Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Mogathin Monam...18..2

  • Thread Author
அத்தியாயம்…18…2

ஒரு வழியாக வர்ஷினி தீக்க்ஷயனின் திருமணம் தீக்க்ஷயன் வீட்டு குல தெய்வத்தின் முன் நிலையில் ஒரு ஐம்பது பேர் மட்டுமே வந்து இருக்க மிக எளிய முறையில் தான் திருமணம் நடந்து முடிந்து இருந்தது…

ஐந்து நாட்கள் முன் இருந்த மனதின் சஞ்சலங்கள் ஏதும் இல்லாது தான் அந்த தெய்வத்தின் முன்.. கை கூப்பி.. வேண்டிக் கொண்டு இருந்தாள் வர்ஷினி.. அவள் தெய்வத்திடம் வேண்டி கொண்டது ஒன்றே ஒன்று தான்..

நான் இந்த வாழ்க்கையில் தோத்து விட கூடாது என்பது தான்..

திருமணம் மட்டும் கிடையாது வர்ஷினியே மிக எளிமையாக தான் தன்னை அலங்கரித்து கொண்டு இருந்தாள்..

மாதம் மாதம் பியூட்டி பார்லருக்கு செலவு செய்யும் அதே வர்ஷினி தான் தன் திருமணத்திற்க்கு கூட தன்னை தானே தயார் செய்து கொண்டாள்..

பட்டு புடவையுமே சின்ன கரை வைத்து மிக எளிமையாகவும், அதே சமயம் மிக அழகாகவும் இருந்ததில், தீக்க்ஷயன் வாங்கி வைத்து இருந்த நகைகளில் சின்ன சின்னதாக இருந்த நகைகளை மட்டுமே அணிந்து கொண்டு தீக்க்ஷயனின் பக்கத்தில் நின்று கொண்டு இருந்தவளின் தோற்றம் மட்டும் அல்லாது ஜோடி பொருத்தம் கூட அவ்வளவு கச்சிதமாக பார்ப்பவர்கள் கண்ணுக்கு தெரிந்தது..

தீக்க்ஷயன் குடும்பத்தின் மூத்த பங்காளியின் மனைவி கூட.. “அந்த பெண் நம்ம தீக்க்ஷா பக்கத்தில் பல்லி போல நின்னுட்டு இருந்தா. ஆனா இந்த பெண் நம்ம மவனுக்கே பிறந்தது போல இருக்கு..” என்று தட்சணா மூர்த்தியிடம் சொன்ன போது பக்கத்தில் சரஸ்வதியுமே நின்று கொண்டு இருந்தவரின் காதிலுமே இந்த வார்த்தை விழந்தன தான்..

அந்த மூத்த பெண் மணி நினைக்கும் முன் சரஸ்வதியே அதை தான் நினைத்தார்.. அதோடு தன் மகன் முதல் திருமணத்தின் போது எதிலும் முழு ஈடுபாடோடு இல்லாது இருந்தவன்.. இந்த திருமணத்தில் முகத்தில் மகிழ்ச்சியோடு ஐய்யர் சொன்னதை செய்து கொண்டும்.. இடை இடையே வர்ஷினியிடமும் ஏதோ பேசிக் கொண்டும் இருப்பதையும் பார்த்தவரின் மனது நிறைந்து தான் போய் விட்டாது..

ஆனாலுமே இவர்கள் இடையில் அமர்ந்திருந்த தன் பேத்தியை தான்டி தன் மகனின் பார்வை அடிக்கட்டி வர்ஷினியை பார்ப்பதை பார்த்தவரின் மனது தான் மனைவியின் மோகத்தில் பெண்ணை விட்டு விடுவானோ என்ற பயம் அவருக்கு தோன்றுவதை அவரால் தடுக்க முடியவில்லை…

இதோ அனைவரின் மன நிலை வெவ்வேறாக இருந்த போதிலுமே, மனது நிறைவோடு வர்ஷினி தாலியை வாங்கி கொள்ள. மனம் மகிழ்ச்சியோடு அந்த தாலியை கட்டினான் தீக்க்ஷயன்..

அதை கை கட்டி மகிழ்ச்சியோடு மற்றவர்கள் வீசும் பூ தன் மீதும் விழுவதில் தீராவும் கை தட்டி ஆராவாரம் செய்து கொண்டு இருவருக்கும் இடையில் அமர்ந்திருந்தாள்..

தீக்க்ஷயன் நேற்றே தீரா தன்னிடம் . “ம்மா இங்கு நம்மோடு தான் இருப்பாங்க என்று சொன்னிங்க.. ஆனா அந்த வீட்டில் இருக்காங்க..” என்று கேட்டதுமே..

எப்படி நாளைய நிகழ்வை குழந்தையிடம் சொல்வது என்று தயங்கி கொண்டு இருந்த தீக்க்ஷயன்..

மகளின் இந்த பேச்சையே பிடித்து கொண்டவனாக … “ இப்போ எல்லாம் உடனே இங்கு அம்மா வந்து விட முடியாது பேபி. அதுக்கு ஒரு பங்கஷன் செய்யனும்.. அப்போ தான் அம்மா இங்கு நம்ம வீட்டிற்க்கு வர முடியும்.. இங்கேயே தங்கவும் முடியும்” என்று சொன்னதுமே.

தீராவே.. “அப்போ சீக்கிரம் பங்கஷன் பண்ணுங்க..” என்ற வார்த்தையில்..

“பேபி சொன்ன பின் செய்யாம இருப்பேனா நாளைக்கே பங்கஷன் பண்ணிடலாம்.” என்று சொன்னதில்..

இதோ அனைவரையும் விட ஆவளோடு வர்ஷினியின் கை பற்றி கொண்டு .. “ம்மா ம்மா..” என்று அவளோடவே சுற்றிக் கொண்டு இருந்தாள்..

இதோ அதன் தொட்டு முதலில் திருமணம்.. அதை முடித்து கைய்யோடு தன் திருமணத்தை பதிவும் செய்து விட்டான்..

மூன்று நாட்கள் முன் தீக்க்ஷயன் வர்ஷினியிடம்.. “உனக்கு எப்படி எப்படியோ மேரஜ் செய்ய வேண்டும் என்று நினைத்து இருப்ப…ஆனா இது போல சிம்பிளா நம்ம திருமணம் நடப்பதில். கஷ்டம் ஒன்னும் இல்லையே…” என்று கேட்டான்..

அவனுக்கு தான் வர்ஷினிக்கு முன் நடக்க இருந்த அந்த கல்யாணத்திற்க்கு ஏற்பாடு செய்து இருந்த சத்திரம் முதல் கொண்டு கேட்டரிங்க ஆள் வரை தெரியுமே..

அதை வைத்து கொண்டு தான் கேட்டான்..

ஆனால் அவளுமே அதை மனதில் வைத்து கொண்டு தான் வேண்டாம் என்று மறுத்தவள் அவள் சொன்ன ஒரே விசயம்..

நம் திருமணத்தை பதிவு செய்ய வேண்டும் என்பதே.. அந்த கோயில் மிக சிறிய அளவில் உள்ளது.. அங்கு அந்த வசதி எல்லாம் இருக்கிறதோ இல்லையோ என்னவோ.. அதனால் சொல்லி விட.

அவள் சொன்னது போன்று பதிவு செய்து விட்டான். அதன் பின் மூன்னூரு பேரை மட்டுமே அழைத்து அன்று மாலையே வர வேற்ப்பு என்பதை விட ஒரு பார்ட்டி போல் தான் அந்த நிகழ்வு நடந்து முடிந்தது..

அதிலுமே சின்ன கரையிட்ட பட்டுப்புடவை.. நகைகள் பொன் இல்லாது புடவைக்கு மேச்சிங்காக அதுவும் விலை கொடுத்து வாங்காது ஒரு நாள் வாடகைக்கு எடுத்து கொண்டு அணிந்தவளின் தோற்றம்.. காலையை விட இன்னுமே அழகாக தெரிந்தாள்..

கீர்த்தனா அவளின் அண்ணி பிரபா கூட. “ அவ்வளவு நகை வாங்கின. அதை போடாது என்ன இது .” என்று கேட்ட போது கூட இவள் ஒன்றும் சொல்லவில்லை..

ஆனால் அண்ணியின் அம்மா. “ கண் பட்டு விடும் என்று நினைத்து இருப்பா.” என்ற இந்த பேச்சுக்குமே வர்ஷினி அமைதி காத்தாள் தான்.. ஆனால் இவளின் இந்த அமைதி எது வரை என்று தெரியாது.. அவர் அவர் பங்குக்கு இது மட்டும் அல்லாது தொடர்ந்து தான் வாய் விட்டு கொண்டு இருந்தனர்.

ஒரு வழியாக மாலை இந்த பார்ட்டி இரவு வரை ஆக தம்பதியராக தீக்க்ஷயன் இல்லத்தில் கால் பதித்தாள் நம் வர்ஷினி ஒரு கையில் கணவன் பிடியில் தன் கையை கொடுத்தவள்… மறு கையில் தீராவை தன் கை பிடியில் வைத்து கொண்டவளாக புகுந்த இல்லம் வந்து அடைந்து விட்டாள்..

பின் நிகழும் சாங்கியம் என்று ஒன்றன் பின் ஒன்றாக செய்தனர்.. ஒரு சில நிகழ்வுகளில் என்ன செய்வது என்று வர்ஷினி தயங்கிய போது ராஜேஷ்…

“என்ன தீக்க்ஷா உனக்கு தான் இதில் முன் அனுபவம் இருக்கே… நீ சொல்லி கொடுப்பா சிஸ்டருக்கு.” என்ற அவனின் பேச்சில் தீக்க்ஷயன் அவனை முறைத்து பார்த்தான்..

அவன் மட்டும் அல்லாது அவன் தங்கை சுப்ரியாவும் கணவனை முறைக்க.. அப்போது தான் தீக்க்ஷயன் ஒன்றை உணர்ந்தான்..

அது தன் தங்கை தான் ஜார்டனில் இருந்து இங்கு வந்தது முதலே அதிகம் இங்கு வருவதும் இல்லை.. அதே போல அதிக பேச்சும் கிடையாது..

அனைத்தையும் விட அவளின் உடையும், ராஜேஷின் உடையும் வெவ்வேறு நிறத்தில் இருப்பதை பார்த்தான்.. அதை விட முக்கியமானது இருவரும் ஒரு சேர செல்பி எடுத்துக் கொள்ளாததை..

ஆம் எந்த பங்கஷன் என்றாலுமே இருவருமே ஒரே நிறத்தில் தான் உடை உடுத்திக் கொண்டு செல்வர்.. அதே போன்று தான் எந்த இடமாவது கண்ணுக்கு அழகாக தெரிந்தால் போதும்.. இருவருமே செல்பியா எடுத்து தள்ளி விடுவர்..

பின் முகநூல், மற்றும் இன்ஸ்டாகிராம் என்று பதிவு செய்து விடுவர்.. ஆனால் இதில் எதையும் ஒன்றையும் இன்று செய்யாது அமைதியாக நின்று கொண்டு இருந்த சுப்ரியாவை பார்த்தவனுக்கு, ஏதோ சரியில்லை என்று நினைத்தான்.

ஆனால் அதன் பின் தங்கையை பற்றி நினைக்காத அளவுக்கு தன் திருமணத்தின் முதல் நாளே அவனுக்கு பிரச்சனை தொடங்கி விட்டது..

அதாவது இதற்க்கு முன் அவனின் அறை மாடியில் தான்.. அந்த அறை அதை ஒட்டிய பால்கனி.. என்று அவனே கட்டிக் கொண்டது. பின் திருமணம் முடிந்து பவித்ராவோடு திருமணம் முடிந்ததும்.. வசந்தி.. முதல் நாளே..

“என் பொண்ணு ஒரு நாளுக்கு எத்தனை முறை மேலும் கீழுமா நடந்து கொண்டு இருப்பா… கீழே தான் அத்தனை அறை இருக்கே.. கீழேயே தங்கட்டுமே..” என்ற அந்த பேச்சுக்கு தீக்ஷயனுமே உடனே ஒத்து கொண்டு விட்டான்..

காரணம்.. ஒரு முறை தன் அறையை அழைத்து கொண்டு காட்ட.. பால் கனி இவன் அறை என்று மாடியில் ஒரு சுற்றி விட்டு கீழே இறங்கி வந்த போதே பவித்ராவுக்கு கொஞ்சம் மூச்சு வாங்கி தான் விட்டது…

பவித்ராவுக்கு இந்த வீடு புதியது கிடையாது தான்.. ஆனால் மேல் அவன் இருக்கும் அந்த பகுதி புதியதாக எடுத்து கட்டியது… அதனால் மனைவியை அழைத்து சென்று கட்ட நினைத்தான்..

நாளை அவளுமே வாழும் அறை தானே. பிடித்து இருக்கா..? ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமா…? என்று மனைவிக்கும் முக்கியத்துவம் கொடுக்க நினைத்து தான் அழைத்து சென்றது.

ஆனால் கீழே வந்து மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி அமர்ந்தவளின் நிலையை பார்த்து..

“என்ன உனக்கு இதுக்கே இப்படி மூச்சு முட்டுது..” என்று சும்மா தான் கேட்டான்..

ஆனால் அதற்க்குள் அவள் அம்மா வசந்தி.. “ என் பொண்ணுக்கு மாடி ஏறி எல்லாம் பழக்கம் இல்ல தீக்ஷா. அது தான் புதுசா ஏறினது மூச்சு வாங்குது.. இதுக்கு நீ நோயாளி என்பது போல் என் பொண்ணை பேசுவியா நீ..? என்பது போன்றான பேச்சில் தீக்ஷயன் அப்போது என்ன இது என்று தான் பார்த்தான்..

அதோடு பவித்ராவை பற்றி தனிப்பட்டு அவள் உடல் நிலை சரியில்லை.. இதையும் தான்டி.. அவள் உடல் நிலையை பற்றி தன்னிடம் சொல்லி இருந்து இருக்கலாமே.. திருமணத்திற்க்கு பின்னாவது..

அவள் இறந்த பின் தானே எனக்கு அவளின் உண்மையான நிலையே தெரிந்தது.. என்பது தான் அவனின் வருத்தமே…

மாடியில் இருக்கும் அந்த அறை அவன் அத்தனை பிடித்து பார்த்து பார்த்து கட்டியது.. பவித்ராவோடு இருந்த போதும் அவன் அந்த அறையில் இருக்க முடியவில்லை..

அதன் பின்னுமே. பவித்ரா இறந்ததுமே, குழந்தையை இவன் கையில் வந்து விட….

“கை குழந்தையை வைத்து கொண்டு மாடியில் எப்படி இருப்ப. கீழே இருந்தால் குழந்தையை நான் பார்த்து கொள்ள வசதியாக இருக்கும்..” என்று அவனின் அம்மா சொல்ல.

வயதான காலத்தில் மாடி ஏறி ஏறி வர முடியுமா…? கைக்குழந்தைக்கு என்ன என்ன வேண்டும் என்று தனக்கு என்ன தெரியும்.. அம்மாவுக்கு தானே தெரியும் என்று தான். இந்த இடைப்பட்ட நாட்களில் தன் அறையை கீழே மாற்றிக் கொண்டது..

இன்று காலை தீக்க்ஷயன் வேலை செய்பவரை அழைத்து.. “மாடியில் இருக்கும் என் ரூமை க்ளீன் செய்து விடுங்க.’ என்று சொல்லி அதற்க்கு என்று தனிப்பட்ட பணத்தையும் கொடுத்து விட்டு தான் சென்றது.

அனைத்து சடங்கும் முடிந்த பின்.. தீக்க்ஷயன் குழந்தையை தூக்கி கொண்டவன் தன் மனைவியை கை பிடித்து அழைத்து கொண்டு மேல செல்லும் போது..

முதல் பிரச்சனையாக சரஸ்வதி… “என்ன தீக்க்ஷா மேல போற.?” என்று கேட்டார்.

தீக்க்ஷயன் என்ன இது என்பது போன்று தன் அன்னையை பார்த்தாலுமே.. “எங்க ரூமுக்கு தான்ம்மா.” என்று சொன்னான்.

தீக்ஷயனுக்கோ அனைவரின் முன்னும் இது என்ன கேள்வி.. காலையிலேயே இந்த சடங்கு எல்லாம் வேண்டாம் என்று தன் அன்னையிடம் சொல்லி விட்டான்..

அதனால் அது எல்லாம் செய்யாத போதுமே, அன்றைய இரவுக்கான சடங்கு தெரியும் தானே.. அதனால் அங்கு இருந்த அனைவருமே தான் குழந்தை மனைவியோடு மேல செல்வதையே குறு குறு என்று பார்த்து கொண்டு இருக்க..

விரைந்து மேல சென்று விட நினைக்கும் இந்த நேரத்தில் நிற்க வைத்து கேள்வி கேட்டால், அந்த எரிச்சல் அவனுக்கு..

ஆனால் சரஸ்வதியோ மகனின் நிலை புரியாது..

இப்போ உன் ரூம் கீழே தானே தீக்க்ஷா..?” என்று சரஸ்வதியின் பேச்சு மகனிடம் இருந்தாலும், பார்வை மருமகளிடம் தான் இருந்தது..

வர்ஷினிக்கு மாமியாரின் அந்த பார்வை ஒரு வித சங்கடத்தை கொடுத்தது..

அதுவும் தன் அக்கா அண்ணியுமே தங்களை கவனிப்பதில், விட்டால் ஓடி விடுவாள் என்ற மனநிலை அவளுக்கு…

தீக்க்ஷயனுக்குமே அன்னையின் பேச்சில்.. “ இது என்ன கேள்வி… பேச்சும்மா. என் ரூம் மேல தானே… பேபிக்கு என்று தானே இருந்தேன்.. இப்போ பேபி வசி கவனிப்பா. அது தான் மேல் ரூமுக்கு ஷிப்ட் ஆகிட்டேன். என்று சொன்னவனுக்கு மனைவியின் மன நிலையுமே புரிந்ததில் அவளின் கை பிடித்துக் கொண்டவன். அவனின் அம்மா அடுத்து பேசும் முன்.. அவன் பேச்சிலராக இருந்த போது இருந்த தன் அறைக்குள் அழைத்து சென்று விட்டான்..

கீழே இருந்த சரஸ்வதிக்கோ தன் உறவுகள் முன் நிலையில் தன் மகன் தன்னை அவமானம் படுத்தி விட்டான் என்பது போன்று உணர்ந்தார்..

அதோடு அவர்கள் உறவில் சரஸ்வதியோடு வயதில் மூத்த பெண்மணி ஒருவர்.. “ என்ன சரசு.. ? உன் மவன் என்ன சின்ன பையனா.. இங்கு தங்கு அங்கு தங்கு என்று நீ வழி நடத்த… உன் அண்ணன் மகளோடு அவன் எந்த லட்சணத்தில் வாழ்ந்தான் என்று உனக்கு தெரியாதா…? சின்ன சிறுசுங்க. அதுங்க வாழ்வதை அழகு பார்த்து நாம வழி விட்டு ஒதுங்கி நிற்கனும்.. அதோடு அவன் ரூம் மேல தானே இருந்தது..

“அந்த பெண் முடியாத பெண்.. பின் குழந்தைக்காக கீழே இருந்தான் திரும்ப மேல தங்கிக்கிறேன் என்று சொல்றான்.. நீ எல்லாத்துக்குமே மூக்கை நுழைக்காதே.. சரசு.. நம்ம மரியாதையை நாம தான் காப்பாற்றிக் கொள்ளனும்..” என்று மூத்த பெண்மணி பேசிய பேச்சு சரஸ்வதிக்கு பெருத்த அவமாரியாதையாக தெரிந்தது..

பின் வர்ஷினியே மேல சென்ற பின் அவளின் அண்ணன் அக்கா குடும்பத்திற்க்கு அங்கு என்ன வேலை முறையாக விடைப்பெற்று சென்று விட்டனர்..

இருவருமே.. “பரவாயில்லை இந்த வீடு கூட பெருசா தான் இருக்கு.. முதல்ல பேசிய அந்த வாசு முடிந்து இருந்தா கூட இவள் இவ்வளவு வசதியா இருந்து இருக்க முடியாது..” என்று கீர்த்தனா ஸ்ரீவச்சனிடம் சொல்ல.

ஸ்ரீவச்சன் அம்மா மனைவியோ.. “அது தெரிந்து தானே இரண்டாம் தாரமாக இருந்தாலுமே பரவாயில்லை என்று கட்டி இருக்கா..” என்று சொல்ல ஸ்ரீவச்சன் மட்டும் ஒன்றும் பேசாது அமைதியாக வந்தான்..

முதல் முறை ஒரு அண்ணனாக அவன் மனது யோசிக்க ஆரம்பித்தது… தனிப்பட்டு தீக்ஷ்யன் பார்க்க நன்றாக இருக்கிறான்.. படித்து நல்ல வேலை… சொத்தும் இருக்கு… இரண்டாம் தாரம் தானே பரவாயில்லை.. அதுவும் வர்ஷிக்கு பிடித்து இருக்கும் போது.. பின் என்ன இன்று இதோ இன்று மாலை கூட அவனின் யோசனைகள் இப்படி தான் இருந்தது..

ஆனால் வீடு வந்து பாலும் பழமும் கொடுக்கும் போது ராஜேஷ் பேசிய அந்த நக்கல் பேச்சில் ஸ்ரீவச்சன் தன் தங்கையின் முகத்தை தான் பார்த்தான்.

சட்டென்று ஒரு இருள் அவள் முகத்தில் வந்து உடனே அதை மறைத்தவளாக சிரித்த முகமாக மாறி போன தன் தங்கையின் முகத்தையே பார்த்திருந்த ஸ்ரீவச்சனுக்கு முதல் முறையாக மனது கொஞ்சம் பிசைய ஆரம்பித்தது.. ஒரு பெண் குழந்தையின் தந்தையாக..

ஒரே ஒரு நிமிடம் தன் தங்கையின் இடத்தில் தன் மகள் பவஸ்ரீயை வைத்து பார்த்தவன் உடனே தலையை உலுக்கியும் கொண்டான்.. அவனால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை.. தன் மகளுக்கு இரண்டாம் தாரமா.? அதுவும் ஒரு குழந்தையின் தாயாக திருமணம் செய்து போகும் போதே… தலையில் பாரத்தை சுமப்பதா..? ஸ்ரீவச்சனால் அதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை..

அந்த எண்ணம் உச்சம் கட்டம் அடைந்த நிமிடம் தீக்க்ஷயன் குழந்தையோடு மாடி ஏறும் போது… தன் தங்கைக்கு இன்று முதல் இரவு ஆனால் குழந்தையோடு எப்படி.? முதல் முறையாக பாவம் செய்து விட்டோமோ… தன் பாவம் தன் மகளை தாக்குமோ.. என்ற பயம் மனதில் உருவாக தொடங்கி விட்டது..

அவன் நினைத்தது போல் தான் ஸ்ரீவச்சனின் தங்கையின் முதல் இரவு சும்மா அமோகமாக இதோ நடுவில் குழந்தை படுத்து கொண்டு இருக்க. குழந்தையின் இந்த பக்கம் தீக்ஷயனும்.. குழந்தையின் மறுப்பக்கம் வர்ஷினியுமே படுத்து கொண்டு இருந்தனர்.

தீக்க்ஷயன் தான்.. “ பேபி தூங்குடா தூக்கம் வரலையா.. ப்பா வேணா பால் கொடுக்கட்டா தூக்கம் வரும்.. பேசாம கண் மூடுடா அப்போ தானே தூக்கம் வரும்.. இப்படி பேசிட்டே இருந்தா எப்படி டா பேபி தூக்கம் வரும்..?”

பிடித்து கை பிடித்த பெண் குழந்தையின் அந்த பக்கம் படுத்து கொண்டு இருக்க. கைக்கெட்டும் தூரத்தில் புது மனைவி.. ஆனால் தொட முடியாது.. குழந்தை இன்று தான் பத்து இதோ மணி பதினொன்று தொட்ட போது கூட தூங்காது கொட்ட கொட்ட முழித்து கொண்டு தன் அம்மாவிடம் கதை பேசிக் கொண்டு இருந்தாள்..

கணவனின் அந்த அவஸ்த்தை மனைவிக்கு சிரிப்பையும் வெட்கத்தையும் ஒருங்கே கொடுத்தது..

சிரித்து கொண்டே.. “மதியம் மூன்று மணி நேரம் வரை தூங்குனா தீனா. சீக்கிரம் தூங்க மாட்டா. நீங்க தூங்குங்க.. நீங்க எங்கே போயிட போறிங்க. நான் எங்கே போயிட போறோம்.. நம்ம காலம் ரொம்ப ரொம்ப நீண்டு இருக்கு தீனா…” என்று சொன்ன மனைவியை தீக்க்ஷயனுக்கு அள்ளி அணைத்துட துடித்தான்.. காமத்தினால் அல்ல.. புரிந்து பேசும் அவளின் தன்மையில், தனக்காவது இது இரண்டாம் திருமணம்.. நோயாளி மனைவி என்றாலுமே, வாழ்ந்தான் தானே..

ஆனால் வர்ஷினி.. இருபத்தி நான்கு வயதுடைய பெண்.. இளமை துடிப்பு அவளுக்குமே இருக்க செய்யும் தானே.. அவளுமே இந்த நாளை நினைத்து பார்த்து இருப்பாள் தானே.

தீரா தன் மகள்.. அவள் தூங்காது முழித்து கொண்டு இருக்கிறாளே என்று தான் தொந்திரவாக நினைக்க ஆனால் அவள்… கண் மூடிக் கொண்டான்… மனது நிறைந்து…




 
Active member
Joined
Jun 1, 2024
Messages
105
ராஜேஷ் நீயெல்லாம் நக்கல் பண்ற பாரேன் 😬😬😬😬😬 உன் விஷயம் தெரியட்டும் அப்புறம் இருக்கு..... 😡😡😡

சரஸ்வதிக்கு ஸ்வேதா எல்லாம் சொல்லித் தரணும்ன்னு இல்லை இதுவே விஷம் தான்.... 🤬🤬🤬
பேத்திக்காக அவ்வளவு யோசிக்கிறவங்க பையன் நல்லா இருக்கணும்ன்னு நினைக்கிறவங்க அட்லீஸ்ட் இன்னைக்கு ஒரு நாளாவது குழந்தை என் கூட இருக்கட்டும்ன்னு வாய் வார்த்தைக்காவது சொல்லலாம் தான...
இவங்க எல்லாம் பட்டு தான் திருந்தனும்....

அண்ணனுக்கு இப்போ தான் கொஞ்சமா தங்கச்சி நிலை புரியுது... 😏
 
Active member
Joined
Jun 23, 2024
Messages
71
இரண்டு பக்க சொந்தங்களோட அலப்பறைய தாண்டி நல்ல படியாக கல்யாணம் நடந்துடுச்சு 😍😍😍😍😍😍

குழந்தைய அவ நல்லா பார்த்துக்கிட்டா கூட இந்த சரசு ஏதாவது குறை கண்டு பிடிக்கும் போல 🤔 🧐 🧐 🤔

அண்ணனுக்கு தன் பொண்ணுக்கு பாவம் வந்து சேருமோ என்றதும் தான் கவலை வருது 🤧 🤧 😤 🤥 🤥
 
Last edited:
Member
Joined
May 11, 2024
Messages
61
ராஜேஷ் நீ ஓட்டிக்கிட்டு இருக்குற ரீல் அறுந்து விழும் போது உன்னோட எஸ்பிரின்ஸ் என்னன்னு...

இப்போ தான் ஸ்ரீ உனக்கு தங்கை மேல் பாசம் வருது அது கூட உன் பொண்ணுக்கு பாவம் வந்துட கூடாதுனு...
 
Top