அத்தியாயம்…22…1
வர்ஷினி வீட்டில் என்ன பிரச்சனை எத்தனை நடந்தாலுமே கொக்குக்கு மீன் ஒன்றே குறி என்பது போல. வர்ஷினி இது தான் தன் இலக்கு என்பதில் மிக தெளிவாகவே இருந்தாள்.. யாரின் பேச்சும் தன் முன்னேற்றத்திற்க்கு தடையாக இருக்க அவள் விட வில்லை..
யாரின் பேச்சும் என்பது தன் உடன் பிறந்தோரையுமே சேர்த்து தான்.. இதோ தீக்க்ஷயன் வீட்டில் இப்படி என்றால், அவளின் உடன் பிறந்தோர்… வேறு மாதிரி தான் சென்றது.. அதுவும் அவளின் அக்கா… என்னவோ தெரியவில்லை.. அண்ணன் ஸ்ரீவச்சனின் நடவடிக்கையில் சமீப காலமாக அதிகம் மாற்றம். தெரிகிறது..
ஏன் இன்னும் கேட்டால் எப்போதாவது இவளை அழைத்து நலம் கூட விசாரிக்கிறான் என்றால் பார்த்து கொள்ளுங்கள்…
மாமியார் வீட்டிலோ சரஸ்வதிக்கு மருமகள் அவள் சம்பாத்தியத்தில் சொத்து வாங்குவதில் எந்த பிரச்சனையுமே கிடையாது..
அதுவும் இரவில் தட்சணா மூர்த்தி தன் மனைவியிடம்.. “வர்ஷினி வாங்க போகும் இடத்தின் மதிப்பில் இருந்து மகன் தன்னிடம் சொன்ன..
“அந்த இடம் நம்ம தீக்க்ஷா வேலை செய்யும் ஐடி கம்பெனி ரொம்ப ரொம்ப பக்கம் ..அதனால பெரிய வீடா கட்டாம… போஷன் போஷானா கீழே மூன்று போஷன் மேல மூன்று போஷன் என்று கட்டிட்டு வேலை செய்யிறவங்களுக்கு அதை வாடகைக்கு விட இருக்காலாம் சின்ன மருமகள்..”
“அங்கு ஒருவர் தங்க எப்படியோ சாப்பாடு இல்லாமலேயே ஐந்து ஆயிரம் கொடுக்கிறாங்கலாம்.. ஒரு போர்ஷனில் இரண்டு பேரு என்றால், கீழே முப்பது ஆயிரம் மேல் போஷனுக்கு முப்பது ஆயிரம் என்று அறுபது ஆயிரத்துக்கு வருமானம் வரும்.. என்று சொன்னான்.. அந்த பெண் நல்லா முன்னுக்கு வரனும் என்று தான் எல்லாமே பண்ணுது.. நாம அதுக்கு துணையா இல்லாம இருந்தாலும் பரவாயில்லை. உபத்திரமா இருக்க கூடாது .” என்று சொன்னதில்.
பத்திர பதிவுக்கு சரஸ்வதியுமே தன் கணவனோடு தான் சென்றது.. பெரிய மகன் மகேந்திரனுக்குமே வர்ஷினியின் திறமையை பார்த்து அவளிடமே பாராட்டியவன்.
பத்திர பதிவுக்கு அவனுமே உடன் சென்றான். ஆனால் ஸ்வேதா தான். “நீங்க தான் சூடு சுரணை இல்லாது போவீங்க நானும் வரனுமா…? எனக்கு எல்லாம் ரோஷம் ரொம்பவே அதிகம் தான். ஸ்ருதிக்கு லீவு தானே நான் என் மகளோடு ஒரு வாரம் என் அம்மா வீட்டுக்கு இருந்துட்டு வரேன்..” என்று சொல்லி விட்டாள்..
மகேந்திரனுக்கோ அம்மா வீட்டிற்க்கு போவது என்றால் போ.. இதுல சூடு சுரணை எல்லாம் எங்கு இருந்து வந்தது…? என்று அவன் நினைத்ததை மனைவியிடம் சொல்ல வில்லை..
சொன்னால் இன்னுமே முழு மூச்சுக்கு… உன்னோட சின்னவன் என்று தம்பி வாங்கிய சொத்தில் இருந்து பல் குத்தும் குச்சி வரைக்குமே மூச்சு விடாது சொல்வாள்.. அதை சொன்ன அவளுக்கு மூச்சு வாங்குமோ இல்லையோ அதனை கேட்க்கும் இவனுக்கு மூச்சு வாங்கி விடும்..அதனால் இத்தனை வருட அவனின் திருமண வாழ்க்கையின் அனுபத்தில் அமைதி காத்ததில்
ஸ்வேதா ஸ்ருதியோடு அம்மா வீட்டிற்க்கு சென்று விட.. இங்கு பத்திர பதிவு அமைதி என்பதையும் தான்டி மிக மகிழ்ச்சியாகவே அந்த இடம் வர்ஷினி பெயரில் பதிவாகியது..
அன்று வர்ஷினி மாமியார் மாமனார் என்று அனைவருமே குடும்பத்துடன் கோயில் சென்று பின் ஒட்டல் என்று அன்றைய நாள் தொடக்கம் முதல் முடிவு வரை மகிழ்ச்சியாகவே முடிவடைந்தது..
பின் உடனே வீடு கட்ட ப்ளான் அதற்க்கு உண்டான வேலைகளில் இறங்கி அது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் தன் புதிய வேலையிலும் சேர்ந்து விட்டாள் வர்ஷினி..
சரஸ்வதி தான். “நான் பெரியவ. என் பேச்சை கேட்பது இல்லை…” என்ற இது போலான பேச்சுக்கள் இடை இடையே அந்த வீட்டில் பேச்சுக்கள் காதில் விழுந்தன…
ஆனா அதை வர்ஷினி காதில் விழுந்துமே பெரியதாக எடுக்காது அவள் தன் இலக்கை நோக்கி பயணம் செய்ததில் இதை எல்லாம் கண்டு கொள்ளவில்லை..
ஆனால் அவள் இப்போது அவளின் கவனத்தில் பதிந்தது இரண்டு விசயங்கள் ஒன்று ஸ்வேதா முன் போல் எந்த பேச்சுமே இல்லை.. அமைதியாக தான் உண்டு தன் வேலை உண்டு என்று அவள் தன் அம்மா வீட்டில் இருந்து வந்த நாளில் இருந்து அமைதியோ அமைதியாக தான் இருக்கிறாள்..
மற்றொரு முக்கியமான விசயம் குழந்தை ஸ்ருதி.. அவளுக்கு அடுத்த வாரம் எட்டு வயது ஆகிறது.. எப்போதுமே அவள் வீட்டில் இருந்தால் தீரா பின் தான் சுற்றுவாள்..
“சித்தி சித்தி நான் தீராவை கீழே கூட்டிட்டு போகட்டுமா எங்க ரூமில் என் கூட படுக்கட்டுமா.?” என்று ஏதாவது கேட்டு கொண்டே தான் இருப்பாள்..
இவள் தான் அவர்கள் அறைக்கு அனுப்ப கொஞ்சம் யோசிப்பாள்.. இதையுமே இவள் அம்மா வேறு மாதிரி விசயத்தை திரித்து விட கூடும் என்று பயந்து..
இப்போது அது பிரச்சனை இல்லை. பிரச்சனை பாட்டி வீட்டில் இருந்து வந்தது முதல் அவள் அவர்கள் அறையை விட்டு வெளியில் வருவதே இல்லை. ஸ்வேதா தான் வேளை வேளைக்கு மகளுக்கு சாப்பாட்டை கொண்டு போய் கொடுப்பது..
அவளுக்கு பள்ளி திறந்து இரண்டு நாள் ஆகிறது. இன்னுமே பள்ளிக்கு அனுப்பவில்லை.. சரஸ்வதி கூட .. “ ஏன் அனுப்பவில்லை..” என்று கேட்ட போது..
“உடம்பு சரியில்லை அத்தை… “ என்றதற்க்கு அத்தை உடனே.. அவர்கள் அறை பக்கம் சென்று கொண்டே..
“ இதை சொல்ல மாட்டியா… ஆஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போய் காட்டலாம் லே. “ என்று பதறி போய் அவர்கள் அறைக்கு செல்பவரை தடுத்து நிறுத்திய ஸ்வேதா…
“ரொம்ப எல்லாம் இல்ல அத்தை. டையடா இருக்கு என்று சொன்னா… அவ்வளவு தான்.. இப்போ தூங்கிட்டு இருக்கா… இன்னும் இரண்டு நாள் வீட்டில் ரெஸ்ட் எடுத்தா எல்லாம் சரியா ஆகிடும்..” என்று சொல்ல.
ஸ்வேதா சொன்னது போல் தான் ஸ்ருதி இரண்டு நாளிலேயே பள்ளிக்கு செல்ல ஆரம்பித்து விட்டாள்..
நான் தான் ரொம்ப யோசிக்கிறோமோ.. இதோ பள்ளிக்கு போக ஆரம்பித்து விட்டாள் என்று நினைத்த வர்ஷினி.. ஆனாலுமே முன் போல் இல்லை.. என்றும் நினைத்து கொண்டவள் அதை கணவனிடமும் சொல்ல.
“முதல்ல சின்ன பெண்.. இப்போ வளர்ந்துட்டு வரா… அவ்வளவு தான்.. அதோடு அவள் அம்மா இங்கு எல்லாம் வராதே… என்று சொல்லி இருப்பாங்க. நீ எல்லாத்தையும் போட்டு குழப்பி கொள்ளாதே.. இப்போ வாங்கிய இடத்தில் வீடு கட்ட எவ்வளவு பணம் தேவைப்படும். என்ன செய்ய போற. அதை முதல்ல சொல் “ என்றதும் மற்றட்து வர்ஷினிக்கு மறந்து தான் போய் விட்டது..
தீக்க்ஷயனிடம் மீதம் இருந்த தன் கை இருப்பு தேவைக்கு தான் என்ன செய்ய போகிறேன் என்பதை மிக தெளிவாகவே அவள் சொல்ல.
அவனுமே கேட்டுக் கொண்டவன் ஒரே ஒரு முறை.. நகைகள் வைத்து லோன் வாங்கி இது எல்லாம் எதற்க்கு.. என் கிட்ட இருக்கு உனக்கு தெரியும் தானே..” என்று கேட்டதற்க்கு..
“தெரியும் தீனா.. அது என்னவோ என் மனசுல ஒரு வைராக்கியம்.. அந்த வீடு இல்லாது அண்ணன் வீட்டில் இருந்த அந்த ஒரு மாதத்தில், எனக்கு எனக்கே ஆனா .. ஒரு வீட்டை நான் தான் வாங்கனும்.. அதே போல அந்த வீட்டை கட்டிட்டு என் அப்பா பெயர் வைக்கனும்.. சொல்லனும் என் அப்பா கிட்ட. இப்போ நான் நீங்கள் சொன்னது போலவே இருக்கேன் ப்பா என்று சொல்லனும்.. உண்மையில் இறந்தவங்க நம்ம கூடவே இருப்பாங்க. நம்மை பார்ப்பாங்க என்று சொல்வது உண்மைன்னா கண்டிப்பா இப்போ நான் செய்யிறது என் அப்பாவுக்கு அவ்வளவு சந்தோஷம் கொடுக்கும் தீனா..
அதோடு என் அப்பா இருக்கும் போது என் செலவு எல்லாம் அவங்க பார்த்துப்பாங்க… என் சம்பளத்தில் எந்த கமிட்மெண்ட்டும் இல்ல.. அதனால தானோ என்னவோ என் சம்பளத்தை சேர்த்து வைக்கனும் என்று தோனல… எல்லோருக்குமே ஒரு சில கமிட்மெண்ட் கண்டிப்பா தேவை வசி.. “ என்று சொன்னவளின் பேச்சை மதித்து சரி என்று சொல்லி விட்டான்..
ஆனாலுமே இப்போது அவனிடமும் பெரும் ஒரு தொகை கை வசம் இருக்க. அதை என்ன செய்யலாம் மனைவியிடம் கேட்டான்.
சிறிது தயங்கிய மனைவியை யோசனையுடன் பார்த்த தீக்க்ஷயன்..
“வசி என்ன இருந்தாலும் சொல்..நான் செய்யிறேன்…” என்றவனின் கை பிடித்து தன் வயிறு மீது கை வைத்தாள் வர்ஷினி..
தீக்க்ஷயனுக்கு சட்டென்று புரிந்து விட்டது.. அப்படி ஒரு மகிழ்ச்சி.. மனது அப்படி ஒரு துள்ளாட்டம் அவனுக்கு… தன் மனைவி தன்னிடம் கேட்ட குடும்பம் நீ நான் தீரா தீராவுக்கு தம்பியோ தங்கையோ.. இதோ. இதோ.. வசியின் இந்த ஆசையையாவது நான் நிறைவேற்றி விட்டனே… முழுவதுமே நிறை வேற்ற அவன் அம்மா விடுவாளா என்று தெரியாது.. தீக்க்ஷயன் அப்படி ஆர்ப்பரித்தான்..
“என்ன வசி என் கிட்ட சொல்லவே இல்ல.. “ என்று சொன்னவன் பின்..
“கிட் மட்டுமே நம்ப கூடாது வசி.. வா எத்தனை நாள் ஆச்சு.. ஆஸ்பிட்டலுக்கு போய் ஒரு முறை கன்பாம் பண்ணிக்கலாம்..”
கட் பனியனோடு அமர்ந்து இருந்தவன் எழுந்து தன் சட்டையை போட்டுக் கொண்டவன் சட்டையின் பட்டனை மாட்டிக்கொண்டே தான் இத்தனையும் பேசிக் கொண்டு இருந்தான்…
அவன் அருகில் சென்ற வர்ஷினியோ அவன் போட்டு கொண்டு இருந்த பட்டனை இவள் அவிழ்க்க… அவளின் இந்த செயலில் தீக்க்ஷயன்..
ஆஸ்பிட்டலுக்குமே போய் பார்த்து விட்டாளா..? ஏனோ இது அவன் மனதுக்கு அவ்வளவு உவப்பானதாக இல்லை..
நகை இடம் வீடு என்று என்னுடையதாக இருக்க வேண்டும் என்று தன்னுடையதை வாங்காது செய்து முடித்தவளை பாராட்டிய அவனின் மனம்..
இவள் மட்டுமே தனித்து மருத்துவமனைக்கு சென்று குழந்தை உண்டாகி இருப்பதை உறுதி செய்து வந்து இருக்கிறாள் போல என்பதை அவன் மனம் ஏற்க மறுத்தது.
அதில் இத்தனை நேரம் மலர்ந்திருந்த அவனின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியின் அளவு சிறிது குறைந்தது போல் ஆகி விட.
ஆனால் அடுத்து அவள் சொன்ன.. “ நான் இன்னுமே அந்த பிரகன்சி கிட் வைத்து வீட்டில் டெஸ்ட் செய்தே பார்க்கல தீனா. நீங்க இருக்கும் போது உங்களை வைத்து தான் பார்க்கனும் என்று நினைத்து தான் பிரகன்ஸி கிட் வாங்கியும் பார்க்காது இருக்கேன்..” என்று சொன்னதுமே..
தீக்க்ஷயனுக்கு அப்படி ஒரு நிறைவு பூரிப்பு… அதில் . “தேங்கஸ் வசி.. தேங்கஸ்..” என்று அவன் மனைவிக்கு நன்றியும்.. முத்தத்தையும் கணக்கு இல்லாது கொடுக்க .. வர்ஷினியோ..
“தீனா தீனா முதல்ல இதை டெஸ்ட் பண்ணிடலாம்.. பின் எனக்கு எவ்வளவு வேண்டும் என்றாலுமே கொடுங்க…” என்று சொன்னதுமே..
தீக்க்ஷயன்.. “ஆமா டெஸ்ட் செய்யாமலேயே.. எப்படி குழந்தையா தான் இருக்கும் என்று சொல்ற…?”
குழந்தை உண்டாகாது இருக்க போகிறது என்று சந்தேகத்துடன் கேட்டான்..
“எனக்கு மந்திலி பிரியட்ஸ் கரைக்ட்டா வந்துடும் தீனா.. இந்த மந்த் டென் டேஸ்.. வரல.. நான் இந்த இடம் வாங்குவது பில்டிங்க அப்ரூவ் என்று அதை பத்தியே நினச்சிட்டு இருந்ததில், நான் கவனிக்கல. அதோட காலையில் இருந்து கொஞ்சம் வாமிட் சென்ஸ் வேற இருக்கு…” என்றவளின் பேச்சில் கூட நம்பாது முதலில் டெஸ்ட் எடுத்து பார்த்து விடலாம்.. என்று சொன்னது போல எடுத்து பார்க்க வர்ஷினி சொன்னது போல தான் அதில் இரு கோடு காட்டி அவர்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியது…
“வசி வசி..” எப்போதுமே தீரா தன் அம்மாவிடம் கொஞ்சம் நேரம் கீழே இருந்தாலும், மனைவி வசியம் செய்யாதே அவளிடம் உருகி வழிபவன்… இப்போது சொல்லவும் வேண்டுமோ.. என்று அப்படி ஒரு ஆர்ப்பரிப்பு..
“வா வசி டாக்டர் கிட்டேயும் போய் ஒரு முறை கன்பாம் செய்துக்கலாம்.. அவங்க இது போல சமயத்தில் எப்படி எப்படி இருக்கனும் நடந்துக்கனும் என்று சொல்வாங்க.. வா வா..” என்று அவளை அவசரப்படுத்தினான்..
தீக்க்ஷயனின் இந்த அவசரத்தில் வர்ஷினி இதை தான் நினைத்தாள்.. அதாவது தீரா உண்டாகி இருக்கும் போது எப்படி நடந்து கொள்ளனும் என்று இவனுக்கு தெரியாமலாயா இருக்கும் என்று…
ஆனால் பாவம் வர்ஷினிக்கு தான் தெரியவில்லை. குழந்தை உண்டாகிய போது கூட பவித்ரா அவள் அம்மாவை அழைத்து கொண்டு தான் அவள் எப்போதும் செல்லும் அந்த மருத்துவமனைக்கு சென்றது..
அதோடு குழந்தை உண்டாகிய பின் புகுந்த வீடு வராது அவளின் அம்மா வீட்டிலேயே இருந்தவள்… மொத்தமாகவே அவனை விட்டு சென்றது..
நல்ல வேளை வர்ஷினி நினைத்ததை கேட்கவில்லை.. ஆனால் இவள் மற்றவர்களை பற்றி யோசிக்கும் அளவுக்கு இவளை பற்றி அனைவருமே யோசிக்க வேண்டுமே.
கீழே சிரித்த முகத்துடன் வந்த போது தீரா அவள் பாட்டியோடு தான் அமர்ந்து சுட்டி டிவியை பார்த்து கொண்டு இருந்தாள்..
பேத்தி பாட்டிக்கு புரியாத அந்த நிகழ்ச்சியை விளக்கி சொல்ல.. பேத்தியின் பேச்சில் பாட்டி பூரித்து போய் தான் கேட்டுக் கொண்டு இருந்தவர் மனதில். உன் இந்த சந்தோஷம் உன் கிட்ட எப்போதுமே இருக்க நான் என்ன என்றாலுமே செய்வேன் .. தீராவின் மகிழ்ச்சி தான் நினைத்த மனம்..
மகன் மகிழ்ச்சியோடு மனைவியோடு கீழே இறங்கி வருவதை பார்த்து எப்போதுமே பதை பதைக்கும் மனம் இப்போது அவர்களின் அந்த சந்தோஷத்தை பார்த்து ரசித்தது தான்..
காரணம்.. பவியோடு என் மகன் சந்தோஷமாக வாழவில்லை… இவளோடு வாழ்கிறான்.. எனக்கு என் மகனின் மகிழ்ச்சியும் முக்கியம் தானே… அதே போல தீராவையுமே வர்ஷினி சொந்த மகள் போல தானே பார்த்து கொள்கிறாள்..
சமீப காலமாக ஸ்வேதாவின் போதனை கேட்காததினால், வர்ஷினி செய்வதை பார்த்து சரஸ்வதி புரிந்து கொண்டார் போல…அதனால் மகனுக்கு பிடித்த பெண்… மகனுமே அவளோடு மகிழ்ச்சியோடு தான் இருக்கிறான். மருமகளும் பேத்தியை நல்ல முறையில் பார்த்து கொள்கிறாள்.. நாம் ஏன் இன்னும் இன்னும் யோசித்து என் நிம்மதியும் கெட்டு என் மகனினின் மகிழ்ச்சியையும் கெட வைக்க வேண்டும்…
மருமகளிடம் ஒரு சில விசயத்தை தீர்த்து பேசி தெளிவு படுத்திக் கொண்டால் போதும்… முன் தன் தங்கை மகனுக்கு என்று வர்ஷினியை பேசும் போது நன்றாக தானே பேசினேன்.. வீட்டிலுமே சொன்னனே அந்த பெண் நல்ல மாதிரியா தான் தெரியுது. என்று… இதை அனைத்தையும் யோசித்து ஒரு புதிய தீர்மானத்தை எடுத்தார்… சரஸ்வதி அம்மா.
அதன் தொட்டு தான் இப்போது பேத்தியிடம் கொஞ்ச நேரம் முன் தான்.
“ஸ்ருதி அவள் அம்மா அப்பா கூட தான் படுத்துக்குறா… பாட்டி கூட படுத்துக்குறியா தீரா..” என்று பேத்தியிடம் பேசிக் கொண்டு இருந்தார்..
அதற்க்கு தீரா .. “தாத்தா உங்க கூட தானே படுத்துக்குறார் பாட்டி…” என்று கேட்டாள்..
குழந்தைக்கு தன் அம்மா அப்பாவுடன் தான் படுத்துக் கொள்ள விருப்பம் போல. அதனால் பாட்டியின் பேச்சை மறுத்து பேச இப்படி கூறினாள்..
ஆனால் சரஸ்வதி அம்மாவுக்கோ.. இத்தனை நாள் மகனின் சந்தோஷத்தை கெடுத்ததிற்க்கு ஈடுகட்டும் வகையாக பேத்தியை தன்னுடன் படுக்க வைத்து கொள்ள வேண்டும் என்று நினைத்து கொண்டார் போல..
அதனால் தான்.. “தீராவுக்கு பாட்டி மேல ஆசை போயிடுச்சா… “ என்று ஒரு மாதிரி பாவம் போல கேட்கவும்..
“நோ பாட்டி நோ.. தீராவுக்கு பாட்டின்னா இஷ்டம்..” என்று சொன்னவள்..
பின் ஒரு கள்ள சிரிப்புடன்…. “ம்மாவை கொஞ்சமே கொஞ்சம் இன்னுமே இஷ்டம்.. “ என்று தன் விரலை கொஞ்சம் போல சைகையும் காட்டி கூறினாள்..
முன் எல்லாம் எப்படியோ… ஆனால் இப்போது தீரா வர்ஷினியை பிடித்து இருப்பது என்று சொன்னது.. அதுவும் தன்னை விட பிடிக்கும் என்று சொன்னதில் கோபம் எல்லாம் வரவில்லை..
தன் காலத்திற்க்கு பின்.. அவள் தானே இவளை பார்த்து கொள்ள வேண்டும்.. இதுவுமே ஒரு வகையில் நல்லது தான் என்று நல்லவிதமாக தான் நினைத்து கொண்டார்.
அதனால் தான்.. “அப்போ பாட்டியோட படுத்துக்க மாட்டாளா தீரா பாப்பா…?” என்று பாவம் போல் கேட்டதற்க்கு..
முன் சரஸ்வதி பாட்டி தீராவிடம் சொன்ன… “ அப்பா அம்மா நடுவில் படுத்தா தான் அவங்களுக்கு என் மீது ஆசை இருக்கும் என்று சொன்னிங்க…?” புத்திசாலியான குழந்தை இப்படி முன் சரஸ்வதி சொன்னதை சொல்ல.
இப்போது பாட்டிக்கு பேத்திக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாது முழித்திவர் பின் வேறு ஒன்று பேத்திக்கு மிகவும் பிடித்த அந்த சுட்டி டிவியை போட்டு பார்த்து அதை பற்றி கதை பேசும் போது தான் தீக்க்ஷயனும் , வர்ஷினியுமே முகத்தில் புன்னகையோடு கீழே இறங்கி வந்தது..
எப்போதும் இது போல வந்தால், முகத்தை திருப்பி விட்டு செல்லும் சரஸ்வதி அம்மாவோ இன்று… அது மாலை பொழுது ஆனதால்
“ காபி கலக்கட்டுமா…?” என்று இருவரையும் பார்த்து சாதாரணமாக கேட்டார்… தீக்க்ஷயனும் வர்ஷினியும் வேறு சந்தோஷத்தில் திலைத்து போய் இருந்ததால், இது எல்லாம் கவனிக்கவில்லை போல.
அதனால். தீக்ஷயனுமே சாதாரணமாகவே… “ வெளியில் போறோம்மா. வெளியிலேயே பார்த்து கொள்கிறோம்..” என்று தன் அம்மாவிடம் சொன்னவன் தன் குழந்தையிடம்..
“பேபி கிளம்பு நாம வெளியில் போகலாம்..” என்று சொல்ல குழந்தைகளுக்கு வெளியில் போகலாம் என்றால் , சந்தோஷம் தானே..
அதனால் கை தட்டி.. “ ஐய் ஜாலி ஜாலி…” என்று சொல்லி ஆர்ப்பரித்தாள்…
இதற்க்கு சரஸ்வதி சொன்ன.. “நீங்க போங்க… நான் தீராவை பார்த்து கொள்கிறேன்..” என்று சொன்ன இந்த வார்த்தையில் தான் கணவன் மனைவி இருவரும் சரஸ்வதியை பார்த்தது..
படுக்கை அறையில் கூட தங்களுக்கு இடையில் படுக்க சொன்னவங்க.. இது போல தங்களை தனியாக போக சொன்னால் பார்க்க தானே செய்வார்கள்..
அதுவும் ஒரு முறை வர்ஷினிக்கு சைனஸ் பிரச்சனைக்கு தீக்க்ஷயன் வர்ஷினியை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்து சென்றால், குழந்தைக்கு இன்பெக்க்ஷன் ஆகும் என்று வர்ஷினி தான் குழந்தை வேண்டாம் என்று நாம மட்டும் செல்லலாம் என்று நினைத்து குழந்தையை வீட்டில் விட்டு சென்றது..
அன்று அதற்க்கு இந்த சரஸ்வதி அம்மா அப்படி ஆடி தீர்த்து விட்டவர்கள் இன்று தங்களை தனித்து போக சொன்னதில் கொஞ்சம் யோசித்தாள்..
ஆனால் தீக்க்ஷயனுக்கு சரஸ்வதி அம்மா ஆச்சே… அதனால் உடனே அம்மாவை நம்பி விட்டான் போல.. இல்லை இன்று அவனின் அதிகப்படியான சந்தோஷமோ.. எதுவோ..
உண்மையான.. “ம்மா அவள் கன்சீவா இருக்காம்மா.. அது பார்க்க தான் ஆஸ்பிட்டல் போறோம்…” என்று சொன்னதற்க்கு காரணம் என்ன தான் வசி தீராவை பார்த்து கொள்வாளோ இல்லையோ என்று ஆயிரம் மனதில் நினைத்து அதற்க்காக தங்களுக்கு அத்தனை இடையூறு கொடுத்தாலுமே, பேரனோ பேத்தியோ வந்தால், ஒரு பெண்மணி மகிழ தானே செய்வார்கள்..
அதன் தொட்டு கூட தீக்க்ஷன் உண்மையை சொல்லி விட்டான்..
அவன் நினைத்தது போல் தான்… “ஓ அப்படியா..?” என்று சந்தோஷப்பட்டவர்… உடனே காலெண்டரை எடுத்து நல்ல நாள் பார்த்த சரஸ்வதி அம்மா.
“இன்று அஷ்டமி பா…” என்று ஏதோ பார்க்க ஆரம்பித்தவர்.. பின் ஐந்து நாள் கழித்து வரும் வெள்ளிக்கிழமை அன்று உறுதிப்படுத்திக்க மருத்துவமனைக்கு அழைத்து செல் என்றார்.
தீக்க்ஷயனுமே.. அந்த பிரகென்ஸி கிட்டிலேயே குழந்தை என்று உறுதியாக தெரிந்து விட்டதில், அதுவும் இவன் முன்னவே அவனின் வசி வாமிட் செய்ததில், குழந்தை தான் என்று தான் தெரிந்து விட்டதே..
இந்த சமயம் எப்படி எப்படி இருக்க வேண்டும் என்று தெரிய தானே அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல பார்த்தது.
அம்மா பெரியவர்கள் அவர்களுக்கே தெரியுமே.. இது போலான சமயத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பது.
அதனால் சரி என்று விட..தீக்க்ஷயன் நினைத்தது போல் தான்..
சரஸ்வதி.. “ வர்ஷினி இது போலான சமயத்தில் மாடி படி ஏறி இறங்கிட்டு இருக்க கூடாது.. நீ முன் தங்கி இருந்த கீழ் அறையிலேயே தங்கிக்கொள்ளட்டும்..” என்று சொன்னார்..
தீக்க்ஷயனுமே சரஸ்வதியம்மா சொன்னது போல மனைவியை கீழ் அறையில் தான் தங்க வைத்தான்.. என்ன ஒன்று கூட அவனுமே தங்கி கொண்டான்..
இந்த அறையில் மாற்றமாக சரஸ்வதியம்மா கூட தான் தீராவுமே தங்கி கொண்டாள்…
அதனால் தனித்து தான் அந்த அறையில் திருமணம் ஆகி இத்தனை மாதத்தில் குழந்தை இல்லாது தனித்து பக்கம் பக்கம் படுக்கையில் படுத்திருந்தனர்..
பக்கம் பக்கம் தீக்ஷக்யன் இத்தனை நாட்கள் எதிர் பார்த்த அந்த தனிமை கிடைத்தும் அவனின் வசியை மோகத்தோடு அணைக்காது காதலோடு. காமம் இல்லாது அணைத்து படுத்துக் கொண்டு இருந்தவனின் தலை கேசத்தை தீனாவின் வசி கோதிக் கொடுத்து கொண்டு இருந்தாலுமே, தன் கணவன் தான் குழந்தை உண்டாகிய விசயம் சொன்ன உடனே மாமியாரின் முகம் மாறி பின் சட்டென்று மகிழ்ச்சி முகமாக மாறியதையே நினைத்து கொண்டு இருந்தாள்..