Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Mogathin Monam...20..2

  • Thread Author
அத்தியாயம்…20..2

தீராவை பள்ளியில் சேர்ப்பதை முதலில் சரஸ்வதியிடம் சொல்லவில்லை என்ற முதல் பிரச்சனை முடிந்து அடுத்த பிரச்சனையாக ..” ஏன் ஏன் அந்த ஸ்கூல் நம்ம ஸ்ருதிய சேர்த்த ஸ்கூலிலேயே சேர்த்துக்க வேண்டியது தானே..…?” என்று.. அவர்கள் சேர்க்க இருக்கும் பள்ளியின் பெயரை சொன்னதுமே அடுத்த பிரச்சனை ஆரம்பம் ஆயிற்று…

இதற்க்கு இடையில் தீக்ஷயனுக்கு அவன் டீமில் இருந்து அத்தனை அழைப்புகள் கை பேசியில் வர..

அந்த அழைப்பை ஏற்ற தீக்க்ஷயன்.. “என்ன பிரச்சனை என்று பாருங்க. எல்லாத்துக்குமே நான் தான் வரனும் என்றால், நீங்க என்ன வேலை பார்க்குறிங்க…?” என்று தனக்கு கீழ் வேலை பார்பவர்களிடம் எரிந்து விழுந்தான்..

இது போன்று அவன் வேலையில் மற்றவர்களை கடிந்து கொண்டதே கிடையாது.. அவனின் பலமே அவனின் அந்த நிதானம் தான்..

அதனால் தான் அவன் படிக்கும் காலமாகட்டும், வேலையில் சேர்ந்த பின்னுமே சரி.. அவனின் இந்த நிதானம் தான் அவனை படிப்புலும் சரி வேலையிலும் சரி வெற்றி அடைய வைத்தது..

இன்று முதன் முதலாக அவன் தன் நிதானத்தை இழந்தான்.. ஆம் முதன் முதலாக தான்.. பவித்ராவோடான திருமணம் பின் மனைவியின் இழப்பு.. அதுவும் தன் சொந்த தங்கையின் சுயநலம் என்று தெரிந்த பின்னுமே ஒரு விரக்தி நிலைக்கு தான் வந்தானே தவிர.. தன் நிதானத்தை இழக்கவில்லை.

இவனின் இந்த பேச்சை ஸ்வேதா ஆச்சரியத்துடன் பார்த்து இருந்தாள்..தன் கணவனிடம்..

“தீக்க்ஷயன் மட்டும் எப்படி அவ்வளவு நல்லா படித்தான்.அதே போல.. இத்தனை வயசுலே இவ்வளவு சேலரி எப்படி..” திருமணம் ஆன புதியதில் ஸ்வேதா தன் கணவனிடம் கேட்ட போது மகேந்திரன் சொன்னது..

“ அவன் எப்போவுமே நிதானமா இருப்பான்.. படிப்பில் அவனுக்கு ஒரு முறை படுத்தால் ஏறி விடும்.. ஆனால் வேலை… மத்தவங்க பிராஜெக்ட்ல ஏதாவது பிரச்சனையில் எரல் காட்டிட்டா டென்ஷன் ஆகிடுவாங்க. ஆனா என் தம்பி அப்படி ஆக மாட்டான்.. இன்னும் கேட்டால் இன்னுமே நிதானமா தான் அந்த பிரச்சனையை அனுகுவான்..” என்ற வார்த்தை ஸ்வேதாவின் மனதில் வந்து போக..

ஓ.. அப்போ சாருக்கு ஸ்வீச்சு இது தானா.. என்று ஏக குழியில் தான் ஸ்வேதா தன் அடுத்த திட்டத்தை இப்போதே தீட்ட தொடங்கி விட்டாள்..

பேசியில் பேசி வைத்தவன் சரஸ்வதியிடம். “ ம்மா இப்போ உங்க குறுக்கு விசாரணைக்கு பதில் சொல்ல எனக்கு நேரம் இல்ல… ஈவினிங்க வந்து பேசலாம்..” என்று அலுவலகத்திற்க்கு கிளம்பி விட்டான்..

பின் வர்ஷினியுமே தன் அறைக்கு மாடிக்கு குழந்தையுடன் வந்தவள்.. பள்ளிக்கு சேர்க்க உள்ளதால் தமிழ் ஆங்கிலம் எழுத்தை தீராவுக்கு சொல்லி கொடுக்க, குழந்தைற்க்கு ஏற்கனவே அதில் சிறிது பரிட்சயம் போல… அதனால் ஈசியாக கற்றுக் கொண்டாள்..

தன் அலுவலகத்திற்க்கு வந்தவன்.. தன்னை சிறிது நிலைப்படுத்திய பின்னவே தாங்கள் முடித்த வேலையில் என்ன தவறு என்பதை பார்க்க ஆரம்பித்தவன். என்ன தவறு என்பதை அரை மணி நேரத்தில் கண்டுப்பிடித்தவன்.. அடுத்த அரை மணி நேரத்தில் அதை சரியும் செய்து விட்டான்..

பின் தான் அவன் வீட்டில் பேசியது வீட்டு பிரச்சனைகளை மனதில் அசைப்போட்டான்..

திருமணம் முடிந்து மூன்று நாட்கள் தான் ஆகின்றன… பிரச்சனைகள் வரும் என்று அவனுக்கு தெரியும்.. ஆனால் தன் அம்மாவின் மூலம் வரும் என்று அவன் எதிர் பார்க்கவில்லை..

முன் தான் மகள் என்று என் வாழ்க்கையை அழித்தார்கள்.. இப்போது எதற்க்கு பேத்தி கொண்டா.. இவர்களுக்கு பேத்தி என்றால் அவள் எனக்கு மகள் ஆயிற்றே.. அவளுக்கு நான் நல்லது தானே செய்வேன்.. நினைப்பேன்.. தீராவை வைத்து தினம் தினம் ஒரு பிரச்சனை என்று வீட்டில் வந்தால், என்னை விடு.. வசி…

இன்று போல் என்றும் அவளாள் அமைதியாக இருக்க முடியுமா.? இரு என்று தான் நான் சொல்ல முடியுமா…? எல்லாவற்றையும் விட முக்கிய பிரச்சனையாக அவனை இப்போது பயம் முறுத்தும் விசயம்..

தீராவை வைத்து இப்போது தொடர்ந்து பிரச்சனை எழுந்தால், மனது தன்னால் பிரச்சனை எந்த காரணத்தினால் உண்டாகிறதோ.. அதன் மீது வெறுப்பு எழுவது இயல்பு தானே.

அம்மா இது போல தீராவை வைத்து வசி மனதை கஷ்டப்பட வைத்தால், வசிக்கு தீராவின் மீது இருக்கும் பாசம் குறைந்து போகாதா…? அந்த பயமும் கூடவே…

ஒரு பெண்ணுக்கு கிடைக்க வேண்டிய எந்த விசயத்தையுமே நம்மால் வசிக்கு கொடுக்க முடியவில்லையே என்ற குற்றவுணர்வும் சேர்ந்தே காலையில் தீக்க்ஷயனை தன்நிலையை இழக்க வைத்து விட்டது..

இனி போல் இது போல இருக்க கூடாது என்று நினைத்தவனுக்கு இந்த பிரச்சனையை தீர்க்க வழி மட்டும் அவனுக்கு கிடைக்கவில்லை..

இதில் வீட்டில் குழந்தையை தூங்க வைக்க வேண்டாம் என்று கணவன் சொன்னதால் வர்ஷினி மதியம் குழந்தை சாப்பிட்ட பின் மீண்டும் மேல தங்கள் அறைக்கு போக பார்த்த போது..

சரஸ்வதி.. “குழந்தை என்னோடு படுக்கட்டும் ..” என்று சொல்ல…

வர்ஷினியுமே சரி என்று விட்டாள்.. தீராவுமே பாட்டியோடு படுத்து தூங்கி அதிகம் நாள் ஆனதால் மகிழ்ச்சியோடு தான் பாட்டியோடு அவர்கள் அறைக்கு சென்றது..

வர்ஷினியுமே இதையே தான் நினைத்தாள்.. தான் இந்த வீட்டிற்க்கு வருவதற்க்கு முன் தீனா வேலைக்கு சென்று விடுவதால் காலையில் இருந்து இரவு வரை அத்தை தானே குழந்தையை பார்த்து கொண்டது…

அவர்களுக்குமே குழந்தையோடு இருக்க ஆசை இருக்கும் தானே என்று அவள் நல்ல மாதிரியாக தான் நினைத்தது,,.

ஆனால் வர்ஷினி போலவே அனைவரும் நினைக்க வேண்டுமே.. குழந்தை சாப்பிட்டு முடித்து அவர் பாட்டியோடு படுத்து உறங்கி இரண்டு மணி நேரம் ஆனதால் வர்ஷினி மீண்டுமே கீழே சென்றால் குழந்தை எழுந்து விட்டதா என்று…

கணவன் இன்று கீழே இறங்கும் முன்.. சொன்னது நியாபகத்தில் இருந்தது..

“அம்மா பேபியை ரொம்ப நேரம் எல்லாம் தூங்க விட மாட்டாங்க வசி.. அதனால ஒன்பது பத்துக்குள் குழந்தை தூங்கி விடுவாள்… நீயும் அதே போலவே செய்… ப்ளீஸ் வசி…” என்ற கணவனின் பேச்சு நியாபகத்தில் வந்த நொடி.. அவளுக்கு வெட்கமும் வந்து ஒட்டிக் கொண்டது..

ஏன் கணவன் தீராவை அதிக நேரம் தூங்க விட வேண்டாம் என்று சொன்ன காரணம் தெரிந்ததினால், அதனால் அதே வெட்க சிரிப்போடு கீழே வந்த போது..

கூடத்தில் ஸ்வேதாவும் அத்தையும் மட்டுமே அமர்ந்து டிவி பார்த்து கொண்டு இருந்தனர்.

அத்தை இருப்பதினால் குழந்தையும் எழுந்து விட்டாள் என்று நினைத்து வசியின் கண்கள் குழந்தையை தேடியது..

பின் சரஸ்வதியிடம். “அத்த இன்னுமா குழந்தை தூங்குறா..?” என்ற இந்த வார்த்தையை வர்ஷினி சாதாரணமாக தான் கேட்டாள்..

ஆனால் சரஸ்வதி.. “ஏன் குழந்தை தூங்குனா இப்போ என்ன உனக்கு பிரச்சனை..? குழந்தை நல்லா தூங்கினா நல்லது என்று தான் எல்லோரும் நினைப்பாங்க.” என்று அதை வைத்தே சரஸ்வதி பேச தொடங்கி விட்டார்..

இவங்க தானே எழுப்பி விட்டு விடுவாங்க என்று கணவன் சொன்னான் என்பதை சரஸ்வதியிடம் சொல்லவும் இல்லை… அமைதியானவள் மீண்டும் தங்கள் அறைக்கு வந்து விட்டாள்..

இவள் சென்றதுமே ஸ்வேதா. “ பார்த்திங்க தானே அத்த.. நான் சொன்ன போது அப்படி எல்லாம் இருக்காது என்று சொன்னிங்க பாருங்க…” என்று சொன்னதற்க்கு சரஸ்வதியுமே..

“ஆமாம் ஸ்வேதா. நான் கூட நீ சொன்ன போது நம்பல.. ஆனா நீ சொன்னது சரி தான் போல…” என்று வாயில் விரல் வைத்து கேட்டவரின் மனம் முன் வர்ஷினி கீழே வரும் முன் இவர்களுக்குள் நடந்த உரையாடலை நினைத்து பார்த்தாள்..

சரஸ்வதிக்கு மதியம் உறக்கம் என்பது ஒரு மணி நேரம்.. தான்.. சில சமயம் அந்த உறக்கம் கூட இல்லாது படுக்கையில் புரண்டு புரண்டு படுத்து விட்டு மட்டும் தான் இருப்பார். வயது ஆகிறது தானே.

இன்றும் தூக்கம் வராது குழந்தை உறங்கும் வரை இருந்தவர்.. எத்தனை நேரம் தான் வெட்டு வெட்டு என்று படுத்து கொண்டு இருப்பது என்று நினைத்து தான் கூடத்திற்க்கு வந்ததும் . டிவியை போட்டு அமர்ந்ததும்.

ஆனால் இதற்க்கு தானே நான் காத்து கொண்டு இருந்தேன் என்பது போல உடனே மாமியாரின் அருகில் அமர்ந்த ஸ்வேதா..

“ என்ன அத்த… டிவி பார்க்கிறிங்கலா..?” என்று கேட்டாள்..

முன் எல்லாம் ஸ்வேதா இப்படி கேட்டால், பார்த்தா தெரியல..? என்று கேட்பவர்.. இப்போது எல்லாம் சரஸ்வதியின் மனதில் வர்ஷினி குழந்தையை எப்படி பார்த்து கொள்வாளோ… மகன் மனைவியின் மீது இருக்கும் மயக்கத்தில் குழந்தையை விட்டு விடுவானோ… தன் காலத்திற்க்கு பின் தன் பேத்தியின் எதிர் காலம் என்ன ஆவது என்று சதா அதை பற்றியே யோசித்து கொண்டு இருப்பதால், மற்றது எல்லாம் பின் தங்கி விட்டது..

அதனால் சாதாரணமாகவே.. “ ஆமாம் மா.. தூக்கல் வரல… அதான்..” என்று மிக விளக்கமாவே சொல்ல.

ஸ்வேதாவுக்கு தெரியாதா மாமியாரின் மாற்றம்… சிரித்துக் கொண்டாள்…

பின்.. “என்ன அத்த தீரா தூங்குறாளா.? என்று மெல்ல தன் பேச்சை ஆரம்பித்தாள்..

“ஆமாம் மா.. போய் எழுப்பனும்… தூங்கி ரொம்ப நேரம் ஆகுது.. இப்போ ரொம்ப நேரம் தூங்கிட்டா நையிட் தூங்க நேரம் ஆகும்..” எப்போதும் தான் செய்வது தான் அதையே தான் சொன்னது..

அதை செய்ய எழுந்தும் விட்டார் சரஸ்வதி தன் அறைக்கு செல்ல..

ஆனால் அடுத்து ஸ்வேதா சொன்ன.. “ஆமாம் அத்த சீக்கிரம் போய் எழுப்பி விட்டு விடுங்க குழந்தை சீக்கிரம் எழுந்துக்கனும் என்று தான் வர்ஷினி தூங்க வைக்க கூட்டிட்டு போக நினச்சது..

நீங்களும் தூங்க வைக்கிறிங்க என்று தான் நீங்க கேட்டதுமே விட்டுட்டு போனா.. நீங்க ரொம்ப நேரம் தூங்க வைச்சிட்டிங்க என்றால், நாளைக்கு உங்க பேத்தி உங்க கூட தூங்க நினைத்தாலுமே விட மாட்டாள்..” என்ற ஸ்வேதாவின் இந்த பேச்சு சரஸ்வதியை தன் அறைக்கு போக விடாது தடுத்ததோடு மீண்டும் அமர்ந்து கொண்டவர்..

“நீ என்ன சொல்ற.?” என்றும் கேட்டார்..

சரஸ்வதி அம்மா இப்படி கேட்டதும் எல்லாம் ஸ்வேதா உடனே எல்லாம் சொல்லி விடவில்லை..

“அத்த நீங்க வயசுல பெரியவங்க.. உங்க கிட்ட போய் இதை பத்தி எல்லாம் எப்படி சொல்வது..?” என்று தயங்குவது போல பேச.

அவள் நினைத்தது போல் தான் சரஸ்வதி.. “ என்ன விசயம்.. என் கிட்ட ஏன் பேத்தியை விட மாட்டா…” அதை தெரிந்தே ஆக வேண்டும் என்று நினைத்து கேட்டவரிடம்..

தயங்கி தயங்கியே தான் சொல்ல நினைத்த விசயத்தை ஸ்வேதா சொல்லி முடித்தாள்..

அதாவது.. “அத்த புதுசா கல்யாணம் ஆனவங்க… தீரா சீக்கிரம் தூங்கினா தானே.” என்று ஒரு மாதிரி சொன்னவள்..

பின்.. “நீங்களும் குழந்தையை சீக்கிரம் எழுப்ப தான் நினைக்கிறிங்க.. ஆனா அது காரணம் வேறு.. குழந்தையின் நல்லதுக்கு நையிட் தூங்க மாட்டா அவள் உடல் நிலை கெடும் என்று.. ஆனா வர்ஷினி.. குழந்தையின் நல்லதுக்கா பார்ப்பா…?

நல்லதுக்கு பார்க்கலேன்னாலும் பரவாயில்லை எனக்கு தீராவுக்கு கெட்டதா எதுவும் நடந்துட கூடாது… அத்த. “ என்று சொன்னவளையே அதிர்ந்து பார்த்த சரஸ்வதியிடம்..

“நான் நினைப்பது தப்பு தான் அத்த.. ஆனா இது நினைக்காம இருக்க முடியல அத்த..” என்று சொல்ல வேண்டியதை உடனே சொல்லாது சரஸ்வதியின் மனதை பதை பதைக்க வைத்த ஸ்வேதா பின்..

“அவங்களுக்கு என்று ஒரு குழந்தை வந்துட்டா நம்ம தீரா நிலை எப்படி ஆகுமோ… எனக்கு அதை நினைத்தா தான் பயமா இருக்கு..” என்று சொன்ன ஸ்வேதா ஏதோ நினைத்தது போல பயந்து போனவளாக தலையை குலுக்கிக் கொண்டவள்..

பின்.. “ ஆனா நம்ம தீக்க்ஷயன் மாறாது இருந்தா இந்த வர்ஷினியால நம்ம தீராவை ஒன்னுமே பண்ண முடியாது அத்தை.. எல்லாம் நல்லதா நடந்த் பிரச்சனை இல்ல அத்த.”

“ஆனா ஆனா நீங்களே காலையில் பார்த்திங்க தானே.. வர்ஷினிக்கு உங்க சின்ன மகன் என்னம்மா சப்போர்ட் பண்ணாரு என்று… ஆனால் அவரை சொல்லுயும் குற்றம் இல்ல அத்த.”

“பவி கூட அவர் என்ன வாழ்க்கை வாழ்ந்தாரு.. அவருமே மனுஷன் தானே. அவருக்கும் ஆசை இருக்கும் தானே… அதுவும் தான் ஆசைப்பட்ட பெண்.. பக்கத்தில் இருக்க அந்த பெண் கேட்டது எல்லாம் வாங்கி கொடுத்து அவளை சந்தோஷமா வைக்க தான் நினைப்பாரு..”

அதுல தப்பும் இல்ல. என்று தான் நான் சொல்லுவேன்.. ஆனா அவருக்கு ஒரு குழந்தை இல்லாத பட்சத்தில். இப்போ தனக்கு பிடித்த பொண்டாட்டி பேச்சை கேட்டு தீக்க்ஷயன் நம்ம தீராவை விட்டுட்டா.. அது தான் அத்தை என் பயம்..” என்று இப்படியாக ஸ்வேதா தன் மாமியாரை மூளை சலவை செய்து கொண்டு இருந்த போது தான் வர்ஷினி கீழே வந்தது..

வந்தவள் ஸ்வேதா சொன்னது போலவே குழந்தையை எழுப்ப சொன்னது.. அப்போ அப்போ ஸ்வேதா சொன்னது போல் தான் நடக்குமா..?

என்ன தான் இருந்தாலும் ஒரு பெண் தனக்கு என்று ஒரு குழந்தை பிறந்தால், அவள் அந்த குழந்தையை தானே முதன்மையாக கருதுவாள்.. அந்த கரு சரஸ்வதி மனதில் உதித்த நொடி.. எடுப்பார் கை பிள்ளையாக இருந்த சரஸ்வதி அசல் மாமியாராகி போன தருணம்.. அதுவாக அமைந்து விட்டது..

தீரா மதியம் தூங்கி விட்டதால் அன்றுமே இருவருக்கும் ஏமாற்றமாக தான் போய் விட்டது… இதை பற்றி மட்டுமே யோசித்து கொண்டு இருந்தால் ஆகுமா…?

அடுத்து வர்ஷினி தன் வேலைக்கு போக தொடங்கி விட்டாள்.. அதே போன்று தீராவையும் வர்ஷினி சொன்ன பள்ளியில் தான் தீக்ஷயன் சேர்த்தது… அதற்க்கு சரஸ்வதி அத்தனை பேச்சுக்கள்..

தீக்க்ஷயன் அங்கு பணம் புடுங்குவாங்க என்றது தான்..

“நீ எப்போ இருந்து பணக்கணக்கு எல்லாம் பார்க்க ஆரம்பித்த தீக்க்ஷா.அதுவும் உன் மகளுக்கு நீ இத்தனை சம்பாதிக்கிற..? உன் மகளுக்கு இல்லாததா.?” என்று மகனிடம் சண்டை கணவரிடம்..

“இதையுமே அவ தான் சொல்லி இருப்பா..”

உண்மையில் வர்ஷினி தான் இந்த பள்ளியில் சேர்க்க சொன்னது.. ஆனால் சேர்க்க சொன்ன விசயம் வேறாக இருக்க..

சரஸ்வதியோ… “இப்போ இருந்தே பிறக்காத தன் குழந்தைக்கு பணத்தை பிடிச்சி வைக்க பார்க்கிறா.. ஆனா நான் அதுக்கு விட மாட்டேன்.” என்று சொன்ன மனைவியை தட்சணா மூர்த்தி சந்தேகத்துடன் பார்க்க.

சரஸ்வதி உடனே.. “இல்ல நீங்க இனி கடையில் வரும் லாபத்தை மகன் பெயரில் போடாதிங்க… பேத்தி தீரா பேருல போடுங்க..” என்ற மனைவியின் பேச்சில்..

“நான் மாத்தி மாத்தி யோசிக்கவும் மாட்டேன் செய்யவும் மாட்டேன்.. என் மகன் பெயரில் தான் போடுவேன்.. ஒருத்தவங்களை பத்தி முழுசா தெரியிறதுக்கு முன்னவே இவங்க இப்படி தான் என்று முடிவு செய்து விட கூடாது.. “ என்று சொல்லி விட்டார்… தட்சணா மூர்த்தி அவர் நிலையில் அவர் சரியாக தான் இருக்கிறார்.. சரியாக தான் யோசித்தார்..

தீரா பள்ளி செல்லவும் ஆரம்பித்து விட்டாள்.. வர்ஷினியுமே குழந்தையை பள்ளியில் விட்டு விட்டு அவள் வேலைக்கு சென்றாள்.. அவளின் இரு சக்கர வாகனம் இவள் ஜார்டன் செல்வதற்க்கு முன் அதை விற்று விட்டதால், புதியதாக வாங்கி கொண்டாள்..

அவளே கணக்கு பார்த்து தான் வாங்கியது.. அதுவும் தன்னுடைய பணத்தில் தான் வாங்கி கொண்டது.

தீக்க்ஷயன் கூட எதுவுமே தன்னிடம் கேட்பது இல்லையே என்ற கோபத்தில் “நான் உன் புருஷன் தானே. அது போல நான் உன் கிட்ட நடந்துக்கல என்று.. அதை நீ மறந்துட்டியா…?” என்று கேட்டு விட்டான்.

பின் தான் அவன் விட்ட வார்த்தையின் அர்த்தம் உணர்ந்து தீக்ஷயன்.. “ சாரி வசி.. சாரி..” என்று அத்தனை மன்னிப்பு.. இப்போது எல்லாம் தீக்ஷயனுக்கு தன் ஆசை மோகத்தை விட.. தன் மனைவிக்கு எத்தனை எத்தனை ஆசைகள் இருந்து இருக்கும்.. தன்னை திருமணம் செய்து கொண்டதால்,திருமணத்தின் அடிப்படையை கூட தன்னால் நிறைவேற்ற முடியவில்லையே என்ற குற்றவுணர்வு அதிகம் ஆகி விட்டது…

அதில் தான் சட்டென்று பேசி விடுகிறான்.. வீட்டில் உள்ள மற்றவர்களிடமும் அப்படி தான்..


 
Active member
Joined
Jun 23, 2024
Messages
71
ஸ்வேதா புத்தி முழுக்க சாக்கடை 🤮🤮😴🤮😴🤮🤮🤮

சரஸ்வதி உன் மகனை முழுசா இழந்து நிக்கும் போது தான் புத்தி வரும் 😣 😣 😣 ஆனால் அப்போ எந்த பிரயோஜனமும் இல்லை 😡 😡 😡 😡

தீஷன் 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤭🤭 அம்மா செய்யுற வேலையில் தன்னோட சுயத்தை இழக்க ஆரம்பிச்சுட்டான் 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
 
Last edited:
Active member
Joined
Jun 1, 2024
Messages
105
ஸ்வேதாவை விட சரஸ்வதி மேல தான் ரொம்ப கோபம் வருது.... 😤😤😤😤😤
மூளைன்ற ஒன்னு இல்லவே இல்லையா அவ தான் இவ்வளவு கேவலமா பேசுறானா அதை கேட்டுட்டு இருக்குறதும் இல்லாம அவளுக்கு ஏத்த மாதிரி நடக்குறாங்க.... 😡😡😡 தீக்ஷா இவங்களை மொத்தமா ஒதுக்கி வைக்கணும்... வசியை விடுங்க பையன் மேல கூட நம்பிக்கை இல்லையா.... இப்போ தான் அவன் வாழ்க்கை சரியாகி இருக்கு சந்தோசமா இருக்கட்டும்னு நினைப்பு கூட இல்லை... டூ பேட்... 😈😈😈😈
 
Active member
Joined
May 12, 2024
Messages
199
Suya puthi illathan Saraswathy… moolai kuraipadu pola… chaik.. already magan life ah spoil pannathu podhathu nu ippo antha loosu kooda sernthuttu thittam poduthu
 
Top