Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Mogathin Monam...20.1

  • Thread Author
அத்தியாயம்…20…1

முதல் காலை விடியல் போல் தான் மறுநாள் காலை விடியலும் இருந்தது.. ஆனால் இருவரின் மனமும் முன் தினம் போல் மகிழ்ச்சியில் திளைக்கவில்லை.. காரணம் இருவருக்குமே நேற்றயை இரவு ஏமாற்றம் தான்..

அதுவும் தீக்க்ஷயனுக்கு ஏமாற்றத்தோடு குற்றவுணர்வுமே.. மனைவியின் முகம் நேற்றைய போல பொலிவு இல்லாது இருந்ததை பார்த்து… தீரா சீக்கிரம் தூங்காததினால் தானே என்று நினைத்து..

மனைவியிடம் மன்னிப்பு கேட்டான் நேற்றையே போலவே நெற்றியில் முட்டி.. நேற்றைய போலவே அவன் கையில் இரண்டு காபி கப் கோப்பை இருந்தது..கூட ஒரு சின்ன ப்ளாஸ்கில் மகளுக்கு ;போன் வீட்டாவையும் கைய்யோடு கொண்டு வந்து விட்டான்..

ஆனால் நேற்றைய காலை போல அவளின் முகத்தில் ஒரு தெளிவு இல்லாது யோசனையில் இருக்க.. நேற்று போல் தீக்க்ஷயன் மனைவியின் பக்கம் வந்தான்..

வந்தவன் மனைவியின் முகத்தை தன்னை பார்க்கும் படி செய்ததோடு மனைவியின் முகத்திற்க்கு அருகில் கொண்டு சென்றான்..

கணவனின் இந்த அதிக படியான நெருக்கத்தில், வர்ஷினி நொடியில் தன் யோசனையில் இருந்து தள்ளி வந்தவள்..

நேற்று போல் சுற்றும் முற்றும் பார்க்காது தங்கள் அறையில் மெத்தையில் படுத்து உறங்கிய குழந்தையை தான் வர்ஷினி பார்த்தது.. குழந்தை தூங்கி கொண்டு தான் இருந்தாள்.. அதில் ஒரு சின்ன நிம்மதி வர்ஷினிக்கு. பின் அந்த பால் கனிக்கு நேற்று இரவு மாட்டிய ஸ்கீரினை எடுத்து விட்டவள்.. பின் தான் கணவன் அருகில் அமர்ந்தது..

அமர்ந்தவள் இப்போது வர்ஷினி கணவனை பார்த்தாள்.. இப்போ என்ன வேண்டுமானலும் செய்து கொள் என்பது போல..

ஆனால் தீக்க்ஷயனுக்கு தான் முன் இருந்த அந்த மோகம் அறுப்பட்ட நிலை… இரண்டு நாள் முன் தான் திருமணம் முடிந்த மனைவிக்கு இந்த சின்ன நெருக்கம் கூட என்னால் கொடுக்க முடியவில்லை..

அதற்க்கு ஆயிரம் பத்திரம் பார்த்த பின் தான்.. அவள் என்னிடம் வர முடிகிறது… நான் பரவாயில்லை.. தீரா என் மகள்… ஆனால் வர்ஷினி.. இதே நிலை தொடர்ந்தால், உண்மையில் தீக்க்ஷயனுக்கு பயம் பற்றிக் கொண்டது..

இதற்க்கு ஏதாவது செய்ய வேண்டும்.. குழந்தை ஏன் சீக்கிரம் தூங்க மாட்டேங்குறாள்,, முன் தூங்கி விடுவாளே.. என்று யோசித்தவனுக்கு முன் பகலில் குழந்தை தூங்குவாள் தான்.. ஆனால் இரண்டு மணி நேரம் சென்றாலே.. அவனின் அம்மா குழந்தையை எழுப்பி விட்டு விடுவார்.

காரணம் எத்தனை நேரம் குழந்தை வெறும் வயிற்றில் தூங்கும்.. அடுத்த காரணம் இதோ இந்த காரணம் தான் இரண்டு நாட்களாக இரவில் அத்தனை நேரம் கழித்து தூங்குவது தான்..

இந்த இரண்டு இரவில் முதல் இரவில் அன்று தான் தங்கள் திருமணம். பின் மாலை வரவேற்ப்பு என்றதில் குழந்தையை யாரும் எழுப்பாது நன்றாக தூங்க வைத்தது.. நேற்று கடை கடையாக சுற்றி விட்டு மதியம் வசி கூட படுத்து உறங்கியது.. அம்மா என்றால் எழுப்பி விட்டு இருப்பார்கள்.. வசிக்கு இது எல்லாம் தெரியாது இல்லையா..? அதனால் தான்.. இன்று மதியம் ரொம்ப நேரம் தூங்க வைக்க வேண்டாம் என்று சொல்லி விட வேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்க.

மனைவியோ… “தீராவை ஸ்கூலில் சேர்க்க வேண்டாமா..? இதுவே ரொம்ப லேட்… அதனால பிரிகேஜ் சேர்க்காது எல்கேஜில் சேர்த்து விடலாம்..” என்று விட.

தீக்க்ஷயனுமே.. மனைவியின் பேச்சில் தன் மோகத்தில் இருந்து விடுப்பட்டவனாக மகளை பற்றி..

“ஆமாம்.. லாஸ்ட் இயரே சேர்ப்பதா தான் இருந்தது.. ஆனால் வீட்டில் பிரச்சனையில். சரி அதை விடு நீ சொன்னது போல பிரிகேஜ் வேண்டாம் எல்கேஜே சேர்த்து விடலாம்..” என்று சொன்னவன்..

சேர்க்கும் பள்ளியை பற்றி தீக்க்ஷயன் சொல்ல. வர்ஷினிக்கோ “அதுவா… “அதுல டொனேஷனே.. இவ்வளவு கொடுக்கமும்.. பீஸ் என்று இவ்வளவு…” என்று பணத்தின் தொகையின் அளவு சொன்னவள்..

பின்.. “எல்லாமே ஒரு எஜிகேஷன் தான் தீனா. சும்மா பேரை வைத்து அவ்வளவு டொனேஷன் நம்ம கிட்ட இருந்து பிடுங்குறான்.. அதுவும் செக்கோ டிடியோ எல்லாம் கிடையாது… கேஷா தான் கொடுக்கனும்.. அப்போ தானே சாக்குப்பையில் திணிக்க முடியும்.” ஒரு வித ஆதங்ககத்துடன் தான் வர்ஷினி சொன்னது..

தீக்ஷயனுக்குமே விசயம் தெரியுமே.. அவனின் அண்ணன் மகள் ஸ்ருதி கூட அங்கு தானே படிக்கிறாள்..

அதோடு வர்ஷினி சொன்ன. “இங்கு இருந்து ரொம்ப தூரம். குறைந்தது ஒரு மணி நேரம் ஆகும். அவங்க ஸ்கூல் பஸ் தான் வைக்கனும்.. அதுக்கும் அத்தனை பணம் பிடிங்குவாங்க… அதோட இத்தனை தூரம் ட்ராவல் குழந்தை ரொம்ப சோர்ந்து போயிடுவா…” என்று வர்ஷினி சொன்ன விளக்கமும் காரணமும் சரி தான் என்று தீக்ஷயனுக்கு தோன்றியது..

அதனால் . “ சரி வசி.. இந்த ஸ்கூல் வேண்டாம்.. வேறு எந்த ஸ்கூல்ல சேர்க்கலாம்..?” என்று கேட்டதற்க்கு..

இங்கு இருந்து பத்து நிமிடம் தொலைவில் இருந்த ஒரு பள்ளியின் பெயரை சொன்னவள்.

“என் கூட வேலை பார்ப்பவரின் மகள் அங்கு தான் படிக்கிறா. அவர் நல்ல மாதிரி தான் சொன்னாரு..” என்பதை சேர்த்தும் சொன்னாள்..

தீக்க்ஷயனுக்குமே இந்த பள்ளியை பற்றியும் தெரியும்.. தரமான பள்ளி தான்.. படிப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்காது விளையாட்டு.. மாணவ மாணவியர்களின் விருப்பம் தெரிந்து அதற்க்கு ஏற்றது போல கூடுதல் திறமையும் வளர்ப்பது பற்றி.. அதனால் வசியின் அந்த பேச்சுக்கும் ஒத்து கொண்டு விட்டான் தீக்க்ஷயன்..

இங்கு எல்லாம் சரி தான்.. அதாவது மாடியில் மட்டும் பேச கூடிய பேச்சே இது.. இது வரை தீராவை கண்டு கொள்ளாதவர்கள் கூட இனி அவள் மீது கூடுதல் கவனத்தை செலுத்துகிறார்களே இந்த வீட்டில் இருப்பவர்கள்..

பின் அடுத்த பேச்சாக அவர்கள் இருவரும் தங்கள் வேலை செல்வது பற்றிய பேச்சில்..

தீக்க்ஷயன்.. “இன்னைக்கே நான் வேலையில் ஜாயின் பண்ணிக்கிறேன் வசி… நீ ..” என்று கேட்டவனிடம்..

தன் இரண்டு விரலை நீட்டி… “ இரண்டு நாள்..” என்பது போல சொன்னவளின் இரு விரலையும் பற்றிக் கொண்ட தீக்க்ஷயன்..

ஒரு மாதிரி குரலில்.. “பேபியை மதியம் ரொம்ப நேரம் தூங்க வைக்காதே” என்று சொன்னதும் வர்ஷினிக்கு கணவன் ஏன் சொல்கிறான் என்று முதலில் புரியவில்லை…

புரிந்த பின்.. “ கேடி பக்கரு..” என்று கணவனின் தோளை தட்ட..

தீக்க்ஷயன்.. “ அது என்ன லாங்வேஜ் வசி கேடி பக்கர்…” என்று கேட்டவனுக்கு..

“நீங்க 90டி கிட்ஸ்.. உங்களுக்கு இது எல்லாம் தெரியாது..” என்று விளையாட்டாக சொல்ல இப்படியாக அவர்களின் காலை பொழுது நகர.. இடையில் மகளும் எழுந்து கொண்டு இவர்களுடம் ஐக்கியமாகி போய் விட… சிறிது விளையாடிய பின்..

தீராவுக்கு காலை கடன் செய்வதில் உதவிய பின் கணவன் கொண்டு வந்து பானத்தை குழந்தைக்கு கொடுத்த பின் தான் குடும்பமாக கீழே சென்றனர்..

பின் காலை உணவு என்று வர்ஷினி தான் தீராவுக=க்கு வைத்தது. வீட்டில் பொங்கல் கத்திரிக்காய் கொஸ்த்து செய்து இருந்தது..

தீராவின் முன் அதை வைத்து.. “இனி நீயே சாப்பிட பழக வேண்டும் லட்டூம்மா…” என்று பள்ளிக்கு செல்லும் போது அங்கு அவள் தானே சாப்பிட வேண்டும்… வீட்டில் இப்போதே பழகினால் தானே நாளை அவள் பள்ளியில் சாப்பிடுவா என்ற எண்ணத்தில் தான் வர்ஷினி சொன்னது..

சொல்லி விட்டு தனக்கும் தன் கணவனுக்குமே பொங்கலை எடுத்து வைத்தவள் சாப்பிடவும் ஆரம்பித்து விட்டாள்..

இவளுக்கு முன் தீரா சாப்பிட தொடங்கி விட்டாள் என்பது வேறு விசயம்… என்ன ஒன்று கொஞ்சம் சிந்தி தான் சாப்பிட்டாள்.. உடையில் பட்டாலும் கரை படாத வாறு ஒரு டவல் வர்ஷினி முன்பே போட்டு விட்டதால், அந்த டவல் மீது தான் தீரா சிந்திய உணவு பட்டது… இது ஒரு நல்ல பழக்கம் தான்..

ஆனால் குறை கண்டுப்பிடிக்க வேண்டும் என்று ஒருவர் நினைத்து விட்டால், நீ செய்யும் அனைத்துமே மற்றவர்களின் பார்வைக்கு குறையாக தானே தெரியும்..

அது போல தான் சரஸ்வதியின் கண்ணுக்கு வர்ஷினி தீராவையே சாப்பிட சொன்னது சித்தியின் கொடுமையாக பட்டது..

“குழந்தைக்கு என்ன தெரியும்.. உன்னால ஊட்ட முடியலேன்னா நான் ஊட்டி விட்டு இருப்பேனே..?” என்று கேட்ட மாமியாரை வர்ஷினி என்ன டா இது என்பது போல் தான் பார்த்தாள்..

தான் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் முன்பே சொல்லி விட்டு செய்ய முடியுமா..? இல்லை செய்த பின் விளக்கம் சொல்லி கொண்டு தான் இருக்க முடியுமா.? இது தொடர்ந்தால், ஒரு வித எரிச்சல் ஏற்படாதா..? சரஸ்வதியின் பயம் வர்ஷினிக்கு புரிந்தது தான்..

ஆனால் இப்போது நான் என்ன தான் தீராவை நன்றாக பார்த்து கொள்வேன் என்று அடித்து சொன்னாலுமே நம்பவா போகிறார்கள்.. இவர்களை நம்ப வைக்க நான் என்ன தான் செய்ய வேண்டும்..? என்று ஒரு ஆயாசம்.. அதில் ஒன்றும் வாய் திறக்கவில்லை..

இதுவே சரஸ்வதிக்கு தன்னை வர்ஷினி அவமதிப்பதாக தான் நினைத்தார்..

அதனால் ஏதோ திட்டுவது போல வாய் திறக்கும் முன் தீக்க்ஷயன்..

“ம்மா நாளைக்கு தீராவை பள்ளியில் சேர்க்க அட்மிஷன் ஃபாம் வாங்க போறோம்… அங்கு அவள் தானே சாப்பிடனும்.. இங்கு சாப்பிட பழக்கப்படுத்தினா தானே அங்கு அவள் சாப்பிடுவா…” என்ற பேச்சின் உண்மையில் சரஸ்வதியால் ஒன்றும் பேச முடியவில்லை..

ஆனால் ஸ்வேதா மாமியாரை பேச விட்டு வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தவள்.. சரஸ்வதியின் இந்த அமைதி பிடிக்கவில்லை போல.. அதனால்..

“என்ன தீக்க்ஷயன் அத்தை தானே தீராவை சின்ன வயசுல இருந்து பார்த்துக்கிட்டது. ஸ்கூலில் சேர்ப்பது என்பது எவ்வளவு பெரிய விசயம். அதை நீங்க முடிவு செய்துட்டு கடைசியா வந்து அத்தை கிட்ட சொல்லுவீங்கலா..?” என்று இதோ பிரச்சனை.. இதை வைத்து நீங்க தொடருங்க என்பது போல சரஸ்வதிக்கு எடுத்து கொடுக்க.

பின் அதை பற்றிய பேச்சுக்கள். என்று சரஸ்வதி கேட்க. வர்ஷினிக்கு வேறு வாய் பத பத என்று தான் இருந்தது..

ஆனாலுமே அமைதி காத்தாள்.. ஆனால் இவளின் இந்த அமைதி எது வரை என்று குடும்பத்தினருக்கு தெரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஏன் என்றால் வர்ஷினியின் இந்த அமைதி தான் ஸ்வேதா சரஸ்வதிக்கு மேலும் மேலும் பேச வைத்தது.. காரணம் வர்ஷினி அமைதி என்பது கிடையாது..

அவளுக்கு கேட்க யாரும் கிடையாது.. இங்கு தான் இருந்தாக வேண்டும்.. நம் பேச்சை கேட்டு தான் ஆக வேண்டும் என்ற ஒரு எண்ணம்..

ஸ்வேதாவுக்கு கூடுதலாக வர்ஷினி தனி குடுத்தனம் போகலாம் என்று திட்டம் போட்டாலுமே, சரஸ்வதி விட மாட்டார்கள். காரணம் தீரா.. குழந்தையை சித்தியை நம்பி எப்படி தனியே விடுவது இதை ஒரு முறை அத்தையிடம் சொன்னால் போதும்.. அவர்கள் அதையே பிடித்து கொண்டு விடுவார்கள் என்பது அவளின் எண்ணம். பார்க்கலாம் ஒருவர் ஒருவருக்கு ஒவ்வொரு எண்ணம்.

ஆனால் தீக்க்ஷயன் வர்ஷினியின் எண்ணம் என்பதை விட விருப்பம்.. நியாயமான ஆசை அன்று இரவு கூட நடக்கவில்லை.. காரணம் அன்றும் தீரா தாமதமாக தான் தூங்கினாள்.. அதற்க்கு காரணம். அன்றும் மதியம் அதிக நேரம் தீரா தூங்கியதே காரணம்..

அன்று இரவும் தூங்காத போது முதல் முறை தீக்க்ஷயன்.. கோபமான குரலில்.. “ என்ன வசி.. நான் பேபியை ரொம்ப நேரம் தூங்க விடாதே என்று தானே சொன்னேன்..” என்று கடிந்து கேட்டதில்..

வர்ஷினியின் முகம் ஒரு மாதிரியாகி விட்டது… மனைவியின் முகம் மாற்றத்தை பார்த்து தான் தீக்ஷயனுக்கு தன் தவறே புரிந்தது..

“சாரி வசி சாரி வசி..” என்று தீக்க்ஷயன் மனைவியிடம் அத்தனை மன்னிப்பை கேட்டான்..

வர்ஷினி எதுவும் பேசவில்லை… மனைவியின் இந்த அமைதி தீக்ஷயனுக்கு என்னவோ போலாகி விட.

“வசி.” என்று அழைத்தவன் குனிந்து கொண்டு இருந்த மனைவியின் முகத்தை நிமிர்த்தி பார்த்தவனுக்கு தெரிந்தது.. மனைவியின் கலங்கிய கண்களே.. அத்தனை வேதனை மனதில் அடக்கி வைத்த போது கூட அழுகாது தன் கண்ணீரை உள்ளடக்கி தன்னிடம் பேசியவளின் இந்த கண்ணீர் தீக்ஷயனை பலமாக தாக்கியது..

“வசி.” படுத்து கொண்டு இருந்தவன் அதிர்ந்து மனைவியிடம் வந்தான்..

“என்ன வசி என்ன வசி..” என்று கணவன் அத்தனை கேட்ட பின் தான் வர்ஷினி.

முதல் முறை தன் மனதில் ஏன் எனக்கு உங்களை பிடித்து இருக்கிறது என்பதை விளக்கினாள்..

“நீங்க என் அப்பாவை நியாபகம் படுத்தினிங்க வசி.. நீங்க தீராவை கவனித்து கொள்வது எனக்கு என் அப்பா என்னை பார்த்து கொண்டது நியாபகத்தில் வந்துடுச்சி.. தீனா..” என்றவளின் பேச்சு தீக்ஷயனை வாய் அடைத்து விட்டது.

அதுவும் அவள் தொடர்ந்து பேசிய. “ பொதுவா பெண்களுக்கு அப்பாவை தான் பிடிக்கும்.. எனக்குமே என் அம்மாவை விட அப்பாவை தான் பிடிக்கும் தீனா.. பிடிக்கும் என்றால், என்னை எப்போவுமே கொஞ்சிட்டு இருப்பார் என்று இல்ல தீனா. ஆனா வாழ்க்கையின் நிதர்சனத்தை சொல்வாரு.. ஆனா அது அப்போ எனக்கு புரியல தீனா…புரியும் போது அவர் இல்ல.. நீங்க தீராவிடம் பேசுவது எல்லாமே எனக்கு என் அப்பாவை தான் நியாபகம் படுத்திச்சி. உங்க கிட்ட தான் என் அப்பா கிட்ட தோனுற பாதுகாப்பு தோனுச்சி…”

எந்த வீக்கும் என் கிட்ட இருக்க கூடாது என்று நினச்சிட்டு இருந்தேன்.. ஆனா இப்போ சொல்றேன் தீனா.. என் வீக் பாயிண்ட் நீங்க தான்.. நான் உங்க கூட இருக்கேன். எனக்கு இப்போதைய சந்தோஷம் இது… எனக்கு இது எல்லாம் பெருசா தோனல தீனா..” என்று படுக்கையை காட்டி சொன்னவள்..

பின்.. “அதுக்கு என்று ஆசையே இல்ல என்று சொல்லலே.. தீனா.. பிடிச்சவன் கூட வாழனும்..எல்லாம் பெண்ணுக்கும் இருக்கும் ஆசை எனக்கும் இருக்கு… அதே போல ஒரு குழந்தை தீராவுக்கு தங்கையோ தம்பியோ.. எல்லா ஆசையும் இருக்கு தான் தீனா. ஆனா எல்லா ஆசையுமே உங்களை விட பெருசு இல்ல தீனா..” என்று தன் மனதில் இருப்பதை கணவனிடம் சொல்லி விட்டு வர்ஷினி நிம்மதியாக தூங்கி விட்டாள்.

ஆனால் இதை எல்லாம் கேட்ட தீக்க்ஷயனுக்கு தான் அன்று இரவு தூக்கம் இல்லாத இரவாக சென்றது..

தன் மனைவியின் நம்பிக்கையை நாம் காப்பற்றுவோமா. காப்பற்ற வேண்டும் கண்டிப்பாக காப்பற்ற வேண்டும்.. என்று நினைத்தான்..அவன் இப்போது நினைத்ததை நிறைவேற்ற.. தன் மொத்த குடும்பத்தையுமே எதிர்த்து நிற்பான் என்று தெரியாது.. தனக்கு தானே சத்தியமும் செய்து கொண்டான்…
 
Active member
Joined
Jun 23, 2024
Messages
71
வர்ஷினி தீஷன் இரண்டு பேரும் குழந்தையோட நல்லதுக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்யுறாங்க 🤩🤩🤩🤩🤩🤩

சாதாரண ஸ்கூல்ல சேர்த்து விடுறா என்று அதுக்கு ஒரு பஞ்சாயத்து வைப்பாங்களே 😣😣😣😣😣😣
 
Last edited:
Active member
Joined
Jun 1, 2024
Messages
105
வர்ஷினி குழந்தைக்கு எது நல்லதுன்னு யோசிச்சு ஒவ்வொன்னும் செய்றா.... இவங்க அவ பண்றதுல என்ன குற்றம் கண்டுபிடிக்கிறதுன்னு பூதக் கண்ணாடி வச்சு தேடுறாங்க.... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

சாப்பாடு, டிரஸ் ன்னு ஆரம்பிச்ச பிரச்சனை இப்போ ஸ்கூல்க்கு வந்து நிக்குது..... 🥴🥴
 
Top