Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Mogathin Monam...18..1

  • Thread Author
அத்தியாயம்…18…1

வர்ஷினிக்கு தெரியும் தீக்க்ஷயனை திருமணம் செய்தால், வாசுதேவன் குடும்பம் மட்டும் அல்லாது வாசுதேவனை கூட ஒரு நாள் சந்திக்க வேண்டும் என்பது அவளுக்கு தெரியும் தான்..

ஆனால் இன்றே… அதுவும் இப்போது அவள் மனது இருக்கும் சூழ்நிலையில், என்ன இது என்பது போல் அவள் மனது ஆயாசமாக இருந்தது..

மனதில் இருப்பதை முகத்தில் காட்டிய படியே தான் தீக்க்ஷயனை பார்த்தது.. என்ன இது ..? என்பது போல் தான் பார்த்தாள்.. தன் பாவனையை மறைக்க நினைக்கவில்லை..

ஆனால் அவளுடைய நேரமோ என்னவோ அவளின் அந்த பார்வையை சரஸ்வதியும் ஸ்வேதாவும் பார்த்ததோடு மட்டும் அல்லாது அந்த பார்வைக்கான அர்த்தம் புரிந்தும் கொண்டு விட்டார்கள்..

சரஸ்வதிக்கு வர்ஷினியின் பாவனையை கூட ஒரு விதத்தில் அவர் , மனது ஏற்றுக் கொண்டு விட்டது.. காரணம் அவருமே தன் அண்ணன் வீட்டில் தன் பெண்ணை கொடுத்ததினால், பெண்ணுக்கு அழைக்கும் போது அண்ணன் அண்ணியை அழைக்க வேண்டிய நிலையில் அழைத்து சொன்னது..

இவருக்கு ஒரு அண்ணன் ஒரு தங்கை.. அண்ணனுக்கு அழைத்து விட்டு தங்கைக்கு அழைக்காது இருக்க முடியாது என்பதினால் சாந்தாவை அழைத்தார்..

ஆனால் தன் தங்கையோடு அவன் மகன் வாசுவும் அவன் மனைவியும் கூட வருவாள் என்று அவரே நினைத்து பார்க்கவில்லை..





என்ன இது என்பது போல் தான் சரஸ்வதி தன் தங்கையை பார்த்தது.. சாந்தா அதற்க்கு கை அசைவில் பின் சொல்கிறேன் என்றதில் விட்டு விட்டாலுமே, வர்ஷினி சங்கடப்படுவாளே என்று யார் பேச்சும் கேட்காத போது நினைக்கும் அவர் நியாயமான மனது நினைத்தது தான்..

அதனால் வர்ஷினி பார்வைக்கு தவறாக நினைக்காத சரஸ்வதி .. அதற்க்கு பதில் பார்வையாக தன் மகன் தீக்க்ஷயன் கண்களை சுருக்கி மன்னிப்பு கேட்கும் பாவனையில் உதட்டையும் அசைத்து சொன்னதை பார்த்த போது தான் இது தன் மகன் தானா…?. என்பது போல் நடப்பதை நம்பாது பார்த்துக் கொண்டு இருந்தார்..

பவித்ரா உடல் நிலை சரியில்லாத போதும் பின் இறந்த போதும் கூட அவன் யாரிடமும் கத்தி சண்டை இடவில்லை.. ஆனால் யாரிடமும் முகம் கொடுத்து அதன் பின் சரியாக பேசுவதும் கிடையாது.. அது தன்னிடமும் கூட..

தீக்க்ஷயனின் சுபாவமே முன்பு இருந்தே அப்படி தான்.. கத்தி கூச்சல் போடவும் மாட்டான்.. அதே போல் இது போன்று மன்னிப்பு என்று தாழ்ந்து போகவும் மாட்டான்.. அப்படி பட்டவனின் இந்த மன்னிப்பு ஒரு அன்னையாக அதை பார்க்க முடியாததோடு ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை என்று கூட சொல்லலாம்..

சரஸ்வதிக்கு மருமகள் ஸ்வேதா சொல்வது போன்று,.. இவன் மனைவியுடன் சேர்ந்து பேத்தியை விட்டு விடுவானோ.. என்ற பயம் மனதில் அப்போது இருந்தே வர தொடங்கி விட்டது..

ஆனாலுமே இந்த பெண் வேண்டாம் என்று ஒரு அன்னையாக தன் மகன் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததினால் சொல்லவும் இல்லை.. இதை தான் கிராமத்தில் ஒரு பழ மொழியாக சொல்வது..

அதாவது மீசைக்கும் ஆசை.. கூழுக்கும் ஆசை என்று..’அந்த நிலையில் தான் தற்போது சரஸ்வதி அம்மா இருந்தார் என்று கூட சொல்லலாம்..

இதே வர்ஷினி அதிர்ந்து போனாலுமே முகம் மாறினாலுமே பின் சட்டென்று மாற்றிக் கொண்டு சிரித்த முகத்துடன் தான் வரவேற்றது…

பின் அவள் தான் அனைவருக்குமே தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தது.. பின் தயாராக வைத்து இருந்த பில்டரில் காபி கலந்து கொடுத்து பின் ஸ்நாக்ஸ் என்று அனைத்துமே அவள் தான் கொடுத்தாள்.. அவள் தான் செய்யும் சூழல் அங்கு. வேறு வழியும் அவளுக்கு கிடையாது

ஏன் என்றால் அனைவருமே உட்கார்ந்த இடத்தில் அப்படியே இருந்தாள் வேறு என்ன செய்வது..

பின் ஒரு வழியாக காபி ஸ்நாக்ஸ் என்று குடித்து சாப்பிடும் வரை பொத்தாம் பொதுவாக பேசிக் கொண்டு இருந்தவர்கள் பின் திருமணம் கோயிலில் சொல்லி விட்டது வர வேற்பு என்பது போல் ஒரு சின்ன பார்ட்டி என்று ஏற்பாடு செய்ததை தீக்க்ஷயனின் தந்தை பெரியவராக முறைக்கு வர்ஷினியின் அண்ணன்.. மாமாவிடம் பேசினார்..

இது வரை அனைத்துமே சரியாக தான் நடந்தது.. ஆனால் இடையில் ஸ்ரீவச்சன் தீக்ஷக்யனிடம்..

இந்த ப்ளாட் எப்போது வாங்கினிங்க… இன்னும் ஏதாவது வாங்கி போட்டு இருக்கிங்கலா…? என்று பொதுவாக கேட்பது போன்று விஷயத்தை அவன் கரந்து கொண்டான் என்றால்,.

வர்ஷினியின் அக்கா கீர்த்தனாவோ சும்மா கேட்பது போன்று தீக்ஷயனின் அப்பா செய்யும் தொழில் என்று அனைத்து விசயங்களும் கேட்டுக் கொண்டாள்..

தன்னை சுற்றி இத்தனை நடப்பதை கேட்டும் பார்த்துக் கொண்டு இருந்துமே வர்ஷினியால் ஒன்றும் செய்ய முடியாத நிலை தான்..

அவள் என்ன என்று சொல்லுவாள்.. என் அக்கா அண்ணனிடம் ஒன்றும் சொல்லாதிங்க என்று நாளை புகுந்த வீடாக போகும் உறவுகளிடம் அவளாள் சொல்லவா.. முடியும்..

அதோடு தீக்ஷக்யனின் அம்மா சரஸ்வதி நல்ல முறையில் பேசுவது போன்று இருந்தாலும், வர்ஷினிக்கு ஏதோ ஒன்று அவரிடம் குறைவது போல் இருந்தது..

அவரை முதல் முறை பார்த்த போது பேசியது போது, அதாவது சரஸ்வதியின் தங்கை மகனுக்கு தன்னை பார்த்த போது தன்னிடம் பேசியதற்க்கும் இப்போது பேசுவதற்க்கு ஏகப்பட்ட வித்தியாசம்.. தெரிகிறது..

ஆனால் அது என்ன என்று சரியாக பிரித்தறிய தெரியவில்லை.. அது என்ன என்று யோசிக்கும் முன் அவளின் அக்கா அண்ணன் பேச்சுக்கள் என்று போக.

இதில் உச்சகட்டமாக அவளின் அக்கா அனைவரின் முன்னுமே.. “இது என்ன விற்கிறது போட்டுட்டு இருக்க…? நீ இது போல போட்டுட்டு இருப்பதை பார்த்தா நாங்க அந்த வீட்டின் பங்கையும், அப்பாவுக்கு வந்த பணத்தையும் உன் கிட்ட கொடுக்கல என்று தப்பா நினைக்க மாட்டாங்க.” என்று கீர்த்தனா இப்படி பொதுவில் பேசி வைப்பாள் என்று வர்ஷினி நினைக்கவில்லை..

கீர்த்தனாவுக்கு கோபம்.. தீக்க்ஷயன் திருமணம் ஆனவன் ஒரு பெண் குழந்தை இருக்கு என்று சொன்னவள்.. இது போல சொத்து உடையவன். அதோட அவன் அப்பா வேறு ஒரு கடை கொடுத்து இருக்கார்.. அதுல வேறு அத்தனை லாபம் வருதாம்.. இது எல்லாம் சொல்லலையே என்று.. பாவம் இந்த விசயம் வர்ஷினிக்கே தெரியாதே..

வர்ஷினி இனி தன் வருமானத்தை பெருக்க தான் திட்டம் தீட்டியது எல்லாம்.. மற்றவர்களுடையதை அவள் கணக்கு பார்க்கவில்லையே..

கீர்த்தனா இப்படி சொன்னதுமே இது வரை பக்கம் பக்கம் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்த ஸ்வேதா..

“ஓ வித்து கொடுத்தாச்சா. எவ்வளவு வந்தது.. வர்ஷினிக்கு எவ்வளவு வந்தது..?” என்று அந்த விவரங்களை கேட்டு தெரிந்து கொண்டு இருந்தாள்..

கூடவே. ஸ்வேதா.. “நாங்க நீங்க கொடுக்காது விட்டிங்க என்று எல்லாம் நினைக்க மாட்டோம்.. ஏன்னா எங்க மச்சினருக்கு முப்பத்து லட்சத்துக்கு மேல அனுப்பி வைத்து விட்டாங்க உங்க தங்கை.. என் மச்சினரும் நகை வாங்கி வைத்து இருக்காங்க.” என்றதுமே கீர்த்தனா ஸ்ரீவச்சன் ஒருவருமே..

“எதுக்கு அவ்வளவு பணத்திற்க்கு நகை வாங்கின.. நாளை பின்ன மத்ததுக்கு காசு வேண்டாமா..? என்று பேச.

மொத்ததில் அது திருமண பேச்சு போல இல்லாது நடப்பு நிதியாண்டு பட்ஜெட் தாக்கல் செய்வது போல் தான் அங்கு பேச்சு வார்த்தை சென்றது..

கடைசியில் தீக்க்ஷயன் தான். “ நாம இங்கு பேச வந்தது வேறு விசயம் .. ஆனா பேசுவது வேறு போல இருக்கு.” என்று கொஞ்சம் அழுத்தமாக சொல்லவும் தான்.. அந்த பேச்சை விடுத்து மீண்டும் திருமணம் செய்யும் இடம் நேரம் என்று அனைத்தும் சொல்லி விட்டு ..

தீக்க்ஷயன் குடும்பம் விடை பெறும் போது தான் தாங்கள் கொண்டு வந்து பூ வர்ஷினியின் தலையில் வைக்காது இருந்ததை சாந்தா கவனித்தது.

அவர்கள் முறைப்படி பெண்ணை நிச்சயம் செய்வது என்றால் பெண்ணின் தலையில் பூ வைத்து உறுதிபடுத்திக் கொள்வர்.. இது தான் அவர்களின் சாங்கியம்..

சாந்தா தட்டில் இருந்த பூவை பார்த்தவர் தன் அக்கா மறந்து விட்டார்கள் என்று,. உண்மையில் சரஸ்வதி மறந்து தான் விட்டார்..

அவருக்கு தன் மகனும் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும்.. அதே சமயம் தன் மகனிடம் தன் பேத்திக்கு தான் முதல் உரிமையாக இருக்க வேண்டும்..

இந்த இரண்டுக்கெட்டான் மன நிலையில் மறந்து விடைப்பெற.. சாந்தா தான் தட்டில் இருந்த பூவை எடுத்து வர்ஷினியின் தலையில் வைத்தது..

அதை பார்த்த ஸ்வேதா “ சின்ன அத்தை வர்ஷினி தலையில் நீங்க இது இரண்டாவது முறை பூ வைத்து உறுதி செய்யிறிங்க லே.” என்று சாந்தா தன் மகனுக்கு நிச்சயம் செய்யும் போது அவர் வர்ஷினியின் தலையில் பூவை வைத்ததை குறிப்பிட்டு சொல்லி விட.

சிரித்த முகத்துடன் பூவை வைத்த சாந்தாவின் முகம் ஒரு மாதிரி மாறி போயின.. வர்ஷினியின் முகத்திலுமே மாற்றம் தான்..

ஆனால் சாந்தாவின் மனநிலை இன்னுமே மோசம் என்று தான் சொல்ல வேண்டும்.. அவர் பயந்து போய் தான் தன் மகனையும் மருமகளையும் பார்த்தது.

எப்போதுமே தன் வீட்டு விசேஷத்திற்க்கு எதற்க்கும் வராத தன் சின்ன மருமகள்.. இந்த சின்ன பெண் பார்க்கும் விழாவுக்கு ஊருக்கு முன் கிளம்பி நானும் வந்து நிற்கிறேன் என்று சொன்ன போதே..

தன் மகன் வாசுவை அழைத்து விட்டார் சாந்தா.. இது போல இவளும் வராடா என்று சொல்ல.

வாசுவோ.. “ நீங்க ஏம்மா இதை எல்லாம் சொல்லிட்டு போறிங்க.. கோயிலுக்கு போறேன் என்று சொல்லிட்டு போயிட்டு வர வேண்டியது தானே..” என்று கத்தி விட்டான்..

சாந்தாவுமே மகனிடம். “நான் என்ன டா திருட்டு தனமா செய்யிறேன். பொய் சொல்லிட்டு போக.. நீ வா.. உன் பொண்ட்டாடிய எல்லாம் என்னால சமாளிக்க முடியாது..” என்று சொல்லி விட.

அலுவலகத்தில் இருந்து அரக்க பறக்க ஓடி வந்தவன். இதோ இவர்களுடம் இணைந்து கொள்ள.

ஆனால் வாசு மனைவியான கவிதாவோ.. “உங்க அண்ணனோட உங்களுக்கு பார்க்க ரொம்ப ஆர்வம் போல..” என்ற இந்த பேச்சில், தாய் மகன் இருவருமே அதிர்ந்து தான் கவிதாவை பார்த்தனர்..

அதிர்ந்தனரே தவிர.. ஏன் இது போல பேசுற என்று கண்டிக்க எல்லாம் இல்லை … காரணம்.. ஏதாவது சொன்னால், கவிதாவின் மொத்த ஜனமும் பங்ஞ்சாயத்துக்கு வந்து விடும் என்ற பயமே..இதில் ஸ்வேதா வேறு இப்படி சொல்ல.

இப்படி பல பேச்சுக்கள் மன சங்கங்கடங்களுக்கு இடையில் தான் அன்றைய பேச்சுக்கள் முடிந்தது.

வீடு வந்த தீக்க்ஷயனுக்குமே ஒரு மகிழ்ச்சி இல்லாத தன்மை தான்.. இவனுக்கே இப்படி என்றால், இவர்கள் சென்ற பின் கூட வர்ஷினியிடம் தனித்து பேச என்று நின்று விட்ட அவளிடம் அண்ணன் அக்கா குடும்பத்தினர்..

என்னவோ கோர்ட்டில் நிற்க வைத்து கேள்வி கேட்பது போல… அத்தனை கேள்விகள் பேச்சுக்கள்..

கீர்த்தனா.. “அத்தனை நகை வாங்கினியா அக்கா என் கிட்ட கேட்கனும் என்று உனக்கு தோனவே இல்லையா.” என்று அவள் ஆரம்பித்தாள்..

ஸ்ரீவச்சன்.. “ எந்த நம்பிக்கையில் அத்தனை லட்சம் தீக்க்ஷயன் அக்கவுண்ட்டுக்கு உன் பணத்தை மாத்தின..?” என்று அவன் ஒரு கேள்வி கேட்க..

இதில் அண்ணனின் அம்மா சொன்ன.. “நான் கூட என்ன டா இது இரண்டாம் தாரமா கல்யாணம் செய்துக்குறாளே என்று நினைத்தேன்.. பரவாயில்லை பசையுள்ள இடம் என்பதினால் தான் இது மாப்பிள்ளைக்கு இரண்டாம் கல்யாணம் என்பதும் கண்ணுக்கு தெரியல.. ஒரு குழந்தை இருப்பதுமே பிரச்சனையா தெரியல..

ஆனா பாரு.. அவங்க வீட்டு சைட் ஒரு சில முகம் சரியில்ல. நாளை பின்ன அந்த குழந்தையை வைத்தே கூட பிரச்சனைகள் வரலாம்.. அப்புறம் எல்லாம் என் மாப்பிள்ளையை நீ பஞ்சாயத்துக்கு கூப்பிட கூடாது..” என்று சொன்னவரிடம் வர்ஷினி கத்தி சொல்ல வேண்டும் போல் தான் இருந்தது…

உங்களுக்கு மாப்பிள்ளையாகும் முன்னவே அவன் எனக்கு அண்ணனாக ஆகி விட்டான் என்று.. ஆனால் தன் அண்ணனே வாய் மூடி அமைதியாகி நிற்கும் போது இவள் மட்டும் பேசி என்ன பிரயோசனம்.. அமைதியாகி போனாள்..

ஆனால் மனதிற்க்கும் அவ்வளவு பேச்சுக்கள் அவளுக்குள் ஓடிக் கொண்டு இருந்தது.

அதுவும் அண்ணனின் மாமியார் சொன்ன குழந்தையை வைத்து பிரச்சனை வரும் என்று,,’என்ன வரும்..? குழந்தையால் எனக்கு என்ன பிரச்சனை வரும்..

நான் நன்றாக பார்த்து கொண்டால், என்ன பிரச்சனை வரும் என்று நினைத்தவளுக்கு தெரியவில்லை..

அனுபவம் வாய்ந்த அவளின் அண்ணனின் மாமியார் கவனித்து தான் சொல்லி இருக்கிறார் என்பது.

அனைவரும் சென்ற பின் தனித்து இருந்த வர்ஷினி தன் தலையில் சூடி இருந்த பூவை தொட்டு பார்த்தாள்..

பூவின் அளவு சொன்னது.. இன்று தன்னை திருமணத்திற்க்கு உறுதி செய்து சென்று உள்ளனர் என்று,,

ஆனால் வர்ஷினியின் மனதில் அதற்க்கு உண்டான மகிழ்வு சிறிதும் இல்லை… காரணம் தீக்க்ஷயனோ குழந்தையோ கிடையாது சுற்றி இருந்தவர்களின் பேச்சினால் தான்… ஏதோ ஒரு பயம்..

தீக்க்ஷயன் அழைத்து பேசிய போது.. “ ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கு..?” என்று கேட்ட போது கூட வர்ஷினி ஒன்றும் சொல்லவில்லை..

தீக்க்ஷயனே… “மத்தவங்க பேச்சை எல்லாம் பெருசா எடுத்துக்காதே வசி..” என்று இந்த வார்த்தை சொன்ன போது தான் வர்ஷினி..

“தீனா நாம நம்ம இந்த லைப்ல தேத்துடவே கூடாது தீனா..” என்று சொன்ன வர்ஷினியின் பேச்சில் அத்தனை உறுதி இருந்தது..

ஆனால் தன் திருமண வாழ்க்கையை வெற்றி அடைய செய்ய வர்ஷினி எத்தனை எத்தனை பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்பது அந்த ஆண்டவனுக்கு மட்டுமே தான் வெளிச்சம்…
 
Active member
Joined
Jun 23, 2024
Messages
71
அக்கா அண்ணன் அப்படி என்ன செஞ்சு கிழிச்சாங்க 😨😨😨😨 இவங்க கிட்ட சொல்லிட்டு தான் நகை வாங்கி இருக்கணுமா 👿 😈 😈 👿

எல்லாரும் சேர்ந்து சந்தோஷமான நிகழ்வை மோசமான மனநிலைக்கு கொண்டு போயிட்டாங்க 🥶🥶🥶🥶🥶🥶🥶

சாந்தா தீஷனும் என் மகன் தான் என்று அந்த மூதேவி கிட்ட சொல்லி இருக்கலாம் 😔 😠 😔 😠
 
Last edited:
Active member
Joined
Jun 1, 2024
Messages
105
முடியல... இப்போவே bp ஏத்துறாங்க.... 😩😩😩😩😩😩

அதுலயும் இவளோட அண்ணன் அக்கா பண்றதெல்லாம் ரொம்ப அதிகம்.... எங்க இவ அவங்களுக்கு பாரமாகிடுவாளோ ன்னு துரத்தி விட்டுட்டு இப்போ அவங்களுக்கு சொல்லலைன்னு பேசுறாங்க., பத்தாயிரம் தங்கச்சி கேட்டதுக்கு கணக்கு பார்த்தவன் எல்லாம் இப்போ தீக்ஷனோட சொத்து கணக்கு கேட்குறான்.... 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬

என்னவோ எப்படி இவங்களுக்கு மத்தியில வாழப் போறாங்களோ.... 😰😰😰😰😰
 
Joined
Jul 9, 2024
Messages
4
கல்யாணத்த இங்கே முடிச்சுட்டு வெளிநாட்டுல வேலையை continue பண்ணியிருக்கலாம். நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து இருக்கலாம்
 
Active member
Joined
May 12, 2024
Messages
199
Irukkira ore thangachiyai vechi paarkka thuppilla… vandhuttanga poramai pada 🥴🥴🥴

Saraswathy amma ku badhila Santha vechittanga poova.. mudinji ini… Swetha ippo kannu kadhu mookku vechi kadhaippa
 
Top