Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Mogathin Monam...17.2

  • Thread Author
அத்தியாயம்…17.2

முன் தினம் வீட்டில் நடந்த பிரச்சனையில் தூக்கமே நேரம் கடந்து தான் வந்தது என்பதினால் தீக்க்ஷயன் எழாது படுக்கையில் கிடக்க.. அவன் முன் எழுந்து விட்ட தீரா பேபி… உறங்கும் தன் தந்தையை பார்த்தாள்..

எப்போதுமே தான் எழுந்ததுமே விழித்து கொண்டு இருக்கும் தந்தையையே பார்த்து பழகிய அந்த குழந்தை என்ன நினைத்ததோ… தந்தையின் தூக்கம் கெடாது மெல்ல கட்டிலை விட்டு கீழே இறங்கி ஹாலுக்கு வந்தது குழந்தை..

அந்த நேரம் அனைவருமே ஹாலில் தான் அமர்ந்து காபி குடித்து கொண்டு இருந்தனர்.. அவர்களுக்குமே குழந்தை மட்டுமே தனித்து வருவது புதிது தான்..

சரஸ்வதி தான் குடித்து கொண்டு இருந்த காபியை கீழே வைத்தவர்.. பேத்தியின் அருகில் சென்று குழந்தையின் கழுத்து நெற்றி பகுதியை தொட்டு பார்த்தவர்.. அது ஜில் என்று இருக்கவும் தான் ஒரு நிம்மதி அவருக்கு..

ஆனால் நீ நிம்மதியாக இருந்தால் எனக்கு பொறுக்காதே என்பது போன்று.. ஸ்வேதா.. “ என்ன தீரா நீ மட்டும் வர. உன் அப்பா எங்கே..?” என்று கேட்டதற்க்கு.

குழந்தையோ.. “ப்பா தூங்குறாங்க…” தன் மழலை குரலில் சொல்வதோடு மட்டும் அல்லாது, தன் இரு கையை தலையணை போல வைத்து கண்ணை மூடியும் செய்கையில் காட்டியது அந்த குழந்தை..

அந்த காட்சியை பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தது.. ரசித்தார்கள் தான் பெரியப்பா பாட்டி தாத்தா ஏன் அந்த வீட்டின் மூத்த வாரிசு ஸ்வேதா மகேந்திரன் குழந்தை ஏழு வயதே ஆன ஸ்ருதி கூட.

“தீரா திரும்ப செய் திரும்ப செய்.” என்று தான் குடித்து கொண்டு இருந்த போன் வீட்டா கப்பை டீப்பாவின் மீது வைத்து விட்டு தீராவின் அருகில் வந்து நின்று விட்டாள்..

ஆனால் ஸ்வேதா இந்த கேள்வியே வேறு ஒன்றுக்கு தானே எடுத்தது.. அதனால்…

“இன்னுமா தூங்குறார்…? எப்போவும் இந்த நேரத்திற்க்கு எழுந்துடுவாரே தீக்க்ஷயன்..” எனும் போதே சரஸ்வதிக்கு..

குழந்தைக்கு மட்டுமா அலச்சல் ..மகனுக்கும் தானே.. அவனுக்கும் உடம்பு சரியில்லையா…? என்று நினைத்தவர்..

மெல்ல முனு முனுத்து கொண்டே தன் சின்ன மகனின் இப்போதைய அறையை நோக்கி போக பார்க்க..

ஸ்வேதாவோ.. “ நீங்க வேறு அத்த இன்னுமே விவரம் புரியாது… நேத்து அவர் வசி கிட்ட போனில் பேசிட்டு நேரம் கடந்து தூங்கி இருப்பாரு.. அதனால எழுந்துக்க முடியாதா இருக்கும்..” என்றதுமே சரஸ்வதி திரும்பி தன் பெரிய மருமகளை பார்த்தார்..

“இனி இதுவுமே நீங்க பழக்க படுத்திக்கனும் அத்த..” என்ற ஸ்வேதாவின் பேச்சை மற்றவர்கள் கேட்க முடியாது அவளை முறைத்து கொண்டு சென்று விட்டனர்..

தட்சணா மூர்த்தி போகும் போது.. “இந்த வயசுலேயும் உனக்கு நல்லது கெட்டது புரியாது இருந்தா.. என்னால ஒன்னும் பண்ண முடியாது சரசு.. எப்போவும் உன் பக்கத்திலேயே நின்னுட்டு… உன் கிட்ட மத்தவங்க எதை நினைத்து பேசுறாங்க.. சொல்றாங்க… என்று விளக்கம் சொல்லிட்டு இருக்க முடியாது.” என்று சொல்லி சென்று விட்டார்..

ஆனால் சரஸ்வதிக்கு கணவனின் வார்த்தை புரியவில்லையா..?. ஆனால் ஒருவருக்கு கெட்ட நேரம் தொடங்கி விட்டாள்.. கெட்டது மட்டுமே கேட்க தோன்றும்.. அது போல சரஸ்வதிக்கு கெட்ட நேரம் தொடங்கி விட்டதா என்று தெரியவில்லை..

அதனால் தானோ என்னவோ.. பேத்தி எழுந்து வந்தாளே… அவளுக்கு பல் தேய்க்க வைத்து குடிக்க ஏதாவது கொடுப்போம் என்று இல்லாது..

பெரிய மருமகளின் பேச்சுக்கு… “என்ன ஸ்வேதா சொல்ற.. நேத்து நேரம் கழித்து தான் அங்கு இருந்தே இங்கு வந்தான்.. அதோட வீட்டிலுமே நிலமை சரியில்லை.. அதை எல்லாத்தையும் விட… அவன் பெண்ணுக்கு உடம்பு சரியில்ல.. இந்த சமயத்தில் எப்படி பேச தோனும்..?” என்று கேட்கும் சமயம்..

சரியாக தீக்க்ஷயனின் அறையில் இருந்து.. அவன் கை பேசியில் ஓசை கேட்டது.. அது ஒரு பாடல் ட்யூன்…

“ஓரு தெய்வம் தந்த பூவே.. கையில் தேடல் என்ன மானே வாழ்வு தொடங்கும் இடம் நீ தானே. ..” என்ற பாடல் கேட்க.

குழந்தை தீரா. “ஐய் ம்மா ம்மா.” என்று கை தட்டிக் கொண்டு தன் தந்தையின் பேசியை எடுக்க தங்கள் அறைக்குள் ஓடி விட்டாள்..

“பார்த்திங்களே அத்த. நையிட் அத்தனை நேரம் வரை பேசி இருக்காங்க. இதோ காலையில் சுப்ரபாதமா உங்க சின்ன மகனின் வசி தான் அழைத்து இருக்கா.” என்று ஒரு மாதிரி சொன்ன ஸ்வேதா..

பின் ஒரு மாதிரி குரலில். “எனக்குமே உங்க சின்ன மகன் அந்த பவித்ராவை கட்டி என்ன வாழ்க்கை வாழ்ந்தாரு என்று எனக்கு தெரியும் அத்த… அதனால் இந்த பொண்ணு கூட தீக்க்ஷயன் சந்தோஷமா வாழ்ந்தா.. நமக்கும் சந்தோஷம் தான்..” என்று ஏற்ற இறக்கத்துடன் நல்ல பாவனையில் சொல்லி முடித்தவள்..

பின்… “ஆனா பாருங்க அத்த.. அது நம்ம தீரா இல்லாம இருந்து இருந்தா பரவாயில்லை.. வரவ வந்த போது குழந்தையை நல்ல படியா பார்ப்பது போல் தான் இருக்கும்.. ஆனா பாருங்க அவளுக்கு என்று ஒரு குழந்தை வந்துட்டா… மத்தது நான் சொல்ல தேவையில்லை… ஆனாலுமே தீக்க்ஷயனுக்கு கல்யாணம் பண்ணாம இருக்க முடியாது தான். இருந்துமே தீராவுக்கும் எந்த பிரச்சனையும் வர கூடாது.. ம். எனக்கு இதுக்கு மேல எதுவும் சொல்ல தெரியல அத்த.” என்று தன் குழந்தையை பள்ளிக்கு அனுப்ப தங்கள் அறைக்குள் சென்று விட்டாள்..

சரஸ்வதிக்கோ.. பல யோசனைகள்.. பயங்கள்.. மண்டையில் பெரிய மருகள் சுப்ரபாதம் என்ற அந்த பேசியில் பாடல் ட்யூனை கவனித்து அதன் அர்த்தம் தெரிந்து இருந்தால், இந்த யோசனைக்கும் அவரின் பயத்திற்க்கும் தேவையே இல்லாது போய் இருக்கும்.

காரணம் தீக்க்ஷயன் வர்ஷினியின் எண்ணிற்க்கு என்ன பாடல் ட்யூன் போடுவது என்டு அவளிடம் கேட்ட போது அவள் தான் தீராவை மனதில் வைத்து இந்த பாடலை சொன்னது..

அதனால் தான் தீரா அந்த பாடல் சத்தம் எழுந்ததுமே அம்மா என்று சரியாக யூகித்து சென்றது..

தீக்க்ஷயனின் அறையிலுமே.. வர்ஷினி.. “ இப்போ லட்டூம்மா எப்படி இருக்கா. நேத்து நையிட் அவள் நல்லா இருக்கா என்று நீங்க மெசஜ் போட்டிங்க தான்.. ஆனா எனக்கு தான் நையிட் சரியாவே தூக்கம் இல்ல.” என்று அவர்கள் தனிப்பட்ட விசயத்தை பேசாது குழந்தையை பற்றி தான் வர்ஷினி பேசியது..

தீக்க்ஷயனுமே. “தீரா தான் செல் எடுத்து கொடுத்தா. நான் தூங்கிட்டு இருந்தேன்.. இன்று ஈவினிங்க அங்கு வராத சொன்னாங்க. உன் அண்ணன் அக்காவை கூட பார்க்கனும் என்று சொன்னாங்க.. எப்படி..அவங்க இரண்டு பேர் வீட்டிற்க்கும் போய் தனி தனியா பார்ப்பதா. இல்ல பொது இடத்தில் வர வழைத்து பார்ப்பதா.?” என்று இது போன்று பொதுவான விசயங்கள் தான் பேசியது..

வர்ஷினி.. “இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் அதை கன்பாம் செய்யிறேன்.. லட்டூவை பார்த்துக்கோங்க.” என்று சொல்லி விட்டு அவளுமே சீக்கிரம் தான் பேசியை வைத்து விட்டது.

காரணம் அவளுமே இன்று வேலைக்கு செல்ல வேண்டும்.. என்ன ஒன்று இந்த வீட்டிற்க்கு அவள் வேலை செய்யும் இடம் மிக அருகில். அதனால் பிரச்சனை கிடையாது..

இருந்துமே இதோ இப்போது அக்கா அண்ணனை அழைத்து பேச வேண்டும்.. அவர்கள் என்ன என்ன கூத்து செய்வார்கள் என்பது தெரியாது..

அதற்க்கு எவ்வளவு நேரம் எடுக்கும் என்பதும் தெரியாது.. பின் சமைக்க இங்கு மளிகை பொருட்கள் அந்த அளவுக்கு இல்லை என்பதினால், கிளம்பி சென்று வெளியில் தான் ஏதாவது பார்க்க வேண்டும்..

இத்தனை செய்ய நேரம் வேண்டுமே என்று நினைத்து தான் முதலில் தன் அண்ணன் ஸ்ரீவச்சனுக்கு பேசியில் அழைப்பு விடுத்தது.

ஸ்ரீவச்சன் பேசியை எடுத்து உடனே.. “என்ன வர்ஷி இந்தியாவுக்கு வந்திட்டியா..?” என்று தான் கேட்டது..

“ம் வந்துட்டேன் ண்ணா. “ என்று சொன்னவள் பின்.. தீக்க்ஷயன் சொன்னதை சொன்னாள்..

அனைத்தும் கேட்டவன்.. “தீக்க்ஷயன் பேமிலி ஏன் வீணா அலைய வேண்டும்.. ஒரே இடத்தில் பார்க்கலாம்.. கீர்த்தனாவுமே இதையே தான் சொல்லுவாள்.. அதோடு இங்கு வந்தா அவங்களை கவனிக்கனும்.. அத்தைக்கு கொஞ்ச நாளா உடம்பு அந்த அளவுக்கு சரியில்லை.. வயசு ஆகுதுல.” என்றவனின் பேச்சை கேட்டவள்..

அண்ணன் பேச்சுக்கு மறுப்பு சொல்லாது.. “ அப்போ இப்போ நான் இருக்கும் இடத்திற்க்கு வந்துடுறிங்கலா.? “ என்று வர்ஷினி கேட்ட பின் தான் ஸ்ரீவச்சன்..

“ஆமா இப்போ நீ எங்கு இருக்கே என்று கேட்டது..?”

“அவர் அப்பார்ட்மெண்ட் இங்கு ஒன்னு இருக்கு.. இங்கு இருந்தவங்க லாஸ்ட் வீக் தான் காலி பண்ணாங்க.. அங்கு தான் இருக்கேன்..” என்றதும் இத்தனை நேரம் ஏனோ தானோ என்று பேசி கொண்டு இருந்த ஸ்ரீவச்சனின் குரலில் ஒரு பர பரப்பு..

“அவர் வேறு தனியா வாங்கி போட்டு இருக்காரா பரவாயில்லையே.. எங்கு…? எந்த இடம்…? எத்தனை ஸ்க்கொயர் பிட் இருக்கும்…?” என்று ஒரு அசல் வீட்டு பிரோக்கர் போல பல கேள்விகள் வந்து விழுந்தன..

எங்கு என்று மட்டும் சொன்ன வர்ஷினி. “எவ்வளவு ஸ்கொயர் பிட் எல்லாம் எனக்கு தெரியல ண்ணா. அப்புறம் டைம் ஆகுதுண்ணா அவங்க ஆறு மணிக்கு இங்கு வரேன் என்று சொன்னாங்க. உங்க செல்லுக்கு லோக்கேஷன் ஷேர் செய்யிறன்..’கீர்த்தனா அக்கா கிட்ட வேறு பேசிட்டு வேலைக்கு கிளம்ப வேண்டும்..” என்று சொல்லி வைத்து விட்டாள்..

பின் வர்ஷினி கீர்த்தனாவுக்கு அழைக்க.. அவளுமே நான் ஸ்ரீவச்சனுக்கு அக்கா என்பதை நிருபிக்கும் வகையாக தான் பேச்சு இருந்தது..

அவளுமே… “நானே வந்துடுறேன் எதுக்கு அவங்களுக்கு வீண் அலச்சல்..” என்று விட்டாள்.. பின் பேசியை வைத்தவள் வர்ஷினிக்கு அப்பாடா என்ற ஒரு உணர்வு தான்.

பின் இருவருக்குமே தான் இருக்கும் வீட்டின் மேப்பை அனுப்பி வைத்து விட்டவள்.. வேலைக்கு கிளம்பியும் விட்டாள்..

இங்கு தீக்க்ஷயனுமே வேலைக்கு கிளம்பும் நாள்..

எப்போதுமே தீராவுக்கு ஊட்டி விட்டு தான் அவன் சாப்பிடுவான் இன்றுமே அம்மா கொடுத்த இட்லியை சாம்பார் வைத்து இருந்தார்கள்…

“சர்க்கரை வேண்டாம் ம்மா. சாம்பார் நான் ஊத்துக்கிறேன்… “ என்று சொன்னவன். சாம்பாரை தெளுவாக ஊற்றும் போது..

சரஸ்வதி.. “குழந்தை காரம் சாப்பிட மாட்டாள் டா…” என்று அவர் சொல்லி கொண்டு இருக்கும் போதே.. தீக்க்ஷயன் இரண்டு காய் இட்லி துண்டை சாம்பாரில் முக்கி தீராவுக்கு ஊட்டி முடித்து விட்டு இருந்தான்..

குழந்தையுமே சமத்தாக சாப்பிட்டு விட.. “ என்ன தீக்க்ஷா இது குழந்தைக்கு காரத்தை ஊட்டுற ..?” என்று ஏதோ கொடுக்க கூடாத உணவை கொடுத்து விட்டது போன்று ஆதங்கத்துடன் கேட்டார்..

தீக்க்ஷயன். “ம்மா இங்கு சர்க்கரை பால் சாதம் இது மட்டும் கொடுத்து கொடுத்து கொஞ்சம் காரம் வாயில் பட்டா கூட அடுத்த வாய் வாங்க மாட்டேங்குறா.. அங்கு கெளதம் மனைவி கொடுத்த சாப்பாடு ஒத்துக்காது ஆறு மாதம் பேபி ரொம்ப கஷ்டப்பட்டுட்டா.. அப்புறம் வசி வந்த பின் தான் இவள் சாப்பாடு பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்தது..”

“அதோடு வசி குழந்தைக்கு மூன்று வயது முடிந்து விட்டது.. இனியுமே இப்படி காரத்தை கண்ணில் காட்டாது இருக்க கூடாது.. அதோடு கொஞ்சம் காரமும் சேர்த்து கொடுத்து பழக வேண்டும்.. இதோ இது போல சாம்பாரை தெளுவா ஊத்தினா இதோ இது போல லட்டூ குட்டி சாப்பிட்டு முடித்து விடுவா.” என்று அன்னையிடம் பேசிய படி தானும் சாப்பிட்டு குழந்தைக்குமே ஊட்டி விட்டவன்..

தீராவிடம்.. “பாட்டியிடம் சமத்தா இருக்கனும்..” என்று சொல்லும் போதே தீரா.

“அப்போ தான் ஆபிஸ் போயிட்டு வந்து ப்பா ம்மாவை பாக்க கூட்டிட்டு போவாங்க..” அறையில் இருக்கும் போது தீக்க்ஷயன் சொன்னதை குழந்தை தீரா தன் மழலை குரலில் சொல்ல.

“ஆமா டா என் சமத்து குட்டி..” என்று குழந்தையிடமும் தன் அன்னையிடமும் விடைப்பெறும் போது..

“சுப்ரியாவும் ஈவினிங் வரளா..?” என்ற கேள்விக்கு..

“பின்னே வீட்டு பெண் வராது எப்படி.. நான் கூப்பிட்டேன்.. அவள் குரலே ஒரு மாதிரி தான் இருக்கு.. நீ கூப்பிடனும் என்று அவள் எதிர் பார்க்கிறா போல.” என்று சொல்லி விட்டு தன் மகனின் முகத்தை பார்க்க.

தீக்க்ஷயனோ… “கண்டிப்பா என்னால முடியாதும்மா.அவள் செய்தது சின்ன தப்பு கிடையாது… என்னை விடுங்க. பேபி.. இவளுக்கு இந்த வயசுல அம்மா இல்லாது போனது.. அது விடுங்க.. இனி அம்மா இல்ல என்று அவள் எதிரில் கூட எனக்கு பேச பிடிக்கல. இனி அவள் அம்மா என்றால் அது வர்ஷினி மட்டும் தான்.. “ என்று கோபத்துடன் பேசியவன் தன் வேலைக்கு கிளம்பி விட்டான்.

தீக்க்ஷன் பேச ஆரம்பித்ததில் இருந்து முதலில் அதிசயமாக தன் மகன் இத்தனை பேசுவானா என்று சரஸ்வதி பார்த்து கொண்டு இருக்க. பின் அவன் பேச்சில் வசியின் பெருமை தூக்கலாக அடிப்பதும்.. மகளிடமும் வர்ஷினி பற்றிய பேச்சு தான் போலவும் புரிந்து கொண்டவருக்கு இன்னுமே மூட்டி கொடுப்பது போல.

ஸ்வேதா. “பார்த்திங்கலா அத்த.. குழந்தை கூட இந்த வீட்டிற்க்கு வருவதற்க்கு முன் அவ கண்ரோல் போயாச்சு..” என்று பத்த வைத்து விட்டு எப்போதும் போன்று தன் அறைக்கு சென்றாகி விட்டது..

மாலையில் வர்ஷினியும் அவர்கள் வரும் முன்னவே வீடு வந்தவள்.. பால் காபி தூள் சர்க்கரை என்று முக்கியமான பொருட்களை மட்டும் வாங்கி கொண்டு கூடவே வந்தவர்களுக்கு வைத்து கொடுக்க ஸ்நாக்ஸ் வாங்கி கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்..

அங்கு முன் கூட பேச்சிலர் தங்கி இருந்ததினால் இன்டெக்ஸ் ஸ்டவ் மற்றும் முக்கியமான சில பாத்திரங்களுமே கூட இருந்தது..

அதோடு தீக்க்ஷயன் பர்னிச்சரோடு தான் வாடகைக்கு விட்டு இருந்ததினால், பிரச்சனை இல்லாது போக. பாலை காச்சி முடித்து காபி தூளை பில்டர் செய்து தயாராக வைத்து விட்டு..

ஒரு சின்ன குளியலுக்கு பின் ஒரு காட்டன் சாரி.. சாரிக்கு தோதாக கம்மல் வளையல். கழுத்தணி அணிந்து கொண்டாள்..

வாங்கிய தங்கம் இன்னுமே தீக்க்ஷயனிடம் தான் இருந்ததினால், செயற்க்கை அணிகலன்களை தான் அணிந்து கொண்டது.. அதுவே அவளுக்கு பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது …..

அவள் தயாராகாவும் அவளின் அண்ணனும் அண்ணி அக்கா மாமா என்று அவள் வீட்டு ஆட்கள் வரவும் சரியாக இருந்தது..

வர்ஷினி எதிர் பார்க்கவில்லை.. இப்படி அண்ணனும் அக்காவும் ஒன்றாக வருவார்கள் என்று.

எப்போதுமே சின்ன வயதில் இருந்தே கீர்த்தனாவுக்கும், ஸ்ரீவச்சனுக்கும் ஏழாம் பொருத்தமாக தான் இருக்கும்..

ஒருவரை பற்றி இன்னொருவர் குறை சொல்லிக் கொண்டே தான் இருப்பர்.. அதுவும் பெரும் பாலும் ஒரு வயது இவளுக்கு வந்த உடன் இவளிடம் தான் சொல்வதும்..

இன்று என்ன அதிசயமாக என்று நினைத்தாலுமே அதை முகத்தில் காட்டாது வர வேற்றாள்.. அண்ணி கூட அவள் அம்மா குழந்தை என்று தான் வந்து இருந்தனர்..

இவள் காலையில் ஸ்ரீவச்சனுக்கும், கீர்த்தனாவுக்கும் சொல்லி முடித்ததும்.. இவள் இரண்டாம் தாரம்.. குழந்தைக்கு தந்தை என்று தெரிந்தும் அதை பற்றி பெரியதாக பேசாத வர்ஷினியின் உடன் பிறப்புக்கள்..

தீக்க்ஷயனின் அப்பார்ட்மெண்ட், அதுவும் சொந்தமாக அதுவும் அந்த இடத்தில் என்று சொன்னதும் கூட இவள் முகவரியின் வரைப்படத்தை இரண்டு பேருக்கும் ஷேர் செய்ததில்..

ஸ்ரீவச்சன் கீர்த்தனாவுக்கு அழைத்து விட்டான்.. “நான் அந்த அப்பார்ட்மெண்ட் பார்த்து இருக்கேன்.. இரண்டு படுக்கை அறை கொண்டதே ஒரு கோடிக்கு மேல் தான்.. அதுக்கு வெர்த் தான். நீச்சல் குளம் மெடிக்கல்.. என்று எல்லா வசதியுமே உள்ளேயே இருக்கும்.. பரவாயில்லை இந்த வயசுலேயே வாங்கி போட்டு இருக்கார் என்றால் பரவாயில்லை..” என்று சொல்ல..

கீர்த்தனாவோ .. “அப்படியா..? ஆனா தீக்க்ஷயன் சித்தி அந்த அளவுக்கு வசதி இல்லை தானே.. ஒரு வீடு வாங்கவே லோன் போட்டோம் என்று தானே நம்ம வீட்டிற்க்கு சம்மதம் பேசின போது சொன்னது..”

“அவங்க அக்கா வீடும் இவங்க வசதி தான் இருக்கும் என்று நான் நினைத்தேன். இன்னைக்கு போய் தான் விசாரிக்கனும்..” என்று இருவரும் பேசி தான்.. இதோ ஆராய மாப்பிள்ளை எப்படி குண நலன் எப்படி என்று விசாரிக்காது… இந்த இடம் தங்களோடு பெரிய இடமா..?

அதாவது தீக்க்ஷயனை கட்டினாள் வர்ஷினி தங்களை விட அந்தஸ்த்தில் உயர்ந்த இடத்திற்க்கு சென்று விடுவாளா.? என்பது போன்ற பேச்சுக்களை தான் அண்ணனும் அக்காவும் கேட்டுக் கொண்டு இருந்தது.

அண்ணியின் அம்மா இவர்கள் வாய் வழி மூலமாக கேட்பதை கண்களால் பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டி அண்ணனின் இரண்டு வயது குழந்தையை தூக்கி கொண்டு அந்த வீடு முழுவதுமே நோட்டம் இட்டு வந்து அமர்ந்தவர் கண்களால் தன் மகளிடன் சைகையும் செய்து விட்டார் பெரிய வீடு மூன்று படுக்கை அறை என்று..

அதற்க்குள் வர்ஷினியிடம் கேட்டும் அக்காவும் அண்ணனும் கேட்டு தெரிந்து கொண்டனர் என்பது வேறு விசயம்..

அதுவு கீர்த்தனா. “ தீக்ஷயன் இங்கு வாங்கி இருப்பது தெரியுமா. இது தானா வேறு ஏதாவதா… ? என்பது போன்ற கேள்விகள் தான் வந்தன.

அதாவது கீர்த்தனாவின் பேச்சு சுத்தி வளைத்து.. தீக்ஷயனின் சொத்து மதிப்பை பார்த்து தான் இரண்டாம் தாரமாக, ஒரு குழந்தைக்கு தந்தையாக இருந்தாலும் பரவாயில்லை என்று நினைத்து தீக்ஷயனை திருமணம் செய்து கொள்கிறாயா…? என்பது போல் தான் அவளின் பேச்சுக்கள் இருந்தன…

வர்ஷினி தன் பெற்றோர் இறந்ததும் இந்த ஒரு வருடத்திற்க்குள் அத்தனை வலி வேதனைகள், மனிதர்களின் சுயநலன்களை பார்த்து விட்டவள் தான்..

ஆனால் இது போலான கேள்விகள்.. அவள் மனதிற்க்கு அதிர்ச்சியை தந்தது.. அதுவும் தன் உடன் பிறப்புக்களிடம் இருந்து..

கேட்ட கேள்விகளுக்கு அழாது மனது உடையாது எப்படி பதில் கொடுத்தாள் என்பது அவளுக்கே பெரிய விசயமாக தான் இருந்தது.

அதுவும் ஸ்ரீவச்சன் அடுத்து கேட்ட. “ இந்த வீடு மட்டும் தானா இல்ல வேறு ஏதாவது.?” என்றதற்க்கு உண்மையில் வர்ஷினிக்கு விவரம் தெரியவில்லை..

இந்த வீடே நேற்று இங்கு வந்த போது தானே இது தீக்ஷயனுடையதே என்ற விவரமே அவளுக்கு தெரிந்தது..

அதனால் உண்மையாக .. “எனக்கு தெரியலேண்ணா.” என்று தான் சொன்னாள்..

ஆனால் அதற்க்கு கீர்த்தனா. “ தெரிந்தாலும் சொல்ல மாட்டாள்.. நாம பொறாமை படுவோம் என்று சொல்ல மாட்டாள்..” என்றதில் வாய் வரை வந்து விட்டது..

“நீ உன் தோப்பு வீட்டையும்.. அண்ணன் இப்போ இருக்கும் அந்த வீட்டையும் அப்பா அம்மா இருக்கும் போதே வாங்கி போட்டிங்க… பெத்தவங்களுக்கே சொல்லாது செய்த உங்களை போல நினச்சிட்டியா..?” என்று கேட்க தான் வாய் வரை வந்து விட்டது.

ஆனாலுமே அடக்கி கொண்டவளுக்கு துக்கத்தை அடக்கி கொள்ள கொஞ்சம் தனிமை அவளுக்கு தேவையாக இருக்க..

“கொஞ்சம் இருங்க..” என்று விட்டு ஒரு படுக்கை அறைக்குள் நுழைந்து கொண்டவளுக்கு கண்ணீர் அப்படி ஒரு கண்ணீர்..

‘ப்பா ம்மா.” என்று கத்தி கதறி அழ வேண்டும் போல் தான் அவளுக்கு இருந்தது.

ஆனால் அழுது வெளியில் இருப்பவர்களுக்கு கேட்டு விட கூடாது… அதோடு அழுத முகத்தோடு தீக்ஷயனின் வீட்டவர்களையும் வர வேற்க முடியாது..என்று தன்னை அடக்கி கொண்டவளாக தன் பேசியில் இருந்த அன்னை தந்தையை பார்த்தவள்..

“எப்போதும் நீங்க தான் என் பக்கத்தில் இருந்து எனக்கு தைரியத்தை கொடுக்கனும்.. நான் பார்த்தவங்களில் சுயநலம் இல்லாது உண்மையான பாசம் காட்டினவங்க நீங்க மட்டும் தான்..

இப்போ உங்களின் இந்த இடத்தை பூர்த்தி செய்வது போல கிடைத்து இருக்கும் உறவும் தீனாவும் லட்டூ குட்டியுமே.. என்னோட இந்த வாழ்க்கை எந்த நாளும் தோத்து விட கூடாது.. “ என்று தன்னை தேற்றிக் கொண்டு மீண்டுமே ஹாலுக்கு வந்த போது..

தீக்ஷயனின் வீட்டவர்களும் வந்து இருந்தனர்.. அவர்களை பார்த்து அப்படியே அதிர்ந்து நின்று விட்டாள் வர்ஷினி… ஏன் என்றால் தீக்க்ஷயனின் வீட்டவர்கள் என்றால், அவர்கள் குடும்பம் மட்டும் அல்லாது சரஸ்வதியின் அண்ணன் கணபதி அண்ணி வசந்தியுமே அதாவது தீக்க்ஷயனின் முதன் மனைவி பவித்ரா குடும்பமும்.. அந்த வீட்டின் மருமகளும் இவர்கள் வீட்டின் பெண்ணுமான சுப்ரியா அவள் கணவன் ராஜேஷும் வந்து இருந்தனர்..

அவர்கள் மட்டும் வந்து இருந்தால், இவள் இப்படி அதிர்ந்து நின்று இருக்க மாட்டாள்..கூடவே அவர்களோடு சரஸ்வதியின் தங்கை குடும்பமும் அதாவது முன் இவளுக்கு நிச்சயம் செய்து கல்யாணம் வரை வந்து நின்று விட்ட வாசுதேவனின் குடும்பம் மட்டும் அல்லாது வாசுதேவனும் அவன் மனைவியுமே வந்து இருந்தனர்…


 
Active member
Joined
Jun 23, 2024
Messages
71
வர்ஷினி கிட்ட சொல்லாம இவ்வளவு பெரிய கும்பலை கூட்டிக்கிட்டு வந்துட்டியே தீஷா 😨😨😨😨😨😣😣😣😣

ஸ்வேதா கேடு கெட்ட ஜென்மம் 😡 😡 😡 😡
சரஸ்வதி நீ எல்லாம் பட்டு தெரிஞ்சுக்க போற 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

தங்கச்சி கல்யாணத்துக்கு நகை வாங்க செலவழிச்ச பணத்தை பத்தி எல்லாம் தெரிஞ்சா அக்கா அண்ணன் இரண்டு பேரும் நெஞ்சு வெடிச்சு செத்துருவாங்க போல 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶


வர்ஷி எப்படி இருந்தாலும் நீ உனக்கு நிச்சயம் செஞ்ச குடும்பத்தை சந்திச்சு தான் ஆகணும் 😨 😨 😨 😨 😨 😨 இப்பவே தயார் பண்ணிக்கோ 😕😕😕😕😕
 
Last edited:
Active member
Joined
Jun 1, 2024
Messages
105
சரி தான்.... என்ன பஞ்சாயத்து ஆகப் போகுதோ..... 😱

இவங்க ஜார்டான்லயே கல்யாணம் முடிச்சுட்டு வந்துருக்கலாம்.....

ஸ்வேதா பிசாசு... 😈 வேற வேலையே இல்லை போல எப்போ பார்த்தாலும் மாமியாருக்கு போட்டு குடுத்துட்டே இருக்கா.... அவங்க ஒரு மறை கழண்ட ஆளு கொஞ்சம் கூட சுயபுத்தியே இல்லை..... 😤😤😤😤😤

பாவம் வசி தீக்க்ஷா... 😖
 
Member
Joined
May 11, 2024
Messages
61
ரெண்டு பேரோட குடும்பமும் நோட்டம் விட தான் வந்து இருக்கு
 
Top