Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Mogathin Monam...21...2

  • Thread Author
அத்தியாயம்…21…2

வர்ஷினியை வேலைக்கே போக விடாது என்று தடுக்க வீட்டில் நினைக்க… வர்ஷினியோ ஜார்டனில் இருந்து வந்த மறுநாளே மற்ற ஐடி கம்பெனிக்கு வேலைக்கு விண்ணப்பிக்க ஆரம்பித்து விட்டு இருந்தாள்..

அதாவது இந்த கம்பெனியின் அனுபவம்.. மற்றும் ஆன்லைன் சென்று வந்த அனுபவமும் சேர்ந்ததில், இந்த கம்பெனியோடு நல்ல கம்பெனியும்.. மற்றும் இதை விட இரண்டு மடங்கு சம்பளத்திலும், மேலும் இப்போது செல்லும் தூரத்தை விட தீக்க்ஷயன் வீட்டில் இருந்து அருகில் எனும் போது முன் என்றால் எப்படியோ…

ஆனால் இப்போது விட்டு விடுவாளா வர்ஷினி… தீக்க்ஷயனிடமும் தெரிவித்து விட்டு தான் மற்ற இடத்தில் வேலைக்கு விண்ணப்பித்தாள் வர்ஷினி..

அதனால் முதலில் ஆன்லைன் மூலமாக தான் முதல் கட்டம் நேர்க்காணல் நடந்தது.. பின் இறுதி சுற்றாக நேர்க்காணலுக்கு சென்ற போது தீக்க்ஷயன் தான் அழைத்து சென்றது..

இதோ மெயிலில் வேலைக்கு சேரலாம் என்ற உத்தரவு கிடைத்த உடன் தீக்க்ஷயனிடம் தான் சொன்னாள்..

சொல்லி விட்டு கணவனை பார்த்தாள் ..

“என்ன வசி.. இதுக்கு தானே நீ இத்தனை கஷ்டப்பட்ட ஹாப்பி… ஒகே.. எல்லா வகையிலுமே இப்போதைய விட பெஸ்ட்டா கிடச்சி இருக்கு.. இதை விடுறது என்பது முட்டாள் தனம் ஜாயின் பண்ணு.” என்று விட்டான்..

வர்ஷினிக்குமே இந்த வாய்ப்பை விட மாட்டாள் தான்.. இருந்துமே தான் இப்போது வேலை செய்யும் இடத்தில் பேப்பர் போடும் முன் கணவனிடம் ஒரு வார்த்தை சொல்ல நினைத்தாள்..

அதன் படி செய்தும் முடித்து விட்டாள்.. பேப்பர் போட்டு இரண்டு மாதம் கடந்து விட்டது.. புதிய வேலைக்கு சேர இன்னுமே ஒரு மாதம் தான் இருக்கும் சூழலில் தான்..

தன் சேமிப்பில் தனியாக தன் பெயரில் இடம் வாங்கி வீடு கட்ட நினைத்து அதற்க்கு என்று இருக்கும் பிரோக்கர் மூலமாவும்…. நெட்டிலும் பார்த்து கொண்டு இருந்த வர்ஷினிக்கு , அவள் எதிர் பார்த்த இடத்தில் அவள் கை இருப்புக்கு தோதாக ஒரு இடம் கிடைத்து விட்டது.

முதலில் கணவன் தீராவோடு அந்த இடத்தை பார்த்து விட்டு வந்தாள்.. லீகல் விசயத்தை தீக்க்ஷயன் தான் முன் பணமாக கொஞ்சம் கொடுத்து நகல் பத்திரத்தை வாங்கி ஒன்றுக்கு இரண்டு வக்கீலை வைத்து சரி பார்த்து என்று அனைத்துமே தீக்க்ஷயன் பார்த்தான்..

அவன் சொத்து வாங்கும் போது கூட அவன் இத்தனை மெனக்கெடவில்லை.. கட்டிய அடுக்கு மாடி குடியிருப்பை வாங்கினான்..ஆனால் மனைவி தன் பெயரில் வாங்கும் சொத்துக்கு அத்தனை அலைந்தான்..

காரணம் அவள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம்.. அனைவருமே கஷ்டப்பட்டு தான் சம்பாதிப்பர்.. ஆனால் அவள் இந்த வயதுக்கு தேவையானதை கூட வாங்காது அப்படி சேர்த்து வைத்து இதில் முதலீடு போட்டால் எத்தனை சதவீதம் வட்டி வரும் என்று பார்த்து பார்த்து இன்வெஸ்மெண்ட் செய்த பணம் …

கூடவே அவளின் பெற்றோர் இறந்து சொத்து விற்ற பணத்தில் நகை போக அதையுமே மூச்சுவல்பன்ட் என்று போட்டு வைத்த பணம். இந்த பணம் ஏதோ ஒரு பிரச்சனை உள்ள இடத்தை வாங்கி தாங்கள் ஏமாந்து போய் விட கூடாது என்று அத்தனை அலைந்து அனைத்துமே பக்காவாக இருக்க.

அடுத்த வாரம் பத்திர பதிவு எனும் போது தான் அன்று இரவு தீக்க்ஷயன் இரவு சாப்பிடும் போது தன் தந்தையிடம் சொன்னது..

அங்கு அனைவரும் இருந்தனர் தான். அனைவருக்கும் தெரிவிக்க தான் சொன்னது.. சொல்லும் போதே தன் அண்ணி இதை வைத்து ஏதாவது செய்வார்கள் என்பதும் அவனுக்கு தெரியும்..

முன் தான் வாங்கி போட்ட அந்த சொத்தினால் தானே பிரச்சனை.. இதில் வசியுமே வேலையில் சம்பாதித்து இன்னும் இன்னும் உயர்ந்து விட போகிறார்கள் என்ற எண்ணத்தில் தானே வசியை வேலைக்கு போக விடாது தடுத்தது.

இதில் அவளின் வருமானத்தை கொண்டு இத்தனை பெரிய சொத்து கண்டிப்பாக ஏதாவது செய்வார்கள்.. அதுவும் இந்த வேலை மாற்றம் சம்பளம் என்று தெரிய வந்தால், இன்னுமே பிரச்சனை கூடும் தான்..

ஆனால் அதற்க்காக எல்லாம் மனைவியின் வளர்ச்சியை முடக்க அவன் நினைக்கவில்லை.. அதோடு பெருமையாக இந்த சொத்து என் மனைவியின் உழைப்பு.. அதை பெருமையாக சொல்ல தான் அவன் விரும்பினான்.. அந்த பெருமையை தன் வீட்டவர்களிடமும் சொன்னான்..

இதனால் பிரச்சனை வெடித்தால், தனித்து சென்று விடலாம் என்ற ஒரு முடிவு செய்து தான் இதை பொதுவில் சொன்னதுமே..

தனித்து போக அவன் முடிவு எடுக்க காரணம் கூட அவனின் அம்மா… இந்த வயதில் ஏன் இவர்கள் இப்படி யோசிக்கிறார்கள் நினைத்தாலே அசிங்கமாக இருக்கிறது..

ஆம் அவனுக்கு அசிங்கமாக தான் இருக்கிறது.. வீடு வரும் குழந்தையை உடல் கழுவி சாப்பிட கொடுத்து என்று அன்னையை தொந்தரவு செய்ய கூடாது என்று காலையில் வீட்டு வேலைக்கு வரும் அந்த பெண்மணியே நியமித்தி விட்டான்.. மதியம் இரண்டு மணியில் இருந்து ஏழு மணி வரை மட்டுமே.. எட்டாயிரம் கொடுப்பதால், அந்த பெண்மணிக்குமே மகிழ்ச்சி தான்.

கை தேய பாத்திரம் கழுவாது துடைக்காது எட்டாயிரம்.. மகிழ்ச்சியோடு தான் வருகிறார்.. மேலும் குழந்தையுமே அந்த பெண்மணிக்கு புதியவள் கிடையாதே..

தீக்க்ஷயனுமே அந்த ஒரு காரணத்திற்க்காக தான் அந்த பெண்மணியை குழந்தையை பார்க்கும் பணிக்கு நியமித்தது..

குழந்தை பிறந்ததில் இருந்தே தினமும் பார்ப்பவர்.. அதனால் பிரச்சனை இல்லை என்று.. அதே போல் தான் ஆனதுமே.. இதுவுமே வர்ஷினி கொடுத்த ஐடியா தான்..

அப்போதும் குழந்தை தூங்காது இருப்பதில், அதுவும் பள்ளியில் இருந்து வந்து நீண்ட நேரம் தூங்கினேன் என்ற குழந்தையின் பேச்சில், இவங்க என்ன குழந்தையை தூங்க வைத்து விட்டு ஹாயா இருக்காங்கலா.? என்று சத்தம் போட்டு அந்த பெண்மனியை கேட்க போன போது வசி..

“தீனா விடுங்க.. இந்த விசயத்தை எல்லாம் பெருசு படுத்தாதிங்க.” என்று தடுத்தும் தீக்க்ஷயன் அந்த பெண்மணியிடம் கேட்டு விட.

கொஞ்சம் தயங்கி கொண்டே அந்த பெண்மணி சொன்ன..

“நானுமே ஒரு பொண்ணை கட்டி கொடுத்து இருக்கேன்.. அதோட நான் இந்த வீட்டில் பத்து வருஷத்துக்கு மேல வேலை பார்க்கிறேன் தம்பி… உங்கள் முந்தய வாழ்க்கையுமே எனக்கு தெரியும் தானே தம்பி… குழந்தையை விளையாட்டு காட்டி தூங்க விடாது தான் பார்த்துக்க நினைக்கிறேன்.. ஆனா ஆனா.” என்று இழுத்தவர் பின் ஒரு வழியாக.

“அம்மா தான் தம்பி தூங்க வைத்து விடுறாங்க.. அதோட நான் எழுப்பனும் என்று குழந்தை கிட்ட போனாலுமே வேண்டாம் அவள் எப்போ எழுந்துக்குறாளோ எழுந்துக்கட்டும் என்று சொல்றாங்க..” என்று சொன்னவரை இப்போது தீக்க்ஷயனால் தலை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை..

அதோடு ஒரு முறை தன் மகளிடம்.. நைசாக. “ நீயே நடுவில் படுத்துக்குறியே பேபி.. அம்மா அப்பாவுக்குமே நடுவுல படுக்க ஆசை இருக்கும் தானே.. அதனால ஒரு நாள் பேபிம்மா நடுவுல படுத்துப்பாங்கலாம்.. ஒரு நாள் அம்மாவா. ஒரு நாள் அப்பாவாம்..” என்று அதிக நாட்கள் தன் மனைவியின் அருகில் படுத்துக் கொள்ள தீக்க்ஷயம் திட்ட போட..

ஆனால் இவனுக்கு முன் இவன் அம்மா வேறு ஒரு திட்டம் போட்டு விட்டார் என்று தெரியாது தான் போனான்.. அவள் ஆசை மகள் சொல்லும் வரை..

“நோப்பா நான் நான் மட்டும் தான் நடுவில் படுப்பேன்.. அப்படி படுத்தா தான் என் மேல அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஆசையாம்..பாட்டி சொன்னாங்க..” என்று குழந்தை பேச பேச அவன் கண்கள் அதிர்ந்து போய் தன் மனைவியை தான் பார்த்தது.. இந்த விசயம் அவளுக்கு புதியது இல்லை போல அமைதியாக அந்த பக்கம் திரும்பி படுத்து கொண்டு விட்டாள்..

எதையுமே பெரியதாக எடுத்து கொள்ளாது தன் மனைவிக்கு தான் என்ன செய்தோம் என்று நினைக்கும் போது.. இனி தினம் ஒரு பிரச்சனை.. இது போல பேச்சை கேட்டுக் கொண்டு இந்த வீட்டில் இருக்க அவளுக்கு என்ன தலை எழுத்தா..? அப்படி கேட்க வைத்து நான் வேடிக்கை பார்த்தால், நான் என்ன கணவன்..

அதுவும் ஏற்கனவே மனைவியை சரியாக வைத்து கொள்ளவில்லையோ என்று அவன் மனது குற்றவுணர்வில் தவித்து கொண்டு இருக்கும் போது..

ஆம் இப்போதுமே தீக்க்ஷயன் மனதில் அந்த குற்றவுணர்வு இருக்க தான் செய்கிறது.. இன்றுமே தீரா தூங்க நேரம் எடுத்து கொள்கிறாள்.. இருவருமே வேலைக்கு செல்வதால் குழந்தையோடு உறங்கி விடுகிறார்கள்..

நடுயிரவில் யாராவது ஒருவர் எழுந்தால், மற்றவர்கள் எழுந்து விடுவர்.. காரணம் எழுவது பாத்ரூம் போக தான்.. அப்படி எழுந்தால் விளக்கை போட்டு விட்டு தான் செல்வார்கள்..

அதில் மற்றவர்களுக்கு கொடுக்கும் ஒரு சிக்னல்.. பின் என்ன அவர்கள் மீண்டும் தூங்க இரண்டு மணி நேரம் ஆகி விடும்.. அது கூட பரவாயில்லை போல் தான் வசி தன்னுடன் அது போலான நேரத்தில் கூட பயந்து கொண்டு குழந்தை படுத்து கொண்டு இருந்த பக்கம் தான் அவளின் பார்வை அவ்வப்போது சென்று வரும்..

ஒரு சில சமயம் குழந்தை அசைந்தால் போதும் சட்டென்று என்னை தன்னில் இருந்து தள்ளி விட்டு ஆடையை அவசர அவசரமாக சரிப்படுத்திக் கொண்டு குழந்தையின் அருகில் ஒடி விடுவாள்..

அந்த நேரத்தில் கூட தன்னுடன் முழுவதும் ஈடுபடக்கூடாத வாழ்க்கையை தான் நான் அவளுக்கு தந்து கொண்டு இருக்கிறேன்… இந்த வயதில், திருமணம் முடிந்த புதியதில் தம்பதியர் எப்படி எப்படியோ இருப்பர்.. அதை தான் இருவருமே விரும்புவர்.. ஆனால் நான் அவளுக்கு கொடுக்கும் இந்த கலவி.. எனக்கு பிடித்து இருக்கு தான்.. ஆனால் அவளுக்கு.. நேரம் கிடைக்கும் போது எல்லாம் கேட்பான் தான்..

“நீ சந்தோஷமா தானே வசி இருக்க..?” என்று.. அவளுமே.. “ஏன் தீனா. ரொம்ப ரொம்ப ஹாப்பியா இருக்கேன்.. நீங்க இது போல அடிக்கடி கேட்பது தான் எனக்கு ஒரு மாதிரி இருக்கு தீனா… நீங்க ஹாப்பியா இல்லையா..? அதனால தான் என் கிட்ட கேட்கிறிங்கலோ என்று..”

இதை அவள் சொன்னதுமே தீக்க்ஷயன். பதறி விட்டவன்.. அடுத்து மனைவியிடம் அதை பற்றி பேசவில்லை என்றாலுமே, அவன் மனதில் தான் மனைவியை மகிழ்ச்சியோடு வைத்து இருக்கவில்லையோ என்ற குற்றவுணர்வு அவனுக்கு இருந்து கொண்டே தான் இருக்கிறது..

அதனால் வேறு எந்த விதத்திலுமே, தன் மனைவியின் மனம் நோக விட்டு விட கூடாது என்ற முடிவோடு தான் இனி பிரச்சனை என்று வந்தால் தனித்து சென்று விடலாம் என்று ஒரு முடிவோடு தான் இருக்கிறான்..

ஆனால் அவன் தனித்து போக அவன் அன்னை விட்டு விட வேண்டுமே.. இது மட்டுமா இன்னுமே தன் அன்னையினால் இது என்ன வேறு ஒரு பெரிய விசயம் காத்து கொண்டு இருக்கிறது என்று தெரியாது தான் மனைவி சொத்து வாங்குவதை பற்றி பொதுவில் சொன்னது..

சரஸ்வதிக்கு வர்ஷினி சொத்து வாங்கி போடுவதில் பிரச்சனை கிடையாது… அவருக்கு அவர் பேத்தி இது தான் பிரச்சனையாக இருந்தது.

அதனால் .. அவர் வாய் திறக்கவில்லை… தட்சணா மூர்த்தியோ… என்ன இவன் இப்போ சொல்றான் என்று நினைத்தவர் பெரிய மருமகளை தான் அவர் பார்த்தது..

அவர் நினைத்தது போல தான் ஸ்வேதாவின் முகத்தில் அப்படி ஒரு அதிர்ச்சி.. என்னது இன்னொரு சொத்தா..? அதுவும் வர்ஷினி வாங்குறாளா எப்படி.. எப்படி..?

அவள் அப்பா வீடு.. அவர் வேலையில் கொடுத்த பணம் என்று எல்லாமே தான் நகையில் போட்டாச்சே. அப்போ எப்படி… அதுவும் தீக்க்ஷயன் சொல்லும் இடத்தில் எப்படி என்று அதிர்ந்தவள் வாய் திறந்து கேட்டும் விட்டாள்..

“நீ வாங்கி கொடுக்கிறியா தீக்க்ஷயா.?” என்று.

இவங்க என்ன நினைத்து கொண்டு இருக்காங்க என் மனைவியை பற்றி… என்று நினைத்தவன் அதை சொல்லியும் விட்டாள்.

“வசியை பத்தி உங்களுக்கு என்ன தெரியும்.? அவள் அப்பாவுக்கு வந்த பணம் அதை அவள் எந்த மீச்சுவல் பன்டல போட்டால் அதிகம் கிடைக்கும் என்று குறுகிய கால ஷேர் மார்க்கெட் படிப்பை படித்து.. பார்த்து பார்த்து.. அதுவும் பிரித்து பிரித்து போட்டது தொடங்கி அனைத்துமே சொல்லி விட்டான்..

அதோடு ஜார்டனில் சம்பாதித்தை இன்வெஸ்ட் செய்தது.. அதன் ஏற்றம்.. என்று சொன்னவன்..

“அவள் ஆடம்பரமா செலவு செய்து பார்த்து இருக்கிங்கலா..?” என்று கேட்டவன்.. பின்.. “ இன்னும் கேட்டால் அவளின் சம்பளம் இவ்வளவு .. ” என்று சொன்னவன்..

பின் இதையும் சொல்லி விட்டான்.. இவள் வேறு வேலையில் சேர இருப்பதையும் சேர்த்து தான்..

கேட்க கேட்க ஸ்வேதாவுக்கு என்ன இது என்று.. இவ்வளவு வைத்து இருக்காளா…? எவ்வளவு பெரிய சொத்து.. அதோடு இந்த வேலையில் சேர்ந்தால், இன்னும் வாங்கி போடுவாள் போல…புருஷன் ஒரு பக்கம் சம்பாதிக்க மனைவி ஒரு பக்கம் சம்பாதிக்க.. இரண்டு பக்கமும் அவங்க அவங்க சொத்தா வாங்கி போட்டுட்டு இருப்பாங்கலா..

ஆ நான் விட மாட்டேன்.. சொத்து வாங்குவதை தடுக்க முடியாது.. ஆனால் புது வேலை ம் விட கூடாது விட்டு விட கூடாது என்று நினைத்து கொண்டு இருக்க..

சரஸ்வதி பிரச்சனையை ஆரம்பித்து விட்டார்… “பெரியவங்க பேச்சை கேட்பதாவே இல்லையா நீ… நான் வேலைக்கே போக கூடாது என்று சொல்றேன்.. நீ வேறு வேலைக்கு போவேன் வந்து நிற்குற.. நீ என்ன நினச்சிட்டு இருக்க..?” என்று ஆரம்பிக்க..

அதற்க்கு தீக்ஷயன் தான் பதில் சொன்னான்.. “ உங்களுக்கு குழந்தை பார்ப்பது தான் பிரச்சனை.. உங்களுக்கு வயது ஆகி விட்டது முடியவில்லை என்று சொன்னதால் தான் வசி தான் பேபிக்கு உண்டான சமையலை சமைக்கிறா..அவள் தான் குழந்தையை பள்ளிக்கும் கூட்டிட்டு விட்டறா.. வீட்டுக்கு கூட்டிட்டு வர ஒரு ஆட்டோ… வீடு வந்த பின்னும் கூட வசி வீடு வரும் வரைக்கும் பார்த்துக்கும் ஏற்பாட்டையும் செய்தாச்சி.. இன்னுமே உங்களுக்கு பிரச்சனை என்றாக, நாங்கள் தனியா போயிடுறோம்..” என்று விட்டான்.. இதை மனைவியை பார்த்து கொண்டு தான் சொன்னது..

ஏன் என்றால் இதை பற்றி தீக்க்ஷயன் மனைவியிடம் சொல்லவே இல்லை.. அவளின் விருப்பம் வேண்டி.. அவள் முகத்தை பார்த்தான்..

அவளுக்கு இதில் எந்த ஆட்சேபனையும் இல்லை.. காரணம்.. இந்த ஆறுமாதத்தில் அத்தையும், ஸ்வேதாவும் ஏதாவது ஒரு காரணத்தை வைத்து பிரச்சனை செய்து கொண்டே இருந்தால், வேலைக்கு சென்று வந்து விட்டு , நடுயிரவில் முழிக்கும் படியான நிலை. இது இரண்டுமே அவளுக்கு பிடித்தும் இருந்தது.. தேவையானதுமே…

ஆனால் இவர்களிடம் இந்த பேச்சு… தலை வலி தான் அடிக்கட்டி வருகிறது.. இதே நிலை நீடித்தால், மிக சண்டையில் தான் பிரிய வேண்டிய சூழ்நிலை வரும்.

அது இப்போதே நல்ல முறையில் தனித்து சென்று விட்டால், ஏதாவது விசேஷத்திற்க்காவது ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கலாம்.. அவளுக்கு தேவை அவள் கணவன்.. தீரா. அடுத்து ஒரு குழந்தை. தன் குடும்பத்திற்க்கு பொருளாதாரத்தில், ஆகட்டும் ஆரோக்கியத்திலும், ஆகட்டும் எந்த பிரச்சனையும் வர கூடாது.. அவ்வளவே.. மாமியார் என்ன சொன்னாலுமே அடி பணிந்து.. ஒரவத்தி என்ன பேசினாலுமே வீடு பிரிய கூடாது என்று தியாகம் செம்மலாக இருக்க எல்லாம் அவள் விரும்பவில்லை..

அவளுக்கு தேவை தன் குடும்பத்தின் மகிழ்ச்சி… நிம்மதி அவ்வளவே… அதனால் தீக்க்ஷயன் பேச்சை ஆமோதிப்பது போல் தான் கணவனிடம் தலையாட்டியது..

அதை சரியாக பார்த்து விட்ட சரஸ்வதியோ அதை அவ்வளவு பெரியதாக ஆக்கி பேச தொடங்கி விட்டார்..

“ஆமா ஆமா தனியா போனா தானே என் கண் பார்வையை விட்டு தீராவை கொண்டு போய் வைக்க முடியும்.” என்ற அம்மாவின் பேச்சில்..

தீக்க்ஷயன்.. “ ஏம்மா சும்மா சும்மா இப்படியே பேசிட்டு இருக்கிங்க.. உங்க மனசாட்சியை தொட்டு சொல்லுங்க.. வசி குழந்தையை நல்லா பார்த்துக்கல என்று.. உங்க மனசுல வசி தீராவின் சித்தி என்பதை மறந்துட்டு பாருங்க ம்மா..” என்று சொன்னவன் அதோடு விடாது மேலும்.

“உங்க பெரிய மருமகள் ஸ்ருதியை பார்ப்பதை விட வசி தீராவை நல்லா பார்த்துக்குறா என்பது உங்களுக்கே புரியும்..” என்று இத்தனை நாள் மனதில் இருப்பதை சொல்லி விட்டான்..

ஸ்வேதா அத்தை பேச பேச எந்த தடையும் சொல்லாது கேட்டு கொண்டு இருந்தாள்.. காரணம் தனியாக சென்றால், அவர்களுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது..’தடுக்க ஆள் இல்லாது இன்னுமே பெரிய வேலை என்று அடுத்த அடுத்த கட்டத்திற்க்கு சென்று விடுவார்கள்..

அதோடு ஸ்வாதி இத்தனை நாள் வர்ஷினியை கவனித்ததில் பரவாயில்லை சுரு சுருப்பாக தான் எல்லா வேலையுமே சீக்கிரம் முடித்து விடுகிறாள் என்பது தான்..

தனித்து போனால் மேல் வேலைக்கு ஆளை வைத்து விட்டு, அவர்கள் மகிழ்ச்சியோடு தான் இருப்பார்கள்.. அதோடு தீராவையுமே நன்றாக தான் பார்த்து கொள்வாள்..

இதையும் கவனித்தாள் தான். இதை இவள் மட்டுமா கவனித்தது ஒரு உறவு முறை திருமணத்திற்க்கு சென்று இருந்த போது அனைவருமே தான் சென்றனர்..

அங்கு பார்த்தவர்கள் அனைவருமே ஒன்று போல் இதை தான் சொன்னார்கள்..

“பரவாயில்லை அந்த பெண் சொந்த பெண் போல தான் பார்த்து கொள்கிறாள்..” என்று.. இதுவுமே ஸ்வேதாவுக்கு இப்போது பொறாமையாக இருந்தது.. காரணம் அவளை ஏன் இப்படி சோம்பேறியா இருக்க சொந்தத்தில் கட்டி கிட்ட தொட்டு உன் பொழப்பு போகுது என்பது போல் தான் சொல்வார்கள்..

எல்லா வற்றிலுமே அவள் உயர்ந்து நிற்பதா என்று ஸ்வேதா புகைந்து கொண்டு இருக்க.. இதில் தீக்க்ஷயனுமே தன்னை விட அதுவும் பெத்த என் குழந்தையை நான் பார்ப்பதை விட சித்தி இவன் பெண்ணை நல்லா பார்த்துக்கிறாளாம்மா.

அவ்வளவு தான்… “ பார்த்திங்கலா அத்த. உங்க சின்ன மகன் என்ன சொல்லிறார் என்று… இது எல்லாம் அவரா பேசல அத்தை.. இந்த தனி குடுத்தனம் இது எல்லாம் இவர் வாயில் இருந்து வருமா.. “

“நீங்க அவருடைய முதல் திருமணத்தில் அப்படி செய்த போது கூட. அவ்வளவா பேசாது இருந்தாரே தவிர.. இந்த வீட்டை விட்டு போக நினைத்தாரா.. ஆனா இப்போ… தனியா போனா தானே நம்ம கண் முன்னாடி செய்ய முடியாததை எல்லாம் செய்யலாம்..” என்று சொல்ல..”

இத்தனை நேரம் அமைதியாக அமர்ந்து இருந்த வர்ஷினி அவ்வளவு தான் இந்த பேச்சில்..

தன் ஒற்றை விரலை நீட்டி… “ சும்மா சும்மா இது போல சொல்லிட்டே இருந்தா நான் சும்மா இருக்க மாட்டேன்..”

“இப்போ நானே சொல்றேன் உங்களை விட நான் என் பொண்ணை நல்லா தான் பார்த்துக்குறேன்.. “ என்றதும் தான்..

“எதுல எதுல.” என்று ஸ்வேதாவும் ஆவேசமாக கேட்க.

“எதுலயா…? முதல்ல உங்க மகளுடைய ஒயிட் கலர் ஷூவை தொய்த்து இருக்கிங்கலா.. மேல மேல பாலிஷ் போட்டு அனுப்பி விடுறது.. குழந்தைக்கு சத்தாண சாப்பாடு கொடுக்கிறிங்கலா…?.. மேகி… ஒட்டல்ல ஆர்டர் செய்த சாப்பாடு.. கண்டதை கொடுத்துட்டு. அதோடு முக்கியமானது படிப்பில் உதவி.. ஆ முக்கியமானதை மறந்துட்டேனே.. கூட படுக்க வைக்க கூட இல்ல.. அத்தை ரூமில் தான் முக்கால் வாசி நாள் படுத்துக்குறா.” என்று வர்ஷினி சொல்ல சொல்ல ஸ்வேதவினால் வாய் திறக்க முடியவில்லை.

பின் அத்தனையும் உண்மை ஆச்சே. என்ன என்று மறுத்து பேசுவாள்.. இவ்வளவு நாள் இதை எல்லாமா கவனித்து கொண்டு இருந்து இருக்கா…

இதில் தான் வேறு.. ஸ்ருதி அத்தை அறையில் படுக்க வைத்து விட்டு வர்ஷினியை வெறுப்பு ஏற்ற என்றே…

“ஓரு சிலது காலம் அந்த அந்த நேரத்தில் தான் அனுபவிக்க முடியும்… வயது போன பின்னா..” என்று வர்ஷினி தீராவோடு தூங்குவதை வைத்து தான் இது போல பேசியது..

இதில் அவளுக்கு ஒரு அர்ப்பம் சந்தோஷம்.. அதோடு தன் பேச்சில் தீரா அவர்களோடு தூங்குவதில் ஏதாவது சொல்லுவாள்..’இதையே நாம் பெரிய பிரச்சனையாக மாற்றி விடலாம்..

அதுவும் ஒரு முறை அத்தை தன்னிடம்.. “நாம ரொம்ப பயப்படுறோமோ என்று இருக்கு ஸ்வேதா. வர்ஷி பொண்ணு தீராவை நல்லா தான் பார்த்துக்குறது போல தான் எனக்கு தெரியுது.” என்ற இந்த பேச்சில்.

என்ன என்னவோ.. அதாவது… “நடிக்கிறா அத்த. அவளுக்கு என்று ஒரு குழந்தை வர வரைக்கும் தான் இந்த நடிப்பும் கூட… அப்புறம் பாருங்க.” என்று ஒரு மாதிரி சரஸ்வதியை தெளிய வைக்க விடாது பேசி முன் போல சரஸ்வதியின் மனநிலையை கொண்டு வந்து விட்டாள்..

ஆனால் புதியதாக ஏதாவது செய்தே ஆக வேண்டும்.. அதற்க்காக தான் ஸ்ருதியில்லாது தாங்கள் அனுபவிக்கும் வாழ்க்கையை பற்றி சொன்னால், கண்டிப்பாக திருமணம் முடிந்து இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னும் அவர்களே தனித்து இருக்கும் போது.. தான் என்ற எண்ணம் வரும் என்று சொன்னது..

ஆனால் இப்படி தனக்கே அது திரும்பும் என்று ஸ்வேதா எதிர் பார்க்கவில்லை.. இது மட்டுமா அவள் எதிர் பார்க்கவில்லை..

அன்று இரவு இது போல முடிய மறு நாள் தீராவை அழைத்து வந்த ஆட்டோ ஒரு சின்ன ஆக்சிடெண்ட் ஆகி விட்டது..

தீராவுக்கும், அந்த பெண் ஓட்டுனருக்கும் ஏன் வண்டிக்குமே எதுவும் ஆகவில்லை தான்.. ஆனால் குழந்தை மிகவும் பயந்து விட்டது..

அதை வைத்து ஸ்வேதா புதிய பிரச்சனை ஆக்கி விட்டாள்..

“ஆது தான் நான் முன்னவே சொன்னேன் தானே..” என்று…

இப்படியாக அடுத்த குடித்தனத்தையே அழிக்க திட்டம் தீட்டிக் கொண்டு இருந்தவள் தன் மகளை பார்க்க தவறி விட… பின் வந்த ஸ்ருதியின் பிரச்சனைகளை நம் வர்ஷினி தான் தீர்க்கும் படி ஆனது…






 
Active member
Joined
Jun 23, 2024
Messages
71
வர்ஷினி ரொம்ப தைரியமா பதிலடி கொடுக்கிறா 🤗🤗🤗🤗

மூத்த மருமகளுக்காக பேத்திய தன் கூட படுக்க வச்சுக்குவாங்களாம் 👿👿👿 ஆனால் தீரா குட்டி கிட்ட மட்டும் தப்பு தப்பா சொல்லி கொடுப்பாங்களாம் 😡😡😡😡😡

சுப்ரியா விஷயம் தெரிய வரும் போது தான் சரசுக்கு இருக்கு 😣😣😣😣😣😣😣


ஸ்ருதி என்ன பிரச்சினையில் மாட்ட போறா 🤔 🤔 🤔 🤔
 
Last edited:
Active member
Joined
Jun 1, 2024
Messages
105
நித்தம் ஒரு பிரச்சனையை ஆரம்பிச்சு வைக்கிறா மாமியார்
அவ தாளத்துக்கு ஏத்த மாதிரி ஆடுறாங்க....🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍
என்னைக்கு தீருமோ இந்த பஞ்சாயத்து.... 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
Member
Joined
May 11, 2024
Messages
61
ஊர் குடியை கெடுகுறத்தையே முழு நேர வேலையா வச்சி இருக்க ஸ்வீதா நீ... சாஸ்வதி அம்மா உங்க வயசுக்கு தகுந்த மாதிரி கொஞ்சமாவது யோசிங்க
 
Top