Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Mogathin Monam-17.1

  • Thread Author
அத்தியாயம்…17-1

ஸ்வேதா கேட்ட… “அந்த கம்பளி யாருடையது..?” என்ற கேள்விக்கு… தீக்க்ஷயன் மறைக்காது… “வசியுடையது தான்…” உண்மையை தான் சொன்னான்..

ஏன் என்றால் அவன் மனதில் கள்ளம் ஒன்றும் கிடையாது.. அதனால் மறைக்க தோன்றவில்லை..

ஆனாலுமே தீக்க்ஷயனுக்கு இன்னுமே அனுபவ அறிவு வேண்டும் போல…. ஒரு சிலர் என்ன தான் பட்டாலுமே, இனி கவனித்து செயல்பட வேண்டும் என்று தனக்குள் முடிவு எடுத்தாலுமே, அவர்களின் இயற்கை குணம் தான் பெரும் பாலும் முன் வந்து நின்று விடும்.. அதன் படி உண்மையை சொல்லி விட்டான்…

“இது என்ன தீக்க்ஷா.. இன்னுமே மேரஜ் ஆகல.. அதுக்குள்ள இந்த நேரம் வரை இரண்டு பேரும் வெளியில் சுத்திட்டு வரிங்க..” என்ற ஸ்வேதாவின் பேச்சுக்கு மகேந்திரன் இடம் பதில் வந்தது..

“குழந்தையுடன் தானே வெளியில் சென்றான்..” என்று..

இப்போதுமே தீக்ஷக்யனுக்கு எதுவும் தவறாக படவில்லை.. அதனால் தானோ என்னவோ..

“வெளியில் எல்லாம் போகல.. வசி ஜார்டனில் இருந்து வந்துட்டா.. இந்த ஒன் வீக் எங்கு தங்குவது…? அதனால் என் ப்ளாட் ஒன்று லாஸ்ட் வீக் தான் காலி ஆச்சி.. அங்கு தான் தங்க வைத்து இருக்கேன்..” என்று அதோடாவது விட்டு இருந்து இருக்கலாம்..

ஆனால் ஸ்வேதாவுக்கு அந்த கம்பளியை பற்றி விளக்கம் கொடுப்பதாக நினைத்து.. “ பேபி வாமிட் பண்ணிட்டா அது தான் அங்கு இருக்கும் டாக்டர் கிட்ட பேபியை காண்பித்தேன்.. காத்து பட கூடாது என்று தான் வசி கம்பளி போர்த்தி அனுப்பினா.” இது சொல்லும் போது கூட இது தவறாக மற்றவர்களின் பார்வைக்கு பட கூடும் என்று அவன் நினைக்கவில்லை.

குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்றதுமே இவ்வளவு நேரம் அமைதியாக இவர்களின் பேச்சை கவனித்து கொண்டு இருந்த சரஸ்வதி சட்டென்று தீக்க்ஷயன் அறைக்குள் சென்றார்.. குழந்தையின் உடல் நிலையை பார்க்க.

பார்த்தவர் மீண்டும் வந்த போது அவர் முகமே ஒரு மாதிரியாக தான் இருந்தது.. தட்சணா மூர்த்தி கூட. அதை கவனித்தவர்..

“என்ன சரசு குழந்தைக்கு இன்னும் காச்சல் அடிக்குதா…” என்று கேட்டார்..

இத்தனை பேச்சும் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்த தீக்க்ஷயன் கூட சட்டென்று எழுந்தவன்.. தன் அறையை நோக்கி அடி எடுத்து வைத்தவன்..

“நான் பார்த்தேன்னே ஒன்னும் இல்லையே..?” என்று சொன்னவனிடம்..

சரஸ்வதி.. “இப்போ ஒன்னும் இல்ல தான்..” என்றவரின் குரல் கொஞ்சம் அழுத்தம் மிகுந்து தான் கேட்டது..

தன் அறைக்கு போக பார்த்த தீக்க்ஷயன் கூட நின்று விட்டவன்… ஒன்றும் பேசாது தன் அன்னையை தான் பார்த்தான்..

தன்னை பார்த்து நின்று கொண்டு இருந்த மகனிடம் சரஸ்வது மீண்டும் அதே அழுத்தமான குரலில்..

“போன வாரம் தானே அங்கு இருந்து வந்தே.. திரும்பவும்.. இவ்வளவு தூரம் பயணம் குழந்தைக்கு தாங்குமா.?” என்று கேட்டார்.

சரி தான் அவர் கேட்பது நியாயமானது தான்.. அவனுமே இதையே தான் நினைத்தது… தனக்கு வசியை பார்க்க வேண்டும் என்ற ஆசையில், குழந்தையை அலைகழித்து விட்டோமே என்று.. வர்ஷினியுமே அதையே தானே சொன்னாள்..

ஆனால் இது என்ன இப்படியான ஒரு குரலில் கேட்பது.. முதல் முறை தன் அன்னையின் பேச்சு மாறுப்பாட்டை கவனித்தவன் அவன் ஒன்றும் பேசவில்லை..

ஆனால் சரஸ்வதி பேசினார்… “இந்த நாள் அந்த பெண் இங்கு வரா… என்று என் கிட்ட நீங்க சொல்லலே.. நான் போய் கூட்டிட்டு வர போறேன் என்றும் என் கிட்ட நீங்க சொல்லலே… அதே போல உன் ப்ளாட்ல தான் தங்க வைக்க போறேன்னும் என் கிட்ட நீங்க சொல்லலே…” என்ற அம்மாவின் பேச்சை தீக்க்ஷயன் கவனித்ததில் நீங்க நீங்க என்று வசியையுமே தன்னோடு இணை சேர்த்ததை தான்..

இப்போதுமே அவன் வாய் திறக்கவில்லை.. அவனின் அந்த அமைதி மகேந்திரனுக்கு தவறாக பட்டது போல..

“ம்மா விடுங்க. அவன் என்ன சின்ன பையனா.?” என்று சொன்னது தான்.

மீண்டும் சரஸ்வதி.. “ஆமா ஆமா சின்ன பையன் இல்ல தான்.. எல்லாம் ரொம்ப ரொம்ப வளர்ந்திட்டிங்க. அது தான் இந்த பெண் என்று சொன்ன போது நான் ஒன்னும் சொல்லலே.. நம்ம பையன் இனியாவது நல்லா இருக்கட்டும் என்று தான் நினைத்தேன்.. ஆனா அந்த பெண்.. என் கிட்ட இது வரை போனிலாவது பேசிச்சா.. இன்னைக்கு வரேன் என்றால் நானே போய் பார்த்து இருப்பேன்னே.. அதோட அது என்ன இப்போவே சொந்தம் கொண்டாடுவது போல அந்த வீட்டில்.” அன்னை பேச பேச தீக்ஷயனின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் கொண்டது..

தெரியும் வர்ஷினியை நிம்மதியாக இந்த வீட்டில் வாழ விட மாட்டார்கள் என்று தான் நினைத்தது.. ஆனா அது தன் அண்ணியிடம் இருந்தோ.. இல்லை பவித்ரா வீட்டு பக்கம் இருந்து தான் வரும் என்று அவன் எதிர் பார்த்தது..

ஆனால் தன் அம்மாவிடம் அவன் சிறிதும் எதிர் பார்க்கவில்லை.. அதுவும் வர்ஷினியை யாரோ போன்று அந்த பெண்.. அந்த பெண் என்று சொன்னது சுத்தமாக அவன் மனது ஏற்றுக் கொள்ளவில்லை..

அதுவும் அதோடு விடாது.. “வரும் முன்னவே முழந்தையை அலைகழித்து விட்டா..” என்று சொல்லி விட்டு சென்றவரையே பார்த்தவன் ஒன்றும் பேசாது குழந்தையிடம் போய் விட்டான்..

தட்சணா மூர்த்தி நடப்பதை பேசுவதை கவனித்தவன் தன் மனைவியிடம் தனித்து இருக்கும் போது.

“சரசு நீ பேசுவதும் சரி.. யோசிப்பதும் சரி சரியில்ல. யார் பேச்சை கேட்டுட்டு இது போல பேசுற என்று எனக்கு தெரியுது.. இது போல எடுப்பார் கை பிள்ளையா இருந்தா பாதிக்கப்பட போவது நம்ம குடும்பம் தான்.. என்னால அவ்வளவு தான் சொல்ல முடியும்.. எதற்க்கும் ஒரு அளவு இருக்கு சரசு.. இன்னைக்கு அமைதியா இருக்கும் சின்னவன் எப்போதுமே அமைதியா போவான் என்று எதிர் பார்க்காதே.. “

முதல் பேச்சுக்கு எல்லாம் அமைதியாக இருந்த சரஸ்வதியம்மா சின்னவன் இது போல அமைதியா இருக்க மாட்டான் என்று சொன்னதற்க்கு மட்டும்..

“அப்போ பொண்டாட்டி பேச்சை கேட்டுட்டு என்னை எதிர்த்து பேசுவான் என்று சொல்றிங்கலா நீங்க.?” என்று கேட்ட மனைவியை ஒரு பார்வை பார்த்த தட்சணா மூர்த்தி..

“நீ பட்டாத்தான் திருந்துவ..” என்று சொன்னவரின் பேச்சு தான் நாளை பலிக்க போகிறது என்று தெரியாது விட்டார்..

தன் அறைக்கு சென்ற தீக்ஷயனுக்கோ … மீண்டும் தப்பு செய்து விட்டோமோ.. என்ற எண்ணம் தான்.. வர்ஷினி சின்ன பெண்.. ஏற்கனவே பலதை அவள் எதிர் கொள்ள வேண்டும் என்று நினைத்து தான் தன் காதலை அவளிடம் சொல்லாது மறைத்தது..

ஆனால் தன் அம்மா கூட. அதுவும் வசி தன்னிடம் பேசவில்லை.. கேட்டாளே..

“பெரிய அத்த கிட்ட நான் பேசட்டுமா. அவங்க போன் நம்பரை தற்றிங்கலா.. இல்லை உங்க போன் அவங்க கிட்ட கொடுத்தா பேசுறேன்..” என்று.

இவன் தான் .. “இந்த பார்மால்ட்டி எல்லாம் வேண்டா, வசி.. அம்மா இதை எல்லாம் எதிர் பார்க்க மாட்டாங்க. அதுவும் இல்லாம இன்னுமே நாளு நாளில் நேரில் வந்தே உன் மாமியாரிடம் பேசிக்கோ..” என்று இவன் தான் சொன்னது..

இதை தன் அம்மாவிடம் சொன்னால், கண்டிப்பாக நான் வர்ஷினியை காப்பாற்ற சொல்வதாக தான் நினைப்பார்கள்..

அதோடு பேச ஆசை இருந்தால் தன்னிடம் சொல்லி இருக்கலாமே. நான் போன் செய்து பேச வைத்து இருப்பேனே..

இது என்ன அவளா தன்னிடம் பேசவில்லை.. பேசுகிறாளா..? இல்லையா..?” என்று நோட்டம் பார்ப்பது போல தானே இந்த செய்கை இருக்கு…இதுவும் அவனுக்கு தெரியும்.. அம்மாவே இது போல எல்லாம் யோசிக்க மாட்டார்கள் என்பது.. யார் ஏதாவது சொன்னாலுமே நம்பி விடுவது..

இது தானே முதலில் என் வாழ்க்கையில் நடந்தது.. முதலில் பவித்ரா வேண்டாம் என்று மறுத்தது.. பின் மாமா சொன்னாங்க டா… பவிக்கு உடம்பு சரி ஆச்சி என்று.. இப்போது என்ன இது புதியதாக.

அடுத்த பூகம்பம் பவித்ரா அம்மாவிடம் இருந்து வருமா.. இந்த நேரம் தான் வாங்கிய நகைகள் பற்றி அம்மா வழியாக தங்கைக்கு போய் இருக்கும்..

தங்கை கண்டிப்பாக அவள் அத்தையிடம் சொல்லி இருப்பாள்.. அப்படி தான் தீக்க்ஷயன் எதிர் பார்த்தது.. தன் அன்னையிடம் இருந்து இப்படியான எதிர் மறையை அவன் நினைத்து கூட பார்க்கவில்லை..

அவன் எதிர் பார்த்தது போல் தான் அவன் தங்கை சுப்ரியாவின் மாமியார் ..

மருமகளிடம்.. “வர போறவளுக்கு உன் அண்ணன்காரன் அறுபது பவுன் வாங்கி வைத்து இருக்கானேம்மா. என்னமோ முதல் கல்யாணம் போல பார்த்து பார்த்து வாங்கி இருக்கான்.. முதல் கல்யாணம் என் பொண்ணை பண்ணிக்கும் போதே. அப்படி ஒன்னும் ஆர்வமா எதிலும் ஈடுபட்டுக்கல. அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும் என்பது போல.. என் பொண்ணும் எப்போ போய் சேருவா இன்னொருத்தியை கூட்டிட்டு வர காத்திட்டு இருந்து இருக்கான்..” என்று வாய்க்கு வந்தது போல் தான் வசந்தி சுப்ரியாவிடம் பேசியதும்.

முன் போல் இருந்து இருந்தால் சுப்ரியாவும்.. அவள் மாமியாருக்கு ஏற்றது போல் தான் பேசி இருப்பாளோ என்னவோ.. அண்ணனின் வாழ்க்கை என்று கூட பாராது தன் காதலை மட்டுமே நினைத்து பவித்ராவின் உடல் நிலை பற்றி நன்கு தெரிந்துமே தன் அண்ணனுக்கு துரோகம் செய்தவளுக்கு சமிபகாலமாக தன் கணவன் தனக்கு துரோகம் செய்கிறானா என்ற சந்தேகம் அவளுக்கு..

சந்தேகம் மட்டும் தான் அவள் மனதில் இருக்கிறது.. ஆனால் இன்னுமே அது உறுதி பட ஆதாரம் அவளிடம் கிடைக்கவில்லை..

சுப்ரியாவுமே இந்த சந்தேகம் அவள் மனதில் சும்மா எல்லாம் தோன்றவில்லை.. ராஜேஷின் நடவடிக்கை சமீபகாலமாக சரியில்லாதது போன்று ஒரு எண்ணம்..

போன் வந்தால் தனித்து தனித்து பேசுவது.. குசு குசு என்று சுற்றும் முற்றும் பார்த்து கொண்டு தான் கணவனின் பேச்சு இருக்கும்..

அனைவரும் இருக்கும் போது அழைப்பு வந்தால் அதை உடனே கட் செய்வதும்.. பின் ஒரு மெசஜ் சட் சட் என்று அனுப்புவதுமாக இருக்கும் போது கூட சுப்ரியா கணவனை என்ன என்பது போல் பார்த்தாளே தவிர சந்தேகம் எல்லாம் படவில்லை.

ஆனால் ஒரு முறை கணவன் குளிக்கும் போது அவனின் கை பேசி இசைக்க. இவள் அந்த பேசியை எடுத்து பார்த்தாள்… அதில் ஷண்முகம் என்று பெயர் பதிவு செய்த எண்ணில் இருந்து அழைப்பு வர. அதை ஏற்றாள் சுப்ரியா..

ஆனால் அழைப்பில்.. “ராஷ்” என்ற அழைப்பில் பேசியதோ ஒரு பெண்ணின் குரலை தான் அவள் கேட்டது..

என்ன இது நான் படித்த பெயர் சரி தானா. பெண் பெயரை நாம் தான் மாற்றி படித்து விட்டோமா..? என்று கை பேசியில் பதிவு செய்து இருந்த பெயரை பார்க்கும் சமயத்தில் அவள் கையில் இருந்த போன் சட்டென்று பரிக்கப்பட்டது.

பரித்தது அவளின் கணவன் ராஜேஷ் தான்.. தன்னிடம் இருந்து அப்படி பரித்தது ஒரு அதிர்ச்சி என்றால், அவன் தன் முன் இருந்த கோலம் இன்னொரு அதிர்ச்சியாக இருந்தது.

சோப் தடவிய உடம்போடு இடையில் ஒரு டவலை மட்டுமே கட்டிக் கொண்டு குளியல் அறையில் இருந்து அறக்க பறக்க வந்து உள்ளான் என்பது அவன் வந்து நின்ற லட்சணம் சொன்னது.

அதோடு தன்னிடம் பேசியை பரித்தது மட்டும் அல்லாது தன்னை முறைத்து பார்த்தவன்.. பேசியை காதில் வைத்து கொண்டே தங்கள் அறையின் பால்கனி நோக்கி நடந்து கொண்டே..

“இந்த சமயம் எல்லாம் எனக்கு போன் போடாதே என்று சொல்லி இருக்கேன் தானே..” கணவன் பல்லை கடித்து கொண்டு குசு குசு என்று பேசினாலுமே, இந்த முறை ராஜேஷ் கோபத்தில் பேசியதால் சுப்ரியாவின் காதில் நன்றாகவே விழுந்தது..

அன்றில் இருந்து அவள் நிம்மதி அவளிடம் இருந்து விடைப்பெற்று சென்று விட்டது என்று தான் சொல்ல வேண்டும்..

முன் கணவன் தன்னிடம் நடந்து கொண்டது சமீபத்தில் தன்னிடம் நடந்து கொள்வதில் இருக்கும் மாற்றம்.. அதுவும் முதல் எல்லாம் இரவில் ஒரு நாள் கூட தன்னை நாடாது அவன் இருந்தது கிடையாது..

அந்த மூன்று நாட்களில் கூட.. ராஜேஷ் பரவாயில்லை என்று தான் மனைவியை நாடுவான்..

இவள் தான் அந்த நாள் மட்டும் வேண்டவே வேண்டாம் என்று மறுத்து விடுவது.. ஏன் குழந்தை உண்டாகி மூன்று மாதம் மட்டும் தான்.. அதுவும் கூட முற்றிலுமாக இல்லை என்று எல்லாம் சொல்லி விட முடியாது..

அது இவளுக்குமே பிடித்து இருந்ததால், அவளுமே கணவனுக்கு முழு ஒத்துழைப்பை கொடுத்தாள்..

குழந்தை பிறந்து மூன்று மாதம் தான் கணவன் தன் அம்மா வீட்டில் தன்னை விட்டு வைத்தது. பின் மாமியார் வீட்டிற்க்கு தான்.. அடுத்த குழந்தை உண்டாகாது இருக்க அனைத்து பாதுகாப்போடு தன்னை நெருங்கி விடுவான்.. அது இல்லாது அவன் இருந்தது கிடையாது..

ஆனால் சமீப காலமாக சரியாக சொல்வது என்றால் கடந்த ஆறு மாதமாக வாரத்தில் ஒரு நாள் என்பதே பெரியதாக தான் தன்னை நாடுவது.

சில சமயம் தான் நெருங்கினால் கூட ஆபிஸ்சில் வேலை அதிகம் ரொம்ப டையாடா இருக்கு சுப்…” என்று சொல்வது என்று ஒன்றை ஒன்றை சேர்த்து பார்த்தவளுக்கு விடையோ பூதாகரமாக தன் முன் வந்து நின்றது..

கணவனிடம் நேரிடையாக இதை பற்றி கேட்க பயம்.. “ஆம் இப்போ என்ன என்று சொல்லி விட்டால் என்ன செய்வது என்ற பயம்..

இந்த சந்தேகம் வந்த ஒரு மாதத்தில் அவள் அவளாகவே இல்லை.. கூடவே உடன் பிறந்தவனுக்கு தான் செய்த துரோகம் தான் தன்னை வந்து தாக்குதோ என்ற எண்ணமும் இப்போது.

அதனால் மாமியாரின் இந்த பேச்சுக்கு ஒன்றும் சொல்லாது இருக்க.

அதற்க்குமே வசந்தி.. “இப்போ எல்லாம் நீ ஒரு மார்க்கமா தான் டி திரியிற.” என்று இவளையும் சேர்த்து திட்டி விட்டு தான் சென்றார்..

இங்கு ஒரு வழியாக மறுநாள் தீக்க்ஷயன் குழந்தைக்கு இட்லி ஊட்டும் போது அவன் பக்கத்தில் வந்து அமர்ந்த தட்சணா மூர்த்தி..

“நேத்து அம்மா சொன்னதை எல்லாம் பெருசா மனசுல வைத்து கொள்ளாதே தீக்க்ஷா. உனக்கு உன் அம்மாவை பத்தி தெரியாதா..?” என்று கேட்டவரிடம்..

தீக்க்ஷயன் விரக்தியாக சிரித்தவன்.. “ அம்மவை பற்றி எனக்கு தெரியும் ப்பா.. இப்போ என் பயமே அது தான் ப்பா..” என்று விட்டான்..

மகனின் இந்த பதிலுக்கு அவரால் இன்றும் பதில் சொல்ல முடியவில்லை..காரணம் அவருக்குமே அந்த பயம் தான். இப்போது எல்லாம் ஸ்வேதா அத்தை அத்தை என்று ஏதோ தனித்து பேசுவதை அவருமே கவனித்து கொண்டு தானே இருக்கிறார்.,.

தன் சொந்த தங்கை பெண் தான் ஸ்வேதா… ஆனால் அவளின் எண்ணம் என்ன என்பது தான் அவருக்கு தெரியுமே… மனைவியிடம் சொல்லி விட்டார் பார்த்து என்று.. கேட்கவில்லை என்றால், அனுபவப்பட்டால் தான் தெரியும் என்றால், யாரால மாற்ற முடியும்..

அந்த பேச்சை மாற்றிய தட்சணா மூர்த்தி..” வர்ஷினியை பார்க்கனும் தீக்ஷா. உன் எந்த வீட்டில் இருக்கா .?”

தீக்ஷயனின் மனதில் அவ்வளவு இருந்தும் சொன்னான்… “போய் பார்த்துட்டு வரனும் பா.. அதோட வர்ஷினி அண்ணன் அக்கா கிட்ட இன்னுமே நாம் பேசல… பேசனும் ..அது தான் முறை..” என்று சொன்னவரின் பேச்சை மறுத்தும் தீக்ஷயன் கூறவில்லை..

மாறாக வர்ஷினியின் அண்ணன் அக்காவை பற்றி அவனுக்கு தெரிந்ததையும் அவன் சொல்லவில்லை.. ஏற்கனவே தன் அன்னை சொல்லி தான் அவனுக்குமே வர்ஷினியின் உடன் பிறப்பை பற்றி அவன் தெரிந்து கொண்டது.. இவனுமே தங்கள் திருமணத்திற்க்கு வர்ஷினி சம்மதம் கேட்கும் போது மீதியும் அவர்களை பற்றி புரிந்து கொண்டதை சொல்லவில்லை.

தட்சணா மூர்த்தி சொன்னது போன்று இன்னுமே திருமணத்திற்க்கு ஆறு நாட்கள் தான் இருப்பதினால், அன்று மாலை நான்கு மணிக்கு கிளம்பினர்.. முதலில் வர்ஷினியின் உரன் பிறப்புக்கள் வீட்டிற்க்கு தனி தனியாக போவதாக தான் இருந்தது.. ஆனால் அவர்களே வர்ஷினி இருக்கும் வீட்டிற்க்கு வந்து விடுவதாக சொல்லி விட. ஒரு சேர அனைவரையும் பார்க்க சென்றனர்..


 
Active member
Joined
Jun 23, 2024
Messages
71
சரசு ஒரு தடவை அவனோட கல்யாண வாழ்க்கையில் விளையாண்டது போதும் 🤧🤧🤧🤧🤧இனி கொஞ்சம் அறிவோடு நடந்துக்கிட்டா என்னவாம் 🤭 🤗 🥺 🥺

சுப்ரியா 😣😣😣 இந்த வீணா போனவனை கல்யாணம் செய்ய தான் உன் அண்ணன் வாழ்க்கைய பலி கொடுத்தியா 😈😈😈😈

ராஜேஷ் 🥶🥶🥶🥶 உன் குட்டு உடையும் போது உனக்கு இருக்கு 😨😨😨


வர்ஷி அக்காவும் அண்ணனும் அக்கறை இல்லாமல் தான் பேச போறாங்க 🤭 🤭 🤭 🤭 🤭 அதுக்கு இதுங்க சும்மாவே இருக்கலாம் 🥴 🤬 🤐 🤬 🤐 🤬 வர்ஷினி கையில் இருக்கும் பணம் பத்தி தெரிஞ்சா வயிறு எறிவாங்களே 😡😡😡😡
 
Last edited:
Active member
Joined
Jun 1, 2024
Messages
105
தனித்தனியா இருந்தாலே வில்லங்கம் மொத்தமா வேற எல்லாம் ஒன்னு கூடுறாங்களா..... 🥵🥵🥵🥵

சரஸ்வதி 😤😤😤
குழந்தை ஜார்டான்ல சாப்பிட முடியாம காரமா சாப்பாடு சாப்பிட்டப்போ எங்க போச்சு இந்த பாசம் கூட போய் இருந்து பார்த்துக்க வேண்டியது தானே.... 🥶🥶🥶🥶🥶 மாமியார் கெத்த காட்டுறீங்க மருமக தான் பேசணும்ன்னு...

பாவம் தீக்க்ஷன் அம்மா பேச்சுலயே மிரண்டு நிக்குறான் இனி பழைய மாமியார் வந்தா.... 🥴🥴🥴

சுப்ரியா அவ வாழ்க்கையில பிரச்சனை வரவும் தான் அண்ணனுக்கு பண்ணின பாவம் உறுத்துது....
 
Active member
Joined
May 12, 2024
Messages
199
Sarasukku suya puthiyum illa… Sol puthiyum illa… 😡😡😡

Ayyayo meendum meendum EMA va??? Rajesh 🤮🤮🤮 ennala mudiyala…
 
Top