Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Mogathin Monam...19.1

  • Thread Author
அத்தியாயம்…19…1

தீக்க்ஷயன் உறங்கிய பின் தான் தீரா வர்ஷினியின் மீது கால் போட்டு கொண்டு தூங்கி போனாள்.. குழந்தை தூங்கிய பின் வர்ஷினி கணவனை பார்க்க.. கணவனோ ஆழ்ந்த நித்திரையில் சிரித்து கொண்டாள்… பின் இவளுமே காலையில் இருந்த அலச்சலில் உறங்கியும் போனாள்…

காலை ஏழு மணிக்கு அலாரம் அடிக்க.. அவசரம் இல்லாது நிதானமாக தான் எழுந்தாள் வர்ஷினி… அதே நிதானத்தோடு அங்கு இருந்த தன் சூட் கேசில் இருந்து உடையை எடுத்து குளிக்க சென்றவள் குளித்து முடித்து விட்டு தான் தங்கள் அறையையே முழுவதுமாக சுற்றி முற்றி பார்த்தாள்..

பரவாயில்லை நல்லா பெருசா தான் இருக்கு.. நல்லா வசதியாகவும் இருக்கு என்று நினைக்கும் போதே அந்த அறையை ஒட்டி இருந்த பால் கனிக்கு சென்றாள்..

பால் கனி என்றால் சிறிய அளவில் எல்லாம் இல்லாது பெரிய அளவில்.. அதாவது 250 க்கு 250 அளவில் பெரிய பால் கனி அது..

மேல் கண்ணாடியில் மூடியும்.. நான்கு பக்கமும் திறந்த வெளியுமாக மிக வித்தியாசமாகவும், அழகாகவும் இருந்தது அந்த பால் கனி…

அதோடு பச்சை பசல் என்று செடி இல்லாது புல்வெளி அதன் நடுவில் இரண்டு இருக்கைகள்.. சேரும்.. இடம் பெற பார்க்கவே அந்த இடம் மிக ரம்மியமாக இருந்தது..

அவளின் அப்பா அம்மா இருக்கும் போது நிதானமாக காலை பொழுதை இது போல ரசித்து இருக்கிறாள்.. அதன் பின் அவள் வாழ்க்கையின் ஓட்டத்தின் பின் ஒட வேண்டிய கட்டாயத்தில் இதை எல்லாம் மூட்டை கட்டி வைத்திருந்தவளின் மனம் மீண்டும் கிடைத்த இந்த ஏகாந்த வேளையை விட மனது இல்லை..

அதனால் அந்த இடத்தை ரசித்தவளுக்கு இங்கு உட்கார்ந்து காபி குடித்தால் எப்படி இருக்கும் என்று நினைத்தவள் அங்கு இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டவள் பின் இருக்கையில் தன் தலையை சாய்த்து கண்ணை மூடிக் கொண்டவளின் நாசி காபியின் நறுமணத்தை உணர்ந்தது..

என்ன இது காபி குடித்தால் நன்றாக இருக்கு என்று நினைத்தால் வாசனையும் சேர்ந்து வருமா..? என்று நினைத்து கொண்டே கண் திறக்க..

நினைத்ததினால் வந்த வாசனை கிடையாது.. தன் கணவன் உண்மையில் காபி கப்பை தன் முன் நீட்டிக் கொண்டு இருக்கிறான் என்று தெரிந்ததும்.. கணவனை பார்த்து சிரித்தவள்..

“நான் நினச்சேன் காபி குடிக்கனும் என்று.. “ சொன்னவள் கணவனிடம் இருந்து காபியை ஒரு துளி பருகிய பின்..

“உங்களுக்கு..” என்று கேட்டவளிடம்..

“ஏன் உன் காபியை என்னோட ஷேர் செய்துக்க மாட்டியா..?” என்று கேட்டவனிடம்..

“ மாட்டேன்.. “ என்று அழுத்தம் திருத்தமாக மறுத்தாள்..

“ அடி பாவி ஒரு காபி எனக்கு கொடுக்க மாட்டியா..?” என்று கிண்டலாக கேட்டவனிடம்..

“ம் மாட்டேன்.. மத்தவங்க காபி கொடுத்து நான் குடித்து ஒன் இயருக்கு மேல ஆகிடுச்சி.. அதனால இந்த காபி முழுதும் எனக்கு மட்டும் தான்..” என்று சொன்னவளின் பேச்சு என்னவோ சாதாரணம் போல் தான் இருந்தது.

ஆனால் அதை கேட்ட தீக்க்ஷயனுக்கு தான் என்னவோ போல் ஆகி விட்டது.. அதை பற்றி மனைவியிடம் ஒன்றும் சொல்லவில்லை என்றாலுமே இனி காலை காபி தன் மனைவிக்கு நாம் தான் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான்.ஆனால் அந்த காபியை மனைவிக்கு கொடுக்க வீட்டில் என்ன என்ன பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று தெரிந்து இருந்தால், இது போல மனதில் நினைத்து கூட இருந்து இருக்க மாட்டான்..

வர்ஷினி முழு காபி குடித்த பின் தான் கணவனையே நிமிர்ந்து பார்த்தது.. அவள் பார்க்கும் சமயம் தீக்க்ஷயனுமே காபி குடித்து கொண்டு இருந்தான்..

“அப்போ உங்களுக்கும் சேர்த்து தான் எடுத்துட்டு வந்திங்கலா தீனா .” என்று ஒற்றை விரல் நீட்டி கேட்டவளின் அந்த ஒற்றை விரலை ஒரு கை கொண்டு கெட்டியாக பிடித்து கொண்ட வசியின் தீனா.

தன் மற்றொரு கையில் இருந்த காபி கப்பை அங்கு இருந்த டிப்பாவின் மீது வைத்தவன் அவள் அமர்ந்திருந்த இருக்கையின் கை பிடியில் அவளை ஓட்டியது போல் அமர்ந்து கொண்டதுமே..

வர்ஷினி.. “ தீ… னா என்.ன செய்யி…றிங்க.” என்று அந்த நாளு வார்த்தை சொல்லி முடிப்பதற்க்குள் அவளின் வாய் தந்தி அடித்ததோடு சுற்றி முற்றியும் பார்த்து கொண்டாள்.. யாராவது பார்க்கிறார்களா என்று..

“யாரும் பார்க்கல.. இங்கு இருந்தா என்ன தெரியும் என்று எனக்கு தெரியும்.. முதல்ல நீ என்னை பார்..” என்றதும் தீனாவின் வசி அவனை பார்த்தாள்..

நேற்று தான் இருவருக்குமே திருமணம் முடிந்து இருந்தது.. வர்ஷினி கழுத்தில் தீக்க்ஷயன் தாலி கட்டி முழுவதுமாக இருபத்தி நான்கு மணி நேரம் கடந்தும் விட்டது..

அதிலும் நேற்று இரவு அவர்களுக்கு முதல் இரவும் கூட ஆனால் இருவருக்கும் இடையில் யாரும் இல்லாது இப்படி பக்கம் பக்கம்.. அதுவும் ஓட்டினது போல அமர்ந்து கொண்டு இருப்பது இதோ இப்போது தான் இந்த நேரம் தான்..அந்த நேரத்தை இருவருமே ரசித்தனர்…

ஆம் திருமணம் முடிந்ததில் இருந்து இவர்களுக்கு இருவருக்கும் இடையில் தீரா அமர்ந்து கொண்டு இருந்ததினால் இருவருக்குமே பக்கம் பக்கம் அமரும் வாய்ப்பு இல்லாது போயிற்று… எப்போதுமே எப்போதும் கிடைப்பதை விட எப்போதாவது கிடைக்கும் பொருளுக்கு மதிப்பு அதிகம் தானே…

அந்த மதிப்பு மிக்க இந்த நேரத்தை இருவருமே ரசித்து கொண்டனர்… தீனாவின் கை வசியின் கூந்தலுக்குள் புகுந்து முடியோடு அவனின் விரல்களை விளையாட அவனின் விரல் ஈரப்பதத்தை உணர்ந்ததில்,

“தலைக்கு குளிச்சியா..?” என்று கேட்டவனிடம்..

“ம்..” என்று சொன்னவள்.. பின்.. “காலையில் எழுந்ததுமே உங்க சைட் தான்.. ஒரு பாட்டி குளிக்க சொன்னாங்க…”

வர்ஷினி இந்த வார்த்தையை பேச்சு வாக்கில் தான் சொன்னது.. ஆனால் சொல்லி முடித்த சமயன் வர்ஷினியின் மனம் அய்யோ என்று ஆகி போனது.

எதற்க்கு தலைக்கு குளிக்க சொன்னார்கள் என்று தெரியாத அளவுக்கு அவள் ஒன்றும் சின்ன பெண் இல்லையே…

நேற்று அவர்களுக்குள் ஒன்றும் நடக்கவில்லை என்றாலுமே, தான் தலை குளிக்காது அதை மற்றவர்களிடம் வெளிப்படுத்த அவள் விரும்பவில்லை..

அதே சமயம் இதோ குளித்து விட்டேன்.. என்று காட்டி நடந்து விட்டது என்றும் பொய் உரைக்கவும் நினைக்கவில்லை..

மற்றவர்கள் சொன்னார்கள் நான் குளித்தேன் அவ்வளவு தான்.. நடந்ததா.. நடக்கவில்லையா.. நான் இது தான் சொல்ல முடியாது.. உணர்ந்தவும் முடியாது.. இது எங்களின் அந்தரங்கம் இதை தான் நினைத்து குளித்தது..

ஆனால் தலைக்குள் தன் விரலை விட்டு விளையாடிக் கொண்டு இருந்த தீக்க்ஷயனின் விரல் வசியின் இந்த பேச்சில் சட்டென்று நின்றதோடு கூந்தலில் இருந்து வெளியிலும் எடுத்து விட்டான்..

கணவனின் செய்கையில் அவனை வசி பார்க்க.. அப்போது அவனுமே வசியை பார்த்தான்.. அந்த பார்வையின் முன்பு இருந்த அந்த மயக்க இல்லை..

அதற்க்கு மாறாக ஒரு சங்கடம்.. “சாரி வசி.. நேத்து பேபி தூங்கல. நீ சின்ன பெண்” அந்த விசயத்தை தீக்ஷயனால் கோர்வையாக கூட பேச முடியவில்லை.. அவனுக்குள் ஒரு தடுமாற்றம்.

வசி ஏன் எதற்க்கு என்று எல்லாம் கேட்கவில்லை.. ஆனால் பேசினாள்..

“தீனா இது போல தொட்டதுக்கு எல்லாம் நீங்க மூட் அவுட் ஆகுறதும்.. நீங்கலே கில்ட்டியா பில் செய்யுறதுமா இருந்தா. நாம லாங் லைப் இப்படியே தான் போகும் தீனா..”

உண்மையில் இப்போது வசி சொன்னாளே… லாங் லை கில்ட்டியா தான் போகும் என்று.. இந்த வீட்டில் இருக்கும் வரை தீக்க்ஷயனின் மன நிலை அப்படி தான் போக போகிறது என்று தெரியாது..

மேலும்.. “ நேத்து சொல்றது தான் தீனா… நமக்கு இன்னுமே நேரம் இருக்கு..” என்று சொன்னவள்.. தன்னையே பார்த்து கொண்டு இருந்த கணவனின் நெற்றியில் முட்டியவளின் செய்கையில்..

இவனுமே மனைவி செய்தது போல் அவளின் நெற்றியில் முட்டிக் கொள்ள.

“என்ன கொம்பு முளைத்து விடும் என்று பயமா..?” என்று கேட்க அதற்க்கு தீனா பதில் சொல்லும் முன்னவே இவர்களின் இருவரின் நெற்றியையுமே ஒரு சேர நங் என்று முட்டி நின்றாள் தீரா.

குழந்தை வேகத்துடன் ஓடி வந்து முட்டியதால் உண்மையிலேயே வர்ஷினிக்கு வலி.. தீக்ஷ்யனுக்குமே வலி தான்.. ஆனால் அவ்வளவு இல்லை போல.

ஆனால் வசிக்கு வலியில் சட்டென்று.. “உஸ்..” என்று சத்தம் இட்டத்தோடு வலியின் மிகுதியில் நெற்றியை தேய்த்தும் கொண்டான்..

வசியின் வலி மிகுந்த முகத்தை பார்த்ததுமே அவனுமே மனைவியின் நெற்றியை தேய்த்து விட்டவன்..

“என்ன தீரா இது.. ? இப்படியா ஓடி வந்து முட்டுவ வலிக்காதா.? பாவம் பாரு அம்மா..”

தீக்க்ஷயன் இதை சத்தமாக தான் மகளிடம் சொன்னது.

தீராவுக்கு முன்னவே அதாவது இவள் படுக்கையை விட்டு எழும் போதே அவளின் கண்கள் பால்கனியை தான் பார்த்தது..

அப்போது அவள் பார்வையில் பட்டது அம்மா அப்பாவுக்கு முட்டுவதும்.. அம்மா அப்பாவுக்கும் முட்டுவதுமே.. இது ஒரு விளையாட்டு தானே நாமும் போய் விளையாடலாம் என்ற ஆசையில் தான் குழந்தை ஓடி வந்து முட்டியது..

தான் முட்டியதும் அம்மா தன்னையும் அவர்கள் விளையாட்டில் சேர்த்து கொள்வாl என்று நினைத்த குழந்தை…

அம்மா வலியில் கத்தியதும்.. அப்பா தன்னை சத்தம் இட்டதிலும் முகம் ஒரு மாதிரியாகி போயின..

வர்ஷினி தான்.. “என்ன தீனா. குழந்தைக்கு என்ன தெரியும்..?” என்று கணவனை கண்டித்தவள்..

“ லட்டூடா ஒன்னும் இல்லேடா செல்லம்..” என்று கொஞ்சியதில் குழந்தை அப்போதைக்கு சமாதானம் ஆகினாலுமே முகம் முழுவதும் தெளிவடைய காணும்..

பின் குழந்தை எழுந்து ஒன்றும் குடிக்க கொடுக்கவில்லை என்பது நியாபகத்தில் வர.. வர்ஷினி குழந்தையை காலை கடnகளை முடிக்க வைத்து குளிக்கவும் வைத்து..

அவள் உடை இருக்கும் கபோடை திறந்தாள்.. குழந்தை உடை என்று இருப்பது அனைத்துமே ஏதோ பங்கஷனுக்கு போட்டு போவது போல் தான் ஜிகு ஜிகு போன்றும்..

ஸ்டோன் வைத்தும்.. குத்துவதும் போலான உடைகள் மட்டுமே இருக்க. என்ன இது என்று தேடி தேடி பார்த்ததில் ஒரே ஒரு காட்டான் பிராக் இருந்தது..

அது கொஞ்சம் பழையது போன்று இருந்தாலுமே, குழந்தைக்கு இந்த உடை தான் ஏதுவாக இருக்கும் மேலும் வெளியிலா போகிறோம் வீட்டில் தானே இருக்கிறோம் என்று நினைத்து தற்சமயத்திற்க்கு அந்த உடையை குழந்தைக்கு அணிவிக்க..

குழந்தையோ.. “ம்மா இது வேண்டாம்.. அது ..” என்று ஒரு உடையை காட்ட. அந்த உடை போட்டால் கண்டிப்பாக கொஞ்ச நேரத்திலேயே கழட்ட சொல்லுவாள் அப்படி இருந்தது அந்த உடையின் கணமும்.. அதில் பொருத்தப்பட்டு இருந்த கற்களின் எண்ணிக்கையும்.

அதனால் குழந்தைக்கு இது எல்லாம் சொன்னால் புரியாது என்று நினைத்து..

“வீட்டில் தானே இருக்க லட்டூ இது போதும்..” என்று குழந்தையை சமாதானம் செய்து அணிவித்து கொண்டே… தங்களையே பார்த்து கொண்டு இருந்த கணவனிடம்..

“தீனா லட்டூம்மாவுக்கு கொஞ்சம் ட்ரஸ் எடுக்கனும்…” என்றதும்..

“பேபிக்கு தான் பீரோ நிறைய ட்ரஸ் இருக்கே வசி..” எப்போதுமே சிக்கனத்தை கடைப்பிடிக்கும் வசி.. அத்தனை உடை இருந்தும் வாங்க சொல்கிறாளே என்று நினைத்த தீக்ஷயன்.. உடைகள் இருப்பதை மட்டும் கூற.

“ம் பீரோ முழுவதுமே சிகப்பு கலரு ஜிங்கு ஜாங் மங்கள் கலரு ஜிங்கு ஜாங்கு என்பது போல தான் இருக்கு.. குழந்தைக்கு சாப்ட்டா குத்தாது போல போட்டோ தானே குழந்தையுமே கம்பர்டப்புளா இருப்பா..” என்று சொன்னதுமே புரிந்து கொண்டான் தீக்ஷயன்..

காரணம்.. தீரா குளிக்க வைத்து உடை போட்டு கொஞ்சம் நேரத்திற்க்குள் இதை கழட்டுங்க கழட்டுங்க வந்து வீட்டில் யார் இருந்தாலுமே அவர்கள் முன் வந்து நிற்பாள்..

ஆனால் அடுத்த முறை துணி கடைக்கு போகும் போது குழந்தையின் கண்களுக்கும் சரி இவனின் அம்மாவுக்கும் சரி.. அது போன்ற உடையினில் தான் கண்கள் போகும்..

அம்மா குழந்தை ஆசைப்படுவதால் கேட்டதை வாங்கி கொடுத்து விடுவான்.. இப்போது மனைவியின் பேச்சில் புரிந்து கொண்டவன்.. இதற்க்கு தான் குழந்தைக்கு அம்மா தேவை போல. இதையுமே சேர்த்து தான் தீக்க்ஷயன் புரிந்து கொண்டான்..

ஆனால் இந்த புரிதல் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் வேண்டுமே..

இருவரும் பேசிக் கொண்டு இருந்த இந்த இடைப்பட்ட நேரத்தில் குழந்தை மாடியில் இருந்து கீழே இறங்கி ஓடி விட்டாள்..

எப்போதுமே வேலைக்கார பெண் மணியின் உதவியோடு சமையலை முடித்து விட்டு ஹாலில் அன்றைய ராசிப்பலனை பார்த்து கொண்டு இருக்கும் சரஸ்வதி.. அன்றுமே அங்கு இருந்த இருக்கையில் அமர்ந்து தன் வீட்டவர்களின் ராசி மட்டும் வந்தால் உன்னிப்பாக கேட்டும் கொண்டும்.. தன் வீட்டவர்களுடையது இல்லை என்ற போது மாடியுமே பார்த்து கொண்டு இருந்தவரின் கண்ணுக்கு மட்டும் அல்லாது.

தன் பெண்ணுக்கு பள்ளி இல்லை என்றால் எட்டு மணி வரை இழுத்து போர்த்தி தூங்கும் அந்த வீட்டின் மூத்த மருமகள் ஸ்வேதா அன்று பெண்ணுக்கு விடுமுறை நாளிலுமே.. மாமியார் எதிர் இருக்கையில் வந்து காலை ஆறு மணிக்கே வந்து அமர்ந்து கொண்டு விட்டாள்..

மாமியாராவது தன் வீட்டவர்களின் ராசிப்பலனை பார்ப்பதும் .. தன் வீட்டவர்களின் ராசி இல்லாத நேரத்தில் தான் மாடியை பார்த்து கொண்டு இருந்தார் சரஸ்வதி..

ஆனால் ஸ்வேதா வைத்த கண் அங்கு இங்கு போகாது பார்வை மொத்தமும் மாடி படிக்கட்டில் மட்டுமே வைத்து கொண்டு இருந்த ஸ்வேதா கண்ணுக்குமே. குழந்தை தனித்து ஒரு மாதிரி முகத்தை வைத்து கொண்டு நடந்து வருவது கண்ணில் பட்டது…




 
Active member
Joined
Jun 23, 2024
Messages
71
காஃபி வித் இனிமையான காலை 😍😍😍😍😍

குழந்தை டிரஸ் வச்சு ஒரு சண்டைய கிளப்பி விடுவா 😠😠😠இதுல குழந்தை வேற அப்பா திட்டுனாரு என்று சொல்லுவாளே 😣😣😣😣😣😣
 
Last edited:
Active member
Joined
Jun 1, 2024
Messages
105
காலையிலேயே கச்சேரி ஆரம்பமா....
மாமியாரும் மருமகளும் காத்திருந்தது வீண் போகல..... 🤓🤓🤓🤓
 
Active member
Joined
May 12, 2024
Messages
199
Mudhalla intha rendu peraiyum naadu kadathanum… Adei Theena… unakku intha joint family sari varathu… ne un apartmentke poidu
 
Top