மா சொல்லாதே.. மேடமுக்கு அவள் லட்டூவை மிஸ் செய்து இருப்பா.” என்று சொல்ல..
“லட்டூவையும் மிஸ் செய்தாங்க தான்.. ஆனா லட்டூவோட அவங்க தீனாவையுமே மிஸ் செய்தாங்க என்று தான் என் ஒய்ப் சொன்னாங்கப்பா..” என்று இவர்கள் விமான நிலையம் செல்லும் வரை இது போலான பேச்சுக்கள் மகிழ்ச்சியோடு தான் அந்த விமான பயணம் மூன்று பேருக்கும் அமைந்தது.
அதுவும் வர்ஷினி தன் முதல் விமான பயணத்தில் தான் இருந்த நிலை.. பயந்து அதை வெளியில் காட்டாது.. செய்த அந்த பயணத்திற்க்கும் துணையோடு தான் செய்யும் இந்த விமான பயணத்திற்க்கும் தான் எத்தனை வித்தியாசம்..
தீராவுமே தன் மழலை குரலில் பேச.. என்று இந்தியா வந்து இறங்கும் வரை நேரம் போனதே தெரியாது தான் வந்து சேர்ந்தனர்..
சென்னை விமான நிலையத்திற்க்கு வந்த பின் தான் வர்ஷினி தான் எங்கு தங்குவது என்ற நினைவே அவளுக்கு வந்தது.
இரண்டு வருடங்கள் ஜார்டன் இருப்பது போல் தானே வர்ஷினி அங்கு சென்றது… அதனால் தான் தங்கிய பெண்கள் விடுதியை காலி செய்த பின் தான் அவள் ஜார்டனுக்கு சென்றது.
பின் ஜார்டனில் தீக்ஷயனை தனக்கு பிடித்தது.. இதோ அந்த தன் பிடித்தம் திருமணம் வரை வந்து நிற்கும் என்று அவள் எதிர் பாராத நிகழ்வுகள் தானே.
தன் திருமணம் அதன் தொடர்பான சிந்தனைகள்.. கூடவே திடிர் என்று இந்தியா வருவதால் அங்கு முடிக்க வேண்டிய வேலைகள்..
தனக்கு பதிலாக சென்னையில் இருந்த வேறு ஒருவருக்கு ஜார்டனில் ஆன்லைன் மூலம் ட்ரையினிங்க இவள் கொடுக்க வேண்டிய வேலைகள் என்று தொடர் வேலைகள்..
அதோடு இடை இடையே தீக்க்ஷயன் திருமணத்திற்க்கு என்று தன்னை பேசியில் அழைத்து இது பிடித்தமா..? அது பிடித்தமா…? என்று கேட்டு வாங்கியது.. அது என்னவோ கொஞ்ச நேரம் தான்.. நேரம் எடுத்தது.
ஆனால் அது கொடுத்த தாக்கம்.. திருமணத்திற்க்கு புடவை நகைகள் என்ற பேச்சில் அது தொடர்வான நிகழ்வுகள் என்ற யோசனையில்.. முக்கியமான விசயமான இன்னும் திருமணத்திற்க்கு ஒரு வாரம் இருக்கிறது..
ஒரு வாரம் சென்ற பின் தான் நான் தீக்க்ஷயன் வீட்டிற்க்கு செல்ல முடியும்.. இப்போது எங்கு செல்வது..
நேற்று அவள் அண்ணன் அக்காவுக்கு அழைத்து இன்று இந்தியா வருவதை பற்றி தெரிவித்து விட்டாள் தான்.. தனக்கே இது பற்றிய யோசனை இல்லாத போது அவர்களுக்கு ஏன் இந்த யோசனை எல்லாம்.
இப்போது நான் எங்கு தங்குவது என்று புரியாது தீராவை கை பிடித்து நின்று கொண்டு இருந்த சமயம் அனைத்து லக்கேஜ்களையும் தள்ளிக் கொண்டு வந்த தீக்க்ஷயன்..
“என்ன வசி..” பெண்ணவளின் குழம்பிய முகத்தை பார்த்து கேட்டவனிடம் தானே பெண்ணவள் விசயம் சொல்ல முடியும்..
அதனால்.. “பக்கத்தில் சேப்பா இருக்கும் ஒரு நல்ல ஒட்டல் இருந்தா சொல்லுங்க தீனா. ஆனா ரொம்ப எல்லாம் காஸ்லி வேண்டாம் தீனா…”
அவளின் கவலையிலும். அதுவும் அவளின் அந்த கவலையிலும், அவளின் அந்த சிக்கனத்திலும் ஆணவன் சிரித்து விட்டான்..
“நான் ஒரு இடத்திற்க்கு கூட்டிட்டு போறேன்.. அங்கு வாடகை எல்லாம் கொடுக்க தேவையில்லை போதுமா.. சேப்பும்..” என்று சொன்னதுமே..
வர்ஷினி.. “மேரஜூக்கு முன் உங்க வீட்டிற்க்கு வருவது முறையா இருக்காது தீனா..” என்றதுமே..
“மேடம் கவலை படாதிங்க நான் இப்போ இருக்கும் வீட்டிற்க்கு போகல…” என்றதுமே.
வர்ஷினிக்கு அடுத்து தீக்க்ஷயனின் நண்பன் யாராவது வீட்டிற்க்கு அழைத்து செல்ல இருக்கிறானோ.. என்று..
“உங்க பிரண்ட் வீடு அங்கு எல்லாம் வேண்டாம் தீனா..” என மறுக்க....
இப்போதும் தீக்க்ஷயன் அவளை எங்கு தங்க வைக்கிறான் என்று எதுவும் சொல்லவில்லை….
ஆனால்.. “உனக்கு உரிமை இல்லாத இடத்தில் உன்னை நான் எப்போவும் தங்க வைக்க மாட்டேன்.. வசி.. என்னை நம்பி என் கூட வா…” என்று சொன்னவனை பார்த்து வர்ஷினி ஒரு மாதிரியான நமுட்டு சிரிப்பு சிரித்து வைத்தாள்..
அவளின் சிரிப்பு அவனுக்கு வேறு ஏதோ சொல்ல. “ என்ன ஒரு மாதிரி சிரிக்கிற.. என்ன என்னை உன் மனசுல கலாய்க்கிறியா. உங்க வயசு பொண்ணுங்க எல்லாம் இது போல தானே நினைப்பிங்க…” என்று சொன்னவனிடம்..
“இல்ல உங்களை நம்பி வாழ்க்கை முழுவதுமே நம்பி வரேன்.. இந்த ஏழு நாட்களுக்கு உங்களை நம்பி வர மாட்டேனா…?” என்று வர்ஷினி இதை கிண்டலாக தான் சொன்னது.
ஆனால் அந்த நம்பிக்கை என்று வர்ஷினி சொன்ன அந்த வார்த்தை தீக்ஷயனுக்கு இவள் நம்பிக்கை நான் காப்பாற்றுவேனா..? என்ற பயம் மனதில் எழுவதை அவனால் தடுக்க முடியவில்லை..
அதனால் அதற்க்கு ஒன்றும் சொல்லாது அமைதியாக அந்த விமான நிலையத்தில் இருக்கும் கார் நிறுத்துமிடத்திற்க்கு வந்து சேர்ந்தனர்.. அது வரையுமே அமைதி தான்...
இங்கு ஏன் என்பது போல் பார்த்தவளிடம்.. “ நம்ம கார் இங்கு நிறுத்தி வைத்து இருக்கேன் வசி..” என்று சொன்னவன் வர்ஷினி லக்கேஜை எல்லாம் கார் டிக்கியில் வைத்து விட்டு ஒட்டுனர் இருக்கையில் அமர. வர்ஷினி குழந்தையோடு முன் இருக்கையில் அமர்ந்து கொண்டாள்..
தீக்க்ஷயனுக்கு சற்று முன் இருந்த மனநிலை முற்றிலுமாக மாறி போய் இப்போது நிறைவான மன நிலையை கொடுத்தது வர்ஷினி தன் அருகில் தங்கள் குழந்தை வர்ஷினியின் மடியில் முதல் முறை குடும்பமாக வெளியில் செல்வது போன்று ஒரு நிறைவு தந்தது.. அந்த கார் பயணம்…
ஆனால் இவனுக்கு கொடுத்த அந்த நிறைவு தான் மற்றவர்களுக்கு வேறு மாதிரி தெரிந்தது..’அதோடு இந்த தொடர் பயணம் பெரியவனான இவன் உடம்பு தாங்கி கொள்ளும் சின்ன குழந்தையான தீரா மிகவும் சோர்ந்து போய் விட்டாள்.. இதுவே என்ன என்ன கிடைக்கும் என்று காத்து கொண்டு இருந்தவர்களுக்கு ஒரு காரணத்தை கையில் எடுத்து கொடுத்தது போல அமைந்தும் விட்டது..
இன்று மாலையே இன்னொரு பதிவு இருக்கு வாசகர்களே.. தினம் இரண்டு பதிவு கொடுக்க உள்ளேன் பா...