Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Mogathin Monam...21...1

  • Thread Author
அத்தியாயம்…21.1

கணவனின் இந்த பேச்சில் வர்ஷினி அதிர்ந்து நின்று விட… பின் விட்ட வார்த்தையை ஈடுக்கட்டும் படியாக அத்தனை மன்னிப்பு கேட்ட பின்.. மனைவி முதல் சொன்னது போல அவளுடைய பணத்தில் தான் அவள் அந்த வண்டியை வாங்கியது..

தீக்க்ஷயன் கூட சென்றான் அவ்வளவே.. தீக்க்ஷயன் என்றால் குழந்தை தீராவுமே தான்.. வண்டி எடுத்து கோயில் சென்று பின் வண்டி வாங்கியதற்க்கு ட்ரீட் என்று மூன்று பேருமே தான் சென்று வந்தது..

திருமணம் முடிந்து இந்த ஒரு மாதத்தில் கணவன் மனைவியாக இருவரும் தனித்து எங்குமே சென்றது கிடையாது என்பது வேறு விசயம்.. அப்படி தான் அந்த இரு சக்கர வாகனம் வாங்கும் போதே பிரச்சனை ஆரம்பித்து பின் வாங்கி வீடு வந்தவர்களிடம்..

சரஸ்வதியோ.. ஒரு படத்தில் ராதிகா சொல்வாளே உனக்கு கறி வாங்க தெரியாது கடைக்கு போக தெரியாது ஆனா சோடா மட்டும் வாங்க தெரியுமா என்பது போல் தான் மகனை நிற்க வைத்து கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்..

“பெண்ணுக்கு பணத்தை பார்த்து அந்த பள்ளியில் சேர்த்து விட்ட.. ஆனா பொண்டாட்டி என்றால் பணம் எல்லாம் ஒரு கணக்கு இல்ல போல..”

தீக்க்ஷயனுக்கு தான் அய்யோ என்றான நிலை… என் பணத்தில் வாங்க வில்லை என்று சொல்ல தான் நினைத்தான்..

ஆனால் வர்ஷினி சொல்ல விடவில்லை.. வேண்டாம் என்று மறுத்து விட்டவள்.. தங்கள் அறைக்கு வந்த பின் ஒன்று மட்டும் கூறி விட்டாள்..

“என் பொறுமை இருக்கும் வரை தான் நான் வாய் திறக்க மாட்டேன் தீனா… ஆனா நான் வாய் திறக்கும் போது நீங்க என் பக்கம் தான் நிற்க வேண்டும்..” என்று..

இந்த ஒரு மாதகாலம் வரை வர்ஷினி பார்த்து விட்டாள்.. இப்போது பொருளாதார அரசியல்.. சுயநலம். என்று திருமணத்திற்க்கு முன் அறிந்து கொண்டவளுக்கு வீட்டு அரசியலையும் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொண்டு இருக்கிறாள்..

அதில் அவளுக்கு ஒரளவுக்கு விசயம் புரிந்து விட்டது தான். தான் புரிந்து கொண்டதை கணவனிடம் சொல்லவில்லை.. ஏற்கனவே மனைவியான தனக்கு எந்த வித சுகத்தையும் கொடுக்க முடியவில்லை என்று குற்றவுணர்வில் இருப்பவனிடம் தான் தெரிந்து கொண்டதை சொல்லி மேலும் அவள் மனதை காயம் படுத்த அவள் விரும்பவில்லை.. ஆனால் முன் எச்சரிக்கையாக இதையும் சொல்லி விட்டாள்..

சரஸ்வதியும் சண்டைக்கு வா வா என்பது போல் தான் தினம் தினம் அவள் பேச்சு இருந்தது…

ஆனால் வர்ஷினி அதை கண்டும் காணாதும் கடந்து போய் கொண்டு இருந்தாள்.. காரணம் அவளுமே தன் கணவனோடு சேரும் நாளை ஆவளோடு எதிர் பார்த்து காத்திருந்தாள்… காரணம்,. அவளுக்கு கணவனை அத்தனை பிடித்தது. இன்னொரு காரணம்.. வயது இருபத்தி நான்கு .. குழந்தை இருபத்தி ஐந்துக்குள் பிறந்தாள் நல்லது என்று தன் அம்மா அக்காவிடம் பேசும் போது கேட்டு கொண்டு இருந்தாள்..

வயது கடந்தால், அதற்க்கு என்று மருத்துவமனை.. பின் சிகிச்சை என்று ஆரம்பித்தால், பணத்துக்கும் விரயம்.. உடலுக்குமே கேடு என்பதினால், ஆனால் அது என்னவோ தெரியவில்லை தீரா முன் விட இப்போது இரவில் அதிக நேரம் விழித்து இருந்து.. காலையில் அவளை எழுப்பி விட அவ்வளவு போராட்டமாக ஆனது..

தீக்க்ஷயனுக்கு மனைவியையும் கோபித்து கொள்ள இப்போது முடியவில்லை.. அவளுமே வீட்டில் சின்ன சின்ன வேலைகளை பார்த்த பின் தீராவையும் பள்ளிக்கு கிளப்பி பின் அவளுமே கிளம்பி குழந்தையை பள்ளியில் விட்டு வர ஏழு கடந்து போகிறது..

இதில் மூன்று மணிக்கு பள்ளி விடுவதால் அவளுக்கு என்று தனிப்பட்டு பெண் ஆட்டோ ஓட்டுனரை தான் தீராவை வீட்டில் விட நியமித்து இருந்தனர்..

இதுவுமே வர்ஷினியின் ஐடியா தான்.. இப்போது மாத கணக்காக இருக்கும் குழந்தைக்கே பிரச்சனை ஆகிறது.. தனித்து வருவதால் பெண் ஓட்டுனர் தான் சரி என்று,,’அதற்க்குமே வீட்டில் ஒரு பெரிய பிரச்சனை..

“பெண் எப்படி ஓட்டுவாள் ஆக்ஸ்ஸிடெண்ட் ஆனால் என்ன செய்வது.” என்று ஸ்வேதா ஆரம்பித்து விட்டாள்..

வர்ஷினி தான்.. “ஜென்ஸ் எல்லாம் சேப் இல்ல.” என்று சொல்ல.

“அப்போ நீ கூட்டிட்டு வா.” என்ற ஸ்வேதாவின் இந்த பேச்சில் வர்ஷினி இவள் என்ன பைத்தியமா என்பது போல் தான் அவளை பார்த்தாள்..

ஆனால் நான் பைத்தியம் கிடையாது கெட்டிக்காரியாக்கும் என்பது போல் தான் வர்ஷினி..

“நான் வேலை செய்யும் இடம் எங்கு இருக்கு.. தீரா பள்ளி எங்கு இருக்கு.. வந்து கூட்டிட்டு வீட்டில் விட்டுட்டு எப்படி நான் திரும்ப ஆபிஸ் போக முடியும்.?” என்று.. இந்த ஒரு மாதத்தில் நீண்ட வார்த்தையாக வர்ஷினி ஸ்வேதாவிடம் பேசினாள் என்றால்,.

எப்போதும் நீண்டு பேசுபவள் வர்ஷினியின் இந்த பேச்சுக்கு… “அப்போ வேலையை விட்டு விடு...” என்று விட்டாள்..

வர்ஷினியுமே ஸ்வேதா சொன்னதை முதலில் சரியாக புரிந்து கொள்ளாது.. தீராவை பள்ளியில் இருந்து வீட்டிற்க்கு விட்ட பின் தன்னை போக வேண்டாம் என்று சொல்லுகிறாள் என்று தான் நினைத்து விட்டாள்..

அதனால் தான்.. “தினம் தினம் எல்லாம் அரை நாள் என்று லீவ் போட முடியாது..” என்று சொல்ல.

“உன்னை யாரு அரை நாள் லீவு போட சொன்னது.. வேலையையே விட்டு விடு..” என்று விட.. என்னது என்று அதிர்ந்து ஸ்வேதாவை பார்த்த வர்ஷினிக்கு அந்த அதிர்ச்சியில் பேச்சு வரவில்லை..

அனைவரும் கை விட்ட நிலையில் அவளை தொய்வடைய செய்யாது கை கொடுத்தது அவளின் இந்த வேலை தான்..

அவளுமே முதலில் இந்த வேலையை அவ்வளவு ஈசியாக தான் நினைத்தது… திருமணத்திற்க்கு பின் கணவன் வேலையை விட சொன்னால் விட்டு விடலாம்.. ஏன் நாமே..

“எனக்கு ஜாப்புக்கு போக எல்லாம் இன்ரெஸ்ட் இல்லை ..” என்று சொல்லி விடலாம் என்று தான் நினைத்தது..

ஆனால் எப்போது கூட பிறந்தவர்கள் கை விட்ட நிலையில். கையில் பைசா இல்லாது அண்ணனிடம் கேட்டு வாங்கி.. தன் சம்பளம் எப்போது வரும் காத்துக் கொண்டு இருந்தாளோ…

அந்த இடைப்பட்ட நாட்களில் தான் அவள் தன் வேலையின் மதிப்பே அவளுக்கு புரிந்தது..

அதுவும் பெற்றோர் இறந்த நிலையில் இந்த வேலை மட்டும் இல்லாது தனித்து இருந்து இருந்தால், கண்டிப்பாக அவளுக்கு பைத்தியம் பிடிப்பது நிச்சயம்..

அனைத்தையும் விட தனக்கு தன்னம்பிக்கை கொடுத்தது இந்த வேலை.. இந்த வேலையை நான் விட வேண்டுமா..?

மனதில் நினைத்ததை கேட்டும் விட்டாள்..

“ஏன் வேலையை விட வேண்டும்..” என்று.

ஸ்வேதா உடனே துணைக்கு தன் அத்தையை பேச்சில் இழுத்துக் கொண்டாள்..

“பாருங்க அத்த… நான் என் மகளை பார்த்து கொண்டு நான் வீட்டில் இல்ல… ஏன்னா அவள் என் பெண்.. என் பெண்ணை தவிர எனக்கு வேறு எதுவும் முக்கியம் இல்ல… ஆனால் மத்தவங்க எல்லாம் அது போல இருப்பாங்க என்று சொல்ல முடியாது.. ஏன்னா தீரா என்ன பெத்த பெண்ணா என்ன..” என்று இழுத்து கட்டி சொன்னதில்.

சரஸ்வதியுமே கூட சேர்ந்து கொண்டு விட்டார்… “ ஆமாம் குழந்தையோடு உனக்கு உன் வேலை முக்கியமா..” என்று கேட்ட மாமியாரிடம் முதல் முறையாக…

“இப்போ உங்க பிரச்சனை என் வேலையா. இல்ல குழந்தையா.? இல்ல நானேவா..?” என்று நேருக்கு நேர் மாமியாரிடம் கேட்டு விட்டாள்..

இத்தனை நாள் என்ன பேசினாலும், அமைதியாக கடந்து விடும் வர்ஷினி.. இவளுடைய சுபாவமே இது தானோ என்று தான் நினைத்தார்..

கூடவே.. யாரும் இல்லை.. இங்கு அனுசரித்து தான் போக வேண்டும் என்று நினைத்து இருப்பாள்..

இதுவுமே ஒரு வகையில் நல்லது தான்.. எனக்கு வேண்டியது என் மகன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.. இருக்கட்டும்… சின்ன சிறுசுகளை பிரிக்க கூடாது.. அதே சமயம் என் பேத்தியும் நன்றாக இருக்க வேண்டும்.. எனக்கு இது இரண்டு தான் தேவை..

அதற்க்கு இனி உனக்கு என்று தனியாக ஒரு குழந்தை வேண்டாம்.. நீ தீராவிடம் பாசம் அன்பு இருக்கு என் மகள் என்பது போல தானே சொல்ற… அதை இப்போ நிருபி என்று இதை ..

“உங்களுக்கு தீரா மட்டும் தான் குழந்தையாக இருக்க வேண்டும் என்று சொல்லி விடலாம். அதுவும் தீக்ஷயன் இருக்கும் போது சொன்னால், வர்ஷினியின் உண்மையான மன நிலை புரிந்து விடும் என்று தான்.. ஸ்வேதாவின் போதனையில் சரஸ்வதியின் எண்ணமாக இருந்தது.

தன் எண்ணத்தை நிறைவேற்ற வர்ஷினியின் இந்த அமைதி.. அவளுக்கு யாரும் இல்லாதது சரஸ்வதிக்கு சாதகமாக இருக்க.. தான் சொன்னதற்க்கு இதற்க்கு சரி என்றால், போதும் பின் என்ன நான் என் மருமகளை தாங்கு தாங்கு என்று தாங்க மாட்டேனா. அதுவும் என் மகனுக்கு பிடித்த பெண்ணை.. என்று இத்தனை நாள் வர்ஷினியின் அமைதியை பார்த்து மனக்கோட்டை கட்டி வைத்து இருந்த சரஸ்வதி அம்மாவுக்கு வர்ஷினியின் இந்த பேச்சு அதிர்ச்சியை கொடுத்தது.. கூடவே பயத்தையுமே …

இவர்கள் பேச்சில் தலையிடாது அமைதியாக கை கட்டி பார்த்து கொண்டு இருந்த தீக்ஷயனிடம்…

“என்ன நீ வேடிக்கை பார்த்துட்டு இருக்க. என் வயசுக்கு கூட மரியாதை கொடுக்காம பேசிட்டு இருக்கா. நீயும் பார்த்துட்டு இருக்க.” என்று கேட்ட அன்னையிடம் தீக்ஷயன்..

“நீங்க வசியை பேசும் போதும்.. இதே போல தானே கேட்டுட்டு இருந்தேன்.. ஏன் இவங்க பேசும் போதும் இதே போல தானே கேட்டுட்டு இருந்தேன்.. “ என்று ஸ்வேதாவை காட்டி சொன்னவனிடம்…

ஸ்வேதா… “ ஏன் நான் பேச கூடாதா.. ? தீராவை கொடுமை படுத்தினாலுமே பார்த்துட்டு நான் அமைதியா இருக்கனுமா…” என்ற இந்த பேச்சுக்கு கணவன் மனைவி இருவருமே அதிர்ந்து தான் போயினர்..

அதுவும் வர்ஷினி சொல்லவே தேவையில்லை..

அதில் . “ நான் என்ன கொடுமை படுத்தினேன்..” கேட்ட அவளின் அதிர்ச்சி அவள் குரலிலும் தெரிந்தது..

ஸ்வேதவுக்கு இது தானே தேவை.. “ என்ன கொடுமையா.. சின்ன பெண்…ஸ்கூலில் இருந்து வந்தா வீட்டில் இருக்க வேண்டாம்.. பாவம் அத்தை. இந்த வயசான காலத்தில் குழந்தை பின்னே ஒடவா முடியும்… ஆனா நீ குழந்தையோடு வேலை தான் முக்கியம் என்று சொன்னா.. குழந்தை மீது உனக்கு பாசம் இல்லை தானே… தீராவுக்கு அம்மாவா இருப்பேன் என்று தானே தீக்க்ஷயன் உன்னை மேரஜ் செய்து கொண்டது.”

இரண்டாம் தாரமாக மணந்த பெண்ணுக்கு இந்த வார்த்தையைய் கேட்டு தான் ஆக வேண்டும்.. ஆம் அம்மாவாக இருப்பேன் என்று தான் மேரஜ் செய்தேன்..அம்மாவுமாகவும் இருப்பேன் தான்.. ஆனால் அதற்க்காக தான் என் கணவர் என்னை திருமணம் செய்து கொண்டது என்பது ஒரு பெண்ணுக்கு நிச்சயம் மன வேதனை அளிக்க கூடியதாக தான் இந்த வார்த்தை இருக்கும்..

வர்ஷினிக்குமே இந்த வார்த்தை அவளின் மனதை ரணம் ஆக்க தான் செய்தது.. அதுவும் தன் கணவனுக்கு தன்னை பிடிக்கும்.. பிடித்து தான் என்னை திருமணம் செய்து கொண்டான் என்று நன்கு தெரிந்த எனக்கே இந்த வார்த்தை இப்படி வலிக்கிறது என்றால்,

ஏனையவர்கள் அதாவது இரண்டாம் மனைவியாக வந்தவர்களுக்கு இந்த வார்த்தை எப்படிப்பட்ட ரணத்தை கொடுக்கும் இந்த வார்த்தை,.

இந்த வார்த்தையை ஜீரணித்து கொள்ள அவளுக்கு சிறிது நேரம் தேவைப்பட்டது. அதில் கண் மூடி கொண்டவளின் இந்த தோற்றம் ஸ்வேதாவுக்கு நம்பிக்கையை கொடுத்தது..

அதில் இன்னும்.. “ அத்தையால் பார்த்து கொள்ள முடியவில்லை.. நான் வீட்டில் இருந்து பார்த்து கொள்ளவில்லை.. ஏன்னா எனக்கு குழந்தை தான் முக்கியம். தீக்ஷயனே நல்லா தானே சம்பாதிக்கிறார் பின் என்ன..?” என்ற இந்த பேச்சுக்கு தீக்க்ஷயன் சிரித்து கொண்டான்.

எங்கு சுற்றினாலுமே ஸ்வேதா நிற்க்கும் இடம் இது தான்.. முன் என் வேலை இப்போது வர்ஷினியுடைய வேலை என்று..

அதில்.. “நீங்க எப்போ வேலைக்கு போனீங்க.. இப்போ அத்தனை சம்பாத்தியத்தை விட்டுட்டு வீட்டில் இருக்கேன் என்று பேச..” என்ற தீக்ஷயனின் பேச்சில் ஸ்வேதா புதியதாக இன்னொரு ட்ராமாவாக..

“அப்போ நீ என்னை படிக்கல முட்டாள் என்று சொல்லுறியா. என் கணவர் கூட உன்னை போல படிக்கல. உன்னை போல வேலைக்கு போகல. அப்போ அவரையும் முட்டாளா../” என்று இன்னுமே பிரச்சனையை ஊதி பெரிதாக பார்த்தாள்..

ஆனால் வர்ஷினி… “அத்த நீங்க தான் தீரா ஸ்கூலில் இருந்து வந்த உடனே தான்.. தூங்க வைத்து விடுறிங்க.. நான் தானே வந்து எழுப்புறேன்..” என்று சொன்ன வர்ஷினியை இப்போது தீக்க்ஷயன் அதிர்ந்து பார்த்தான்..

அதில் கேட்டும் விட்டான். “ஏன்மா நீங்க தீராவை அதிக நேரம் தூங்க விட மாட்டிங்கலே. நையிட் தூங்க லேட் ஆகும் என்று..” கேட்டதற்க்கு. சரஸ்வதியிடம் தெளிவான பதில் இல்லை..

அதனால் ஒரு வாறு.. “ அப்போ வீட்டில் இருந்தா எழுப்பினா எழுந்துக்குவா. ஆனா இப்போ ஸ்கூல் போவதால் எழுவது இல்லை என்று சொன்னவர்.. பின் அது இல்லை பிரச்சனை,..

“என்னால குழந்தை பின் ஓட முடியல… உன் பொண்டாட்டியை வீட்டில் இருக்க சொல்.” என்று சொல்லி விட்டார்..

தீக்க்ஷயனுக்கு இது தன் அன்னையின் பேச்சு இல்லை.. சொல்லி கொடுத்து சொல்கிறார் என்பது..

இவர்கள் நடுவில்… வர்ஷினி.. “ குழந்தையை பார்த்துக்க முடியலேன்னா… பரவாயில்லை.. நான் அதுக்கு வேறு ஏற்பாடு செய்துக்குறேன்..” என்று சொல்ல…

அதற்க்கும் சரஸ்வதி அம்மா.. “ஏதோ குழந்தையை பார்த்துக்கும் இடம் ஸ்கீரோச்சோ என்னவோ… அங்கையா…? அதுக்கா உன்னை கட்டினது..” என்று மீண்டும் அதே இடத்திற்க்கு வந்து நின்றது பேச்சு..

அந்த விசயம்.. அதாவது வர்ஷினி வேலைக்கு போக கூடாது என்பது சரஸ்வதியின் வாதமாக இருக்க.. வர்ஷினி அதற்க்கு ஒத்து கொள்ளவில்லை..

அதற்க்கு அன்று தீர்வு கிடைக்காமலேயே இரவும் வந்து விட. திருமணம் முடிந்து ஒன்னரை மாதம் கழித்து தீரா தூங்கிய பின் இருவருமே முழித்து இருந்தனர்..

கீழே மெத்தையை மட்டும் போட்ட தீனா வசியின் கை பிடித்து தன் பக்கத்தில் அமர்த்திக் கொண்டான்..

அது என்னவோ வசிக்கு தீனா பக்கத்தில் இருந்தால் போதும் மற்ற விசயங்கள் அனைத்துமே பின்னுக்கு தள்ளி விடும்..

மாமியார் ஒரகத்தி என்று பேசி பேசி.. வர்ஷினிக்கு பொறுமை பறந்து போய் விட்டது.. அவள் என்ன தான் ஆனாலுமே வேலையை விட மாட்டாள்.. அது தான் அது திண்ணம்.. ஆனால் அதை நிறைவேற்றி கொள்ள போராட வேண்டி இருக்கும் என்பதை புரிந்து கொண்டாள்.. அதோடு தான் தீராவை கொடுமை படுத்துவது போல பேசியது அவள் மனதை பாதித்தது.. இதையே யோசித்து கொண்டு இருந்தவள் தீக்க்ஷயன்.. அதுவுமே தரையில் மெத்தையை போட்டு தன்னை அழைக்கவும் மற்றது எல்லாம் மறந்து போய் விட்டது பெண்ணவளுக்கு..

அமர்ந்தாள்.. நெருங்கி தான் அமர்ந்தாள்… அவளின் அந்த நெருக்கமும், காலை வேலைக்கு வைத்து சென்ற மல்லிகை காய்ந்து போய் இருந்தாலுமே, அவனுக்கு என்னவோ வாசம் கொடுப்பது போல தோன்றியது..

இன்றைய பேச்சில் தீக்ஷயனுக்குமே புரிந்து விட்டது… தீராவை வைத்து பார்த்தால், கடைசி வரை தாங்கள் கணவன் மனைவியாக வாழ முடியாது என்று..

அதோடு அவனுமே முன் வர்ஷினி தன் தோழியிடம் சொன்ன குழந்தை பிறந்தால், குழந்தை இருந்தாலுமே கணவன் மனைவி ஒன்று சேருவது இல்லையா… என்ன..?

அது தான் ஒரு முடிவோடு இன்று தன் மனைவியை நெருங்கினான்.. வசியுமே எந்த பிகு எல்லாம் செய்யவில்லை.. அணைத்தவனை தானுமே அணைத்து கொண்டாள்.. அவன் பத்து முத்தம் இதழில் கொடுத்தால், பதிலுக்கு பெண்ணவள் ஒன்றாவது கணவனின் கன்னத்தில் கொடுத்து.. என்று அவர்களின் தாம்பத்தியம் முத்தத்தில் ஆரம்பித்து அடுத்த கட்ட நகர்வாக நகரும் வேலையில் தீக்க்ஷயனுக்கு மனைவியின் ஆடை தொந்திரவு கொடுத்தது..

அதை அகற்ற நினைக்கும் போது இதற்க்கு மட்டும் பெண்ணவள் தடா உத்திரவு போட்டாள் வேண்டாம் என்று..

“ஏன்.. ஏன்..” தீக்ஷயனுக்கு கொஞ்சம் கோபம் தான்.. எத்தனை நாட்கள் காத்திருந்த எனக்கு இவளை முழுவதுமாக பார்க்க உரிமை இல்லையா என்று…

உரிமை இருக்கு தான்.. ஆனால் தீனாவுக்கு அவனின் வசி மீது உரிமை இருக்கும் அதே வேளயில் ஒரு தந்தையான கடமையும் இருக்கிறது தானே..

அதை தான் வர்ஷினி நியாபகம் படுத்தினாள்.. குழந்தை எழுந்தா பிரச்சனை வேண்டாம்.. மீண்டுமே தீக்க்ஷயனின் மனது சுருங்கி போனது. தன்னை நினைத்து இல்லை. மனைவியை நினைத்து..

ஆடைகள் கலையாது தான் முதல் தாம்பத்தியம் அவர்களுக்கு இடையில் நடந்து முடிந்தது..

முடிந்த நொடி இருவருக்குமே அப்படி ஒரு மனது நிறைவு.. ஒரு ஆசுவாசம் … கூச்சம் இருவருக்கும் இல்லை.. ஒரு சமயம் வெளிச்சத்தில் ஒருவர் உடலை ஒருவர் பார்த்து கட்டி தழுவி என்று கலவி செய்து இருந்தால், வெட்கம் வந்து இருக்குமோ என்ன. குழந்தை எழுந்தாலுமே தங்களை இது போலான நிலையில் பார்த்து விட கூடாது என்று இரவு விளக்கையும் அணைத்து விட்டு உடை கலையாது தான் கலவி செய்தனர்… அதனால் வெட்கம் வரவில்லையோ என்னவோ.. ஆனால் நிறைவு இருவருக்குமே ஒரு நிறைவு.

அறிந்தும் அறியாமலும் புரிந்தும் புரியாமலும் இருப்பதுமே ஒரு நிம்மதி என்பது போல ஒருவருக்குள் ஒருவர் மூழ்கி போனாலுமே, ஒருவர் உடலை ஒருவர் பாராது நிகந்த அந்த கலவி இருவருக்குமே ஒரு திருப்தியை கொடுக்க. அதில் முடிந்த பின்னுமே பிரியாது அணைத்து கொண்டு படுத்து கொண்டவர்கள் மன நிறைவோடு, தீக்ஷக்யன் மனைவியின் நெற்றியில் முத்தம் இடும் வேளயில்..

தீராவின்.. “ம்மா ப்பா..” என்ற அழைப்பில் சட்டென்று விலகியதோடு..

சிறிது விலகிய ஆடையையும் சரிப்படுத்தி கொண்டு குழந்தையில் இருபக்கமும் இருவரும் வந்து படுத்து கொண்டனர்..

அவர்கள் அந்த கலவி அன்று மட்டுமே அப்படி நிகழவில்லை… தினம் தினமும் அப்படி தான் கலந்தனர். கூடினர்..






 
Active member
Joined
Jun 23, 2024
Messages
71
சரசு வர்ஷினி கூட பேசி பழகி பார்க்காமல் கண்ட நாயும் சொல்றதை கேட்டு வர்ஷியோடு உங்க மகனையும் சேர்த்து கஷ்டப் படுத்துறீங்க😨😨😨

தீஷன் நீ எப்பவும் இதே வர்ஷி பக்கம் இரு அதுவே அவளுக்கு எல்லாத்தையும் சமாளிக்க தெம்பை கொடுக்கும் 🤩🤩🤩🤩🤩
 
Last edited:
Member
Joined
May 11, 2024
Messages
61
அருமை... தக்ஷிணாமூர்த்தி கொஞ்சம் உங்க பொண்டாட்டி யை கண்டிச்சி வைங்க சும்மாவே விட்டா உங்க பிள்ளை உங்களுக்கு இல்ல
 
Active member
Joined
Jun 1, 2024
Messages
105
அவளும் எவ்வளவு நாளைக்கு பொறுமையா இருப்பா இப்போ தான் பேச ஆரம்பிச்சுருக்கா... இனி மொத்தமா ஒரு நாள் வெடிக்கப் போறா அப்போ உங்க பிள்ளையையும் பேத்தியையும் மறந்துடுங்க.. 😡

ஸ்வேதா இவளுக்கும் புருஷன் பிள்ளை இருக்கு தானே எப்போ பார்த்தாலும் இவங்க குடும்பத்து மேலயே கண்ணா இருக்கா... 😤😡

வசி குழந்தை பெத்துக்கக் கூடாதுனு இவங்க எப்படி முடிவெடுக்கலாம்... சுயநலம்... 😈
 
Top