Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

mogathin monam...19...2

  • Thread Author
அத்தியாயம்…19…2

தீரா பாதி படி கட்டு கூட கடந்து வந்து இருக்க மாட்டாள்.. ஸ்வேதா ஓடி போய் தீராவை தூக்கிக் கொண்டவள்..

“என்ன டா புஜ்ஜூ.. புஜ்ஜூ பேஸ் டல் அடிக்குது..” என்ற பேச்சில் தான் சரஸ்வதி மீண்டும் மாடி படியை நோக்கி பார்வை செலுத்தியது..

சரஸ்வதி பார்வைக்குமே பேத்தி சோர்வாக இருப்பது போல் தான் தெரிந்தது.. மற்ற நேரமாக இருந்தால், அதாவது தீக்ஷயனுக்கு திருமணம் ஆகாது இருந்து பேத்தி டல்லாக தெரிந்தால், என்ன நினைத்து இருப்பாரோ.

ஆனால் நேற்று மகனுக்கு திருமணம் முடிந்து மனைவி மகளோடு படுக்க சென்றவன்.. காலையில் இப்படி சோர்ந்த முகத்துடன் பேத்தி வந்தது.. அந்த பாட்டிக்கு ஏதாவது காரணம் இருக்குமோ என்று தான் என்ன தோன்றியது..

அதில் ஸ்வேதா தீராவை தூக்கி வந்து அங்கு இருந்த இருக்கையில் அமர்த்தியதும்.. சரஸ்வதி..

“என்ன தீரா. ஏன் சோர்வா இருக்க… …?” என்று சரஸ்வதிக்கு முன்பு இருந்தே பாசம் தான்.. அந்த பாசத்தோடு தான் பாட்டி பேத்தியை விசாரித்தது.. இதில் நடிப்பு எல்லாம் கிடையாது தான்..

பெரியம்மா தூக்கி கொஞ்ச வந்ததில் என்ன இது என்பது போல குழந்தை பார்த்து கொண்டு இருந்த தீரா பாட்டியின் பேச்சில், வாகாக அவர் மேல் சாய்ந்து கொண்டாள்…

அந்த வீட்டில் தந்தைக்கு அடுத்த படியாக குழந்தையிடம் பாசமாக பேசுவது யார் என்றால், அது பாட்டி தானே.. தந்தை தாய் மாடியில் இருக்க.

கீழே இருந்தவர்களில் தனக்கு நெருக்கமாக இருக்கும் பாட்டியின் பக்கம் சாய்வதும்.. கேட்டதற்க்கு பதில் சொல்வதும் இயல்பு தானே.

அதில் அது என்னவோ தீரா காலையில் எழுந்ததுமே தந்தை தன்னை திட்டியதில் இருந்து வர்ஷினி என்ன தான் கொஞ்சி சமாதானம் செய்தாலுமே, குழந்தையின் மனது அல்லவா அப்பா திட்டிட்டாங்க. என்று தான் நினைக்க தோன்றியது..

அதோடு இந்த உடை.. அவளுக்குமே இந்த உடை பிடிக்கவில்லை.. குழந்தைக்கு என்ன தெரியும்..சீதோர்ஷணம் நிலைக்கு ஏற்ப தான் உடை உடுத்த வேண்டும் என்பது.

அதனால் பாட்டி கேட்ட உடனே.. செல்லம் கொஞ்சுவது போல பாட்டியிடம் ஒட்டி உரவாடியவாறு..

“ப்பா திட்டிட்டாங்க…” என்று மூக்கை சுருக்கிக் கொண்டு குழந்தை சொன்னதுமே…

தட்சணா மூர்த்தி கூட படித்து கொண்டு இருந்த செய்தி தாளை கொஞ்சம் கீழே இறக்கி பேத்தியை பார்த்தார் என்றால், சரஸ்வதியும், ஸ்வேதாவும் சொல்லவும் வேண்டுமோ..

இருவருமே ஒரு சேர… “ எதுக்கு..? எதுக்கு..?” என்று கேட்க..

குழந்தைக்கு பெரியவர்களின் ஆட இருக்கும் ஆட்டம் தெரியுமா.. என்ன..? அதனால் காலையில் நடந்ததை சொன்னதோடு ..

தன் ட்ரஸ்ஸை காட்டி.. “ எனக்கு புடிக்கல..” என்றும் சொல்ல.

சரஸ்வதி தன் கணவனிடம்.. “பார்த்திங்க தானே.. தோ அவள் சித்தி வேலையை காட்ட ஆரம்பித்து விட்டா பாருங்க..” என்று சரஸ்வதி தன் கணவனிடம் சொல்லி கொண்டு இருந்த போது தான்..

கணவனும் மனைவியும், ஒரு சேர படிக்கட்டிலில் நடந்து வந்தனர்.. இருவரின் முகத்திலும் அப்படி ஒரு நிறைவு… சிரித்த முகத்துடன் தான் வந்தனர்.

வர்ஷினி மஞ்சள் நிறத்திலான புடவையில் மங்களகரமாகவும் பளிச் என்றும் தெரிந்தாள்…

அவளின் அந்த பளிச் இன்னுமே சரஸ்வதிக்கு கோபத்தை மூட்டியது.. அவள் தலைக்கு குளித்து விட்டு வந்தது வேறு ஒரு விசயத்தையும் அவருக்கு உணர்த்த…

சரஸ்வதி.. “ தீக்க்ஷா என் பேத்தி உங்களுக்கு இடஞ்சலா இருந்தா என் பேத்தி என் கூடவே படுக்கட்டும்..” பட்டென்று சொல்லி விட்டார்..

தலையும் இல்லாது வாலும் இல்லாத இந்த பேச்சு இருவருக்கும் புரியவில்லை.. வர்ஷினி தான்..

“என்ன அத்த..?” என்று கேட்டது..

“ஏன்மா உனக்கு என் மவன் புருஷனா ஆகிட்டா எனக்கு மவன் இல்லாத உறவு போயிடுமா என்ன…? என் மகன் கிட்ட நான் என் பேத்தியை பத்து பேசுறேன்..” என்று ஒரு மாதிரி குரலில் என் மகன் என் பேத்தி என்ற வார்த்தையில் அழுத்தம் கூட்டி பேச.

வர்ஷினி அமைதியாகி விட்டாள்.. ஆனால் தீக்க்ஷயனோ.. “ இப்போ என்னம்மா உங்க பிரச்சனை…?” இப்போது மகனில் குரலும் ஒரு வித எரிச்சல் மிகுதியில் தான் இருந்தது.

ஸ்வேதா இடையில் புகுந்து… ஏதோ சொல்ல ஆரம்பிக்கும் போதே மகேந்திரன்..

“ஸ்வேதா. குழந்தை எழுந்துட்டா போல.. போய் பாரு.” என்று சொல்லி தங்கள் அறைக்குள் அனுப்பி விட்டவன் அவனுமே சென்று விட்டான்.

தட்சணா மூர்த்தி கூட மனைவியிடம்.. “ ஒரு சின்ன விசயத்தை நீ பெருசு படுத்துற சரசு.. “ என்று விட்டு செய்தி தாளை அங்கேயே போட்டு விட்டு தங்கள் அறைக்குள் புகுந்து கொண்டார்.

ஆனால் சரஸ்வதிக்கோ.. தன் பேத்திக்கு தான் தன் மகனிடம் முதல் உரிமை இருக்கு இருக்கும் என்பதை வர்ஷினிக்கு முதல் நாளே புரிய வைத்து விட்டால் தான்.. வருங்காலத்தில் தான் இறந்த பின்னும் கூட தன் பேத்திக்கு எந்த கொடுமையும் இந்த வீட்டில் நடக்காது என்பது ஒரு எண்ணம்..

அதனால் போகாது.. தீக்க்ஷயனிடம் .. “என்ன பிரச்சனையா… ? குழந்தையை எதுக்கு தீக்க்ஷா திட்டின..?” என்று கேட்டார்..

பாவம் தீக்க்ஷயனுக்கு குழந்தையை தான் திட்டியதே மறந்து விட்டான்.. ஏன் என்றால் இது போல திட்டு எல்லாம் தீராவை ஒரு நாளைக்கு பல முறை திட்டி இருக்கிறான்..

காரணம் தீரா குளியலில் இருந்து சாப்பாடு.. ஏன் தூங்க வைப்பது வரை சில சமயம் அந்த அளவுக்கு அடம் பிடிப்பாள்..

மனைவி இழந்து தனிப்பட்ட ஒருவன் சின்ன குழந்தையை கவனித்து கொள்வது என்பது சின்ன விசயம் கிடையாது..

அதுவும் அவனின் வேலையுமே டென்ஷனான வேலை தான்.. அம்மா வயதானவர்கள் குழந்தை பின் ஓட முடியாது.. வீட்டிலுமே வீட்டு அரசியல்.. இதில் பல சமயம் குழந்தையை திட்டி விடுவான்.. பின் சமாதானம் படுத்துவது எல்லாம் தினம் தினம் அந்த வீட்டில் நடப்பது தான்… அதனால் அம்மா என்ன கேட்கிறார் என்று தெரியாது தான் கேட்டது..

“என்னம்மா உங்க பிரச்சனை தான் என்ன.?” என்று கேட்டவனிடம்..

சரஸ்வதி.. “ குழந்தை தெரியாம தானே உன் பொண்டாட்டி நெத்தியிலே முட்டிட்டா அதுக்கு குழந்தையை திட்டுவீயாடா… நீ… ஒரு நாள் தானே டா ஆச்சு.. அதுக்குள்ள உன் மகளை உனக்கு வேறா மாறியாச்சா..?” என்ற இந்த வார்த்தையில் தீக்க்ஷயன் மட்டும் அல்லாது பக்கத்தில் இருந்த வர்ஷினியே அதிர்ந்து போய் நின்று விட்டாள்..

ஒரு நாள் தானே ஆச்சு.. யாரை குறிப்பிடுகிறார் என்பது வர்ஷினிக்கு தெரியும் தானே…

இதற்க்கு முன் சரஸ்வதியை வர்ஷினி மூன்று முறை பார்த்து இருக்கிறாள்… பேசியும் இருக்கிறாள்.. ஆனால் அப்போது இவர்கள் பேச்சு பார்வை அனைத்துமே நல்ல மாதிரியாக தான் தெரிந்தது.

ஆனால் இப்போது என்ன இது…? தன்னை பிடிக்கவில்லையா..? இல்லை தங்கை மகனுக்கு பார்த்து தன் மகனை கட்டி வந்தது பிடிக்கவில்லையா…? என்று யோசித்தாள்..

பாவம் வர்ஷினிக்கு தெரியாத ஒன்று… இவள் இல்லை இவள் இடத்தில் வேறு எந்த பெண் வந்து இருந்தாலுமே, சரஸ்வதியின் மன நிலை இதுவாக தான் இருந்து இருக்கும்..

அதாவது கணவனை தன் கீழ் கொண்டு வந்து தன் பேத்தியை அம்போ என்று விட்டு விடுவார்களோ என்ற பயம் மட்டும் தான் சரஸ்வதிக்கு என்பதும்… மற்றவர்களின் பேச்சை எளிதில் நம்பி விடும் சரஸ்வதியின் இந்த குணத்தை வைத்தே தான் மற்றவர்கள் காரியம் சாதிக்க போவது தெரியாது அவருமே அவர்கள் இழுத்த இழுப்புக்கு செல்வது என்பது.. மகனின் இந்த வாழ்க்கையையுமே நிம்மதி இல்லாது செய்ய கூடியது என்றும் தெரியாது தான் போனார்..

மற்றப்படி சரஸ்வதி நல்லவர்கள் தான்..

மாமியாரின் பேச்சுக்கு தீக்க்ஷயன் என்னவோ சொல்லப்போக. இப்போது வர்ஷினி கை பிடித்து கணவனை தடுத்ததோடு சைகையில் ..”வேண்டாம் விட்டு விடுங்க..” என்றும் சொல்ல.. தீக்ஷயனுமே அமைதியாகி போனதில்… சரஸ்வதிக்கு இதுவுமே என்ன இது.. இனி தன் பேத்தி என்று தான் இருந்தது..

சரஸ்வதி சித்தி என்றால் இப்படி தான் என்று நினையாது கொஞ்சம் நல்ல மாதிரியாக யோசித்து இருந்து இருந்தால், வர்ஷினியையும் நன்றாக கவனித்து இருந்து இருப்பார்.. அவரின் மகன் தீக்க்ஷயனுமே நல்ல மாதிரியாக குடும்பம் நடத்தி இருந்து இருப்பான்.. ஏன் அவர் பேத்தி பேத்தி என்று சொல்கிறாரே.. தீராவுமே மனது பயம் இல்லாது அம்மா அப்பா என்று ஒரு குடும்பமாக மனதில் பதிந்து மற்றைய குழந்தைகளை போல அந்த வயதிற்க்கே இருக்கும் துள்ளலோடு அவளின் குழந்தை பருவத்தை நகர்த்தி கொண்டு இருந்து இருப்பாள்..

ஆனால் காலம் காலமாக மனதில் பதிந்து போன சித்தி என்பவள் இப்படி தான் என்று சினிமாவிலும், கதையிலும் ஒரு பிம்பத்தை பதித்து விட்டது.. வர்ஷினி தன் பேத்தியை நன்றாக பார்த்து கொள்வாள் என்று அந்த கோணத்தில் யோசிக்க முடியாது செய்து விட்டது..

உறவுகளிலேயே சிக்கலானது மாமியார் மருமகள் உறவு தான்.. அந்த உறவில் கூட மாமியார் நல்ல முறையில் மருமகளை நடத்தினார். மருமகள் மாமியாரிடம் அன்பாக பெத்த அம்மாவை போல் தான் பார்த்து கொள்கிறாள் என்று சொன்னால் கூட நம்பி விடும் நாம்..

ஒரு போதுமே மாற்றாந்தாய் கணவனின் முதன் மனைவியின் குழந்தையை நல்ல முறையில் பார்த்து கொள்கிறாள் என்று சொன்னால் நம்புவது கடினம் தான்.. ஏன் என்றால் சித்தி என்றால் இப்படி தான் இருப்பார்கள் என்பதின் விதி முறைகளை சொல்லி கொடுத்து விட்டதினால், இதில் சரஸ்வதி மட்டும் விதி விலக்காகவா இருக்க போகிறார்.. அவருமே அதன் வழி தான் யோசித்தார்…

வர்ஷினி அமைதியாக இரு என்றதில் அமைதியாகி விட பின் நேரம் ஆகி விட்டதால் குழந்தைக்கு டிபன் கொடுத்தாள் வர்ஷினி..

அதற்க்குமே சரஸ்வதி.. “போன்வீட்டா கொடுக்கல.” என்ற ஆரம்பிக்க.

வர்ஷினி பொறுமையாகவே. “நேரம் ஆகிடுச்சி அத்த. இப்போ போன் வீட்டா குடிச்சிட்டு பின் டிபன் சாப்பிட மாட்டா.. நேரம் எடுத்து தான் சாப்பிடுவா… அவளுக்கு ட்ரஸ் எடுக்க வெளியில் போகனும்.” என்று சொல்ல..

சரஸ்வதி அதற்க்கும் குதர்க்கமாக. “ ஒன்னு நீ சீக்கிரம் எழுந்து குழந்தைக்கு கொடுத்து இருக்கனும்.. இல்ல இவனாவது பொண்டாட்டிக்கும் தனக்கும் காபி கலந்து கொண்டு சென்றவனுக்கு குழந்தை நியாபகமும் இருந்து அவளுக்கே சேர்த்து கலந்து கொண்டு சென்று இருக்கலாம்..” என்று இதை சத்தமாக சொன்னவர்..

முனு முனுப்பாக.. “தான் பெத்ததா இருந்தா அது தோனும்..” என்று மெல்ல சொன்னாலுமே அது வர்ஷினியின் காதில் நன்றாகவே விழுந்தது..

பெண்ணவளுக்கு இப்போது சரஸ்வதியின் மன நிலை தெளிவாகவே புரிந்து விட்டதோடு.. இங்கு தனக்கு வரும் பிரச்சனையின் ஆணி வேரையும் கண்டு கொண்டு விட்டாள்..இந்த பிரச்சனையை எப்படி கொண்டு போவது.. தான் தீராவை நல்ல முறையில் கவனித்து கொண்டாள் இவர்களின் இந்த பயம் போய் விடும் தானே….

அந்த நம்பிக்கை கொடுத்து விட்டாள் போதும்.. அப்போது கூட வர்ஷினி.. இந்த பிரச்சனையின் தீவிரத்தை உணரவில்லை என்று தான் சொல்ல வேண்டும்..

ஆனால் ஒரு நாள் தன் அடி மடியிலேயே கை வைக்கும் நாள் வந்த போது தான் பொங்கி விட்டாள்…

சாப்பிட்டு விட்டு மாடி வந்து தீக்ஷயனுக்கோ தன் அன்னையில் இந்த போக்கு புரியவில்லை.. என்ன இது. இந்த பிரச்சனையை அவன் நினைத்து பார்க்கவில்லை..

அண்ணி ஸ்வேதா ஏதாவது பிரச்சனை செய்வார்கள்… பின் தன் தாய் மாமன் மனைவியும் தன் முன்னால் மாமியாரும் இங்கு வந்து பிரச்சனையை கிளப்பி விட்டு போவார்கள் என்று நினைக்க. இது என்ன ஒரு புது பிரச்சனை என்று நினைத்தவனுக்கு தெரியவில்லை.. அவன் நினைத்தும் பார்க்காத பல பிரச்சனைகளை அவன் எதிர் கொள்ள வேண்டி இருக்கும் என்று..

வர்ஷினி சொன்னது போல கணவன் குழந்தை என்று தன் குடும்பமாக சென்று குழந்தை போடுவது போல ஏதுவாக உடை வாங்கினாள்..

குழந்தையின் கண்கள் ஜொலிப்பது போலவே வாங்கி கொடுத்ததினால் தீரா முதலில் பிடிக்காது இது எல்லாம் வேண்டாம்.. வீட்டில் இருப்பது போன்று இருக்கும் உடையையே அங்கேயும் கை காட்டி கேட்க.

பின் காலை தான் அணிவித்த அந்த உடையை தொட்டு காட்டி .. “லட்டூம்மா இதை காலையில் இருந்து போட்டுட்டு இருக்க. ஆனா இதை நீ கழட்டவ சொல்லலே..

ஆனா அந்த ட்ரஸ் எல்லாம் போட்டா ஏன் கழட்ட சொல்லுற..?என்று கேட்க.

குழந்தை.. “குத்தும்..” என்று சொல்ல.

“அதுக்கு தான் குத்தமா இருக்க. இது போல வாங்குனா நல்லா இருக்கும்.. “ என்று விளக்கி சொல்லவும் புரிந்து கொண்ட குழந்தை பின் மகிழ்ச்சியோடு தான் வாங்கினாள்.. வர்ஷினி கூட ஒரு பொம்மையும் வாங்கி தர குழந்தைக்கு ஏக மகிழ்ச்சி தான்.

பின் வர்ஷினியிடம் அவ்வளவு உடை இல்லை என்று தெரிந்து கொண்ட தீக்க்ஷயன் சில உடைகளை வாங்கி தர. வர்ஷினி பிகு எல்லாம் செய்யவில்லை..

அவளுமே ஒரு சில உடைகளை வாங்க நினைத்தாள் தான்.. அலுவலகம் செல்ல.. பின் திருமணம் முடிந்து விருந்துக்கு என்று கூப்பிடுவார்கள்.. அப்போது சாதாரண உடை இல்லாது கொஞ்சம் கிராண்டாக எடுக்க வேண்டும் என்று நினைத்தாள்..

அதனால் கணவன் கொடுத்ததை வாங்கி கொண்டவள் ஒரு நல்ல ஓட்டலில் மதிய உணவையும் முடித்து கொண்டனர்/

அங்கும் தீரா… “ இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்டவள் ஒழுங்காக சாப்பிடாது வைத்து விட…”

வர்ஷினியிடம் அப்படி ஒரு கண்டிப்பு… “சாப்பிட முடிவதை தான் வாங்கனும் இது என்ன இப்படி வேஸ்ட் செய்துட்டு… “ பின் தீக்ஷயனிடமும்..

“குழந்தைக்கு என்ன தெரியும் தீனா.. நாம தான் அவள் என்ன சாப்பிடுவா..? எவ்வளவு சாப்பிடுவா என்று பார்த்து வாங்கி தர வேண்டும்.” என்று சொன்னவள் அவள் வைத்து மீதி உணவை பேக் செய்ய சொல்லி அதை எடுத்து கொண்டு தான் வீடு வந்தாள் வர்ஷினி..

தீக்ஷயனுக்கு தான் வர்ஷினியின் சிக்கனம் தெரியுமே.. அதுவும் அது ஏன் என்பதுமே தெரியுமே அதனால் சிரித்து கொண்டான் .. அவ்வளவு தான்..

ஆனால் தீக்க்ஷயனின் வீட்டில் என்ன இது அந்த உணவை ஒரு மாதிரி தான் பார்த்தனர்… குழந்தை உடையை பார்த்த சரஸ்வதியும், ஸ்வேதாவும் இது என்ன.. உடை என்று சொன்னவர்கள்..

வர்ஷினியின் உடையை பார்த்து விட்டு சரஸ்வதி.. “உனக்கு மட்டும் விலை அதிகமா வாங்கிட்ட போல. அது தான் நல்லா இருக்கு..” என்று இடக்காக தான் கேட்டார்..

ஆனால் அவரின் அந்த கேள்விக்கு வர்ஷினி பதில் அளிக்கவில்லை.. தீராவின் உடையுமே விலை அதிகம் தான்.. ப்யூர் காட்டான்.. நல்ல தரமான உடையை தான் வாங்கியது.. குற்றம் கண்டுப்பிடிக்க வேண்டும் என்று சொல்பவகளிடம் என்ன தான் நாம் விளக்கம் அளித்தாலுமே, புரியாது போல் தான் இருப்பார்கள் என்று அமைதியாகி விட்டான்..

பின் உணவகத்தில் இருந்து கொண்டு வந்த உணவை தான் வர்ஷினி வீண் செய்யாது சாப்பிட்டது.. அதற்க்குமே ஸ்வேதா கிண்டல் தான் செய்தது..

வர்ஷினியின் திருமணம் நின்றது.. ஏன் என்ற விவரம் தானே ஸ்வேதாவுக்கு தெரியும்.. அதனால் ஸ்வேதா வர்ஷினியை கொஞ்சம் கீழாக தான் நினைத்து கொண்டாள்..

தீக்க்ஷயனுக்கு மனைவி வழியாக வேறு ஒரு வருமானமும் சொத்தும் வந்து விட கூடாது.. இதை நினைத்து தானே வர்ஷினியை தீக்க்ஷயன் கட்டி கொள்ள இவள் வீட்டில் பேசியது..

ஸ்வேதா எதிர் பாராத ஒன்று.. அந்த ஆறுபது சவரன் வாங்கியது.. பின் அதையும் பெரியதாக எடுத்து கொள்ளவில்லை.

அவள் அப்பாவின் கடைசி சொத்து விற்று தானே வாங்கியது. அதோடு தன்னிடம் எழுபத்தி ஐந்து சரவன் இருக்கு.. அதோடு தன் பங்காக அம்மா வீட்டின் பாகம் வரும்.. இவளுக்கு என்ன ஒரு வேலை. இவள் வயதிக்கு முப்பது ஆயிரம் சம்பாதிப்பாளா. தீக்க்ஷயனின் வருமானத்திற்க்கு அவனே..

“இந்த சம்பளத்திற்க்கு நீ போக வேண்டுமா.?” என்று சொல்லி வேலைக்கு செல்வதை தடுத்து விடுவான்..

அவன் தீக்க்ஷயன் அதை செய்யவில்லை என்றால், நாம் செய்து விடலாம்.. குழந்தையை பார்க்காது வேலைக்கு போகவா கல்யாணம் செய்து கொண்டு வந்தா.. தன் குழந்தை என்றால் இது போல விட்டு விட்டு செல்வாளா..? என்று அத்தையிடம் சொன்னால் போதும்.. இப்போது தான் அவர்கள் தன் பேச்சை கேட்கிறார்களே.. என்று நினைத்தாள்..

அதாவது வர்ஷினியை வேலைக்கு செல்ல விடாது செய்வது எல்லாம் ஒரு பெரிய விசயம் இல்லை என்பது போல் தான் அவள் நினைத்து கொண்டது.

ஆனால் வர்ஷினி எதை விட்டாலும் விடுவாள்.. அதாவது அவள் வேலைக்கு செல்வதை கணவனே தடுத்தாலுமே அவனை எதிர்ப்பாளே தவிர.

ஒரு நாளும் தான் வேலைக்கு போவதை விட மாட்டாள்.. காரணம்.. யாரும் கை கொடுக்காத போது அவளுக்கு கை கொடுத்தது அவளின் இந்த வேலை தான்..

அப்பா அம்மா இருக்கும் போது கேம்பஸில் கிடைத்தது தான் இந்த வேலை.. அவ்வளவு ஆர்வமாக எல்லாம் வேலைக்கு செல்ல வேண்டும். இந்த நிலை அடைய வேண்டும் என்ற எந்த குறிக்கோளும் இல்லாது தான் சென்றாள்..

ஆனால் அவளின் தந்தை மட்டுமே.. பெண்களுக்கு வேலை எவ்வளவு முக்கியம் என்பது அவ்வப்போது சொல்லி இருக்கிறார் தான்.. ஆனால் அப்போது எல்லாம் இவள் ஏனோ தானோ என்று தான் கேட்டு இருக்கிறாள்..

ஆனால் அவளின் அந்த வேலை எத்தனை முக்கியம் என்பதை அனுபவத்தில் உணர்ந்தவள் எப்படி விடுவாள்..

வர்ஷினி தீக்க்ஷயனுக்கு அன்று இரண்டாம் இரவு… தீக்ஷயன் அந்த இரவை கொஞ்சம் ஆர்வமாக தான் எதிர் பார்த்தான்.

அவன் மட்டுமா வர்ஷினியுமே. .. இன்று வெளியில் சென்ற போது இடையில் தீரா இருந்தாலுமே குழந்தையையும் தான்டி.. ஒரு சில நெருக்கம்.. அந்த பார்வை பரி மாற்றம்.. அதுவும் மற்றவர்கள் தங்கள் இருவரையும் பார்த்து விட்டு மீண்டுமே பார்த்து விட்டு சென்றது.. நாங்கள் இருவருமே பொருத்தம் தான் என்று..

கட்டிலை ஒட்டி இருந்த பீரோவின் கண்ணாடியில் தெரிந்த தங்கள் தோற்றத்தை எடைப்போட்ட வாறே.

இன்று வாங்கி வந்த உடைகளை அடுக்கி கொண்டு இருந்தாள் வர்ஷினி… மனைவியின் பார்வையை தீக்க்ஷயனுமே கவனித்தான் தான்.அவனுக்குமே அவளின் அந்த பார்வை இன்று முழுவதுமே ஒருவருக்கு ஒருவர் அருகில் இருந்த அந்த நெருக்கம்.

இன்னும் தங்களுக்குள் நெருக்கத்தை கூட்ட அவனின் மனது எண்ணியது.. நீங்கள் இருவரும் மட்டும் நினைத்தால் போதுமா. நான் நினைத்தால் தான் நீங்கள் ஒன்று சேர முடியும் என்பது போல அன்றும் தீரா இரவு நேரம் கடந்து தான் தூங்கியது.. அவளின் அப்பா அம்மாவை தூங்க வைத்த பின்…
 
Active member
Joined
Jun 23, 2024
Messages
71
இப்போ தான் ஆரம்பம் 😕😕😕 அதுக்கே கண்ணை கட்டுதே 🤭🤭🤭🤭

வர்ஷினி தான் குழந்தைய பார்த்துக்கிறதை வச்சு அத்தை மாறிடுவாங்க என்று நினைக்குறா 🤦🏻‍♀️ 🤦🏻‍♀️ 🤦🏻‍♀️ 🤦🏻‍♀️ ஆனால் கூட இருக்க சனியன் ஒழுங்கா யோசிக்க விடாது 🥶🥶🥶🥶🥶
 
Last edited:
Active member
Joined
Jul 13, 2024
Messages
165
Nice. Ippovae Kannai kattudhae. If Dheera is envisioning all these problems, why doesn’t he plan to go the apartment which is also closer to office. Baby can be put in school now as well.
 
Last edited:
Active member
Joined
May 12, 2024
Messages
199
Mudhalla antha Magendran and Theekshanyan appa tendu peraiyum velukkanum… pondattiyai adakka thuppilla 😡😡😡

Varshini velaikku vettu vaikka parkkuranga… avalai pathi theiryama… Swetha padipulla gandam…
 
Active member
Joined
Aug 16, 2024
Messages
267
சுற்றிலும் negative vibes கொண்டவர்கள் இருக்கும் போது அவர்கள் வாழ்க்கையை சீக்கிரம் ஆரம்பித்து விட முடியுமா என்ன.?
 
Top